உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 04, 2010

வலைப்பூ அறிமுகம் - சோரியாசிஸ் நோய் பற்றிய தகவல்


வலைப்பூ முகவரி : http://jayonline.blogspot.com/

             தோழி மதுரை பொண்ணு அவர்களின் சோரியாஸ் நோய் பற்றிய தகவல் கொண்ட சமூக வலைத்தளம். சோரியாஸ் நோய் பற்றிய கீழ்காணும் அனைத்து தகவல்களையும் தலைப்பு வாரியாக இந்த வலைதளத்தின்  ஊடாக அறிந்துகொள்ளலாம்.

ஆரோக்கிய வழிகள்
உண்மையான காரணங்கள்
உண்மையான மருந்து
உருவாகும் சூழ்நிலை
ஏமாத்து வேலைகள்
சோரியாசிஸ் ஆண்களுக்கு
சோரியாசிஸ் குணமாக
மருத்துவ குழப்பங்கள்
முதல் பதிவு
லிக்குவிட் பாரபின் 
 
நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள் : 
 
                    இது போன்ற சமூக வலைதளங்களை வரவேற்போம். உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  

Read more »

மார்ச் 2-ல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்: 28 முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

               தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

                  இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ் முதல் தாளுடன் தொடங்கும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 25-ம் தேதி முடிவடைகின்றன. அதன்பிறகு, மார்ச் 28-ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 11-ம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும்.மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                 மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதி முடிவடைகின்றன. ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 28-ம் தேதி தொடங்குகின்றன.வினாத்தாளைப் படிக்க 10 நிமிஷம்:கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தேர்வுக்கு முன்னதாக கேள்வித் தாளைப் படிப்பதற்கு 10 நிமிஷம் ஒதுக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிஷமும் வழங்கப்பட்டுள்ளது.

                    பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் என அனைத்து மாணவர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.பிளஸ் 2 தேர்வுகள் காலை 10.15 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் தேர்வுகள் காலை 10.15 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை நடைபெறும்.

தேர்வுகளுக்கு இடையே சீரான இடைவெளி:

                    பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாடங்களுக்கும், ஆங்கிலத்துக்கும் இடையே 3 நாள்கள் விடுமுறையும், ஆங்கிலத்துக்கும், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் இடையே 2 நாள்களும் விடுமுறை உள்ளன. இதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் பாடத் தேர்வுகளுக்கு இடையே விடுமுறை உள்ளது. இதனால், மாணவர்கள் தங்களை முழுமையாகத் தேர்வுக்கு தயார் செய்துகொள்ளலாம்.

தேர்தலால் மாற்றம் இல்லை:

                           தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு தேதிகளில் முன்கூட்டியே நடத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

                         ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வும், மார்ச் கடைசி வாரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more »

பிளஸ் 2 தேர்வு கால அட்டவணை

தேதி                கிழமை               பாடம் 
 
02.03.11            புதன்கிழமை           மொழிப்பாடம் முதல் தாள் ( தமிழ் முதல் தாள்)
 
03.03.11               வியாழக்கிழமை        மொழிப்பாடம் இரண்டாம் தாள் ( தமிழ் இரண்டாம் தாள்)
 
07.03.11            திங்கள்கிழமை            ஆங்கிலம் முதல் தாள்
 
08.03.11            செவ்வாய்க்கிழமை     ஆங்கிலம் இரண்டாம் தாள்
 
11.03.11            வெள்ளிக்கிழமை        இயற்பியல், பொருளியல், உளவியல்
 
14.03.11            திங்கள்கிழமை          வேதியியல், கணக்குப்பதிவியல்,  சுருக்கெழுத்து
 
17.03.11           வியாழக்கிழமை         கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட்  
                                                                        டயட்டிக்ஸ்
 
18.03.11          வெள்ளிக்கிழமை        வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
 
21.03.11           திங்கள்கிழமை          உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், 
 
                                                                     பிசினஸ் கணிதம்
 
23.03.11          புதன்கிழமை             தட்டச்சு, தகவல் பரிமாற்ற ஆங்கிலம், இந்திய கலாசாரம், 

                                                                  கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-  கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்
 
25.03.11       வெள்ளிக்கிழமை        தொழில் பாட எழுத்துத் தேர்வு (வொகேஷனல் தியரி) 
 
                                                                   பொலிட்டிகல் சயின்ஸ் (அரசியல் அறிவியல்), நர்சிங், புள்ளியியல்

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளின் காற்று மாசு தொடர் கதைதானா?


கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுவதை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ப.சண்முகம் (வலமிருந்து 3-வது) வெளியிட தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
 
கடலூர்:

               கடலூர், சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசு, எத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும், இன்றும் தொடர் கதைதானா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

                  இது மீண்டும் ஒரு போபால் சோகத்தை உருவாக்கி விடுமோ என்ற அச்சத்தை அண்மைக்கால ஆய்வு அறிக்கை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு நுகர்வோர் கூட்டடைப்பு மற்றும் அதன் துணை அமைப்பான, கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் சார்பில் போபால் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கடலூரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசுக்களை ஆய்வு செய்து, ஏற்கனவே 13 அறிக்கைகளை வெளியிட்ட சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம், தனது 3 புதிய அறிக்கைகளை வெளியிட்டது.

                  கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிப்காட் தொழிற்பேட்டையில் சேகரிக்கப்பட்ட காற்றுமாசு, பாதுகாப்பான பைகளில் அடைக்கப்பட்டு, அமெரிக்க நாட்டின் தரம் வாய்ந்த 6 ரசாயனக் கூடங்களில் ஒன்றான கொலம்பியா ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவுகளை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இந்த நிகழ்ச்சியில் விவரித்தார்.

               முந்தைய 13 அறிக்கைகளின் வாயிலாக சிப்காட் தொழிற்சாலைகளால், கடலூர் பகுதியில் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கும் மோசமான ரசாயனங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் மடங்கு அதிகம் உள்ளதாகத் தெரிவித்தன. 

அதைத் தொடர்ந்து, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்  2008-ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 

                   கடலூர் காற்று மண்டலத்தில் புற்று நோயை உருவாக்கும் மோசமான ரசாயனங்கள் 2 ஆயிரம் மடங்கு இருப்பதாக அறிவித்தது. எனினும் இந்த நிலைய முழுமையாக மாற்றி அமைக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதாது என்பது பொதுநல அமைப்புகளின் கருத்து.÷இந்த நிலையில் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் இந்த 3 அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. இப்போதும் சிப்காட் தொழிற்சாலைகள் பகுதி காற்று மண்டலத்தில் 6 வேதிப் பொருள்கள் உள்ளிட்ட 19 நச்சு வேதிப் பொருள்கள் இருப்பதை அந்த அறிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன. 

                இந்தச் சோதனை முடிவுகள் மற்றொரு போபாலாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மாறிக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. எனவே சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறோம். புதிய தொழிற்சாலைகள் தொடங்க இடைக்கால தடைவிதித்து சுற்றுச்சூழல், வனத்துறை எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியது. எனினும் தடை விதிக்கப்பட்ட கடந்த 11 மாதங்களில், 150 அத்துமீறல்கள் நிகழ்ந்து உள்ளன. 

               என்றாலும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நல்நோக்கத்தை நிறைவேற்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நிறைவேற்றவில்லை. மாசுக் கட்டுப்பாடு வாரியமோ, சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகமோ மாசுகளைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் தொடர் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை.

                   இதற்கிடையே சிப்காட் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 6 புதிய தொழிற்சாலைகளின் கட்டுமானங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. 6 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும்தளம், ஜவுளிப்பூங்கா, 13,320 மெகா வாடா திறன்கொண்ட 3 அனல் மின் நிலையங்கள் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இப்புதிய திட்டங்கள் சுற்றுச்சூழலை மேலும் மோசமாக்கும் என்றார் நிஜாமுதீன்.

                    புதிய ஆய்வு அறிக்கைகளை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சண்முகம் வெளியிட தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ்பாபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஏஐடியூசி மாவட்டத் துணைச் செயலர் ஜெகரட்சகன், தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலர் ஏழுமலை, நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் கவிஞர் பால்கி ஆகியோரும் பேசினர். சமூக சுற்றுச் சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் நன்றி கூறினார்.

Read more »

கடலூரில் கடல் கொந்தளிப்பு: திடீரென கரை திரும்பிய மீனவர்கள்


மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், வெறிச்சோடிக் கிடக்கும், கடலூர் முதுநகர் மீன் இறங்குதளம். அருகில் கட்டி வைக்கப்பட்டு இருக்கும் விசைப் படகுகள்.
 
கடலூர்: 

                கடலூரில் இருந்து வெள்ளிக்கிழமை கடலுக்குள் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள், கடல் கொந்தளிப்பு காரணமாக திடீரெனக் கரை திரும்பினர்.

                 கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு, வேலைவாய்ப்பு இல்லாமல் போயிற்று. கடந்த 5 நாள்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன் அங்காடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

                 வெள்ளிக்கிழமை கடலூரில் மழையின்றி, வானம் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டது. கடந்த 5 நாள்களாக கடலுக்குள் செல்லாமல் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள், சுமார் 200 படகுகளில் கடலுக்குள் சென்றனர். ஆனால் கடல் சீற்றத்தைக் கண்டு பயந்து, காலையிலேயே வேகமாகக் கரை திரும்பியதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார். மேலும் 5 நாள்களுக்கு முன் ஆழ் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 50-க்கும் மேற்பட்ட பெரிய படகுகள், இன்னும் கரை திரும்பவில்லை என்றும் சுப்புராயன் கவலை தெரிவித்தார்.

                     மீன் பிடித்தொழில் முடங்கியதால் கடலூர் முதுநகர் துறைமுகத்தை அடுத்துள்ள, மீன் இறங்கு தளம், கடந்த 5 நாள்களுக்கும் மேலாக எந்தவித செயல்பாடுகளும் இன்றி, வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்த மீன் இறங்கு தளத்தில் சாதாரண நாள்களில், அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் சுமார் 500 பேரைப் பார்க்க முடியும். மீன்களை படகுகளில் கொண்டு வந்து இறக்குவதும், அவற்றை ஏலம் விடுவதும், வியாபாரிகள் ஏலம் கேட்டு கொள்முதல் செய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் அந்த இடம் ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுவது மீனவர்களைப் பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Read more »

கடலூர் அருகே கடன் சங்கத்தில் ரூ.20 லட்சம் கையாடல் கூட்டுறவு ஊழியர்கள் இருவர் கைது

கடலூர் : 

                 கடலூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்த ஊழியர்கள் இருவரை  போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். 

                   கடலூர் அடுத்த எழுமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தது.  துணைப் பதிவாளர் ஜெயமணி சில மாதங்களுக்கு முன் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அதில் கடந்த 1.4.2006 முதல் 1.9.2009வரை விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்களை தயாரித்து  சங்கச்செயலர் தவமணி, எழுத்தர்கள் கார்த்திகேயன், சிவக்குமார், சையத்ரசூல், காசாளர் சேகர் ஆகியோர் 19 லட்சத்து 88 ஆயிரத்து 374 ரூபாய் 90 பைசா கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.

                    துணைப் பதிவாளர் ஜெயமணி, மாவட்ட வணிகவியல் குற்றப் புலனாய்வு பிரிவில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ரீட்டா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தனராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.  மோசடி குறித்த ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து சங்கத்தின் காசாளர் சேகர், எழுத்தர் சையத்ரசூல் ஆகியோரை நேற்றிரவு கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட செயலர் தவமணி, எழுத்தர் கார்த்திகேயன் ஆகியோர் இறந்து விட்டதால், தலைமறைவாக உள்ள சிவக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர். 

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு பின் பயிர் காப்பீட்டு தொகை



பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குகிறார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

சிதம்பரம் : 

                 கடந்த ஆண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கும் விழா சிதம்பரத்தில் நடந்தது.

              கலெக்டர் சீத்தாராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்.பி., திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., ரவிக்குமார், சேர்மன்கள் செந்தில்குமார், பவுஜியாபேகம், மாமல்லன் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 11 ஆயிரத்து 646 விவசாயிகளுக்கு 2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 993 ரூபாய் இழப்பீடு தொகைக்கான காசோலையை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 

                      "மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற போது  கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு காப்பீடு தொகை வழங்கவில்லை என முறையிட்டனர். கோரிக்கையை ஏற்று போர்க்கால அடிப்படையில் 24 மணி நேரத்தில் இத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு தற்போது வழங்கப்பட்டது' என்றார்.

பரங்கிப்பேட்டை: 

                  பு.முட்லூர் கலைஞர் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவுப் பொட்டலம் வழங்கினார்.
கடலூர்:  

              பாதிரிக்குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு முகாம்களில் உள்ள 500க்கும் மேற்பட்டோருக்கு எம்.எல்.ஏ., அய்யப்பன் உணவு பொட்டலங்கள் வழங்கினார்.
கிள்ளை: 

            சிதம்பரம் தொகுதி எம்.பி.,திருமாவளவன் மøழால் பாதிக்கப்பட்ட குண்டுமேடு, நவாப்பேட்டை, மடுவங்கரை, புஞ்சைமகத்து வாழ்க்கை பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

புவனகிரி: 

                  வெள்ளாறு கரை உடைப்பால் பாதிக்கப்பட்ட மஞ்சக்கொல்லை, மிராளூர் ஆகிய பகுதிகளை நேற்று காலை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பண்ருட்டி:

               மழையால் பாதிக்கப்பட்ட களத்துமேடு, திடீர்குப்பம்,  அம்பேத்கர் நகர், செட்டிப்பட்டறை காலனி, சுவர் இடிந்த விழுந்த திருவதிகை நகராட்சி துவக்கப் பள்ளி மற்றும் வீடுகளை சேர்மன் பச்சையப்பன், கமிஷனர் உமா மகேஸ்வரி பார்வையிட்டனர்.

Read more »

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்; திருமாவளவன் பேட்டி

  சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்;
 
 திருமாவளவன் பேட்டி

 
சிதம்பரம்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில்  அளித்த. அப்போது
பேட்டி:

தொடர்ந்து 3 வார காலமாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கி உள்ளன. முன்னாள் மத்திய மந்திரி ராசா பதவி விலகிய பிறகும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதும், சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவது மக்கள் விரோத செயலாகும்.

               நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவையில் விவாதிக்கலாம் என்று கூறியபோதும் அவையை எதிர்க்கட்சிகள் முடக்கி இருப்பது ஜனநாயக விரோத செயல். மத்திய மந்திரிகள் பிரமோத் மகாஜன், அருண் ஜோரி ஆகியோர் என்ன நடவடிக்கையை பின்பற்றினார்களோ, அதையே ராசாவும் பின்பற்றியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

                 பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்? பாரதிய ஜனதா, ஜெயலலிதா, சுப்பிர மணியசாமி ஆகியோர் ராசாவை தனிமைப்படுத்தி பழிவாங்க துடிக்கின்றனர். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து. ஆனால் அருண்ஜோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? இவர்களின் போக்கு தலித் விரோத போக்கு.

                    வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில் தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு எந்த கட்சிகள் வந்தாலும் வரவேற்கிறோம். கூட்டணியில் எந்த கட்சியை சேர்ப்பது என்பது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார். கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

             விடுதலை சிறுத்தை கட்சியில் 42 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 10 சதவீதம் பேர் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழ் இறையாண்மை மாநாடு சென்னையில் டிசம்பர் 26-ந்தேதி நடைபெறுகிறது. தமிழுக்கு என தனி தாயகம், தமிழ் இனம் தேசிய இனமாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

             பேட்டியின் போது ரவிக்குமார் எம்.எல்.ஏ., கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் திருமாறன், துணைச் செயலாளர் செல்லப்பன், பசுமைவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

Flood-hit areas inspected at Cudalore District

 
Revenue Minister I. Periasamy and Health Minister M.R.K.Panneeselvam at Poolamedu in Cuddalore district on Friday.


CUDDALORE: 

        Revenue Minister I. Periasamy, along with Health Minister M.R.K. Panneerselvam, inspected flood-affected areas at Thirunaraiyur, Poolamedu, Veeranatham and Lalpet in the Chidambaram and Kattumannarkoil blocks here on Friday.

          Later, he told presspersons that on the direction of Chief Minister M.Karunanidhi, he inspected flood-hit areas in Thiruvarur, Nagapattinam and Cuddalore districts.A gricultural crops on 1.30 lakh hectares were submerged in these districts. After due assessment, compensation would be given to farmers, Mr. Periasamy said. Collector P. Seetharaman and District Revenue Officer S. Natarajan accompanied the Ministers.

Read more »

Veeranam tank to be deepened

CUDDALORE: 

          The Veeranam tank will be deepened by 1.5 feet at a cost of Rs. 16 crore to increase its storage capacity and avert flood damage downstream, according to Health Minister M.R.K. Panneerselvam.

           He inspected the flood-affected areas at Chidambaram on Friday, along with Viduthalai Chiruthaigal Katchi leader Thol. Thirumavalavan, MLA D. Ravikumar, and Collector P. Seetharaman. The Minister gave away crop insurance amounting to Rs. 2.68 crore to 11,646 farmers, who lost their crops in floods last year.

           Giving an account of flood damage in Cuddalore district, Mr. Panneerselvam said that the recent spell of rain had killed six persons and 86 cattle heads, and submerged standing crops on over 51,000 hectares, including 49,300 ha of agricultural crops and 1,800 ha of horticultural crops. A total of 1,454 huts were fully damaged and 10,265 partly damaged. So far, 4,43,320 food packets had been distributed among flood-affected people.

          Mr. Panneerselvam said Chief Minister M. Karunanidhi had announced a compensation of Rs. 2 lakh each to the families of those killed in rain-related incidents, Rs. 5,000 for fully damaged houses and Rs. 2,000 for partly damaged houses. He also said that a new project was on the anvil to divert excesses from the Karuvattu Odai to the Kollidam. A sum of Rs. 301 crore had been sanctioned for putting in place permanent flood control measures, he added.

Read more »

Enhance compensation for crops damaged in floods: Thirumavalavan

CUDDALORE: 

           Viduthalai Chiruthaigal Katchi leader and MP Thol.Thirumavalavan has called upon the government to enhance the compensation for agricultural crops damaged in the floods from Rs 7,500 to Rs 15,000 a hectare and Rs 25,000 for an acre of betel leaves raised mainly by the minority community.

           After inspecting the flood-affected areas, along with D.Ravikumar, MLA, at Chidambaram on Friday, Mr Thirumavalavan told the presspersons that there were complaints in certain places that the relief had not properly reached them. Therefore, he urged the district administration to provide necessary relief to all the affected people without delay. As Chidambaram was repeatedly battered by recurring floods it deserved special attention in terms of flood control measures, he said.

          Asked whether the present political alliance would be expanded for the next Assembly elections, Mr Thirumavalavan said that any political party would be welcome into its fold, and of course with the consent of Chief Minister M.Karunanidhi. On the 2G spectrum scam, he said that even after A.Raja had resigned as Union Minister for Telecommunications and the CBI had seized of the issue, the opposition parties were paralysing the functioning of Parliament and this obviously showed their anti-Dalit attitude.

Read more »

Call to check pollution

CUDDALORE: 

          The SIPCOT Area Community Environmental Monitoring (SACEM), a body comprising local residents, environmentalists and social activists, has voiced concern over pollution levels in Cuddalore.

            Spokespersons of the SACEM, including M. Nizamudeen, told presspersons here on Friday that on the 26th anniversary of the Bhopal gas leak tragedy, it would be appropriate to know about the status of the environment in the SIPCOT Industrial Estate here. They released three reports on air samples collected from the industrial estate from July to August 2010. The reports indicated the presence of 19 toxic chemicals, of which six were carcinogens, much beyond the permitted levels prescribed by the United States Environmental Protection Agency.

Read more »

NLC chief clarifies on disinvestment

CUDDALORE: 

          Chairman-cum-Managing Director of NLC A.R. Ansari has said that since the NLC had sufficient funds at present, there was no proposal to raise funds through public issues.

          In a statement released here on Thursday, Mr. Ansari denied having made any observation to the effect (reported in a section of the press) that the Centre had proposed to disinvest 10 per cent of its shares in the NLC. He noted that disinvestment was the policy decision of the Centre and the NLC had no authority to decide on the issue. The size and timing of disinvestment would be decided by the Centre.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior