உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 05, 2009

நாயை கொன்றதற்கு விளக்கம் கேட்டு கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் பன்றிகளை சுடுவதில் சிக்கல்

கடலூர்:

                       நாயை சுட்டு கொன்றதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணையம் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால்  பன்றிகளை சுடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள் ளது.

                   கடலூர் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய & மாநில அரசு கருத்தடை செய்ய திட்டம் கொண்டுவந்த நிலையில் பச்சாங்குப்பத்தில் ஒரு நாய் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல ஆணைய செயலர் ராஜசேகர் கடலூர் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள் ளார். அதில் கடந்த 2001ம் ஆண்டு மத்திய அரசு விலங்குகளுக்கான பிராணி கள் வதைப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி எந்த விலங்கையும் துண்புறுத்த கூடாது. இந்நிலையில் ரேபீஸ் போன்ற நோய் பரவாமல் தடுக்க தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில்  மாநில அரசு கடந்த 2007ம் ஆண்டு தெரு நாய்களுக்கு கருத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டம் கொண்டுவந்துள்ளது.


                         ஆனால் கடலூர் நகராட்சிக்குட்பட்ட பச்சாங்குப் பம் பகுதியில் ஒரு தெரு நாய் சுட்டு கொல்லப்பட்டதாக ஆணையத்திற்கு புகார் வந்துள்ளது. இது குறித்து நகராட்சி  விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இது போன்று பிராணிகளை சட்டத்தின் அடிப்படை யில் சுட்டு கொல்லக்கூடாது. மாற்று நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில் கடலூர் நகராட்சி பகுதியில் சுற்றி திரியும், பன்றிகளை அப்புறப்படுத்த கடந்த 17ம் தேதி  நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டது.  முதுநகர் பகுதியில் பன்றிகளும்  பிடிக்கப்பட் டது.  பன்றிகளை தாங்களே அப்புறப்படுத்துவதற்கு  கால அவகாசம் அளிக்கப்பட்டது. கால அவகாசத்தை தொடர்ந்து பன்றி களை அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் பொதுசுகாதார நலன் கருதி நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நகராட்சி சார்பில்  7ம் தேதி   முதல் பன்றிகளை  அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  பன்றிகளை  சுட்டு கொல் வது  தவிர வேறு வழியில் லாத நிலையில் தற்பொழுது மத்திய ஆணையத்தின் நோட்டீசால் நகராட்சிக்கு பன்றிகளை சுடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆணையர் குமாரிடம்  கேட்ட போது “ மத்திய ஆணையத்தின் கடிதம் விலங்குகளை சுடுவதற்கோ, கொல்வதற்கோ தடை விதிக்கிறது.


                         இதனால் பன்றிகளை அதனை வளர்ப்பவர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்தி சுகாதாரத்தை காக்க வேண்டும் என்றார்.




Read more »

கைதி தற்கொலை வழக்குகோட்டாட்சியர் விசாரணை முடிந்தது


சிதம்பரம்:

                             சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட கைதி சக்திவேல் என்பவர் காவல் நிலையத்திலிருந்த ஓடி வெள்ளாற்றின் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராமலிங்கம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் உத்தரவிட்டார். அதன்படி வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்த மக்களிடம் பல கட்டங்களாக கோட்டாட்சியர் ராமலிங்கம் விசாரணை நடத்தினார். நேற்று இறுதிகட்ட விசாரணை நடத்தினார். இதுதொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

Read more »

ஊரக நூலக போட்டி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கடலூர்:

                 கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                கடலூர் மாவட்டத்தில் 2006&07 மற்றும் 2007&08ம் ஆண்டுகளுக்குரிய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊராட்சிகளில், நிறுவப்பட்டுள்ள நூலகங்களில் 2009, டிசம்பர் மாதம் கடைசி இரு வாரங்களில் ஊரக நூலகப் போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகளில் ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் இளையோர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் வயது மற்றும் படிக்கும் வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுவார்கள்.
இப்போட்டிகள் நடத்தப்படுவதன் முக்கிய குறிக்கோள் சிறார்கள் மற்றும் இளையோர்களிடையே அவர்களுக்குள்ள அறிவுத்திறனை வெளிபடுத்துவதும் மற்றும் புத்தங்களை படிக்கும் பழக்கத்தினை உருவாக்குவதற்கும் ஆகும்.

                          வரைப்படங்களை பார்த்து இடங்களை சுட்டிக்காட்டுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தில் உள்ள புத்தங்களின் அடிப்படையிலான நினைவாற்றல் போட்டி, பேச்சு போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.200, 2ம் பரிசு ரூ.150 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அனைத்து போட்டியாளர்களுக்கும் பங்கு பெற்றமைக்கான சான்றிதழ் மற்றும் ரூ.10 மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் அஞ்சல் ஊழியர் மாநாடு

கடலூர், :

               கடலூரில் 3 நாட்கள் நடந்த தேசிய அஞ்சல் ஊழியர் சங்க தமிழ்நாடு வட்ட 23வது மாநில மாநாட்டு நிறைவு விழாவில் ஐயப்பன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.

                              கடந்த 2ம் தேதி நடந்த துவக்க விழாவில் கொடியேற்று விழா மற்றும் பேரணி நடந்தது. பொதுசெயலாளர் கிஷன்ராவ் தேசிய கொடியும், சம்மேளன பொதுசெயலாளர் தியாகராசன் சம்மேளன கொடியும் ஏற்றிவைத்தனர். நேற்று  மாநாட்டின் நிறைவு நாள் விழா நடந்தது. விழாவிற்கு  மாநில தலைவர் இராமசந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில செயலாளர் முத்துகிருஷ்ணன் துவக்கவுரையாற்றினர். மாநாட்டு வரவேற்புகுழு வினோலின் ஷட்ராக், ரமேஷ், மாநில சங்கம் நிர்வாகிகள் அப்துல்காதிர், விஜயகுமார் ஆகியோர் பேசினர்.  இதில் கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ  பேசுகையில் , சங்கங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது உரிமைகளையும், சலுகைகளையும் தவறாமல் பெற்று தருவதில் அயராமல் செயல்படுகின்றன. மத்திய& மாநில அரசுகள் சங்கங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நியாயமான கோரிக்கைகளை  நிறைவேற்றி வருகிறது என்றார்.

                           அஞ்சல் துறை அதிகாரிகள் சக்கரபர்த்தி, ராஜலிங்கம், ராமானுஜம், செல்வகுமார், வெங்கடேஷ்வரலு, ஜெயசங்கர், கவிஞர் பால்கி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  விரவேற்பு குழு செயலர் இராமசாமி நன்றி கூறினார்.

Read more »

சிதம்பரம் அருகே வங்கி லாக்கரில் இருந்த ரூ.5 லட்சம் நகை மோசடி ஒருவர் கைது மேலாளருக்கு வலை


சிதம்பரம்,:
 
                 சிதம்பரம் அருகே வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகைகளை மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். வங்கி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

              சிதம்பரத்தை அடுத்த வையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி தில்லையம்மாள்(82). நேற்று முன்தினம்  இவர் சிதம்பரம் டிஎஸ்பி மூவேந்தரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது மகள் ராஜலட்சுமி சிதம்பரத்தில் உள்ள வங்கி ஒன்றில் சுமார் 51 பவுன் நகையை லாக்கரில் வைத்திருந்தார். அதே ஊரை சேர்ந்த சோமு என்பவர் வங்கி மேலாளரின் உதவியுடன் நகைகளை எடுத்து மோசடி செய்து விட்டார்.  இதற்கு உடந்தையாக இந்திரா என்பவரும் இருந்ததாக தெரிவித்திருந்தார்.

               இதுகுறித்து டிஎஸ்பி மூவேந்தர், சிதம்பரம் நகர போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்& இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமு(55) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2003ம் ஆண்டு அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றியவரையும், இந்திரா என்ற பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர். வங்கி லாக்கரில் நகை, பொருட்களை வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் வங்கியில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மோசடி செய்துவிட்டதாக வரும் தகவல் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Read more »

போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்21 இடங்களில் சோதனைசாவடி

கடலூர்:

                      பாபர் மசூதி தகர்க்கப்பட்ட நாளான நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். டிசம்பர் 6 பாபர் மசூதி  இடிக்கப்பட்ட நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதியை கறுப்பு நாளாக அறிவித்து பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் போரட்டம் நடத்தி வருகின்றன. வழக்கம் போல் இந்த ஆண்டும் போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. இந்நிலையில் நினைவு நாளை முன் னிட்டு வன்முறை சம்பங் கள் அரங்கேற்றப்படலாம் என்றும்  உளவுத் துறை எச்சரித்துள்ளது. அதைத்தொடர்ந்து  மாவட்டத் தில் எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் தலைமையில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 600 போலீசார் தீவிர பாது காப்பு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளனர். பஸ்நிலையங்கள், ரயில்நிலையங்கள், வணிக நிறுவனங்கள், மத்திய மாநில அரசு கட்டிடங்கள்,. பாலங்கள், தொலைபேசி டவர்கள், துறைமுகம், தலைவர்கள் சிலைகள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் பாதைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீ சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும், கல்யாண மண்டபங்களிலும் சோதனை நடத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என் றும் கியூ பிராஞ்ச் போலீ சார் கண்காணித்து வருகின்றனர். சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. மாவட்டம் முழு வதும் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கும் உத்திரவிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட போலீ சார் அனைவரும் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிரடி  படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் தவ்ஹீத் ஜமாத் ஆகியவற்றின் சார்பில் நாளை  கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்க உள்ளன. இந்நிலையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து நேற்று மாவட்ட எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் தலைமையில் காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது.  

Read more »

சிதம்பரத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தில் முறைகேடு: 2 பேர் மீது வழக்கு

சிதம்பரம், : 


            சிதம்பரம் பள்ளிவாசலில் முறைகேடு நடந்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

                    சிதம்பரம் தொப்பை யன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா என்கிற முகமது ஜியாவுதீன். இவர் லால்கான் பள்ளி வாசலில் முறைகேடுகள் நடப்பதாகவும், பள்ளி வாசலின் வக்பு வாரிய சொத்துக்களை பொறுப்பில் உள்ள இப்ராகிம் ஷா, அதீஸ்கான் ஆகிய இரு வரும் முறைகேடாக அனுபவித்து வருவதாகவும்,  இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிதம்பரம் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஈஸ்வர மூர்த்தி, இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் இப்ராகிம் ஷா, அதீஸ்கான் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Read more »

தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

கடலூர்: 


கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. 


                                கருத்தரங்கிற்கு நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார்சாம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரவி வரவேற் றார். கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) மனோகரன், கல்வியாளர் நாகராஜன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் முத்துராமகிருஷ்ணன், முருகன் ஆகியோர் பேசினர். என்எஸ்எஸ் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.




Read more »

ஆசிரியர் பயிற்றுனர் விண்ணப்பம் கல்வி அலுவலகத்தில் விற்பனை முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கடலூர் : 

கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப் பில்  கூறியிருப்பதாவது;

          2009&10ம் ஆண்டிற் கான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் காலியாக உள்ள 564 வட் டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள் ளனர். 

                  இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் கடலூர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் 14ம் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை தவிர) விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் ரூ.50 மட்டும். 

                        

                விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் எஸ்சி ,எஸ்டி இனத்தவர்களுக்கு ரூ.150க்கான வங்கி வரவும் மற்ற இதர இனத்தவர்களுக்கு ரூ.300க்கான வங்கி வரவும் “தி சேர்மன் டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்ட் சென்னை&6 என்ற முகவரிக்கு பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். 


                           பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடலூர் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய கடைசி நாள் 14ம் தேதி ஆகும். பிஏ, பிஎஸ்சி, பி.லிட் மற்றும் பிஎட் கல்வி தகுதி கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

Read more »

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்

அண்ணாமலைநகர்: 

            சிதம்பரத்தில் அக்னி சிறகுகள் இயக்கம் சார்பில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது. பிரசாரத்தை  சமூக ஆர்வலர் மணிவண்ணன் துவக்கிவைத்து பேசினார். செயலாளர் சுப்பிரமணிய சிவா தலைமையில் இயக்க உறுப்பினர்கள் பொது மக்களிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினர். இயக்க உறுப்பினர் கள் ஜெயசிம்மன், ஜான்பாண்டியன், மணிமாறன், கார்த்திக், சதீஷ், விஜயராஜ், பரணிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் சுகன்ராஜ் நன்றி கூறினார்.

Read more »

கிராமங்களில் நூலகம் அமைக்க முடிவு


சிதம்பரம்: 


       கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அண்ணா மறு
மலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நூலகம், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் புவனகிரியில் நடந்தது. 


         மாவட்ட உதவி திட்ட அதிகாரி சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நீலகண்டன், ஜெயக்குமார், ஜமூனா, ராஜாராமன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார் கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நூலகம் இல்லாத கிராமங்களில் உடனே நூலகம் அமைக்கவேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு  உதவி திட்ட அதிகாரி சேகர் உத்தரவிட்டார்.

Read more »

தொடர் விபத்து எதிரொலி பள்ளி வாகனங்கள் ஆய்வு தீவிரம் நடவடிக்கை தொடர கோரிக்கை

கடலூர்,: 

                       கடலூரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பள்ளி வாகனங்களை திடீர் சோதனை நடத்தி விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர் .ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த நிலையில் நடவடிக்கை தொடர வேண்டும் என சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.   புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு என்ற இடத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து ஒரு சிறுவன் பலியானான். 40 குழந்தைகள் காயம் அடைந்தனர். 

அதைத்தொடர்ந்து வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் நாள் தோறும் 8 மணி முதல் 10 மணி வரை பள்ளி வாகனங்களை திடீர் தணிக்கை செய்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போக்குவரத்து ஆணையர் மச்சேந்திரநாதன்  உத்தரவிட்டார்.


இதை போல் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் வருவாய்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட எஸ்.பி அஷ்வின்கோட்னீஸ் போக்குவரத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டாரப்போக்குவரத்துதுறை, வருவாய் துறை, காவல்துறையினர் இணைந்து பள்ளி வாகனங்களை  அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில் விதிமுறைகள் மீறி இயங்கி சுமார் 100 வாகனங்களுக்கு  ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இயங்கிய 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று வேதாரண்யத்தில் ஏற்பட்ட பள்ளி வேன் விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகி னர். 



இதை தொடர்ந்து கடலூர் டவுன்ஹால் அருகே அதிரடி வாகன சோதனை நடத்தப்பட் டது. வட்டாரபோக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் ஆய்வாளர்கள் சுதாகர், வேலுமணி, கோகுலகிருஷ் ணன், கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி, போக்குவரத்து ஆய்வாளர் ராம தாஸ் ஆகியோர் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்தனர். 


இதில் எந்த வித ஆவணமும் இல்லாத ஆம்னி பள்ளி வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை கடைபிடிக்காத 10 வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டது. இந்த கூட்டு நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நடவடிக்கை தொடர வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்பு கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.




Read more »

கட்டுக்கடங்காத ப‌ள்ளி வ‌ôக​ன‌ங்​க‌ள்?



கட ​லூ‌ர்,​ டிச. 4: ​ 

                                விதி​க‌ளை மீறி ப‌ள்ளி ம‌ôண​வ‌ர்​க‌ளை வ‌ôக​ன‌ங்​க​ளி‌ல் ஏ‌ற்​றி‌ச் ‌செ‌ல்​லு‌ம் நி‌லை கட​லூ​ரி‌ல் ‌தொடர்ந்து  நீடி‌த்து வரு​கி​றது.

                            க​ட​லூ​ரி‌ல் சும‌ô‌ர் 40 ஆயி​ர‌ம் ம‌ôணவ,​ ம‌ôண​வி​க‌ள் ப‌ல்​‌வேறு க‌ல்வி நி‌லை​ய‌ங்​க​ளி‌ல் படி‌த்து வரு​கி‌ன்​ற​ன‌ர். ‌பெரு‌ம்​ப‌ô​ல‌ôன ப‌ள்​ளி​க‌ள்,​ நக​ரி‌ன் ‌தேசிய ‌நெடு‌ஞ்​ச‌ô‌லை அ‌ல்​லது ம‌ôநில ‌நெடு‌ஞ்​ச‌ô‌லை ‌பே‌ô‌ன்ற பிர​த‌ô​ன‌ச் ச‌ô‌லை​க​ளி‌ன் ஓர‌ங்​க​ளி‌ல்​த‌ô‌ன் அ‌மை‌ந்​து‌ள்​ளன.÷ந ​க​ரு‌க்​கு‌ள் அரசு ‌பே‌ô‌க்​கு​வ​ர‌த்​து‌க் கழ​க‌ங்​க‌ள் ‌பே‌ôதிய அளவு ப‌ஸ் வசதி ‌செ‌ய்து ‌கெ‌ôடு‌க்​க‌ô​த​த‌ô‌ல் ப‌ள்ளி வ‌ôக​ன‌ங்​க‌ள்,​ தனி​ய‌ô‌ர் வ‌ôக​ன‌ங்​க‌ள்,​ ஆ‌ட்​‌டே‌ô‌க்​க‌ள் ‌பே‌ô‌ன்​ற​வ‌ற்‌றை ம‌ôண​வ‌ர்​க​ளி‌ன் ‌பெ‌ற்​‌றே‌ô‌ர் ந‌ôட​‌வே‌ண்​டிய க‌ட்​ட‌ô​ய‌ம் ஏ‌ற்​ப‌ட்டு இரு‌க்​கி​றது.÷இ‌தை ச‌ôத​ம‌ô‌க்​கி‌க் ‌கெ‌ô‌ள்​ளு‌ம் ப‌ள்ளி,​ க‌ல்​லூரி நி‌ர்​வ‌ô​க‌ங்​க‌ள் ‌பெரு‌ந்​‌தெ‌ô​‌கை‌யை ப‌ஸ் க‌ட்​ட​ண​ம‌ôக வசூ​லி‌த்து ‌கெ‌ô‌ள்​கி‌ன்​றன. 3 ம‌ôத‌ங்​க​ளு‌க்கு ரூ. 400 முத‌ல் ரூ. 750 வ‌ரை ​ வசூ​லி‌க்​கி‌ன்​ற​ன‌ர். சில ப‌ள்​ளி​க‌ள் சு‌ற்​று​ல‌ô​வு‌க்கு என,​ ஒரு ‌தெ‌ô‌கை‌யை ஆ‌ண்டு ‌தெ‌ôட‌க்​க‌த்​தி​‌லே‌யே வசூ​லி‌த்து விடு​கி‌ன்​றன.÷க‌ô‌லை,​ ம‌ô‌லை ம‌ôண​வ‌ர்​க‌ளை அ‌ழை‌த்​து‌ச் ‌செ‌ல்​ல‌ôத ‌நேர‌ங்​க​ளி‌ல்,​ ப‌ஸ்​க‌ள் முட‌ங்​கி‌க் கிட‌க்​க‌க் கூட‌ôது எ‌ன்​ப​த‌ற்​க‌ôக,​ ​ தின​மு‌ம் ஒரு வகு‌ப்பு ம‌ôண​வ‌ர்​க‌ளை கு‌றை‌ந்​த​ப‌ட்​ச‌ம் அரு‌கே உ‌ள்ள புது‌வை ம‌ôநி​ல‌த்​து‌க்​க‌ô​க​வது அ‌ழை‌த்​து‌ச் ‌செ‌ல்​கி‌ன்​ற​ன‌ர்.÷ப‌ள் ​ளி​க‌ள் ‌வை‌த்து இரு‌க்​கு‌ம் ப‌ஸ்​க‌ள் ‌பெரு‌ம்​ப‌ô​லு‌ம் 56 இரு‌க்​‌கை​க‌ள் ‌கெ‌ô‌ண்​ட‌வை. ஆன‌ô‌ல் அவ‌ற்​றி‌ல் மு‌ம்​ம​ட‌ங்கு ம‌ôண​வ‌ர்​க‌ளை ஏ‌ற்​றி‌ச் ‌செ‌ல்​வது கட​லூ​ரி‌ல் மிக‌ச் ச‌ôத‌ô​ரண விஷ​ய‌ம். கிர‌ô​ம‌ப் பகு​தி​க‌ள் வ‌ரை ‌செ‌ன்று ம‌ôண​வ‌ர்​க​‌ளை‌ச் ‌சேக​ரி‌த்து வரு‌ம் இ‌ந்த வ‌ôக​ன‌ங்​க​ளி‌ல் பய​ண‌ம் ‌செ‌ய்​யு‌ம் ம‌ôண​வ‌ர்​க​ளி‌ன் நி‌லை ‌மேலு‌ம் ‌மே‌ôச‌ம். ஆடு,​ ம‌ôடு​க‌ளை விட ‌மே‌ôச​ம‌ôன நி‌லை​யி‌ல் ம‌ôணவ,​ ம‌ôண​வி​க‌ள் அ‌ழை‌த்​து​வ​ர‌ப்​ப​டு‌ம் நி‌லை உ‌ள்​ளது.÷ப‌ள்ளி வ‌ôக​ன‌ங்​க​‌ளை‌ப் ‌பே‌ôல ப‌ன்​ம​ட‌ங்கு எ‌ண்​ணி‌க்‌கை தனி​ய‌ô‌ர் வ‌ôக​ன‌ங்​க​ள‌ôன ம‌ôருதி,​ ஆ‌ம்னி ‌வே‌ன்​க‌ள் ம‌ற்​று‌ம் பிற ‌வே‌ன்​க‌ள்,​ ஆ‌ட்‌டே‌ô ரி‌க்​ஷ‌ô‌க்​க‌ள்,​ ‌ஷே‌ர் ஆ‌ட்​‌டே‌ô‌க்​க‌ள் ‌பே‌ô‌ன்​ற‌வை ம‌ôணவ,​ ம‌ôண​வி​க‌ளை ப‌ள்​ளி​க‌ள் ம‌ற்​று‌ம் க‌ல்​லூ​ரி​க​ளு‌க்கு அ‌ழை‌த்​து​வ​ர‌ப் பய‌ன்​ப​டு‌த்​த‌ப்​ப​டு​கி‌ன்​றன. கட​லூ​ரி‌ல் சும‌ô‌ர் 2,500 ஆ‌ட்​‌டே‌ô‌க்​க‌ள் இய‌க்​க‌ப்​ப​டு​கி‌ன்​றன. ந​க​ர‌ம் விரி​வ​‌டை‌ந்த அள​வு‌க்கு புதிய நகர ப‌ஸ் வழி‌த்​த​ட‌ங்​க‌ள் உரு​வ‌ô‌க்​க‌ô​த‌தே இத‌ற்கு க‌ôர​ண‌ம் எ‌ன்​கி‌ன்​ற​ன‌ர் ‌பெ‌ôது​ம‌க்​க‌ள். ஆ‌ட்​‌டே‌ô‌க்​க​ளி‌ல் கு‌றை‌ந்த ப‌ட்​ச‌ம் 10 சிறு​வ‌ர்​க‌ள் வ‌ரை அ‌ழை‌த்​து‌ச்​‌செ‌ல்​ல‌ப்​ப​டு​கி‌ன்​ற​ன‌ர்.÷7 ‌பே‌ர் பய​ண‌ம் ‌செ‌ய்ய அனு​ம​தி‌க்​க‌ப்​ப‌ட்ட ‌வே‌ன்​க​ளி‌ல் 15 ‌பேரு‌க்​கு‌க் கு‌றை​வி‌ல்​ல‌ô​ம‌ல் ம‌ôண​வ‌ர்​க‌ள் ஏ‌ற்​ற‌ப்​ப​டு​கி‌ன்​ற​ன‌ர். குறி‌ப்​பி‌ட்ட எ‌ண்​ணி‌க்​‌கை​யி‌ல்​த‌ô‌ன் நப‌ர்​க‌ளை ஏ‌ற்ற ‌வே‌ண்​டு‌ம் எ‌ன்று ‌பெ‌ற்​‌றே‌ô‌ர் வ‌ற்​பு​று‌த்​தி​ன‌ô‌ல்,​ ஆ‌ட்​‌டே‌ô‌க்​க​ளி‌ல் பி‌ள்​‌ளை​க‌ளை அனு‌ப்ப ஒரு நப​ரு‌க்கு ரூ.500-‌க்கு‌க் கு‌றை​ய‌ô​ம‌ல் க‌ட்​ட​ண‌ம் ‌கே‌ட்​கி‌ன்​ற​ன‌ர்.÷க ​ட‌ந்த 2 ஆ‌ண்​டு​க​ளு‌க்கு மு‌ன்​ன‌ர்,​ கட​லூ‌ர் ‌நெ‌ல்​லி‌க்​கு‌ப்​ப‌ம் ச‌ô‌லை​யி‌ல் ப‌ள்ளி ‌வே‌ன் கவி‌ழ்‌ந்து 12 குழ‌ந்​‌தை​க‌ள் இற‌ந்த ச‌ம்​ப​வ‌ம் உ‌ள்​ளி‌ட்ட,​ பல ‌சே‌ôக ச‌ம்​ப​வ‌ங்​க‌ள் நிக‌ழ்‌ந்​து​‌கெ‌ô‌ண்​டு​த‌ô‌ன் இரு‌க்​கி‌ன்​றன. எனி​னு‌ம் அனு​ம​தி‌க்​க‌ப்​ப‌ட்ட எ‌ண்​ணி‌க்​‌கை​‌யை​விட அதி​க‌ப்​ப​டி​ய‌ôன ம‌ôண​வ‌ர்​க‌ளை ஏ‌ற்​றி‌ச் ‌செ‌ல்​லு‌ம் வ‌ôக​ன‌ங்​க‌ள் மீது நட​வ​டி‌க்‌கை இ‌ன்​ன​மு‌ம் கடு​‌மை​ய‌ô​க‌ப் ப‌ôய​வி‌ல்‌லை எ‌ன்​ப​து​த‌ô‌ன் ‌பெ‌ôது​ம‌க்​க​ளி‌ன் கு‌ற்​ற‌ச்​ச‌ô‌ட்டு.÷
சே ​ல‌ம்,​ ர‌ôசி​பு​ர‌ம்,​ திரு‌ச்​‌செ‌ங்​‌கே‌ôடு உ‌ள்​ளி‌ட்ட பகு​தி​க​ளி‌ல் ப‌ள்ளி வ‌ôக​ன‌ங்​க​ளி‌ல் கூடு​த‌ல் எ‌ண்​ணி‌க்‌கை ம‌ôண​வ‌ர்​க‌ளை ஏ‌ற்​று​வ​த‌ற்கு,​ ‌பெ‌ற்​‌றே‌ô‌ர் அனு​ம​தி‌ப்​பது இ‌ல்​‌லை​ய‌ô‌ம். ப‌ஸ்​ஸி‌ல் அம‌ர்‌ந்து ‌செ‌ல்ல அனு​ம​தி‌க்​க‌ô​வி‌ட்​ட‌ô‌ல்,​ ​ ப‌ஸ் க‌ட்​ட​ண‌ம் ‌செலு‌த்த முடி​ய‌ôது எ‌ன்று ‌பெ‌ற்​‌றே‌ô‌ர் ‌தெரி​வி‌க்​கி‌ன்​ற​ன‌ர். ஆன‌ô‌ல்,​ அ‌ந்த அள​வு‌க்கு கட​லூ​ரி‌ல் இ‌ன்​ன​மு‌ம் விழி‌ப்​பு​ண‌ர்வு ஏ‌ற்​ப​ட​வி‌ல்‌லை.÷எ ​னி​னு‌ம்,​ ‌பே‌ô‌க்​கு​வ​ர‌த்து ம‌ற்​று‌ம் க‌ôவ‌ல் து‌றை அலு​வ​ல‌ர்​க‌ள் த‌ங்​க‌ள் கட​‌மை‌யை,​ முழு​‌மை​ய‌ôக ஆ‌ற்​றி​ன‌ô‌ல் இ‌ப்​பி​ர‌ச்​‌னை​யி‌ல் ஓர​ள​வு‌க்​‌கே​னு‌ம் ம‌ôண​வ‌ர்​க​ளு‌க்கு ப‌ôது​க‌ô‌ப்​பு‌ம்,​ நிய‌ô​ய​மு‌ம் கி‌டை‌க்​கு‌ம் எ‌ன்று ‌பெ‌ற்​‌றே‌ô‌ர்​க‌ள் ‌தெரி​வி‌க்​கி‌ன்​ற​ன‌ர். க​ட​லூ‌ர்-​ ‌நெ‌ல்​லி‌க்​கு‌ப்​ப‌ம் ச‌ô‌லை​யி‌ல் நிக​ழ‌ந்த விப‌த்​‌தை‌த் ‌தெ‌ôட‌ர்‌ந்து சில ம‌ôத‌ங்​க‌ள் ச‌ம்​ப‌ந்​த‌ப்​ப‌ட்ட து‌றை அலு​வ​ல‌ர்​க‌ள் நட​வ​டி‌க்‌கை எடு‌ப்​பது ‌பே‌ô‌ன்ற ‌தே‌ô‌ற்​ற‌த்‌தை ‌வெளி‌ப்​ப​டு‌த்​தி​ன‌ர். அத‌ன்​பி​றகு நட​வ​டி‌க்​‌கை​க​‌ளை‌க் ‌கைவி‌ட்​ட​ன‌ர்.

அ‌ண்​‌மை​யி‌ல் ‌பெரி​ய‌ப்​ப‌ட்டு அரு‌கே ப‌ள்ளி ‌வே‌ன் கவி‌ழ்‌ந்து,​ ஒரு ம‌ôண​வ‌ர் இற‌ந்​த‌ô‌ர். 48 ம‌ôண​வ‌ர்​க‌ள் க‌ôய‌ம் அ‌டை‌ந்​த​ன‌ர். அ‌தை‌த் ‌தெ‌ôட‌ர்‌ந்து கட‌ந்த சில ந‌ô‌ள்​க​ள‌ôக வ‌ôக​ன‌ங்​க‌ள் தணி‌க்‌கை ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு வரு​கி‌ன்​றன. எனி​னு‌ம்,​ அனு​ம​தி‌க்​க‌ப்​ப‌ட்​ட​‌தை​விட கூடு​த‌ல் ம‌ôண​வ‌ர்​க‌ளை ஏ‌ற்​று​த‌ல்,​ மிக‌ப் ப‌ழைய வ‌ôக​ன‌ங்​க‌ளை வ‌ர்​ண‌ம் தீ‌ட்டி ஓ‌ட்​டு​த‌ல்,​ அனு​ப​வ‌ம் இ‌ல்​ல‌ôத ஓ‌ட்​டு​ந‌ர்​க​ள‌ô‌ல் இய‌க்​க‌ப்​ப​டு​வது,​ முத​லு​தவி ‌பெ‌ட்டி இ‌ல்​ல‌ô​தது என‌க் கு‌றை​ப‌ô​டு​க​ளி‌ன் ப‌ட்​டி​ய‌ல் நீ‌ண்டு ‌கெ‌ô‌ண்​டு​த‌ô‌ன் ‌பே‌ôகி​றது.÷எ​ன‌வே,​ இள‌ம் த‌லை​மு​‌றை​யி​ன​ரி‌ன் நல‌ன்​க​‌ளை‌க் கரு‌த்​தி‌ல் ‌கெ‌ô‌ண்டு,​ ​ ‌பே‌ô‌க்​கு​வ​ர‌த்து ம‌ற்​று‌ம் க‌ôவ‌ல் து‌றை அலு​வ​ல‌ர்​க‌ள் த‌ங்​க‌ள் கட​‌மை‌யை இ‌ன்​னு‌ம் ‌கெ‌ஞ்​ச‌ம் உண‌ர்‌ந்து ‌செய​ல‌ô‌ற்ற ‌வே‌ண்​டு‌ம் என கட​லூ‌ர் ம‌க்​க‌ள் எதி‌ர்​ப‌ô‌ர்‌க்​கி‌ன்​ற​ன‌ர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior