உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைந்தார் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி



            ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் அவதரித்து உலகம் முழுக்க தன்னுடைய அருள் வெள்ளத்தைப் பாய்ச்சிய ஆன்மிகச் செல்வர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு முக்தி அடைந்தார். 

            அவருக்கு வயது 86.  வெறும் உபதேசங்கள் மட்டும் போதாது என்று உணர்ந்து ஏழைகள் பால் கருணையும் இரக்கமும் கொண்டு கல்வி நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி இலவசமாகவே எல்லாவற்றையும் பெற வழிகாட்டிய அருள் செல்வரின் மறைவு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.  நாட்டு மக்களின் நலனுக்காகவே தன் வழியில் உழைத்த பாபா, மார்ச் 28 முதல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்தினார்.  
 
மருத்துவ அறிக்கை: 
 
             பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா இன்று நம்மிடையே இல்லை. இதயம் செயலிழந்ததால் காலை 7.40 மணிக்கு அவர் தன்னுடைய பூத உடலை நீத்தார். புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் அரங்கில் அவருடைய பூத உடல் பக்தர்கள் தரிசிக்க வசதியாக ஞாயிறு மாலை 6 மணி முதல் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் வைக்கப்பட்டிருக்கும்' என்று ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிலையத்தின் இயக்குநரான ஏ.என். சஃபாயா அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
 
 கீதா ரெட்டி:  
 
             ஆந்திரத் தொழில்துறை அமைச்சரும் சாய் பக்தருமான ஜே.கீதா ரெட்டி, ஒருங்கிணைப்புப் பணிக்காக பிரசாந்தி நிலையத்தில் முகாமிட்டிருக்கிறார். பாபாவின் பூத உடல் வரும் புதன்கிழமை காலை குல்வந்த் அரங்கிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும் நேரம் பிறகு தீர்மானிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். 
 
 4 நாள் அரசு துக்கம்: 
 
              ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு சுமார் 170 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருப்பதால் அவர்கள் கடல் கடந்து வந்து பாபாவைத் தரிசிக்க வசதியாக 4 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  உடல் அடக்கம் நடைபெறும் புதன்கிழமை, அனந்தப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ சத்ய சாய் பாபா ஆன்மிகப் பேரரசை நிறுவியவர் என்பதால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது என்று ஆந்திர அரசு முடிவு செய்திருக்கிறது.  
 
தலைவர்கள் வருகை: 
 
            பாபாவின் மறைவுச் செய்தி கேட்டவுடன் மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்திக்கு விரைந்தனர். பாபாவின்பால் பக்தி கொண்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள் புட்டபர்த்தி நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.  புட்டபர்த்தியில் உள்ள சாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான தனி விமான நிலையம் பெரிய விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வந்து இறங்க வசதியாக தயார்படுத்தப்பட்டுவிட்டது.  மாநிலப் போலீசா ரும் அனந்தப்பூர் மாவட்டம் முழுக்க காவலையும் கண்காணிப்பையும் பலப்படுத்தியிருக்கின்றனர். 
 
            பிரமுகர்களும் பக்தர்களும் பாதுகாப்பாக வந்து பாபாவைத் தரிசிக்கவும் நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்படுகின்றன.  பக்தர்களுக்காக போக்குவரத்து, உணவு, குடிநீர், முதலுதவிச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை சாய் சமாஜங்களே செய்துள்ளன.  சாய்பாபா தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பக்தர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒழுங்கு, கட்டுப்பாடு, உணர்ச்சிகளுக்கு ஆள்படாமை, பிறருக்கு உதவுதல், அமைதி காத்தல் ஆகியவற்றை அவருடைய பக்தர்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதால் எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் சமாளித்துவிட முடியும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையுடன் இருக்கிறது. 
 
 1926-ல் அவதாரம்: 
 
              புட்டபர்த்தியில் 1926-ம் ஆண்டு ஸ்ரீ சாய் பாபா அவதாரம் செய்தார். அப்போது அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சத்ய நாராயண ராஜு. சத்யம், சிவம், சுந்தரம் என்ற தத்துவங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த பாபா தன்னுடைய பக்தர்களுக்காக காற்றிலிருந்து விபூதி வரவழைப்பது, லிங்கங்களை வரவழைத்துத் தருவது போன்ற சித்து வேலைகளைச் செய்வார். அதைத்தான் அவருடைய விமர்சகர்கள் மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். ஆனால் பாபாவின் அருளாசியால் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீண்டதால் அவரை அவதார புருஷனாகவே மக்கள் பார்த்தனர். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பாரதவாசிகள் முதல் படித்த வெளிநாட்டவர் வரை அவருடைய சீட கோடிகளின் எண்ணிக்கையும் தரமும் அனேகம்.  பாபா மறையவில்லை. கோடிக்கணக்கான சீடர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார். அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற.

Read more »

கடலூரில் கட்டுமானப் பொருள்கள் விலை கடும் உயர்வு


கடலூர்:

              கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, கீழ்நிலையில் இருப்போர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை, நிராசையாக, கனவாகவே கலைந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது.  

                   கடலூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு லாரி செங்கல் (4 ஆயிரம் செங்கல்) விலை லாரி வாடகை, ஆள் கூலி உள்பட ரூ. 8,500 ஆக இருந்தது. இது ஜனவரி மாதத்தில் ரூ. 26 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போது செங்கல் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. ஒரு லாரி செங்கல் ரூ. 16 ஆயிரமாகக் குறைந்துள்ளது.  ஆற்று மணல் விலை கடலூரில், கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லாரி (3 யூனிட்) ரூ. 2 ஆயிரமாக இருந்தது. பின்னர் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஆறுகளில் மணல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஒரு லாரி மணல் ரூ. 6 ஆயிரம் வரை உயர்ந்தது. தற்போதும் ரூ. 7 ஆயிரமாக உயர்ந்து இருக்கிறது.  

              பெண்ணை ஆற்றில் எங்கும் மணல் குவாரி இல்லை. இதனால் சேத்தியாத்தோப்பில் இருந்தும், பெண்ணாடத்தில் இருந்தும் கடலூருக்கு மணல் வருவதால், ஆற்று மணல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடலூரில் கெடிலம் ஆற்று மணல் மாட்டு வண்டி ரூ. 600 ஆக உள்ளது.  கருங்கல் ஜல்லி ஒரு லாரி (அதிகமாக பயன்படுத்தும் முக்கால் அங்குல ஜல்லி) 3 மாதங்களுக்கு முன்பு ரூ. 6,500 ஆக இருந்தது ரூ. 9,500 ஆக உயர்ந்து விட்டது. இரும்புக் கம்பி விலை கிலோ ரூ. 36 ஆக இருந்தது ரூ. 42 ஆக உயர்ந்து விட்டது. சிமென்ட் விலையும் மூட்டைக்கு ரூ. 25 அதிகரித்து, மூட்டை ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.  

           மின்சார கம்பிகள், மின் சாதனங்கள், தரை ஓடுகள் மற்றும் இதர கட்டுமானத்துக்குத் தேவையான பொருள்கள், கடந்த 10 மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்து இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  கட்டுமான வேலைக்கு கொத்தனார், சித்தாள் கிடைப்பதிலும் பெரும் சிரமம் உருவாகி இருப்பதாக கட்டுமானப் பொறியாளர்கள், மேஸ்திரிகள் கூறுகிறார்கள். 6 மாதங்களுக்கு முன்பு கொத்தனார் சம்பளம் ரூ. 350 ஆக இருந்தது தற்போது ரூ. 420 முதல் ரூ. 450 வரை உயர்ந்து உள்ளது. சித்தாள் கூலி ரூ. 200 ல் இருந்து ரூ. 300 ஆக உயர்ந்து விட்டது என்றும் தெரிவிக்கிறார்கள். 

                தரை ஓடு பதித்தல் போன்ற பணிகளுக்கு நாள் கூலி ரூ. 600 ஆக உயர்ந்து இருக்கிறது.  மேலும் கடந்த ஓராண்டில், வீட்டு நிலங்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. கடலூரில் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளில், வீட்டு நிலங்களில் விலை குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ. 250. நகர் புறங்களில் குறைந்த விலை சதுர அடிக்கு ரூ. 450. நெடுஞ்சாலை ஓரம் உள்ள நிலங்களின் குறைந்தபட்ச விலை சதுர அடிக்கு ரூ. 2,500.  கடலூரில் வீடுகள் கட்டுவதற்கான குறைந்தபட்ச செலவு சதுர அடிக்கு ரூ. 1,300. ஆனால் வங்கிகள் சதுர அடிக்கு ரூ. 1,000 என்று செலவை நிர்ணயம் செய்து, அதில் 80 சதவீதம் மட்டும் கடனாக வழங்குகின்றன. 

         இத் தொகையைக் கொண்டு நடுத்தர மக்களும், கீழ்நிலையில் இருக்கும் பலரும் வீடு கட்டுவது என்பது சாத்தியம் அற்றதாக மாறியிருக்கிறது.  கடலூரில் தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கிக் கிடந்தன. தற்போதுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட கட்டுமானப் பொறியாளர் சங்க துணைத் தலைவர் ராஜா கூறுகையில், 

            கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம், வீடுகள் கட்டும் பணிகளை பெரும்பாலும் முடக்கி விட்டன. தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக முடங்கிக் கிடந்த கட்டுமானப் பணிகள் தற்போதுதான் தொடங்கி இருக்கின்றன. கட்டுமானப் பொருள்கள் விலை, ஆள் கூலி உயர்வு காரணமாக, பலர் வீடு கட்ட முன்வருவதில்லை. உயர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் மற்றும் பணக்காரர்கள்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது.  

           வங்கிகள் கடலூரில் கட்டுமானச் செலவு சதுர அடிக்கு ரூ. 1,000 எனக் கணக்கிட்டு, அதில் 80 சதவீதம் மட்டுமே கடன் வழங்குகிறது. இதனால் வங்கிக் கடனை மட்டும் நம்பி, வீடுகட்ட முடியாத நிலை உருவாகி இருக்கிறது. ஓராண்டுக்கு முன் ரூ. 10 லட்சத்தில் கட்டிய வீட்டை, தற்போது ரூ. 20 லட்சம் செலவிட்டால்தான் கட்ட முடியும். சொந்த வீடு என்பது நடுத்தர மக்களுக்கு கனவாகத்தான் உள்ளது என்றார் பொறியாளர் ராஜா.  

Read more »

கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் சரண்


 
கடலூர்:

           அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை மாலை சரண் அடைந்தார்  

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், முன்னதாக கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அடைந்தவர் ஜான் டேவிட் (34).  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசு, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தவர் ஜான் டேவிட். 

            கரூரை சேர்ந்த மருத்துவத் தம்பதியர் டேவிட் மாரிமுத்து, எஸ்தர் லட்சுமி ஆகியோரின் மகன்.  6-12-1996 அன்று நாவரசுவை ராகிங் காரணமாக ஜான்டேவிட் கொலை செய்தார். பின்னர் நாவரசுவின் உடலை, ஜான் டேவிட் பல துண்டுகளாக வெட்டினார். தலையை ஒரு பையில் போட்டு, அண்ணாமலைப் பல்கலக்கழகம் அருகே உள்ள வாய்க்காலில் போட்டார். உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து சென்னைக்கு கொண்டு சென்றார். வழியில் உள்ள வாய்கால்களில் கை, கால்களை வீசி எறிந்தார். தலை, கால், கைகளற்ற உடலை, சென்னை நகர பஸ் ஒன்றில் வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். 

               இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து புதன்கிழமை உத்தரவிட்டனர். 

                கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  அதைத் தொடர்ந்து ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைய வேண்டும் அல்லது அவரை கடலூர் போலீஸôர் கைது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையே ஜான் டேவிட், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் மத போதகராக இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.  ஜான் டேவிட்டை கைது செய்ய 4 தனிப் படைகளை அமைத்து இருப்பதாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அறிவித்தார்.  

               தனி போலீஸ் படையினர் கரூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஜான் டேவிட் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டுவரப்படுவதாக ஒரு தகவலும், ஜான்டேவிட் தானாக வந்து, கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாக மற்றொரு தகவலும் வெளியாயின.  மாலை 5 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மத்திய சிறைச் சாலைக்கு விரைந்து வந்த பிறகே உண்மை தெரிந்தது.

            ஜான் டேவிட் மாலை 4.30 மணிக்கு, தனது தாயார் மற்றும் வழக்கறிஞருடன் வந்து கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்தார் என்பது பின்னரே தெரிய வந்தது.  போலீஸ் மற்றும் செய்தியாளர்கள் கண்ணிóல படாமல் சிறைச் சாலையில் சரண் அடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  

எஸ்.பி. பேட்டி: 

ஜான் டேவிட் சரண் அடைந்தது குறித்து எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் கூறியது: 

              உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்து ஜான் டேவிட்டை கைது செய்ய திட்டமிட்டோம். அதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் திருச்சி, கரூர், சென்னை போன்ற இடங்களில் விசாரணை நடத்தினர்.  தீவிர விசாரணையில் ஜான் டேவிட் சென்னை வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில், ஜான் மாரிமுத்து என்ற பெயரில் வேலை பார்ப்பதாகத் தகவல் கிடைத்து. அந்த நிறுவனத்தை நெருங்கும் நிலையில், ஜான் டேவிட் புதுவைக்குச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.  போலீஸ் வருவதற்குள் ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாகத் தகவல் வந்து விட்டது என்றார் எஸ்.பி. 

 ஜான் டேவிட்டின் வழக்கறிஞர் ஆறுமுக ராஜன் கூறுகையில்,

          உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்ததும், ஜான் டேவிடே சரண் அடைய முடிவு செய்தார். அவரது வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் விரைவில் செய்யப்படும் என்றார். 

Read more »

கால்நடை மருத்துவப் படிப்புக்கு மே 2 முதல் விண்ணப்பம்

             பிளஸ் டூ முடித்த மாணவர்கள் சேரும் வகையில், பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவப் படிப்பு) உள்ளிட்டவற்றுக்கு வரும் மே 2-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. 
  
இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             "2011-12-ம் கல்வி ஆண்டில் பி.வி.எஸ்சி. மற்றும் ஏ.எச்., பி.எஃப்.எஸ்சி., பி.டெக். (உணவு பதனிடுதல் தொழில்நுட்பம்), பி.டெக். (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வரும் 2-ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 7-ம் தேதியாகும்.  

விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? 

            சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடியில் உள்ள மீன் வளக் கல்லூரி, மதுரை-கோவை-திருச்சி-ராஜபாளையம்-வேலூர் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் விண்ணப்பம் கிடைக்கும். 

            விண்ணப்பம் தொடர்பான விவரங்களை  www.tanuvas.ac.in  என்ற இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம்; அல்லது 044-25551586/87 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். 

 ரேங்க் பட்டியல்-கவுன்சலிங்:

             விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் 3-வது வாரம் மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழக இணையதளத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் கவுன்சலிங் நடைபெறும்.

Read more »

கேட்பாரற்றுக் கிடக்கும் கடலூர் நகரம்

கடலூர்:

                 சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகரம் மாவட்டத் தலைநகரான கடலூர்.  1600-ம் ஆண்டுகளில் முதலில் டச்சுக்கார்களிடமும் பின்னர் போர்ச்சுக்கீசியர் வசமும் இறுதியாக ஆங்கிலேயரிடமும் கடலூர் இருந்துள்ளது. 1690-ல் செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னரிடம் இருந்து, பிரிட்ஷார் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடலூர் பகுதிகளை விலைக்கு வாங்கியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

            1720 முதல் கடலூர் கோட்டை பிரிட்டிஷ் படையினரால் வலிமைப்படுத்தப்பட்டது. 1746 முதல் இந்தியாவில் பிரிட்டிஷாரின் தலைநகரமாக கடலூர் விளங்கியது. இடையிடையே புதுவையை தன்னகத்தே கொண்டு இருந்த பிரெஞ்சுப் படையினருக்கும், கடலூரை தலைமை இடமாகக் கொண்ட பிரிட்டிஷ் படையினருக்கும், கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போர்கள் நிகழ்ந்துள்ளன. 1758 ஏப்ரல் 29-ம் தேதி கடலூரில் நடந்த போரில் பிரிட்டிஷ் படையினர் 29 பேரும், பிரெஞ்சுப் படையினர் 600 பேரும் கொல்லப்பட்டதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

                    300 ஆண்டுகளுக்கு முன் நிலத்துக்கான, உரிமைக்கான போராட்டத்தில் போர்க் களமாகவும், மாநிலத் தலைநகரமாகவும் விளங்கிய கடலூர் இன்று, மாவட்டத் தலைநகரமாக, குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும், மக்கள் கடுமையாகப் போராடி வரும் நகரமாக இன்று மாறி இருக்கிறது. எனவே கடலூரை பொருத்தவரை காலங்கள் மாறினாலும் போராட்டங்கள் மாறவில்லை. போராட்டங்களின் வடிவங்கள்தான் மாறியிருக்கின்றன.  ரூ. 60 கோடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு, ரூ.40 கோடிக்கு மேல் செலவிட்டு சாலை அமைக்க வேண்டியதாயிற்று. 

               திறமையற்ற நகராட்சி நிர்வாகம் காரணமாக, பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்தாலும், சாலை அமைக்கும் பணிகள் முடிவடையாது என்ற நிலைதான் நீடித்து வருகிறது.  சுமார் 118 சாலைப் பணிகளில் 50 சதவீதம் பிப்ரவரி மாதத்துக்குள்ளும், மார்ச் 31-க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டும், பல பணிகள் இன்னமும் முடிக்கப்படவில்லை. கோடை மழை தொடங்கி இருக்கும் நிலையில் நகரில் பல சாலைகள் சேறும் சகதியுமாக மீண்டும் மாறிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் கடலூர் மக்கள் சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பரிதாப நிலை உருவாகி விட்டது.   

               மார்ச் 1-ம் தேதிமுதல் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்து விட்டதால், சாலைப் பணிகள் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் கேட்பாருமில்லை, மேய்ப்பாரும் இல்லை என்ற நிலைக்குக் தள்ளப்பட்டு விட்டன. மே 15 வரை இப்பணிகளை கவனிக்க மேற்பார்வையிட நாதியற்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் ஒப்பந்தக்காரர்கள் வைத்ததுதான் வரிசை என்றாகிவிட்டது. இந்த நிலையில் பணி நிறைவடைய 3 மாதம் தாமதம் ஆகிவிட்டதால் பொருள்கள் விலையேற்றம் காரணமாக, டெண்டரில் குறிப்பிட்ட தொகையை உயர்த்தி வழங்கினால்தான் இனி வேலைகளை முடிக்கமுடியும் என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.  

              ஒருசில மாதங்களில் நகராட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்க இருக்கின்றன. எனவே முடிக்கப்படாத பணிகள் குறித்தும் புதிய பணிகள் குறித்தும் நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் கவலைப்படுமை என்பது சந்தேகமே.   தற்போது சட்டப் பேரவைத் தேர்தலை காரணம் காட்டி முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகம், இனி நகராட்சித் தேர்தலை காரணம் காட்டி முடங்கப்போகிறது என்கிறார்கள் கடலூர் நகர மக்கள். அடிப்படை வசதிகளுக்கான கடலூர் மக்களின் போராட்டம் எப்போது முடிவடையும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 6,053 பேருக்கு தபால் வாக்குச்சீட்டு

கடலூர்:

               தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பூட்டி சீல்வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆனால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்கள், பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்றுள்ள அரசு அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்களித்து வருகிறார்கள்.

              இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அறைகளில் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.   தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாக நடந்த 2-வது கட்ட பயிற்சி வகுப்புகளில் தபால் ஓட்டு போடுவதற்கு உரிய விண்ணப்பபடிவத்தை நிரப்பி கொடுத்தனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வாக்கு சீட்டை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் பதிவு தபாலில் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

                 அதைபெற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாக்குச்சீட்டில் தங்களுக்கு விருப்பமுள்ள சின்னத்தின் எதிரே பேனாவால் டிக் செய்து அவற்றை தபால் உறையில் வைத்து பதிவு தபால் மூலமாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைத்தோ, அல்லது நேரடியாக சென்றோ ஓட்டுப்பெட்டியில் வாக்குசீட்டு உள்ள தபால் உறையை போடவேண்டும்.  இதுதான் தபால் ஓட்டு போடும் முறை.   இந்த நிலையில் ஒருசில மாவட்டங்களில் தபால் ஓட்டு போடுவதற்கான வாக்கு சீட்டுகள் இன்னும் வந்து சேரவில்லை என அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
 
கடலூர் மாவட்டத்தில் தபால் ஓட்டு பற்றிய விவரங்கள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                    கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் ஓட்டு போடுவதற்காக 10,285 பேர் மனு வாங்கி சென்றனர். அவர்களில் 7,057 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இதில் தகுதி உடைய 6,053 பேருக்கு வாக்கு சீட்டுகளை பதிவு தபாலில் அனுப்பி இருக்கிறோம். இதில் காவல்துறையை சேர்ந்தவர்கள் 401 பேர் ஆவார்கள். தபால் ஓட்டு போடுவதற்காக 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவல கத்தில் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பெட்டியின் அருகில் கண்காணிப்பாளர் ஒருவர் அமர்ந்து இருப்பார்.அவர் தபால் மூலம் வருகின்ற வாக்குச்சீட்டுகளை பதிவு செய்த பின்னர் அந்த வாக்குச்சீட்டு உள்ள தபால் உறையை ஓட்டுப்பெட்டிக்குள் போடப்படுகிறது.

                    கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூர் தொகுதியில் 932 தபால் ஓட்டுகளும், குறைந்த பட்சமாக பண்ருட்டியில் 507 ஓட்டுகளும் உள்ளன. தபால் ஓட்டு போடுவதற்கு அடுத்த மாதம் (மே) 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று காலை 8 மணியுடன் தபால் ஓட்டு போடுவது முடிவடைகிறது. தபால் ஓட்டுக்காக யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. அப்படி மீறி யாராவது பிரசாரம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

                 அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து தொகுதிகளில் உள்ள தபால் ஓட்டு பெட்டிகளுக்கும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு வெப்கேமரா அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

               வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஒரு கட்டுபாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

கடலூர் அருகே கோவில் பூசாரி குத்திக் கொலை

கடலூர்:
 
        கடலூர் அருகே குள்ளஞ்சாவடியை அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 60). இவருக்கு ஜெயலட்சுமி, பிரேமலதா ஆகிய 2 மனைவிகளும், 4 மகள்களும் உள்ளனர்.

              காத்தமுத்து அந்த ஊரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். மாலையில் பூஜை முடிந்ததும் இரவு சாப்பிட்டு விட்டு கோவிலி லேயே அவர் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவு காத்தமுத்து சாப்பிட்டு விட்டு கரைமேடு கிராமத்தில் நடந்த தெருக் கூத்து நிகழ்ச்சிக்கு சென்றார்.

             நள்ளிரவில் 2 மணியளவில் அவர் கோவிலுக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் பின் புறத்தில் காத்தமுத்து பிணமாக கிடந்ததை கண்டனர்.  அவரது தலையில் கடப்பாரையால் குத்தப்பட்ட காயம் இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் கோவிலுக்குள் நுழைந்து உண்டியல் பணத்தை கொள் ளையடிக்க வந்தபோது அதனை தடுத்த காத்த முத்துவை அந்த ஆசாமிகள் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீசும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

                மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் கோவிலில் இருந்து குளக்கரை வழியாக ஓடி அங்குள்ள ஏரிக்கரை மேட்டில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகை முன்பு நின்றது. போலீசார் அந்த மோட்டார் கொட்டகையை சோதனையிட்ட போது மோட்டார் கொட்டகை முன்பு 5 பீர் பாட்டில்கள் கிடப்பதை கண்டனர்.

              கோவில் பூசாரி காத்தமுத்துவை கொன்ற வர்கள் முன்னதாக மோட்டார் கொட்டகையில் மது அருந்திவிட்டு இந்த கொலை யை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் பூசாரியை குத்திக் கொன்ற சம்பவம் கோதண்டராமபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more »

திட்டக்குடி பகுதியில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

திட்டக்குடி:
 
            திட்டக்குடி பகுதியில் இயங்கும் தனியார் மற்றும் மினி பஸ்களில் அரசு அனுமதித்த கட்டணத்துடன் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டன.
            இதையொட்டி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த புகார்களின் பேரில் உரிய சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டனர் அதன் பேரில் விருத்தாசலம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும போலீசார் திட்டக்குடி பகுதியில் தனியார் பஸ்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

                 வேப்பூரில் இருந்து ராமநத்தத்திற்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் ரூ 5.50 கட்டணம் வசூல் செய்வதற்கு பதில் ரூ 6 வாங்கியதை கண்டுபிடித்தனர். இதையொட்டி போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரன் சம்மந்தப்பட்ட கண்டக்டரை எச்சரித்ததுடன் கூடுதல் கட்டணம் எழுதப்பட்டிருந்த டிக்கெட்டுகளை சேகரித்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

                 மேலும் தொடந்து நடத்தப்பட்ட சோதனையில் வேப்பூரில் பர்மிட் இன்றி இயங்கிய ஒரு ஆட்டோ, ராமநத்தம் பகுதியில் பர்மிட், ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் இல்லாமல் கூடுதல் பயணிகளை ஏற்றி சென்ற இரண்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன. 
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் கூறியது.

                தனியார் பஸ்களில் இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது சட்டப்படி குற்றம் ஆகும் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பஸ்களின் பர்மிட்டுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும், கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் கண்டக்டர் லைசன்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும். இவைகளை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்படடுள்ளது.

              பேருந்து, டாக்சி, ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் ஓட்டுநர் லைசன்ஸ் கைவசம் வைத்திருக்க வேண்டும் பணியின் போது பெயருடன் கூடிய பேட்ஜ்உடன் யூனிபார்ம் அணிந்துஇருக்க வேண்டும் பர்மிட், இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர் லைசன்ஸ் இல்லாத நபர்களிடம் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் கூறினார்.

Read more »

Spreading the net in tough times

CUDDALORE: 

           Though deepsea fishing by heavy motorised boats and trawlers has been prohibited for 45 days during April and May, fishermen are venturing into the sea in fibre boats fitted with outboard engines for a distance of about six to seven km from the shore.

            They are doing so at their own risk, or in other words, most probably they cannot get adequate fish in shallow waters that would take care of the expenses incurred on fuel and wages to be paid to the helping hands, leave alone making profits. Since the fishermen are accustomed to taking fish meal every day, it is near impossible for them to modify their culinary habit for such a “long period.” Hence, at least, for catering to local needs they would have to carry on the fishing activity, on a small scale.

           According to K. Manoharan (37), a fisherman at Thazhanguda, the fish catch has dwindled in the past few months. What they get in their fishing nets are mostly sardines (“mathi”) that are least in demand locally. Therefore, this variety is being sent to the fishing yards for making “dry fish” that verily reduces the value of the catch. For catching this type of fish, only gill nets are being used and these nets could be spread for a distance of five to six km.

          The texture of the gill net is such that it can hold only small fishes, while the bigger ones would nip through it. Mr. Manoharan says that usually fishermen go in groups of five to ten boats, and off sea, they almost position themselves in a row. The occurrence of shoals of fish could be sighted from at least two to three km by experienced fishermen. Frolicking fishes or those jumping in and out of water would also betray the whereabouts of their kind, he says.

           . Murugesan of Thevanampattinam says that the direction of the wind is also the indicator for assessing the fish occurrence. The Indian National Centre for Ocean Information Services, through satellite imaging, also helps fishermen in locating the fish breeding places. He says that for the whole of last year, the wind was not favourable and, therefore, the fish catch was less than the yearly average.

Read more »

Priest found dead at temple near Cuddalore

CUDDALORE: 

          N. Kathamuthu (63), priest at the Draupadi Amman temple located in Gothandaramapuram near here, was found dead on the temple premises on Sunday morning.

         The body bore severe injuries on the forehead and the back of the head. Deputy Inspector-General of Police Pon. Manickavel and Superintendent of Police Ashwin Kotnis visited the spot and conducted an inquiry. Police sources said that from the manner in which the temple hundi was found to be tampered with, it was presumed that Kathamuthu should have tried to prevent a burglary attempt.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior