உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

பி.இ.: நாளை ரேண்டம் எண் வெளியீடு

         பி.இ. படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) முன்னுரிமை வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படவுள்ளது.

                  பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், www.ann​auniv.edu என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு தங்களது ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம். அண்ணா பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் (அரசுக்கு ஒதுக்கீடுக்கு அளிக்கப்பட்ட இடங்கள்) ஆகியவற்றில் 2010-11 கல்வி ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கு 1,67,560 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பி.இ. தரவரிசைப் பட்டியலில் ஒரே மாதிரியான கட்ஃஆப் மதிப்பெண்ணை எடுத்துள்ள பல மாணவர்களில் ஒருவருக்கு பி.இ. இடத்தைத் தேர்வு செய்ய முன்னுரிமை அளிப்பதற்காக ரேண்டம் எண் பயன்படும். 

                   ரேண்டம் எண்ணைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, மாணவர்களின் கணித மதிப்பெண்  சதவீதம் முதலில் பார்க்கப்படும். இதில் மாணவர்கள் ஒரேமாதிரி மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களின் இயற்பியல் மதிப்பெண் பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால் அவர்களின் 4-வது விருப்பப் பாட (உயிரியல் அல்லது கணினி அறிவியல் போன்ற பாடங்கள்) மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும். அதிலும் ஒரே மாதிரி இருந்தால் மாணவர்களின் பிறந்த தேதி கணக்கிடப்படும். இவை எல்லாவற்றிலும் ஒரே மாதிரியாக இருந்தால் கடைசியாக முன்னுரிமை வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) பயன்படுத்தப்படும்.  பி.இ. விண்ணப்பங்களுக்கு கணினி மூலம் ஒரே நேரத்தில் முன்னுரிமை வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு வழங்கப்படவுள்ளது. இதில் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி, உயர்கல்வி முதன்மைச் செயலர் க. கணேசன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Read more »

அல்ஜீரியாவை வென்றது ஸ்லோவேனியா (1-0)

irst Published : 14 Jun 2010 01:13:24 AM IST

வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஸ்லோவேனியா வீரர்கள்
போலக்வானே:
 
               உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்லோவேனியா 1-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் போலக்வானேவில் உள்ள மொகபா கால்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் முதல் பாதி ஆட்டம் வரை இரு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. கிடைத்த ஒரு சில வாய்ப்புகளையும் இரு அணி வீரர்களும் தவறவிட்டனர்.இதையடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டனர். இருப்பினும் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் அல்ஜீரிய வீரர் அப்டேல்காடர் கெஸ்ஸôல் ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸ்லோவேனியா வீரர்கள் அபாரமாக ஆடி கோல் அடிக்க முயற்சித்தனர். அந்த முயற்சிக்கு ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஸ்லோவேனியா வீரர் ராபர்ட் கோரன் 25 அடி தூரத்தில் இருந்து  கோல் அடித்து ஸ்லோவேனியாவை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறச்செய்தார்.இதையடுத்து ஸ்லோவேனியா வீரர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியதால் அல்ஜீரியா வீரர்களின் கோல் அடிக்கும் கனவு தகர்ந்தது. இறுதியில் ஸ்லோவேனியா 1-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் ஸ்லோவேனியா வீரர் அலெக்சாண்டர் ரேடோசாவ்ஜெவிக்கிற்கும், 59-வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் அப்டேல்காடர் கெஸ்ஸôலுக்கும், 90-வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் ஹசன் யெப்தாவிற்கும், ஸ்லோவேனியா வீரர் ஆன்ட்ரெஜ் கோமேவிற்கும் யெல்லோ கார்டு காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. 

Read more »

கானாவிடம் வீழ்ந்தது செர்பியா(1-0)


பந்தை தன் வசப்படுத்தும் முயற்சியில் செர்பிய வீரர் பிரானிஸ்லேவ் இவானோவிக் (இடது), கானாவின் ஆன்ட்ரே அயூவ்
பிரிடோரியா:

             உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கானா 1-0 என்ற கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் பிரிடோரியா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.முதல் பாதி ஆட்டநேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் முதல் 30 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது 84-வது நிமிடத்தில் கானா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கானா வீரர் ஆஷாமோ ஜியான் கோல் அடித்து தனது அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெறச்செய்தார். இதையடுத்து செர்பிய வீரர்கள் கோலடிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் ஆட்டத்தின் கடைசி 6 நிமிடங்களில் பரபரப்பு தொற்றியது. கானா வீரர்கள் தடுப்பாட்டம் ஆடியே ஆட்டத்தை முடித்தனர். இறுதியில் 1-0 என்ற கணக்கில் கானா வெற்றி பெற்றது.

Read more »

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கைதரவரிசைப் பட்டியல் வெளியீடு

            தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 2010-2011 ஆம் ஆண்டுக்கான பி.டெக். மாணவர் சேர்க்கைக்கு தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.  

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன் வெளியிட்ட செய்திக்  குறிப்பு:   

                   தரவரிசைப் பட்டியலில் திருநெல்வேலி ஸ்ரீஜயேந்திரர் கோல்டன் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். வெங்கடகிருஷ்ணன் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1185 மதிப்பெண்களுடன் 99.75 சதம் பெற்று முதலிடம் பெற்றார்.  சென்னை என்.எஸ்.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சி. லட்சுமி 1200-க்கு 1183 மதிப்பெண்களுடன் 99.58 சதம் பெற்று இரண்டாமிடமும், திருச்சி சாவித்ரி வித்யா சாலா மேல்நிலைப் பள்ளி மாணவி கெட்சி பிரதிபா 1200-க்கு 1182 மதிப்பெண்களுடன் 99.49 சதம் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.  இந்தத் தகுதிப் பட்டியல் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 70 சதம் இடங்களுக்குரியது. மீதமுள்ள 30 சதவீத இடங்களில் அகில இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வு தகுதிப் பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.  கலந்தாய்வு ஜூன் 21 முதல் 24 ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. நேரம், இடம் குறித்த விவரங்கள் மாணவர்களுக்கு தனித் தனியாகக் கடிதம் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும் தரப்பட்டியலை http://www.sastra.edu/rnk2010/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 30 சதவீத இடங்களுக்கு சாஸ்த்ரா இணையதளத்தில் ஜூன் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

                 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு (பருவமுறை) ஏப்ரல் 2010 தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) ம.திருமலை தெரிவித்துள்ளார்.  

                  எம்.காம். வங்கியியல் (சிபிசிஎஸ் அல்லாத), எம்.எப்.டி. (சிபிசிஎஸ் அல்லாத), எம்.டி.எம். (சிபிசிஎஸ் அல்லாத) தேர்வு முடிவுகள் ஜூன் 8-ம் தேதியும், பி.பி.ஏ. (சிபிசிஎஸ் அல்லாத) தேர்வு முடிவுகள் ஜூன் 10-ம் தேதியும் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.mkuniversity.org/results_new.php எனும் இணைய தளம் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.  மேலும், மேற்கண்ட பாடங்களுக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திராமல் அதற்குரிய  விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.  மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் அதற்குரிய விண்ணப்பங்களை ஜூன் 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்திற்குக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.  மறுமதிப்பீட்டுக் கட்டணத்தைக் கேட்பு வரைவோலையாக மட்டுமே அனுப்ப வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப வழங்கப்படமாட்டாது என்று தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார்.

Read more »

கடுமையான மின் வெட்டு எதிரொலி; ஐஸ் கட்டிகள் தட்டுப்பாடு: கடலூர் மீனவர்கள் பாதிப்பு


ஐஸ் கட்டிகள் பற்றாக்குறை காரணமாக பதப்படுத்த முடியாமல், கடலூர் துறைமுகத்தில் கொட்டப்பட்டு அழுகிக் கொண்டு இருக்கும் மத்தி மீன்கள். கடலூர் துறைமுகத்தில்
கடலூர்:

                  கடலூரில் கடுமையான மின் வெட்டு காரணமாக, ஏற்பட்டு உள்ள ஐஸ்கட்டி தட்டுப்பாட்டால், மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

                    கடலூரில் தற்போது மத்தி மீன்கள் அதிகமாக பிடிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு பகுதி கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடலூர் துறைமுகத்தில் இருந்து வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் மீன்கள், ஐஸ் கட்டிகளால் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. கடலூரில் இருந்து வெள்ளிக்கிழமை 100 லாரிகளில் மத்தி மீன்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டன.   

                  ஆனால் போதுமான அளவுக்கு ஐஸ் கட்டிகள் கிடைக்காததால், 50 டன் மீன்களை அனுப்ப முடியாமல் துறைமுகத்தின் கரையோரப் பகுதிகளில் கொட்டி வைத்தனர். இவை சனிக்கிழமை அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கின. கடற்கரையில் காய வைக்கப்பட்ட மீன்கள் கோழித் தீவனத்துக்காக, நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு கருவாட்டுக்காக ஒதுக்கப்படும் மீன்களுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை என்கிறார்கள். பிடிக்கப்படும் மீன்களை அன்றே வெளியிடங்களுக்குப் பாதுகாப்புடன் அனுப்ப, போதுமான ஐஸ் கட்டிகள் கடலூரில் கிடைப்பது இல்லை என்று தெரிவிக்கிறார்கள் மீன் வியாபாரிகள்.   கடலூரில் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சுமார் 15 உள்ளன. அவற்றில் இருந்து கிடைக்கும் ஐஸ் கட்டிகள், கடலூரில் அதிகமாக மத்தி மீன்கள் பிடிபடும் காலங்களில், அவற்றைப் பதப்படுத்த போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. 

                   மேலும் கடலூரில் கடுமையான மின் வெட்டு இருப்பதால், ஐஸ் கட்டித் தொழிற்சாலைகளின் முழு உற்பத்தித் திறன் அளவுக்கு, ஐஸ் கட்டிகளைத் தயாரிக்க முடியவில்லை என்று ஐஸ் கட்டித் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.   இந்த நிலையில் கேரளத்தில் இருந்து மீன் கொள்முதல் செய்ய வரும் மீன் வியாபாரிகள், தங்களது லாரிகளில் ஐஸ் கட்டிகளையும் கொண்டு வருகிறார்கள். 

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், 

                   மின் வெட்டு காரணமாக மீனவர்களுக்குத் தேவையான ஐஸ் கட்டிகளை, கடலூர் தொழிற்சாலைகளால் தயாரித்து வழங்க முடியவில்லை. ஐஸ் கட்டிகளை பாதுகாத்து வைக்கவும் கடலூரில் வசதி இல்லை. இதனால் கேரளத்தில் இருந்து மீன் கொள்முதல் செய்ய வரும் லாரிகளில் பெரும்பாலும், ஐஸ் கட்டிகளைக் கொண்டு வருகிறார்கள். வழியில் 25 சதவீதம் அளவுக்குக் கரைந்து விடும். அந்த 25 சதவீதம் ஐஸ் கட்டிகளை மட்டும் கடலூரில் வாங்கிக் கொள்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மீன் மற்றும் அது தொடர்பான தொழில்களில் வர்த்தகம் நடைபெறும் கடலூரில், அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை.   மீன்களைப் பதப்படுத்தி வைக்க, குளிர்சாதனக் கிடங்கு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். அதேபோல் துறைமுகத்தில் ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கவும் அரசு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாக்கு அறுத்து காணிக்கை

சிதம்பரம்:

                சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு சுவாமிகள். இவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1400 முறை உள்பிரகாரத்திலும் வெளிபிரகாரத்திலும் அங்கபிரதட்சணம் செய்து வருகிறார்.பௌர்ணமிதோறும் தேரோடும் வீதிகளில் தொடர் அங்கபிரதட்சணம் செய்துவரும் அவர் சனிக்கிழமை இரவு திடீரென தனது நாக்கை காணிக்கை செலுத்துவதாக கூறி, கோயிலின் கருவறைக்கு எதிரே நாக்கை அறுத்து வீசினார். அங்கிருந்தவர்கள் அவரை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

Read more »

விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?



                         கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை போலீசார் கண்காணிக்காமல் விட்டதால், தற்போது பிரபாகரன் பெயரில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், புலிகள் ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இரு மாவட்ட போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர்.

                      இலங்கையில் தனி நாடு கோரி போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். சில அமைப்பினர் நிதி திரட்டியும் அனுப்பி வந்தனர். கடந்த 91ல் நிகழ்ந்த ராஜிவ் படுகொலைக்குப் பின், புலிகள் அமைப்பை, மத்திய அரசு தடை செய்தது. இருப்பினும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பழ நெடுமாறனின் தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கம், தமிழர் படை, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், தமிழிளைஞர் கூட்டமைப்பு, தமிழர் விடுதலை படை, தமிழர் விடுதலை இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, உலக தமிழர் கூட்டமைப்பு, தமிழர் தேசிய இயக்கம், தமிழர் கழகம், தமிழர் மீட்சி படை உள்ளிட்ட சில அமைப்பினர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கி வந்தனர்.கடந்தாண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்திடம் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வலியுறுத்தியும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புலிகள் ஆதரவு அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின.

                    இலங்கை தமிழர்களை காத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கடலூரில் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற வாலிபர் கலெக்டர் அலுவலகம் முன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் எதிரொலியாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. அதேபோல், 2009 ஜனவரி 29ம் தேதியன்று, தீக்குளித்து இறந்த முத்துக்குமார் மரணத்தைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் "ஆயுத எழுத்து' என்ற அமைப்பு சார்பில், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில், "இன்று இலங்கைத் தமிழனுக்கு குண்டு, நாளை இந்திய தமிழனுக்கும் உண்டு' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

                          இலங்கை போரை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வை கடுமையாக சாடின.அத்துடன் கடந்த லோக்சபா தேர்தலின் போது, "இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த இவ்விரு கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்' என, திண்ணை பிரசாரம் செய்ததோடு, பொதுமக்களுக்கு "சிடி'யும் வழங்கினர். இந்த செயல்களை எல்லாம், கியூ பிரிவு மற்றும் சி.ஐ.டி., போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் புலித் தலைவர் பிரபாகரன், ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதை, இம்மாவட்டங்களில் உள்ள புலி ஆதரவு அமைப்புகள் மறுத்தன. "பிரபாகரன் உயிரோடு உள்ளார். தேர்தலில் காங்., கூட்டணி தோல்வி அடைந்ததும் மீண்டும் பிரபாகரன், இயக்கத்தை வழி நடத்தி செல்வார்" என, பிரசாரம் செய்து வந்தன.புலிகள் ஆதரவு அமைப்புகளின் இப்பிரசாரத்தால் பிரதான கட்சிகள் கலக்கமடைந்தன.

                            ஆனால், தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக இருக்கவே, புலிகள் ஆதரவு அமைப்பினரின் செயல்பாடு மந்தமடைந்தது. அமைப்புகள் முற்றிலுமாக முடங்கி விட்டதாகக் கருதி, அவர்களின் செயல்பாட்டை கண்காணிப்பதை காவல்துறையினர் கைவிட்டனர்.இதனால், கடந்த 8ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்ததை கண்டித்து நடந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை, பெயரளவிற்கு கைது செய்து உடனே விடுவித்தனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் சித்தணி அருகே நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்ட இடத்தில் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பெயரில் கிடந்த துண்டு பிரசுரங்கள் "கியூ' பிரிவு போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

                   இதன் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்தாண்டு வரை தீவிரமாக செயல்பட்டு வந்த புலிகள் ஆதரவு அமைப்பினரை பிடித்து, தற்போதைய வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.புலிகள் ஆதரவு அமைப்புகள் மீண்டும் தலை தூக்கத் துவங்கி விட்டனவோ என்ற அச்சமும் போலீசார் மத்தியில் உருவாகியுள்ளது. அதைத் தடுக்க இப்போதே போலீசார் முனைப்போடு செயல்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Read more »

தமிழகத்தில் இந்த ஆண்டு 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 இடங்களுக்கு மட்டுமே கவுன்சலிங்



 
              தமிழகத்தில் இந்த ஆண்டு 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மட்டுமே முதல் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும்.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் வரும் ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய குழு, தருமபுரி-விழுப்புரம்-திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்தக் கல்லூரிகளில் முதல் கட்ட கவுன்சலிங்கின்போது மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். 
 
நம்பிக்கை:
 
               எனினும் தருமபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதால், இந்தக் கல்வி ஆண்டிலேயே மாணவர்களைச் சேர்க்க அனுமதி கிடைத்துவிடும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். 
 
சிறப்புப் பிரிவினருக்கு...: 
 
               சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 28-ம் தேதி ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ள 13 மாணவ-மாணவியருக்கு சேர்க்கை கடிதம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு கவுன்சலிங் நடத்தி எம்.பி.பி.எஸ். அனுமதிக் கடிதம் வழங்கப்படும். எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் ஜூன் 28-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும். 
 
சுயநிதி எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் எப்போது?
 
             தருமபுரி, விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை மற்றும் 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 3-வது வாரத்தில் 2-ம் கட்ட கவுன்சலிங் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

Read more »

தூர்ந்து கிடக்கும் வீராணத்தின் துணை ஏரிகள்




கரையோரம் வெகுதூரம் தூர்ந்து காணப்படும் பெருமாள் ஏரி. பெருமாள் ஏரிக்கரையில் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட படகு குழாம் அருகே சிதைந்து கிடக்கும் சிற
கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் வீராணத்தின் துணை ஏரிகளாக உருவாக்கப்பட்டவை வாலாஜா, பெருமாள் ஏரிகள்.  மழை இல்லாத காலத்திலும், கொள்ளிடத்தில் வீணாகும் காவிரி நீரைப் பயன்படுத்தும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளுக்குக் காவிரி நீர் கிடைக்கும் வகையில், 1936-ல் கொள்ளிடம் கீழணை கட்டப்பட்டது. 

                        வீராணம் ஏரி நிரம்பியதும் நீர் வீணாகாமல் இருக்க, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கும் வாலாஜா, பெருமாள் ஏரிகளுக்கும் உபரி நீர் செல்லும் வகையில், வீராணம் ஆயக்கட்டு முறை உருவாக்கப்பட்டு இருப்பது அற்புதமான நீர்ப்பாசன முறையாக அமைந்து உள்ளது.  சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதால் மட்டுமே, வீராணம் ஏரி பற்றி விவசாயிகள் பேசுவது அரசின் காதுகளில் விழுகிறது. அதனால் வீராணம் ஏரியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைளில், நூறில் ஒன்றாகிலும் நிறைவேறுகிறது. ஆனால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி பற்றிய கோரிக்கைகளை தமிழக அரசு, தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகவே விவசாயிகள் கூறுகிறார்கள்.  

                      வாலாஜா ஏரி 15 ஆயிரம் ஏக்கர், பெருமாள் ஏரி 10 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பளவைக் கொண்டவை. இந்த இரு ஏரிகளையும் 12 கி.மீ. நீளம் உள்ள நடுப்பரவனாறு இணைக்கிறது. பராமரிப்பு இன்மையால் கடந்த 50 ஆண்டுகளில் 10 அடி உயரத்துக்கு மண் மேடிட்டு, வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து, தற்போது ஒரு வாய்க்கால்போல் காட்சி அளிக்கிறது. பெருமாள் ஏரி விரைவில் தூர்ந்து விடும் அபாயம் உள்ளது.  என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர், வாரத்தில் 3 நாள்கள் பெருமாள் ஏரிக்கும், 4 நாள்கள் வாலாஜா ஏரிக்கும் விடப்படுகிறது. சுரங்க நீரைச் சுத்திகரிக்காமல் விடுவதால், அதில் உள்ள கரித்துகள்கள் மற்றும் கழிமண், படிந்து, இரு ஏரிகளும் தூர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். எனினும் சுரங்க நீர் இந்த இரு ஏரிகளின் பாசனத் தேவையில் 25 சதவீதத்தைக் கூடப் பூர்த்தி செய்வதில்லை என்கிறார்கள்.  

                 முப்போகம் விளையும் 30 ஆயிரம் நிலங்கள் நிச்சயமற்ற குறுவை சாகுபடிக்கும், நிச்சயமற்ற காலம் கடந்த சம்பா சாகுபடிக்கும் தள்ளப்பட்டுவிட்டது. இரு ஏரிகளும் தூர்வாரப்பட்டு, பரவனாற்றின் கரைகளைச் சீரமைத்து, வடகிழக்குப் பருவமழை காலத்தில் முறையாக உபரிநீர் கடலுக்குள் வழியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முப்போகம் நெல் விளையும் என்கிறார்கள் விவசாயிகள். 

 இதுகுறித்து பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் கூறுகையில்,

                              "50 ஆண்டுகளில் வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து விட்டது. பெருமாள் ஏரி தூர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமிக்க முடியவில்லை. வழிந்தோடும் உபரி நீரும் விரைவில் கடலில் கலக்காததால் 20 கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஆண்டுதோறும் ரூ.15 கோடியை அள்ளி வீசுகிறது தமிழக அரசு. ஆனால் நிரந்தரத் தீர்வுக்கு வழிகாணவில்லை.  பரவனாற்று நீர் எளிதில் வடிய, ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட அருவாமூக்குத் திட்டம் அறிமுக நிலையிலும், வாலாஜா ஏரியை ரு.25 கோடியில் தூர்வாரும் திட்டம், என்.எல்.சி. நிறுவனத்தின் அறிவிப்பு நிலையிலும் உள்ளது.  பெருமாள் ஏரியைத் தூர்வார திட்டம் தயாரிக்கப்படுவதாக பல்லாண்டுகளாகத் தெரிவிக்கிறார்கள்' என்றார். 

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் நெய்வேலி மாணவி சாவு

கடலூர்:
 
                     கடலூர் சில்வர் பீச்சில் சனிக்கிழமை கடலில் குளித்த நெய்வேலி மாணவி அலைகளில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முருகேசன், செல்வராஜ். இவர்களின் குடும்பத்தினர் சனிக்கிழமை கடலூர் சில்வர் பீச்சுக்கு சுற்றுலா வந்தனர். செல்வராஜின் உறவினர் மாரிமுத்து (25) உதவியுடன் இரு குடும்பங்களையும் சேர்ந்த சிறுமிகள் கடலில் குளித்தனர். அப்போது திடீரென அலைகளில் சிக்கி, முருகேசன் மகள் கீர்த்தனா (13), செல்வராஜ் மகள் சோபனா (13) மற்றும் மகாலட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் கடலில் மூழ்கினர்.அவர்களில் மகாலட்சுமி, கலைச்செல்வி, சோபனா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். 
 
                        ஆனால் கீர்த்தனா கடலில் மூழ்கி இறந்தார். அவரது சடலம் மீட்கப்பட்டது. சோபனா உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இறந்துபோன கீர்த்தனா காப்பாற்றப்பட்ட சோபனா ஆகியோர் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள்.

Read more »

எஸ்.ஐ.யை மிரட்டியதாக 5 பேர் கைது

சிதம்பரம்:

                          சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக மனித உரிமைகள் கழக கடலூர் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான லோக.நடேசன் உள்ளிட்ட 5 பேரை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்." கடலூர் சாசன் கெமிக்கல் கம்பெனியின் கைக்கூலியாக செயல்படும் கடலூர் எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.யை பணிநீக்கம் செய்ய வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை லோக.நடேசன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலக காம்பவுண்ட் சுவரில் ஒட்டியதாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீஸôர் போஸ்டரை ஒட்டக் கூடாது எனக் கூறி தடுத்தனராம். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சப்-இன்ஸ்பெக்டருக்கு லோக.நடேசன் உள்ளிட்ட 5 பேர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் நகர போலீஸôர் வழக்குப் பதிந்து லோக.நடேசன் (58), குமாரவேல் (28), பிரேம்ஆனந்த் (34), வாசுதேவன் (35), ஆனந்த் (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Read more »

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு திரள் ஓட்டம்

பண்ருட்டி:
                அண்ணா பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி சரகம் பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி சார்பில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு குறுந்தொடர் திரள் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
                    பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் இருந்து புறப்பட்ட திரள் ஓட்டத்தில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தனர்.முன்னதாக பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் தலைமை தாங்கி திரள் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். பண்ருட்டி அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.குமாரசாமி முன்னிலை வகித்தார். நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், நெய்வேலி கல்வி அறக்கட்டளை தாளாளர் ஆர்.சந்திரசேகர், செயலர் எம்.நடராஜன், வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more »

ஆற்றில் மூழ்கிய மாணவி உடல் மீட்பு: மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

பரங்கிப்பேட்டை:

                     சிதம்பரம் அருகே பரவனாற்றில் குளித்த பள்ளி மாணவியர் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் பிரேமலதா (13). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகள் சத்தியா (13). இருவரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.

                    நேற்று விடுமுறை நாள் என்பதால் சமையலுக்கு விறகு பொறுக்க பரவனாறு பகுதிக்குச் சென்று திரும்பி வரும் போது பரவனாற்றில் குளித்தனர். திடீரென ஆழமான பகுதியில் இருவரும் சிக்கி தண்ணீரில் மூழ்கினர். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்று தண்ணீரில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் பிரேமலதா உடலை மட்டும் மீட்டனர். சத்தியா கிடைக்கவில்லை.இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கிராம மக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சத்தியாவை தேடி வருகின்றனர்.

Read more »

நடுக்கடலில் படகு பழுது : மீனவர்கள் தத்தளிப்பு

கடலூர் : 

                       பழுதடைந்த படகில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க கடலோரக் காவல் படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் முதுநகர் பென்சனர் தெருவைச் சேர்ந்த மீனவர்களான சின்னவர் (எ) கஜேந்திரன் (40) மணவெளி ராஜா (48) சலங்கை நகர் ரகு (48) வசந்தராயன்பாளையம் தாஸ் (24) ஆகியோர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தேவனாம்பட்டினம் சீத்தாராமன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

                         இந்நிலையில் நேற்று மாலை நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே கரைக்கு வந்த ரகு, தாங்கள் சென்ற படகு நடுக்கடலில் பழுதடைந்து விட்டதாகவும், அந்த வழியே வந்த படகில் தான் மட்டும் வந்துவிட்டதாகவும், மற்ற மூவரும் பழுதடைந்த படகிலேயே இருப்பதாக திருமுல்லைவாசல் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்து, பழுதடைந்த படகில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மூவரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read more »

ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறி: என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட முடிவு

கடலூர்:

                   என்.எல்.சி., தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். 

                     இந்தியாவில் உள்ள பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ( என்.எல்.சி.,) 14 ஆயிரம் தொழிலாளர்களும், இன்ஜினியர் மற்றும் அதிகாரிகள் 3,800 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 1997 ஜனவரி 1ம் தேதி ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 10 ஆண்டிற்கு முன் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் கடந்த 2006 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்ததால் 2007 ஜன., 1ம் தேதி முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

                       இந்த ஒப்பந்தத்தை ஐந்தாண்டிற்கு மட்டுமே ஏற்படுத்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் ஊழியர்களின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி 78.2 சதவீதம், இதன் கூட்டுத் தொகையில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இதனுடன் "இன்கிரிமென்ட் மற்றும் சர்வீஸ் வெயிட்டேஜ்' ஆகியவற்றை அடிப்படை சம்பளத்தில் தலா 5 சதவீதம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அலவன்ஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., மற்றும் பாட்டாளி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் "இன்கிரிமென்ட் மற்றும் சர்வீஸ் வெயிட்டேஜ்' ஆகியவற்றை அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் வழங்குவதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்தது.அலவன்ஸ் மற்றும் ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடந்த பல சுற்று பேச்சவார்த்தையில் தீர்வு ஏற்படாமல் இழுபறி நீடித்தது .ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் நிர்வாகம் காலம் கடத்தி வருவதை கண்டித்து தொ.மு.ச., மற்றும் பா. தொ.ச., இணைந்து கடந்த 31ம் தேதி என்.எல்.சி., நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது.

                         இதன் எதிரொலியாக, மண்டல தொழிலாளர் நல கமிஷனர் ஜெகன்நாதராவ், என்.எல்.சி., நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினரை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து பேச்சவார்த்தை நடத்தினார். அதில் இன்கிரிமென்ட், சர்வீஸ் வெயிட்டேஜ் மற்றும் அலவன்சை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்பதை தொழிற்சங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது (ஆனால் அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அலவன்சுகளை 2008 நவம்பர் மாதம் முதல் வழங்குவதாக கூறி ஊதிய மாற்றம் செய்து கடந்த ஓராண்டாக புதிய ஊதியம் பெற்று வருகின்றனர்).
 
                      இதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் தீர்வு ஏற்படவில்லை. அதனால், தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி 18 (1) ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு வரும் 15ம் தேதி சென்னைக்கு வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, நாளை இன்று நெய்வேலியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.நெய்வேலியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள தொழிலாளர்கள் பிரச்னைகளில் நிர்வாகம் விரைந்து தீர்வு காணவில்லையென்றால், தொழிலாளர்கள் போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Read more »

Ryots oppose fencing of land for power plant, mini-ports

CUDDALORE: 

              Members of the Coordination Committee of the Affected Farmers' Forum and the Communist Party of India (CPI) gathered at Vellingarayanpettai near here on Sunday and protested against fencing of lands acquired by private companies for setting up power  plants and mini-ports.

            Those who led the protest included Shanmugham, forum president, and T. Manivasgam, district secretary of the CPI. They told The Hindu that the private companies had engaged agents for acquiring farm lands. The agents had already acquired 900 acres, spanning across 12 villages including Vellingarayanpettai, Villiyanur and Kothattai, at the cost of Rs. 4 lakh an acre. For further land acquisition, they had started offering Rs. 8 lakh an acre. The price difference had put the farmers who had already sold their lands, in dismay. They have started demanding parity in price and settlement of the difference in the amount. The protest was aimed at preventing the companies from fencing the acquired lands.

                Police and revenue officials dispersed the protestors with a promise that tripartite talks would be held at Chidambaram on June 23 to resolve the issue. However, contractors engaged in erecting the fence said that they were not privy to the issue and would not participate in the talks. It was their contention that it was the lookout of the companies concerned. Meanwhile, Mr. Manivasagam said fishermen too protested against the proposal to set up mini-ports, which they feared would curtail their traditional pursuit besides endangering marine life. He also said acquisition of vast stretches of once fertile lands had thrown thousands of farm labourers out of job.

Read more »

Two girls drown

CUDDALORE: 

            Two girls studying in Class VII, V. Premalatha (13) and S. Sathya (13) of Andarmullipalayam near Pudhuchathiram, drowned in the Paravanaru on Sunday.

              On information the police, went to the spot, retrieved the bodies and sent them for post-mortem. Police sources said that the victims drowned while trying to fetch twigs from the other side of the river.

Read more »

பண்ருட்டி நகராட்சி துவக்கப்பள்ளியை தரம் உயர்த்த கல்வி அதிகாரி ஆய்வு

பண்ருட்டி; 

                பண்ருட்டி நகராட்சி துவக்கப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வுப் பணி நடந்தது.

                   பண்ருட்டியில் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை சி.இ.ஓ., அமுதவல்லி, தாசில்தார் ஆகியோர் பார்வையிட்டு தேர்வு செய்தனர். முதல் கட்டமாக விழமங்கலம் நகராட்சி துவக் கப் பள்ளியை பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த ஒரு லட்சம் ரூபாய் பொதுமக்கள் பங்களிப்பாக வழங்க கேட்டுக் கொண்டனர். மேலும் உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான இடத்தை பக்கத்தில் உள்ள கோவில் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தை வாங்கவும் முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து டி.இ.ஓ., கணேசமூர்த்தி (பொறுப்பு) பள்ளிக்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், தொழிலதிபர் வைரக்கண்ணு, அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், தி.மு.க., கவுன்சிலர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Read more »

நகை கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு


திட்டக்குடி: 

                   திட்டக்குடியில் நகை கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., இளங்கோ தலைமை தாங் கினார். திட்டக்குடி இந்தியன் வங்கி கிளை மேலாளர் அணில்குமார், கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் கலைச் செல்வம், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சம்பந்தம் வரவேற்றார்.

                      கூட்டத்தில் நகை மற்றும் அடகு கடைகளின் உள் மற்றும் வெளிப்புறங்களில் இரவு நேரங்களிலும் பயன்படும் வகையில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும். பக்லர் அலாரம், மரத்தால் செய்த பழைய கதவுகள் மாற்றி பாதுகாப்பான வகையில் கதவுகள் அமைக்கப்பட வேண்டும், எளிதில் உடைக்க முடியாத பூட்டினை பயன்படுத்தி திருட்டுகளை குறைக்க போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என இன்ஸ்பெக்டர் ராமதாஸ் பேசினார். கூட்டத்தில் ஜூவல்லரி உரிமையாளர் கள் அய்யப்பன், பாண்டியன், அடகு கடை உரிமையாளர்கள் செல்வம், பிரபு, சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டுகள் லோகநாதன், ராஜவேல் பங்கேற்றனர்.

Read more »

கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் பருத்தி சாகுபடி பயிற்சி

கடலூர்: 

                       கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் கிராமத்தில் பருத்தி சாகுபடி பயிற்சி நடந்தது. ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். கடலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் முன் னிலை வகித்தார். வேளாண் அலுவலர் சின் னக்கண்ணு வரவேற்றார். மாவட்டவேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாபு, மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் விஜயலட்சுமி, வேளாண் அலுவலர் ராஜலட்சுமி, விவசாயிகள் பங்கேற்றனர். ஜெயமணி நன்றி கூறினார்.

Read more »

நீரில் கரையும் கரும்பு உரங்கள்100 சதவீத மானியத்தில் வழங்கல்

திட்டக்குடி; 
 
                                 நீரில் கரையும் ரசாயன உரங்கள் நூறு சதவீத மானிய விலையில் வழங்கும் விழா திட்டக்குடியில் நடந்தது. விழாவிற்கு மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாக முதுநிலை மேலாளர் (கரும்பு பிரிவு) பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். மங்களூர் துணை வட்டார வேளாண்மை அலுவலர் டென்சிங் வரவேற்றார். இதில் கரும்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். விழாவில் 2009-10ம் ஆண்டு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் சிறுபாக்கம் தாமரை கரும்பு துல்லிய பண்ணை சங்கம் மற்றும் ம.புதூர் வள்ளலார் கரும்பு துல்லிய பண்ணை சங்க விவசாயிகள் 40 பேருக்கு 100 சதவீத மானிய விலையில் கரும்பு பயிருக்கு நீரில் கரையும் ரசாயன உரங்கள் வழங்கப்பட்டது.

Read more »

வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மண் பரிசோதனை நிலையம் திறப்பு விழா

கடலூர்: 

              கடலூர் அடுத்த வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் "அக்ரி கிளினிக்' மற்றும் மினி மண் பரிசோதனை நிலையம் திறப்பு விழா நடந்தது.
 
                   ஒன்றியத் தலைவர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் ராஜலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் துவக்கி வைத்து, மண் பரிசோதனைக்கான நவீன சாதனங்களை பார்வையிட்டார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் பாபு, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, உதவி இயக்குனர் சீனிவாசன், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் பாண்டியன், வேளாண் அலுவலர் சின்னக்கண்ணு, பூவராகன், பூங்கோதை, ஜெயக்குமார், தோட்டக்கலை அலுவலர் முனுசாமி, கரும்பு ஆலை தனி அலுவலர் சுரேஷ், தொழில் முனைவர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் தெய்வசிகாமணி, பரமசிவம் செய்திருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலங்கள்

விருத்தாசலம்: 

               கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, ராமநத்தம், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி பகுதிகளில் கல்வி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
                ஐந்து வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும், மாணவர் சேர்க்கை அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கடலூர் துறைமுகம்: 

              பிரான் சிஸ் சவேரியர் நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அகஸ்டின் வரவேற்றார். தமிழரசன் துவக்கி வைத்தார்.

பண்ருட்டி: 

               அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் வடிவேல் துவக்கி வைத் தார். வட்டார வள மைய பயிற்றுநர் பண்டரிபாய் முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் தீனதயாளன், பற்குணன் பங்கேற்றனர்.

புதுப்பேட்டை: 

                நகராட்சி நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜாக்கண்ணு தலைமை தாங்கினார். பாலசுப்ரமணியன், சம்சுதீன், சண்முகம் பங்கேற்றனர்.

சி.என்.பாளையம்:

                      சி.என்.பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மல்லிகா துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
ராமநத்தம்: 

              ஆ.பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் வளர்ச்சிக்குழு தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் ராமசாமி, தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். மங்களூர் வட்டார ஆசிரியர் பயிற்றுனர் சரஸ்வதி துவக்கி வைத்தார்.

வாகையூர்: 

               ஊராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மலர் செல்வன் வரவேற்றார். முன்னாள் மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் இளங்கோவன் துவக்கி வைத்தார்.

விருத்தாசலம்: 

                வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பிரகாசம், உதவி தலைமை ஆசிரியர்கள் வீரராகவன், ராஜன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் புகழேந்தி வரவேற்றார். ஆர்.டி.ஓ., முருகேசன் துவக்கி வைத்தார்.

ராஜேந்திரப்பட்டினம்: 

               நடுநிலை பள்ளியில் ஊராட்சி தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வெங்கடேசன், சிவக்குமார், பழனிவேல், கிரிஜா பங்கேற்றனர்.

செம்பளக்குறிச்சி: 

               நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வள்ளி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இருப்புகுறிச்சி: 

              தூய இருதய மேல்நிலை பள்ளியில் மாவட்ட துணை சேர்மன் பிரான்சிஸ்மேரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நிர்மல்ராஜ், தசமன், அந்தோணிசாமி பங்கேற்றனர்.

சேத்தியாத்தோப்பு: 

              காவாலக் குடியில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் (பொறுப்பு) இளஞ்செழியன் துவக்கி வைத்தார்.
திட்டக்குடி: 

             போத்திரமங்கலம் நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் புனிதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சவுரிராஜன் துவக்கி வைத்தார்.

ஈ.கீரனூர்: 

                தொடக்கப் பள்ளியில் ஊராட்சி தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தங்கதுரை, தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தமிழ்க்கனி வரவேற்றார்.

Read more »

சாத்தப்பாடி ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு விழா

புவனகிரி; 

                 புவனகிரி அடுத்த சாத்தப்பாடி ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி தலைமை தாங்கி திறந்து வைத்தார். கிராம ஊராட்சிகளின் பி.டி.ஓ., ஜமுனா, ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம், எழுத்தர் பாலகணபதி பங்கேற்றனர்.

Read more »

கிள்ளையில் உலக சுற்றுச்சூழல் தின விழா

கிள்ளை:

                  சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர் (இருளர் குடியிருப்பு) நடுநிலைப் பள்ளியில் நடந்த உலக சுற்றுச்சூழல் விழா, குழந்தைகள் பாராளுமன்ற அமைச்சர்கள் பொறுப்பேற்பு விழாவில் தலைமை ஆசிரியர் சிவக்குமரவேல் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியை சரவணாஸ்ரீ வரவேற்றார். ஆசிரியர்கள் மணிமாறன், மணிமொழி முன்னிலை வகித்தார். 15 பேர் கொண்ட குழந்தைகள் பராளுமன்றத் தில் தலைவர் அன்பரசன், செயலாளர் சதீஷ்குமார், துணை செயலாளர் அம்சவள்ளி, அமைப்பாளர் ஆனந்தி உள் ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர்களுக்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முத்துசுகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்த உலக சுற்றுச் சூழல் ஊர்வலத்தை அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் மாறன் துவக்கி வைத்தார். ஏக்தா நம்பிக்கை மைய ஒங்கிணைப்பாளர் தமிழ்மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடப்பட்டன.

Read more »

பார்வையற்ற மாணவிக்கு முன்னாள் எம்.பி., நிதியுதவி

சிறுபாக்கம்; 

                 சிறுபாக்கத்தில் பார்வையற்ற மாணவியின் மேல் படிப்பிற்கு முன்னாள் எம்.பி., நிதியுதவி வழங்கினார். சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் சங்கீதா. பார்வையற்ற மாணவியான இவர் பி.ஏ., வரை படித்துள்ளார். இவர் மேல் படிப்பிற்காக உதவுமாறு முன்னாள் எம்.பி., யும், சின்னம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனருமான கணேசனிடம் நேரில் முறையிட்டார்.இதையடுத்து மாணவியின் மேல்படிப்பிற்காக 5,000 ஆயிரம் ரூபாய் சங்கீதாவிடம் முன்னாள் எம்.பி., கணேசன் வழங்கினார். மேலும் அவரது படிப்பு செலவிற்கு தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியின் போது தி.மு.க., ஆதிதிராவிட நல குழு அமைப்பாளர் ராஜி, கிளை செயலாளர் மருதமுத்து, ராமலிங்கம், முருகேசன், வெங்கடேசன், குமணன், ரங்கசாமி, ராமதாஸ், ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்


பண்ருட்டி: 

                பண்ருட்டி நகரில் போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
 
                 பண்ருட்டி நகரம் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் - சித்தூர் சாலையின் இணைப்பு சந்திப்பாக உள்ளது. வியாபார தலமாக இருப்பதால் மக்கள், வாகன பெருக்கம் காரணமாக காந்திரோடு, கடலூர் சாலை, ராஜாஜி சாலை, சென்னை சாலை, கும்பகோணம் சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும்.

                        இதனால் பண்ருட்டியில் போக்குவரத்து சீரமைக்க தனிக்காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என்ற பொதுமக்கள் மற் றும் பொது நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனி போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து போலீஸ் நிலையம் துவக்கிய பின் ஒரு வழிச்சாலைகளான காந்திரோடு, ராஜாஜி சாலை, இந்திராகாந்தி சாலை ஆகியவை இருவழிச்சாலைகளாக செயல்படுகிறது. பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் முதல், கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. கடமைக்காக கடந்த மாதம் ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந் தாய்வுக் கூட்டம் நடத்தி சென்னை, ராஜாஜி சாலையில் இரண்டு ஆட்டோக் கள் ஓட்டுவதற்கு மட்டும் அனுமதி என அறிவித் தனர்.

                          அதன் பின்பும் ராஜாஜி சாலை, சென்னை சாலையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கிறது. மார்க்கெட் முன் சரக்கு லாரிகள், சரக்குகளை ஏற்றி இறக்குகின்றன. கடலூர் சாலை, காந்தி ரோடு, சென்னை சாலையில் வழிநெடுகி லும் கடைகள், தரை கடை ஆக் கிரமிப்பு கூடுதலாக அதிகரித்துள்ளது. காந்திரோடு தட்டாஞ் சாவடியில் துவங்கி நான்கு முனை சந்திப்பை வாகனத்தில் கடக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போக்குவரத்து தனிபோலீஸ் நிலையம் அமைத்தும் போக்குவரத்து சீரமையாதது வேதனையடைய செய்துள்ளது.

Read more »

ரயில்வே மேம்பால பணியையொட்டி காரைக்காடு சாலையை ஒரு வழிபாதையாக மாற்ற வலியுறுத்தல்

கடலூர்: 

                  ரயில்வே மேம்பால பணியையொட்டி காரைக் காடு வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
                     பச்சையாங்குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியினால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. விருத் தாசலத்திற்கு செல்லும் வாகனங்கள் சிப்காட் அடுத்த காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலையை சென்றடைகிறது. இதனால் காரைக்காடு கிராமத்தில் உள்ள சிறிய சாலையில் அவ் வளவு வாகனங்களும் செல்ல முடியவில்லை. பல இடங்களில் சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. டிப்பர் லாரிகள் போக்குவரத்தால் கிராமமே புழுதி நகரமாக காட்சி தருகிறது.எனவே, இந்த சாலையை ஒரு வழிச்சாலையாக பயன்படுத்துமாறு கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். விருத்தாசலத்தில் இருந்து கடலூர் வரும் வாகனங்கள் பெரிய காரைக்காடு வழியை பயன்படுத்துமாறும், கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் வாகனங்கள் காரைக்காடு சாலையை பயன்படுத்தினால் விபத்துக்கள் குறைவதோடு வாகன நெரிசலும் கனிசமாக குறையும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

பாதுகாப்பற்ற நிலையில் பரங்கிப்பேட்டை கிளைச்சிறை

பரங்கிப்பேட்டை: 
 
                              பரங்கிப்பேட்டை கிளைச் சிறை மதில் சுவர் இடிந்து விழுந்து ஒரு ஆண்டு ஆகியும் கட்டப்படாமல் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாஜிஸ்திரேட் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன், கிளைச் சிறை ஆகியவை ஒரே வளாகத்தில் கட்டப்பட்டது. இவ்வளாகத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக 5 அடி உயரத்திற்கு மதில் சுவர் அமைக்கப்பட்டது. இச்சிறையில் பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்படுகின்றனர். 
 
                           சிறையை சுற்றியுள்ள மதில் சுவர் பராமரிக்கப்படாததால் கடந்த ஆண்டு பின்புறம் 20 அடி நீளத்திற்கு கீழே விழுந்தது. ஒரு ஆண்டு ஆகியும் செப்பனிடப்படாமல் இருந்த நிலையில் தற்காலிகமாக முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் கைதிகள் எந்த நேரத்திலும் தப்பியோடலாம் என்ற அச்சத்தில் சிறைத்துறை அதிகாரிகள் உள்ளனர்.

Read more »

பெண்ணாடத்தில் பலத்த காற்று எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது

திட்டக்குடி: 

                     பெண்ணாடம் அருகே பலத்த காற்றினால் உயர் அழுத்த மின் சப்ளையால் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதானது. பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசியது. அதில் அம்பேத்கர் நகரில் உள்ள மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பிகளில் பாய்ந்தது. இதில் வீடுகளில் பயன் பாட்டிலிருந்த கம்பெனி மற்றும் இலவச "டிவி'க்கள் உட்பட 40 "டிவி'க்கள் மற்றும் பேன், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் செயலிழந்தது. தகவலறிந்த பெண்ணாடம் துணை மின்நிலைய ஊழியர்கள் விரைந்து சென்று மின் கம்பிகளை சீரமைத்து சீரான மின்சப்ளை வழங்கினர்.

Read more »

அனுமதியில்லாமல் கிராவல் ஏற்றிய லாரி, ஜே.சி.பி., இயந்திரம் பறிமுதல்

கடலூர்: 

                  கடலூர் அருகே அனுமதியின்றி கிராவல் எடுத்த டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
                       கடலூர் அடுத்த புருகீஸ்பேட்டையில் கொண்டங்கி ஏரியின் ஒரு பகுதியின் கரை அமைத்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சிறிய மலையை தனியார் குவாரிக்கு சாலை அமைப்பதற்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் செம்மண் கிராவல்கள் உடைத்து லாரியில் ஏற்றப்பட்டது. உடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கிராவல்களை வெட்டி எடுப்பதால் கொண்டங்கி ஏரி கரை பலவீனமாகும் என்பதை தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தி கடலூர் தாசில்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாசில்தார் தட்சணா மூர்த்தி நேரில் சென்று விசாரணை நடத் தினார். விசாரணையில் அனுமதியில்லாமல் பாதை அமைத்ததும். மேலும் அந்த பகுதியில் இருந்த கிராவல்களை அப்புறப்படுத்தியதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லாரி மற்றும் ஜே.சி.பி., ஆகியவற்றை தாசில்தார் கைப்பற்றி கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தார். மேலும் இது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உட்படுத்தப் பட உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior