உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 07, 2010

கடலூர் மாவட்டத்தில் கன மழையால் மானாவாரிப் பயிர்கள் பாதிப்பு


கன மழை காரணமாக கடலூர் வண்டிப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட நட்டு 2 மாதம் ஆன சம்பா நெல் வயல்.
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக, மானாவாரிப் பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

                 கடலூர் மாவட்டத்தில் 15 நாள்களுக்கும் மேலாகப் பெய்து வரும் கன மழை காரணமாக, சம்பா நெல் பயிர்கள் 1.42 லட்சம் ஏக்கரில் தண்ணீரில் மூழ்கின. வெள்ளம் வடிந்த பிறகுதான் நெல் பயிர் சேதம் குறித்து முழு விவரம் கிடைக்கும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

              கடலூர் மாவட்டத்தில் பிரதானப் பயிர்களாக 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல், 80 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள, மானாவாரிப் பயிர்களும் பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

              விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாக்களில் பெரும்பாலும் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. 10 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு, 12 ஆயிரம் ஏக்கரில் மானாவாரிப் பருத்தி, 32 ஆயிரம் ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, மக்காச் சோளம் ஆகியவை, தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் திட்டக்குடி வட்டாரத் தலைவர் வேணுகோபால் கூறுகையில், 

                   தற்போது காய் உற்பத்தி ஆகும் நிலையில் இருந்த மானாவாரி பருத்திச் செடிகள், தொடர் மழையால் அழுகி கருகிப் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. பருத்தியில் பெரும்பாலான பகுதி வீணாகி விடும். மரவள்ளிக் கிழங்கு தற்போது வேர்விட்டு, கிழங்கு உற்பத்தி தொடங்கும் நிலையில் இருந்தன. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி நிலத்தை காயவிட வேண்டும். ஆனால் தொடர்ந்து பெய்த மழையால், பயிர்கள் அழுகி விட்டன. 

             இனி அவற்றில் கிழங்கு வைக்க வாய்ப்பில்லை. மொத்தத்தில் விருத்தாசலம், திட்டக்குடி வட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, மக்காச் சோளம் ஆகியவற்றில் 50 சதவீதம்கூட மகசூல் தேறுவது கடினம் என்றார்.

இதுகுறித்து மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

                கடலூர் மாவட்டத்தில் மூழ்கி இருக்கும் சம்பா பயிரைப் பற்றி அதிகாரிகள் அதிகம் கவலைப்படும் நேரத்தில், வறண்ட பகுதிகளான விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாக்களில் நட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆன பயிர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். நட்டு 20 நாள்களுக்குள் ஆன பயிர்களைவிட, 2 மாதத்துக்கு மேலான பயிர்களுக்குச் செலவிட்ட தொகை மிக அதிகம். அதனால் நஷ்டமும் அதிகம்.

                விருத்தாசலத்துக்கு மேற்கில் உள்ள மணலூர், மளவாளநல்லூர், தொரவளூர், பரவளூர் உள்ளிட்ட 20 கிராமங்கள், விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மணிமுத்தா நதிக்கு வடக்கே கார்குடல், ஆதனூர், குமாரமங்கலம், கோபாலபுரம், கீழனூர், பெரவரப்பூர், புத்தூர் உள்ளிட்ட 16 கிராமங்கள், வெள்ளாற்றுக்கும் மணிமுத்தா நதிக்கும் இடைப்பட்ட கார்மாங்குடி, வல்லியம், கீரனூர், தேவங்குடி, தொழூர், பெருமானூர், சக்கரமங்கலம் உள்ளிட்ட 14 கிராமங்களில் மொத்தம் 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழையினால் சேதம் அடைந்து உள்ளன.

                பயிர்கள் பாதிக்காததுபோல் காணப்படும் இப்பயிர்களில், சூல் பிடிக்கும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், மகசூல் பெரிதும் பாதிக்கும். நெல் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் முறையாக ஆய்வு நடத்தி, இதுவரை நடவுக்கான செலவைக் கணக்கிட்டு, இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.

                 கரும்பும் நாசம் கம்மாபுரம், நல்லூர், விருத்தாசலம் வட்டாரங்களில் ஜனவரியில் அறுவடைக்குத் தயாராக இருந்த 15 ஆயிரம் ஏக்கர் கரும்பில், பெருமளவு சாய்ந்து கிடக்கின்றன. கணுக்களில் முளை தோன்றிவிட்டன. இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்றும் வெங்கடேசன் தெரிவித்தார்.  மழையினால் 673 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு, 2,200 ஹெக்டேர் பருத்தி பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும், மக்காச் சோளம் சேதம் குறித்து விவரம் தேகரிக்கப் படுவதாகவும் வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நீரில் மூழ்கின; மு.க. ஸ்டாலின்

 கடலூர்
 
               கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டம், மறுவாய் கிராமத்தில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                 அதன் பிறகு, குறிஞ்சிப்பாடியில் உயிரிழந்த 3 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், மழை வெள்ளத்தால் உயிரிழந்த 5 கால்நடைகளுக்கு ரூ.45 ஆயிரம் நிவாரண உதவிகளையும், முழுவதும் சேதமடைந்த 271 வீடுகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 13 லட்சத்து 55 ஆயிரத்துக்கான காசோலையும், தலா 5 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்எண்ணை, வேட்டி, சேலை ஆகிய உதவிகளை வழங்கினார். 
பின்னர் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது:-

               தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் அமைச்சர்களும், மாவட்ட கலெக்டர்களும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

               தமிழக முதல்-அமைச்சர் வெள்ளச்சேத விவரங்களை சேகரிக்க, அரசு உயர் அதிகாரிகளை அனுப்பி 2 நாட்களாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.  கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் 1000 கிலோ மீட்டர் சேதம் அடைந்துள்ளது. இதுவரை 90 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளன. மழையின் காரணமாக 10 பேரும், 120 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.

                இம்மாவட்டம் முழுவதும், 2000 குடிசைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 8 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சேதம் குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.

             குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மு.க. ஸ்டாலினிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் ஆகியோர் கடலூர் மாவட்ட வெள்ள சேதங்கள் குறித்து புகைப்படங்களுடன் விளக்கினர்.
 
              உயர் கல்வித்துறை, கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, சிறப்பு அலுவலர் ககன்தீப் சிங்பேடி, மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், துரை.ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

சிதம்பரம் பகுதியில் வெள்ளச்சேதங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்

                                                             சிதம்பரம் பகுதியில்
 
 வெள்ளச்சேதங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்
 
சிதம்பரம்:

                கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தே.மு.தி.மு.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று சிதம்பரம் வந்தார்.

                  அவர் சிதம்பரம் பாலமான்கரை நேரு நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர், வீரநத்தம் ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களையும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, ரொட்டி வழங்கினார்.

அவருடன் மாவட்ட செயலாளர் சசிக்குமார், மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் ராஜமன்னன், முன்னாள் மாவட்ட செயலாளர் உமாநாத், நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் பாலு, முகமது அயூப், ஒன்றிய செயலாளர்கள் சீனு.சங்கர், ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                      நேற்று இரவு 10 மணிக்கு விஜயகாந்த் நெய்வேலி வந்தார். நெய்வேலி புதுநகர் 16-வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி, கங்கைகொண்டான், பாப்பனப்பட்டு வளையமா தேவி, உ.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

                    மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, நகர செயலாளர் வெங்கடேசன், நகர தலைவர் மணிவண்ணன், வைத்திலிங்கம் உள்பட பலர் அவருடன் வந்திருந்தனர்.

Read more »

கடலூர் பஸ் நிலையத்தில் வெடிகுண்டு பீதி

கடலூர்:

                 கடலூர் மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை நாள் முடிந்து சென்னை, பெங்களுர் போன்ற வெளியூர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் இரவில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 
 
               இந்நிலையில் பஸ் நிலையத்தில் சென்னை பயணிகள் குவியும் இடத்திற்கு அருகில் வாளி ஒன்று அனாதையாக கிடந்தது. இந்த வாளி சுமார் 1 மணி நேரமாக அனாதையாக கேட்பாரற்று கிடந்ததால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் நின்ற மக்கள் அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

                 இதுகுறித்த தகவல் அறிந்ததும், வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் ராமலிங்கம் தலைமையில் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் அந்த மர்ம வாளியின் மீது ஒரு கயிற்றினை கட்டி இழுத்து அதனை திறந்து பார்த்த போது அதனுள் பிரியாணி சாதம் இருந்தது. இதனை கண்டபின்பு தான் பயணிகள், மற்றும் வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனை அடுத்து அந்த வாளி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்; 13-ந்தேதி தொடங்குகிறது

சிதம்பரம்

              கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்தரா தரிசனம் நடந்து வருகிறது.

              இந்த ஆண்டுக்கான ஆருத்ராதரிசனம் வருகிற 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியரால் கொடியேற்றபடுகிறது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், இரவு தங்கம், வெள்ளி மஞ்சங்களில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 14-ந் தேதி இரவு வெள்ளி, சந்திரபிரபை வாகனத்திலம், 15-ந்தேதி தங்க சூரிய பிரபை வாகனத்திலும், 16-ந் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் 17-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் தெருவடைச்சானில் வீதி உலா நடக்கிறது.

             18-ந் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 19-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 20-ந் தேதி மாலை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வேடத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா 21-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5.30 மணியளவில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சித்சபையிலிருந்து தேருக்கு எழுந்தருளிகிறார். அதன்பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் வீதி உலா வருகின்றனர்.

              வருகிற 22-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு மகா அபிஷேகமும், 10 மணிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும், அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்தி விழாவும் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
23-ந் தேதி இரவு முத்து பல்லக்கில் வீதி உலாவும், 24-ந் தேதி இரவு ஞானபிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு 29 பேர் உயிரிழந்தனர்

கடலூர்:
 
                வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

                   நேற்று இரவு மழை நின்றதால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 29 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

Read more »

70 % excess rainfall in Cuddalore district

CUDDALORE: 

        Gagandeep Singh Bedi, Managing Director, Tamil Nadu Water Supply and Drainage Board, has said that Cuddalore district was facing flood problem because of 70 per cent excess rainfall, above the average level.

         Mr. Bedi, deputed specially by Chief Minister M. Karunanidhi to assess the flood damage in Cuddalore district, told presspersons here on Monday that owing to inflow of 10,000 cusecs, water level in the Veeranam tank rose from 45 ft to 46.8 ft in three days. To safeguard the tank, 8,500 cusecs of water was discharged in the Velliangal Odai that resulted in flooding of farmlands downstream. The Vellar too carried over 90,000 cusecs of water, far in excess of its carrying capacity of 70,000 cusecs, thus inundating habitations and farmlands on its course.

            Mr. Bedi said that the Paravanar was another factor that aggravated the flood situation. The Paravanar was heavily silted and, therefore, easily overflowed during rainy season. He also said that during his interaction with farmers in the past two days, they had suggested expanding the carrying capacity of the Manavaikkal and execution of the Aruvamukku scheme to avert recurring flood problem.

           He further said that since the Paravanar happened to be the conduit for carrying slushy discharge from the lignite mines, the NLC had the moral responsibility to desilt the entire course of the Paravanar and strengthen its banks. Replying to another question, Mr. Bedi said that the ideal level in the Veeranam tank should be 43.5 ft, and never above 44 ft, particularly during the period from November to December 20. He would be submitting his report to the Chief Secretary on Tuesday. The real extent of damage, in rupee terms, would be known only after the Revenue and Agricultural Department officials carry out the assessments, Mr. Bedi added.

Read more »

Cabinet to decide increase in compensation, says Stalin

CUDDALORE: 

         Deputy Chief Minister M.K. Stalin said the question of increase in compensation for loss of lives, crops and property due to the recent floods will be discussed at the Cabinet meeting on Tuesday.

          He was inspecting the flood-hit areas at Maruvai near Vadalur, about 45 km from here, on Monday . In reply to another question Mr Stalin said that besides taking stock of the extent of present damage, the meeting would also focus on permanent flood control measures. Later, the Deputy Chief Minister gave away a total solatium of Rs 20 lakh to the affected people who had assembled in a marriage hall near Kurinjipadi.

         It included Rs 2 lakh each to the kin of three persons, namely R. Malathi of Thirumanikuzhi, Sarangapani of C.N.Palayam and P. Rajavel of Azhichikudi who died in rain-related incidents, Rs 5,000 each to 271 families whose huts were damaged and Rs 45,000 for cattle losses. Higher Education Minister K. Ponmudy and Health Minister M.R.K. Panneerselvam were among those who accompanied the Deputy Chief Minister.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior