உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

தமிழகத்தில் 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்: பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் :

              தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 கடலூர் அரசு பொது மருத்துவமனையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய "டயாலிசிஸ்' கருவியை துவக்கி வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம்  கூறியது:

                           தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத் தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 40 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த் தப்படும். அடுத்த கட்டமாக படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

                                  இந்த மருத்துவ மனைகளில் 5 மருத்துவர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இம் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மூன்று செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எக்ஸ்ரே, ஸ்கேன், செமிஆட்டோ அனலைசர் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்படவுள்ளன. அனைத்து வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்க வசதியும் ஏற்படுத்தப்படும். தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் ரத்தம் சுத்திகரிப்பு செய்வதற்காக "டயாலிசிஸ்' கருவி துவக்கி வைக்கப்பட் டுள்ளது. கடலூர் மருத்துவமனையில் மகப்பேறு புறநோயாளி பிரிவு, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றிற்கு 1.50 கோடி ரூபாய் அனுமதியளிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.

Read more »

டிஜிட்டல் பேனர் கலாசாரம்: பன்னீர்செல்வம் வேதனை

கடலூர் :

                 கடலூர் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் வேதனையுடன் பேசினார். கடலூர் தேவனாம்பட்டினம், துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு குடியிருப்பு திறப்பு விழா நேற்று கடலூரில் நடந்தது. டி.ஐ.ஜி., மாசானமுத்து தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் வரவேற்றார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு முன் னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., நடராஜன், டி. எஸ்.பி., மகேஸ்வரன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் கலெக்டர் சீத்தாராமன் பங்கேற்று பேசினார்.

அமைச்சர் பன்னீர்செல்வம் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசியது:

                 கடலூரில் போலீசாருக்கான குடியிருப்பை திறந்துவைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடலூர் மாவட்டத் திற்கு எந்த போலீஸ் அதிகாரியும் வருவதற்கு விரும் புவதில்லை. அந்த அள விற்கு இங்கே பிரச்னைகள் இருந்தது. அப்படியே வந்தாலும் 6 மாதம் அல் லது ஓராண்டிலேயே சென்று விடுகின்றனர். இதனால் எஸ்.பி., யை தேடிப்பிடித்து அழைத்து வரவேண்டியிருந்தது.

                 மாவட்டத்தில் கடந்த ஏழு மாதத்தில் 201 பேர் இறந்துள்ளனர். விபத்துகளை தடுக்க சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,சாலையை அகலப்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற் றும் நடவடிக்கைக்கும் பொதுமக்கள்மற்றும் அரசியல் வாதிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்போது டிஜிட்டல் பேனர் அதிகளவில் வைக் கும் கலாசாரம் ஏற்பட்டுள்ளது.

                              இதனால் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் போக்குவரத்திற்கு இடையூராக இருக்கிறது. இதை தடுக்க எஸ்.பி., கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளில் பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் நலன் கருதி அனைத்து கட்சியினரும்,சமுகத்தினரும் போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனப் பேசினார்.

Read more »

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

                கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். இந்த தேர்வுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

               வி.ஏ.ஓ. பணியில் காலியாக உள்ள 1,576 இடங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்கள் 1,077-க்கு கடந்த மாதம் 21-ல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என்பதால், கடந்த ஒரு வாரமாக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

               சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுக்கு ஏழு லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு தேர்வுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 10 லட்சத்தைத் தாண்டும்: கடைசி நாளில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நேரில் வரும் பலரும் அங்கேயே விண்ணப்பங்களை நிரப்பி அளிக்கின்றனர்.

                தேர்வாணைய அலுவலகத்துக்குள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. இதனால், அங்கு வந்த பலரும் சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திச் சென்றனர்.  இதனால், கிரீம்ஸ் சாலை பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

                இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தபால் நிலையங்கள் மூலமாக வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

10-ம் வகுப்பு வரையிலான பாடங்கள்:

                         வி.ஏ.ஓ. தேர்வுக்கு தயாராவது எளிது என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை படித்தாலே போதும். அதிலிருந்துதான் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படும்.

                     பொது அறிவுக் கேள்விகள் 100-ம், தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு 100 கேள்விகளும் கேட்கப்படும். பொது அறிவுக் கேள்விகளுக்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களை படித்தால் போதும் என்கின்றனர் அரசு அதிகாரிகள். வி.ஏ.ஓ. தேர்வுக்கு முதுகலை படித்தவர்கள் முதல் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, தொழிற்கல்வி படித்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.


Read more »

"திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம் செல்லாது: தமிழக அரசு உத்தரவு

           திறந்தநிலை பல்கலைக்கழக பட்டச் சிக்கலுக்கு தமிழக அரசு முடிவு தீர்வு கண்டுள்ளது. பள்ளிப் படிப்பை முடிக்காமல் நேரடியாக பெறும் பட்டங்கள் அரசுப் பணிக்கு செல்லாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

              பள்ளிப் படிப்பு அதாவது பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்காமலேயே திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்கள் பெறும் முறை உள்ளது. 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் படித்து எம்.ஏ., வரை பட்டம் பெறலாம். 10-ம் வகுப்பு வரை கூட எட்டாதவர்கள் அரசுப் பணிகளில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று விடுகின்றனர். பணியில் சேர்ந்ததும் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்று பதவி உயர்வுக்கு முயற்சிக்கின்றனர்.

                   இந்த நிலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அரசுப் பணிக்கு எடுக்கக் கூடாது' எனக் கூறியது.

                      இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிரொலித்தது.

 
தமிழக அரசின் நிலை என்ன?

                              உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது. இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தவரை பிளஸ் டூ படிப்புக்கு இணையாகக் கருதலாமா என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழக அரசிடம் ஒரு கருத்தைக் கேட்டது. அப்படிக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இந்தப் பிரச்னையில் மட்டுமே அரசு தனது நிலையைத் தெரிவித்தது என்றும், ஒட்டு மொத்தமாக திறந்தநிலை பல்கலைக்கழகப் பிரச்னையில் அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் அப்போது தெரிவித்தனர்.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடிதம்:

                          திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்களை தமிழக அரசு ஏற்கிறதா, இல்லையா என்ற குழப்பங்கள் தொடர்ந்து வந்தன. இந்தச் சூழலில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, "திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டம் அறிவை வளர்ப்பதற்கு மட்டும்தான்' எனத் தெரிவித்திருந்தார்.

                         இது ஒருபுறமிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழுக் கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எந்தெந்தப் பட்டங்களுக்கு இணையானது என்பதை முடிவு செய்யவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும் அது.

                     இந்தக் கூட்டத்தில், இளங்கலைப் பட்டங்களைப் படிக்காமல், திறந்தநிலை பல்கலைக்கழங்கள் மூலம் நேரடியாக எம்.ஏ. போன்ற முதுகலைப் பட்டங்களைப் படித்தால் அதை அரசுப் பணிகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.

அரசின் நிலை அறிவிப்பு:

                        இந்தக் கருத்துருவை தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைத்தது. இதை தீவிரமாக ஆராய்ந்த அரசு, பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் கே.என்.வெங்கடரமணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

175 பேருக்கு பணி கிடையாது...

                          அரசின் உத்தரவால், குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்ற 175 பேருக்கு பணி கிடைக்காது. அவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தனர். அரசின் உத்தரவு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற தலைமைச் செயலக ஊழியர்களில் சிலர் வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்த வாரத்தில் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து முறையிட அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior