உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 24, 2010

Army recruitment camp in Cuddalore from April 13

CUDDALORE: 

              The seven-day recruitment camp for selecting candidates for the five categories of services in the Indian Army will begin here on April 13.

              A statement released from the Collectorate stated that at the recruitment camp, candidates from the districts of Cuddalore, Vellore, Villupuram, Tiruvannamalai, Kancheepuram, Thiruvallur and Chennai, and the Union Territory of Puducherry could participate. 

The selection would be made for the following posts: 

                 Soldier nursing assistant, Soldier technician, Soldier general duty, Soldier tradesman and Soldier clerk/Storekeeper (technical). The eligibility criteria for the Soldier nursing assistant and Soldier technician posts are: must have obtained an aggregate of 50 per cent marks in Plus Two and 40 per cent in individual subjects such as physics, chemistry and mathematics.

                   As on April 13, they should have completed 17.5 years and must be within 23 years with a minimum height of 165 cm, 50 kg in weight and chest measurement of 77 to 82 cm. The candidates for the Soldier general duty should have obtained an aggregate of 45 per cent in SSLC and 35 per cent in each subject. They should have completed 17.5 years and must be within 21 years as on April 14/15 (the recruitment would be for both days) with a minimum height of 166 cm, 50 kg in weight and chest measurement of 77 to 82 cm.
For the Soldier tradesman post the candidates should have passed eighth standard (for cooks and servers and food handlers) and SSLC/ITI for other trades. They should have completed 17.5 years and must be within 23 years as on April 16 with a minimum height of 166 cm, 48 kg in weight and chest measurement of 76 to 81 cm.

                  For the Soldier clerk/Soldier store keeper (technical) the candidates should have obtained an aggregate of 50 per cent marks in Plus Two and 40 per cent in each subject. The aspirants should have studied English and mathematics either in SSLC or in Plus Two. If they are graduates a pass in Plus Two is enough. But candidates with vocational qualifications would not be entertained.The candidates should have completed 17.5 years and must be within 23 years as on April 17 with a minimum height of 162 cm, 50 kg in weight and chest measurement of 77 to 82 cm. For the candidates who qualify in the physical tests for the Soldier tradesman aptitude test will be conducted on April 18. For other candidates who successfully clear the physical tests free coaching for the written tests would be given by the Ex-Servicemen Welfare Association at Vellore. 

        Further details could be obtained at the office of the Assistant Director, Ex-Servicemen Welfare Association, Cuddalore.

Read more »

Stress on need to conserve water

CUDDALORE: 

              If wastage of water continues, then by 2025, there will be an acute scarcity of water, forcing people to stand in queue to get the rationed out water.

             These are ominous forebodings conveyed through the paintings by the students of the Subramaniapuram Sri Ramalingar High School. These paintings were exhibited in front of the Collectorate here to mark the World Water Day on Monday. One of the exhibits conveyed the message that water had become so scarce and expensive that even the milkman would not dare mix water with milk.

             Another student painted a grave picture of healthy and frolicking lions transforming into emaciated beings owing to water scarcity. The show was put up by K.Arumugam, secretary of the Centre for Sustainable Development, a non-governmental organisation. According to K.Arumugam, the Centre spreads the message to protect water sources, prevent pollution in them, removal of encroachments on irrigation channels, prevent over exploitation of ground water, recycle used water and use the defunct deep borewells for storing rainwater.

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் யாருக்கும் பயனின்றி முடங்கிப்போன நிலங்கள்


கடலூர்:​ 
 
                     கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பல தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.​ இதனால் விவசாயிகளிடம் ​ இருந்து கட்டாயமாக சொற்ப விலையில் கையகப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் யாருக்கும் பயனின்றி முடங்கிக் கிடக்கின்றன.​ ​ இதனால் அரசுக்கும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு வர வேண்டிய பணமும் வரவில்லை.​ வேறு நபர்களும் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கடலூர் அருகே 1985-ல் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது.​ முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலமும்,​​ 2-ம் கட்டமாக 500 ஏக்கர் நிலமும் கையகப் படுத்தப்பட்டு,​​ தொழிற்சாலைகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.​ நில வளமும்,​​ நீர் வளமும் கொண்ட இப்பகுதி,​​ பிரதானமாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு என மத்திய அரசு அறிவித்ததால்,​​ பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள்தான் இங்கு தொடங்கப்பட்டு வருகின்றன.சிப்காட் தொழிற்பேட்டை நிலங்கள் அரசால் கையகப்படுத்தும் முன் முந்திரி,​​ மணிலா,​​ சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு இருந்தன.​ இந்த நிலங்களுக்காக ​ விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.12 ஆயிரம்.​ விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ரூ.80 ஆயிரம் வரை பெற்றனர்.எந்த நோக்கத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாத நிலை தற்போது உருவாகி உள்ளது.​ இந்த நிலங்கள் தொழிற்சாலைகளுக்கு குத்தகைக்கு முதலில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் என வழங்கப்பட்டது.​ அது படிப்படியாக உயர்ந்து,​​ தற்போது ஏக்கர் ரூ.20 லட்சம் என குத்தகைக்கு வழங்கப்படுகிறது. 
 
                       சிப்காட் தொழிற்பேட்டையில் தற்போது ரூ.200 கோடி மூலதனத்துக்கு மேல் முதலீடு செய்து இருக்கும் 4 தொழிற்சாலைகள் உள்பட,​​ 34 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.​ 6 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.​ ​ரூ.200 கோடி மூலதனத்தில்,​​ 60 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஜே.கே.​ ஃபார்மா,​​ 60 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 18 தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. மூடிக்கிடக்கும் தொழிற்சாலையை அரசு ஏலம் விட்டாலன்றி,​​ யாரும் அதை வாங்க முடியாது.​ அவ்வாறு ஏலம் விடுவதற்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகள் ஆகிறதாம்.​ ஏலத்தில் எடுத்த பிறகும்,​​ பல்வேறு துறைகளில் உள்ள நிலுவைத் தொகைகளைச் செலுத்தி மீண்டும் தொழில் தொடங்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாகக் கூறப்படுகிறது.இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக,​​ தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 320 ஏக்கர் நிலங்கள்,​​ ஆலைகள் மூடப்பட்டதால்,​​ எந்த பயனுமின்றிக் முடங்கிக் கிடக்கின்றன.​ இந்த நிலங்களால் அவற்றை விற்பனை செய்த விவசாயிகளுக்கும் பயனில்லை.​ வாங்கிய தொழிற்சாலைகளுக்கு,​​ அரசுக்கும் பயனில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.​ நிதி நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் மக்கள் பணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.​ ​
 
இது குறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர்குமார் கூறியது:​ 
 
                    மூடிக்கிடக்கும் ஆலைகளின் நிலங்களை வேறு நபர்களுக்கு மாற்றுவதில் மிகவும் சிக்கலான நடைமுறைகள் உள்ளன.​ அரசோ,​​ வங்கிகளோ ஏலம் விட்டால் மட்டுமே மற்றவர்கள் அந்த தொழிற்சாலையை வாங்க முடியும்.​ பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நிலங்களுக்கு,​​ மீண்டும் இப்போதைய சந்தை மதிப்பில்,​​ வித்தியாசத் தொகையை வழங்க வேண்டியது இருக்கிறது.​ ஏலம் விடும் ஆலைகளைப் பல நேரங்களில் இடைத்தரகர்கள் வாங்குகிறார்கள்.​ மூடிக்கிடக்கும் ஆலையை வாங்க வேண்டுமானால் பல வகைளில் பணம் செலவிட்டாக வேண்டியது இருக்கிறது.​ மூடப்பட்ட ஆலைகளின் நிர்வாகமே வேறு நபருக்கு நேரடியாக விற்கவும்,​​ வாங்கும் நபர் அதற்கான நிலுவைத் தொகை அனைத்தையும் ஏற்கும் வகையிலும் விதிகள் இருந்தால்,​​ இங்கு மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளே இருக்காது என்றார் இந்தர்குமார்.
 
இது குறித்து சிப்காட் நிர்வாக அலுவலர் செல்வம் கூறியது:​ 
 
                        மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை,​​ மற்றவர்கள் வாங்குவதற்கான நடைமுறைகள் எளிதாகவே உள்ளன.​ ஆனால்,​​ அவைகள் செலுத்த வேண்டிய பாக்கித் தொகைகள்,​​ கடன்கள் கோடிக்கணக்கில் உள்ளன.​ நிலத்துக்கான வித்தியாச விலை வழங்கத்தான் வேண்டும்.​ ​ அண்மையில் 3 தொழிற்சாலைகள் ஏலம் மூலம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.​ வங்கிகளும் ஏலம் விடுகின்றன என்றார் செல்வம்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.,​​ மெட்ரிக்: 36,592 பேர் தேர்வு எழுதினர்


கடலூர் திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி.​ தேர்வு எழுதிய மாணவிகள்.
கடலூர்:
 
                செவ்வாய்க்கிழமை தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி.​ மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 36,592 மாணவ,​​ மாணவியர் தேர்வு எழுதினர்.எஸ்.எஸ்.எல்.சி.​ மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.​ கடலூர் மாவட்டத்தில் 17,865 மாணவர்களும்,​​ 18,727 மாணவிகளும் தேர்வு எழுதினர்.​ செவ்வாய்க்கிழமை எஸ்.எஸ்.எல்.சி.​ மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் தேர்வும்,​​ மெட்ரிக் மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்து இருக்கும் மொழி முதல்தாள் தேர்வும் நடந்தன. தேர்வுக்காக கடலூர் மாவட்டத்தில் 96 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.​ தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி,​​ மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருண்மொழித்தேவி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

Read more »

நீரி​ழிவு, மார​டைப்பைக் கட்​டுப்​ப​டுத்​து​கி​றது மீன் உணவு

சிதம்​ப​ரம்:
 
                     கொடுவா மீன் உள்​ளிட்ட மீன் வகை உண​வு​கள் நீரி​ழிவு மற்​றும் மாரடைப்பு நோயை கட்​டுப்​ப​டுத்​து​கி​றது என பரங்​கிப்​பேட்டை கடல்​வாழ் உயிரின உய​ராய்வு மைய இயக்​கு​நர் முனை​வர் டி.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் தெரி​வித்​தார்.​இந்​நி​கழ்ச்​சியை பரங்​கிப்​பேட்​டை​யில் உள்ள அண்​ணா​ம​லைப் பல்​கலைக்​க​ழக கடல்​வாழ் உயி​ரின உய​ராய்வு மைய இயக்​கு​நர் டி.பால​சுப்​பி​ர​ம​ணியன் குத்​து​வி​ளக்​கேற்றி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​
 
அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக கடல்​வாழ் உயி​ரின உய​ராய்வு மைய இயக்​கு​நர் டி.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் பேசி​யது:​ 
 
                    இந்​தி​யா​வில் கொழுப்பு சத்​துள்ள உணவை அதி​கம் உண்​ப​தால் நீரி​ழிவு மற்​றும் மார​டைப்பு நோய் அதி​கம் பேருக்கு உள்​ளது.​ புர​தச் சத்​துள்ள கொடுவா மீன் உள்​ளிட்ட மீன் வகை​கள் அந்​நோய்​க​ளைத் தடுக்​கும் சக்தி கொண்​டவை.​ அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ கடல்​வாழ் உயி​ரின உய​ராய்வு மைய மாண​வர் திரு​நா​வுக்​க​ரசு முதன்​மு​த​லாக கொடுவா மீன் குறித்து ஆராய்ச்​சியை மேற்​கொண்​டார் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது என டி.பால​சுப்​பி​ர​ம​ணி​யன் தெரி​வித்​தார்.​ நாகை மாவட்​டம் திரு​முல்​லை​வாச​லில் அமைந்​துள்ள ராஜீவ்​காந்தி நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு மைய திட்ட இயக்​கு​நர் ஓய்.சி.தம்பி சாம்​ராஜ் தலைமை வகித்​துப் பேசி​னார்.​ 
 
ராஜீவ்​காந்தி நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு மைய திட்ட இயக்​கு​நர் ஓய்.சி.தம்பி  பேசி​யது:​ 
 
                     வெளி​நாட்டு ஏற்​று​ம​தியை பெருக்​கும் நோக்​கில் இந்த நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு மையம் தொடங்​கப்​பட்​டது.​  கொ​டுவா மீன்​களை உப்​பு​நீ​ரில் மட்​டு​மல்ல நல்ல நீரி​லும் வளர்த்து அதிக லாபம் பெற​லாம் என தம்​பி​சாம்​ராஜ் தெரி​வித்​தார்.​ கேர் இந்​தியா தொண்டு நிறு​வன ஒருங்​கி​ணைப்​பா​ளர் மோசஸ் சாமு​வேல் வாழ்த்​துரை வழங்​கி​னார்.​ 
 
கேர் இந்​தியா தொண்டு நிறு​வன ஒருங்​கி​ணைப்​பா​ளர் மோசஸ் சாமு​வேல் பேசி​யது:​
 
                     கேர் இந்​தியா நிறு​வ​னம் கட​லூர் மாவட்​டத்​தில் 684 கிரா​மங்​க​ளில் பல்​வேறு பணி​களை மேற்​கொண்​டுள்​ளது.​ குறிப்​பாக சுனா​மி​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு 394 வீடு​களை கட்​டிக் கொடுத்​துள்​ளது.​ மேலும் கிள்ளை பகு​தி​யில் உள்ள ரூ.34 லட்​சம் செல​வில் 7 சய​உ​த​விக் குழுக்​க​ளுக்கு களி​நண்டு வளர்ப்​புப் பயிற்சி அளிக்​கப்​பட்டு உற்​பத்தி செய்​யப்​பட்டு வரு​கி​றது.​ இதே​போன்று கிள்ளை பகு​தி​யில் உப்​ப​னாற்றை நம்பி மீன்​பி​டித் தொழி​லில் ஈடு​பட்​டுள்ள இரு​ளர் சமூ​கத்​தி​ன​ருக்கு 5 சுய​உ​த​விக் குழுக்​கள் மூல​மும்,​​ பரங்​கிப்​பேட்​டை​யில் 4 சுய​உ​த​விக் குழுக்​கள் மூலம் மீன் உற்​பத்தி செய்​யும் திட்​டத்தை செயல்​ப​டுத்த உள்​ளது என மோசஸ் சாமு​வேல் தெரி​வித்​தார்.​ க​டல் பொருள் ஏற்​று​மதி மேம்​பாட்டு ஆணைய உதவி இயக்​கு​நர் சி.ஜே.சம்​பத்​கு​மார் வர​வேற்​றார்.​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக கடல்​வாழ் உயி​ரின அறி​வி​யல் புல பேரா​சி​ரி​யர் எஸ்.அஜ்​மல்​கான்,​​ கட​லூர் பொயட்ஸ் தொண்டு நிறு​வன ஒருங்​கி​ணைப்​பா​ளர் என்.கார்த்​தி​கே​யன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பேசி​னர்.​ உதவி இயக்​கு​நர் ​(நீர்​வாழ் உயி​ரின வளர்ப்பு)​ முனை​வர் எஸ்.கந்​தன் நன்றி கூறி​னார்.​ மீன் வளர்ப்​ப​வர்​க​ளுக்கு கொடுவா மீன் வளர்ப்​பது குறித்த பயிற்​சியை திட்ட மேலா​ளர் எஸ்.பாண்​டி​ய​ரா​ஜன்,​​ உத​வித் திட்ட மேலா​ளர் கே.கணேஷ் உள்​ளிட்​டோர் சின்​னத்​திரை மூலம் அளித்​த​னர்.​உதவி இயக்​கு​நர் ​(பொறி​யி​யல்)​ பி.பாசக் நன்றி கூறி​னார்.

Read more »

கட​லூர் அருகே மீண்​டும் கல​வ​ரம்:​ வாழை மரங்​கள் வெட்​டிச் சாய்ப்பு

கட​லூர்,:
 
              கட​லூர் அருகே வழி​சோ​த​னைப் பாளை​யத்​தில் மீண்​டும் கல​வ​ரம் வெடித்​தது.​ இதில் ஒரு வீடு சூறை​யா​டப்​பட்​டது.​ 100 வாழை மரங்​கள் வெட்டி சாய்க்​கப்​பட்​டன.​ ​க​டந்த 18-ம் தேதி தனி நபர்​க​ளுக்கு இடையே எழுந்த பிரச்னை கார​ண​மாக,​​ ​ கட​லூர் அருகே நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்​த​வர்​க​ளுக்​கும் வழி​சோ​தனை பாளை​யத்​தைச் சேர்ந்​த​வர்​க​ளுக்​கும் இடையே ஞாயிற்​றுக்​கி​ழமை இரவு மோதல் ஏற்​பட்​டது.​ இதில் நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த 7 வீடு​கள் தீ வைத்து கொளுத்​தப்​பட்​டன.​ வாக​னங்​கள் சேதப்​ப​டுத்​தப்​பட்​டன.​ இது தொடர்​பாக 41 பேர் மீது கட​லூர் முது​ந​கர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து,​​ வழி​சோ​த​னைப் பாளை​யத்​தைச் சேர்ந்த சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்ட 39 பேரைக் கைது செய்​த​னர்.​ கை​தான சுப்​பி​ர​ம​ணி​யத்தை நீதி​மன்​றத்​தில் திங்​கள்​கி​ழமை ஆஜர்​ப​டுத்த போலீ​ஸôர் அழைத்​துச் சென்​ற​னர்.​ அவ​ரது உட​லில் காயங்​கள் இருந்​த​தால் அவரை மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கு​மாறு நீதி​பதி உத்​த​ர​விட்​டார்.​ ​÷இ ​தற்​கி​டையே சுப்​பி​ர​ம​ணி​யத்​தின் மனைவி ஆச்சி,​​ கட​லூர் முது​ந​கர் காவல் நிலை​யத்​தில் புகார் மனு ஒன்றை அளித்து உள்​ளார்.​ அதில் ​ நயாக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த 17 பேர் தனது வீட்​டில் புகுந்து,​​ கண​வ​ரைத் தாக்​கி​ய​தா​க​வும்,​​ வீட்​டில் இருந்த தொலைக்​காட்​சிப் பெட்டி,​​ கணினி கரு​வி​கள்,​​ குளிர்​சா​த​னப் பெட்டி உள்​ளிட்ட பொருள்​க​ளைச் சேதப்​ப​டுத்​தி​ய​தா​க​வும்,​​ தனக்​குச் சொந்​த​மான நிலத்​தில் இருந்த 100 வாழை மரங்​களை வெட்​டிச் சாய்த்​த​தா​க​வும் கூறி​யுள்​ளார்.​ ​இந்​தப் புகா​ரின் பேரில்,​​ நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த இரு​சப்​பன்,​​ ஸ்ரீதர்,​​ சிவக்​கொ​ழுந்து உள்​ளிட்ட 17 பேர் மீது போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து உள்​ள​னர்.​ மோ​தல் கார​ண​மாக அப்​ப​கு​தி​யில் தொடர்ந்து பதற்​றம் நீடித்து வரு​கி​றது.​ போலீஸ் பாது​காப்​பும் போடப்​பட்டு உள்​ளது.​÷வ ​ழி​சோ​த​னைப்​பா​ளை​யம் கிரா​மத்​தி​னர் மற்​றும் நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்​த​வர்​க​ளி​டையே அமை​தியை ஏற்​ப​டுத்த இரு தரப்​பி​ன​ரை​யும்,​​ அரசு அலு​வ​லர்​கள் திங்​கள்​கி​ழமை பேச்சு வார்த்​தைக்கு அழைத்து இருந்​த​னர்.​ ஆனால் இரு தரப்​பி​ன​ரும் பேச்சு வார்த்​தைக்​குச் செல்​ல​வில்லை.​ இத​னால் பேச்சு வார்த்தை தள்ளி வைக்​கப்​பட்​டது.​

Read more »

முந்​திரி சாகு​படி பயிற்சி


​ விருத்​தா​ச​லம்:
 
                   விருத்​தா​ச​லம் மண்​டல ஆராய்ச்​சிப் பண்​ணை​யில் முந்​திரி சாகு​படி குறித்த பயிற்சி தொடக்க விழா அண்​மை​யில் நடை​பெற்​றது.​ வி​ருத்​தா​ச​லத்​தில் உள்ள வேளாண் மண்​டல ஆராய்ச்சி நிலை​யத்​தில் முந்​திரி சாகு​படி குறித்த 10 நாள் பயிற்சி முகாம் அண்​மை​யில் தொடங்​கி​யது.​ இதில் முந்​திரி பருப்பு மற்​றும் பழங்​க​ளின் முக்​கி​யத்​து​வம்,​​ முந்​திரி ஏற்​று​ம​தி​யில் சந்தை வாய்ப்​பு​கள் மற்​றும் வழி​மு​றை​கள் பற்​றி​யும்,​​ முந்​திரி விளைச்​சலை அதிகரிக்கச் செய்ய வேண்​டிய மேலாண்மை தொழில்​நுட்​பங்​கள் குறித்​தும் விளக்கப்பட்டது.​ 
 
                    வி​ழா​வில் தமிழ்​நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்​கு​நர் ஜெய​ராஜ் தலைமை வகித்​தார்,​​ பேரா​சி​ரி​யர் முனை​வர் மாரி​முத்து,​​ விருத்​தா​ச​லம் வேளாண் அறி​வி​யல் நிலை​யப் பேரா​சி​ரி​யர் முனை​வர் சாத்​தையா,​​ மண்​டல ஆராய்ச்சி நிலைய இணைப் பேரா​சி​ரி​யர் அனீ​சா​ராணி உள்​பட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

எண்ணெய் வித்து திட்டப் பயிற்சி

​ ​சிதம்​ப​ரம்,​:
 
                                      சிதம்​ப​ரத்தை அடுத்த கிள்ளை பொன்​னந்​திட்டு கிரா​மத்​தில் விவ​சா​யி​களுக்கு ஐசோ​பாம் எண்​ணெய் வித்து திட்ட பயிற்சி அண்​மை​யில் நடை​பெற்​றது.​கிள்ளை பேரூ​ராட்சி தலை​வர் எஸ்.ரவிச்​சந்​தி​ரன் முன்​னிலை வகித்​தார்.​ கட​லூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்​கு​நர் ​(மத்​திய அரசு திட்​டங்​கள்)​ பாபு பயிற்​சியை தொடங்கி வைத்து உரை​யாற்​றி​னார்.​ மண் ஆய்வு செய்து உர​மி​ட​வும்,​​ மண் வளத்தை காத்​தி​ட​வும் வலி​யு​றுத்​து​வ​து​டன் அரசு வழங்கி வரும் பல்​வேறு மானிய திட்​டங்​களை விவ​சா​யி​கள் பயன்​ப​டுத்​துக் கொள்​ளு​மாறு அவர் கேட்​டுக்​கொண்​டார்.​ ப​ரங்​கிப்​பேட்டை வட்​டார வேளாண் உதவி இயக்​கு​நர் இ.தன​சே​கர் மணிலா மற்​றும் பிற எண்​ணெய் வித்​துப் பயிர்​க​ளில் சிறந்த மக​சூ​லுக்​கான உயர் சாகு​படி ​ தொழில் நுட்​பங்​கள் குறித்​தும்,​​ ஒருங்​கி​ணைந்த பயிர் பாது​காப்பு மற்​றும் இயற்கை உரங்​கள் மற்​றும் இயற்கை பூச்​சிக்​கொல்லி,​​ பூஞ்​சா​ணக்​கொல்லி மருந்​து​கள் பற்றி விரி​வாக எடுத்​து​ரைத்​தார்.​ ஐ​சோ​பாம் எண்​ணெய் வித்து திட்​டத்​தின் கீழ் பல்​வேறு மானி​யத் திட்​டங்​கள் குறித்து வேளாண் அலு​வ​லர் விஜயா உரை​யாற்​றி​னார்.​ மணி​லா​வில் நுண்​ணூட்​டக் கரை​கல் தெளித்​தல் பற்றி உதவி வேளாண் அலு​வ​லர் செல்​ல​துரை கூறி​னார்.​ இப்​ப​யிற்​சி​யில் 50-க்கும் மேற்​பட்ட விவ​சா​யி​கள் பங்​கேற்​ற​னர்.

Read more »

நடை​பாதை வியா​பா​ரி​கள் குடும்​பத்​து​டன் உண்​ணா​வி​ர​தம்


பண்ருட்டி:

               பண்​ருட்​டி​யில் ஆக்​கி​ர​மிப்பு அகற்​றப்​பட்​ட​தால் பாதிக்​கப்​பட்ட சாலை​யோர வியா​பா​ரி​கள் குடும்​பத்​தி​ன​ரு​டன் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் செவ்வாய்க்​கி​ழமை உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​ ஜீவா சாலையோர சிறு வியா​பா​ரி​கள் சங்க பொரு​ளா​ளர் எஸ்.சிவப்​பி​ர​கா​சம் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார், தலை​வர் ஆர்.ரகு​பதி,​​ துணைத் தலை​வர் எஸ்.மணி முன்​னிலை வகித்​த​னர்.​ 

                   ஏஐ​டி​யூசி மாவட்ட துணைச் செய​லர் பி.துரை,​​ ஏஐ​பி​இஏ மாவட்ட துணைத் தலை​வர் ஆர்.இரா​தா​கி​ருஷ்​ணன்,​​ அமைப்புசாரா தொழி​லா​ளர் சங்க மாவட்ட பொது செய​லர் கே.முத்​து​கு​மார்,​​ மாவட்ட குழு என்.கே.பாஸ்​கர் உள்​ளிட்​டோர் வாழ்த்​துரை வழங்​கி​னர்.​ 

                       உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​தில் 50-க்கு மேற்​பட்​டோர் குடும்பத்தினருடன் பங்​கேற்​ற​னர்.​ ​ ஏஐ​டி​யூசி மாவட்ட துணைத் தலை​வர் டி.மணி​வா​ச​கம் உண்​ணா​வி​ர​தத்தை முடித்து வைத்து வாழ்த்​துரை வழங்​கி​னார்.​

Read more »

போலி மது கடத்​தல்:​ மூவர் கைது


​ பண்​ருட்டி:

               புதுச்​சேரி மாநி​லத்​தில் இருந்து போலி மது​பாட்​டில்​களை கடந்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர் கடத்​தப்​பட்ட மது பாட்​டில்​களும், கடத்​த​லுக்கு பயன்​ப​டுத்​திய இரு கார்​க​ளும் செவ்​வாய்க்​கி​ழமை பறி​மு​தல் செய்யப்பட்டன.​ புதுச்​சேரி மாநி​லத்​தில் இருந்து பண்​ருட்டி வழி​யாக மது பாட்​டில்​கள் காரில் கடத்​தப்​ப​டு​வ​தாக பண்​ருட்டி போலீ​ஸô​ருக்கு தக​வல் வந்​தது.​ இத​னைத் தொடர்ந்து இன்ஸ்​பெக்​டர் செல்​வம் தலை​மை​யில் காவ​லர்​கள் குண​சே​க​ரன்,​​ வடி​வேல்,​​ ராஜ​சே​கர்,​​ புக​ழேந்தி,​​ பால​மு​ரு​கன் ஆகி​யோர் பூங்​கு​ணம் அருகே வாக​னச் சோத​னை​யில் ஈடு​பட்​டி​ருந்​த​னர்.​ அப் போது அவ்​வ​ழியே அடுத்​த​டுத்து வந்த 2 கார்​களை நிறுத்தி சோதனை செய்​த​னர்.​ பின்​னால் வந்த காரில் 250 பெரிய அளவு மது பாட்​டில்​கள் கடத்தி வரப்​பட்​ட​தும்,​​ முன்​னாள் வந்த கார் பாது​காப்​புக்கு வந்​தது என​வும் தெரி​ய​வந்​தது.​ இது தொடர்​பாக காரில் மது பாட்​டில்​கள் கடத்தி வந்த போலீஸ் லைனை சேர்ந்த சுமன்​ராஜ் ​(21),​ திரு​வள்​ளு​வர் நகர் வெற்றி ​(18),​ ஆறு​மு​கம் ​(31) ஆகி​யோரை போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ மேலும் தப்​பி​யோ​டிய ராஜி,​​ வெங்​க​டா​ஜ​லம் ஆகிய இரு​வ​ரைத் தேடி வரு​கின்​ற​னர்.​ பறி​மு​தல் செய்​யப்​பட்ட கார்​கள் மற்​றும் போலி மது​பாட்டி​லின் மொத்த மதிப்பு ரூ.3 லட்​சம் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​

Read more »

பி.டி. கத்​த​ரிக்கு தடை கோரி ஆர்ப்​பாட்​டம்


கட​லூர்:

              தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்​கம் சார்​பில் கட​லூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​ பி.டி. கத்​த​ரிக்​கா​யைத் தடை​செய்ய வலி​யு​றுத்​தி​யும்,​​ உர மானி​யத்தை குறைத்​த​தற்கு மத்​திய அர​சுக்​குக் கண்​ட​னம் தெரி​வித்​தும் இந்த ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.​ தி​ருப்​பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அரு​கில நடந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு விவ​சா​யி​கள் சங்க கட​லூர் மாவட்​டத் தலை​வர் எம்.நாரா​ய​ணன் தலைமை தாங்​கி​னார்.​ மத்​திய செயற்​குழு உறுப்​பி​னர் கே.முக​மது அலி கண்டன உரை நிகழ்த்​தி​னார்.​ வி​வ​சா​யி​கள் சங்க மாவட்​டச் செய​லா​ளர் ஜி.ஆர்.ரவிச்​சந்​தி​ரன் மற்​றும் நிர்​வா​கி​கள் எஸ்.காம​ராஜ்,​​ என்.ஆர்.ராம​சாமி,​​ எஸ்.தட்​சி​ணா​மூர்த்தி,​​ ஏ.சந்​தி​ர​சே​க​ரன்,​​ ஆர்.லோக​நா​தன்,​​ எம்.மணி,​​ கே.தன​பால்,​​ ஆர்.இளம்​பா​ரதி,​​ பி.பால​மு​ரு​கன் உள்​ளிட்ட பலர் பேசி​னர்.​ கட​லூர் ஒன்​றி​யத் தலை​வர் சி.குமார் நன்றி கூறி​னார்.​

Read more »

விஷம் கலந்த மது​வைக் குடித்த பல்​கலை மாண​வர் உள்​ளிட்ட இரு​வர் கவ​லைக்​கி​டம்

சிதம்​ப​ரம்:
 
                 விஷம் கலந்த மது​வைக் குடித்த பல்​க​லைக்​க​ழக மாண​வர் உள்​ளிட்ட இரு​வர் கவ​லைக்​கி​ட​மான நிலை​யில் ராஜா முத்​தையா மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​ம​னை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​ பண்​ருட்டி சி.புதுப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​த​வர் சிவ​ரா​மன் ​(23).​ கவ​ரிங் நகை தயா​ரிக்​கும் கடை​யில் வேலை பார்க்​கும் இவ​ரும் சி.கொத்​தங்​கு​டி​யைச் சேர்ந்த பல்​கலை.​ மாண​வர் ஆனந்​த​பாபு ​(23) ஆகிய இரு​வ​ரும் அண்​ணா​ம​லை​ந​கர் திடல்​வெ​ளிப் பகு​தி​யில் செவ்​வாய்க்​கி​ழமை அதி​காலை மயங்​கிய நிலை​யில் கிடந்​துள்​ள​னர்.​
 
                 த​கவல் அறிந்த அண்​ணா​ம​லை​ந​கர் போலீ​ஸôர்,​​ இரு​வ​ரை​யும் ராஜா முத்​தையா மருத்​து​வ​மனை மருத்​து​வக் கல்​லூ​ரி​யில் சேர்த்​த​னர்.​ அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ க​டன் தொல்லை கார​ண​மாக சிவ​ரா​மன் தற்​கொலை செய்து கொள்ள விஷம் கலந்த மதுவை குடித்​துள்​ளார்.​ அப்​போது அங்கு வந்த அவ​ரது நண்​ப​ரும்,​​ பல்​கலை.​ மாண​வ​ரு​மான ஆனந்​த​பாபு அவ​ரி​டமி​ருந்து மதுவை விஷம் கலந்​துள்​ளது எனத் தெரி​யா​மல் பறித்து அருந்தியுள்ளார்.​ இ​த​னால் இரு​வ​ரும் மயங்கி விழுந்​துள்​ள​னர் என போலீஸ் விசா​ர​ணையில் தெரி​ய​வந்​துள்​ளது.​ ஆனந்​த​பாபு அண்​ணா​ம​லைப் பல்​க​லை​யில் எம்.காம்.​ படித்து வரு​கி​றார்.

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் உளுந்து அறுவடை...துவங்கியது!: போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பாதிப்பு


சிதம்பரம்: 

                         காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உளுந்து அறுவடை துவங்கியுள்ளது. விதை கிடைக்காதது, பருவம் தவறிய மழை, தண்ணீர் தாமதம் போன்ற காரணங்களால் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சில ஆண்டாக பருவம் தவறிய மழை, வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடியையே முழுமையாக நம்பியுள்ள நிலையில் அந்த பருவமும் சில நேரங்களில் பொய்த்துவிடுவதும் உண்டு. அந்த நேரங்களில் சம்பா பயிரில் ஊடுபயிராக விதைக்கப்படும் உளுந்து பயிர், நெல்லில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் வருமானம் கிடைக்கிறது.

                  மாவட்டத்தில் 88 சதவீதம் நெற்பயிரில் ஊடுபயிராகவும்  (சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்), இரண்டு சதவீதம் பாசன பயிராகவும் (கடலூர், பண்ருட்டி), 10 சதவீதம் மானாவாரியாகவும் (திட்டக்குடி) பயிரிடப்படுகிறது. மொத்தம் ஒரு லட்சத்து 35,000 ஏக்கரில் உளுந்து பயிரிடப்படுகிறது. அதன் மூலம் 27,170 டன் உளுந்து உற்பத்தி கிடைத்து வந்தது. உளுந்து சாகுபடி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது துவங்கி மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படும். காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படும் காலத்தில் உளுந்து பயிர் செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு காலதாமதமாக சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்ததால் தாமதமாக நெற்பயிர் சாகுபடி துவங்கியது. அதனால் உளுந்து பயிரை உரிய பருவத்தில் பயிர் செய்ய முடியவில்லை. அத்துடன் அரசு விதை பண்ணைகள் மூலம் வழங்கப்படும் உளுந்து விதை கிடைக்கவில்லை. மேலும் நெல் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்காமல் இயந்திரம் மூலம் அறுவடை செய்ததால் உளுந்து பயிர் அழிந்துவிடும் என்பதால் அதிகமான விவசாயிகள் உளுந்து விதைக்கவில்லை. அத்துடன் ஜனவரி மாத இறுதியில் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்திவிடுவதால் உளுந்து பயிருக்கு தண்ணீர் கிடைக்காமல் போய்விடுகிறது.

                     இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் உளுந்து பயிர் சாகுபடி செய்வது ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. இந்தாண்டு உரிய காலத்தில் 70,000 ஏக்கரும், தாமதமாக 10,000 ஏக்கர் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது. இவையும் பருவம் தவறி பயிரிட்டதால் போதிய விளைச்சலின்றி  விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  படாத பாடுபட்டு பல்வேறு சிரமங்களுக்கிடையே உளுந்து அறுவடை செய்த சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் தவிக்கின்றனர். பண்ருட்டி, விருத்தாசலத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் உள்ளது. பண்ருட்டியில் குறைந்தபட்சம் 4300ல் இருந்து 4700 வரையும், விருத்தாசலத்தில் 4700 முதல் 4900 வரையும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இல்லாததால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

                          உளுந்து பயிர் சாகுபடி பற்றி ஆய்வு செய்ய கடந்த வாரம் சிதம்பரம் பகுதிக்கு வந்த வேளாண் உற்பத்தி ஆணையர் நந்தகிஷோர், இயக்குனர் கோசலராமன் ஆகியோரை, உழவர் மன்ற தலைவர் ரவீந்திரன் தலைமையில் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து, உளுந்து பயிர் பாதிப்பு குறித்தும், விவசாயிகளுக்கு உளுந்து பயிர் சாகுபடி ஆர்வத்தை பெருக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்றும்,  சிதம்பரத்தில் உழவர் சந்தையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும்  நெற்பயிரில் விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைக்காத நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் உளுந்து சாகுபடியை பெருக்க ஜனவரி 28க்கு பிறகு உளுந்து பயிருக்கு தனியாக தண்ணீர் திறந்துவிட்டு மாவட்டத்தில் ஏகபோக உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கியது ஸ்கிரைப் முறையில் 17 பேர் எழுதினர்

கடலூர்:

                  நேற்று துவங்கிய எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் மாவட்டத்தில் 96 மையங்களில்  41 ஆயிரத்து 457 பேர் தேர்வு எழுதினர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. அதில் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 865 மாணவர்கள் உட்பட 36 ஆயிரத்து 592 பேர் எஸ்.எஸ்.எல்.சி., பிரிவிலும், மெட்ரிக் பிரிவில் 2,727 மாணவர்கள் உட்பட 4,865 பேர்  என மொத்தம் 41 ஆயிரத்து 457 பேர் 96 மையங்களில் தேர்வு எழுதினர்.

ஸ்கிரைப்: 


                  மாவட்டத்தில் பார்வையற்ற மற்றும் நரம்பு தளர்ச்சியினால் பாதிக்கப்பட்ட 17 பேர் ஸ்கிரைப் முறையில் மாணவர்கள் பதில் கூற ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். அதில் கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 6 பேரும், கடலூர் முதுநகர் செயின்ட் டேவிட் பள்ளியில் 7, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 2, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 1, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 ஒருவர் என 17 பேர் தேர்வு எழுதினர். தேர்வையொட்டி சி.இ.ஓ.,  அமுதவல்லி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருண்மொழித்தேவி தலைமையில் 40 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வில் 'பிட்' அடிக்கும் முறைகேடுகளில் எவரும் ஈடுபடவில்லை.

Read more »

பண்ருட்டி நவீன எரிவாயு தகன மேடை: அனாதை பிணத்தை எரித்து சோதனை

பண்ருட்டி:

               பண்ருட்டியில் 43 லட் சம் ரூபாய் செலவில் கட் டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை  நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். பண்ருட்டி நகராட்சி சார்பில் கெடிலம் ஆற்றங்கரையில்  43 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது. கட்டுமான பணி முடிந்து இரண்டு ஆண்டாக பயன்பாடின்றி கிடந்த இந்த தகன மேடைக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிவடையாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி  காடாம்புலியூர் சமத்துவபுரம் திறப்பு விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் நவீன எரிவாயு தகன மேடையை திறந்து வைத் தார். இருப்பினும் தகன மேடை பயன்பாட்டிற்கு வரவில்லை. 
 
                    இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினமலரில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி தலைமையில் நகராட்சி அதிகாரிகள்  கடலூரில் இருந்து கொண்டு வரப்பட்ட அனாதை பிணத்தை நவீன எரிவாயு தகன மேடையில் வைத்து எரித்து சோதித்து பார்த்தனர். அப்போது  நகராட்சி சேர்மன் பச்சையப்பன்,  பொறியாளர் சுமதிசெல்வி, பணி ஆய்வாளர் சாம்பசிவம், சுகாதார ஆய் வாளர்கள் சுதாகர், மணிகண்டன் உடனிருந்தனர்.

Read more »

கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு 2ம் கட்ட பயிற்சி

கடலூர்:

                    குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் குறித்து கணக்கெடுப்பு குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. தமிழக அரசு குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது. 200 சதுர அடி பரப்பளவில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இந்த கான்கிரீட் வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும் வரும் 29ம் தேதி துவங்குகிறது. இதில் அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி எழுத்தர், மக்கள் நலப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொள்கின்றனர். தகுதி வாய்ந்தவர்களுக்கு அங்கேயே உறுதி செய்து வீட்டின் உரிமையாளரிடம் கையொப்பம் பெறப்படுகிறது. அதற்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ.,நடராஜன், திட்டஅலுவலர் ராஜஸ்ரீ  முன்னிலை வகித்தனர். இதில் பி.டி.ஓ., க்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர்.

Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரியில் கருத்தரங்கம்



கிள்ளை: 

           சி.முட்லூர் அரசு கல்லூரியில் யு.ஜி.சி., நிதி உதவியுடன் 'கடல் தாவரங்களின் உயிரியல் முக்கியத்துவம்' குறித்து கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் காந்தியப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக  பரங்கிப்பேட்டை  அண்ணாமலைப் பல்கலை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய பேராசிரியர் கதிரேசன், மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். பின்னர் கடல் தாவரங்களை பாதுகாப்பதால் கடலில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வளர்ச்சியடைவது குறித்து விளக்கமளித்தார்.  கருத்தரங்கில் தாவரவியல் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் கோவிந்தன் நன்றி கூறினார்.

Read more »

உலக தண்ணீர் தின விழா

கிள்ளை:

                    கிள்ளை, புவனகிரி பள்ளிகளில் உலக தண்ணீர் தின விழா நடந்தது.  கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் நடந்த ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமாரவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரவணஸ்ரீ வரவேற்றார். அனைவருக் கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் மாறன், ஆசிரியர்கள் எஸ்தர் ஞானசெல்வகுமாரி, மணிமொழி முன் னிலை வகித்தனர். கிள்ளை பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.  
 
புவனகிரி: 
 
                  திருவள்ளுவர் நகர் தொடக்கப் பள்ளியில்  நடந்த உலக தண்ணீர் தினவிழாவிற்கு   அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோவிந் தராஜன், முன்னாள் தலைவர் பாரி பங்கேற்று மாணவர்களுக்கு தூய குடிநீர் வழங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்  மாணிக்கவாசகன் நன்றி கூறினார்.

Read more »

சிப்காட்டில் கம்பெனிகளை ஆய்வு செய்ய முடிவு ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்


கடலூர்: 

                  கடலூர் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு அனுப்ப மாவட்ட ஊராட்சி குழு முடிவு செய்துள்ளது. மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரான் சிஸ்மேரி, ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அணைக் கரை  பாலத்தை விரைந்து கட்டவும், காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக பணிமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர் கந்தசாமி பேசினார். அவரை தொடர்ந்து பேசிய பிரபாகரன், சிதம்பரம் அரசு மருத்துவமனை வளாகம் மினி பஸ் நிலையமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என்றார். குண்டுஉப்பலவாடி பாலம் கட்ட 11 முறை டெண்டர் விட்டும் பணிகள் நடக்கவில்லை. பாலம் கட்ட உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என கவுன்சிலர் ஜெயகாந்தன் பேசினார்.

                   சிதம்பரம் புறவழிச் சாலை பணியில் வடிகால் வாய்க்கால்கள் தூர்க்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் மணலூர் மேற்கு பகுதியில் உள்ள விளை நிலங்கள் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் வாய்க்கால் கட்ட பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கருப்பன் வலியுறுத்தினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

                 மாவட்டத்தில் கோவில், பள்ளி மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும். சேத்தியாத்தோப்பு 16 கண் மதகு பாலம், வடக்குத்து பாலம், பறவனாற்றுப் பாலங்களை போர்க்கால அடிப்படையில்  துப்பிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் போக்குவரத்து துறையினரை கண்டித்து  மாவட்ட ஊராட்சி குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பாக எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் குறித்த கவுன்சிலர்களின் புகார்களுக்கு மாசுகாட்டுப்பாட்டு வாரியம் பதில் அளிக்காததால், மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சிப்காட் பகுதியில் உள்ள ரசாயன கம்பெனிகளை ஆய்வு செய்து, அறிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க அரசிற்கு அனுப்புவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Read more »

அறிவியல் கண்காட்சி

ராமநத்தம்:

             ராமநத்தம் அடுத்த மேலாதனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கிராம கல்விக்குழு தலைவர் சந்திரா தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் மெய் யன்துரை, ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மகாராஜன் வரவேற்றார். 
 
                 கண்காட்சியில்  பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த பொருட்களை மாதிரிகளாக வைத்து மாணவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். ஆவட்டி, ஈ.கீரனூர், கீழ்ஐவனூர், ஆ.குடிகாடு உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கற்பகம், ராஜலட்சுமி, அருள்பிரகாசம், புகழேந்தி செய்திருந்தனர்.  ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

தேர்வு துறையை கண்டித்து போராட்டம் : முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு


கடலூர்:

                    அரசு தேர்வுத் துறையை கண்டித்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந் தது. மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மண்டல செயலாளர் தனஞ்செயன், மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவேல், தலைமையிட செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்வு மதிப்பீட்டு பணியின் போது சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து வாயிற் கூட்டம் நடத்தும் உரிமையை, நன்னடத்தை விதி என்ற பெயரில் தட்டிப் பறிக்கும் அரசு தேர்வு துறையை கண்டித்து போராட்டம் நடத்துவது.  
 
                          விடைத்தாள் திருத்தும் மையங்களில் பல ஆண்டாக நடைமுறையில் இருந்து வரும் சிறப்பு கூர்ந்தாய்வு அலுவலர் பணியிடத்தை மீண்டும் வழங்க வேண்டும்.  விடைத்தாள் திருத்தும் பணிக்கு தாள் ஒன்றுக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். ஒரு நபர் குழு அறிக்கையை பெற்று, ஊதிய முரண்பாட்டை நீக்க மேம்படுத்தப்பட்ட ஊதிய விகிதத்தை வழங்க வேண்டும். மேல்நிலை கல்விக் கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். தேர்வு மையத்தை பார்வையிட வந்த தொடக்க கல்வி இணை இயக்குனர் கருணாகரன், ஆசிரியர்களை திட்டியதை கண்டிப் பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

ஜப்தி வாகனத்துடன் வரி வசூல் பணி தீவிரம்


பண்ருட்டி: 

                     பண்ருட்டியில் சொத்துவரி, குடிநீர் வரி, வாடகை இனங்கள் செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். பண்ருட்டி நகராட்சிக்கு சொத்துவரி ஒரு கோடி ரூபாயும், குடிநீர் வரி 25 லட்சம் ரூபாய் மற்றும் வாடகை குத்தகை இனங்கள் 25 லட்சம் பாக்கியுள்ளது. இதனையடுத்து நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் தனகோடி  தலைமையில் வரிதண்டலர்கள் வெற்றிசெல்வன், தேவநாதன், சேகர், பாபு, கார்த்திகேயன்  ஆகியோர் 'ஜப்தி வாகனம்'  லாரியுடன் டாம் டாம் அறிவிப்பு செய்து தீவிர வசூல் முகாமில் ஈடுபட்டுள்ளனர். வரி வசூல் முகாமில்   நகராட்சிக்கு நீண்டகாலமாக வரிசெலுத்தாத வியாபார நிறுவனங்களுக்கு ஐப்தி நோட்டீஸ் அளித் தும்,  குடிநீர் இணைப்புக்கு செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டித் தும் நடவடிக்கை எடுத்தனர்.

Read more »

மாற்று திறன் மாணவிக்கு மூன்று சக்கர சைக்கிள்


சிதம்பரம்: 

                   மாற்று திறன்கொண்ட கல்லூரி மாணவிக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த நலத்திட்ட உதவிக் வழங்கும் விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் அருண்மொழிச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் கேதார்நாதன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். அஷ்ரப் அலி வரவேற்றார். சி.முட்லூர் அரசு கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாற்று திறன்கொண்ட மாணவி சத்தியாவுக்கு மூன்று சக்கர சைக்கிள், பின்னத் தூர் நூலகத்திற்கு புத்தக ராக்குகள், மேஜைகள், நாற்காலிகளை மூத்த உறுப்பினர் லத்தீப்கான் வழங்கினார். நிகழ்ச்சியில் சி.முட் லூர் அரசு கல்லூரி ஆங்கில துறைத்தலைவர் சேரமான், முன்னாள் சங்க தலைவர்கள் நடனசபாபதி, நாராயணன், மகபூப் உசேன், யாசின், ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

Read more »

தீயணைப்பு நிலையத்திற்கு வரும் 'தொல்லை பேசி' அழைப்புகள்

கடலூர்:

                     கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வரும் 'தொல்லை பேசி' அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பொது மக்கள் அவசர உதவியை நாட வேண்டும் என்பதற்காக போலீஸ் கன்ட்ரோல் ரூம் 100, தீயணைப்புத்துறை 101, ஆம்புலன்ஸ் 108 போன்ற மூன்று இலக்க எண்கள் அனைத்தும் இலவச அழைப்புகளாகும். மொபைல் மற்றும் லேண்ட் லைன் தொலைபேசியில் இருந்து இந்த எண்களுக்கு காசு இல்லாமல் பேச முடியும். இலவச அழைப்பு என்பதால் சில விஷமிகள் இந்த தொலைபேசிகளோடு விளையாட ஆரம்பித்துவிடுகின்றனர். மொபைல் போனில் இருந்து இந்த அவசர எண்களுக்கு டயல் செய்துவிட்டு பேசாமல் இருப்பது, இணைப்பு கிடைத்தவுடன் மொபைல் போனை குழந்தைகளிடம் கொடுத்துவிடுவது, வேறு ஏதாவது எண் களை சொல்லி வெட்டிக் கதை பேசி நேரத்தை வீணடிப்பது அதிகரித்து வருகிறது. இன்னும் சிலர் முதலில் தீயணைப்புத்துறையினருக்கு அழைப்பு விடுப்  த்து, பின்னர் கான்பிரன்சில் 100க்கு டயல் செய்து இருவரையும் பேசவிடுவது.  அவ்வாறு 100ம் 101ம் மோதிக் கொள்வதை அமைதியாக இருந்து ரசிப்பது. இதுபோன்ற 'திருவிளையாடல்களை' சில விஷமிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். மொபைல் போன் 'சிம் கார்டுகள்' மலிவு விலையில் கிடைப்பதாலும், போலி முகவரி கொடுத்து    சிம்கார்டுகளை வாங்கி உபயோகிப்பவர்களும் இந்த சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் 'தொலைபேசி'  பணி பார்க்கும் தீயணைப்பு துறையினர் அழைப்புகளை அலட்சியப்படுத்த முடியாமலும், சில்மிஷ பேர்வழிகளுடன் வாக்குவாதம் செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின் றனர்.

Read more »

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால் 'செக்காங்குட்டை ஏரி' குட்டையாக மாறியுள்ளது

திட்டக்குடி:

                   ஆக்கிரமிப்பு காரணமாக திட்டக்குடி கூத்தப் பன்குடிகாடு செக்காங் குட்டை ஏரி, தற்போது குட்டையாக மாறியுள்ளது. இதே நிலை நீடித்தால் ஏரியை வருவாய் துறை பதிவேட்டில் மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. திட்டக்குடி கூத்தப் பன்குடிகாடு சாவடி தெருவில் உள்ள செக் காங்குட்டை ஏரிக்கு மழை நீர் மற்றும்  பாளையம் வழியாக வரும் வெள்ளாற்று நீர் மூலம் தண்ணீர் வசதி கிடைத் தது. இங்கிருந்து வெளியேறும் நீர் வாய்க்கால் மூலம் பெரியார் நகர் ககிலன் குட்டைக்கும், அங்கிருந்து வீமனேரிக்கும்  செல்லும். இந்த ஏரி மூலம் அப்பகுதி விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்நிலையில் சில ஆண்டுகளாக செக்காங்குட்டையை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் ஏரியில் கழிப்பிடம் கட்டியும், வைக் கோல் போர் போட்டும், மூங்கில் வளர்த்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் ஏரி தற்போது குட்டையாக காட்சியளிக்கிறது. இதனால் ஏரி வழியாக சுற்றியுள்ள விளைநிலங்களுக்கு சென்று வந்த நடைபாதை காணாத நிலையில் உள்ளது. பல ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்திய செக்காங்குட்டை தூர்ந்து நீர்வரத்து இன்றி பயனற்ற நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருந்ததால், இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்திற்கு உடனடியாக தண்ணீர் எடுக்க ஏரி நீரினை தீயணைப்பு துறையினர் பயன்படுத்தி வந்தனர். இதற்காக ஏரிக்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்ல பயன்படுத்தி வந்த பாதையும் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படாவிட்டால்  கூத்தப்பன் குடிகாடு செக்காங் குட்டை ஏரியே காணாமல் போகும் நிலை ஏற்படும். மேலும் ஏரியை தூர்வாரி, வாய்க்காலை சீரமைத்தால் கோடைக் காலத்தில் மழை இல் லாத நேரத்தில் விவசாயத்திற்கு தடையின்றி தண்ணீர்  கிடைக்கும்.  ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் மேலும் அலட்சியம் காட்டினால் செக்காங்குட்டை ஏரி வருவாய்த்துறை பதிவேட்டில் மட்டுமே இருக்கும். எனவே வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும்.

Read more »

புவனகிரி பேரூராட்சியில் சிமென்ட் மூட்டைகள் பாழ்

புவனகிரி:

                 புவனகிரி பேரூராட்சியில் கட்டுமான பணிக்கு வாங்கிய சிமென்ட் மூட்டைகள் பயன்படுத்தாமலே வீணாகியுள்ளன. புவனகிரி பேரூராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அரசு மூலம் சிமென்ட் மூட்டைகளை வழங்கியது. இதில் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படாத சிமென்ட் மூட்டைகள் பழைய பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டதில் கெட்டியாகி வேறு பணிகளுக்கு உபயோகப் படுத்த முடியாமல் போனது. இந்நிலையில் பழைய பேரூராட்சி அலுவலகத்தை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது.  பழைய பேரூராட்சி அலுவலகத்தில் வைத்திருந்த சிமென்ட் மூட்டைகள் பேரூராட்சி மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியின்  அருகே கொட்டப் பட்டு காட்சி பொருளாக கிடக்கிறது.

Read more »

வன விலங்குகளால் பயிர்கள் நாசம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்


சிறுபாக்கம்:

              சிறுபாக்கம் அருகே வன விலங்குகளால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. சிறுபாக்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் வனப்பகுதியில் மான், மயில், எறும்புத் தின்னி, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் வனவோரத்தில் பயிர் செய்யப்படும் கரும்பு, மரவள்ளி, பருத்தி, மணிலா, மக்காச் சோளம் ஆகியவற்றை தின்றும், அழித்தும் நாசம் செய்து வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு கோரி வனவோர விவசாயிகள், மாவட்ட வன அலுவலர் கீதாஞ்சலி, வனவர் மோகனசுந்தரம் ஆகியோரிடம் முறையிட்டனர். இது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவின்படி, வன விலங்குகளால் பாதித்த 75 வனவோர விவசாயிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக  ஒதுக்கப்பட்டது. இத்தொகையினை நேற்று முன்தினம் வனவர் சுப்புராயன் தலைமையில், வனவோர விவசாயிகள் சங்கத் தலைவர் சுப்ரமணியன், 75 விவசாயிகளுக்கும் வழங்கினார்.

Read more »

மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் இன்று உண்ணாவிரதம்

கிள்ளை:

                பரங்கிப்பேட்டை அருகே மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று (24ம் தேதி) கிராம மக்களின் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சி பகுதியில் தனியார் மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் டவர் அமைக்க வலியுறுத்தி ஊராட்சி தலைவர் வேணுகோபால் தலைமையில் கிராம மக்கள் இன்று காலை  சிதம்பரம்-கிள்ளை சாலையில் முத்தையா நகர் பாலம் அருகில் உண்ணாவிரத போராட் டம் நடத்த உள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior