உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

வலைப்பூ அறிமுகம்: ஹாய் நலமா?

இந்த வலைப்பூ முழுவதும் உடல், மனம், சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வுகளை அளிக்கும் ஒரு இணையத்தளம். மருத்துவம், உணவு முறை, உளவியல், குழந்தை வளர்ப்பு, நலவியல் போன்ற தலைப்புகளில் மிக அழகாகவும், எளிதில் புரியும் படியும் அமைந்திருப்பது இந்த தளத்தின் சிறப்பு. இது ஒரு நலவியல் இணைய இதழ்

Read more »

கடலூர் மாவட்டத்தில் பல நூறு கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் வெள்ளத்தால் பரிதவிக்கும் 50 கிராமங்கள்


கொள்ளிடம் ஆறு (கோப்புபடம்).
கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஆறுகளின் கரைகளை பலப்படுத்துதல், வடிகால் வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் ரூ.200 கோடியில் நிறைவேற்றப்பட இருக்கின்றன. 
 
            பிற மாவட்டங்களில் உற்பத்தியாகி கடலூர் மாவட்டத்தில் பாயும் கொள்ளிடம் ஆறு, பெண்ணையாறு, வெள்ளாறு, பரவனாறு, கெடிலம் ஆறு ஆகியவற்றால், கடலூர் மாவட்ட வேளாண்மைக்கு பெரிதாகப் பயன்கள் இல்லை. இவைகள் வடிகாலாகச் செல்வதால், மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கடலூர் மாவட்டத்தில் 200 கிராமங்கள் மற்றும் கடலூர், சிதம்பரம் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படுகின்றன.ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி விவசாயிகளின் வாழ்வாதாரங்களை ஆண்டுதோறும் அழித்து வருகின்றன.
 
             எனவே கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கைகளை ஏற்று, மத்திய மாநில அரசுகள், தற்போது பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முன்வந்து இருக்கிறது.ரூ. 109 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையைப் பலப்படுத்துதல், ரூ. 68 கோடியில் வெள்ளாற்றின் கரையைப் பலப்படுத்துதல், மத்திய பரவனாற்றை ரூ. 7 கோடியில் சீரமைத்தல், ரூ. 23 கோடியில் வீராணம் ஏரியை மராமத்து செய்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 
 
    
 
 
             நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவிக்கிறது.இத்தனை கோடிகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், உண்மையான வெள்ளப் பாதுகாப்புக்கு இத்திட்டங்களால் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வீராணத்தின் வடிகால் வெள்ளியங்கால் ஓடையில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெளியேற்றப்படும் அபரிமிதமான நீரால் (வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல்) திருநாரையூர், எடையார், பிள்ளையார்தாங்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்படுகின்றன. 
 
            இதேபோல் வீராணத்துக்கு காவிரி நீரை விநியோகிக்கும் வடவாறில் இருந்து பிரிந்து பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் விளங்கும் மணவாய்க்காலில், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், காட்டுமன்னார்கோவில் கருப்பூர், ஆலங்காத்தான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 1000 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன.பழைய கொள்ளிடத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், வல்லம்படுகை, பேராம்பட்டு உள்ளிட்ட 15 கிராமங்களும், 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன. 
 
            பாசிமுத்தான் ஓடையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் சிதம்பரம் நகரம் மற்றும் 10 கிராமங்கள் ஆண்டுதோறும் பல நாள்கள், தண்ணீரில் தத்தளிக்க நேரிடுகிறது.வீராணம் ஏரி முழுக் கொள்ளளவுக்கும் நீர்மட்டம் உயரும்போது எதிர்கரையில் உள்ள சித்தமல்லி, அறந்தாங்கி உள்ளிட்ட 10 கிராமங்களில் பயிரிடப்படும் 1000 ஏக்கர் நெல், வாழை, கரும்புப் பயிர்கள் ஆண்டுதோறும் நீரில் மூழ்கி சேதம் அடைகின்றன. ஆனால் இந்த பாதிப்புகளுக்குத் தீர்வு காண, தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்களில் வழிகாணப்படவில்லை என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
 
இது குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
           "ஆண்டுதோறும் கிராமத்து ஏழை, எளிய மக்களுக்கும், 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கும் வெள்ளப்பாதிப்பை ஏற்படுத்தும், வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால், பழையகொள்ளிடம், பாசிமுத்தான் ஓடை, கருவாட்டு ஓடை ஆகியவற்றில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மேற்கண்ட திட்டங்களில் அறிவிப்பு ஏதும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.மேற்கண்ட பணிகளைச் செய்தால்தான் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை முழுமையாகப் பலன் தரும். அதற்கு ஏதாவது திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்றார்.
 
இது குறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜி கூறுகையில்
 
              "தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் திட்டங்களில் மேற்கண்ட பணிகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனினும் அப்பணிகளைச் செய்தால்தான் மக்கள் பாதுகாப்புடன் இருக்க முடியும்.பயிர்கள் சேதத்தையும் தவிர்க்கலாம். வீராணம் எதிர்கரை பலப்படுத்தும் பணிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ வாட்டர் திட்டத்தில் அப்பணி மேற்கொள்ளப்படும்  என்று தெரிகிறது என்றார்.

Read more »

இருப்பிடச் சான்றுக்கு தனி ரேஷன் அட்டை


 
              வீட்டு முகவரிச் சான்றுக்கென பிரத்யேகமான ரேஷன் அட்டையை தமிழக அரசு வழங்க உள்ளது. 
 
           விண்ணப்பித்த பத்து நாள்களுக்குள் இந்த அட்டை கிடைக்கும் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில், இதற்கான உத்தரவை அரசு வெளியிட உள்ளது. புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு முதலில் பழைய அட்டையில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட வேண்டும். இதற்கான சான்றையும், இப்போது நீங்கள் வசிக்கும் முகவரிக்கான இருப்பிடச் சான்று இரண்டையும் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.  
 
            ரேஷன் அட்டை பல்வேறு வகைகளில் வழங்கப்படுகிறது. அரிசி, சர்க்கரை வாங்குவோர் அல்லது சர்க்கரை மட்டும் வாங்குவோர் அல்லது எந்தப் பொருளும் வாங்க விருப்பம் இல்லாதோர், இதில் நீங்கள் எந்தப் பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம்.  முகவரிச் சான்றுக்கு மட்டும்: ரேஷனில் எந்தப் பொருளும் வாங்க விருப்பம் இல்லாதவர்கள் முகவரிச் சான்றுக்காக மட்டுமே ரேஷன் அட்டையைப் பயன்படுத்துகிறார்கள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க, கேஸ் இணைப்பு பெற இப்படி இதர பயன்பாடுகளுக்காக ரேஷன் அட்டையை பயன்படுத்துவோரும் உண்டு.  
 
            எந்தப் பொருளையும் பெறாமல் இருப்பிடச் சான்றுக்காக மட்டுமே ரேஷன் அட்டை பெற விரும்புவோருக்குக் கூட இப்போதுள்ள கட்டுப்பாடுகளே பொருந்தும். பழைய அட்டையில் பெயரை நீக்கிய பிறகே அவர்களுக்கு புதிய அட்டை வழங்கப்படும்.  இந்த முறை விண்ணப்பதாரர்களுக்கு தாமதம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதால் தமிழக அரசு புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.  
 
"என்' அட்டைகள்: 
 
           இந்தத் திட்டத்துக்கு "என்' ரேஷன் அட்டை (ச-சர்ய்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு இப்போதுள்ள நடைமுறையைப் பின்பற்றலாமா? அல்லது எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் இருக்கலாமா? என்பது குறித்து உணவுத் துறை ஆலோசித்து வருகிறது. விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அரசு உத்தரவு வெளியிடப்படும் என்று அந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.  10 நாளில் கிடைக்க ஏற்பாடு: இருப்பிடச் சான்றுக்கென தபால் துறை சார்பில் தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 
 
              இந்த அட்டையைப் பெற ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், இதற்கான நேரடி விசாரணை முடிந்த பிறகு 15 நாள்களுக்குப் பிறகே அட்டை கிடைக்கும்.  ஆனால், விண்ணப்பித்த 10 நாள்களுக்குள் "என்' ரேஷன் அட்டையைப் பெறலாம் என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக ஒரு ரேஷன் அட்டையைப் பெற ஓரிரு மாதங்கள் ஆகும். ஆனால், இருப்பிடச் சான்றுக்கான ரேஷன் அட்டை இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும். யாருக்குப் பயன்: பணி மாறுதல் பெற்று வேறு ஊர்களுக்குச் செல்வோர், வாடகை வீடுகளில் வசிப்போர் ஆகியோருக்கு இந்த "என்' அட்டை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Read more »

நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்

விருத்தாசலம்:

            நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் ஆகியோர் விளக்கியுள்ளனர். விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் ஒன்றியங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடி,7000 ஹெக்டேர், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. நெல்லில் கூடுதல் விலைபெறுவது அதிலுள்ள முழு அரிசியின் அடிப்படையில்தான் உள்ளது. 

நெல்மணிகள் அரவையில் 62 விழுக்காடு முழு அரிசி கிடைத்து அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்திமுறைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் மற்றும் விருத்தாசலம் கோட்ட வேளாண்மை அலுவலர் அமுதா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

              நெல் ரகங்களின் வயதிற்கேற்றவாறு பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல்கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்ந்து சேதமாவதைத் தடுக்கலாம். 

                 அறுவடையின்போது, ஈரப்பதம் 19 முதல் 23 சதவீதம் இருக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்குள் இருக்க  வேண்டும்.நெல் மணிகளை சேமித்து வைத்து விற்பனை செய்ய அறுவடை செய்த நெல்லை நன்றாக காயவைத்து, சுத்தம் செய்து ஈரப்பதம் 13 சதவீதத்துக்கு குறைக்க வேண்டும். இதனால் பூஞ்சாண வித்துக்கள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.முதிர்ந்த நெல் மணிகளில் இருந்து கிடைக்கும் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காயவைக்கக் கூடாது. 

              அறுவடை செய்த நெல்லை சுத்தம் செய்து சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி, தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி, மூட்டைகளை அடுக்கி வைத்தால் சுவற்றின் ஈரப்பதம் நெல்மணிகளைத் தாக்காது.சேமித்து வைத்துள்ள நெல்லில் அந்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை 10 மில்லி லிட்டரில், 1 லிட்டர் நீரில் கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகள் மீது தெளிக்க வேண்டும்.பூச்சிகள், பூஞ்சாணங்கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்லை தனியே பிரித்துவிட வேண்டும். ரகங்கள் வாரியாக தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டு வந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்று நல்ல லாபம் பெறமுடியும் என தெரிவித்தனர்.

Read more »

அதிக லாபம் தரும் ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறை


ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழி பண்ணை முறையில் அமைக்கப்பட்டுள்ள நிலம்.
 
சிதம்பரம்:
 
              ஒருங்கிணைந்த பண்ணை முறை என்பது நெல் பயிருடன் மீன் மற்றும் கோழி பண்ணைகளை ஒருங்கிணைப்பதாகும். 
 
                 நெல் நடவு செய்த  நிலத்தில் கோழி மற்றும் மீன் பண்ணைகளை ஒருங்கிணைப்பதன் மூலமாக விவசாயிகள் கூடுதல் லாபத்தினை பெறலாம். மீன் மற்றும் இறைச்சியின கோழி ஒருங்கிணைந்த பண்ணை திட்டமானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இத்திட்டத்தின்படி கோழிக்கூண்டு மற்றும் மீன் அகழியானது நெல் வயலின் ஒரு பகுதியில் அமைக்கப்படுகின்றது. 
 
             இவ்வாறு அமைக்கப்பட்ட மீன் அகழியில், கோழியின் எச்சம் விழுமாறு கோழிக்கூண்டு அமைக்கப்பட வேண்டும். கோழியின் எச்சமானது மீன்களுக்கு நல்ல உணவாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் சிறந்த இயற்கை உரமாகவும் செயல்படுகின்றது. நெல் வயலின் 5 செ.மீ. நீர்பரப்பில் ஏற்படும் வெப்ப மாற்றங்கள் மீன்களைப் பாதிக்கும் என்பதால் பகல் பொழுதில் மீன்கள் நீந்தி களிப்பதற்கு இந்த அகழிகள் ஏற்படுத்தப்படுகின்றன. மேலும் மீன்கள் நெல் வயலில் நீந்தி அவற்றின் களை மற்றும் பூச்சிகளை உண்டு வளரும். மேலும் கோழிக்கழிவு நேராக அகழி நீரில் கலந்து, நெல் வயலில் உள்ள நீருக்குள் ஊடுருவி உரமாக பயன்படும். 
 
நாற்றங்கால் தயார்படுத்தல்: 
 
           நாற்றங்காலுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தினை நன்கு சேற்று உழவு செய்து, சமன்படுத்தி தயார் நிலைக்கு கொண்டு வர வேண்டும். அறிவுறுத்தப்பட்ட அளவிலான நெல் விதைகளை, விதைப்பதற்கு 10 மணி நேரத்துக்கு முன்பாக நீரில் ஊற வைக்க வேண்டும்; பின்னர் ஊறிய விதைகளை சுமார் 24 மணி நேரம், முளைப்புக்காக இருட்டு அறையில் வைக்க வேண்டும், பின்பு முளைத்த விதைகளை சீராக நெல் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். நாற்றங்காலில் முளைத்த நாற்றுகளானது நன்கு பராமரிக்கப்பட வேண்டும். 
 
நடவு வயல் தயார் படுத்தல்: 
 
               நன்கு உழவு செய்து தயார்படுத்தப்பட்ட நடவு வயலில் 1 மீட்டர் ஆழம் மற்றும் 0.75 மீட்டர் நீளம் கொண்ட மீன் அகழியானது வெட்டப்பட வேண்டும். இந்த மீன் அகழிக்கென நடவு நிலத்தின் 10 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும். நடவு வயலில் உள்ள நீர் வெளியேறாத வண்ணம் வரப்புகள் உறுதியாக அமைக்கப்பட வேண்டும். மீன்கள் நெல் அறுவடைக்கு 15 நாள்களுக்கு முன்பு பிடித்து விற்பனை செய்யலாம். அதுபோன்று இறைச்சியின கோழி வளர்ப்பிற்கான மொத்த காலம் 45 நாள்கள். கோழிக்குஞ்சுகளை முதல் 12 நாள்கள் தனியறையில் 100 வால்ட் பல்பினை பொருத்தி வைத்திருக்க வேண்டும். 12 நாள்களுக்கு பிறகு குஞ்சுகளை நடவு நிலத்திலுள்ள கோழி கூண்டுக்கள் விடப்பட வேண்டும். 
 
நெல்நடவு: 
 
                குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு நாற்றங்காலில் உள்ள நாற்றுகளை நடவு நிலத்தில் 15 செ.மீ. இடைவெளியில், குத்துக்கு 2 நாற்றுகள் வீதத்தில் பிடுங்கி நடவேண்டும். வேப்ப விதைச்சாறு 5 சதவீதம், பயிர் பாதுக்காபுக்கென தெளிக்கப்படுகின்றது.   இவ்வாறு செயல்படுத்தப்படும் நெல், மீன், கோழி பண்ணையத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கும். இத்திட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல்துறை ஒருங்கிணைப்பாளகராக இருந்து மத்திய அரசு நிதி உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

பண்ணை செழிக்க பயன்படும் நுண்ணுயிர் உரங்கள்


கடலூர் மாவட்ட விவசாய அலுவலக வளாகத்தில் செயல்படும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிலையம்.
 
கடலூர்:
 
            நுண்ணுயிர் உரங்களின் பயன்பாட்டால் மண்வளமும் உழவர்களின் பண்ணை வளமும் பாதுகாக்கப்படுகிறது. 
 
              இந்தியாவின் வேளாண் உற்பத்தி குறைந்து கொண்டே போகிறது. வேளாண் விளைபொருள்கள் உற்பத்தியைப் பெருக்குவதாக் கூறி, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை அதிகரித்ததால், விளைபொருள்கள் மட்டுமன்றி, விவசாய நிலங்களும் நச்சுத் தன்மை கொண்டதாக மாறிவருகிறது. எனவே நிலவளம், நீர்வளம் சுற்றுச்சூழலையும் பாதிக்காத சாகுபடி முறைகளை விவசாயத்தில் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய விவசாயம் உள்ளது. உயிர் உரங்கள் இயற்கை வேளாண்மையில் முக்கிய பங்காற்றுகிறது. 
 
            மண்வளமும் நீர்வளமும்தான் வேளாண்மையின் அடித்தளம். இயற்கையாக நுண்ணுயிர் பெருக்கத்துக்குத் தேவையான தொழுஉரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்களை, விவசாயிகள் பயன்படுத்துவதும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஆலைகளில் தயாரிக்கப்பட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்தி அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்களை பெருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.தழைச் சத்து காற்றில் 80 சதவீதம் இருக்கிறது. ஒரு ஹெக்டேர் நிலப்பரப்புக்கு மேலுள்ள காற்றில், 77,500 டன் தழைச்சத்து நிறைந்து உள்ளது. காற்றில் கலந்துள்ள இந்த அபரிமிதமான தழைச் சத்தை, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்கள் கிரகித்து,  பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் மாற்றிக் கொடுக்கின்றன.
 
            தழைச்சத்துக்கு அடுத்ததாக பயிர்களுக்கு அதிகம் தேவைப்படும் மணிச்சத்து, சூப்பர் பாஸ்பேட் உரங்கள் மூலம் கிடைக்கிறது. ஆனால் மண்ணில் 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், 15 முதல் 20 கிலோ வரைதான் தண்ணீரில் கரைந்து பயிர்களுக்குக் கிடைக்கிறது.மீதமுள்ளவை ரசாயன மாற்றத்தால் மண்ணில் கரையாத நிலைக்குச் சென்றுவிடுகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம். இத்தகைய கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தையும் கரைத்து, பயிர்களுக்குக் கொடுப்பவை நுண்ணுயிர் உரங்கள்தான்.காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்தும், மண்ணில் உள்ள கரையாத மணிச் சத்தை கரைத்தும் பயிர்களுக்குக் கொடுக்கும் சக்தி வாய்ந்தவை உயிர் உரங்கள். 
 
              எனவே விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நெல்லுக்கும் இதர பயிர்களுக்கும் தனித்தனியாகப் பயன்படுத்தும் அசோஸ்பைரில்லம் பயறு வகைகள் மற்றும் மணிலாவுக்குத் தனித்தனியாகப் பயன்படுத்தும் ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை, கடலூர் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் தயாரித்து வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கிறது.நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் நிறுவனம் தமிழ்நாட்டில் முதல்முறையாக 1983-ல் கடலூரில்தான் தொடங்கப்பட்டது. இங்கு ஆண்டுக்கு 270 டன் நுண்ணுயிர் உரங்கள் தயாரிக்கப்படுகின்றன.கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மட்டுமே இருந்த நுண்ணுயிர் உர உற்பத்தி நிலையங்கள் இருந்தன. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கடந்த ஆண்டு மேலும் 9 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு உள்ளன.இவற்றின் மூலம் தமிழகத்தில் ஆண்டுக்கு 3,850 டன்  நுண்ணுயிர் உரம் உற்பத்தியாகும். 
 
               இவைகள் தமிழகத்தின் மொத்த நுண்ணுயிர் உரத்தேவையையும் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது .நுண்ணுயிர் உரங்கள், பழுப்பு நிலக்கரி மற்றும் கால்சியம் கார்பனேட் கலவையில் கலந்து 200 கிராம் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகின்றன. ரூ. 6 விலை உள்ள இந்த பாக்கெட், மானிய விலையில் விவசாயிகளுக்கு ரூ. 5-க்கு வழங்கப்படுகிறது. வேளாண் துறையின் பரிந்துரைப்படி, நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தழைச்சத்துக்காக யூரியா போன்ற ரசாயன உரங்களின் பயன்பாட்டை வெகுவாக் குறைக்க முடியும்.மணிச் சத்துக்காக இடப்படும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை முழுமையாக பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யமுடியும், சுற்றுச் சூழலும் மண்வளமும் பாதுகாக்கப்படும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க 26 வரை காலஅவகாசம் நீடிப்பு

கடலூர்:

          வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய, படிவங்களை அளிப்பதற்கான காலஅவகாசம் 26-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார் 

             2010-ம் ஆண்டுக்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 1-7-2010 அன்று வெளியிடப்பட்டது.÷வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் 1-7-2010 முதல் 16-7-2010 வரை பெறப்பட்டன. தற்போது பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான காலஅவகாசம் 26-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி களப்பணியாளர்கள், மற்றும் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 

Read more »

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஊதியமாற்று நிலுவைத் தொகை எப்போது?

நெய்வேலி: 

            ஊதியமாற்று ஒப்பந்தத்தின் நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும், புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் புதிய சம்பளம் எந்த மாதத்திலிருந்து அமலாகும் என ஏக எதிர்பார்ப்புடன் என்எல்சி தொழிலாளர்கள் ஜூலை மாத சம்பளப் பட்டியலை எதிர்நோக்கியுள்ளனர்.

             ஊதியமாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் ஜூன் 30  முதல் ஜூலை 5-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிர்வாகத்துக்கும், நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 5-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். இருப்பினும் ஊதியமாற்று ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துக்களில் புதிய ஊதிய அலகீடுகள் இணைக்கப்பட்டிருந்ததோடு, பதவி உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் நிலுவையில் இருந்தன. இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த ஒருவாரமாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.÷இப்பேச்சுவார்த்தையில் அனைத்து ஷரத்துக்களும் பேசி முடிக்கப்பட்டு ஊதிய மாற்று ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.

             ஊதியமாற்று ஒப்பந்தம் இறுதி வடிவம் பெற்றதையடுத்து, புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் ஊதியம் கிடைக்குமா, ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகை எவ்வளவு, எப்போது கிடைக்கும் என்ற கேள்விகளுடன் தொழிற்சங்க அலுவலகத்தின் முன்  திரள துவங்கியுள்ளனர் தொழிலாளர்கள். 

இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகத்துறை அதிகாரி கூறுகையில், 

                 ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர் ஊதிய நிலைக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.1.25 லட்சமும், அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரையிலும் நிலுவைத் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. இந்தத் தொகையிலிருந்து ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தாற்காலிக முன்பணம் பிடித்தம் செய்யப்பட்டு, கடைநிலைத் தொழிலாளிக்கு ரூ.70 ஆயிரம் வரையும், மூத்த தொழிலாளிக்கு ரூ.1.35 லட்சம் வரையிலும் கிடைக்க வாய்ப்புண்டு.

               மேலும் மேற்கண்ட தொகைகளை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தின் ஒப்புதலும், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெற வேண்டியுள்ளது. எனவே இம்மாதம் 28-ம் தேதி நடக்கவுள்ள இயக்குநர்கள் குழுக் கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றபின், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெற்று ஆகஸ்டு 15-க்குப் பிறகோ அல்லது செப்டம்பர் மாத சம்பளத்தின் போதோ மேற்கண்ட தொகைகள் கிடைக்க வாய்ப்புண்டு எனத் தெரிவித்தார்.

Read more »

சிதம்பரம் அண்ணா கலையரங்கத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க எதிர்ப்பு

சிதம்பரம்:

            சிதம்பரம் நகரில் உள்ள மிகப்பெரிய கலையரங்கமான அண்ணா கலையரங்கம் பராமரிப்பின்றி அழிந்து போகும் நிலையில் உள்ளது.

              தற்போது அங்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அமைக்க வேளாண்துறை முடிவு செய்துள்ளது. எனவே அண்ணா நூற்றாண்டில் அண்ணா பெயரில் உள்ள இக்கலையரங்கம் மீண்டும் இயங்க தமிழக துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரவைத் தலைவர் ராம.ஆதிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

                சிதம்பரம் நகரில் வடக்குமெயின் ரோட்டில் அண்ணா கலையரங்கம் இயங்கி வந்த இடத்தில் தற்போது உழவர் சந்தை, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், வாடகை கார், வேன் ஸ்டேன்ட் என கலையரங்கம் பல்வேறாக கூறு போடப்பட்டுள்ளது. தற்போது அண்ணா கலையரங்கத்தில் மீதமுள்ள இடத்தில் முழுவதுமாக ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை தாற்காலிகமாக அமைக்க வேளாண்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிதம்பரம் நகரில் அறிஞர் அண்ணா பெயரில் இயங்கி வரும் அண்ணா கலையரங்கம் இடம் ஒன்று மட்டும்தான் அவரது நினைவாக நகர எல்லைக்குள் உள்ள ஒரு பொது இடமாகும். இங்குதான் பொதுக்கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், சர்க்கஸ் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. மேலும் சிதம்பரம் நகரில் மேலவீதி, கீழவீதி ஆகிய இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் குடியிருப்போரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

              இதனால் நகரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏதுவான இடம் கிடையாது. இந்நிலையில் அண்ணா கலையரங்கத்தில் மீதமுள்ள காலியிடத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டால் அண்ணா கலையரங்கம் நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் நிரந்திரமாக அமைக்க 5 லட்சம் ஏக்கர் நிலம் தேவை என தமிழக அரசு ஆணை எண்:66 தேதி 8.3.2001-ல் உத்தரவிட்டுள்ளது. ஆனால் காலியாக உள்ள அரை ஏக்கர் நிலத்திலேயே பெயரளவுக்கு விற்பனைக் கூடம் அமைக்க வேளாண் துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். ஏற்கெனவே அண்ணா கலையரங்கத்தில் உள்ள உழவர் சந்தை, முற்றிலும் செயல்படாத நிலையில் உள்ளது. 

                கட்டப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது. எனவே அண்ணா நூற்றாண்டில் அண்ணாவின் பெயரில் உள்ள இந்த கலையரங்கத்தில் செயல்படாமல் உள்ள உழவர் சந்தை, சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், வேளான் விற்பனைக் கூடம் ஆகியவற்றை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து கலையரங்கத்தை சீரமைத்து மீண்டும் பழைய நிலையில் இயங்க துணை முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்ப் பேரவை தலைவர் ராம.ஆதிமூலம் தெரிவித்துள்ளார்.

Read more »

பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் சுய உதவிக்குழுவிற்கு வழங்கிய மினி வேன் விறகு வைக்கப்பயன்படுத்தும் அவலம்

பண்ருட்டி :

           மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய டாடா ஏஸ் மினி வேன் பராமரிப்பின்றி விறகு வைக்க பயன்படுத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் 11 மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளனர். இக்குழுவினர் இயற்கை மண்புழு உரம், கிளீனிங், வாஷிங் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகியவை தயார் செய்தனர்.

            இக்குழுவை ஊக்கப்படுத்த அரசு சார்பில் வங்கிக் கடன், பேக்கிங் மிஷின், காகித மிஷின் உள்ளிட்டவைகள் மானியத்தில் வழங்கப்பட்டது. தற் போது அனைத்தும் பயன் படுத்தாமல் வீணடிக்கப் பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் தயாரிக்கும் பொருட்களை மாவட்ட முழுவதும் விற்பனை செய்ய கடந்த 2006-07ம் ஆண்டில் சந்தைப்படுத்துதல் திட்டத் தின் கீழ் 2 லட்சத்து 62 ஆயிரத்து 746 ரூபாய் மதிப்பிலான டாடா ஏஸ் மினி வேன் வழங்கப்பட்டது.

                  இந்த வேனை மகளிர் சுய உதவி கூட்டமைப்பு தலைவர் சரஸ்வதி மேற் பார்வையில் வாடகைக்கு விடப்பட்டது. பின் கடந்த 6 மாதங் களாக மினி வேன் பராமரிப்பு இல்லாமல் வாகன வரி செலுத்தாமல் வாகனத்தில் விறகு வைத்துள்ளனர். மகளிர் திட்ட அதிகாரிகள் மகளிர் குழுக்களுக்கு வழங்கும் கடன் தொகை முறையாக சேருகிறதா? குழுக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள் ளதா என்பதை ஒவ்வொரு மாதமும் முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

              மகளிர் குழுக்கள் செயல் பாடுகளில் தொய்வு ஏற்படும் போது அவர்களை ஊக்கப்படுத்தி அரசு திட்டங்களை விரைவாக செயல்படுத்த அதிகாரிகள் முன் வரவேண்டும். அப்படி ஊக்கப்படுத்தாததால் மாவட்டத்தில் சிறந்த மகளிர் கூட்டமைப்பாக செயல்பட்ட கணிசப்பாக்கம் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கிய டாடா ஏஸ் மினிவேன் உள்ளிட்ட பொருட்கள் வீணாகி வருகிறது.

Read more »

கோவை பொதுக்கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வில் எழுச்சி : நயினார் நாகேந்திரன் பேச்சு

கடலூர் : 

           கோவையில் செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசினார். ஜெ., பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது.

கூட்டத்தில் மாநில செயலாளர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: 

            கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் அரசு பணம் 350 கோடி ரூபாய் வீணடிக்கப்பட் டுள்ளது. இதற்காக போடப்பட்ட சாலைகள், கட்டப்பட்ட கட்டடங்கள் தரமற்றவையாக உள்ளது. கோவையில் அ.தி. மு.க., சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தால் புதிய எழுச்சி ஏற்பட்டு தொண் டர்கள் மத்தியில் புதிய வேகம் பிறந்துள்ளது. உளவுத்துறை, கருணாநிதியிடம் 1.50 லட்சம் பேர் கூடியதாக கூறியுள்ளனர். ஆனால் 6 லட்சம் பேர் கூடியதை மூடி மறைக்க முடியாது. 10 கி.மீ., தூரத்திற்கு தொண்டர்கள் நின்று ஜெயலலிதாவை வரவேற்றனர்.

             கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.,வில் இந்த அளவிற்கு கூட்டம் கூடவில்லை என அனைத்து தரப்பினரும் பேசி வருகின்றனர். அந்த அளவிற்கு அ.தி.மு.க.,வினர் எழுச்சியோடு காணப்படுகின்றனர். கோவையில் தொடங் கிய இந்த எழுச்சி கடலூர் வரை தொடர்கிறது. இந்த எழுச்சியை நாம் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் வரை கொண்டு செல்ல வேண்டும். முறையாக தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும். எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற சூழல் உள்ளது. ஜெயலலிதா தேர்தலுக்கு தயாராக உள்ளார். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் அதற்கு அ.தி.மு.க., வினர் ஜெயலலிதா யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவரை ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள்பயன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்

கடலூர் : 

        தீவிரவாதம் மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             மத்திய அரசு தீவிரவாதம் மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற் காக மத்திய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பயன்களை தீவிரவாத மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் பொருட்டு கடலூர் மாவட்டத்தில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் பட உள்ளது.

              இதனை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்படி பயங்கரவாத வன்முறையில் ஒரு குடும்பத்தில் மரணமடைந்த நபர்களின் எண்ணிக்கை எதுவாக இருப்பின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் வழங்கப்படும். இருப்பினும் குடும்பத்தில் சம்பாதிப்பவர், குடும்பத் தலைவர் ஒருவர் தனித்தனியான சம்பவங்களில் சந்தர்ப்பங்களில் மரணமடைந்தால் நிரந்தரமாக இயலாமையுற்றால் அக்குடும்பத்தினர் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் நிதியுதவி பெறுவதற்கு உரிமையுடையவர். நிதியுதவித் தொகையானது வங்கியில் குறித்த கால இட்டு வைப்பில் குடும்ப உறுப்பினர் பெயரில் இணை அல்லது ஒற்றைக் கணக்கில் வைக்கப்படும்.

                இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கான தகுதியை சரிபார்க்க, மாவட் டக்குழு பரிந்துரைகளை மத்திய அரசின் இணை செயலாளர் உள் விவகாரங்கள் அமைச்சகம் தொகுதி, டில்லி என்ற முகவரிக்கு வரையறுக்கப் பட்ட படிவத்திலும், அதன் நகல் ஒன்றை மாநில அரசின் உள் துறைக்கும் அனுப்பி தகுந்த நியாயத்துடன் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு பரிந்துரைக்கலாம். விண்ணப்பப் படிவங் கள் கலெக்டர் அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திட்டக்குடி தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு

திட்டக்குடி : 

          வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திட்டக்குடி தாலுகா தேர்தல் துணை தாசில்தார் அண்ணா துரை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நீக்கம் சம்பந்தமாக கடந்த 1 முதல் 16ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் போதிய கால அவகாசம் கேட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று வரும் 26ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். கால அவகாச நீட்டிப்பை பயன்படுத்தி நகர்ப் புற, கிராம வாக்காளர்கள் அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்களில் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

தனியார் பஸ்களை இயக்க டிரைவர்கள் தட்டுப்பாடு! பஸ் உரிமையாளர்கள் திண்டாட்டம்

கடலூர் : 

            தமிழகத்தில் டிரைவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் பஸ்களை இயக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறி வருகின்றனர்.

            தமிழகத்தில் 4,500 தனியார் பஸ்கள் வெவ்வேறு சாலைகளில் இயக்கப் பட்டு வருகின்றன. சாலைவரி, டயர் விலை ஏற்றம், டீசல் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் திணறி வந்த தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மற்றுமொரு பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற் போது தனியார் டிரைவர் கள் கிடைக்காமல் அவதிப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 5ம் வகுப்பு தகுதி இருந்தாலே டிரைவர் உரிமம் பெறலாம் என்கிற நிலை இருந் தது. அது 2007ம் ஆண்டு மத்திய அரசு குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ம் வகுப் பாக மாற்றி விட்டது. இதனால் உரிமம் பெறும் டிரைவர்கள் கணிசமாக குறைந்து விட்டனர். வங்கிக்கடன், முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, அரசு உதவித் தொகை போன்றவை எளிதில் கிடைப்பதால் பெரும் பாலான இளைஞர்கள் உயர் கல்வியை நாடும் நிலை உள்ளது.

               மேலும் தமிழகத்தில் 280க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு கல் லூரியிலும் சராசரியாக 20க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இது தவிர சென் னையில் உள்ள ஹூண் டாய், நோக்கியா, போர்டு நிறுவனங்களில் பல நூறு டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். எளிமையான வங்கிக் கடன், பைனான்ஸ் மூலம் குறைந்த வட்டியில் கிடைப்பதால் பல டிரைவர்கள் ஷேர் ஆட்டோ, டாடா ஏஸ் போன்ற வாகனங்களுக்கு முதலாளிகளாகி விடுகின்றனர். இதனால் தனியார் பஸ்சில் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு சமுதாயத்தில் அந்தஸ்தும் கிடைக்கிறது.

                போதை ஆசாமிகள், தொழில் மீது நம்பிக்கையற்றவர்கள், கிடைத்தது போதும் என் கிற எண்ணத்தில் வரும் சில டிரைவர்கள் லாரிகளில் தொழில் செய்யவே விரும் புகின்றனர். நாளொன்றுக்கு (இரவு பகல்) குறைந்த பட்சம் 1,000 ரூபாய்க்கு மேல் கிடைப்பதாலும், டிராபிக் மற்றும் சிரமம் இல்லாமல் ஓட்டுவதாலும் லாரிகளை விரும்புகின்றனர். ஆனால் தனியார் பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள் அப்படியல்ல. அதிகாலை எழுந்து டிரிப் எடுக்க வேண்டும், டிராபிக் அதிகம் உள்ள பகுதிகளில்தான் வாகனங்களை இயக்க வேண்டும். குறைந்த ஊதியம், போதையில்லா பணி போன்ற காரணங்களால் தனியார் பஸ்சுக்கு டிரைவர்கள் பணியாற்ற தயங்குகின்றனர்.

                  தற்போதுள்ள சூழ்நிலையில் பஸ் கட்டணம் உயர்த்தாமல் உள்ளதால் பஸ்சை இயக்கவே தனியார் பஸ் உரிமையாளர்கள் திணறி வரும் சூழ் நிலையில் டிரைவர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம்

கடலூர் : 

           இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூரில் கல்வி பாதுகாப்பு கருத்தரங்கம் இன்று நடக்கிறது.

               கடலூர் டவுன்ஹாலில் நடைபெறும் கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் சிவபாலன் தலைமை தாங்குகிறார். ஜீவானந்தம் கருத்தரங்கை துவக்கிறார். "கல்வி உரிமைச் சட்டம் செய்ய வேண்டியவை' தலைப்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "அன்னிய பல்கலைக்கழகம் ஓர் அபாயம்' தலைப் பில் ரெஜிஸ்குமார், "மாவட்டத்தின் கல்வி தரம், தேர்ச்சி விகிதம்' தலைப்பில் ரமேஷ்பாபு பேசுகின்றனர். தனசேகரன், எம்.எல்.ஏ., மகேந்திரன் சிறப்புரையாற்றுகிறார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டி

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று 22ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 55 பதவிகளுக்கு 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு எவரும் போட்டியிடவில்லை. எஞ்சிய 8 பதவிகளுக்கு 19 பேர் போட்டியிடுகின்றனர்.

            மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் 48 இடங்களும், ஊராட்சி தலைவர் 3, ஒன்றிய கவுன்சிலர் 1, பேரூராட்சி கவுன்சிலர் 2, நகராட்சி கவுன்சிலர் பதவி ஒரு இடம் என மொத்தம் 55 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான இடைதேர்தல் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கி 10ம் தேதி முடிந்தது. 12ம் தேதி மனு பரிசீலனை செய்யப்பட்டது. 14ம் தேதி மனுக்களை வாபஸ் பெறப்பட்டு, அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது.

            அதில் 48 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பிரச்னை காரணமாக 6 வார்டுகளுக்கு மனு தாக்கல் நடைபெறவில்லை. மீதமுள்ள 42 வார்டுகளில் 36 வார்டிற்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னபேட்டை ஒன்றிய கவுன்சிலராக பழனியம்மாள் (தி.மு.க), மேல்புவனகிரி பேரூராட்சி 7 வது வார்டிற்கு முத்து என்கிற கோவிந்தசாமி (தி.மு.க), மேல் பட்டாம்பாக்கம் 14வது வார்டு கவுன்சிலராக கோவிந்தசாமி (தி.மு.க), சிதம்பரம் நகராட்சி முதல் வார்டிற்கு தியாகு என்கிற தியாகராஜன் (வி.சி.,) ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

              மீதமுள்ள உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கு இன்று 22ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதில் 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 பேரும், பரங் கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு நான்கு பேரும் போட்டியிடுகின்றனர். கொளப்பாக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு வழக்கம் போல் தேர்தல் நடக்கவில்லை.

Read more »

புவனகிரி அரசு விதைப் பண்ணையில் மோட்டார் பழுது : மண்புழு உரம் தயாரிப்பு பணிகள் பாதிப்பு

புவனகிரி : 

            அரசு விதைப் பண்ணையில் மின் மோட்டார் பழுதாகியதால் மண்புழு உரம் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

           புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் அரசு விதை பண்ணை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள் வேளாண்மை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதேபோல் இங்கு சிமென்ட் தொட்டிகள் அமைத்து மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரங்களை கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் வாங் கிச் சென்றனர். காலப் போக்கில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள் தங்கள் பகுதிகளில் சொந்தமாக மண் புழு உரம் தயாரித்து வருவதால் உரம் வாங்கும் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்தது. அரசு பண் ணையில் மண்புழு உரம் விற்பது குறைந்தது.

                  இந்நிலையில் மின் மோட்டார் பழுதாகி விட் டதால் தண்ணீர் வசதி இன்றி உரம் தயாரிக்கும் பணி கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உரம் வாங்க வரும் விவசாயிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். உடனடியாக மின்மோட்டார் பழுது நீக்கி உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பார் 60 கடைகள் ஏலம் போனது

கடலூர் : 

           மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் "பார்' நடத்துவதற்காக நேற்று நடந்த ஏலத்தில் 60 கடைகள் மட்டுமே ஏலம் போனது.

          கடலூர் மாவட்டத்தில் 231 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் "பார்' நடத்தவும், அதில் கிடைக்கும் காலி பாட்டில்களை எடுத்து விற்பனை செய்வதற்கு ஓராண்டு உரிமத்திற்கான ஏலம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற் கான டெண்டர் கடந்த 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை பெறப்பட்டது.

              இந்த டெண்டர் படிவங்கள் நேற்று காலை 11 மணிக்கு கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில் மேலாளர் தேவராஜ் முன்னிலையில் பிரிக்கப்பட்டது. மொத்தம் 121 டெண்டர்கள் வந்திருந்தன. அதில் அதிகபட்ச தொகையை குறிப்பிட்டிருந்த 60 டெண்டர் படிவங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் ஐந்து நாட்களுக்குள் ஓராண்டிற்கான ஒப்பந்த பத்திரம் மற்றும் இரு மாதத்திற்கான தொகையை வைப்புத் தொகையாக கட்டினால் மட்டுமே ஏலம் உறுதி செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டனர்.

Read more »

வடலூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடி : 

            வடலூரில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

                புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை வழங்கினர். வள்ளலார் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். வள்ளலார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் சுகாதார ஆய் வாளர்கள் சுப்ரமணியன், ஜெயக்குமார், பாண்டியராஜ், தயாநிதி, முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், முட நீக்கியல் ஆகிய நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக் கப்பட்டது.

Read more »

நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் குளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம் : 

            நெல்லிக்குப்பம் அண்ணா நகரில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

            நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்கால் மூலம் சென்று அண்ணா நகரில் உள்ள குளத்தில் தேங்கி அங்கிருந்து வெள்ளப் பாக்கத்தான் வாய்க்கால் வழியே செல்ல வேண்டும். ஆனால் அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் வாய்க்கால் மட்டுமின்றி குளமும் புதர்மண்டிக் கிடக்கிறது. 

                  குளத்தில் இருந்து கழிவுநீர் செல்ல முடியாமல் ஆகாயத்தாமரை செடி மண்டி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. குளத்தின் அருகே நூற்றுக்கணக்கான வீடுகள் மட்டுமின்றி அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. பகல் நேரங்களிலேயே அப்பகுதி மக்கள் மட்டுமின்றி மாணவிகளையும் கொசுக்கள் கடிப்பதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக வாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் செல்ல வழி செய்ய வேண்டும்.

Read more »

விருத்தாசலம் அருகே மோசமான சாலையால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி

விருத்தாசலம் : 

            கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து தேவங்குடி மற்றும் பவழங்குடி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவ்வழியே செல் லும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.

            விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ள தேவங்குடி மற்றும் பவழங்குடி கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேமம், கார் மாங்குடி, வல்லியம், சக்கரமங்களம், சி.கீரனூர், மருங்கூர், காவனூர், கீரமங்கலம், கொடும்பனூர், மேலப்பாலூர், தொழூர் உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன.

              அனைத்து கிராமத்திற்கும் கருவேப்பிலங்குறிச்சியில் இருந்துதான் செல்ல வேண்டும். இங்கிருந்து மேற்படி கிராமங்களுக்குச் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டிற்கு முன்பு போடப் பட்டது. தற்போது மிகவும் பழுதடைந்து குண் டும் குழியுமாக போக் குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலையில் இருப்பதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள் ளனர். பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மட்டுமின்றி ஆம் புலன்ஸ் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சேர முடியாத நிலை உள்ளது.

           பெரும்பாலான நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி பஸ் டயரும் பஞ்சராகி நடுவழியில் நின்று பயணிகள் அவதிக் குள்ளாவதும் வழக்கமாக நடந்து வருகிறது. சற்று வேகமாக சென்றால் கூட ஸ்பிரிங் கட்டாகி விடும் என டிரைவர்கள் மெதுவாக பெண் அழைப்பு வாகனங்கள் செல்வது போல் சீராக செல்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி நேரத் திற்கு சரியாக போய் சேர முடியாத நிலை உள்ளது. மேலும் இவ்வழியாக பெண்ணாடம் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற் பட்ட கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகள், டிராக்டர்கள் செல்வதால் மழைக்காலங்களில் இப்பகுதி சாலைகள் படுமோசமான நிலையில் காணப்படுகிறது.

                   இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைவரும் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Read more »

புழுதிப்புயல், கொசுக்கடியில் அவதிப்படும் கடலூர் நகர மக்கள்

கடலூர் : 

            கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணி தீவிரமடைந்துள்ளதால் பகலில் புழுதிப் புயலிலும், இரவில் கொசுத் தொல்லையிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

              கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத்திட் டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது நெல்லிக்குப்பம் சாலை, ஜட்ஜ் பங்களா ரோடு, பீச் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்ட கம்மியம் பேட்டை, போடி செட்டித் தெரு, மாரியம்மன்கோவில் தெரு, அக்கிள் நாயுடு தெரு உள்ளிட்ட தெருக்களில் பள்ளம் இதுவரை மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அண்மையில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் கிடக்கும் மண் மேடுகள் சகதியானது. அது காய்ந்த வெயிலில் உலர்ந்து வாகனங்கள் செல்லும் போது நகரமெங்கும் புழுதிப் புயலாக காட்சி தருகிறது. இதனால் கடலூரில் பயணம் செய்பவர்கள் சுவாச கோளாறினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

                 இது ஒரு புறம் இருக்க, கழிவு நீர் கால்வாய் அடைபட்டு தண்ணீர் தேங்கி நிற்பதாலும், கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையினாலும் ஏற்கனவே பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சிறு சிறு பள்ளங்களில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் இரவு பகல் எல்லா நேரங்களிலும் கொசுக்கடியில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாதாரணமாக மாலை நேரத்தில் நின்று பேசவோ, நிற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியும் கொசு மருந்தை தெளிப்பதை சிக்கனப்படுத்தியதாலும் கொசுக்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

Read more »

பண்ருட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பண்ருட்டி : 

              பண்ருட்டி பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

              பண்ருட்டி போலீஸ் லைன் குடியிருப்புகள், காமராஜர் நகர் பகுதி, இந்திராகாந்தி சாலை, லிங்க்ரோடு பகுதியில் எப்போதும் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிந்து வருகிறது. குரங்குகள் இப்பகுதியில் உள்ள கேபிள் ஒயர்கள், டெலிபோன் ஒயர்கள் அறுத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்த வழியே செல்பவர்களை கடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் வீட்டின் ஜன்னல் வழியாக நுழைந்து வீட்டினுள் உள்ள பொருட்களை சாப்பிட்டு விட்டு செல்வதுடன் சிறு சிறு பாத்திரங்களையும் களவாடிச் செல்கின்றன.

                குரங்குளின் தொடர் அட்டகாசத்தால் இப்பகுதிமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குரங்குகளை பிடித்து வனத்துறை எல்லையில் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை. இதற்கு நகராட்சி அதிகாரிகள் வனத்துறையினர் ஒத்துழைப்புடன் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

           வக்கீல்கள் மீது போலீசார் பதிவு செய்யும் வழக்குகளைக் கண்டித்து கடலூரில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

              கடலூர் மாவட்டத்தில் 900க்கும் மேற்பட்ட வக்கீல்கள் உள்ளனர். சமீப காலமாக விருத்தாசலம் கதிரவன், பண்ருட்டி செல்வம், கடலூர் முருகன் உள்ளிட்ட வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த அணுகு முறையை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக் கோரியும் நேற்று கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோர்ட் புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பத் தலைமை தாங்கினார். வேதநாயகம், தமிழரசன் முன்னிலை வகித்தனர். தங்கராஜ், மாசிலாமணி, கண்ணன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

               பின்னர் மாவட்ட வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனுவை கலெக்டர், எஸ்.பி., மாவட்ட நீதிபதி ஆகியோர்களிடம் அளித்தனர். முன்னதாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதையொட்டி கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வக்கீல்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் வாபஸ் பெறப்பட்டனர். 

திட்டக்குடி: 

               மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் தங்க கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் முத்தழகன், பொருளாளர் கென் னடி முன்னிலை வகித்தனர். மணிவண்ணன், பாலசுரேந்திரன், கலைச் செல்வன், இளஞ்செழியன் உட்பட பலர் பங் கேற்றனர்.

Read more »

கடலூரில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கருவூலத்துறையினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

           கருவூலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

              மாவட்ட தலைவர் சிவநேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், கல்யாணசுந்தரம், தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அய்யாசாமி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட தலைவர் வையாபுரி உட்பட பலர் பங்கேற்றனர். கருவூலத்துறையில் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மிகை நேர படியை உயர்த்த வேண்டும். 2009ம் ஆண்டு கண்காணிப்பாளர் தேர்வுநிலை பட்டியலை வெளியிட வேண்டும். புதிய வருவாய் வட்டங்களில் புதிய சார் கருவூலங்களை துவக்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior