உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

டாஸ்மாக் ​கடைகளில் சோதனை:​ 10 பேர் கைது

கடலூர்:

                கடலூரில் திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளில் சோதனை நடத்தி,​​ அவற்றின் அருகே அனுமதியின்று உணவுப் பண்டங்களுடன் கூடிய மது அருந்தும் கூடங்களை நடத்திய 10 பேரைப் போலீஸôர் கைது செய்தனர்.​ ​÷டாஸ்மாக் மதுக் கடைகளை ஒட்டி அனுமதியின்றி மதுஅருந்தும் கூடங்களை நடத்துவதாகவும் இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.​ ​ ​ எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில்,​​ கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் போலீஸôர்,​​ திங்கள்கிழமை இரவு டாஸ்மாக் மதுக்கடைகளை சோதனையிட்டனர். டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகே அனுமதியின்றி மது அருந்தும் கூடங்களை நடத்தியதாக,​​ மேல்பட்டாம்பாக்கம் பாஸ்கர் ​(58),​ திருவண்ணாமலை ராமு ​(36),​ விஜய் ​(41),​ வளவனூர் சிங்காரவேலு ​(27),​ மதுரை பார்த்தசாரதி ​(37),​ கூத்தப்பாக்கம் நச்சினார்க்கினியன் ​(55),​ திருப்பாப்புலியூர் பழநிவேல் ​(21),​ சரவணன் ​(29),​ சந்தோஷ்குமார் ​(30),​ கே.என்.பேட்டை பழநி ​(47) ஆகியோரைப் போலீஸôர் கைது செய்தனர்.

Read more »

ரேஷன் கடையில் முறைகேடு:​ ​ விற்பனையாளர் சஸ்பெண்ட்

கடலூர்:

                ​ ரேஷன் கடையில் முறைகேடு காரணமாக,​​ குறிஞ்சிப்பாடியை அடுத்த அம்பலவாணன்பேட்டை நியாய விலைக் கடை பெண் விற்பனையாளர் சுராஜி,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனின் உத்தரவின்பேரில் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பலவாணன் பேட்டை நியாயய விலைக் கடையில்,​​ மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.​ அப்போது உளுந்து,​​ துவரம்பருப்பு எடை குறைவாக வழங்கியதும்,​​ பில் வழங்கி விட்டு சர்க்கரை வழங்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.​ மேலும் பாமாயில்,​​ துவரம் பருப்பு,​​ உளுந்து ஆகியவை இருப்பு குறைவாக இருந்ததும் தெரியவந்தது.

Read more »

செத்த மீன்களால் ​ நாற்றம் அடிக்கும் கடலூர் கடற்கரை

கடலூர்:

          தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகளால்,​​ கடலில் செத்து கரை ஒதுங்கிய மீன்களால் கடலூர் அருகே கடற்கரை கிராமங்களில் நாற்றமடிக்கத் தொடங்கி உள்ளது.கடலூரை அடுத்த நொச்சிக்குப்பம் முதல் ரெட்டியார்பேட்டை வரை உள்ள மீனவர் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து கரை ஒதுங்கின.தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர்,​​ மீன்வளத் துறையினர் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.​ செத்த மீன்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.​ நொச்சிக்காடு கிராமத்தில் அந்த மீன்களை ஊர்மக்களே பள்ளம் தோண்டிப் புதைத்தனர்.​ மற்ற கிராமங்களில் செத்த மீன்கள் அகற்றப்படாமல்,​​ அழுகி துர்நாற்றம் அடித்துக் கொண்டு இருப்பதாகவும்,​​ கடற்கரை கிராமங்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும்,​​ உடனே அவற்றை அகற்ற வேண்டும் என்றும்,​​ மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் தெரிவித்தார். தொற்றுநோய் பரவுமுன்,​​ செத்துக் கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சிங்காரவேலனார் முன்னேற்றக் கழக கடலூர் மாவட்டத் தலைவர் சுபாஷ் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

Read more »

மானியத்தில் காய்கறி விதைகள்,​​ பழக்கன்றுகள் விநியோகம்

பண்ருட்டி:

                     ​ கெடிலம் ஆற்றுப் பாசன பகுதியில் உள்ள வருவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நீர்,​​ நிலவளத் திட்டத்தின் மூலம் மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கப்படுவதாக பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,​​ 

           கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் கெடிலம் நதி மேம்பாடு நீர்,​​ நிலவளத் திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்பட உள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் கெடிலம் ஆற்றுப் பாசன பகுதியில் உள்ள வருவாய் கிராம விவசாயிகளுக்கு திசு வளர்ப்பு வாழை,​​ கொய்யா,​​ கத்தரி,​​ வெண்டை விதைகள் மற்றும் தேவையான இடுபொருள்கள் மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மனம்தவிழ்ந்தபுத்தூர்,​​  நத்தம்,​​ சிறுகிராமம்,​​ வீரப்பார்,​​ திருவாமூர்,​​ எலந்தம்பட்டு,​​ செம்மேடு,​​ சேமக்கோட்டை,​​ மணப்பாக்கம்,​​ சிறுவத்தூர்,​​ எல்.என்.புரம்,​​ பூங்குணம் மற்றும் செட்டிப்பட்டரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து பயனடையலாம். பயன்பெறும் விவசாயிகள் 10 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில புலஎண் நீர்,​​ நிலவள பாசன பகுதிக்குள் வருகிறதா என்பதை உறுதி செய்து கொண்டு,​​ பண்ருட்டி தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Read more »

அதிக பயணிகளை ஏற்றிசென்ற 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல்

கடலூர்:

                          கடலூரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதாக 30 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.​ கடலூரில் 500-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.​ இவற்றில் அனுமதிக்கப்பட்டதைவிட,​​ கூடுதலாகப் பயணிகளை ஏற்றிச் செல்வதாக நிறையப் புகார்கள் காவல் துறைக்கு வந்தன.​ எனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் ஷேர் ஆட்டோக்களை போலீஸôர் திங்கள்கிழமை தீவிர தணிக்கை செய்தனர்.​ ​ கடலூர்,​​ லாரன்ஸ் சாலை,​​ அண்ணா மேம்பாலம்,​​ மஞ்சக்குப்பம்,​​ ஆல்பேட்டை,​​ செம்மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸôர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர்.​ ஷேர் ஆட்டோக்களில் மிகச் சாதாரணமாக 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.​ ​ 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில்,​​ விதிகளை மீறிய 30 ஷேர் ஆட்டோக்கள் பிடிபட்டன.​ அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.​ ​ பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஷேர் ஆட்டோக்களும் காவல் நிலையத்துக்குக் கொண்டு போகப்பட்டன.​ இதனால் போலீஸôருக்கும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.​ ஷேர் ஆட்டோக்களில் 5 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது,​​ மீறினால் பறிமுதல் செய்வோம் என்று போலீஸôர் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.

Read more »

நகராட்சி துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை சீரமைக்க ​ உத்தரவு

சிதம்பரம்:

                             ​ சிதம்பரத்தில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது குறித்து "தினமணி'யில் புகைப்படத்துடன் வெளியான செய்தியையடுத்து,​​ அதை சீரமைக்குமாறு மத்திய அரசு பழங்குடியினர் நல தேசிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

                    குடியிருப்பின் அவல நிலை குறித்து வெளியான செய்தியையடுத்து,​​ புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மக்கள் குறைதீர்க்கும் பிரிவு செயலர் ஏ.வி.​ வீரராகவன்,​​ இதுகுறித்த செய்திக் குறிப்புடன் பழங்குடியினர் நல தேசிய ஆணைய இயக்குநருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் அனுப்பினார். இதையடுத்து,​​ துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பை உடனடியாக நேரில் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.​ இதுகுறித்த அறிக்கையை பழங்குடியினர் நல தேசிய ஆணையத்துக்கு விரைவாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பெ.​ சீதாராமனுக்கு பழங்குடியினர் நல தேசிய ஆணையத்தின் இயக்குநர் இ.​ தசரதன் உத்தரவிட்டுள்ளார்.

Read more »

உண்மையான ரேஷன் கார்டுகள்... நீக்கம்! : தவறான கணக்கெடுப்பால் குளறுபடி

கடலூர்: 

                 மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் என்ற பெயரில் தவறான கணக்கெடுப்பால் உண்மையான கார்டுதாரர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். வியாபாரிகள் வசம் உள்ள நூற்றுக் கணக்கான கார்டுகளை ஒழிக்க வருவாய்த் துறையினர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர்.
 
                     மாவட்டத்தில் 1,116 முழு நேரம் மற்றும் 193 பகுதி நேர ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 6 லட் சத்து 47 ஆயிரத்து 75 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, மைதா, ரவை, மண்ணெண்ணெய் உள் ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. முன்பெல்லாம் நடுத்தர மக்கள் சர்க்கரை, மண்ணெண்ணெய் மட்டுமே வாங்கி வந்தனர். தற்போது விலைவாசி உயர்வின் காரணமாக நடுத் தர மக்கள் முதல் சாமானிய மக்கள் வரை ரேஷன் கடைகளையே நம்பியுள்ளனர். இதனால் புதிய ரேஷன் கார்டுகள் வாங்குவோரின் விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் சமீப காலமாக இலவச கலர் "டிவி', காஸ் இணைப்பு உள்ளிட்ட அரசு வழங்கும் சலுகைகளை பெற ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கார்டுகள் பெற்றுள்ளனர். ஏற்கனவே மண்ணெண்ணெய், சர்க்கரைக்காக வியாபாரிகள் அதிகளவில் போலி ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் இலவச பொருட்களை பெற பொதுமக்களும் தாய், தந்தைக்கு ஒரு கார்டு, பிள்ளைகளுக்கு ஒரு கார்டு என தனித்தனியாக விண்ணப்பித்து பெற் றுள்ளனர். ஆரம்பத்திலேயே தீவிரமாக விசாரணை செய்து  கார்டு வினியோகத்தை நிறுத்த வேண் டிய வருவாய்த் துறையினர் முழுமையாக விசாரணை செய்யாததன் விளைவாக மாவட்டத்தில் போலி கார்டுகள் லட்சக்கணக்கில் உருவாகியுள்ளன.
 
                 கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் போலி கார்டுகளை நீக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் அதிகளவில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் தேர்தல் முடிவுகள் பாதிக்கும் என்பதை அறிந்த அரசு, போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு திட்டத்தை நிறுத்தி வைத்தது. மேலும் ஏற்கனவே நீக்கிய கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க உத்தரவிட்டது. தேர்தல் முடிந்த பின்னர் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால், பல ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தவர் கள் கார்டுகளை கூட நீக் கம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் ஆவேசமடைந்தனர்.  அதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது அன்றாட பணியை விட்டுவிட்டு, ரேஷன் கடைக் கும், தாலுகா அலுவலகத்திற்குமாக அலைந்து ரேஷன் கார்டை புதுப் பித்து பொருட்களை வாங்கி வந்தனர். இந்நிலையில் மாவட் டத்தில் உள்ள 1,309 ரேஷன்கடைகளிலும் நீக்கப்பட்டியில் கடந்த 1ம் தேதி ஒட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் போலி ரேஷன்கார்டுகள் என்ற பெயரில்  25 முதல் 30 சதவீதம் வரை  நீக்கப்பட் டுள்ளன. உதாரணமாக சிதம்பரத்தில் ஒரு கடையில் 1,346 கார்டுகளில் 298ம், மற் றொரு கடையில் 1,468க்கு 455 கார்டுகளும் நீக்கப்பட் டுள்ளன. கடலூரில் 1,265க்கு 369ம், 1,550க்கு 337ம், நெல்லிக்குப்பத்தில் 1,483க்கு 210ம், காட்டுமன் னார்கோவிலில் 9,027க்கு 1,279 கார்டுகள் நீக்கப்பட் டுள்ளன. இந்த கார்டு நீக் கத்தில் பெரும்பாலும் உண்மையான கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வீடு தேடி வந்து விசாரித்த அதிகாரிகள் மேற்கண்ட முகவரியில் வசிப்பதாக அறிக்கை கொடுத்த பலரது ரேஷன் கார்டுகளும் நீக்கப் பட்டுள்ளது.
 
                       இவர்கள் நாள்தோறும் தாலுகா அலுவலகமும், வீடுமாக அலைந்து கொண்டிருப்பதே வாடிக் கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு தாலுகா அலுவலகம் சென்றாலும் முறையான பதில் கிடைக்காததால் ஆத்திரத்தில் தகராறில் ஈடுபடுகின்றனர். உண்மையான ரேஷன் கார்டுகளை உட்கார்ந்திருந்த இடத்தில் காலி செய் யும் அதிகாரிகள், போலி கார்டுகள் வைத்திருக்கும் வியாபாரிகள் மண்ணெண் ணெய்க்காகவும், அரிசிக்காகவும் அதிகாரிகளின் ஆசியுடன் ஒரே நபர் நூற் றுக்கும் மேற்பட்ட போலி கார்டுகள் வைத்திருப்பதை கண்டுகொள்ளாதது ஏனோ தெரியவில்லை.

                  முறையான ஆய்வு இல்லை வருவாய் துறையினர் ஒப்புதல்: ரேஷன் கார்டு நீக்கத்தில் சாமானிய மக்கள் மட்டுமின்றி பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குடியிருக்கும் தாலுகா அலுவலக பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொது வினியோக திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் ஒருவரின் கார்டும் நீக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் கடந்தாண்டு இவரது கார்டு நீக்கப் பட் டது. மறு விண்ணப்பம் கொடுத்து புதுப்பிக்கப் பட்டது. கடந்த மாதம் வரை பொருட்கள் வாங்கியுள்ள நிலையில் இவரது கார்டு இந்த மாதம் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை ஊழியர்களே முறையான ஆய்வு இல்லை என்பதை வேதனையுடன் ஒப்புக் கொள்கின்றனர்.

Read more »

நெல் விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

புவனகிரி: 

                          நெல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. 

இதுகுறித்து புவனகிரி விவசாய சங்க தலைவர் குமார், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: 

                      மாவட்டத்தில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கியும், புகையான் தாக்கியும் நெல் சாகுபடி பெரிதும் பாதித்து விவசாயிகள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். நெல் அறுவடை நேரத்தில் நெல் வியாபாரிகள், புரோக் கர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் ஒன்று கூடி நெல்லை குறைவான விலைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ நெல்லுக்கு அரசு 10 ரூபாய் நிர்ணயம் செய்தது. அப்பொழுது வியாபாரிகள் கிலோ நெல்லை 15 ரூபாய்க்கு வாங்கினர். ஆனால்  தற்போது அரசு 11 ரூபாய் விலை நிர்ணயித்துள்ள நிலையில், வியாபாரிகள் 12.50 ரூபாயிற்கு வாங்க முடிவு செய்துள்ளனர். வெளிச் சந்தையில் அரிசி கிலோ 30 ரூபாயிலிருந்து 45 ரூபாய்வரை விற்கிறது. இந்நிலையில் வியாபாரிகள் விலையை குறைத்து வருவது வேதனையளிக்கிறது. விவசாயிகள் பாதிப்பு என்பது நாட்டின் பாதிப்பாகும். ஆகவே, நெல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  

Read more »

சிதம்பரத்தில் உலக சைவ பேரவை மாநாடு நாளை துவக்கம்; 13 நாட்டினர் பங்கேற்பு

சிதம்பரம்:

                     சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது; 13 நாடுகளில் இருந்து சைவ சான்றோர் 200 பேர் பங்கேற்கின்றனர். தமிழர்கள், சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமயத்தின் தொன்மை, பெருமைகள், உலகில் உள்ள அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக உலக சைவப் பேரவை அமைப்பு, லண்டனில் சிவநந்தியடிகள் என்பவரால் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவை மாநாட்டை, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தி வருகிறது.

                        லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா, மொரீசியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறாவது மாநாடு, தமிழகத்தில் தஞ்சை பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக, தமிழகத்தில் சிதம்பரத்தில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி அரங்கில், மாநாடு நாளை துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் வெளிநாடு களில் உள்ள திருமுறை, சைவ சித்தாந்த குழுக்கள், ஆதீனங்கள், சிவநெறி சிந்தனையாளர்கள், அறிஞர்கள் என 1,500 பேர் பங்கேற்கின்றனர்; 13 நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்கின்றனர்.  மாநாட்டில், சைவம் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள் நடக் கின்றன.

Read more »

கைலாயம் செல்பவர்களுக்கு நிதியுதவி வேண்டும் : சிதம்பரத்தில் மடாதிபதிகள் அரசுக்கு கோரிக்கை

சிதம்பரம்:

                 "ஹஜ்' யாத்திரை செல்பவர்களுக்கு வழங்குவதுபோல் கைலாய யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என மடாதிபதிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 
சிதம்பரம் உலக சைவ மாநாட்டு ஏற்பாட்டிற்கு வந்துள்ள பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆகியோர் கூறியதாவது: 

                       சைவ சமய தொன்மை, பெருமைகளை யாவரும் உணர வேண்டும் என்பதற்காகவும், சைவ சமய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உலக சைவ பேரவை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களுக்கு சைவம் பற்றிய புத்துணர்ச்சியும், சமய கருத்துக்களை பரிமாற வாய்ப்பு ஏற்படும். திருமுறைகள் கண்டெடுத்த சிதம்பரத்தில் மாநாடு நடத்துவது சிறப்பு. கோவிலுக்கு செல்வது மட்டும் போதாது; சைவ சமய தத்துவங்களை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் மொழி தெரியாதவர்கள் கூட திருமந்திரத்தை படிக்க விரும்புகின்றனர். அதையொட்டி திருமந்திரத்தில் 300 பாடல்கள் அடங்கிய 10 பகுதிகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கடந்த 17ம் தேதி சென்னை யில் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு வக்பு வாரியம் இருப்பதுபோன்று, இந்து கோவில்களை துறவிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நிர்வகிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் "ஹஜ்' யாத்திரை செல்வதற்கு நிதியுதவி வழங்க ஆண்டுக்கு 230 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. அதே போன்று இந்துக்கள் கைலாயம் செல்வதற்கும் நிதியுதவி வழங்க வேண்டும். சீன நாட்டின் கெடுபிடியால் ஒவ் வொருவருக்கும் ஒரு லட்சம் வரை செலவாகிறது. எனவே அரசு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களில்  கைலாய யாத்திரை செல்பவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதை அனைத்து மாநிலத்திலும் பின்பற்றி வழங்க வேண்டும்.
 
                        இன்றைய சூழ்நிலையில் மதமாற்றம் அதிக அளவில் நடந்து வருகிறது. அதை தடுக்க ஆதினங்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் விளைவாக ஏற்கனவே மதமாற்றம் செய்யப்பட்ட 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி வந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமான இந்துக்கள் 40 சதவீதமாக குறைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் 2050ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மை சமுதாயமாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப் பட வேண்டும். இவ்வாறு ஆதினங்கள் கூறினர்.

Read more »

குமரப்பரெட்டிச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி.,யிடம் மனு

கடலூர்: 

                        குமரப்பரெட்டிச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி., யிடம் மனு கொடுத்துள் ளனர். கடலூர் அடுத்த குமரப்பரெட்டிச்சாவடி கிராமத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த சிலர் தி.மு.க., வில் சேர்ந்தனர். இதனை தொடர்ந்து இரு கட்சியினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சம் பத் தலைமையில் எஸ்.பி.,யை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவில், எங்கள் கிராமத்தில் 70 குடும்பங்கள் உள்ளன. செல்லஞ்சேரியைச் சேர்ந்த சுரேஷ் மற் றும் குமரப்பரெட்டிச்சாவடியைச் சேர்ந்த ராமலிங்கம், உலக ரட்சகன் உள் ளிட்ட 7 பேர் எங்கள் ஊரில் உள்ள வைக்கோள் போர் மற்றும் மாட்டுகொட்டகைகளை அடிக்கடி கொளுத்தி வருகின்றனர். இதுகுறித்து நாங்கள் புகார் செய்தால், ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக போலீசாசர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் எனவே எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

Read more »

மக்கள் நலப் பணியாளர் சங்க சிறப்பு கூட்டம்

சிதம்பரம்: 

                  மக்கள் நலப்பணியா ளர்கள் சங்க மாவட்ட சிறப்புக் கூட்டம்  ஆவினங்குடி அரசு பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி வரவேற்றார். சுப்ரமணியன், மணி, முருகன் முன் னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், வட்ட செயலாளர் அன்பழகன், ராஜவேல், முத்தமிழரசன், தில்லைசேகர், பன்னீர்செல்வம், வேல் முருகன்,  செயலாளர் சிவநேசன் பேசினர். இம்மாத இறுதியில் மாவட்ட மாநாடு நடத்துவது, 5ம் தேதிக்குள் சம் பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                         உத்தர பிரதேசத்தில் அரசு பணியாளர்களை போலீசார் தாக்கியதை கண்டித்து கடலூரில் தமிழ் நாடு அரசு பணியாளர் சங் கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

மக்களை அச்சுறுத்திய குரங்குகள் காப்பு காட்டில் விடப்பட்டது

ராமநத்தம்: 

                      ராமநத்தத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். ராமநத்தம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக சுற்றித் திரிந்துவந்தன. இவைகள் அவ்வப்போது வீடுகளில் புகுந்து வீட்டு உபயோக பொருட்கள், சமையல் பொருட்கள், உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்தன. குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் துரைசாமிக்கு புகார் அனுப்பினர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் வனசரக அலுவலர் அருளானந்தமூர்த்தி தலைமையில் தொழுதூர் பிரிவு வனவர் ஏகாம்பரம், வன காப்பாளர் சக்கரவர்த்தி, வன காவலர் தில்லைகோவிந்தன், கோட்ட காவலர்கள் பழனிவேல், ஆறுமுகம் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் சுற்றி திரிந்த 23 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் அதனை நயினார்பாளையம் காப்பு காட்டில் விட்டனர்.

Read more »

குறிஞ்சிப்பாடியில் தி.மு.க., ஊர்வலம்

குறிஞ்சிப்பாடி: 

                     குறிஞ்சிப்பாடி ஒன் றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் ஊர்வலம் நடந்தது. குறிஞ்சிப்பாடி காந்தி சிலையில் இருந்து ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் முன் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் வெங்கடேச பெருமாள், ராமலிங்கம், சேர்மன் அர்ச்சுனன், விடுதலை சேகர் பங்கேற்றனர்.

Read more »

அண்ணாதுரை நினைவு நாள்

நெல்லிக்குப்பம்: 

                  நெல்லிக்குப்பம் நகர தி.மு.க., சார்பில் அண் ணாதுரை நினைவு நாள்  அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர் அண்ணாதுரை படத்திற்கு நகர தலைவர் முகமது அனிப் மாலை அணிவித்தார். மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் பழனிசாமி, ஜெயசீலன், தனகோடி, இளைஞரணி பன் னீர்செல்வம், பார்த்தசாரதி, குணசேகரன் கலந்து கொண்டனர்.
 
                   அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சம் பத் அண்ணாதுரை படத் திற்கு மாலை அணிவித் தார். நகர செயலாளர் சவுந்தர், பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், நகர தலைவர் மனோகர், ரங்கராஜன், சாந்தி பங்கேற்றனர். ஸ்ரீமுஷ்ணம் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு நாள் அனுஷ் டிக்கப்பட்டது.
 
                        தி.மு.க., நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பூவராகசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர் சிவசண்முகம், இளைஞரணி செல்வக்குமார் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, நகர செயலாளர் கேசவன், நகர தலைவர் சின்னப்பன், பொரு ளாளர் தியாகராஜன் பங்கேற்றனர்.

Read more »

வன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் : பணியாளர் கூட்டுறவு சங்கம் முடிவு

கடலூர்:  

                        தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்களின் கூட்டமைப்பின்  மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பரமாத்மா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மோகன்குமார், மண்டலத் தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் காந்தி, அரிதாஸ், இணை செயலாளர்கள் ஜெயந்தி, மகளிரணி செயலாளர் மோகன், தணிக்கையாளர், கருணாநிதி, வேல்முருகன், மதுரை, சங்கர், சாந்தி பங்கேற்றனர். கூட்டத்தில்,  பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் தமிழக அரசின் 6வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதியத்தை மாற்றி ஊதிய ஆணை வழங்கக் கோரி முதல் கட்டமாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது, 2ம் கட்டமாக 15ம் தேதி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, 3ம் கட்டமாக 22ம் தேதி சென்னை அரசு தலைமை பொது மருத்துவமனை எதிரில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டது. கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

Read more »

டி.வி.ஆர்., கல்லூரியில் இலக்கிய மன்ற விழா

கடலூர்: 

                   புதுச்சேரி மதிகிருஷ்ணாபுரம் டி.வி.ஆர்., கல்வியியல் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. கல்லூரி தாளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். மாணவி மதினா வரவேற்றார். கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்ரமணியன், கல்லூரி முதல்வர் அம்ரோஸ், துணை முதல்வர் ஆரோக்கியம், பேராசிரியர்கள் செல்வநாதன், கருணாகரன், முத் துக்குமார், சாமுண் டீஸ்வரி, பத்மாவதி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி கலைவாணி நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் அண்ணாதுரை நினைவு நாள் : தி.மு.க.,- அ.தி.மு.க., மாலை அணிவிப்பு

கடலூர்: 

                          கடலூரில் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி சிலைக்கு  தி.மு.க.,-அ.தி.மு.க.,மற்றும் ம.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடலூரில் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் ஊர்வலமாக சென்று மஞ்சக் குப்பம் மணி கூண்டு அருகே உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வன்னியர்பாளையம், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்தனர், நிகழ்ச்சியில் முன்னாள் எம். எல்.ஏ., புகழேந்தி, சேர் மன் தங்கராசு, முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், அவைத்தலைவர் நாராயணன், துணை செயலாளர் பூங்காவனம், இளைஞரணி ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ஆதிபெருமாள், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

                       அ.தி.மு.க.: மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் கட்சியினர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமரன், அவைத் தலைவர் அருணாசலம், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் சுப்ரமணி, மீனவரணி செயலாளர் தங்கமணி, துணை செயலாளர்கள் முருகுமணி, தவமணி, வக்கீல் அணி ரவீந்திரன், மருத்துவரணி சீனுவாசராஜா, ஒன்றிய செயலாளர் பழனிசாமி, இளைஞரணி தலைவர் மாதவன்  பங்கேற்றனர்.

                 ம.தி.மு.க.,: மாவட்ட செயலாளர் பத்மநாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் வேலு, முன்னாள் நகர செயலாளர் செல்வம், வக்கீல் மன்றவாணன் பங்கேற்றனர்.   

Read more »

மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் இருவர் மாற்றம்

கடலூர்: 
        
                      மாவட்டத்தில் இரு சப் இன்ஸ்பெக்டர் களை இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வடலூருக்கும், அங்கு பணியாற்றி வந்த பிரேமா திட்டக்குடிக்கும் மாற்றம் செய்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Read more »

திட்டக்குடிக்கு புதிய செயல் அலுவலர் : பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தகவல்

திட்டக்குடி: 

                           திட்டக்குடி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படுவார் என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தெரிவித்தார். திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு செயல் அலுவலர் வராததை கண் டித்து கவுன்சிலர் அலெக் சாண்டர் மற்றும் பொதுமக்கள் கடந்த 2ம் தேதி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து நேற்று மாலை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சடையப்பன் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில் அலுவலக பதிவேடுகள், கோப்புகளை சரிபார்த்தார்.
 
                         தொடர்ந்து கொசு மருந்து, பினாயில், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை தேவையான அளவிற்கு வாங்கி இருப்பு வைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் சேர்மன் மன்னன், துணை சேர்மன் கமலி மற்றும் கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தற்போது பணியில் உள்ள செயல் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு பதிலாக, புதிய செயல் அலுவலர் இரண்டு நாட்களுக்குள் நியமிக்கப்படுவார் என தெரிவித்தார். இதேபோல் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வில், சேர்மன் அமுதலட்சுமி, துணை சேர்மன் காதர், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Read more »

சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் குழுவினருக்கு விருது வழங்கும் விழா

கடலூர்: 

                         கடலூரில் சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் குழு தலைவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கடலூர் எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஊர்க்காவல் படை விழுப்புரம் சரக தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார தளபதி கேதார்நாதன் முன்னிலை வகித்தார். துணை வட்டார தளபதி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சிறந்த ஊர்க்காவல் படை வீரர்கள் 6 பேருக்கும், குழு தலைவர்கள் 6 பேருக்கும் விருது வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை குடும்பத்தில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2வில் மாவட்டத்தில் முதல் மூன்று  இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் கோட்ட தளபதி கோவிந்தராஜ், ஊர்க்காவல் படை தளபதிகள் இருசப்பன், ஜெயச்சந்திரன், தண்டபாணி, அந்தோணிசாமி, தில்லை சேரன், பூங்கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரத்தில் அண்ணாதுரை நினைவு தினம்

சிதம்பரம்: 

                    சிதம்பரத்தில் நகர தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கட்சியினர் மேல வீதியில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, ஜேம்ஸ் விஜயராகவன்,  நகர தலைவர் ஆறுமுகம், நகர இளைஞரணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர், கவுன்சிலர்கள் வெங்கடேசன், மணிகண்டன் மற்றும் மாயா மச்சேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க.,: நகர செயலாளர் சுந்தர் தலைமையில் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக சென்று வண்டிகேட் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், உமாதேவி,  தேன்மொழி, தொகுதி செயலாளர் அருள், குமார், பாண்டியன் பங்கேற்றனர். ம.தி.மு.க.,: நகர அலுவலகத்தில் உள்ள அண்ணாதுரை படத்திற்கு நகர செயலாளர் சீனுவாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட தலைவர் பெருமாள், ரத்தின சொக்கலிங்கம், கண்ணன், ஜெயபால், சவுந்திரராஜன், குமார், கோபால் பங்கேற்றனர்.

Read more »

டயர்களை கொளுத்துவதால் கெடிலம் ஆறு மாசுபடுகிறது

பண்ருட்டி: 

                       பண்ருட்டி கெடிலம் ஆற்றில் டயர்களை கொளுத்தி மாசு ஏற்படுத்தி வருவதை தடுத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நகராட்சி சார்பில்  கடந்த 3ஆண்டுகளாக குப்பையை கொட்டி தீயிட்டு கொளுத்தி மாசு ஏற்படுத்தி வந்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி கடந்த 2008ம்ஆண்டு ஆற்றில் குப் பைகளை கொட்டி மாசு ஏற்படுத்தக்கூடாது என கமிஷனரை எச்சரித்தார். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத நகராட்சி அதிகாரிகள் கடந்த 6 மாதங்களாக மீண்டும் கெடிலம் ஆற்றில் குப்பையை கொட்டி மணல் பகுதிகள் கழிவுநீர் நிறைந்த மண்சகதியாக மாற்றியுள்ளனர். கடந்த 18ம் தேதி நடந்த ஆற்றுத் திருவிழாவின் போது குப் பைகளை மறைத்து மணல் அடித்தனர். அதனையும் மீறி துர்நாற்றம் வீசியது. தற்போது இதே ஆற்றில் பனிக்கன்குப்பம் ஊராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப் பையை கொட்டி வருகிறது. சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே குடிநீர் ஆதாரமான ஆற்றை மாசுபடுத்தி வருவதை தொடர்ந்து தற்போது தனி நபர்களும் ஆற்றை மாசுபடுத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம்  இரவு கெடிலம் ஆற்றில் 200க்கும் மேற்பட்ட டயர் களை கொளுத்தி தீயிட்டு அதன் கம்பிகளை ஒரு லாரியில் ஏற்றி சென்றனர். டயர்கள் எரிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அன்று இரவு முழுவதும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கெடிலம் ஆற்றை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

காஸ் சிலிண்டர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

பண்ருட்டி: 

                           காஸ் சிலிண்டர் வழங்காததைக் கண்டித்து  பண்ருட்டியில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி பகுதியில் உள்ள காஸ் இணைப்புதாரர்களுக்கு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஜெயா கேஸ் ஏஜென்சி மூலம் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. காஸ் தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு மாதத்திற்கு முன் பதிவு செய்தவர்களுக்கு கூட சிலிண்டர் வழங்கப் படவில்லை. கிராம பகுதிகளுக்கும் காஸ் சிலிண்டர் வினியோகம் தடைபட்டது. இந்நிலையில் நேற்று காஸ் லோடு வருவதாக கூறப்பட்டதை தொடர்ந்து நுகர்வோர்கள் 300க்கும் மேற்பட்டோர் காலி சிலிண்டர்களுடன் திருவதிகை சாலையில் உள்ள காஸ் குடோன்  முன் காலையில் இருந்து நீண்டி வரிசையில் காத்திருந்தனர். ஆனால் சிலருக்கு மட்டும் காஸ் சிலிண்டர் வழங்கப்பட்டது. சற்று நேரத்தில் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக கூறபட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் பண்ருட்டி-திருவதிகை சாலையில்  மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்ததை ஏற்று காலை 10.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. காஸ் சிலிண்டர் வினியோகம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர் ரங்கநாதன் விசாரணை மேற் கொண்டார்.

Read more »

என்.எல்.சி., சுரங்கத்தில் திருடிய மூவர் கைது

 நெய்வேலி: 

                        என்.எல்.சி., சுரங்கத் தில் திருடிய மூவரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். என்.எல்.சி., இரண் டாம் சுரங்கத்தின் தெற்கு பகுதி மேல் மண் நீக்க பகுதியில் பல்வேறு ராட்சத இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளை தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். நேற்று அந்த பகுதியில் இருந்த 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர் மற்றும் கப்ளர்களை திருடிச் சென்ற கம்மாபுரம் சுப்ரமணியன் (43), கார்த்திக் (25), மகேந்திரன் (26) ஆகியோரை மத்திய தொழிலக பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் வர்மா தலைமையிலான போலீசார் பிடித்து மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர்.

Read more »

குடிநீர் உற்பத்தியாளர்கள் பயிற்சி முகாம்

கடலூர்: 

                           கடலூரில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் "பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. சங்க துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். விஜயகுமார் வரவேற் றார். முரளி முன்னிலை வகித்தார். பி.ஐ.எஸ்., துணை இயக்குனர் அன் பரசு துவக்கி வைத்தார். சங்க தலைவர் ராஜாராம், பொதுச் செயலாளர் சேக்ஷ்பியர், வினாயகமூர்த்தி, கணேசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுச்சேரி, அரியலூர் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண் டனர். இதில் உற்பத்தியாளர்களின் பொறுப்பு, சுகாதார வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக் கப்பட்டது.

Read more »

கழிவறை பூட்டிக் கிடப்பதால் கோவில் வளாகம் வீணாகிறது

கடலூர்: 

                    கடலூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே நகராட்சி கழிவறை வளாகம் மூன்றாண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், கோவில் வளாகம் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக் தர்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் குளக்கரை எதிரில் கழிவறை மற்றும் குளியலறை கட்டி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த சுகாதார வளாகம் கடந்த மூன்றாண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டி கிடைக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக முதியோர் மற்றும் சிறுவர்கள் கோவில் சுற்றுப் பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. இது பக்தர்களை முகம் சுளிக்கச் செய்கிறது. பாடல் பெற்ற பாடலீஸ் வரர் கோவிலின் சிறப்பை காத்திடவும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பூட்டிக் கிடக்கும் கழிவறையை திறந்து பராமரிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

ஆற்று பாலத்தில் தடுப்பு கட்டை இல்லை : ஏரிப்பாளையத்தில் விபத்து அபாயம்

பண்ருட்டி: 

                          பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம்  கெடிலம் ஆற்று பாலத்தில் தடுப்பு கட்டைகள் இல்லாததால்  விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த ஏரிப்பாளையம் - செம்மேடு செல்லும் கெடிலம் ஆற்று பாலத்தின் தடுப்பு கட்டைகள்  கடந்த மூன் றாண்டுகளாக தொடர்ந்து இடிந்து சேதமாகி வருகிறது. ஆனால் இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் இரவு நேரத்தில் எதிரில் வாகனங்கள் அதிக ஒளி ஏற்படுத்தும்போது பாலத் தின் தடுப்பு சுவர் கூட இருப்பது தெரியாமல் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து செம் மேடு அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலதடவை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் பாலத்தின் தடுப்பு கட்டை அமைத்து வர்ணம் பூசி பராமரிக்காமல் அலட்சியம் செய்து வருகின்றனர். பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக பாலத்தில் உடைந்துள்ள தடுப்புக் கட்டைகள் அமைத்திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

புதுச்சேரி வங்கி அதிகாரி உடல் கடலூரில் கரை ஒதுங்கியது

கடலூர்: 

                        புதுச்சேரியில் காணாமல் போன வங்கி அதிகாரியின் உடல் கடலூர் கடற்கரையில் நேற்று ஒதுங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26). ஏலம்பம் பாரதி கிராம வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி அலுவலத்திலிருந்து டெபாசிட்தாரர்களை கேன்வாஸ் செய்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
 
                             வங்கி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் அவரது தம்பி அரவிந்தராஜ் கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஆனந்தராஜை தேடிவந்தனர்.  இந்நிலையில் நேற்று மாலை கடலூர் சோனங்குப்பம் கடற்கரையில் ரத்த காயங்களுடன் ஆனந்தராஜ் உடல் கரை ஒதுங்கியது. கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா என்பது குறித்து துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஊராட்சி தலைவரின் கணவர் கூட்டம் நடத்த முயற்சி : துணைத் தலைவர் உட்பட 7 பேர் வெளிநடப்பு

பரங்கிப்பேட்டை: 

                          சிதம்பரம் அருகே ஊராட்சித் தலை வரின் கணவர், கூட்டம் நடத்த முயன்றதைக் கண்டித்து துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏழு பேர் வெளிநடப்பு செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த மஞ்சக்குழி ஊராட்சித் தலைவர் ரபிக்குல் தர்ஜா. இவர், தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து ஊராட்சி கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் அவரது கணவர் அப்துல் ரஹீமே பங்கேற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாதாந்திர கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. துணைத் தலைவர் உட்பட ஒன்பது வார்டு உறுப்பினர்களும் காத்திருந்தனர். பகல் 12 மணிக்கு ஊராட்சித் தலைவரின் கணவர் அப்துல் ரஹீம், கூட்டத்தை நடத்த முயன்றார். அப்போது துணைத் தலைவர் முத்து ஞானசேகரன் உட்பட ஏழு வார்டு உறுப்பினர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஊராட்சி கூட்டங்கள், பொது விழாக்களில் தலைவர் பங்கேற்பதில்லை. நான்கு ஆண்டுகளில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை அனைத்து வார்டு உறுப்பினர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் காண்பிக்க வேண்டும். தினமும் ஊராட்சி அலுவலகத்தை திறக்க வேண்டும். ஆறு மாதமாக ஊராட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை எனக் கேட்டு பிரச்னை செய்தனர். அதனால், கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து  அனைவரும், தலைவர் வந்தால் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தனர். ஒரு பெண் உறுப்பினர் உட்பட இருவர் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior