தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம், இளநிலை பண்ணை தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கான (பி.எஃப்.டெக்) விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் வீ.வள்ளுவபாரிதாசன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக விவசாயிகளுக்கான, இளநிலை பண்ணை தொழில்நுட்ப பட்டப் படிப்பு (பி.எஃப்.டெக்.), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பட்டப் படிப்பு மூலமாக விவசாயிகள் சுயதொழில் முனைவோர் ஆகலாம்.
நிலத்தைப் பண்படுத்துதல் முதல் அறுவடை வரையிலும், தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் தாங்களே இப்புத்தகத்தைப் படித்து தொழில்நுட்பங்களை செயல்முறைப் படுத்த முடியும். பருவ முறையில் (செமஸ்டர்) மூன்று ஆண்டுகளுக்கு ஆறு பருவங்களில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
பயிர் உற்பத்தி, பயிர்ப் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம், பண்ணை பார்வையிடல் ஆகியவை பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்:
இப்படிப்பில் 10-ம் வகுப்பைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய அனைவரும் சேரலாம். 2010-11 ஆண்டில் 229 மாணவர்கள் இப்படிப்பில் சேர்ந்துள்ளார்கள்.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், கோவை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்; தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; வேளாண் அறிவியல் மையம், திண்டிவனம்; வேளாண் அறிவியல் மையம், சந்தியூர் ஆகிய பயிற்சி மையங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை:
2011-12ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் ரூ.100 செலுத்தி நேரிலோ அல்லது வரவோலை மூலமாகவோ பெறலாம். தபாலில் பெற விரும்புவோர் என்ற (payable at SBI, TNAU Branch, Coimbatore-3) முகவரிக்கு வரைவோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
ஜூலை 15-க்குள்:
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-641003 என்ற முகவரிக்கு, பயிற்சிக் கட்டணத்திற்கான ரூ. 7,500-க்கான வரைவோலையுடன் (payable at SBI, TNAU Branch, Coimbatore-3) ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தொலைபேசி எண்கள்:
0422- 661 1229, 94421 11058, 94421 11048, 94421 11057.
மின்னஞ்சல்:
இணையதளம்: