உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 29, 2012

இணையத்தளத்தில் குடும்ப அட்டை புதுப்பிக்கலாம்

        தமிழகத்தில் குடும்ப அlட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள செய்திக் குறிப்பில், 

          தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது.மொத்தமுள்ள 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 

         மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


 அதன்படி பொதுமக்கள்


     

      ன்ற இணைய  தள  முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.  

           ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.

முகவரி


http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do



Read more »

செவ்வாய், பிப்ரவரி 28, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா

விருத்தாசலம் :

     விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கணிதத் துறை பேராசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கணித மன்ற செயலர் முத்துலட்சுமி வரவேற்றார். சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் கணித மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மன்ற இணைச் செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.













Read more »

பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் லந்துரையாடல் கூட்டம்

சிதம்பரம்:

       சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  அன்புமணி ராமதாஸ் பேசியது:-

          மாணவர்கள் எதை நினைத்தாலும் சாதிக்கலாம். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஒருவர் இருந்தால் அவரிடம் நான் வரம் கேட்டால் பெரிய பணக்காரராக வேண்டும் எனவோ, பிரதமராக வேண்டும் எனவோ கேட்க மாட்டேன். எனது கல்லூரி பருவத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என கேட்பேன்.

           வருங்கால இந்தியர்கள் நீங்கள். இந்த இளைஞர்களை வழிநடத்தி செல்லும் வித்தியாசமான தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஒருவர்தான். இம்மண் சாதாரன மண் கிடையாது. 1967ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த அண்ணாமலைப் பல்கலை. மண். இந்தி எதிர்ப்பு மொழிப்போர் போராட்டம் இம்மண்ணில் தொடங்கி மாணவர்கள் போராடிய மண். இதன் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதே மண்ணில் நாம் ஒன்று கூடியுள்ளோம். ஒற்றுமையுடன் போராடுவோம் அடுத்து நிச்சயம் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். ஆட்சிக்கு வரவைப்போம். திராவிடக் கட்சிகள் மாறி, மாறி 45 ஆண்டுகள் ஆண்டு குடிகார நாடாகவும், பிச்சைக்காரர்கள் நாடாகவும், இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாகவும் ஆக்கிவிட்டது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தராது. கல்வி, சுகாதாரம், வேளாண் இடுபொருள்களை இலவசமாக கொடுப்போம். இதுதான் மற்றவர்களுக்கும், நமக்கும் வித்தியாசம். அரசியல் வேண்டாம் என மாணவர்கள் சொல்ல முடியாது. அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும்.

               எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருபதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதே போன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும். சினிமா ஒரு பொழுது போக்கு. அதனை பார்த்துவிட்ட மறந்துவிட வேண்டும். ஆனால் நம் மக்கள் அதனை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இந்தியாவில் தமிழ் நாட்டை தவிர, எந்த மாநிலத் திலும் சினிமாக்காரகள் ஆண்டதில்லை. 45 ஆண்டு களாக சினமாவில் வேஷம் போட்டவர்களும், வசனம் எழுதியவர்களும்தான் ஆண்டு வருகின்றனர்.

          தற்போது தமிழகத்திற்கு ஒரு நடிகை முதல்வர், ஒரு நடிகர் எதிர்க்கட்சி தலைவர். அண்ணாதுரை எம்.ஏ. படித்தவர். அவருக்கு பிறகு இவர்கள் யாரும் படித்தவர்கள் கிடையாது. இனி தமிழ்நாட்டை படித்தவர்கள் ஆள வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வேளாண்மை குறித்து புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற செயல்திட்டத்தை பா.ம.க. புத்தகமாக வெளியிட்டுள்ளது. பா.ம.க. ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைதி புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அ.தி.மு.க.விற்கு ஒட்டுப்போடவில்லை. தி.மு.க.விற்கு எதிராக ஓட்டு போட்டார்கள். ஓட்டு போட வேறு யாரும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். உறுதியாக தெரிவிக்கிறோம். பா.ம.க. தலைமையில் தனி அணி அமைப்போம். திராவிட கட்சிகள் திராவிடன் என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றி வருகிறார்கள்.

           திராவிடர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக உள்ளனர். ஆனால் அங்கு திராவிட கட்சிகள் கிடையாது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் உள்ளது. கேரளாவில் நாயர்மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திராவில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை. திராவிட கட்சிகள் தலைவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர்., ஜானகி, ஜெயலலிதா. வைகோ யாரும் தமிழன் கிடையாது. தமிழன் யார் என்றால் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒருவர்தான். பாமக ஆட்சிக்கு வந்தால் சினிமா கலாச்சாரம், மது ஆகியவற்றை ஒழிப்போம். திமுக ஆட்சியில் 85 ஆயிரம் கோடி இலவசமாக வழங்கப் பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் கோடி மின்திட்டத்திற்கு ஒதுக்கியிருந்தால் மின்வெட்டு வந்திருக்காது. மின் கட்டணம் உயர்ந்திருக்காது. 20 ஆயிரம் கோடி போக்குவரத்து துறைக்கு ஒதுக்கியிருந்து பஸ் கட்டணம் உயர்ந்திருக்காது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

               கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட தமிழக மாணவர் சங்க செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் முருகன் வரவேற்றார். பாமக மாநிலத் தலைவர் மணி மாநில இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன், தமிழக மாணவர் சங்க தலைவர் பாரிமோகன், துணைப் பொதுச்செயலாளர் திருஞானம், பா.ம.க. மாவட்டச் செயலாளர் வேணு. புவனேஸ்வரன், சமூக முன்னேற்ற சங்கம் பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம் பேராசிரியர் செல்வகுமார், பேராசிரியர் மணிவண்ணன் உள்ளிட் டோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் அண்ணா மலைப் பல்கலைக்கழகம், கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் மருத்துவர் ராமதாஸ் அறிவியல் கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லரிகளைச் சேர்ந்த தமிழக மாணவர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்று பேசினர். தமிழக மாணவர் சங்க (தெற்கு) மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.









Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 17-வது முறையாக உண்டியல் திறப்பு

சிதம்பரம்:
 
       சிதம்பரம் நடராஜர் கோவிலில்  17-வது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகியது. 
 
          புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு கையகப்படுத்தியது.அதையடுத்து கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் 9 உண்டியல்கள் கோவிலுக்குள் வைக்கப்பட்டது. உண்டியல் வைக்கப்பட்டு இது வரை 18 முறை திறக்கப் பட்டு உள்ளது.அதன் மூலம் இது வரை 70 லட்சத்து 91 ஆயிரத்து 669 ரூபாய் வசூலாகி உள்ளது.
 
          இது தவிர 141 கிராம் தங்கம், 565 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் கோவிலுக்குள் இருக்கும் உண்டியலை திறந்து காணிக்கையை எண்ண இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி நேற்று 17-வது முறையாக கோவிலில் உள்ள 9 உண்டியல்களும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன் தலைமையில் கோவில் செயல் அதிகாரி சிவக்குமார் முன் னிலையில் திறக்கப்பட்டது.
 
         அதைதொடர்ந்து காணிக்கை பணம் ஒட்டு மொத்தமாக எண்ணப்பட்டது. சுமார் 3 மணி நேரம் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 443 காணிக்கை வசூலாகி இருந்தது.   இது தவிர மலேசியா -503 ரிங்கட், இலங்கை - ரூ.1220, கனடா- 20 டாலர், அமெரிக்கா-3 டாலர், இங்கிலாந்து பவுண்டு-3 ஆகியவையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். தங்கம் 81/2 கிராம், வெள்ளி 105 கிராம் ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். காணிக்கை எண்ணும் போது பிரச்சினை ஏதும் நடக்காமல் இருக்க சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், பிப்ரவரி 27, 2012

உலக அளவில் 19 ஆயிரத்து 700 கோடி டன் நிலக்கரி வளத்துடன் இந்தியா 4ம் இடம்

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_414183.jpg

நெய்வேலி : 

       ""இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 70 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது'' என என்.எல்.சி., சுரங்கத் துறை இயக்குனர் சுரேந்தர் மோகன் பேசினார்.

         கடலூர் மாவட்டம், நெய்வேலியில் இந்தியப் பொறியாளர் கழகம் சார்பில் சுரங்கத் துறையில் பின்பற்றப்படுவதற்காக, சமீபத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நடைமுறை குறித்த ஆய்வரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. என்.எல்.சி., திட்ட இயக்குனர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் என்.எல்.சி., சுரங்கத்துறை இயக்குனர் சுரேந்தர் மோகன் பேசியது: 

          உலக அளவில் 19 ஆயிரத்து 700 கோடி டன் நிலக்கரி வளத்துடன் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 53 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியா 3ம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 6 கோடியே 70 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் 67 சதவீத மின் தேவைகள் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனல்மின் சக்தி வாயிலாக பெறப்படுகிறது. இந்திய நிலக்கரி உற்பத்தியில் 81 சதவீதம் திறந்த வெளி சுரங்கங்கள் மூலம் கிடைக்கிறது.

           வரும் 20 ஆண்டுகளில் நம் நாட்டின் நிலக்கரி தேவை 3 மடங்காக உயரும் வாய்ப்பு உள்ளது. 2014ம் ஆண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்திக்கும் தேவைக்கும் இடையேயான இடைவெளி 15 கோடி டன்னாக இருக்கும். மேலும் 12வது திட்டத்தின் முடிவில் பழுப்பு நிலக்கரி மூலம் பெறப்படும் மின் உற்பத்தி, 7,491 மெகா வாட்டாகவும் 13வது திட்ட காலத்தின் முடிவில் 11 ஆயிரத்து 91 மெகா வாட்டாகவும் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. என்.எல்.சி.,யில் விரைவில் இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கத்தின், வாயிலாக 500 மெகாவாட் மின்சாரம் மற்றும் தமிழக அரசுடன் இணைந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் தூத்துக்குடி அனல்மின் திட்டத்தின் வாயிலாக 1,000 மெகா வாட் மின்சாரமும் கூடுதலாகக் கிடைக்கும். இவ்வாறு சுரேந்தர் மோகன் பேசினார்.













Read more »

சிதம்பரம் அருகே இரண்டு முதலைகள் பிடிபட்டன

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_414190.jpg

சிதம்பரம் :

      சிதம்பரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்த இரண்டு முதலைகள் பிடிபட்டன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 500 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட முதலை, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக புகுந்தது.

      நேற்று அதிகாலை, பாலகுரு என்பவர் வீட்டுத் தோட்டத்தில் மாட்டை கடித்தது. அப்போது, நாய் குறைத்ததால், வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்த போது, முதலை இருப்பதைக் கண்டு சத்தம் போட்டனர். உடன், கிராம மக்கள் ஒன்று கூடி, முதலையைப் பிடித்து கட்டிப் போட்டனர். தகவலறிந்த சிதம்பரம் வனச்சரகர் பாபு, வனவர் மணி உள்ளிட்டோர் விரைந்து சென்று, முதலையைப் பிடித்து, வக்காரமாரி ஏரியில் விட்டனர். சிதம்பரம் ஏ.எஸ்.பி., முகாம் அலுவலகம் எதிரில், ஆயிகுளத்தில், 2 அடி நீளமுள்ள குட்டி முதலையைப் பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். நிலைய பொறுப்பு அலுவலர் சண்முகம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அந்த முதலையைப் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த முதலையும், வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.










Read more »

அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பண்ருட்டி :
 
     பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு மற்றும் பட்டய சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
 
   கல்லூரி செயலர் ரெஜினாள் தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். பழைய மாணவர்கள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் புதுச்சேரி ரானே மெட்ராஸ் கம்பெனியின் உதவி மேலாளர் ஜூடு ஆனந்தராஜ், பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், புதுப்பேட்டை ஸ்டேட் பாங்க் மேலாளர் சுதாகர், உதவி மேலாளர் லட்சுமி சிறப்புரையாற்றினர். 23ம் ஆண்டு பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை சோழா பவுண்டேஷன் சேர்மன் சுந்தரம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சரவணன், புனித அன்னாள் பொறியியல் கல்லூரி முதல்வர் கணபதி மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ் வழங்கினர்.
 
 
 
 
 
 
 
 

Read more »

Four accused in petrol bunk robbery case nabbed near Kadampuliyur

   The police on Sunday nabbed four persons accused in a petrol bunk robbery case near Kadampuliyur and seized from them a genuine German-make pistol and a sharp-edged weapon, along with nine live ammunitions.

        Revealing this to presspersons here on Sunday, C. Sylendra Babu, Inspector General of Police (North Zone), said that the pistol with all taxes would cost about Rs 10 lakh. In the cylinder of the pistol that could hold six bullets, three shots were already fired. They were also having another fully loaded cylinder and all the bullets bore the Indian ordnance factory mark. The IG said that it was at the instance of two locals K. Natarajan (29) of Thoppukollai and P. Ramarajan (27) of Pavaikulam, Kadampuliyur, two offenders G. Prakash (23) and P. Dinesh, operating from Mumbai, were hired for committing the offence.

       On their way to Cuddalore, the Mumbai-based hirelings purchased the pistol from Bihar and it was financed by Natarajan. Actually, they conspired to loot the house of a lorry owner at Panruti but could not succeed because the house was well guarded by security personnel and dogs. However, not to be left empty handed they targeted the petrol bunk on the Chennai-Kumbakonam highways at Kollukarankuttai on February 19, tied up the two employees G. Shanmugam and K. Karthikeyan and took away Rs 55,000 in cash at gun-point.
On information, a special team immediately chased the culprits but of them only Selvathirumal was caught and from him Rs 14,000 in cash was seized. Others ran into the cashew groves.

    While fleeing, the culprits fired at the police personnel and in the instance one Gopalakrishnan, a local person who had come to assist the police, sustained a bullet injury on the right knee. The IG further said that personal enmity or the lure of easy money would have prompted the local persons to collude with the rowdy elements from Mumbai. Their antecedents are now being probed. In fact, the special police team comprised efficient personnel from the six districts, including that of Villupuram, Cuddalore, Thiruvannamalai and Vellore.

          The police came to know about their whereabouts when the four-member gang waylaid M. Jaisankar (28) at Thoppukollai in the early hours on Sunday (February 26) and at gun point took away the moped, a gold chain weighing one-and-half sovereigns and Rs 2,000 in cash from him. On the complaint of the victim at Panruti, police alerted the special team that swiftly swung into action and rounded up the gang near a graveyard at the Gedilam bridge in Panruti. The team took the gang members by surprise and overpowered them before they could access their pistol, thus averting a major show-down. The IG and Superintendent of Police (Cuddalore) P. Pakalavan lauded the special team and presented them with cash rewards. The IG also said that the police were on the lookout for some more accomplices who helped the offenders with logistics.














Read more »

ஞாயிறு, பிப்ரவரி 26, 2012

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து மணந்த கடலூர் இளைஞர்


 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_414184.jpg



கடலூர் : 

         கடலூரைச் சேர்ந்த வாலிபர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து, இந்து முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டார்.

        கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் - அஞ்சுகமணி தம்பதியின் இளைய மகன் அன்புச் செல்வன். கடந்த 8 ஆண்டுகளாக, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் தன் நண்பர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற போது, அங்குள்ள பிலிப்பைன்ஸ் நேஷனல் பாங்க்கில் கிளை மேலாளராக பணியாற்றிய எட்னா கிறிஷ்டோபலுடன் பழக்கம் ஏற்பட்டது. அது, நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து, இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு அன்புச்செல்வனின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்தனர்.


         எட்னா கிறிஷ்டோபலின் பெற்றோர் இறந்து விட்டதால், அவரை வளர்த்த சித்தி பஷன்சியா கிறிஷ்டோபல் மறுத்து விட்டார். அதனால், அன்புச்செல்வன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சென்று எட்னா கிறிஷ்டோபலின் சித்தியிடம் சம்மதம் பெற்றார். அதைத் தொடர்ந்து, காதலி எட்னா கிறிஷ்டோபல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கடந்த வாரம், தன் சொந்த கிராமத்திற்கு வந்த அன்புச்செல்வன், தன் காதலியின் பெயரை அருள்செல்வி என பெயர் மாற்றம் செய்தார். இந்த காதல் ஜோடிக்கு நேற்று காலை கடலூர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது. மணமகள் அருள்செல்வி என்ற எட்னா கிறிஷ்டோபல் இந்து மத முறைப்படி பட்டுப்புடவை உடுத்தி மண மேடைக்கு வந்தார். அவருக்கு அன்புச்செல்வன், மங்கள இசை முழங்க தாலி கட்டி, தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அருள்செல்வி அளித்த பேட்டி 

         "நாங்கள்  இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டாக, உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். அன்புச்செல்வனை காதலிக்கத் துவங்கியதில் இருந்து, நான் இந்திய கலாசாரத்தை நேசிக்கத் துவங்கினேன். தமிழ் பேச கற்று வருகிறேன். என்னை வளர்த்த சித்தி மற்றும் உறவினர்களின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திருமணத்திற்காக என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். நாங்கள் இருவரும் சில ஆண்டுகள் சிங்கப்பூரில் வசிக்க உள்ளோம். அதன் பிறகு, அன்புச்செல்வனின் சொந்த கிராமமான மூலக்குப்பத்தில் நிரந்தரமாக தங்க உள்ளோம்' என்றார்.







Read more »

Disabled man re-united with kin in Cuddalore

      In an emotional meeting, a 35-year-old mentally challenged man from Kashmir who was found wandering in Cuddalore two years ago was reunited with his family, thanks to the efforts of collector Rajendra Ratnoo and Oasis, a non-governmental organisation..

      Farooq Ahamed, dressed in a full-sleeved blue shirt and grey trousers, could not control his tears when he met his elder brother Nazar Ahamed Shah and uncle Mushtaq at the collectorate who had come from Kashmir on Thursday to take him back home. Mr Ratnoo said that Farooq was found wandering on the streets of Cuddalore two years ago. Officials of the social welfare department soon contacted Oasis, an NGO working in the field of rehabilitation of mentally ill persons, and brought him to the Centre for psychiatric treatment where after a slow recovery he revealed his identity and address to counsellors.
Farooq only knew Kashmiri and Urdu and with the help of interlocutors he was administered medicines.

      He was soon able to recall his address which enabled Oasis to get in touch with his family. His elder brother who had almost lost hope of finding his brother came to Cuddalore along with documents including Electors Photo Identity Card and house address. A visibly moved Mr Nazar Ahamed Shah thanked Oasis for having rehabilitated his brother. Mr Ratnoo said the district administration had put in place a mental health programme that identifies mentally ill patients and rehabilitates them to enable them regain their mental health. 




















Read more »

Minister Jayanthi Natarajan promises help for cyclone Thane hit areas

   Over 15 lakh casuarina seedlings would be distributed among farmers of Villupuram and Cuddalore to grow back the tree cover destroyed in Cyclone Thane, Union minister for environment and forests Jayanthi Natarajan said at the 'Tree Growers Mela' organized by Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) here on Friday. Natarajan said the ministry and various governmental organizations would help famers to raise trees to protect the fragile ecosystem in the cyclone-hit areas. She also reiterated her commitment to rebuild ecologies ruined by natural calamities and human interference.






Read more »

Cuddalore petrochemicals hub for Cabinet approval in 2 weeks

        The Ministry of Chemicals and Fertilisers will present a proposal for setting up a Petroleum, Chemicals and Petrochemicals Investment Region near Cuddalore in two weeks.


      Interacting with journalists on the sidelines of a conference on construction chemicals organised here by the Federation of Indian Chambers of Commerce and Industry, Mr Jose Cyriac, Secretary, Department of Chemicals and petrochemicals, said that the Cuddalore PCPIR proposal has reached a stage where it could be presented to the Cabinet for approval. After the Cabinet approves it, Government of India would sanction the project, whereupon various agencies from the central and state governments would swing into action.

      The only operational PCPIR in India is in Gujarat. The Centre has given its sanction to PCPIRs in three other States – Haldia (West Bengal), Paradeep (Orissa) and Visakhapatnam (Andhra Pradesh). Tamil Nadu's proposal is under consideration.Government of India does not provide any funds or incentives, except for meeting out viability gaps in projects. However, if a road or a railway line has to be built, it would allocate funds for the projects out of the budget.


      Spread over a 250 sq. km area around Cuddalore, the project will become a chemical and petrochemical hub. Officials of the Tamil Nadu government had previously told Business Line that the project envisaged total infrastructure spending of Rs 16,725 crore.  Mr Cyriac said that the Tamil Nadu Government has asked Centre to upgrade two local roads to national highways for access to the region. New Delhi has agreed to doing two of the three and the third is under consideration. It is learnt that the Cuddalore PCPIR has attracted investment enquiries, worth close to Rs 100,000 crore.

Govt funding needed  

      While the present PCPIR scheme envisages no funding by the central government, “this need to be corrected,” Mr Cyriac said. Where there are common facilities required, such as common effluent treatment plants, or preparation of master plan, the government should provide financial support, he said.

      Mr Cyriac also observed that a basic weakness of the scheme was the commitment of the anchor tenant. What if the tenant withdraws his project, is the question the government is trying to address. For the Cuddalore PCPIR, however, there is no “anchor tenant” issue – Nagarjuna Oil, which is putting up a 6 million-tonne refinery, will be the big investor. 














Read more »

Fear of poor 10th and 12th board Exams results in Cuddalore

CUDDALORE:

     As Class X and XII board examinations near, students and teachers in the district are worried about poor results as students have been unable to prepare for it.

        According to teachers here, studies were disrupted at an important juncture by the cyclone. “Till half-yearly examination, everything was smooth. Students were well-prepared and had been retaining the tempo to take the public exams. Ironically, the cyclone negated all the improvement. Every student was affected by the cyclone. Damage caused to their houses and crops impacted their minds and it took over two weeks for them to regain their concentration,” said V Agnel, principal of St Joseph’s Higher Secondary School at Manjakuppam.


   Students were on vacation when Thane struck. Due to the damage caused to buildings, schools reopened only after Pongal. Additionally, record books of students were spoiled in the rains.

Biology group Class XII student J Jayaprakash said,

       “My house collapsed in the cyclone. My books and record notes were spoiled. My family had to shift to Cuddalore and we live in a rented a house to facilitate my studies. My father, a far­mer, is now working in a textile shop.” Jayaprakash scored 1,026 marks out of 1,200 in the half-yearly exam but in the latest exam (first revision) he scored 966.

When asked about using lamps, student Mahesh said, 

        “Without kerosene, how can I light a lamp?” “Had the cyclone not hit the district, students would have scored relatively better marks in the public exams,” opine teachers. To help students cope with the extra burden, some schools are providing extra coaching.





Read more »

விருத்தாசலம் அருகே ஆசிரியர் சேமநலநிதி கையாடல்

http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ac5689fc-42fe-46a5-8218-0134d902ed4e_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
 
      விருத்தாசலம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), விருத்தாசலம் அருகே கம்மாபுரத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (32). கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் சம்பளபட்டியல் மற்றும் சேமநல நிதி பிரிவில் அறிவழகன் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
          அந்த அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்கில் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 1-ந் தேதி அறிவழகன் `சஸ்பெண்டு' செய்யப்பட்டார். அதிகாரிகளின் விசாரணையில், ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்கில் சுமார் ரூ.30 லட்சம் கையாடல் செய்யப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அந்தபணத்தை அறிவழகன் தனது மனைவி தேன்மொழி வங்கி கணக்கில் சேர்த்திருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் உதவி தொடக்க கல்வி அதிகாரி வீரபாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் அறிவழகனையும், தேன்மொழியையும் போலீசார் கைது செய்தனர். அறிவழகன் வீட்டில் இருந்து ரூ.15 லட்சத்து, ஆயிரம் மற்றும் 2 இருசக்கரவாகனங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஏ.டி.எம்.கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
 
          பின்னர் அவர்கள் 2 பேரும் விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவை தொடர்ந்து கணவனும், மனைவியும் கடலூர் ஜெயிலில் 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் சேமநலநிதி கணக்கில் நடந்த இந்த கையாடல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கையாடலின் பின்னணியில் அதிகாரிகள் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, பிப்ரவரி 25, 2012

ன்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நெய்வேலி:

      மும்பையில் நடந்த உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பின் மாநாட்டில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இது குறித்து என்.எல்.சி. செய்தித் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

        சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் மனிதவளத்துறை நிபுணர்களை ஒருங்கிணைத்து பல்வேறு ஆக்கபூர்வ பணிகளை மேற்கொண்டு வரும் அமைப்புதான் உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பு. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனிதவள மேம்பாடு தொடர்பான மாநாட்டை நடத்தி, மனிதவளத்துறையில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்த நிபுணர்களுக்கும், புதிய உத்திகளை அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட உயர் அதிகாரிகளுக்கும் சிறப்பு விருது வழங்கி கெüரவித்து வருகிறது.

         அந்தவகையில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரி, என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதுமுதல் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடுக்கிவிட்டு உற்பத்தியை அதிவிரைவாக மேம்படுத்தி, பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 2-வது உயர்ந்தபட்ச தகுதியான நவரத்னா என்ற சிறப்பு நிலையை என்.எல்.சி. நிறுவனம் குறுகிய காலத்தில் பெற காரணமாக இருந்தவர் அன்சாரி.நிறுவனத்தில் ஊழியர்களிடையே நல்ல தொழில் உறவைப் பராமரித்து, சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி உற்பத்தியிலும், அனல்மின் நிலையங்களில் மின்சக்தி உற்பத்தியிலும் புதிய சாதனைகளை நிகழ்த்தினார். இதன்மூலம் நிறுவனம் நிகர லாபம் ஈட்டுவதிலும் சாதனைபடைத்தது.

         இந்த சாதனைகளுக்காக உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பு ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.இதற்கான விழா பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இதில் 2012-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏ.ஆர். அன்சாரி பெற்றுக்கொண்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Read more »

சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி

சிதம்பரம்:

      சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் 10 நாட்கள் புத்தக கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார்.

        இன்ஜினியரிங் கல்லூரி கலையரங்கில் நேற்று துவங்கிய கண்காட்சி மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது. பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் திறந்து வைத்தார். அரிமா மாவட்ட துணை ஆளுனர் சுவேதகுமார், இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன், பி.ஆர்.ஓ., செல்வம், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

            கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், அறிவியல், கவிதை, நாவல்கள், குழந்தை நூல்கள், சுய முன்னேற்றம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் மாலை 3.30 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 11 மணிக்குத் துவங்கும். ஏற்பாடுகளை புத்தக கண்காட்சிக்குழுத் தலைவர் வெங்கடேசன், செயலர் சண்முகசுந்தரம், பொருளாளர் அமிர்தகடேசன் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.















Read more »

தானே புயலின் அறுவடை குறும்படம் வெளியீடு

கடலூர்:

         இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய "தானே புயலின் அறுவடை' குறும்படம் கடலூரில் இன்று திரையிடப்படுகிறது.

          "தானே" புயல் பாதிப்புகளையும், அதன் துயரத்தையும் உலகில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் "தானே புயலின் அறுவடை' என்ற குறும்படத்தை (ஆவணப்படம்) இயக்குனர் தங்கர் பச்சான் தயாரித்து இயக்கியுள்ளார். அதன் வெளியீட்டு விழா கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் இன்று 25ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 35 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தை "தானே' புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெளியிடுகின்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர் தங்கர் பச்சான் பங்கேற்கின்றனர்.












Read more »

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வரை மாற்ற கோரிக்கை

கடலூர்:
 
       கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி முதல்வரை மாற்ற வேண்டும் என்று, கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
 
 கல்லூரி ஆசிரியர்கள் சங்க மண்டலச் செயலாளர் குமார், செவ்வாய்க்கிழமை கடலூரில் கூறியது:
 
         கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, 1961-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, நாவலர் நெடுஞ்செழியனால் திறந்து வைக்கப் பட்டது. கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மாணவிகள், குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க அமைக்கப்பட்ட கல்லூரி இது. 
 
         ஆனால் இப்போது கல்லூரி நிர்வாகம் சீர்குலைந்து வருகிறது. கல்லூரிக்கான நிர்வாகம் சென்னையிலும், பல்கலைக்கழக அலுவலகம் வேலூரிலும், இணை இயக்குநர் அலுவலகம் திருச்சியிலும் இருப்பதால், ஆசிரியைகள், மாணவிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில் பெருத்த காலதாமதம் ஏற்படுகிறது. மாணவிகளுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித் தொகை கிடைப்பது இல்லை. இந்த நிலையில் கடந்த ஓராண்டாக பணியில் இருக்கும் கல்லூரி முதல்வர், ஆசிரியைகளுக்கு எதிராக மாணவிகளைத் தூண்டி விடுகிறார். ஆசிரியைகளுக்கு பாதுகாப்பில்லை. மாணவிகளிடையே அமைதியான கல்விச் சூழல் இல்லை. ஆசிரியை சாந்தி கல்லூரி ஊழியர் ஒருவரால் அண்மையில் தாக்கப் பட்டார்.
 
          பின்னர் இப்பிரச்னை கல்லூரி நிர்வாகத்திடம் திரித்துக் கூறப்பட்டு உள்ளது. கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் அனுமதி இல்லாமலேயே மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. மாணவிகளுக்கு அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் பாரபட்சமுடன் அளிக்கபட்டு, துறைத் தலைவரின் கையொப்பம் இல்லாமலேயே பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு பின் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. இதனால் மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து கல்லூரிக் கல்வித்துறை விசாரித்து வருகிறது. உரிய நேரத்தில் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவில்லை. ஆசிரியைகள் மரியாதையாக நடத்தப்படுவது இல்லை. எனவே முதல்வரை நீக்கவேண்டும் என்றார். 
 
இதுகுறித்து கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன்  கூறியது :
 
         , மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தார். "இக்கல்லூரியில் இருந்துவந்த குறைகளை கடந்த ஓராண்டில் நிவர்த்தி செய்து இருக்கிறேன். மாணவிகளின் நம்பிக்கையை பெற்று இருக்கிறேன். மாணவிகளிடம் வெளிப்படையாகப் பேசி அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறேன். சிலர் தாங்கள் கல்லூரி முதல்வராக வர முடியவில்லை என்ற எரிச்சல் காரணமாக, எனக்கு நல்ல பெயர் கிடைத்து இருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், புகார் சொல்கிறார்கள்.கல்விக் குழுவின் முடிவின்படியே மாணவிகளிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. கல்வி உதவித் தொகை மாணவிகளுக்கு தாமதமின்றி கிடைத்து வருகிறது. அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தன. மாணவிகளின் முறையீடு காரணமாகவே மாற்றப்பட்டது. கல்லூரியில் இருக்கும் அமைதியான சூழ்நிலையைக் கெடுக்கவும், குழப்பம் விளைவிக்கவும் சிலர் பலவிதமாக புகார் கூறுகிறார்கள்' என்றார். 
 
       ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளின் பேட்டியின்போது, கல்லூரி ஆசிரிர்கள் சங்க மண்டல பொருளாளர் சம்பத், சட்ட ஆலோசகர் இளங்கோவன், கல்லூரி கிளைச் செயலர் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், பிப்ரவரி 23, 2012

குள்ளஞ்சாவடி அருகே இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

குறிஞ்சிப்பாடி:
 
          குள்ளஞ்சாவடி அருகே ஒரே நாள் இரவில் நகைக் கடை மற்றும் இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 
         குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45. இவர் குள்ளஞ்சாவடி கடை வீதியில் நகை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று காலை கடையைத் திறக்க வந்தபோது பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 77 கிராம் தங்க நகைகளும், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 235 கிராம் வெள்ளி பொருட்களும் திருடு போயிருப்பது தெரியவந்தது.

         அதேப்போன்று, இதே வீதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கடைகளில் வைத்திருந்த ரொக்கப் பணம் 55 ஆயிரத்து 950 ரூபாய் திருடு போனது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் பார்த்திபன் மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் இருவர் என மூவர் கொடுத்த புகார்களின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து பூட்டை உடைத்துத் திருடிய மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

புதன், பிப்ரவரி 22, 2012

விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினர் மோதல்: கட்சி அலுவலகம் சூறை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/9d4cdf20-0b31-4b4b-b64b-d725ce437b62_S_secvpf.gif
விருத்தாசலம்:
       விருத்தாசலம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் சங்கர். சமீபத்தில் நகர செயலாளர் பதவியில் இருந்து சங்கர் மாற்றப்பட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் புதிய நகர செயலாளராக சரவணன், தலைவராக கார்த்திக், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் கடந்த 18-ந் தேதி நியமிக்கப்பட்டனர். இது சங்கரின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
          புதிய நிர்வாகிகள் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் பரிந்துரையின் பேரில் தான் நியமிக்கப்பட்டதாக சங்கரின் ஆதரவாளர்கள் எண்ணினர். இதனால் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் கொடும்பாவியை எரித்தனர். மேலும் முத்துகுமார் எம்.எல்.ஏ. வீட்டின் ஜன்னலை உடைத்தனர்.
     இதுகுறித்து முத்துக்குமார் எம்.எல்.ஏ. விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் தனது வீட்டு ஜன்னலை உடைத்ததாக கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே செவ்வாய்கிழமை காலை சங்கரின் ஆதரவாளரான ஜல்லி செந்தில் என்பவர் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பாலக்கரை ரவுண்டானாவில் கண்டன போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த முத்துகுமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களான ஆசிரியர் பாஸ்கர், பாலமுருகன், சரவணன், ஜானகி ஆகியோர் ஜல்லி செந்திலை திட்டி தாக்கியதாக தெரிகிறது.
          மேலும் சங்கரின் ஆதரவாளரான வேல்முருகன் என்பவரின் காரையும் முத்துக்குமார் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகை அருகே செயல்பட்டு வந்த சங்கரின் கட்சி அலுவலகத்தில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து அங்கிருந்த டி.வி., நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களையும் கிழித்து எறிந்து விட்டு சென்று விட்டனர். இன்று காலை இதனை பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர்.
        போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். விருத்தாசலத்தில் தே.மு.தி.க.வினரிடையே தொடர்ந்து மோதல் சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

Read more »

தமிழக அரசில் அரசியலில் மாற்றம்: வைகோ

சிதம்பரம்:
 
 சிதம்பரம் பி.முட்லூரில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்ல புதுமனை புகுவிழாவில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியது:-  
 
           ம.தி.மு.க.வுக்கு தற்போது ஒளிமயமான எதிர்காலம் உருவாகி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டு முந்திரி, பலா, வாழை, தென்னை மற்றும் நெற் பயிர்கள் அதிகமான பாதிப்பை ஏற்பட்டுத்தி இன்னும் 15 ஆண்டுகளுக்கு மக்கள் மத்தியில் இந்த அழிவு நீங்காத நிலையை ஏற்படுத்திவிட்டது.   பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கான்கிரீட் வீடுகள் மட்டும் கட்டி கொடுக்காமல் அவர்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.
 
             தமிழக அரசில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நடைபெற உள்ள சங்கரன் கோவில் இடைத்தேர்தல் ம.தி.மு.க. மகத்தான வெற்றிபெற என்னை ஆசிர்வதித்து அனுப்புங்கள். இந்த இடைத்தேர்தலில் ஊழலை எதிர்த்து எழுச்சியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ம.தி.மு.க.வுக்கு மக்கள் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு தருவார்கள்.
 
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதலாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மோகனசுந்தரம், கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

கொள்ளுக்காரன் குட்டை துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை

பண்ருட்டி:
 
           பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டை பெட்ரோல் பங்க் ஒன்றில் துப்பாக்கி முனையில் ரூ.55 ஆயிரம், ஞாயிற்றுக்கிழமை கொள்ளை அடிக்கப்பட்டது.
 
          கொள்ளையனைப் பிடிக்க முயன்ற லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் குண்டு காயம் அடைந்தார். தப்பியோடிய இரு கொள்ளையர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.விருத்தாசலத்தை சேர்ந்த லதாவுக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ளது. சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), மீனாட்சிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் (45) ஆகியோர் சனிக்கிழமை இரவுப் பணியில் இருந்துள்ளனர்.
 
           ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு மூன்று கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கியால் தரையில் சுட்டும், கத்தியைக் காட்டி மிரட்டி, ஊழியர்களைக் கட்டிப் போட்டு விட்டு ரூ.55 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் சென்ற சற்று நேரத்தில் பாவைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் கோபாலகிருஷ்ணன், டீசல் போட வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் இல்லாத நிலையில், பங்க்கின் உள்ளே சென்று பார்த்தபோது, ஊழியர்கள் கார்த்திகேயன், சண்முகம் இருவரும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததையும், ரூ.55 ஆயிரம் கொள்ளை போனது தெரிய வந்தது.உடனே லாரி ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் தனது நண்பரான மருங்கூரைச் சேர்ந்த அருளுக்கு போன் செய்து கார் எடுத்து வரச் சொல்லி கொள்ளையர்களை பின் தொடர்ந்துள்ளனர். காடாம்புலியூர் காந்தி நகர் அருகே நடந்துச் சென்ற கொள்ளையர்களை கோபாலகிருஷ்ணன் பிடிக்க முயன்றார். அப்போது கொள்ளையர்கள் சுட்டதில் குண்டு பாய்ந்து கோபாலகிருஷ்ணன் காயம் அடைந்தனர்.
 
           சம்பவ இடத்துக்கு காடாம்புலியூர் போலீஸôர் விரைந்து வந்தனர். இதில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும் போலீஸôர் துணிச்சலுடன் சென்று ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த செல்வம் என தெரிய வந்துள்ளது. ஏனைய இருவர் தப்பி ஓடி முந்திரிக் காட்டில் மறைந்துவிட்டனர். இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
 
ஐ.ஜி., ஆய்வு: 
 
        தகவல் அறிந்த வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு, காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு விரைந்தார்.
 
பின்னர் வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.சைலேந்திரபாபு அளித்த பேட்டி
 
         முந்திரிக் காட்டில் மறைந்த இரு கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் .கொள்ளையனைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டினார். பின்னர் கொள்ளை நடந்த பெட்ரோல் பங்க்கையும், கொள்ளையர்கள் தப்பிச் சென்ற முந்திரிக் காட்டையும் பார்வையிட்டார்.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.பகலவன், பண்ருட்டி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

அழகப்பா பல்கலைகழக 2011 டிசம்பர் தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

    அழகப்பா பல்கலைகழக  தொலை முறைக்கல்வி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

    2011 டிசம்பரில் நடந்த எம்.பி.ஏ., (ஐந்து வருடம்), எம்.ஏ., (மக்கள் தொடர்பு மற்றும் இதழியல்), பி.காம்., மற்றும் பி.காம்., (நேரடி இரண்டாமாண்டு), பி.காம்.,(சி.ஏ-நேரடி இரண்டாமாண்டு), பி.பி.ஏ., மற்றும் பி.பி.ஏ.,(நேரடி இரண்டாமாண்டு, வங்கியியல், வங்கியியல்-நேரடி இரண்டாமாண்டு), பி.பி.எம்., தொழில் மேலாண்மையியலில் பி.ஜி., டிப்ளமோ, மனிதவள மேம்பாட்டியலில் பி.ஜி., டிப்ளமோ மற்றும் மனித வளமேலாண்மை மற்றும் தொழில் உறவு முறையில் பி.ஜி.டிப்ளமோ பாடப் பிரிவுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


        தேர்வு முடிவுகளை, மாணவர்கள்,  இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முடிவு வெளியான 15 நாட்களுக்குள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் பல்கலை இணையதளத்தின் மூலம் மாணவர்கள் பெறலாம். மறுமதிப்பீட்டு கட்டணம் ரூ.400 டி.டி., எடுத்து தேர்வு பிரிவுக்கு அனுப்புமாறு தேர்வாணையர் மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார். 

 இணையதள முகவரி 









Read more »

புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதியின்றி மாணவிகள் அவதி

புவனகிரி :
     
        புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படாததால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
      புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 700 மாணவிகள் படித்து வருகின்றனர். 35க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

        இவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் இருந்தும் அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால் மதிய வேளையில் மாணவிகள் கழிப்பிடம் வேண்டி அருகிலுள்ள வெள்ளாற்றிற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பள்ளிக்கு வரும் மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அர” பள்ளி கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் 1,500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கடலூர் :
 
       புயலில் பாதிக்கப்பட்ட 1,500 மாணவர்களுக்கு ரியல் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கியது.
 
       "தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், ராமாபுரம், அழகப்பசமுத்திரம், சிறுதொண்டமாதேவி, அ.புதூர், வேகாகொல்லை, காட்டு வேகாக்கொல்லை, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மதனகோபாலபுரம், தியாகவல்லி, அம்பேத்கர் நகர், நொச்சிக்காடு கிராமங்களைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகளுக்கு ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மற்றும் அங்கன்வாடி செல்லும் 500 குழந்தைகளுக்கு ஜான்ஸ் பேபி கிட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
 
         நிகழ்ச்சியில் ஜெர்மனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ரோன்ஜா சாம்ஸ், ஜோஹனா டோல், ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ரியல் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், கஸ்தூரி, ராமு, ஜான், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், பிப்ரவரி 20, 2012

கடலூர் மாவட்டத்தில் மொபைல் போன் கலாசாரத்தால் சீரழியும் மாணவ சமுதாயம்

கடலூர் : 

        எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் மொபைல் போன் கலாசாரத்தா சீரழிந்து வருவதை தடுத்திட பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
 

       நாட்டின் முன்னேற்றம் என்பது இளைஞர்களை சார்ந்தே உள்ளது. இதனை கருத்தி கொண்டு இளைஞர்களை நவழிப்படுத்தும் நோக்கி மாணவ, மாணவிகளுக்கு கவி கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதி பள்ளிக்குச் செலும் மாணவ, மாணவிகளுக்கு கவியோடு ஒழுக்கம், தன்னம்பிக்கை உள்ளிட்ட நற்பண்புகளும் போதிக்கப்படுகிறது. ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கி வந்த கவிச் சாலைகள் இன்று பவேறு காரணங்களா மாணவர்களை தேர்வி அதிக மதிப்பெண் எடுக்க வைக்கும் தொழிற்சாலையாக இயங்கி வருகிறது.
 

      இதன் காரணமாக ஆசிரியர், மாணவர்களுக்கு இடையேயான உறவு மெல்ல, மெல்ல மறைந்து வருவதா இன்றைய மாணவ சமுதாயத்தி ஒழுங்கீனச் செயகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தகவ தொடர்பு சாதனமாக "மொபை போன்' வருகைக்கு பின் மாணவ சமுதாயம் சீரழிந்து வருவது அதிகரித்து வருகிறது. இதனை கருத்தி கொண்டே கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய பள்ளிக் கவித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, பள்ளிகளி ஆசிரியர் உள்ளிட்ட எவரும் மொபை போன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.


      இருப்பினும் இந்த உத்தரவு பெரும்பாலான பள்ளிகளி நடைமுறைப்படுத்தவிலை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் பலர் மொபை போன்களை பள்ளிக்கு எடுத்து வருவதோடு மட்டுமலாம வகுப்பறையிலேயே தனது சக நண்பர்களோடு வீடியோ கேம் விளையாடுவது.
பிற நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்., என்கிற குறுந்தகவ அனுப்புவது. சக தோழிகளிடம் வெகு நேரம் போனி உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வியாபார போட்டியை சமாளிக்க மொபை போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் சிறப்பு சலுகைகள் மாணவர்களுக்கு வசதியாக அமைகிறது. தற்போது இணையதளம் வசதி கொண்டுள்ள மொபை போன்களி இணையதள இணைப்பு பெறுவதற்கான "ரீசார்ஜ்' கூப்பன் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  இந்த கூப்பனை வாங்கி சார்ஜ் செய்தா 24 மணி நேரத்திற்கு இணையதள இணைப்பு கிடைக்கிறது.

           இவ்வாறு பல மாணவர்கள், தங்களது மொபை போன்களி இணையதள இணைப்பைப் பெற்று பள்ளிகளி தங்களது சக நண்பர்களுடன் கூடி ஆபாச படங்களை பார்த்து மகிழ்கின்றனர். இதனைத் தடுக்க முயலும் ஆசிரியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்படுவது அல்லது ஆசிரியர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது போன்ற செயகளி ஈடுபடுவதா ஆசிரியர்களும் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செவதா மாணவ சமுதாயம் தவறான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
 

      இதனைத் தடுத்திட பள்ளிகளி மொபை போன்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதனையும் மீறி மாணவர்கள் மொபை போன் கொண்டு வந்தா, அதனை பறிமுத செய்து அவரது பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை நேரி அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்களிடம் மொபை போன்களை கொடுத்து அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.











Read more »

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

விருத்தாசலம் எருமனூர் கிராமத்தில் திடீர் சாலை மறியல்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/607a72e0-2c97-4afa-bf73-58c9f20250b9_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
 
        விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் அரசு வழங்கும் இலவச ஆடு-மாடுகளுக்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நில மற்ற ஏழைகளை புறக்கணித்து விட்டு வசதி படைத்தவர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்க கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
       இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று எருமனூரில் விருத்தாசலம்- முகாசாபடூர் மெயின்ரோட்டில் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வீருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விருத்தாசலம் தாசில்தார் பிரபாகரனும் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கால்நடைத் துறை அதிகாரிகளிடம் பேசி முறையாக கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 1 1/2 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, பிப்ரவரி 18, 2012

கடலூர் மாவட்டத்தில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

          கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, இலவச  மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆய்வு செய்தார். விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இப் பொருட்கள் கடலூர் முதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்டகச் சாலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கே.என்.பேட்டை, திருவந்திபுரம் பகுதிகளில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில்  கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 

பின்னர் இதுதொடர்பாக ஆட்சியர் கூறியது: 

           கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டமான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புயல் காரணமாக இப்பொருட்கள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு, புயல் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது.தற்போது மீண்டும் தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

         இதற்காக கடலூர் வட்டத்துக்கு மட்டும் 2,308 மின் விசிறிகள், 7,702 மிக்ஸிகள், 5,575 கிரைண்டர்கள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில்  இவற்றை விநியோகிக்கும் பணி நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில், நிகழ்வாண்டில் 2,723 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இவ்வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தலா ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுவது சிறப்பம்சம் ஆகும். இதனால் பயனாளிகளுக்கு மின் கட்டணச் செலவு இல்லை. நாட்டிற்கும் மின்சேமிப்பு ஏற்படும். 

              இத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் சம்மந்தப்பட்ட 26-12-2011 அன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர். ஆய்வின்போது சார் ஆட்சியர் கிரண் குராலா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள்

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் நிகழ்வாண்டில் 2,723 சூரிய சக்தி மின் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். 

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

          கடலூர் வட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில் விநியோகிப்பதற்குத் தயாராக கடலூர் முதுநகர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, இலவச  மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகிய பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஆய்வு செய்தார். விசிறி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இப் பொருட்கள் கடலூர் முதுநகர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பண்டகச் சாலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கே.என்.பேட்டை, திருவந்திபுரம் பகுதிகளில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தில்  கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். 

பின்னர் இதுதொடர்பாக ஆட்சியர் கூறியது: 

           கடலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டமான விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக, ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் புயல் காரணமாக இப்பொருட்கள் வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு, புயல் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்றது.தற்போது மீண்டும் தகுதியுள்ள அனைவருக்கும் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

         இதற்காக கடலூர் வட்டத்துக்கு மட்டும் 2,308 மின் விசிறிகள், 7,702 மிக்ஸிகள், 5,575 கிரைண்டர்கள் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில்  இவற்றை விநியோகிக்கும் பணி நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில், நிகழ்வாண்டில் 2,723 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் இவ்வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தலா ரூ.1.80 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுவது சிறப்பம்சம் ஆகும். இதனால் பயனாளிகளுக்கு மின் கட்டணச் செலவு இல்லை. நாட்டிற்கும் மின்சேமிப்பு ஏற்படும். 

              இத் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் சம்மந்தப்பட்ட 26-12-2011 அன்று ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர். ஆய்வின்போது சார் ஆட்சியர் கிரண் குராலா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior