உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 28, 2011

கடலூர் மாவட்டத்தில் எந்தக் கட்சி வெற்றி பெறும் ஒரு அலசல்


election 2011 வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் கூட்டணி பலம் : கடலூர் மாவட்ட நிலவரம்
  




          கடலூர் மாவட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பில் நெல்லிக்குப்பம் நீக்கப்பட்டு, நெய்வேலி உருவாக்கப்பட்டுள்ளது. மங்களூர் (தனி), திட்டக்குடி (தனி) தொகுதியானது. தற்போது மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) என, ஒன்பது சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கடலூர்: 

                தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளி வளர்ச்சிக்கும், கிராம சாலை மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்தார். பாதாள சாக்கடைத் திட்டப் பணி முடியாமல், புழுதி நகரமானதாலும், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காததும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தும் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி உள்ளது. அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி பலம், தி.மு.க., வேட்பாளருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.


பண்ருட்டி: 

                  பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன், பண்ருட்டியில் அரசு கல்லூரி, முந்திரி ஏற்றுமதி மண்டலம் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தவர், இன்ஜினியரிங் கல்லூரியை கொண்டு வந்தார். பண்ருட்டி நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கடலூர் - சித்தூர் சாலை புறவழிச் சாலை, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம், பெண்ணையாறு கஸ்டம்ஸ் சாலை திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கவில்லை. தற்போது நெய்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். தி.மு.க., சார்பில், நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் போட்டியிடுகிறார். கூட்டணி பலமாக இருந்தாலும், உட்கட்சி பூசல் மற்றும் தொகுதியில், அ.தி.மு.க., அணியில் உள்ள, தே.மு.தி.க.,வின் செல்வாக்கால் கடும் போட்டியை ஏற்பட்டுள்ளது.


குறிஞ்சிப்பாடி:  

                 1996ம் ஆண்டு முதல் மூன்று முறை தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற பன்னீர் செல்வம், இரு முறை அமைச்சர் பதவி வகித்ததால் இத்தொகுதி நன்கு வளர்ச்சி பெற்றுள்ளதோடு, தாலுகா அந்தஸ்தையும் பெற்றுள்ளது. விசைத்தறி கூடம் அமைக்காததும், வடலூர் தொழிற்பேட்டையை மேம்படுத்தாததும் பெரும் குறை. மீண்டும் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், சொரத்தூர் ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., கூட்டணி, அமைச்சருக்கு கடும் சோதனை தான்.


நெய்வேலி:  

                பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளை பிரித்து, புதிதாக இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள பண்ருட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த, 42 ஊராட்சிகளில் முந்திரி விவசாயமே பிரதான தொழில். பண்ருட்டி எம்.எல்.ஏ., வேல்முருகன், தற்போது இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தே.தி.மு.க., சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். சம பலத்தில் உள்ள இவர்களின் வெற்றியை தீர்மானிப்பது, என்.எல்.சி., தொழிலாளர்கள் கையில் உள்ளது.


சிதம்பரம்: 

                 அ.தி.மு.க., அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தொகுதியில் தொழில் வளர்ச்சி இல்லை. இதுவரை இந்தத் தொகுதியில் வென்றவர்கள், கடைமடை பகுதியாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க., கூட்டணியில், மூ.மு.க., ஸ்ரீதர் வாண்டையார் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.


காட்டுமன்னார்கோவில் (தனி): 

          வி.சி., கட்சி எம்.எல்.ஏ., ரவிக்குமார், நாகை - கடலூர் மாவட்டத்தை இணைக்கும் முட்டம் பாலம், சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலைகளை புதுப்பித்தது, நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக, 115 கோடி ரூபாய் நிதி பெற்றுத் தந்ததை சாதனைகளாக கூறுகிறார். "தொழிற்பேட்டை துவங்குவேன், நந்தனார் கல்வி நிறுவனங்களில் மகளிர் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி துவங்கப்படும்' என்றார். அதற்கான முயற்சியே எடுக்கவில்லை. வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் கூட மக்களை சந்திக்கவில்லை. மீண்டும் ரவிக்குமாரே போட்டியிடுகிறார். அ.தி.மு.க.,வில் முருகுமாறன் களமிறங்கியுள்ளார்.


புவனகிரி: 

             அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம் உள்ளார். இன்று வரை சிற்றூராட்சி அந்தஸ்தில் தான் இருந்து வருகிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. "எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருப்பதால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை' என, கூறிவிட்டார். அ.தி.மு.க., கோட்டையான இங்கு, மீண்டும் அவரே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ம.க.,வின் அறிவுச்செல்வன் இறக்கப்பட்டுள்ளார். மறுசீரமைப்பால், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாக அமையும் என்பது தான் தொகுதியின் பரவலான பேச்சு.


விருத்தாசலம்: 

              விஜயகாந்த் வெற்றி பெற்றதால், வி.ஐ.பி., அந்தஸ்தைப் பெற்றது. தொகுதி நிதியைத் தவிர, அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற முயற்சிக்கவில்லை. வாக்காளர்களிடம் உறுதியளித்த மகளிர் கல்லூரி உள்ளிட்ட தொகுதி வளர்ச்சி விஷயங்களை கண்டுகொள்ளவேயில்லை. இந்த தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்ற காங்கிரசின் நீதிராஜன் இம்முறை களமிறங்கியுள்ளார். தே.மு.தி.க., சார்பில், முத்துகுமார் போட்டியிடுகிறார். இரு கூட்டணிகளும் வலுவாக உள்ளதால் கடும் போட்டி நிச்சயம்.


திட்டக்குடி (தனி): 

             கல்வி, பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ளது. வி.சி., கட்சியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானவர் செல்வப் பெருந்தகை. சொன்னதைச் செய்வதற்குள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மாறி, தற்போது காங்கிரசில் இருக்கிறார் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தொழிற்சாலைகளைக் கொண்டு வராதது பெரும் குறை. வி.சி., சார்பில், சிந்தனைச்செல்வன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., சார்பில் தமிழழகன் போட்டியிடுகிறார். கூட்டணி பலமே வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது.


முக்கியத் தொழில் :  

விவசாயம், கைத்தறி நெசவு, மீன்பிடி தொழில்.


நீண்டகால கோரிக்கைகள் : 

வெள்ள சேதத்தை தவிர்க்க வடிகால், தொழிற்சாலைகள்.

Read more »

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : 9.5 லட்சம் பேர் பங்கேற்பு


அனைவருக்கும்  வாழ்த்துக்கள் 
 

 

                ஒன்பதரை லட்சம் மாணவர்கள் பங்கேற்கும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், இன்று முதல் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6,922 பள்ளிகள் மூலம், எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவர்கள், தேர்வெழுதுகின்றனர். இவர்களில், நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து 935 பேர் மாணவியர். இவர்களுடன், தனித்தேர்வு மாணவர்கள் 97 ஆயிரத்து 655 பேரும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதுகின்றனர்.

              சென்னையில் மட்டும் 272 பள்ளிகளில் இருந்து, 36 ஆயிரத்து 148 மாணவர்களும், புதுச்சேரியில் 226 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 529 மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். சென்னையில், 223 மையங்களிலும், புதுச்சேரியில் 47 மையங்களிலும் தேர்வுகள் நடக்கின்றன. ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கும் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில், 4,000 உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபடுகின்றனர்.

Read more »

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக் தேர்வில் சாதனை

கடலூர்:

            பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பாராட்டினார்.
              வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் இணைவு பெற்ற கடலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் 2010ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த பல்கலைக் கழகத் தேர்வில் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் வெங்கடேஸ்வரன் பொருளாதாரத்திலும், பெருமாள் தொழிற்வேதியலிலும் முதலிடம் பெற்றனர். மேலும் தொழிற்வேதியல் பாடத்தில் பாலமுருகன் 3ம் இடத்தையும், செல்வநாதன் 4ம் இடத்தையும், கார்த்திகேயன் 5ம் இடத்தையும் பெற்றனர். இயற்பியலில் மாணவி நாகலட்சுமி 8ம் இடத்தையும், முதுகலை கணிதத்தில் மாணவி முல்லை 5ம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் ரங்கநாதன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினார்.

பின்னர் கல்லூரி முதல்வர் ரங்கநாதன் கூறியது:

               திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துடன் பெரியார் கலைக் கல்லூரி இணைவு பெற்று 8 ஆண்டுகளில் முதல் முறையாக பல்கலைக் கழக தேர்வில் எங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர்களுக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.வரும் காலங்களிலும் கல்லூரி மாணவர்களை முதல் 10 இடங்களுக்குள் வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் எம்.எஸ்சி., வேதியில், இயற்பியல், விலங்கியல் மற்றும் எம்.ஏ., வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தெரிவித்தார்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

விருத்தாசலம் : 

          விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. சங்க திட்ட மேலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் தண்டபாணி, ராஜசேகர் முன்னிலை வகித்தனர். முகாமில் தமிழ்நாடு எய்ட்ஸ் சங்க பயிற்றுனர் திருநங்கை ரம்யா எய்ட்ஸ் பரவும் முறை, அதற்கான பாதுகாப்பு முறைகள் குறித்தும், ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். ஆற்றுப்படுத்துனர் செந்தில்குமார், கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி தமிழ்த்துறை மாணவர் தங்கப் பதக்கம்

 விருத்தாசலம் ; 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தங்க பதக்கம் வென்ற மாணவரை கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி தமிழ்த்துறை மாணவர் விஜயகுமார். இவர் திருவள்ளுவர் பல்கலைக் கழக அளவில் கடந்த கல்வியாண்டில் நடந்த எம்.ஏ., தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். அவருக்கு கல்லூரி முதல்வர் மனோன்மணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தமிழ்த்துறை பேராசிரியர்கள் முத்தழகன், தண்டபாணி, சிவக்குமார், கருணாநிதி, உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர் உடனிருந்தனர். மாணவன் விஜயகுமார் பி.ஏ., தேர்தவிலும் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது.

Read more »

Over 9,000 poll officials get hands-on experience of EVMs


Functioning of EVM being demonstrated to polling officials in Cuddalore on Sunday.


CUDDALORE: 

        As many as 9,458 polling officials in Cuddalore district, selected on a random basis from computerised data, began getting their hands-on experience on the Electronic Voting Machines and SMS messaging for the technology-driven Assembly elections.

         Addressing the officials, P.Seetharaman, District Collector and District Election Officer, said that unlike the previous elections a lot of technological innovations had been introduced for the coming Assembly elections. The primary among these would be webcasting of voting process (as in-built web cameras in laptops would capture images within the sensitive polling stations) and SMS communication.

             The SIM cards obtained from the Bharat Sanchar Nigam Ltd., exclusively meant for the election, would be given to polling officials, the Central Para Military Forces and the election observers on April 3, with a validity period of 10 days. Mr. Seetharaman said that a preliminary test would be conducted to determine the load-carrying capacity of the BSNL micro-towers, so as to rectify any shortcoming to carry on communication on the polling day without any hiccup.

                Wherever there was inadequacy in the tower capacity, 10-digit phone numbers would be given for communication. Mr. Seetharaman also said that a communication plan would be put in place in which the contact numbers of all zonal officers, returning officers, assistant returning officers and the district electoral officers would be provided at the polling stations.

Neighbourhood

             Cell phone numbers of people residing in the vicinity of every polling station would be obtained and sent to the Election Commission. This was meant to ensure that even if there was a gap in communication from the presiding officer concerned, the status report could be obtained from the neighbours. The Collector said that he had taken the initiative to keep ready a mobile medical team for every block to attend to any health problem of voters and a mobile technical team to set right any glitches in the EVMs.

           Women police personnel and Anganwadi workers would be available at the polling stations to take care of the personal needs of the women polling officials, he said. The Election Commission had given 10 instructions to be followed by the officials on poll duty, including a vow to conduct the election in an effective, unified and neutral manner, accord priority to election work over personal commitments, ensure free and fair election, act with team spirit, guide the voters and contribute their best for upholding democracy.

Read more »

Differently abled to get help for voting

CUDDALORE: 

          The differently abled persons and visually impaired voters will get assistance from the staff of the District Rehabilitation Department for casting their votes in the election in Cuddalore district, according to P.Seetharaman, Collector and District Election Officer (DEO).

           Addressing poll officials at St.Joseph's school auditorium here on Sunday, the Collector said that the Election Commission had instructed the DEO to set up ramps or wooden planks at the polling stations. While the physically challenged could go in their tri-wheelers to the polling enclosure to exercise their franchise, the visually impaired would be given a Braille list of candidates and guided by accompanying associates.

           However, to ensure fairness and to ward off mischievous elements (who might pretend to assist but might force people to vote for the candidate of their choice) personnel of the District Rehabilitation Department would be deputed to render assistance to such voters. There would be separate queues for women, men, and, old and infirm voters at the polling stations. Shade sheds would be provided to all the polling stations and oral re-hydration powder would be kept ready to be given to the voters who might develop health complications.

           In case of those voters who exercise the 49(O) option (option to not vote), they could do so by signing or fixing thumb impression in Form 17-A. As far as Cuddalore district was concerned, cent per cent voters had been given the EPICs, the Collector said. The Collector further said that with the permission of the Election Commission, 50 new polling stations had been set up in the district to keep the voters' strength in each of the polling station below 1,000.

           The new stations were carved out of rural booths having more than 1,400 voters and urban booths having more than 1,200 voters. Earlier, there were 1,945 polling stations and now the number had gone up to 1,995, Mr. Seetharaman added.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior