"தானே" புயலின் பாதிப்புகள் பற்றி டைரக்டர் தங்கர்பச்சான் ஒரு ஆவண படம் தயாரித்து, டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு அவர், `தானே புயலின் அறுவடை' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
35 நிமிடங்கள் ஓடுகிற இந்த ஆவண படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் தயாராகியிருக்கிறது. `தானே' புயலினால் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் எத்தகையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்?...