சிதம்பரம்:
சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை
நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு விவரம்:
ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி,
விளையாட்டுத் திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ்
பிரிவினர்), 24-ம் தேதி பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல், 25-ம் தேதி-
பி.எஸ்சி. இயற்பியல், பொதுவேதியியல், 26-ம் தேதி -பி.எஸ்சி. தொழிற்
வேதியியல், விலங்கியல், தாவரயியல் 27-ம் தேதி- பி.ஏ. தமிழ், ஆங்கிலம், ஜூலை
1-ம் தேதி- பி.காம்., பி.பி.ஏ., ஜூலை 2-ம் தேதி- பி.ஏ. பொருளியல் உள்ளிட்ட
பாடப்பிரிவுகள்.
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம் தவிர ஏனைய பாடப்பிரிவுகளில் முதல் கட்ட கலந்தாய்வில் பிளஸ் 2 தேர்வின் பகுதி-3-ல் 800க்கு மேலும், தமிழ் பாடப்பிரிவிற்கு பகுதி-3-ல் சிறப்புத் தமிழ் படித்தவர்கள் அல்லது பகுதி-1 தமிழில் 120-க்கும் மேலும், பி.ஏ. ஆங்கில பாடப் பிரிவுக்கு பகுதி-2 ஆங்கிலத்தில் 120-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.