உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 23, 2011

உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக வேட்பாளர்கள் விபரம்

உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 

 உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான திமுக  வேட்பாளர்கள் விபரம்: 

கடலூர் - கே.எஸ். ராஜா 
 பண்ருட்டி - ஆனந்தி சரவணன்  
விருதாசலம் - வை. தட்சிணாமூர்த்தி  
நெல்லிக்குப்பம் - எஸ். புகழேந்தி 
சிதம்பரம் - லலிதா (எ) ஜெயலலிதா






Read more »

கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள்

கடலூர்:

               கடலூரில் குற்றச் செயல்களைக் கண்காணிப்பதற்காக பொது இடங்களில் ரூ. 25 லட்சம் செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் புதன்கிழமை தெரிவித்தார். 

கடலூர் பாரதி சாலையில் கண்காணிப்புக் கேமரா மற்றும் ஒலிபெருக்கி கருவிகள் பொருத்தும் பணியை தொடங்கி வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன்   கூறியது: 

               கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுலகம், பாரதி சாலை, லாரன்ஸ் சாலை, ஜவான்ஸ் பவன் சந்திப்பு, நகைக் கடைவீதி, வண்டிப்பாளையம் சாலை சந்திப்பு, பஸ் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், கண்காணிப்புக் கேமரா மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்புகளைச் செய்யும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படும்.  ரூ. 25 லட்சம் செலவில் 18 கண்காணிப்புக் கேமராக்கள், 4 சுழல் கேமராக்கள், 28 ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட உள்ளன. 

              தொடர்ந்து மேலும் 6 இடங்களில் ஒலிபெருக்கிக் கருவிகள் அமைக்கப்படும்.  இவற்றைப் பொருத்துவதன் மூலம் நகை பறிப்பு, கடைகள் மற்றும் பொது இடங்களில் திருட்டு, சாலை விபத்துகள் போன்றவற்றை தடுக்க முடியும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வசதியாக இருக்கும். ஒலிபெருக்கி மற்றும் கேமராக்களின் செயல்பாடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்றார் எஸ்.பி. கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராமகிருஷ்ணன். நாகராஜன், துணைக் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.




Read more »

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தபால் நிலையங்களில் அளிக்கும் முறை ரத்து

                  தபால் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த பாஸ்போர்ட் சேவை, இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இம்முடிவுக்கு, பொதுமக்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

             பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தபால் நிலையங்களில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அங்கேயே செலுத்தும் வசதி நேற்று வரை இருந்தது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில், 50க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் இருந்து வந்த இந்த வசதி, கம்ப்யூட்டர், "இன்டர்நெட்' பரிச்சயம் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. மேலும் இச்சேவையில், "ஆன்-லைனில்' பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து விட்டு, குறிப்பிட்ட தேதியில் ஆவணங்கள் சரிபார்ப்புக்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சென்று, நீண்ட வரிசையில் நாள் முழுவதும் தவம் இருக்க வேண்டியதில்லை. ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு 20 ரூபாய், அதற்கான ஆவணங்கள் சரிபார்ப்புக்கு, ஒரு விண்ணப்பத்திற்கு குறிப்பிட்ட அளவு சேவை கட்டணம் என, மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் தபால் துறைக்கும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவாய் வந்து கொண்டிருந்தது.

                தற்போது, தனியார் பங்களிப்புடன் சென்னை அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அமோக வரவேற்பும், தபால் துறைக்கு வருவாயும் தந்து வந்த இச்சேவை, ரத்து செய்யப்பட்டது குறித்து, பொதுமக்கள் மற்றும் தபால் துறை அலுவலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மத்திய தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியது: 

                  எங்கள் கோட்டத்தில், தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வந்தது. இம்மூன்று தபால் நிலையங்களிலும், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, மொத்தம் 62 ஆயிரத்து 140 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 57 ஆயிரம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

              இச்சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து, வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தற்போது, "விண்ணப்பதாரரின் விருப்பத்தின் பெயரில், "ஆன்-லைனில்' பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் பணியை மட்டும், கணினிமயமாக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மேற்கொள்ளலாம்' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு 100 ரூபாய் சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன்  கூறியது

               ""புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களில், கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தான், தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை ரத்து செய்யப்படுகிறது. வருவாய் இழப்பை சரி செய்து கொள்ள, "ஆன்-லைனில்' விண்ணப்பங்களை பெறவும், விண்ணப்பங்கள் குறித்த தற்போதைய நிலவரம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கவும், தபால் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது,'' என்றார்.








Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுதாக்கல் இடம் அறிவிப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு வழங்கப்படும் இடம் மற்றும் மனு தாக்கலுக்கான இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

          தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்., 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி மனுக்கள் நேற்று முதல் வரும் 29ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது.

             கடலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மனு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான மனு அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்படும்.
           நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான மனு அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள், மனு வழங்கப்பட்ட அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior