உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றி




கோல்கட்டா:

           ஐ.பி.எல்., தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றிக்கணக்கை துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் கங்குலியின், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை, 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 
                  20 ஓவரில் கோல்கட்டா அணி, 109 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இஷாந்த் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி ஆட்டநாயகன் விருது வென்றார்.

           மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவின் பல இடங்களில் நடக்கிறது. இதில் சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரின் எட்டாவது லீக் போட்டி நேற்று கோல்கட்டாவில் நடந்தது. தனது முதல் போட்டியில் தோல்வியடைந்து இருந்த தோனி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு போட்டிகளில் வென்று இருந்த கங்குலியின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. "டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
ஹைடன் சோகம்:
                சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் துவக்கம் தந்தனர். கடந்த போட்டியில் "மங்கூஸ் பேட்' கைகொடுக்காததால், இம்முறை வழக்கமான பேட்டுடன், ஹைடன் களமிறங்கினார். இந்த ஆண்டு துவக்கத்தில் கோல்கட்டா அணியால் அதிக தொகைக்கு (ரூ. 3.43 கோடி) ஏலம் எடுக்கப்பட்ட நியூசிலாந்தின் பாண்ட், முதல் ஓவரை சிக்கனமாக வீசினார். மறுமுனையில் இஷாந்தின் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து, முரளி விஜய் அதிரடியை துவக்கினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹைடன் (1), மீண்டும் ஏமாற்றினார்.
ரெய்னா ஏமாற்றம்:
             பின் முரளி விஜயுடன், ரெய்னா இணைந்தார். முரளி விஜய் 33 ரன்களில் வெளியேறினார். சற்று திணறிய ரெய்னாவும் (18) நிலைக்கவில்லை. பவுலிங்கிற்கு ஒத்துழைத்த ஆடுகளத்தில், அடுத்தடுத்து விக்கெட்டு விழ, தோனி, பத்ரிநாத் ஜோடி பொறுமையை கையாண்டது.
36 பந்து 83 ரன்கள்:
               14 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த ஜோடி அதிரடிக்கு மாறியது. கேப்டன் தோனி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சுக்லா, பாண்ட் ஓவர்களில் தலா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தோனி, 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். சென்னை அணி, 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் குவித்தது. தோனி 66 ( 3 சிக்சர், 6 பவுண்டரி), பத்ரிநாத் 43 (ஒரு சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
சரிந்த துவக்கம்:
எட்டி விடும் இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு மனோஜ் திவாரி, ஹாட்ஜ் துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த இந்த இருவரும், இம்முறை அணியை கைவிட்டனர். மார்கலின் இரண்டாவது பந்திலேயே "டக்' அவுட்டாகி, சரிவை துவக்கி வைத்தார் ஹாட்ஜ். தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்த, மனோஜ் திவாரி, அடுத்த பந்தில் போல்டானார். அதிரடி காட்டிய சாஹா, 22 ரன்களில் வீழ்ந்தார்.
கைவிட்ட கங்குலி:
                   பின் வந்த ஓவைஸ் ஷா (5), பாலாஜியிடம் சிக்கினார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட, கேப்டன் கங்குலி, சிக்சருக்கு ஆசைப்பட்டு, கெம்ப் பந்தில் மார்கலிடம் பிடிபட்டார். 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய சோகத்தில் இருந்த கோல்கட்டா அணிக்கு, மாத்யூஸ் (6), ரோகன் கவாஸ்கர் (2) விரைவில் அவுட்டாகி, ரசிகர்களை சோதித்தனர்.
சென்னை வெற்றி:
       பின் வந்த சுக்லா (19), பாண்ட் (1), முரளி கார்த்திக் (21) ஏமாற்ற, கோல்கட்டா அணி,
சபாஷ் தோனி
          கோல்கட்டா ஆடுகளம், நேற்று பவுலிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. 3 விக்கெட்டுக்கு 55 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய தோனி, பத்ரிநாத்துடன் இணைந்து, கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடினார். இவர், 33 பந்தில் 66 ரன்கள் குவித்தார். நான்காவது விக்கெட்டுக்கு அவுட்டாகாமல் 109 ரன்கள் எடுத்த இந்த ஜோடி, கடைசி 6 ஓவரில் 83 ரன்கள் குவித்தது.

பத்ரியுடன் மோதல்
               நேற்றைய ஆட்டத்தில் 19.4 ஓவரில் இஷாந்தின் பந்தை, "மிட் விக்கெட்' திசையில் அடித்தார் தோனி. முதல் ரன்னை வேகமாக எடுத்த இவர், இரண்டாவது ரன்னுக்காக, மிக வேகமாக ஓடிவந்த போது, எதிர்பாராத விதமாக பத்ரிநாத்துடன் மோதினார். வலியால் துடித்த பத்ரிநாத், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார்.

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
முரளி விஜய்(ப)சுக்லா 33(26)
ஹைடன்(ப)இஷாந்த் 1(8)
ரெய்னா(ப)ஹாட்ஜ் 18(20)
பத்ரிநாத்-அவுட் இல்லை- 43(33)
தோனி-அவுட் இல்லை- 66(33)
உதிரிகள் 3
மொத்தம் (20 ஓவரில் 3 விக்.,)  164
விக்கெட் வீழ்ச்சி: 1-16(ஹைடன்), 2-53(முரளி விஜய்), 3-55(ரெய்னா).
பந்து வீச்சு: பாண்ட் 4-0-33-0, இஷாந்த் 4-0-38-1, மாத்யூஸ் 3-0-29-0, சுக்லா 4-0-37-1, முரளி கார்த்திக் 4-0-21-0, ஹாட்ஜ் 1-0-4-1.
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
ஹாட்ஜ்(கே)அஸ்வின்(ப)மார்கல் 0(2)
திவாரி(ப)கோனி 8(3)
கங்குலி(கே)மார்கல்(ப)கெம்ப் 11(20)
சாஹா(ப)பாலாஜி 22(13)
ஓவைஸ் ஷா(கே)தோனி(ப)பாலாஜி 5(4)
மாத்யூஸ்-எல்.பி.டபிள்யூ.,(ப)கெம்ப் 6(13)
சுக்லா(கே)மார்கல்(ப)முரளிதரன் 19(16)
ரோகன்(கே)முரளிவிஜய்(ப)கெம்ப் 2(8)
பாண்ட்(ப)அஸ்வின் 1(2)
முரளி கார்த்திக்-ரன் அவுட்- 21(20)
இஷாந்த்-அவுட் இல்லை- 6(15)
உதிரிகள் 8
மொத்தம் (19.2 ஓவரில் ஆல் அவுட்) 109
விக்கெட் வீழ்ச்சி: 1-0(ஹாட்ஜ்), 2-8(திவாரி), 3-34(சாஹா), 4-46(ஓவைஸ் ஷா), 5-55(கங்குலி), 6-69(மாத்யூஸ்), 7-79(ரோகன்), 8-82(சுக்லா), 9-84(பாண்ட்), 10-109(முரளி கார்த்திக்).
பந்து வீச்சு: மார்கல் 2-1-6-1, கோனி 3-0-33-1, பாலாஜி 2.2-0-9-2, முரளிதரன் 4-0-16-1, கெம்ப் 3-0-12-3, அஸ்வின் 4-0-22-1, ரெய்னா 1-0-6-0.

Read more »

வெயில் கால இளநீர்

                 
                      வெயில் காலத்தில், வெப்பத்தினைச் சமாளிக்க இளநீர் ஏற்றதாகும். எனினும் மரத்தில் இருந்து இறக்கப்பட்டவுடன், வெயிலில் கிடக்கும் இளநீரை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். முற்றிலும் நிழலில் இருக்கும் இளநீர் நல்ல பலன்களை தரும். இளநீரில் 95.5 சதவீதம் நீர் உள்ளதால், தாகத்தை தணிப்பதில் இளநீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகில் கிடைக்கும் இளநீரில் பிரேசில், வங்கதேசத்தில் கிடைக்கும் இளநீரே அதிக இனிப்பு தன்மை உள்ளவையாக உள்ளன. இந்தியாவில் கிடைக்கும் இளநீரில் பெரும்பாலும் பொட்டாசிய உப்பு அதிகமாக இருப்பதால், உவர்ப்புத்தன்மையுடன் இளநீர் உள்ளது. இளநீரில் நைட்ரஜன் 0.05 சதவீதம், பாஸ்பாரிக் அமிலம் 0.56 சதவீதம், பொட்டாசியம் 0.25 சதவீதம், கால்சியம் ஆக்சைடு 0.69 சதவீதம், மக்னீசியம் ஆக்சைடு 0.59 சதவீதம் உள்ளன.

Read more »

Patrol parties given “fire power”


 
Well-equipped: Superintendent of Police Ashwin Kotnis handing over whistles to local youths who intend to join police personnel during night patrolling, in Cuddalore on Tuesday. 
 
CUDDALORE: 

               Following a series of burglaries reported from various places in Cuddalore district in the past one week, Superintendent of Police Ashwin Kotnis has initiated multi-pronged measures such as intensifying night patrolling, setting up new check-posts and forming “Mohalla Committees” to prevent crimes.

            Mr. Kotnis told The Hindu that the personnel on night beats were provided arms and wireless sets and also given “fire power” to retaliate in case they encounter any gang wielding deadly weapons. A series of thefts took place within a week in commercial establishments at Periapattu and B.Mutlur and two house-break incidents reported in Cuddalore on successive days.

            Mr. Kotnis said that six highway patrol parties would cover the NH-45A from Reddichavadi to Vallampadugai, covering Cuddalore, Pudhuchathiram, Bhuvanagiri and Chidambaram; SH-9 from Cuddalore to Veeraperumanallur covering Nellikuppam and Panrutti; SH -68 from Cuddalore to Natham covering Thirupadiripuliyur, Palur, Panruti and Pudupettai; NH-45C from Kandarakottai to Vanamadevi covering Pudupettai, Panruti, Kadampuliyur, Vadalur and Sethiathope; SH-69 from Vriddhachalam to Mangalampettai covering Poovanur, Vijayamanaaram and Periyavadavadi; and, NH-45 from Koothakudi railway gate to Tholudur bridge covering Vepur, Avatti and Ramanatham.

           Mr. Kotnis said that police personnel would perform better with support of citizens. Hence, he directed the police stations to encourage people to form “Mohalla Committees” in the areas falling under their jurisdiction.

             The committee members would maintain vigil and inform the police about movement of strangers or provide information about crimes. The “Mohalla Committees” would function in addition to the “Friends of Police” set-up so as to create more number of vigilant citizens and ensure uninterrupted communication between people and security personnel. Starting from Tuesday, armed police personnel would do night rounds in Cuddalore and Panruti blocks on four two-wheelers and two four-wheelers in lanes and by-lanes. Mr. Kotnis also distributed handbills to people and whistles to 20 youth, who wanted to assist the police in crime prevention. 

Whenever need arises, the people could call up the offices of the Deputy Superintendents of Police at the following numbers:

Cuddalore – 04142-284355, Chidambaram – 04144—222257, Vriddhachalam – 04143—238401, Neyveli – 04142—256800, Sethiathope – 04144—244341, Panruti – 04142—242022, Thittakudi – 04143—255211, Police Control Room – 04142—284341 and District Special Branch – 04142—284333.

Read more »

College teachers observe fast


 
Members of the Joint Action Council of College Teachers' Associations observing a fast in Cuddalore on Tuesday.

CUDDALORE: 

              Members of the Joint Action Council (JAC) of College Teachers' Associations observed a fast in front of the Collectorate here on Tuesday in protest against a proposal to convert some government and government-aided colleges into unitary universities.

            The JAC - comprising the Association of University Teachers (AUT), the Madurai University Teachers' Association (MUTA) and the Tamil Nadu Government College Teachers' Association (TNGCTA) - said that such a move would affect higher education. There was danger of these unitary universities turning into self-financing institutions, thereby jettisoning democratic governance and transparency in admission. The JAC voiced apprehension that over a period of time the government properties on which these institutions were set up, would fall into private hands.

                  The JAC further noted that the formation of unitary universities would lead to commercialisation of higher education as these institutions would collect tuition fees many times over what is being collected now, demand compulsory donation, close down the undergraduate courses, withdraw scholarships to poor students and deny concessional bus passes.

                Formation of student unions would become a thing of the past. Above all, these unitary universities would not be under any compulsion to follow the reservation norms and to adopt Tamil language as medium of instruction. The “single- window admission system” would be thrown out of the window, the JAC said. The move would affect job security, service aspects and retirement benefits of teachers. There would be manifold increase in administrative expenses. In a nutshell, the move would be a step that would deny the underprivileged access to higher education.

Read more »

Safety inspection of BG track on

CUDDALORE: 

              Chief Commissioner of Railway Safety (Lucknow) Sudhir Kumar on Tuesday began a two-day inspection of the newly laid 122-km Villupuram-Mayiladuthurai broad gauge section.

             His entourage set out in eight motorised trolleys from Villupuram in the morning and, after covering 35 km, reached the Varakkalpattu railway station in the afternoon. Mr. Kumar told reporters that he would submit the inspection report to the Railway Ministry in three-four days.

Read more »

சாலை அகலப்படுத்தும் பணி... மந்தம்! வாகன ஓட்டிகள் கடும் அவதி

பரங்கிப்பேட்டை: 

                  சிதம்பரம் அருகே 2 கோடியே 39 லட்சம் செலவில் துவங்கப்பட்ட பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகர பகுதிகளில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. கோர்ட், சப் ஜெயில், பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அண்ணாமலை பல்கலை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், 10க்கும் மேற் பட்ட பள்ளிகள், அரசு மருத்துவமனை உள்ளன. அதனால் மக்கள் புழக்கம் அதிகமுள்ள பகுதியாக உள்ளது. மேலும் பரங்கிப்பேட்டையொட்டி கடற்கரை மீனவ கிராமங்கள் அதிகம் உள்ளன. அங்கு பிடிக்கப்படும் மீன்கள் வேன்கள் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
                  இதனால் பரங்கிப்பேட்டை- சிதம்பரம், பரங்கிப்பேட்டை - கடலூர் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இருப்பினும் அதற்கேற்ற சாலை வசதி இல்லை. குறிப்பாக பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

                  அதன்பேரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அபிவிருத்தி திட்டத்தில் 2 கோடியே 39 லட்சம் மதிப் பில் பு.முட்லூர்- பரங் கிப்பேட்டை சாலையை இருபுறமும் அகலப்படுத்தி மேம்பாடு செய்யவும், அகரம் ரயிலடி அருகே பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம் 20ம் தேதி துவங்கிய இந்த பணி கடந்த பிப்ரவரி 19ம் தேதிக்குள் முடிக்க வேண் டும்  என ஒப்பந்தம் செய் யப்பட்டது. முதல் கட்டமாக பு.முட்லூரில் இருந்து அகரம் ரயிலடி வரை சாலையின் இருபுறமும் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டது. அகரம் ரயிலடி அருகே பழைய பாலம் இடித்துவிட்டு புதிய பாலம் கட்டி இணைப்பு சாலை அமைக் கும் பணி நடந்து வருகிறது. ஆனால் அகரம் ரயிலடியில் இருந்து பரங்கிப் பேட்டை வரை பல மாதங்களாக எந்த பணியும் செய்யாமல் நிறுத்தி வைத்திருந்தனர்.
கடந்த இரண்டு மாதமாக அகரம் ரயிலடியில் இருந்து சாலையின் இரண்டு பக்கமும் பள்ளம் தோண்டப்பட் டது. இதனால் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் வந்துவிட்டால் ஒதுங்கக் கூட இடம் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த இடங்களில் வாகனம் செல்லும்போது ஏற்படும் புழுதியினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். பணி ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கால் ஒரு சில இடங்களில் பணி ஆரம்ப கட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்ப்பு: கடலூரில் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

கடலூர்: 

                   அரசு கல்லூரி மற்றும் உதவி பெறும் கல்லூரிகைளை ஒருமை பல்கலைக் கழகங்களாக மாற்ற  எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் நேற்று கடலூரில் உண்ணாவிரதம் இருந்தனர். அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளை சுய நிதி பல்கலைக் கழங்களாக மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு மாற்றினால் கல்வி கட்டணம் உயர்வு, இனவாரியான ஓதுக்கீடு நிறுத்தம், கட்டாய நன்கொடை வசூல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மறுக்கப்படும் என்பதால், அரசு கல்லூரிகளை சுயநிதி பல்கலைக் கழகங்களாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக வட்டாரத் தலைவர் கவாஸ்கர் தலைமை தாங்கினார்.

               பல்கலைக் கழக ஆசிரியர் சங்க செயலாளர் பேராசிரியர்கள் சாந்தி, ரியாஸ் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சம்பத் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். தொலை தொடர்பு துறை மக்கள் தொடர்பு அதிகாரி பால்கி,  அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் பொதுச் செயலாளர் மருதவாணன், பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் தலைவர் அனுசுயா, இணை செயலளர் பேராசிரியை குழந்தை தெரஸ்பாத்திமா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் மகாதேவன், திண்டிவனம் வட்ட செயலாளர் கருணாநிதி, விருத்தாலம் செயலாளர் நாராயணன், கடலூர் மனோகரன், சிதம்பரம் சேகர் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சுட்டு பிடிக்க போலீஸ் எஸ்.பி., உத்தரவு

கடலூர்: 

                  கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டை தடுக்க, கொள்ளையர்களைக் கண்டால் சுட்டு பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி., கூறினார். கடலூர் கோண்டூரில் அமைக்கப்பட் டுள்ள போலீஸ் செக்போஸ்டை நேற்று மாலை எஸ்.பி.,  அஷ்வின் கோட்னீஸ் துவக்கி வைத்தார். 

அப்போது எஸ்.பி.,  அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது: 

                  சமீப காலமாக திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. மாவட் டத்தில் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப் பட்டுள்ளதால், வேறு வழியில் சம்பாதிக்க இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க 6 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் இனி துப்பாக்கி, வான்செய்தி கருவிகளுடன் சப் இன்ஸ் பெக்டர்கள் செயல்படுவர்.

               பெருகி வரும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் தங்கள் நிலைய  பகுதியில் பெண்கள் குழுக்களை அமைப்பர்.  அக்குழுவினரிடம் அதிகாரிகள் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் போன் எண்கள் கொடுக்கப்பட்டு அன்னியர்கள் நடமாட்டம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். முதல் கட்டமாக இன்று முதல் கடலூர், பண்ருட்டி சப் டிவிஷன்களில் இரண்டு ஜீப், நான்கு மோட்டார் சைக்கிள் களில் போலீசார் துப்பாக்கி மற்றும் வாக்கி டாக்கி யுடன் நகரின் உட்பகுதி மற்றும் 2 கி.மீ., சுற்றளவில் உட் பகுதிக்கு ரோந்து செல்வர்.  24 மணி நேரமும் செயல்படும் இவர்கள், கொள்ளையர்களை கண்டால் சுட்டுப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். டி.எஸ்.பி.,க்கள் அலுவலகம் எண்கள். 

கடலூர் 04142-284355, சிதம்பரம் 04144-222257, விருத்தாசலம் 04143-238401, நெய்வேலி 04142-242022, சேத்தியாத் தோப்பு 04144-244341, பண்ருட்டி 04142-242022, திட்டக்குடி 04143-255211, காவல் கட்டுப்பாட்டு அறை 04142-284341 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு 04142-284333  

             ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.

Read more »

உடைந்த மதகால் வீணாகும் தண்ணீர் மன்னம்பாடி விவசாயிகள் பாதிப்பு

விருத்தாசலம்: 

                 மன்னம்பாடி பெரிய ஏரி மதகு கடந்த மூன்று ஆண்டாக உடைந்து கிடப்பதால் நெல் அறுவடை வரை தண்ணீர் இன்றி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி கிராமத்தில் 73 எக்டேர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி மூலம் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இதற்காக அமைத்துள்ள மூன்று மதகுகளில் சின்ன மதகு மூன்றாண்டிற்கு முன் உடைந்தது. அதனை இதுவரை சரி செய்யாததால், ஏரிக்கு வரும் மழை நீர்  சேமித்து வைக்க முடியாமல், உடைந்த சின்ன மதகு வழியாக வடிந்து விடுகிறது. இதனால் ஏரி பாசனத்தை நம்பி பயிரிட்டும் விவசாயிகள்  அறுவடை வரை போதிய தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஏரி தண்ணீர் பற்றாகுறை ஏற்படும்போது விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே நெடுந் தொலைவில் இருக்கும் கிணறு, போர்வெல் மூலமாக தண்ணீர் இறைத்து நெல் அறுவடை செய்கின்றனர்.

                   நெற்பயிரில் கதிர் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படுவதால் விளைச்சல் பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் ஏரி வற் றியுள்ளது. தற்போது உடைந்து கிடக்கும் சின்ன மதகை சரி செய்தால் வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கும் நடு மதகையும் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பாலத்தில் கம்பிகள் திருட்டு பயணிகள் திக்...திக்... பயணம்

நடுவீரப்பட்டு:

                   நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப்பட் டுள்ள சிறிய உயர்மட்ட பாலம் கைப்பிடி கம்பிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம்  இடையே உள்ள நரியன் ஓடையில் 12 ஆண்டிற்கு முன் சிறிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் தடுப்பிற்கு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதியில் இருந்த இரும்பு கம்பிகள் சில மாதங்களுக்கு முன் திருடு போனது. மேலும், பாலம் சற்று உள்வாங்கியுள்ளதால் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியே செல்லும் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரதம் நடக்கும் முன் அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

துணை முதல்வர் திறந்து வைத்த நவீன தகன மேடை 6 மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை


பண்ருட்டி: 

                  பண்ருட்டியில் நவீன எரிவாயு தகனமேடை துணை முதல்வர் திறந்து வைத்தும் பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணாகி வருகிறது. பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரை அருகே நகராட்சி சார்பில் 43 லட்சம் ரூபாய் (20 லட்சம் அரசு மானியம், 23 லட்சம் நகராட்சி நிதி) செலவில் கடந்த 2007-2008ம் ஆண்டு நவீன எரிவாயு தகன மேடை  கட்டப்பட்டது. பணிகள் முடிந்து இரண் டாண்டு ஆககிறது. எரிவாயு தகனமேடை கெடிலம் ஆற்றங்கரை அருகே உள்ளதால் மழை, வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால் 10 லட்சம் செலவில் ஓராண்டிற்கு முன் துவங் கப்பட்ட இந்த பணி இன்னமும் முழுமை பெறவில்லை. அதுபோல் கட்டடத்திற்குள் சுத்திகரிப்பு தொட் டியும் கட்டவில்லை. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி நடந்த காடாம்புலியூர் சமத்துவபுரத்தை திறந்து வைத்த துணை முதல்வர் ஸ்டாலின், பண்ருட்டி நகராட்சி நவீன தகன மேடையையும் திறந்து வைத்தார்.

                  விழா முடிந்து 6 மாதமாகியும் இந்த தகன மேடை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணாகி வருகிறது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் அலட்சியம் தான் காரணம். 

இதுகுறித்து அ.தி. மு.க., கவுன்சிலர் கமலக் கண்ணன் கூறியதாவது:  

                    நவீன எரிவாயு தகனமேடைக்கு வாங்கிய பொருட்கள் தரமில்லை. சுற்றுசுவர் மற்றும் பிளாட்பார்ம் அமைக்க 10 லட்சம் ரூபாய் செலவில் ஒதுக்கீடு செய்து காம்பவண்டு சுவர் பணிகள் கூட முடியவில்லை. பிளாட்பார்ம் அமைக்கவில்லை, இதில் ஊழல் நடந்துள்ளது இதுகுறித்து மேலதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Read more »

சொர்ண ஜெயந்தி திட்டத்தில் பெண்களுக்கு ஊக்கத் தொகை

நெல்லிக்குப்பம்:

                      நெல்லிக்குப்பத்தில் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி ஊக்கத்தொகையை சேர்மன் வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் சொர்ண ஜெயந்தி திட்டத்தின் கீழ் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியும், அறிவியல் தொழில்நுட்ப முனைவோர் பூங்கா நிறுவனமும் இணைந்து 10, 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு செல்போன் பழுது பார்த்தல் பயிற்சி அளிக் கின்றனர். 9ம் வகுப்பு படித்த பெண்களுக்கு கம்ப்யூட்டர் பழுது நீக்கம் பயிற்சியும் அளிக்கின்றனர். இப்பயிற்சி பெறும் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் 19 பெண்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை சேர்மன் கெய்க்வாட்பாபு வழங்கினார். பொறியாளர் புவனேஸ்வரி, எழுத்தர் பாபு, செந்தில், செந்தாமரைக் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

தடையற்ற மின்சாரம்: விவசாயிகள் கோரிக்கை


சிறுபாக்கம்: 

                சிறுபாக்கம் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் மங்களூர் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய மின்மோட்டார் மற்றும் பல்வேறு உபயோகங்களுக்கு மங்களூர் துணைமின் நிலையம் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அண்மை காலமாக தினசரி நான்கு மணி நேரம் மட்டுமே பகலில் மின் மோட்டார்களுக்கு மும் முனை மின்சாரம் வழங் கப்படுகிறது. சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்த மின் சாரம் கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக வழங்குவதில்லை.

                   இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் எப் போது மின்சாரம் வரும் என வயலில் காத்திருக்க வேண்டியுள்ளது. துணைமின் நிலையத்தின் பராமரிப்பு பணிக் காக மின் நிறுத்தம் செய்ய அறிக்கை விடும் அதிகாரிகள், விவசாய பம்பு செட் டுகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரத் தினை வினியோகிக்கும் காலங்களை முன்கூட்டியே அறிவித்தும், அறிவிக்கப்பட்ட காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

சிதம்பரம்:

                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புல மின் னணு மற்றும் கருவியியல் துறையின் இரண்டு நாள் கருத்தரங்கை துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மின்னணு மற்றும் கருவியியல் துறையில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு துவங்கியது. முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நடராஜன் வரவேற்றார். ணைவேந்தர் ராமநாதன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் மாலதி கருத்தரங்கின் முக்கியத்துவம்,நோக்கம் குறித்த அறிக்கையை வெளியிட்டு பேசினார். 
  
                          கருத்தரங்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில்  சென்னை  "நரியுரேன் கண்ட்ரோல்ஸ்' என்ற தனியார் தொழில் துறை நிறுவனத்தில் இருந்து சிறப்பு விருந்தினர்களாக டெனிஸ் ஜெயக்குமார், இன்ஜினியர்கள் சிவக்குமார், கண்ணன், அன்பழகன் பங்கேற்று தொழிற்சாலைகளை  இயந்திரமாக்கலுக்கான மென் கட்டுப் பாட்டுக் கருவி(பி.எல்.சி) குறித்தும், பழுதுபார்க்கும் முறை குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் விவாதித்தனர். செய் முறை பயிற்சி அளிக்கப் பட்டது.  கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Read more »

மறியலில் பங்கேற்க மாட்டோம் தொ.மு.ச., (டாஸ்மாக்) அறிவிப்பு


சிதம்பரம்: 

                 கடலூரில் இன்று (17ம் தேதி) அறிவித்துள்ள மறியலில் பங்கேற்பதில்லை என தொ.மு.ச., (டாஸ்மாக்) தீர்மானித்துள்ளது.  சிதம்பரத்தில் டாஸ்மாக் பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச) செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்திகேயன் வரவேற் றார். துணை செயலாளர்கள் சக்கரவர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

                 கூட்டத்தில், கடந்த ஏழு ஆண்டாக தற்காலிக பணியில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிர்வாகத்திற்கு வழங்கப்படுகிற சலுகைகள் வழங்க  முதல் வரை கேட்டுக்கொள்வது.  டாஸ்மாக் பணியாளர் முன்னேற்ற சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் அரசு பணி நிரந்தரம் செய்ய பல வழிகளில் தயார் செய்து வரும் நிலையில் கடையடைப்பு போன்ற போராட்டங்கள் மேலும் நமது கோரிக்கை நிறைவேற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே தொ.மு.ச (டாஸ்மாக்) எந்த போராட்டத்திலும் பங்கேற்காது. அரசின் பக்கம் வலுவாக நின்று கோரிக்கையை வென்றெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                விலைவாசி உயர்வை கண்டித்து தராசு மக்கள் மன்றம் சார்பில் கடலூர் முதுநகரில் ஆர்ப்பாட் டம் நடந்தது.

               மாவட்ட செயலாளர் துரைவேலு தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் கடலூர் முத்து, சிதம்பரம் நடராஜன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., மாநில இலக் கிய அணி செயலாளர் மன்றவாணன், இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ், மா.கம்யூ., நகர செயலா ளர் சுப்புராயன் உட்பட பலர் பேசினர். அஞ்சாபுலி நன்றி கூறினார்.

Read more »

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்: சி.இ.ஓ.,


ஸ்ரீமுஷ்ணம்:

                    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர ஆசிரியர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என  எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., பேசினார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள நாச்சியார் பேட்டை, ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீமுஷ்ணம் குறுவட்ட  தாய்வு மையங்களில் ஆசிரியர்களுக்கு செயலாராய்ச்சி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

ஸ்ரீஆதிவராகநல்லூர் மையத்தை ஆய்வு செய்த அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  கதிர் வேலு பேசியதாவது:

                    தொடக்க நிலை ஆசிரியர்களின் நினைவுகள் குழந்தைகள் மனதில் பதிவதால் படித்து பெரியவர்களாக ஆன நிலையில் கூட குழந்தைகள் மறக்க மாட்டார்கள். எனவே ஆரம்ப நிலையில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பணியை முழு மனதுடன் செய்ய வேண்டும். தற்போது அரசு பள்ளிகளில் இடவசதி போதுமான அளவு உள்ளது. ஆசிரியர் கள் அதிக அளவில் நியமிக் கப்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளில் சுற்றுப்புற சூழ்நிலை இல் லாத நிலையிலும், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.  ஆனால், அரசு பள்ளிகளில் போதுமான இடவசதி, சுற்றுப் புற சூழ்நிலைகள் இருந்தும் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயரவில்லை. ஆசிரியர்கள் பள்ளி வயது பிள்ளைகளின் பட்டியலை தயார் செய்து பெற் றோர்களிடம் பேசி அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் வழங்கும் உபகரணங் களை முழுமையாக பயன்படுத்துங்கள். பயன்படுத்தாத பொருட்கள் பயனற்றதாகிவிடும் என பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் செல்வம், வட்டார வள மேற்பார்வையாளர் காமராஜ், ஒருங்கிணைப் பாளர்கள் செல்வம், சிற்றரசன், ரவி  உடனிருந்தனர்.

Read more »

மாற்று திறன் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனை

நெல்லிக்குப்பம்: 

             நெல்லிக்குப்பத்தில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் வீடு களுக்கு சென்று ஆலோசனை வழங்கினர்.

               நெல்லிக்குப்பம் பகுதியில் மாணவர்கள் அருள், சூர்யா, அபிதா, கார்த்திகேயன் ஆகியோர் உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.  அண்ணாகிராம வட்டார வள மைய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இம் மாணவர்களின் வீடுகளுக்கு மேற்பார்வையாளர் சம்பத்குமார் நேரடியாக சென்று பயிற்சி அளித் ததோடு, பெற்றோர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார்.  ஒருங்கிணைப்பாளர் குணசுந்தரி, கதிர்வேல், ராஜா, பாலமுருகன் உடன் சென்றனர்.

Read more »

பென்னாகரம் தேர்தலுக்கு வசூல் வேட்டை 'ஆட்டய' போடும் அ.தி.மு.க., புள்ளிகள்

கடலூர்:

                      பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் அளிக்கும்  நிதியை ஒன் றிய, நகர நிர்வாகிகளிடம் மிரட்டி பணத்தை "கறப்பதால்' கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். பென்னாகரம் இடைத் தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என அனைத்து கட்சிகளும் முஸ்தீபு காட்டி வருகிறது.

                       அந்தந்த கட்சிகளும் தேர்தல் செலவுக்காக கட்சி தலைமையிடம் எதிர்நோக்கியிருக்க அ.தி.மு.க., தலைமையோ முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வசூல் செய்யத்துவங்கியுள்ளது.

                         இதற்காக சேலத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் என அனைவரையும் அழைத்து கூட்டம் நடத் தப்பட்டது. ஜெ., ஆணைக்கிணங்க நோட்டு வைக்கப்பட்டது.  பென்னாகரம் இடைத் தேர்தலுக்காக யார் யார் எவ்வளவு நிதி தர முடியுமோ அந்த தொகையை பெயருடன் நோட்டில் எழுதி கையெழுத்து இட வேண்டும்.  வசூலாகும் தொகை தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தம்பிதுரையிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைவரும் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை எழுதி கையெழுத்திட்டனர்.  அவ்வாறு எழுதியதில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் தேறியது.  மாவட்ட செயலர்கள் ஜம்பமாக நோட்டில் 5 லட்சம், 6 லட்சம் ரூபாய் என எழுதி விட்டு வெளியே வந்ததும் மாவட்டங்களில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளிடம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தர வேண டும் என  கட்டளையிட்டுள்ளனர். இந்த தொகையை கொடுக்கவில்லை என்றால் பதவிக்கு கல்தா நிச்சயம் என்று மிரட்டியுள்ளனர்.  மாவட்ட செயலர்கள் எழுதி கையெழுத்து போட்ட தொகையை விட இரு மடங்காக எங்களிடம் "கறந்து' "ஆட்டய' போட நினைக்கின்றனர் என கீழ்மட்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Read more »

இயற்கை பேரிடர்களை தடுக்க நடப்பட்ட மரக்கன்றுகள் கருகும் அவலம்

கிள்ளை: 

                   இயற்கை பேரிடர்களை தடுக்க 100 எக்டேர் பரப்பளவில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகின்றன. சுனாமியால் பாதித்த கிள்ளை முழுக்கு துறை பகுதியில் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தில் 100 எக் டேர் பரப்பளவில் விழுப்புரம் வனவளர்ச்சி முகமை சார்பில் சுரப் புண்ணை, (அவிசீனியா) கண்டன் செடிகள் கடந்த 2007ம் ஆண்டு நடப் பட்டன. இதற்காக 20 எக்டேர் பரப் பளவில் ஐந்து பகுதியாக பிரித்து, செயற்கை மறு உற்பத்தி தோட்டம், முழுக்குத்துறையில் அமைக்கப்பட்டது. முழுக்குத்துறை உப்பனாற்றில் இருந்து ஒவ்வொரு 20 எக்டேர் பரப்பளவிற்கும் முதன்மைக் கால்வாய் 800 மீட்டர் தொலைவில் மூன்றடி ஆழத்திலும், துணை கால்வாய் 6 ஆயிரத்து 200 மீட்டர் தொலைவிற்கு இரண்டரை அடி ஆழத்தில் வெட்டி தண்ணீர் விடப்பட்டது. வாய்க்காலின் இருபுறமும் உள்ள கரைப்பகுதியில் இரண்டு அடிக்கு ஒரு சுரப்புண்ணை செடியும் அதன் மேல்பரப்பில் மூன்று அடிக்கு ஒரு கண்டன் செடியும் நடப்பட்டன.

                   செடிகள் செழிப்பாக வளர்ந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு தோட்டத்தின் உள்ளே துணைக் கால் வாய்களின் ஓரத்தில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் உமரி, வங்கராசி உள்ளிட்ட கொடிகள் நடப்பட்டது. தற்போது நூறு ஹெக்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள காடு வளர்ப்பு தோட்டத்தில் சரியான வேலி இல்லாததால் மாடுகள் புகுந்து செடிகளை அழித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளே வெட்டப்பட்ட கிளை வாய்க்கால்கள் தூர்ந்து  வாய்க்கால் கரையில் நடப்பட்ட உமரி உள்ளிட்ட கொடிகள் காய்ந்துள்ளதுடன், ஆற்றில் இருந்து தண்ணீர் செல்லமுடியாத நிலையில் கால்வாய்களும் தூர்ந் துள்ளது. இதனால் செடிகள் வளர்ச்சியில்லாமல் உள்ளது.  எனவே இப்பகுதியில் முறையாக வேலி அமைத்து நடப்பட்டுள்ள காடுகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Read more »

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் வருவாய் கிராம ஊழியர் சங்கம் தீர்மானம்

கடலூர்: 

                 தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மண்டல மாநாடு கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. மாநாட்டில் வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊழியர் களின் கல்வி, பணி மூப்பு மற்றும் நிர்வாக அனுபவங்கள்  அடிப்படையில் வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும். சிறப்பு சேம நலநிதி முழுமையாக வழங்க வேண்டும். புதிதாக பணி நியமனம் செய்த 3724 கிராம ஊழியர்களுக்கும் பணி வரன்முறை, பணி பதிவேடு, புதிய ஊதிய விகிதப்படி ஊதிய உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். கிராம ஊழியர்களை கிராம நிர்வாக பணியை தவிர மாற்று பணியில் ஈடுபடுத்தக்கூடாது. கிராம மக்களின் வாழ்க்கைமுறை அவர்களின் பிரச்னைகள், தேவைகள், நில புலங்கள் குறித்த அனைத்து தகவல்களும் கிராம ஊழியர்கள் மூலம்தான் அதிகாரிகளுக்கு தெரிய வருகிறது. எனவே கிராம ஊழியர்களின் பரிந்துரையின் பெயரிலேயே சான்றுகள் வழங்க அரசு ஆணையிடவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Read more »

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                  பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள், ஊழியர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் பி.எஸ்.என். எல்., பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் சம்பந்தம், தேசிய சங்க செயலாளர் ஜெயராமன், அதிகாரிகள் சங்க செயலாளர் பாண்டுரங்கன், ராஜநாயகம், வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் 30 சதவீத பங்கு விற்பனையை கைவிட வேண்டும். அவுட்சோர்சிங் திட்டத்தை கைவிட வேண்டும். சாம்பிட்ரோடா பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Read more »

கருவை கலைத்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது

சேத்தியாத்தோப்பு: 
 
                கருவை கலைத்து மனைவியை கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
 
                   ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ஆனந்த் (22). இவரும், அதே ஊரை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் சங் கீதா (18)வும் மூன்றாண்டாக காதலித்து வந்தனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். சங்கீதா மூன்று மாதம் கர்ப்பமான நிலையில், ஆனந்த் தற்போது நமக்கு குழந்தை வேண்டாம்,  கருவை கலைத்துவிடுமாறு கூறினார். இதற்கு சங்கீதா மறுத்துள்ளார். இருந்தும் ஆனந்த் சங்கீதாவை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்தார். அதன்பின் ஆனந்த், அவரது தந்தை ராதாகிருஷ்ணன், தாய் பானுமதி, பெரியப்பா மகன்கள் ஜானகிராமன், கிருஷ் ணன் ஆகியோர் சங்கீதாவை கொடுமைப்படுத்தி வந்தனர். இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தை கைது செய்தனர். மேலும், ராதாகிருஷ் ணன் உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.

Read more »

கோஷ்டி மோதல் 8 பேர் காயம்


சிதம்பரம்:

                   சிதம்பரம் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் காயமடைந்தனர்.  சிதம்பரம் பொய்யாப் பிள்ளைசாவடியில் பெட்டிக்கடை வைத்துள்ளவர் செந்தில்குமார். இவரது கடைக்கு சென்ற சி.தண்டேஸ்வரநல்லூரை சேர்ந்த ரஜினி, மகேந்திரன் ஆகியோர் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர். அப்போது செந்தில்குமார் ஆதரவாளர்கள் தட்டிகேட்டதால் கோஷ்டி மோதலாக மாறியது. கத்தி, உருட்டு கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர். 
 
                         செந்தில்குமார் ஆதரவாளர்கள் தாக்கியதில் மகேந்திரன், அரசன், அன்பு ஆகியோரும், ரஜினி ஆதரவாளர்கள் தாக்கியதில் செந்தில்குமார், இளந்தமிழகன், மற்றொரு செந்தில்குமார், சதீஷ்குமார், அரவிந்தகுமார்,, செல்வமணி ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்த குறித்த புகார்களின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்து 12 பேரை தேடிவருகின்றனர்.

Read more »

கடலூரில் திடீர் தீ விபத்து ரூ.ஒரு லட்சம் சேதம்

கடலூர்: 
 
                    கடலூர் வண்ணாரப்பாளையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு வீடுகள் எரிந்து ஒரு லட் சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன். அதே பகுதியில் கூரை வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். வீட்டின் மற்றொரு பகுதியில் அஞ்சலைதேவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று பகல் 12 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு 2 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது நாராயணன் வீட்டில் மின் ஒயரில் தீப்பொறி ஏற்பட்டு கூரை தீ பிடித்து எரிந்தது. சற்று நேரத்தில் தீ அஞ்சலைதேவி வீட்டிற்கும் பரவியது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும்  வீட்டில் இருந்த "டிவி', மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Read more »

கடலூரில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                    போலீஸ் துறையை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மா.கம்யூ., கிளை செயலாளர் வேலுசாமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடன் கைது செய்ய வேண்டும். கந்து வட்டி வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடித்தனம் மற்றும் போலீஸ் துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து கடலூர் நகர மா.கம்யூ., சார்பில் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங் கினார். ஒன்றிய செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் தனசேகரன் கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் சுப்புராயன், சிப்காட் பகுதி செயலாளர் ஆளவந்தார், கற் பனை செல்வம், உதயகுமார், முத்துவேல், நாராயணன், ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

போலீசார் அலட்சியப் போக்கினால் கடலூர் பகுதியில் தொடர் கொள்ளை

கடலூர்: 

                    கடலூர் பகுதியில் போலீசாரின் அலட்சியம் காரணமாக தொடர் கொள்ளை அதிகரித்து வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடிக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் கொள்ளையர்கள் புதுப்புது யுத்திகளை கையாண்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 5 கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த 14ம் தேதி பெரியப்பட்டில் ரோலிங் ஷட்டர் பூட்டுகளை ஜாக்கி மூலம் உடைத்து 9 கடைகளில் திருட்டு நடந்துள்ளன. மறுநாள் முட்லூரில் 6 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை போனது. இரண்டு நாள் முன்பு நல்லாத்தூரில் அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து தி.மு.க., பிரமுகர் வீட் டில் கொள்ளையர்கள் புகுந்து 5 லட்சம்  பாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கடலூர் ரட்சகர் நகரில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டை கொள்ளையடிக்க முயன்றனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே தப்பி சென்றவர்கள் அரை கி.மீ., தூரத்தில் உள்ள  கோண்டூர் சுப்புலட்சுமி நகரில் கணவரை தாக்கி மனைவி கழுத்தில் இருந்த தாலிசரடை பறித்துச்சென்றனர்.  போலீசாரின் அலட்சியம் காரணமாக இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

                      அமாவாசையன்று  திருட்டு அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமாக போலீசார் மிகவும் உஷார் படுத்தப் பட்டு இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படுவதுடன், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப்படும். ஆனால் கடலூர் புதுநகரில் ஒன்னரை கி.மீ., ரேடியசில் பகுதியைக் கூட போலீசார் கண்காணிக்காமல் கோட்டை விட்டுள்ளனர்.சாதாரணமாக புது நகர் எஸ்.ஐ., கள்  தொலைபேசிகள் எப்போதும் "பிசி' யாகவே இருக்கும்.  பொதுமக்கள், பத்திரிகை நிருபர்கள்  ஏதாவது தகவல் சொல்ல நினைத்து போன் செய்தால்  கூட உடனே "கட்' செய்து விடுவர். பொது மக்களிடமிருந்து தகவல் பெறவே விரும்பாதவர்கள், எங்கே இருந்து சேவை செய்யப்போகிறார்கள்.

Read more »

பட்டமளிப்பு விழா

சிறுபாக்கம்:

                     வேப்பூர் அய்யனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் மோகன் தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் அருண்குமார் முன் னிலை வகித்தார். மாணவி காயத்ரி வரவேற்றார். மாணவர்களுக்கு ஆர்.டி.ஓ., ராஜேந்திரன் பட்டமளித்து பேசினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.  முதல்வர் சோமசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். பூமிகா நன்றி கூறினார்.

Read more »

ஆசிரியரை தாக்கி மனைவியின் தாலி பறிப்பு முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

நெல்லிக்குப்பம்: 

                            வீட்டின் முன் நின்றிருந்த தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கி, அவரது மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் நால் வரை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் அடுத்த கோண்டூர் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சிவபாக்கியன் (58).  புதுச்சேரி மாநிலம் பாகூர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழ்க்கொடி(48), மகன் கவுசிக் (19), மகள் சிவதமிழ்க்கோதை (14). நேற்று முன்தினம் நள்ளிரவு சிவபாக்கியன் சிறுநீர் கழிக்க கதவை திறந்து வைத்துவிட்டு தெருவுக்கு வந்தார். அப்போது  முகமூடி அணிந்த நான்கு பேர் வந்தனர். நீங்கள் யாரை பார்க்க வேண்டுமென்று சிவபாக்கியன் கேட்டார்.  முகமூடி ஆசாமிகள் இருவர் சிவபாக்கியனை பிடித்து கொண் டனர். மற்ற இருவரும் தடியால் தாக்கினர்.  வலி தாங்காமல் சிவபாக்கியன், திறந்து இருக் கும் வீடு தான் தன்னுடையது எனக்கூறினார். சிவபாக்கியனை கீழே தள்ளிய அவர்கள் வீட்டிற்குள் சென்று தமிழ்க்கொடி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலிச்செயின், சிவதமிழ்க்கோதையின் இரண்டு சவரன் செயினையும் அறுத்தனர். கவுசிக் கூச்சலிடவே, நான்கு பேரும் அங்கிருந்து தப்பினர். பலத்த காயமடைந்த சிவபாக்கியன், செயினை அறுக்கும்போது கழுத்தில் காயமடைந்த தமிழ்க் கொடி இருவரும் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior