உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 16, 2010

பாதையை விட்டு விலகியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்



ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2}வது ஏவுதளத்தில் இருந்து மஞ்சள் நிறப் புகையைக் கக்கி கொண்டு விண்ணில் சீறிப் பாயும் ஜி
 
              ந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது."ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ராக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு தினங்களில் கண்டறியப்படும்'' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் மற்றும் ஜிசாட் 4 செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.420 கோடியாகும். இ
 
                   தில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் ரூ.170 கோடியாகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த எடை 416 டன்னாகும். சுமார் 2,000 விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சியில் 18 ஆண்டு கடும் உழைப்பில் கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. "குறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் கூடிய ராக்கெட் ஓராண்டுக்குள் ஏவப்படும்' என்று இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து ஜிசாட்4 செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் 29 மணி நேர கவுன்டவுனுக்குப் பிறகு வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் மஞ்சள் நிறப் புகையை கக்கி கொண்டு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குளிர்விக்கப்பட்ட "கிரையோஜனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை உலக நாடுகள் பலவும் கவனித்து வந்தன.
 
                ஏறத்தாழ 1022 விநாடிகளில் ராக்கெட் 36,000 கிலோ மீட்டர் கடந்து, ஜிசாட்4 செயற்கைக்கோளை புவி வட்ட சுற்றுப் பாதையில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் கிரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் செலுத்தப்பட இருந்தது.ராக்கெட் ஏவப்பட்ட சில நொடிகளில் முதல் நிலையை (திட எரிபொருள்) தாண்டியது. அடுத்து இரண்டாவது நிலையையும் (திரவ எரிபொருள்) தாண்டி ராக்கெட் விண்ணில் சென்று கொண்டிருந்தது.ஒவ்வொரு நிலையையும் ராக்கெட் தாண்டிச் செல்ல, சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தபடி இருந்தனர். சில நொடிகளில் 2வது நிலையைத் தாண்டி, குளிர்விக்கப்பட்ட கிரையோஜெனிக் நிலையை ராக்கெட் எட்டியது. கிரையோஜெனிக் நிலைக்குச் சென்றதும் குலுங்கிய ராக்கெட் எதிர்பார்த்த பாதையிலிருந்து விலகியது.அடுத்த விநாடியே, கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், ராக்கெட்டின் சிக்னலைப் பெற பலவாறு முயன்று தோல்வியுற்றனர்.சற்று நேரத்தில், இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்த ஜி.எஸ்.எல்.வி. டி}3 ராக்கெட், கடலில் விழுந்தது. கட்டுப்பாட்டு அறையில் இருந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றியடையாததால் சோகத்தில் ஆழ்ந்தனர். அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகளில் பலர் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனுக்கு ஆறுதல் கூறியபடி இருந்தனர். கட்டுப்பாட்டு அறையே சோகமயமாக மாறியது. ஓராண்டுக்குள் அடுத்த ராக்கெட்: பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்த இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசியது:ஜி.எஸ்.எல்.வி.}டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சென்றது. முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலையையும் தாண்டி சென்றது. விண்ணில் ஏவப்பட்டதிலிருந்து 293 விநாடிகள் சீராகப் பயணித்த ராக்கெட், மூன்றாம் நிலைக்குச்  (கிரையோஜெனிக்) சென்றது. அப்போது ராக்கெட் சிறிது குலுங்கி, அதன் பாதையிலிருந்து விலகிச் சென்று கடலில் விழுந்தது. இஸ்ரோவின் கட்டுப்பாட்டையும் அது இழந்தது. இதில் கிரையோஜெனிக் என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதா என்று உறுதியாகத் தெரியவில்லை. கிரையோஜெனிக் தோல்வி குறித்து 2, 3 நாள்களில் ஆய்வு செய்யப்படும். ஓராண்டுக்குள் மீண்டும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட் செலுத்தப்படும். மீண்டும் சாதிப்போம் என்ற நம்பிக்கை இஸ்ரோவிடம் உள்ளது. மிகவும் சிக்கலான கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை கையாண்டுள்ளோம். 
 
              இத்தொழில்நுட்பத்தில் நாம் பயணிக்க வேண்டியது நீண்ட தொலைவு உள்ளது.செப்டம்பரில் ஜி.எஸ்.எல்.வி.: வரும் செப்டம்பரில் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்பட உள்ளது என்றார் அவர்.

downlaod this page as pdf

Read more »

இந்திய "கிரையோஜனிக்' தோல்வி: இதர ராக்கெட் திட்டங்களுக்குப் பாதிப்பில்லை




 
             இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் தோல்வியடைந்ததால், இதர ராக்கெட் திட்டங்கள் எதுவும் பாதிக்கப்படாது என்று இஸ்ரோவின் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார். 
 
ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் தோல்விக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் அவர் வியாழக்கிழமை கூறியது:
 
               பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் அடுத்த சில மாதங்களில் இரண்டு தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.ஜிசாட் 5பி, ஜிசாட் 6 ஆகிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்படும். இந்த ராக்கெட்டுகளில் ரஷியாவின் 2 "கிரையோஜெனிக்' என்ஜின்கள் பொருத்தப்படும். அடுத்த ஜி.எஸ்.எல்.வி. வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படும்.
 
கிரையோஜெனிக் சோதனை: 
 
                 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "கிரையோஜெனிக்' என்ஜின் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே ஜி.எஸ்.எல்.வி.டி3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.கடந்த 2007}ம் ஆண்டிலேயே இந்த என்ஜின் அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சியடைந்துவிட்டது. சோதனைகளின்போது 800 விநாடிகள் வரை ராக்கெட்டை எடுத்துச் செல்லும் திறனுடையதாக இந்த என்ஜின் இருந்தது.அதை ராக்கெட்டில் பொருத்துவதற்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன்பிறகு, புதன்கிழமை காலை 11.27 மணிக்கு 29 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது.கவுன்ட்டவுன் போது கூட பிரச்னை உள்ளதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ராக்கெட்டை ஏவும்போது "கிரையோஜெனிக்' என்ஜின் வெற்றிகரமாக செயல்படவில்லை. என்ஜினில் என்ன குறைபாடு ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அது சரிசெய்யப்படும். ஓர் ஆண்டுக்குள் இந்திய "கிரையோஜெனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மீண்டும் செலுத்தப்படும்.மிச்சம் எவ்வளவு? கிரையோஜெனிக் என்ஜினை உள்நாட்டிலேயே தயாரிக்க ரூ.36 கோடி செலவானது. இதே என்ஜினை வெளிநாட்டில் இருந்து வாங்க ரூ.90 கோடி செலவாகும் என்றார் ராதாகிருஷ்ணன். 
 
"கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' 
 
                 இஸ்ரோவின் தலைவராக கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு, முதன்முதலாக ஏவப்பட்ட ராக்கெட் தோல்வியடைந்தது குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்."கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே' என்ற கீதை வாசகத்தை மேற்கோள்காட்டி பதிலளித்தார். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழுவோம். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தொடக்க நிலைகளில் எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஆகிய ராக்கெட்டுகள் தோல்விகளிலிருந்தே முழுமையடைந்தன என்றார் அவர்.

downlaod this page as pdf

Read more »

Unlicensed chicken centre at Koothapakkam sealed

 

Court directive: Deputy Director (Health) R. Meera sealing an unauthorised chicken centre in Cuddalore on Thursday.


CUDDALORE: 

        Following a Madras High Court order, an unlicensed chicken centre attached to a private poultry at Koothapakkam near here was sealed on Thursday. Panchayat president Gomathi Srinivasan sealed the centre in the presence of Deputy Director (Health) R. Meera. The centre has been functioning in a residential locality for the past 10 years. Residents had complained that the owner was resorting to indiscriminate disposal of waste originating from the centre. Foul odour and flea menace was causing inconvenience to the residents. Besides causing environmental pollution, the waste also led to increase in stray dog menace.

         Several butcher shops had also come up along the road, carrying on trade in an unhygienic condition. Mr. Meera told reporters that officials also seized chicken and appliances from the centre. As the owner had violated provisions of the Tamil Nadu Public Health Act 1939, action was taken in compliance with the court order. She also warned of legal action against unlicensed meat centres in the area.

download this page as pdf

Read more »

சுகாதார சீர்கேடு வடலூரின் வாட்டம் போக்கப்படுமா?



  நெய்வேலி:
 
                 கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நகரம் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது.வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடிய திருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த வடலூர் நகரம். இன்று பல்வேறு அடிப்படை வசதிகளை பெற்றிருந்த போதிலும் பொது சுகாதாரம் சீர்கேடான நிலையில் உள்ளது.சுமார் 40 ஆயிரம் பேர் வாழும் வடலூரில் முறையான பாதாள சாக்கடை வசதி இன்னும் அமைக்கப்படாததால் நகரைச் சுற்றியுள்ள பகுதியில் கழிவுநீர் ஆங்காங்கே குட்டைகள் போல் தேங்கி கொசு உற்பத்திக் கூடமாக மாறிவருகிறது. 
 
                    வடலூரின் நான்கு முனை சந்திப்பில் உள்ள கடைகளின் முகப்பில் வடிகால் அமைக்கப்பட்டு, அதன் மீது என்எல்சி சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நடைபாதையின் கீழுள்ள வடிகால் வழியாகச் செல்ல பேரூராட்சி நிர்வாகம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் கழிவு அங்கேயே தேங்கி நிற்பதால் நான்கு முனை சந்திப்பில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் வடலூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள நடைமேடை தற்போது இயற்கை உபாதைக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், நடைமேடையை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். இதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவிலும் துர்நாற்றம் வீசுவதால் சிறுவர்கள் பூங்கா பக்கம் வருவதை தவிர்க்கின்றனர்.இது ஒருபுறமிருக்க வடலூர் குறுகிய சாலைகளில் என்எல்சி சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதி மக்கள் சிலர் சாலையை ஒட்டியுள்ள வடிகாலை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியிருப்பதால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
                   வடலூரில் வள்ளலார் நிறுவிய ஞானசபை முன் ஏராளமான சேவார்த்திகள் தங்கியிருப்பதால் அவர்கள் போதுமான இடவசதியின்றி மரத்தடியின் கீழ் வாழும் நிலை உள்ளது. சேவார்த்திகள் விடுதியிலும் நோய்வாய்பட்டவர்களே அதிக அளவில் தங்கியுள்ளனர். இந்த விடுதியைச் சுற்றிலும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளலார் தருமச்சாலை அருகே கூடும் பன்றிகளின் கூட்டத்தைக் கண்டால் அங்கு உணவு உண்ணவே அச்சம் ஏற்படுகிறது.சிறிய நகரமான வடலூரில் சுகாதார வசதியை எளிதாக செய்து கொடுக்கலாம். மக்கள் தொகை பெருகுவதற்குள் சுகாதாரத்தைப் பேணிக்காத்தால் வடலூர் வளமான நகரமாக திகழும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில்கள் இயக்குவதில் தாமதம்



கடலூர்:
 
                      விழுப்புரம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் அகல ரயில்பாதைத் திட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையிலும், ரயில்கள் இயக்கப்படுவதில் ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்திவரும் காலதாமதம், பொதுமக்களை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. நீள அகல ரயில்பாதைத் திட்டம் சுமார் ரூ. 300 கோடியில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 
 
                  அகலப்பாதை திட்டத்துக்காக விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் 2006 டிசம்பரில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. 2007 ஜனவரி முதல் அகலப் பாதை பணிகள் தொடங்கப்பட்டன. அகலப்பாதைப் பணிகள் முடிவுற்று, ஒரு மாதத்துக்கு முன் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். பணிகள் திருப்திகரமாக இருப்பதாக அவர் அறிக்கை அளித்துள்ளார். இந்த மார்க்கத்தில் சுமார் 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கிச் சென்ற அவர், விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் 70 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என்றும் தெரிவித்து இருப்பதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே முதல்கட்டமாக பாசஞ்சர் ரயில்கள் மட்டுமாவது இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14), விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப்பாதை தொடக்கவிழா நடைபெறும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவித்தார். ஆனால் இன்னமும் ரயில்கள் இயக்கப்படவில்லை.காரணம் என்ன? தொடக்க விழாவுக்கு ரயில்வே அமைச்சர் வருவதற்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், பணிகள் முடிவடையவில்லை, அதற்காக ஆர்.வி.என்.எல். நிர்வாகம் மேலும் 15 நாள் கால அவகாசம் கேட்டு இருக்கிறது என்றும் பலவாறாகக் காரணங்கள் கூறப்படுகிறது.அகலப்பாதையில் இயக்கப்படும் ரயில்களுக்கு போதிய ரயில் பெட்டிகளை ஒதுக்குவதில், தெற்கு ரயில்வே புறக்கணிக்கப்படுவதாகவும், அதுவும் ரயில்கள் இயக்குவதில் காலதாமதத்துக்குக்கு ஒரு காரணம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் ஒரு அதிகாரி தெரிவிக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக கடலூர் - சென்னை, கடலூர் - தஞ்சை, கடலூர் - பெங்களூர் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கப்படாததால் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 
 
                  இந்த மாவட்ட மக்கள் ரயில்வே துறையால் 2-ம் தர குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள். இப்பகுதியில் இருந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றுவரும் சுமார் 1000 மாணவர்கள், குறைந்த செலவில் ரயில்களில் சென்று படித்து வந்த நிலை மாறி, கடந்த 3 ஆண்டுகளாக தினமும் பெரும்தொகையை பஸ்களுக்குக் கொட்டிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். கல்வி ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் இப்போதாவது ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்த்த பெற்றோரும் ஏமாற்றம் அடைந்து வருவதாக தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் கவலை தெரிவித்தார்.பிளாட்பாரம் வேலை முடியவில்லை, பிளாட்பாரங்களை மக்கள் கடக்கும் பாலம் முடியவில்லை, கட்டங்களுக்கு வெள்ளை அடிக்கவில்லை, கழிவறைகள் கட்டவில்லை என்று கூறி, ரயில்களை இயக்காமல் இன்னமும் எத்தனை நாள்களுக்கு ரயில்வே நிர்வாகம் இழுத்தடிக்கப் போகிறது என்பதே கடலூர் மக்களின் கேள்வி. கடலூர் - சேலம் அகல ரயில்பாதைத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு 50 சதவீதம் நிதி அளித்தது. இத்திட்டம் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆனபிறகும், கடலூர் - சேலம் மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் இன்னமும் முழுமையாக இயக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கம்.
 
                   இதற்கும் போதிய ரயில் பெட்டிகள் கிடைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டு வருகிறது. கடலூர்- விருத்தாசலம் இடையே ஒரு பாசஞ்சர் ரயிலும், கடலூர்- திருச்சி இடையே ஒரு பாசஞ்சர் ரயிலும் மட்டுமே இயக்கப்பட்டு வருவது, பொதுமக்களுக்கு அதிருப்தியையும், பல நூறு கோடி முதலீடு செய்துள்ள ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதையெல்லாம் உரிய இடத்தில், உரிய நேரத்தில், உரிய முறையில் கேட்டுப் பெறுவதற்கு, கடலூர் மாவட்டத்தில் சரியான அரசியல் தலைமை இல்லாததே முக்கிய காரணம் என்று பொதுமக்களிடையே மிகுந்த மனவருத்தத்துடன் பேசப்பட்டு வருகிறது.

downlaod this page as pdf

Read more »

கடலூர்: மீன்பிடி ​ தடைக்காலம் தொடங்கியது

 கடலூர்:

                   கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் புதன்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதிவரை 45 நாள்கள் மீன்பிடிக்க கடந்த 9 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.​ இந்தத் தடைகாலத்தில் ​ இழுவை வலைகளை பயன்படுத்தும் இயந்திரப் படகுகள் மீன்பிடிக்கக் கூடாது.​ ​கடலூர் மாவட்டத்தில் இத்தகைய மீன்படிப் படகுகள் சுமார் 700 உள்ளன.​ இவைகளுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது சாதாரண படகுகள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க முடியும்.​ ஏப்ரல் 15 முதல் மே கடைசி வரை மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம்.​ எனவே கடலில் மீன் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்பட இவ்வாறு மீன்பிடி தடை விதிக்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. 

                        பொதுவாகவே கடல் வளம் குறைந்து வருவதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.​ கடலூர் மாவட்டத்தில் சுனாமிக்குப் பிறகு கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு,​​ மீன்கள் பிடிபடுவது மிகவும் குறைந்து விட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.​ கரையில் இருந்து 5 கி.மீ.​ தூரத்துக்குள் பெரும்பாலும் மீன்கள் கிடைப்பது இல்லை என்றே அவர்கள் கூறுகிறார்கள். இதனால் சாதாரண கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களைக் கொண்டு மீன் பிடிப்பது இனி இயலாத காரியம் என்ற கருத்து மேலோங்கி வருகிறது.

                     இந்நிலையில் இழுவை வலைகளை பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிப்பது,​​ ஒட்டுமொத்த மீனவர்களுக்கும் தடை விதிப்பதாகவே உள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறியது:

                  அரசு உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் இழுவை வலைகளை பயன்படுத்தும் 700 இயந்திரப் படகுகள் மீன்பிடிக்க இயலாது.​ ஆனால் இந்த இயந்திரப் படகுகளுடன் இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் கண்ணாடி இழைப் படகுகள் 2 ஆயிரம் உள்ளன.​ மீன்படித் தடைகாலத்தில் இந்த 2 ஆயிரம் படகுகளுக்கும் அவைகளை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. இந்த ஆண்டு பொதுவாகவே மீன்கள் கிடைப்பது மிகக்குறைவாக இருந்தது.​ புவி வெப்பம் அதிகரிப்பு காரணமாக பூமியில் மட்டுமன்றி கடலிலும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.​ சீசன்கள் மாறியிருக்கின்றன. ஒரு மாதமாகத்தான் மீன்கள் கிடைத்துக் கொண்டு இருந்தன.​ தற்போது அதிகமாக மீன்கள் கிடைக்கும் காலம்.​ இந்த நேரத்தில் தடை விதித்து இருப்பது முறையாகத் தெரியவில்லை. கடலூர் மாவட்ட எல்லை நெடுகிலும் ஆழ்கடலில் தைவான்,​​ நார்வே,​​ பர்மா,​​ மலேசியா போன்ற வெளிநாடுகளின் மீன்பிடிக் கப்பல்கள் எந்தத் தடையுமின்றி மீன்பிடித்துக் கொண்டு இருக்கின்றன.​ அந்தக் கப்பல்களுக்கும் மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டும்.​ இல்லையேல் தமிழக மீனர்களுக்கு மட்டும் விதிக்கப்படும் இந்தத் தடை,​​ பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்கு சாதகமாக எடுத்த முடிவாகத்தான் அமையும் என்றார்.

download this page as pdf

Read more »

இன்று விவசாயிகள் ​குறைகேட்கும் கூட்டம்

 கடலூர்:

                 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் இன்று ​(வெள்ளிக்கிழமை)​ மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                    கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10-30 மணிக்கு நடைபெறும்.​ கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.​ 

                     எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.​ தெரிவிக்கப்படும் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும்,​​ தொடர் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியரால் ​ அறிவுறுத்தப்பட்டு உள்ளது.​ இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


download this page as pdf

Read more »

சித்திரை விழா கொண்டாட்டம்

 விருத்தாசலம்:

                விருத்தாசலம் அருகில் உள்ள சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில்,​​ விருத்தாசலம் ஸ்ரீசத்யசாய் சேவா சமிதி சார்பில்,​​ சித்திரை விழா கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாலவிகாஸ் குழந்தைகள் வேதம்,​​ ஸ்லோகம்,​​ நாடகம் முதலான நிகழ்ச்சிகளை வழங்கினர்.​ விழாவில் சேவா சமிதி ஒருங்கிணைப்பாளர் குபப்புசாமி வரவேற்றார்.​ வெற்றிவேல் சிறப்புரை ஆற்றினார்.​ வழக்கறிஞர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.​ பஜனை மண்டலி ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

download this page as pdf

Read more »

தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கடத்தல் : சிதம்பரம் போலீசார் மடக்கி பிடித்தனர்

 சிதம்பரம் : 

                       வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றிய தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரை காரில் கடத்தி வந்தவர்களை சிதம்பரம் போலீசார் மடக்கி பிடித்தனர். பட்டுக்கோட்டை அடுத்த காப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சுந்தரபாண்டியன்(34). மதுக்கூர் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர். இவர் கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கினார். ஆனால் அவர்களை இதுவரை வெளிநாட்டிற்கு அனுப்பவில்லை. பலமுறை பணம் கேட்டும் சுந்தரபாண்டியன் திருப்பி தரவில்லை.

                   இதனால் ஆத்திரமடைந்த கடலூர் முதுநகரைச் சேர்ந்த ஆறு பேரும் காரில் காப்பாங்காட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சுந்தரபாண்டியனை தாக்கி, அவரை கடத்தி வந்தனர். சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் எஸ்.பி., செந்தில்வேலன், கடலூர் எஸ்.பி.,க்கு தகவல் கொடுத்தார். பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து செக் போஸ்டுகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை அருகே வந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் ஆறு பேரிடமும் சிதம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

download this page as pdf

Read more »

கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கும் சிகிச்சை: கலெக்டர் துவக்கி வைப்பு


பண்ருட்டி : 

                     பண்ருட்டி அடுத்த சிறுவத்தூரில் கால்நடைகளுக்கு மலட்டு தன்மை நீக்கும் சிகிச்சை முகாமினை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

                  பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில்  அரசு நீர்வள நிலவளத் திட்டத்தில் கால்நடைகளுக்கு  மலட்டுத் தன்மை நீக்க சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.  ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் தட்சணாமூர்த்தி வரவேற்றார்.  கலெக்டர் சீத்தாராமன் முகாமினை துவக்கி வைத்து சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மண்டல இணை இயக்குனர் இளங்கோவன் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார். வளர்ச்சி குறைந்த கால்நடைகளுக்கு கர்ப்பப்பை சிகிச்சை, கன்று போட்ட பசுக்கள், எருமைகள் குறுகிய காலத்தில் சினை பருவத்திற்கு வர சிகிச்சை, கர்ப்பப்பை மற்றும் சூலக நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை,  தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடை  டாக்டர்கள்  ராமமூர்த்தி, ராஜேஷ், மதிவாணன், வசந்தராணி,  தமிழ்செல்வி, அருட்செல்வி  ஆகியோர் 500 ஆடு,மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

downlaod this page as pdf

Read more »

மாவட்டத்தில் தொடரும் கொள்ளையை தடுக்க தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்


பண்ருட்டி : 

                        கடலூர் மாவட்டத்தில் தொடரும் கொள்ளை, வழிப்பறியை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தொழில் வர்த்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

                      கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நடந்தது. கூட்டத்திற்கு  மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வர்த்தக சங்க தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் தனகோடி வரவேற்றார்.  கூட்டத்தில் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன், பொதுசெயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் வீரப் பன், பொருளாளர் ராஜமாரியப்பன், முன் னாள் செயலாளர் நிஜாப்தீன், சேத்தியாதோப்பு பக்கிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மேலவையை மீண்டும் கொண்டு வர தீர்மானம் செய்த தமிழக அரசுக்கு நன்றியும், மேலவையில் வணிக சங்க பிரதிநிதிகள் இடம் பெற செய்ய இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது. கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் தொடரும் கொள்ளை, வழிப்பறியை தடுக்க காவல்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
                    விழுப்புரம்-மயிலாடுதுறை ரயில் போக்குவரத்தை விரைவில் துவக்க வேண்டும். மின் வெட்டை 3 மணி நேரத் தில் இருந்து ஒரு மணிநேரமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Read more »

கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

சிதம்பரம் : 

                    புவனகிரி ஒன்றியத்தில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில்  நடந்தது.

                      சிதம்பரம் ஷிட்டோரியா இந்தியன் கராத்தேப் பள்ளி, புவனகிரி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மஞ்சக் கொல்லை மக்கள் நல பாதுகாப்பு சங்கம் இணைந்து  புவனகிரி ஒன்றியத்தில் கட்டாயக் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் இருந்து பெருமாத்தூர் வரை  நடந்தது. நிகழ்ச் சிக்கு புவனகிரி ஒன்றிய வட்டார வளமைய மேற் பார்வையாளர் கலைச் செல்வன் தலைமை தாங் கினார். ஆசிரியர் சேரமான் வரவேற்றார். மாவட்ட தகவல் ஆவண காப்பு அலுவலர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கராத்தே நிபுணர் டாக்டர் இளங்கோவன் விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார். சிதம்பரத்தில் இருந்து தொடர் ஓட்டமாக பெருமாத்தூர் சென்ற கராத்தே மாணவர்கள், கல்வின் அவசியத்தை வலி யுறுத்தி பொது மக்களிடம்  துண்டு பிரசுரம் வழங்கினர். பின்னர் பள்ளி செல்லாக்குழந்தைகள் குறித்து கணக் கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில்  கராத்தே வீரர்கள் மற்றும் மஞ்சக் கொல்லை மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பங்கேற்றனர்.


downlaod this page as pdf

Read more »

ஊதிய உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு பாராட்டு விழா


நெய்வேலி : 

                நெய்வேலி செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ஊதிய உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அரசியல் மற்றும் தொழிற் சங்கத்தினருக்கு ஆசிரியர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தினர்.

                நெய்வேலி டவுன்ஷிப், பிளாக் - 4ல் உள்ள செயின்ட்பால் மெட்ரிக் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்திடம் 6வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பள்ளியின் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால், பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகளின் கல்வி குறித்து அச்சம் ஏற்பட்டது.  இதனையடுத்து நெய்வேலியை சேர்ந்த அரசியல் மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.   இதில் உடன்பாடு ஏற் பட்டதையடுத்து தற்போது 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெற்று வருகின்றனர். போராட்டத்திற்கு உறுதுணையாக அரசியல் மற்றும் தொழிற்சங்க பிரமுகர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் புகழேந்தி, எஸ்.சி., எஸ்.டி., சங்க ஆசைதம்பி, தொ.மு.ச., வீர ராமச்சந்திரன், காத்தவராயன், பா.ம.க., சக்கரவர்த்தி, பா.தொ.ச., திலகர், மா.கம்யூ., குப்புசாமி, அ.தி.மு.க., பாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் அருளானந்தராஜிற்கு பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் நினைவு பரிசு மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

downlaod this page as pdf

Read more »

புதுச்சத்திரம் அருகே சாலை மறியல் செய்த 6 பேர் கைது

 பரங்கிப்பேட்டை : 

                 புதுச்சத்திரம் அருகே சாலை மறியல் செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
 
                    புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களம் கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சிலம்பிமங்களத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து சிலம்பிமங்களத்தை சேர்ந்த தர்மராஜ் (25), ராஜகோபால் (40), சுதாகர் (28), கார்த்திகேயன் (29), நாகராஜ் (41), சத்தியசீலன் (23) ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். மேலும் சாலை மறியல் நடந்தபோது சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் கண்ணாடியை உடைத்த அடையாளம் தெரியாத ஐந்து பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

வெயில் கொடுமையால் பெண் சாவு

பண்ருட்டி : 

               பண்ருட்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணி நடந்தது. அப்போது  நத்தம் ஊராட்சி  குமரன் தெருவை சேர்ந்த சின்னபொண்ணு(57) என்பவர் வெயிலின் தாக்கத்தில்  திடீரென மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே சின்னபொண்ணு இறந்தார்.  புதுப் பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

லாரிக்கு மண்ணெண்ணெய் போட்ட டிரைவர் கைது: டி.வி.எஸ்.50., பறிமுதல்

பண்ருட்டி : 

                     லாரியில் மண்ணெண் ணெய் ஊற்றும்போது உணவு கடத்தல் தடுப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.  பண்ருட்டி பகுதியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக் டர் புருஷோத்தம்மன், பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுவினியோக திட்ட மண்ணெண்ணெய் விற்பனை தடுப்பு குறித்து திடீர் சோதனை  நடத்தினர். அப்போது பண்ருட்டி கும்பகோணம் சாலை இந்தியன் வங்கி அருகில் டி.என்.28.1875 எண்ணுள்ள லாரிக்கு  100 லிட்டர் மண்ணெண்ணெய்   ஊற்றிய போது தனிப்படையினர் விரைந்து சென்று லாரி டிரைவர் வேலு(38)வை கைது செய்தனர். மண் ணெண்ணெய் எடுத்து வந்த டி.வி.எஸ்.50., யை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior