உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 12, 2012

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் விளையாட்டு தின விழா

கடலூர் :

     கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ரமாராணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதன்மை செயல் அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.











Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

விருத்தாசலம் :

     விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

     விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி தமிழ்த்துறை மாணவியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.  பேராசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ராணி, வேணி, ராதா முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் மனோன்மணி, ஜெயந்தி, வளர்மதி, வேல்விழி, ஜெனோவா மற்றும் கல்லூரி மாணவிகள் பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் முன்னேற்றம், சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய தகுதிகள் குறித்து உறுதிமொழி எடுத்தனர்.








Read more »

விருத்தாசலம் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவனுக்கு எஸ்.எம்.எஸ்.ஸில் வந்த விடை

விருத்தாசலம:

       விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் திங்கள்கிழமை நடந்த 12-ம் வகுப்பு ஆங்கிலத் தாள் தேர்வில், தனித்தேர்வர்கள் அறையில் செல்போனில் வினாவுக்குரிய விடை குறுஞ்செய்தியாக வந்ததால் மண்டல தேர்வுத் துறை துணை இயக்குநர் செல்போனை பறிமுதல் செய்தார்.

         விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தேர்வு நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்கள் 387 பேர், தனித்தேர்வர்கள் 109 பேர் உள்பட மொத்தம் 496 பேரில் 479 பேர் தேர்வு எழுதினர். அப்போது மண்டல தேர்வுத்துறை துணை இயக்குநர் ராமச்சந்திரன் மாணவர்களை ஆய்வு செய்தார். இதில், தனித் தேர்வர்கள் எழுதிக்கொண்டிருந்த தேர்வறைக்குச் சென்றுள்ளார். அப்போது, தேர்வறை மேற்பார்வையாளரிடம் இருந்த மாணவனின் செல்பேசிக்கு வினாத்தாளுக்குரிய விடை குறுஞ்செய்தியாக வந்திருந்தது. செல்போனிலிருந்து குறுஞ்செய்தி ஒலி வருவதைக்கேட்டை துணை இயக்குநர் ராமச்சந்திரன், மேற்பார்வையாளரிடம் இருந்து செல்போனைக் கைப்பற்றி, பள்ளி தேர்வு முதன்மை கண்காணிப்பாளரும், தலைமை ஆசிரியருமான முருகேசனிடம் ஒப்படைத்தார்.

         குறுஞ்செய்தி வந்த செல்பேசியை சென்னை தேர்வுத் துறை இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும் என துணை இயக்குநர் ராமசந்திரன் தெரிவித்தார். எனினும் செல்போனுக்கு உரிய தனித்தேர்வரிடம் செல்போன் இல்லாததால், அவர் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior