உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 19, 2011

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா

கடலூர்::

            ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம், முதல்வரின் தேர்தல் வாக்குறுதியில் முத்தாய்ப்பான திட்டம் என்று சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார். 

              ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தலா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா மாவட்ட சமூக நலத்துறை சார்பில் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை  நடந்தது. 

விழாவில் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: 

           முதல்வர் அளித்த வாக்குறுதியில் முத்தாய்ப்புத் திட்டம் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கம் வழங்குவதாகும். பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட  அனைத்துத் தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் முதல்வரின் திட்டங்கள் அமைந்து உள்ளன என்றார் அமைச்சர் சம்பத். 

விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில்,

           பட்டம், பட்டயம் பயின்ற பெண்களுக்கு திருமணத்துக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரமும், 10-ம் வகுப்பு பயின்ற பெண்களுக்கு  4 கிராம் தங்கத்துடன் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவே உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் திருமண உதவித் தொகையும், தங்க நாணயமும் வாரம்தோறும், அமைச்சர்களாலோ, மாவட்ட ஆட்சியராலோ வழங்கப்படும் என்றார். 

                இந்த விழாவில் 500 பயனாளிகளுக்கு ரூ.2,01,18,000 மதிப்பிலான தங்க நாணயங்கள், உதவித் தொகை ஆகியவற்றை இரு அமைச்சர்களும் வழங்கினர்.  மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமை வகித்தார். மாவட்ட சமூகநல அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, கடலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி சதாபிஷேக விழா

 
 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/ff02e284-ab2b-4c36-ad8b-1e6b9d4bd488_S_secvpf.gif
 

 
             அண்ணாமலை பல்கலைக் கழக இணை வேந்தர் டாக்டர் எம்.ஏ. எம். ராமசாமிக்கு வயது 81. இதையொட்டி சென்னையில் நேற்று  அவருக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது.   ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது செட்டிநாடு இல்லம் விழாக் கோலமாக காட்சி அளித்தது. 
 
              200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் யாகம் வளர்த்து வேதமந்திரம் ஓதினார்கள். அதன் பிறகு எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சதாபிஷேக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, உறவினர்கள் குமாரராணி மீனா முத்தையா, ஏ.சி. முத்தையா, எம்.ஏ.எம்.அண்ணாமலை, மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.  வீட்டின் அருகே போடப்பட்டிருந்த மேடைக்கு எம்.ஏ.எம். ராமசாமி வந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.   
 
             மத்திய மந்திரி ஜி.கே. வாசன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், கோகுலகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், மு.க.தமிழரசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமநாதன், இந்து என்.ராம். இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி கேப்டன் முனீர்சேட். பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகர் விவேக், நடிகை குமாரி சச்சு, மற்றும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்தினார்கள்.

            அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், செட்டி நாடு சிமெண்ட் நிறுவன ஊழியர்கள் உள்பட ஏராளமானவர்கள் எம்.ஏ.எம். ராமசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டு வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் லாரன்ஸ் சாலையில் ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பில் ரெயில்வே சுரங்கப்பாதை திட்டம் - அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

 
 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/e4063542-2f96-4a2d-baa5-205a80dbaa38_S_secvpf.gif
 
கடலூர்:
 
              கடலூர் நகரின் மைய பகுதியாக லாரன்ஸ் சாலை உள்ளது. இதனால் எந்நேரமும் வாகன போக்குவரத்து, மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருக்கும். மேலும் இப்பகுதியில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் உள்ளதால் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும். இதனால் லாரன்ஸ் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு இருப்பதோடு பொதுமக்கள் பெரும்பாதிப்பு அடைந்து வந்தனர்.
 
              இந்த நிலையில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. நிதி போதாதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் மீண்டும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே சுரங்கப்பாதை அமைக்கவில்லை என்றால் லாரன்ஸ் சாலையில் இரு பக்கமும் சுவர் எழுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம், மறியல் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்றது.
 
             இதன்பின்னர் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.7 கோடியே 30 லட்சம் நிதியை நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கீடு செய்தது. இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் வந்தது. தேர்தல் பிரசாரத்துக்காக கடலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கடலூர் லாரன்ஸ் சாலையின் குறுக்கே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.  அதன்படி கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் கடலூர் லாரன்ஸ் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு நேற்று பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
              சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தின் பூமி பூஜையை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அமுதவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், நகராட்சி கமிஷனர் இளங்கோவன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா, உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி, நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மீனவர் பிரிவு செயலாளர் தங்கமணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் மாதவன்,
 
                 இணை செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன், ஒன்றிய பேரவை தலைவர் பாதிரிகுப்பம் சிவலிங்கம், நகர பேரவை செயலாளர் கந்தன், குறிஞ்சிப்பாடி பேரவை செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், ஆதிபெருமாள், ஏழுமலை, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலம் நகரமன்ற அ.தி.மு.க. வேட்பாளராக அரங்கநாதன் அறிவிப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/dfc801b6-2df2-4f0c-b3a5-e58eae83f50c_S_secvpf.gif




விருத்தாசலம்

             உள்ளாட்சி தேர்தலில் விருத்தாசலம் நகரசபை அ.தி.மு.க. வேட்பாளராக அரங்கநாதன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அரங்கநாதன் பிறந்த தேதி 15.2.1949. விவசாயம் மற்றும் லாரி போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வரும் இவர். 1972 முதல் கட்சி அடிப்படை உறுப்பினராக உள்ளார். 1980-ம் ஆண்டு நகர செயலாளராக தேர்ந்தெடுக்கப்டப்டார்.

      அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் ஒருங்கிணைந்த மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருந்தார். பின்னர் கட்சியின் மாவட்ட இணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது தொகுதி செலயாளராக பணியாற்றி வருகிறார்.

               அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தபோது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2001-ல் விருத்தாசலம் நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது அவர் 2-வது முறையாக நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior