உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்கள் : விபரம்

கடலூர் :

         கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை அந்தந்த பகுதிகளில் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 

            கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களான கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு பெரியார் கலைக் கல்லூரி, அண்ணாகிராமம் கோழிப்பாக்கம் அரசு பள்ளி, பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக், குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமராட்சி, சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

            கீரப்பாளையம், சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் பள்ளி, மேல்புவனகிரி சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் பள்ளி, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கம்மாபுரம் என்.எல்.சி., ஆண்கள் பள்ளி, நல்லூர் பெண்ணாடம் அரசு ஆண்கள் பள்ளி, மங்களூர் திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ளி ஆகிய 13 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். கடலூர் நகராட்சிக்கு கடலூர் டவுன் ஹால், நெல்லிக்குப்பம் டேனிஷ் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் நகராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். 

             பேரூராட்சிகளான அண்ணாமலைநகர் திருவேட்களம் ராணி சீதை ஆச்சி பள்ளி, புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டைக்கு புவனகிரி அரசு ஆண்கள் பள்ளி, கெங்கைகொண்டான், மங்கலம்பேட்டைக்கு மங்கலம்பேட்டை பள்ளி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டைக்கு காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுலம் குருகுல மேல்நிலைப் பள்ளி, கிள்ளைக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி, வடலூருக்கு வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி, மேல்பட்டாம்பாக்கம் மற்றும் தொரப்பாடிக்கு புதுப்பேட்டை தொரப்பாடி பேரூர் அரசு பள்ளி, பெண்ணாடம், திட்டக்குடிக்கு திட்டக்குடி அரசு பள்ளி, சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிகளுக்கு சேத்தியாதோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைபள்ளி ஆகிய 16 பேரூராட்சிகளுக்கு 9 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
 

                   இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



















Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6492 பதவிகளுக்கு 24799 பேர் வேட்பு மனு

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பிற்கான 6492 பதவியிடங்களுக்கு 24799 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

            தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி சேர்மன், நகராட்சி உறுப்பினர், டவுன் பஞ்சாயத்து சேர்மன், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய 6492 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதையொட்டி ஏற்கனவே பல்வேறு பதவியிடங்களுக்காக 12661 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

மனு தாக்கல் கடைசி நாளான நேற்று 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 199 பேரும், 
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 1370 பேரும், 
ஊராட்சி தலைவர் பதவிக்கு 1821 பேரும், 
ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7118 பேரும், 
நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 783 பேரும், 
நகராட்சி தலைவர் பதவிக்கு 42 பேரும், 
டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு 111 பேரும்,
டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 694 பேரும் 

             ஆக மொத்தம் ஒரே நாளில் 12138 பேர் மனுத்தாக்கல் செய்தனர். கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6492 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 24799 பேர் மனு தாக்கல் செய்தனர்.










Read more »

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் பட்டய வகுப்புகள்

காரைக்குடி : 

            காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் தொடங்கப்படும் என அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சேது. சுடலைமுத்து பேசினார். உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு காரைக்குடி அழகப்பா பல்கலைகழக பன்னாட்டு வர்த்தகம் மற்றும் வணிகவியல் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் கருத்தரங்கு கொண்டாடப்பட்டது.

            காரைக்குடி ஹெரிடேஜ், ரோட்டரி சங்கம் மற்றும் கானாடுகாத்தான் விசாலம் ஹெரிடேஜ் ஆகியவை இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் அழகப்பா பல்கலைகழக மேலாண்மை துறையின் முதன்மையர் பேராசிரியர் செல்வம் வரவேற்று பேசினார். காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கானாடுகாத்தான் விசாலம் ஹெரிடேஜ் நிறுவன மேலாளர் ஜான்பீட்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சேது.சுடலை முத்து கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியது: 
 
          பட்டய வகுப்புகள் தொடங்கப்படும் 2010ம் ஆண்டில் இந்தியாவிற்கு மொத்தம் 17.9 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் சுற்றுலா வந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். நம் நாட்டில் ஆந்திரா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

              தமிழ்நாட்டில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 34 ஆயிரம் கோவில்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் அதிக அளவில் உள்ளன. வரும் கல்வியாண்டில் அழகப்பா பல்கலைகழகத்தில் சுற்றுலா மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புகள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பு இந்த பாடத்திட்டத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பாராம்பரிய சுற்றுலா மையங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கும். இந்த பாடங்களினால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் அழகப்பா கல்லூரி வளர்ச்சி குழுமத்தின் தலைவர் முதன்மையர் குருமூர்த்தி நன்றி கூறினார். கருத்தரங்கில் மேலாண்மைத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.    
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், செப்டம்பர் 29, 2011

கடலூரில் ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி இளைஞர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் : 

           கடலூரில் ஜப்பானிய காடை வளர்ப்பு பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது

இது குறித்து கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழத்தின் தொலை நிலைக்கல்வி இயக்ககத்தின் சுய வேலை வாய்ப்புக்கான பயிற்சி ஜப்பானிய காடை வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு மாத காலத்திற்கு செம்மண்டலம், வரதராஜன் நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது.

              இதற்கு பயிற்சி கட்டணம் 1,000 ரூபாயும், தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்கவேண்டும். 2011ம் ஆண்டு செப்டம்பர் 1ம்தேதி அன்று 18 வயது நிறைவடைந்திருக்கவேண்டும்.பயிற்சியில் பங்குபெற விரும்புவோர் தங்கள் சொந்த செலவில் உணவு மற்றும் உறைவிட வசதியை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் பயிற்சிக்கான விண்ணப்பம் இலவசமாக வரும் 13ம்தேதி வரை 

                         செம்மண்டலம், வரதராஜன் நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். முதலில் வரும் 10 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.










Read more »

சிதம்பரத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவரது மகன் சாந்தினிவாசன் (வயது 32).இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.

             இதே போல் கனகசபை நகரை சேர்ந்த விஜயன் மகன் அரவிந்த் ராஜ் (24) மீதும் அண்ணாமலைநகர் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர்கள் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு துரை மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவல னுக்கு பரிந்துரை செய்தார்.

           அதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட கலெக்டர் அமுதவல்லியிடம் பரிந்துரை செய்தார். அதன்படி தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தர விட்டார். அதன்படி அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கி யராஜ், சாந்தினி வாசன், அரவிந்த்ராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.
 

 
 
 

Read more »

புதன், செப்டம்பர் 28, 2011

தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை

   

          வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.  

                 2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளில் இந்த கிரேடு முறை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என ஒரு கல்வியாண்டு மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:  

            பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி, அவர்களது சிந்தனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது.  அந்தக் குழு, தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்  துள்ளது. 

 பரிந்துரை விவரம்: 

             கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும் இத்தகைய மதிப்பீட்டு முறையை கட்டாயமாக்கியுள்ளது.  இப்போதுள்ள தேர்வுமுறை, மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே உள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மாணவர்கள் கணித்துவிடக் கூடிய வகையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் புத்தகங்களைத் தாண்டி வெளியே படிக்க முடியாது.  பொதுத்தேர்வுகள் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. தேர்வில் தோல்வி பயம் பல தவறான முடிவுகளுக்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.  சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறை ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.  

இரண்டு வகையான மதிப்பீடு:

           கல்வியாண்டுக்குப் பதில் மூன்று பருவ முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த வேண்டும். உடனடி மதிப்பீடு, பருவ மதிப்பீடு என இரண்டு மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  ஒவ்வொரு பருவத்துக்கும் உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்ணும், பருவ இறுதியில் மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்பட வேண்டும்.  பாடல்கள், விளையாட்டு, நாடகம், கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், பருவ இறுதியில் நடைபெறும் தேர்வு பருவ இறுதி மதிப்பீட்டிலும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். 

              இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடுகள் வழங்கப்படும். ஏ1, ஏ2, பி1, பி2, சி1, சி2, டி, இ1, இ2 போன்ற கிரேடுகள் உள்ளன. ஒவ்வொரு கிரேடுக்கும் கிரேடு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன.  இதில் இ1, இ2 கிரேடுகளைத் தவிர அனைத்து கிரேடுகளுக்கும் கிரேடு புள்ளிகள் வழங்கப்படும்.  மூன்று பருவத்தின் முடிவில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கிரேடுகள் அடிப்படையில் ஆண்டு இறுதியில் மாணவர்களுக்கு கிரேடு மட்டும் வழங்கப்பட வேண்டும். 

              ஒரு பருவத்தில் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் பாடங்கள், அடுத்த பருவத் தேர்வுக்கு வராது. இதனால், ஆண்டுத் தேர்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடும்.  ஒவ்வொரு ஆண்டிலும் மூன்று முறை மாணவர்களின் திறன் மதிப்பிடப்படும். இதுதொடர்பான அறிக்கை ஆண்டு முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும்.  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  கல்லூரிகளில் பின்பற்றப்படும் செமஸ்டர் முறைக்கு எளிமையாக மாறும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்தலாம்.  

                 பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பரிந்துரைகளை ஆராய்ந்தபிறகு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை அடுத்தக் கல்வியாண்டில் இருந்தும், 9, 10 வகுப்பு வரை 2013-14 கல்வியாண்டிலிருந்தும் அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது.  முப்பருவ முறையும் அடுத்தக் கல்வியாண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














Read more »

ஆண்மைக் குறைவைப் போக்குவதற்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள "ஷாக் வேவ் தெரப்பி' கருவி


"ஷாக்வேவ் தெரப்பி' கருவி குறித்து விளக்குகிறார் டாக்டர் டி.காமராஜ். உடன் (இடமிருந்து) "மெடிஸ்பெக்' நிறுவன நிர்வாக இயக்குநர் எஸ்.ரகோத்தமன், மருத்துவமனை
   
               ஆண்மைக் குறைவைப் போக்குவதற்காக ரூ.25 லட்சம் மதிப்புள்ள "ஷாக் வேவ் தெரப்பி' கருவியை சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. 
 
 இது தொடர்பாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.காமராஜ்  செவ்வாய்க்கிழமை கூறியதாவது:  
 
            ஆண்மைக் குறைவு காரணமாக 30 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆணுறுப்பு விறைப்புத் தன்மை இல்லாமல் போகும் நிலையில் இதுவரை மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக "எரெக்டைல் டிஸ்ஃபக்ஷன் ஷாக்வேவ் தெரப்பி' என்ற ஒலி அதிர்வு கருவியை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்துள்ளது.  வலி மற்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்தக் கருவி மூலம் ஆண் உறுப்பின் பல்வேறு இடங்களில் ஒலி அதிர்வு ஏற்படுத்தப்படும். 
 
              ஆண்மைக் குறைவு உள்ளவருக்கு வாரத்துக்கு இரண்டு முறை வீதம் 12 தடவை சிகிச்சை அளிக்கப்படும். இந்த ஒலி அதிர்வு சிகிச்சை காரணமாக ஆண் உறுப்பில் புதிய ரத்தக் குழாய்கள் தோன்றி ரத்த ஓட்டம் மேம்படும். இதனால் தாம்பத்ய உறவின்போது ஆணுறுப்பு விறைப்புத் தன்மை அதிகரிக்கும். குழந்தைப் பேறின்மை சிகிச்சைக்கு இந்தக் கருவி பெரிதும் உதவியாக இருக்கும்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கருவியை ஏற்கெனவே 21 நாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கருவியை ஆண்மைக் குறைவு உள்ளவருக்கு 6 முறை பயன்படுத்திய உடனேயே சிகிச்சையில் முன்னேற்றம் தெரியும் என்றார் டாக்டர் காமராஜ்.
 
 
 
 

Read more »

நாசா-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டம்: தமிழகத்திலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் சென்றனர்


சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், "நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ் அமெரிக்கா செல்ல உள்ள மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர் 
 
 
               நாசா'-வுக்கு கல்விச் சுற்றுலா திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.  முன்னதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்னிந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் ஜெனீஃபர் மெக்கின்டயர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.  இந்த கல்விச் சுற்றுலாவுக்கு சென்னையைச் சேர்ந்த உலக பயணக் குழு (டபிள்யு.டி.சி.) ஏற்பாடு செய்து வருகிறது. 
 
               அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் இந்தச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.  இந்த சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள் ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும். இந்த மாணவர்கள் கென்னடி விண்வெளி மையத்தில் 4 நாள்கள் தங்க வைக்கப்படுவதோடு, யுனிவர்சல் ஸ்டூடியோ, மேஜிக் கிங்டம், வெள்ளை மாளிகை, அமெரிக்க நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடவும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். சுற்றுலா முடிந்து அவர்கள் 11-ம் நாள் இந்தியா திரும்புகின்றனர். 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியில் 27 ஆயிரம் பேர்

கடலூர்:

             உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் படுவார்கள். தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரிக்கை விடுத்தார். 

ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்கப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் பணியில் 27 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இப்பணிகளில் அனைத்துத் துறை அலுவலர்களையும் ஈடுபடுத்தி, நல்ல முறையில் தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையச் செயலர் அறிவுறுத்தி உள்ளார். அரசு அலுவலர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பணிகளை, முழுமையான ஈடுபாட்டுடன் கவனித்திட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்கள் போன்ற தேர்தல் பணிக்கு, அலுவலர்கள் நியமிக்கப்படும்போது, அப்பொறுப்புகளை தவிர்க்க முற்படுவோர், ஏற்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 புதிய வாக்காளர் பெயர்: 

             உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து, பெருமளவில் சந்தேகம் எழுப்பப் படுகின்றன. சட்டம் மற்றும் விதிகளின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கு, படிவம் தாக்கல் செய்த நாள் நீங்கலாக, 7 நாள்கள் அறிவிப்புக் காலஅவகாசம் கொடுக்கப்பட வேண்டும். மனுக்களைப் பரிசீலிக்க குறைந்தபட்சக் கால அவகாசமும் தேவைப்படும். 

             எனவே சமீபத்தில் பெயர்களைச் சேர்க்க, மனு அளித்தவர்களின் பெயர்களை, உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான 29-9-2011க்கு முன்னால் சட்டப்படி சேர்க்க இயலாது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தகுதிநாள் 1-1-2011 ஆகும். எனவே 1-1-2011க்குப் பிறகு 18 வயது நிறைவடையும் அனைவரும், 24-10-2011 அன்று தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போதுதான், பெயர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறு பெயர்கள் சேர்க்கப்படும் வாக்காளர் பட்டியல்கள் 5-1-2011 அன்றுதான் வெளியிடப்படும். எனவே தற்போது நடைபெறும் தொடர் திருத்தத்தில் அத்தகைய நபர்களின் பெயர்களைச் சேர்க்க இயலாது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.















Read more »

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் பட்டியல்

கடலூர்:

         கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சென்னையில் வெளியிட்டார்.

கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 29 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வார்டு வாரியான விவரம்:

1 - ராயல், 
2 - அம்பிகா சரவணன்,
3 - கருணாகரன், 
4 - ஷகிலா, 
5 - முத்துகுமரன், 
6 - கிருஷ்ணமூர்த்தி, 
7 - உமா மகேஸ்வரி, 
8 - இளவரசி, 
9 - லட்சுமி,
10 - அஞ்சுகம், 
11 - வைத்தியநாதன், 
12 - ராஜி என்கிற பெரிய நாகராஜ், 
13 - தென்னவன், 
14 - ஆறுமுகம், 
15 - விஜயா, 
16 - ஆறுமுகம்,
17 - ரவி, 
18 - அன்னசெல்வி, 
19 - முரளி,
20 - லூர்துசாமி, 
21 - மாலதி, 
22 - கணேசன், 
23 - ராஜா, 
24 - முகமது அய்யூப்,
25 - கதிர்வேல், 
26 - விஜயசம்பத் என்கிற திருஞானசம்பந்தம், 
27 - ஷீலா, 
28 - தேவி, 
29 - பாலமுருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.














Read more »

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் பட்டியல்

கடலூர்:

           உள்ளாட்சித் தேர்தலில் கடலூர்  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பெயர் விவரம் ஒன்றியம் மற்றும் வார்டு வாரியாக:

கடலூர் மாவட்டம்:

கடலூர்:

1-அழகானந்தம், 
2-மல்லிகா, 
3-தேவநாதன். 

அண்ணாகிராமம்: 

4-லோகநாயகி, 
5-கந்தன். 

பண்ருட்டி: 

6-தேவநாதன், 
7- பூங்கொடி, 
8- மாலா. 

குறிஞ்சிப்பாடி: 

9-பத்மபிரியா,
10- உமாதேவி, 
11-கண்ணப்பன். 

கம்மாபுரம்: 

12-கலியமூர்த்தி,
13-குமார். 

விருத்தாசலம்:

14-ரவி,
15-ராமதாஸ். 

நல்லூர்: 

16-தங்கராசன், 
17-முருகேசன்.

மங்களூர்: 

18-தென்னரசி, 
19-எழிலரசன். 

கீரப்பாளையம்: 

20-பிரபாகரன், 
21-கருப்பன். 

மேல்புவனகிரி: 

22-ராஜேஸ்வரி,
23-சங்கர். 

பரங்கிப்பேட்டை: 

24-சிங்காரவேலு, 
25-செல்வரங்கம். 

குமராட்சி: 

26-சரவணன், 
 27-உமா. 

காட்டுமன்னார்கோவில்:

28-ரேணுகா, 
 29-உதயகுமார்.






Read more »

Mental health programme to be extended to 6 more districts

            It has been proposed to extend the District Mental Health programme (DMHP) to cover six more districts in Tamil Nadu, taking the total number of districts thus served to 22.

             The new districts in the proposal are Coimbatore, Dindigul, Sivaganga, Pudukottai, Tuticorin and Villupuram. The State Nodal Officer of the DMHP C. Ramasubramaniam said that the decision to propose extension was taken in view of the success of the existing DMHP services in the other districts. Of the 16 projects already initiated, three (Madurai, Tiruchi, Ramanathapuram) had been completed, while they are ongoing in 13 (Theni, Kanyakumari, Erode, Dharmapuri, Tiruvallur, Cuddalore, Virudhunagar, Kancheepuram, Perambalur, Namakkal, Tiruvarur, Nagapattinam and Chennai) districts.

                  “When we say three projects have been completed, it means Central Government funding has ceased, and the State Government is ready to take over, or has already taken over the project,” Dr. Ramasubramaniam explained.

           “Even at the commencement of the project, the State provides an undertaking that at the end of the four-year term, it would adopt, and continue to fund the DMHP in that district.” Tiruchi has already been taken over, while the districts of Madurai and Ramanathapuram will soon come under the wings of the State's health care services. The idea is to cover the entire State under the DMHP, he added. The basic philosophy of the DMHP is to reach the unreached with mental health care. DMHP integrates mental health care with general health care by setting up a ten-bedded psychiatric care unit within the district government hospital.

          “Most mental illness problems begin as mild psychiatric disorders. At the beginning, they are also manifested as somatic (physical) complaints. Usually, these complaints include numbness, burning sensation, loss of appetite, and they go to the general physician,” Dr. Ramasubramaniam said. If this physician is trained to identify basic psychiatric symptoms, they can immediately start treatment. “The thing with disability caused by mental illness is that, if detected and treated early, the recovery can be nearly 100 per cent,” he added. Besides, locating the mental healthcare institution within a general health care institution contributes in no small measure to removing stigma.

        The Centre allocates a sum of Rs.89 lakh per district for four years, to be spent on awareness building, training medics, paramedics and non-medical personnel. Trained psychologists and psychiatric social workers will also be appointed. Some of the funds will also go into setting up the infrastructure. Tamil Nadu has also focussed on the rehabilitation aspect of people who have been cured, Dr. Ramasubramaniam explained. Relationships have been established with the poverty-alleviation oriented ‘Vaazhnthu Kattuvom' project of the State Government, and efforts are on to ensure some work under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme for those who have recovered.











Read more »

Neyveli Lignite Corporation pays Rs 361cr dividend to Coal Ministry

          State-owned Neyveli Lignite Corporation  (NLC) paid a dividend of Rs 361.02 crore to the Ministry of Coal for the 2010-11 fiscal. The dividend cheque was presented to Coal Minister Sriprakash Jaiswal by NLC Chairman and Managing Director AR Ansari, an official statement said.

           In the last fiscal, the PSU had declared a 23% dividend, amounting to Rs 448.47 crore, it said. "The shareholders of the company at the 55th Annual General Meeting held on September 12 have declared a dividend at the rate of 23 per cent for the financial year 2010-11. 

The total dividend payout... 

             amounts to Rs 448.47 crore," the statement said. NLC had reported nearly flat growth in profit to Rs 342.8 crore for the quarter ended June 30 from Rs 342.1 crore in the corresponding period of 2009-10. The company has four opencast lignite mines with a capacity of about 30.60 million tonne per annum, while it can produce about 2,740 MW of power from four power plants.











Read more »

Delay no reason to deny job on compassionate grounds: Madras High Court

              Noting that requests for appointment on compassionate grounds should not be rejected by the government for delays on the part of the beneficiary, the Madras high court has asked the labour department to appoint a woman candidate in a suitable vacancy within two months.

            Justice VDhanapalan, allowing the writ petition of R Sridevi, said: "There cannot be any reservation of vacancy till such time the petitioner becomes a major after a number of years. In the case on hand, since the sudden death of the government servant had left his family without any means of livelihood, I feel it justified that Sridevi can be accommodated in any suitable post as per her qualification, as against the post held by her father."

         Sridevi's father, T Ruthirapathi, was working as an assistant in the National Filaria Control Unit in Chidambaram in Cuddalore district, when he died while on a pilgrimage to Sabarimalai in January 1992. He left behind his wife Padmavathi and three daughters - Kalamathi (24), Sridevi (10) and Jayachitra (8) then.

              The family neither owned any property nor had other source of income. As the first daughter was already married, Padmavathi wrote to the authorities seeking compassionate ground appointment for Sridevi, as and when she became a major and obtained qualification. After Sridevi completed her SSLC in 1999, the first application was sent. Owing to delays besides a three-year ban on recruitment on compassionate grounds between 2003 and 2006, Sridevi did not get any job.

               In response to the present writ petition, the government said the purpose of compassionate appointment was to tide over immediate financial crisis. In the present case, the application has come seven years after the death of Ruthirapathy. Rejecting the submissions, Justice Dhanapalan said though it was true that the appointment was meant to tide over sudden indigent circumstances, it must be noted that Sridevi's application was sent immediately after her attaining majority.

            "Just because there is a delay in submitting the application, it cannot be said that the family of the deceased government servant has got over the indigent circumstances. In the given situation, it is very difficult for them to get two square meals a day. I am of the considered opinion that the family of the deceased government servant cannot be left in the lurch," Justice Dhanapalan said. 













Read more »

Shasun Pharmaceuticals expects to start operating Vizag plant from June


Mr S Abhaya Kumar , MD, Shasun Pharmaceuticals. — Bijoy Ghosh
Mr S Abhaya Kumar , MD, Shasun Pharmaceuticals.

                 Chennai-based Shasun Pharmaceuticals expects to start commercial production at its proposed plant in Vishakapatnam by June 2012.

         The plant has been long in the making and “the delay was because we were trying to consolidate operations at our plants in Puducherry and Cuddalore,” said Mr Abhaya Kumar, Managing Director, Shasun. Last year, Shasun's Puducherry plant witnessed a strike, while the Cuddalore plant faced closure for some time due to chemical leak.

Plant plan

          Shasun had in 2009 announced that it would set up the Vishakapatnam plant. The total outlay on the unit , located in an export-oriented special economic zone , is around Rs 100 crore. The Vizag plant will have an initial production capacity of 1,200 tonnes of bulk drugs a year . It will manufacture generic APIs (active pharmaceutical ingredients), particularly for the Japanese market. “The Japanese market is opening up in a big way. It is also the third-largest pharma consuming market globally,” said Mr Kumar. Shasun has outlined capital expenditure of Rs 100 crore over the next two years. Around $6 million was raised through external commercial borrowings. The company also recently issued warrants worth Rs 15 crore.

Bar-coding

           With the government directing drugs exporters to ensure bar-coding on external packaging within a week , Shasun said it was ready with the necessary technology. The company has engaged a firm to help train its people in bar coding and its usage.  Barcoding on packs will be carried out at Shasun's Puducherry facility. “Production costs will go up by a small percentage but capital costs are high – ranging from Rs 10 lakh to Rs 1 crore. It can be a pain for small companies,” said Mr Kumar. The Shasun share fell 1.40 per cent on Monday to close at Rs 67 on the BSE.









Read more »

திங்கள், செப்டம்பர் 26, 2011

நெய்வேலி கைக்கினார் குப்பத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான சாமி சிலை கண்டுபிடிப்பு

 
 
 
http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/9f0fef49-26c7-4772-90c1-88e78f92c1c3_S_secvpf.gif 
 
 
நெய்வேலி:

                 நெய்வேலி அருகே உள்ள கைக்கினார் குப்பத்தில் ஏரிக்கு கிழக்கு பகுதியில் என்.எல்.சி.க்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு முதலாவது அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது.
 
              சனிக்கிழமை பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சீரமைத்தபோது நிலத்தின் அடியில் கல் ஒன்று தென்பட்டது. உடனடியாக அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது பூமிக்குள் புதைந்திருந்த கல்சிலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அந்த சிலை 2 1/2 அடி உயரம் இருந்தது. கைக்கூப்பி வணங்கிய நிலையில் சிலை காணப்பட்டது. தகவல் அறிந்ததும் அந்தபகுதியில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்தனர்.

               சாமிசிலையை அருகில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று கோவில் முன்பு வைத்து நீராட்டினார்கள். கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டார்கள். 
 
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது 
 
                       இந்த சாமி சிலை 1,000 ஆண்டுகள் பழமையானது ஆகும். சிலை கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் பூமிக்கு அடியில் புதையுண்ட கோவில் இருக்கலாம். எனவே அந்த பகுதியை தோண்டி ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறினார்கள். சாமி சிலை கிடைத்தது குறித்து சிதம்பரம் தொல்பொருள் ஆய்வு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பார்வையிட உள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/1a379a7d-4ede-4beb-bb45-2c955fa8c363_S_secvpf.gif
கடலூர்:
 
         கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர் கொள்ள வேண்டி உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுததல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.

              கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குட்டை, வாய்க்கால் ஆகிய நீர் நிலைகளை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகு நீர் தாங்கும் பலகைகளில் உள்ள பழுதுகளை நீக்கியும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தேவையான அளவிற்கு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை இருப்பில் வைக்க வேண்டும்.

              மேலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேஷன் செய்தல் வேண்டும். குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாய் அருகே சாக்கடை நீர் தேங்குவதை தடுத்து, சாக்கடைகளில் மற்றும் சாக்கடை நீர் தேங்கும் இடங்களில் கொசு மற்றும் கிருமிகளை அழிக்க முருந்து தெளிக்க வேண்டும் என்றார்.

             பருவமழையின் காரணமாக பாலங்கள், சிறு பாலங்களில் பழுதுகள் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் உடனடியாக சீர் செய்வதற்கு ஜல்லி, மணல், சாக்குகள், சவுக்கு கட்டைகளை ஆங்காங்கே இருப்பு வைக்க வேண்டும். சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேவையான மின் அறுப்பான கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளில் மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். 
            நடமாடும் மருத்துவக்குழு அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். மேலும் இயற்கை சீற்றங் களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதயாக புயல், பாதுகாப்பு மையங்கள், சமூக கூடம், கல்லூரிகள், பள்ளிகள், கல்யாண மண்டபம் ஆகியவை அனைத்து வசதிகளுடன் தரமான முறையில் வைத்திருக்க வேண்டும்.

            பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கு தேவையான வாகனங்கள் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் பொதுமக் களுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அமுத வல்லி, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

               கூட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், துணைப்பதிவாளர், கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலர், இணை இயக்குனர், நலப்பணிகள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர், கண்காணிப்பு பொறியாளர், மின்சார வாரியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர், இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, இணை இயக்குனர் (விவசாயம்), துணை இயக்குனர் (தோட்டக் கலை), அனைத்து நகராட்சி ஆணையர்கள் அனைத்து வருவாய் கோட்டாட்சி யர்கள், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Read more »

சனி, செப்டம்பர் 24, 2011

கடலூர் மத்திய சிறையில் கந்தவேல் என்ற ஆயுள் கைதி கொலை

கடலூர்:

            கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி, சக கைதியால் புதன்கிழமை நள்ளிரவு அடித்துக் கொலை செய்யப்பட்டார்.  

              கடலூர் மத்திய சிறையில் 830 தண்டனைக் கைதிகளும், 420 விசாரணைக் கைதிகளும் உள்ளனர். ஆயுள் தண்டனைக் கைதிகள் 8-வது பிளாக்கில் தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சில கைதிகள் தனித் தனியாகவும், சில அறைகளில் இருவரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.  இருவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து, நள்ளிரவு அலறல் சத்தம் கேட்டது. சிறைக் காவலர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு கைதி, ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தார். மற்றொரு கைதி அவர் மீது அமர்ந்து சாப்பாட்டுத் தட்டால் ஓங்கி அடித்துக் கொண்டு இருந்தார்.  
       
                பணியில் இருந்த மற்ற காவலர்கள் அறையைத் திறந்து, தாக்குதலில் ஈடுபட்ட கைதியை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். பலத்த காயம் அடைந்த கைதியை கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.  இறந்த ஆயுள் தண்டனைக் கைதி, விழுப்புரம் ராஜாகோவில் தெருவைச் சேர்ந்த கந்தவேல் (34) என்று விசாரணையில் தெரியவந்தது. பண்ருட்டி காவல் நிலையத்தில் பதிவான கொலை வழக்கில், இவர் ஆயுள் தண்டனை அடைந்தவர். அவர் 9-4-2007 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

             தாக்குதல் நடத்திய கைதி, சென்னை செயின்ட் தாமஸ் மெüன்ட் ராஜபாளையம் தெருவைச் சேர்ந்த அய்யனார் (31). அவர் திருவெண்ணை நல்லூரில் நடந்த கொலை தொடர்பாக ஆயுள் தண்டனை அடைந்தவர். அவர் 16-3-2007 முதல் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கந்தவேலை கொன்றது ஏன் என்று விசாரித்தபோது அய்யனார் மௌனம்  சாதித்ததாகக் கூறப்படுகிறது.  கந்தவேலும், அய்யனரும் சிறைக்கு வந்தபின் மன நோயாளிகளாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.  சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார்  வழக்குப் பதிவு செய்து உள்ளனர். கடலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்த இருக்கிறார்.









Read more »

கடலூர் நகராட்சிப் பகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

கடலூர்:

          கடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள 126 வாக்குச் சாவடிகளில், 20 சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு உள்ளன என்று கடலூர் நகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். 

இதுபற்றி நகராட்சி ஆணையர் இளங்கோவன் வியாழக்கிழமை கூறியது: 

              இந்தியாவில் முதல் முறையாக தமிழக உள்ளாட்சித் தேர்தலில், புகைப்பட வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப் படுகிறது. 29-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். கடலூர் நகராட்சியின் 45 வார்டுகளில் 13 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை. 3 தாழ்த்தப்பட்டோருக்கு பொதுவான வார்டுகள். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 2 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

வாக்காளர் பட்டியல்:

              நகராட்சி அலுவலகத்திலும் வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. தேவையான மாற்றங்கள் செய்வதற்கான படிவங்கள் நகராட்சி அலுவலகத்தில் கிடைக்கும். புதிய வாக்காளர்களை இப்போது சேர்க்க முடியாது. 

கடலூர் நகராட்சியில் 

ஆண்கள் 52,179. 
பெண்கள் 53,275. 
மொத்த வாக்காளர்கள் 1,05,456. 

                 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்கள் ஒரு பக்கத்துக்கு ரூ. 5 செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 2.25 லட்சம் வரையிலும், உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுவோர் ரூ. 56,250 வரையிலும் செலவு செய்யலாம். பிரசார வாகனங்களைப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விதிமுறைகள் அனைத்தும் நகராட்சித் தேர்தலுக்கு பொருந்தும்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: 

            காலை 6 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய முடியும். சுவரொட்டிகள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. 

நகராட்சித் தலைவர் பதவிக்கு டெபாஸிட் தொகை ரூ. 2 ஆயிரம், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 1000. 
உறுப்பினர் பதவிக்கு ரூ. 1000. 
தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 500. 

               தலைவர் தேர்தலுக்கும் உறுப்பினர் தேர்தலுக்கும் தனித்தனி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வந்து விட்டன. அவற்றை பெல் நிறுவனத்தினர் சோதனை செய்து வருகிறார்கள். கடலூர் நகராட்சித் தேர்தலுக்கு 5 உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஏற்கெனவே மதுக்கடை ஏலம் எடுத்து பாக்கி வைத்து இருப்பவர்கள் பட்டியலை நகராட்சிக்கு அரசு வழங்கி உள்ளது.

             கடலூர் நகராட்சியைப் பொருத்தவரை சுமார் 10 பேர் அப்பட்டியலில் உள்ளனர். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் கலால் அலுவலகத்தில், தடையில்லாச் சான்று பெறவேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது.   தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 8 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடலூர் நகராட்சிப் பகுதியில் 126 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். அவற்றில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன. தேர்தல் பணிகள் அனைத்தும் விடியோ படம் எடுக்கப்படும் என்றார் ஆணையர்.











Read more »

கடலூர் மாவட்ட பொதுமக்கள் காவல் துறையில் இணையத்தளத்தில் புகார் தெரிவிக்கலாம்

கடலூர்:

          பொதுமக்கள் புகார் தெரிவிக்க கடலூர் மாவட்ட காவல் துறையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.பி., பகலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

             பொதுமக்கள் தங்கள் புகார்களையும், தகவல்களையும் தெரிவிக்கும் வகையில் "இண்டர்நெட்' வசதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஏற்படுத்த வேண்டுமென டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டார்.அதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் புகார்கள் மற்றும் சொல்ல வேண்டிய தகவல்களை  தெரிவிக்க விரும்பினால்



 என்ற இணையத்தளத்தில் மூலமாக புகாரை அனுப்ப


எனும் லிங்க்- ஐ கிளிக் செய்து அனுப்பலாம். அவ்வாறு பெறப்படும் புகார்கள், தகவல்கள் எஸ்.பி.,க்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். 









Read more »

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கலில் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுவுடன் 6 ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கலின் போது சேர்க்க தேர்தல் ஆணையத்தின் சட்டப் பூர்வ ஆணை எண் 27ன்படி சிற்றுராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சாற்றுரையும், 

இதர பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி மொழி ஆவணமும் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும்.

மனுவுடன் நிரந்தர கணக்கு எண், 
வருமான வரி தாக்கல் செய்த விவரம், 
தமக்கு எதிராக கோர்ட்டில் தொடரப்பட்டு வழக்குகள், 
குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகள், 
அசையும் மற்றும் அசையாத சொத்துகள்,
கடன் விவரங்கள், 
பொது மற்றும் அரசு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும்
கல்வித் தகுதி 

ஆகிய 6 விவரங்களையும் ஆவணமாக இணைக்க வேண்டும்.

மேலும் 20 ரூபாய் பத்திரத்தில் உறுதி மொழி ஆவணம் அளிக்க வேண்டும். 

மேற்கூறிய உறுதிமொழி, 

உறுதிமொழி ஆணையர்,
முதல் நிலை குற்றவியல் நீதிபதி, 
சான்று அலுவலர் (நோட்டரி பப்ளிக்) 

முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.








Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளில் 448 பேர் மனு தாக்கல்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கலின் இரண்டாவது நாளான நேற்று 448 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

            உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19ம் ஆகிய இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதியிலிருந்து துவங்கியது.தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. 

மனு தாக்கலின் முதல் நாளான நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 92 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டாம் நாளான நேற்று

கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 41 பேரும், 
கிராம ஊராட்சி உறுப்பினருக்கு 401, 
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 3, 
பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 3 பேர் 

என மொத்தம் 448 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக 540 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.




Read more »

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்? விபரம்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள்  எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ளது. 
 
அதன் விரம் வருமாறு:-

ஊராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 3750

ஊராட்சி தலைவர் - ரூ. 15,000

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் - ரூ. 37,500

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் - ரூ. 75,000

பேரூராட்சி, 3-ம் நிலை நகராட்சி தலைவர் - ரூ. 56,250

நகராட்சி மன்ற தலைவர் 

(முதல் மற்றும் 2-ம் நிலை) - ரூ. 1,12,500

நகராட்சி தலைவர்:

(தேர்வுநிலை, சிறப்பு நிலை) - ரூ. 2,25,000

மாநகராட்சி மேயர் - ரூ. 5,62,500

சென்னை மாநகராட்சி மேயர் - ரூ.11,25,000

பேரூராட்சி 3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 11,250

நகராட்சி உறுப்பினர் (முதல் நிலை மற்றும் 2-ம் நிலை - ரூ. 22,500

நகராட்சி மன்ற உறுப்பினர் (தேர்வு நிலை, சிறப்பு நிலை) - ரூ. 56,250

மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை நீங்கலாக) - ரூ. 33,750

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ. 56,250 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் விபரம்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 

 உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக  வேட்பாளர்கள் விபரம்: 

கடலூர் - கே.எஸ். ராஜா 
 பண்ருட்டி - ஆனந்தி சரவணன்  
விருதாசலம் - வை. தட்சிணாமூர்த்தி  
நெல்லிக்குப்பம் - எஸ். புகழேந்தி 
சிதம்பரம் - லலிதா (எ) ஜெயலலிதா






Read more »

கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள்

கடலூர்:

               கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக பொது இடங்களில் ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் புதன்கிழமை தெரிவித்தார். 

கடலூர் பாரதி சாலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஒலிபெருக்கி கருவிகள் பொருத்தும் பணியை தொடங்கி வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன்   கூறியது: 

               கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுலகம், பாரதி சாலை, லாரன்ஸ் சாலை, ஜவான்ஸ் பவன் சந்திப்பு, நகைக் கடைவீதி, வண்டிப்பாளையம் சாலை சந்திப்பு, பஸ் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், கண்காணிப்புக் கேமரா மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்புகளைச் செய்யும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படும்.  ரூ. 25 லட்சம் செலவில் 18 கண்காணிப்புக் கேமராக்கள், 4 சுழல் கேமராக்கள், 28 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட உள்ளன. 

              தொடர்ந்து மேலும் 6 இடங்களில் ஒலிபெருக்கிக் கருவிகள் அமைக்கப்படும்.  இவற்றைப் பொருத்துவதன் மூலம் நகை பறிப்பு, கடைகள் மற்றும் பொது இடங்களில் திருட்டு, சாலை விபத்துகள் போன்றவற்றை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வசதியாக இருக்கும். ஒலிபெருக்கி மற்றும் கேமராக்களின் செயல்பாடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார் எஸ்.பி. கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராமகிருஷ்ணன். நாகராஜன், துணைக் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior