உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை


ஆர்ப்பரிக்கும் அலைகளை பொருட்படுத்தாமல் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கும் வடமாநில சுற்றுலாப் பயணிகள். (வலது படம்) கடல் சீற்றம் காரணமாக
கடலூர்:
            வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடலூர் மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. 20 அடி உயரம் வரை அலைகள் எழும்பி ஆர்ப்பரிப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். கடல் நீரோட்டம் பெரிதும் மாறியுள்ளது என்றும் தெரிவித்தனர். கடந்த 3 நாள்களாக அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்ல வில்லை. 20 முதல் 30 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பெரிய விசைப் படகுகளும் செவ்வாய்க்கிழமை கரை திரும்பின. 
இதுகுறித்து மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் கூறுகையில்,
            கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கடந்த 3 மாதங்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கிய பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கடந்த 3 நாள்களாக கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. வியாழக்கிழமையும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்தி மீன்கள் பிடிக்கும் 100 படகுகள் மற்றும் வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் பிடிக்கும் கட்டுவலைப் படகுகளும் கடந்த 3 மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இப்போது ஏற்பட்டு இருக்கும் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சிறிய படகுகளும் மீன் பிடிக்க முடியவில்லை. இதனால் மீன் விலை உயர்ந்துள்ளது. 















Read more »

கடலூரில் 28 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம்: பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

கடலூர் : 

           கடலூரில் 28 கோடி ரூபாய்மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர்  ஆய்வு செய்தார். 

              கடலூர் மாவட்டத் தலைநகரான அரசு அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் தனியார் கட்டடங்களிலும், அரசு கட்டடங்களில் போதிய இடவசதி இல்லாமலும் இட நெருக்கடியில் இயங்கி வருகின்றன. வெவ்வேறு இடங்களில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தவிர்க்க மற்ற மாவட்டங்களில் உருவாக்கியது போல் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் பெருந்திட்ட வளாகத்தை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

               அதன்பேரில் தற்போது கலெக்டர் அலுவலகம் இயங்கி வரும் இடத்தில் உள்ள குளத்தை மூடி, ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் 6 அடுக்கு கட்டடம் கட்ட கலெக்டர் அமுதவல்லி ஆலோசனையின் பேரில் பொதுப்பணித் துறை சார்பில் பூர்வாங்க திட்ட வரைபடத்துடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், கடலூரில் 28 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.












Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7.77 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

கடலூர் : 

            கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு மானியமாக 7 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 
கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டிற்கான நிதிக்குழுவின் இரண்டாம் தவணையாக 7 கோடியே 77 லட்சத்து 4,840 ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செலவினத்திற்காக ஊராட்சி நிதி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர்கள் தங்கள் ஊராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்திட அறிவுறுத்தப்படுகின்றனர் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






Read more »

பா.ம.க. தொழிற்சங்க தலைவர் ஞானசேகரன் பா.ம.க.வில் இருந்து விலகி புதியக் கட்சித் தொடங்குகிறார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/839e76c2-9045-48c3-b89f-988c816085d6_S_secvpf.gif
 

 
          பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பா.ம.க. தொழிற்சங்க தலைவராக இருந்த ஞானசேகரனும் கட்சியில் இருந்து விலகி விட்டார்.   அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் பதவியில் இருக்கும் ஞானசேகரன் பா.ம.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். 
 
இதுபற்றி அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் ஞானசேகரன் கூறியது:-

                  கொள்கை ரீதியாக பா.ம.க. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் வசதி வாய்ப்புகள் பெருக பெருக டாக்டர் ராமதாஸ் மாறிவிட்டார். பணம்தான் முக்கிய குறிக்கோளாகிவிட்டது. பணக்காரர்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வேலை செய்யும் அமைப்பாக பா.ம.க. மாறி விட்டது.
 
              உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது.   கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். இப்போது எங்கள் சங்கத்தில் 36 ஆயிரம் ரெயில்வே தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக தொண்டர்களை திரட்டி உள்ளோம். பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய எந்த கட்சியும் தயாராக இல்லை. அவர்களுக்கு சேவை செய்ய அம்பேத்கார் பெயரில் புதிய கட்சி தொடங்குகிறோம். 1-ந்தேதி தியாகராயநகர் பி.டி. தியாகராயர் அரங்கில் விழா நடக்கிறது. அப்போது கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படும். பா.ம.க.வில் இருந்து விலகியவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் உள்பட அனைவரையும் புதிய இயக்கத்தில் இணைய அழைத்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 

 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் நாள்: 260மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/d7b9a7b9-fe23-41ad-971f-3f1d0e514ba1_S_secvpf.gif
 
கடலூர் மாவட்ட  ஆட்சியர் அமுதவல்லி
 
கடலூர்:

                கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது.   இதில் கலெக்டர் அமுதவல்லி பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, பட்டா வழங்க கோருதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட 260மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

               கூட்டத்தில் கலெக்டர் அமுதவல்லி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை சார்ப்பில் 3 பேருக்கு இலவச சலவைப் பெட்டிகளை வழங்கினார். வருவாய்துறை மூலம் கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த நாணமேடு கிராமத்தை சேர்ந்த தையல்நாயகியின் கணவர் சாமிதுரைக்கும், வடுகபாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது கணவர் கலியமூர்த்திக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திருவேங்கடம், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்ட நல அலுவலர் கணபதி, மாவட்ட சமூகநல அலுவலர் புவனேஸ்வரி, செய்தி மகக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மத்திய சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/ab8965a1-5eac-4308-a5af-2a2bc70bf599_S_secvpf.gif
 
கடலூர்:

             நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு உள்பட 2 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

           இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. பொன்முடிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பொன்முடியின் நிபந்தனை ஜாமீனுக்கான உத்தரவு நகலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா டேனியலிடம் தி.மு.க. வக்கீல்கள் நேற்று பெற்றனர். அந்த உத்தரவு நகலை கடலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வக்கீல்கள் ஒப்படைத்தனர்.  

              இதைத்தொடர்ந்து கடலூர் மத்திய சிறையிலிருந்து செவ்வாய்கிழமை  மாலை 4.15 மணிக்கு பொன்முடி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், அங்கையற்கண்ணி, தங்கராசு, ஏ.ஜி.ராஜேந்திரன், ஜனகராஜ் மற்றும் பலர் வரவேற்றனர். சிறையை விட்டு பொன்முடி வெளியே வந்ததும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியது
 
                முதல்வகுப்பு சிறைஎன்று கூறிவிட்டு வெளிச்சிறையில் அடைத்து வைத்திருந்தனர் என்று கூறினார். பின்னர் அவர் காரில் விழுப்புரம் புறப்பட்டு சென்றார். நிர்வாகிகள் அவரை அழைத்து சென்றார்கள். கடலூர் ஜெயிலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி 84 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior