உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 17, 2010

கணவரை காணவில்லை 4 ஆண்டிற்கு பின் மனைவி புகார்

கடலூர் :

                  கடலூரில் காணாமல் போன நகராட்சி துப்புரவு ஊழியர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் குயவர் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் (48).  கடலூர் நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

                 கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கடலூர் முதுநகர் 9வது வார்டில் துபபுரவு பணிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர் நான்கே முக்கால் அடி உயரமும், இடது கையில் நாகம்மாள் என பச்சை குத்தியிருப்பார். மேல் உதட்டில் காய வடு ஒன்றும் இருக்கும். இதுகுறித்து அவரது மனைவி நாகம் மாள் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

தூக்கில் வாலிபர் பிணம்: போலீஸ் விசாரணை

கடலூர் :

                  கடலூர் முதுநகர் அருகே வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் முதுநகர் அடுத்த சின்னகாட்டு சாகையைச் சேர்ந்தவர் சிவசங்கர் (29). இவர் அதே பகுதியில் நேற்று மாலை நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். போட்டிகள் முடிந்ததும் கூல் டிரிங்ஸ் பாட்டிலை வைத்து  வாயால் திறந்து  அப்படியே குடிக்கும் போட்டியை நடத்த வேண்டும் என கேட் டுள்ளார்.

           போட்டி கள் முடிந்து விட்டது இனி நடத்த முடியாது என போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியுள் ளார். சிவசங்கரை எதிர்  தரப்பினர் கொலை செய்து விட்டதாக  கூறியதால் பதட்டம் ஏற் பட்டது. உடன் இன்ஸ்பெக்டர் தம்புசாமி, சப் இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் சம் பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Read more »

கடலூர் பெண்ணையாற்றில் விழுந்து கூலித் தொழிலாளி பலி

கடலூர் :

           கடலூர் கும்தாமேடு செல்லும் வழியில் பெண் ணையாற்றில் தடுப் ப�ணை கட்டும் இடத்தில் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடன் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று தடுப்பு சுவர் கட்டுவதற்காக தோண் டப்பட்டிருந்த பள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் இறந்து கிடந்தவரை வெளியே எடுத்தனர். விசாரணையில் அவர் வில்வநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிட்டப்பன் (42) என்பதும் கடந்த 14ம் தேதி முதல் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஆட்டோ மரத்தில் மோதியதில் 11 மாத கைக்குழந்தை பலி

கடலூர் :

                   கடலூர் அருகே ஆட்டோ மரத்தின் மீது மோதியதில் 11 மாத கைக்குழந்தை இறந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பழனிவேல் (25). இவர் நேற்று மாலை தனது மனைவி கவிதா (22), 11 மாத கைக்குழந்தை கிருபா மற்றும் தனது மைத்துனர் சக்திவேல் மகன் நவீன் (8), மகள் திருத்திஷா (5) ஆகியோருடன் காணும் பொங் கலையொட்டி சில்வர் பீச்சுக்கு செல்வதற்காக தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.

                   கோண்டூர் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 11 மாத ஆண் குழுந்தை கிருபா சம்பவ இடத்திலேயே இறந்தது. கவிதா, நவீன், திருத்திஷா மற்றும் பழனிவேல் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் நவீன், திருத் திஷா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து நெல்லிக் குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

கடலூர் :

               மனைவி குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் மனமுடைந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிதம்பரம் அடுத்த பொன்னங்கோவிலைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரிமுத்து(28). மது அருந்தும் பழக்கமுடையவரான ஆறுமுகம் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று மனைவியிடம் மது வாங்குவதற்கு பணம் கேட்டார். அவர் தர மறுத்ததால் மனமுடைந்த மாரிமுத்து விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

மினி லாரி மோதி ஒருவர் பலி

பரங்கிப்பேட்டை :

                         பரங்கிப்பேட்டை அருகே சைக்கிளில் சென்ற பெட்டிக்கடைக்காரர் மினி லாரி மோதி இறந்தார். பரங்கிப்பேட்டை அருகே சின்னகுமட்டியை சேர்ந்தவர் ஏழைமுத்து (50). முட்லூரில் பெட்டிக் கடை வைத்துள்ளார். நேற்று காலை சைக்கிளில் சின்னக்குமட்டிக்கு சென்றார். சம்மந்தம் கிராமம் அருகே சென்றபோது எதிரில் வந்த டாடா ஏசி மினி லாரி அவர் மீது மோதியது. விபத்தில் அதே இடத்தில் ஏழைமுத்து இறந்தார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

மதுபாட்டில் விற்பனை: 3 பேர் கைது

புவனகிரி :

                  புவனகிரி அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி பகுதியில் நேற்று முன்தினம் டாஸ் மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் மது பாட் டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

                 அப்போது புவனகிரி ராமலிங்கசாமி கோயில் சந்து அருகே கள்ளிக்காட்டு காலனியை சேர்ந்த பிரசாத்(30) என்பவர் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடமிருந்து 22 குவாட்டர் பிராந்தி பாட்டில்களும்,ரொக்கம் 270ம் கைப்பற்றப்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில்  கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமது ராஜா(45) என்பவர் கீரப்பாளையம் காந்தி நகரில் அவரது  உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 265 மது பாட்டில்கள், ஆதிவராகநத்தம் அன்னை தெரசா நகரில் வசிக்கும் செல்வம் (45) என்பவர் வீட்டிலிருந்து 32 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து  மூன்று பேர�யும் கைது செய்தனர்.

Read more »

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

கடலூர் :

                       பைக்கில் வேகமாக சென்றவரை தட்டிகேட்டதால் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் காயமடைந்தனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் புதுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சத்யா(23). இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் பைக்கில் வேகமாக வந்த காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த பிரபாகரனை சத்யா "ஏன் வேகமாக செல்கிறாய்' என கேட்டதால் தகராறு ஏற்பட்டது. பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சத்யா தரப்பினரை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரன்,  கோபால், புஷ்பராஜ், சோமு, வேலுவை கைது செய்தனர்.

Read more »

கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா

ஸ்ரீமுஷ்ணம் :

                   கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவப் பொங் கல் விழா கொண்டாடப் பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்பாக நடந்த விழாவில் ஜெயந்தி பத்மநாபா,  சி.எஸ். ஜெயின், த.வீ.செ. மற்றும் எஸ்.பி.ஜி., கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்  101 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

                இதில் அறங்காவலர் குழு தலைவர் செல்வக்குமார் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் சவுந்திரராஜன், செந்தில்நாதன், மகாவீர்சந்த், பிரகாஷ் உள் ளிட்டோர் பங்கேற்றனர். த.வீ.செ., பள்ளியில் நடந்த விழாவில் செயலர் செந்தில்நாதன், தலைமை ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் சாலைமீனா, பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீதாலட்சுமி ஆதிவராகன் பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ராமநத்தம்:

                    கண்டமத்தான் ஊராட்சி சார்பில் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பாலசுந்தரம்,  ஆசிரியர்கள் விஜயபாஸ்கர், செங்குட்டுவன் கலந்து கொண்டனர். ஆலப்பாக்கம்:  நடுநிலைப் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு தலைமையாசிரியர் செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியர் அண்ணாதுரை, ஜானகிராமன், கல் யாணசுந்தரமூர்த்தி, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்:

           ஆதிபராசக்தி மன்றம் சார்பில்  மின் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட் டது. மன்ற ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ஞானகுமார், புலவர் அருள்பிரகாசம், மன்ற தலைவர் லஷ்மணன், பொருளாளர் பர்வதவர்த்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   பண்ருட்டி: கோட்லாம் பாக்கம் ஊராட்சியில் பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பாலசுப்ரமணியன் முன் னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கினர்.

Read more »

கடலூர் ஜெயராம் கல்லூரியில் தேசிய இளைஞர் தின போட்டி

கடலூர் :

                        கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் விவேகானந்தர் பிறந்த நாள் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கல்லூரி சிறப்பு அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார். மாணவி இந்துஜா வரவேற்றார்.ராமகிருஷ்ணன் மிஷனின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞான செல்வன், மாவட்ட ரோட்டரி கிளப் ரதி நிதி சண்முகம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். இங்கிலீஷ் சென்டர் ரோட்டரி கிளப் தலைவர் ரஞ்சனி, கல்லூரி துறைத் தலைவர்கள் ஹரிசங்கர், நடனமூர்த்தி, ஆசிரியர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க அலுவலர் பன்னீர் செல்வம் செய்திருந்தார்.

Read more »

மணல் எடுக்க அனுமதி கோரி எம்.எல்.ஏ.,விடம் மனு

நெல்லிக்குப்பம் :

       பெண்ணையாற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்க கோரி மாட்டு வண் டிக்காரர்கள் எம்.எல். ஏ., விடம் மனு கொடுத்தனர். 

இதுகுறித்து நெல்லிக் குப்பம் பகுதி மாட்டு வண்டிக்காரர்கள் எம்.எல். ஏ., சபா ராஜேந்திரனிடம் கொடுத்துள்ள மனு: 

                   நெல்லிக்குப்பத்தில் வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் மணல் எடுத்து விற்று வந்தோம். 6 மாதத்திற்கு முன் ஆற்றில் மணல் எடுக்கும் வண்டிகளுக்கு 47 ரூபாய் கனிம வளத்துறை மூலம் வசூலிக்கப்பட்டது. பின்னர் வசூல் நிறுத்தப் பட்டது. தொடர்ந்து ஆற்றில் மணல் எடுத்து வந்தோம். கடந்த மாதம் மணல் ஏற்றி வந்த வண்டிகளை தாசில்தார் பிடித்து அபராதம் விதித்தார்.

                மணல் ஏற்றி விற்பனை செய்தால் தான் மாட்டுக்கு தீவனம் வாங்க முடியும், எங்கள் குடும்பத்தினர் சாப்பிட முடியும். வண்டிக்கு கட்டணம் வசூல் செய்தால் வாங்க தயார் என கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வண்டிகளில் மணல் எடுக்காததால் நகரில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., ஆற்றில் மணல் எடுக்க அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Read more »

ராஜகோபாலசுவாமி கோவிலில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

கடலூர் :

             கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே பாவை விழா மற்றும் திருக்குறள்  ஒப்புவித் தல் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு  இந்து சமய அறநிலையத் துறை  உதவி ஆணையர்  ஜெகநாதன் தலைமை தாங்கினார். திருவந்திபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில்  செயல் அலுவலர் கிருஷ் ணகுமார் முன்னிலை வகித்தார்.  ஆய்வாளர் வெங்கடேசன் வரவேற்றார். திருக்குறள் ஒப்புவித்தல்  போட்டியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு  வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார். கவிஞர் சிங்காரம், கவிஞர் சம்பத்,ஜெயராமன், கணபதி மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பலர் பங்கேற்றனர். செயல்  அலுவலர்  நாகராஜன் நன்றி கூறினார்.

Read more »

சிதம்பரத்தில் மூன்று பேர் கண்கள் தானம்

சிதம்பரம் :

             சிதம்பரம் காஸ்மோபாலிடன் அரிமா சங்கம் சார்பில் மூன்று பேரின் கண்கள் தானமாக பெறப்பட்டது. சிதம்பரம் கமலீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகா (60), அகரநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் (45), உசுப்பூரை சேர்ந்த அருணகிரி (42). இவர்கள் மூன்று பேரும் நேற்று முன்தினம் இறந்தனர். தகவலறிந்த சிதம்பரம் காஸ்மோ பாலிடன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் வியஜகுமார், மனோகரன் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் பேசி டாக்டர் அனுஷ் அகர்வால் உதவியுடன் மூன்று பேரின் கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read more »

நரியன் ஓடையில் உயர்மட்ட பாலம் தற்காலிகமாக திறப்பு

நடுவீரப்பட்டு :

              நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடை உயர்மட்ட பாலம் தற்காலிகமாக திறக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் ஒரு கோடியே 12 லட்சம் மதிப் பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.

              சி.என்.பாளையம் கிராமத்தில் உள்ள புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழாவின் போது  வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் சுவாமியை வழிபட கோவிலுக்கு வருவார்கள்.அவர்கள் கோவிலுக்கு  சென்று வர போதிய வழி இல்லாததால் உயர் மட்ட பாலத்தை தற்காலிகமாகவோ அல்லது திருவிழாவிற்குள்ளோ திறப்பு விழா நடத்த வேண்டும் என தினமலரில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் பாலம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தற்காலிகமாக   திறக்கப்பட்டது. இதனால் வெளியூர் பக்தர் கள் சிரமமின்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.

Read more »

கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் 25ம் தேதி சாலை மறியல் செய்ய முடிவு

சேத்தியாத்தோப்பு :

                            தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக செயல்படும் அரியலூர் மாவட்ட அதிகாரிகளை கண்டித்து ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில்  25ம் தேதி சாலை மறியல் நடத்த அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின்  அனைத்து கரும்பு விவசாயிகள் சங் கங்களின் கூட்டமைப்பு கூட்டம்  நடந்தது.

                  பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க செயலர் சிட்டிபாபு தலைமை தாங்கினார்.  விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அப்பாதுரை, டாக்டர் பன்னீர் செல்வம், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். வீரசோழன் வரவேற்றார். பாபு, தேவதாஸ் படையாண்டவர், குஞ்சிதபாதம், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க மகாராஜன், ஓட்டுனர்கள் சங்க வேல்முருகன் உள்ளிட் டோர் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு பயிருக்கான விவகார எல்லையான ஆண்டிமடம் பிர்கா பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டி செல் வதை உடனே நிறுத்த வேண்டும்.


                           கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமலும், விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்படும் அரியலூர் மாவட்ட அரசு அதிகாரிகளின் போக்கை கண்டிக்கிறோம். தங்களின் விருப்பத் திற்கு ஏற்பவே ஆண்டிமடம் பிர்கா கரும்பு விவசாய எல்லை எம்.ஆர்.கே., ஆலைக்கு விஸ்தரிக்கப் பட்டது என்பதை புரிந்து அப்பகுதி விவசாயிகள் எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்ப கேட்டுக்கொள்வது.

            சேத்தியாத்தோப்பில் கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 3ம் தேதி நடந்த பேச்சுவார்த் தையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத அதிகாரிகளின் மெத் தன போக்கை  கண்டிப்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ரோட்டில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Read more »

மாவட்டத்தில் காணும் பொங்கல் கோலாகலம்

விருத்தாசலம் :

                      விருத்தாசலம் மணிமுக்தாற்றில் காணும் பொங்கல் விழா குதூகலமாக கொண்டாடப்பட்டது. காணும்  பொங்கலையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில் உள்ளிட்ட  கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தன. காலை முதல் பக்தர்கள் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் கும்மி அடித்து, கபாடி, கோகோ விளையாட்டுகளை விளையாடினர். பண்ருட்டி அடுத்த மணம் தவிழ்ந்தபுத்தூர் சக்தி விநாயகர் கோவிலில் காணும் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது.

                 பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் மங்காதோப்பு  சக்திவிநாயகர் கோவிலில் நேற்று காணும் பொங்கல் திருவிழா நடந்தது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்து மூலவர் விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு உறி அடித் தல், வழுக்குமரம் ஏறுதல், பாரிவேட்டை நடந்தது. இரவு உற்சவர் சக்திவிநாயகர் வீதியுலா நடந்தது. விழாவில் மணம்தவிழ்ந்தபுத்தூர், ஒறையூர், பொன் னங்குப்பம், சேமக்கோட்டை, புதுப் பேட்டை, ஆவியனூர், ஆனத்தூர் உள் ளிட்ட 30 கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும்  விழா குழுவினர் செய்திருந்தனர். திட்டக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமப்புற மக்கள் வியாபார ரீதியாக கடந்த ஒரு வாரமாக திட்டக்குடியில் முகாமிட்டனர்.

                       பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தன. நேற்று காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு திட்டக்குடி வெள்ளாற்றில் ஏராளமான பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள், இளைஞர்கள் மாலை 3 மணி முதலே வர துவங்கினர். பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் வெள்ளாற்றில் குவிந்தனர். புதுமண தம்பதியினர் திருமண மாலைகள், கயறுகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, வயதான சுமங்கலி பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பல ஆயிரக் கணக்கானோர் வெள்ளாற்றில் விந்ததால் திட்டக்குடி வெள்ளாறு விழாக்கோலம் பூண்டிருந்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior