உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 15, 2012

கடலூரில் அனுமதியின்றி கண்ணாடி தொழிற்சாலை

கடலூர்:

          கடலூரில் குடியிருப்புப் பகுதியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கும் தனியார் கண்ணாடி இழைத் தொழிற்சாலையைத் தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.   

              கடலூர் பெரிய கங்கனாங்குப்பம் சரஸ்வதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், சங்கத் தலைவர் தமிழ்மணி, செயலாளர் சரவணன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்கள் பகுதியில் அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதியின்றி இயங்கும் கண்ணாடி இழைத் தொழிற்சாலையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். 

            இத்தொழிற்சாலையால் அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி வாந்தி மயக்கம், தலைவலி ஏற்படுவதாகப் புகாரில் கூறியுள்ளனர்.  இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரியம் அளித்த பதில் கடிதத்தில், மேற்கண்ட தொழிற்சாலை மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறவில்லை என்றும், நகராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெறப்பட்டு உள்ளதா? என்று கேட்டு, கடலூர் நகராட்சிக்குக் கடிதம் எழுதி இருப்பதாகவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. 







Read more »

புதுச்சேரியில் புதிய சுய தொழில் முனைவோருக்கான தொழில் பயிற்சிகள்

கடலூர் :
        புதுச்சேரியில் உள்ள "வாப்ஸ்' பயிற்சி நிறுவனத்தால் புதிய சுய தொழில் முனைவோருக்கான தொழில் பயிற்சிகள் 21 நாட்களுக்கு நடக்கிறது.
     தேசிய பயிற்சி நிறுவனமான (என்.ஐ.எம்.எஸ். இ.,) மூலம் நடைபெறும் இப்பயிற்சியில் மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சி வழங்கப்படும். மேலும், எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர்களுக்கு "பேஷன் டிசைனிங்' பயிற்சியும் வழங்கப்படுகிறது. 21 முதல் 35 வயது வரை உள்ள மேல்நிலை, அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சிக்கு தகுதியுடையவர்கள். பயிற்சி நிறைவுக்குப் பின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விவரங்களுக்கு 
ஒருங்கிணைப்பாளர்,
"வாப்ஸ்' தேசிய பயிற்சி நிறுவனம்,
 5 ஸ்டார் காம்ப்ளக்ஸ்,
 முள்ளோடை,
 புதுச்சேரி 
முகவரியில் 
நேரில் அல்லது 
தொலைபேசி 98942 46874 
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் போர் விமானத்தால் பரபரப்பு


          கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, வடலூர், புவனகிரி, அங்குசெட்டிபாளையம், காட்டுமன்னார்குடி, பரங்கிப்பேட்டை, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பெரும்வெடிச்சத்தத்தையடுத்து, திடீர் நில அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

        மாவட்ட நிர்வாகம் இந்த செய்தியை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை திரட்டி வருகிறது. பரங்கிப்பேட்டையில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு இருக்கிற போர் விமானம் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தாழ்வாக பறந்ததால், அந்த சத்தம் தான் மிகப்பெரிய அதிர்வை உருவாக்கியுள்ளது. நில அதிர்வு என்று நினைத்து சில பள்ளி கல்லூரிகளும் விடுமுறை விடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior