உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 09, 2011

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் விபரம்

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாடவாரியாக முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள் விபரம்


சிறப்பு தமிழ் :

            சிறப்பு தமிழ் பாடத்தில் தூத்துக்குடி எஸ்.வி., பள்ளி மாணவி சூர்யா 188 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

            இரண்டாவது இடத்தை கடலூர் மாணவி பிரியங்கா பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் 184. 

              நாமக்கல் அரசு பள்ளி மாணவி செல்வலட்சுமி 184 மார்க்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.

 ஆங்கிலம்:

           ஆங்கில மொழி பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநிலத்தில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர். மாணவி கே.ரேகா ஆங்கிலத்தில் 200க்கு 195 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

               இரண்டாவது இடத்தையும் ஓசூர் விஜய வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிதான் பெற்றுள்ளார். 2ம் இடம் பிடித்த மாணவியின் பெயர் பி.எஸ்.ரேகா. இவர் பெற்ற மார்க் 195. மொத்த மதிப்பெண் : 1186. 

             மூன்றாவது இடத்தை சென்னை சூளைமேடு டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா பிடித்துள்ளார்.

 இயற்பியல்

               இயற்பியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

              இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.

             மூன்றாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இயற்பியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1188.

வேதியியல்:
  
           வேதியியல் பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

           இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.

       மூன்றாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவரது மொதிப்பெண் 1188.

 கணிதம்

             ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா கணித பாடத்தில் 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

              இரண்டாவது இடத்தை செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி பெற்றுள்ளார். இவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் : 1189.

             மூன்றாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவரது மொதிப்பெண் 1188.

கணினி அறிவியல்:

               கணினி அறிவியல் பாடத்தில் செங்கல்பட்டு எச்.எப்.சி., மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி 200க்கு 200 பெற்று முதல் மார்க் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. 

             இரண்டாவது இடத்தை கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா பெற்றுள்ளார். கணிணி அறிவியிலில் 200 மார்க்குகள் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1181. 

          மூன்றாவது இடத்தை திருச்சி ஆர்.எஸ்.கே., பள்ளி மாணவி திவ்யா பெற்றுள்ளார்.இவரது மொத்த மதிப்பெண் 1174. கணினி அறிவியலில் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்.


உயிரியல்

             ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா உயிரியல் பாடத்தில் 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

               இரண்டாவது இடத்தை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் பிடித்துள்ளார். இவர் உயிரியல் பாடத்தில் பெற்ற மார்க் : 200 ; இவரது மொத் மதிப்பெண் 1188. 

                மூன்றாவது இடத்தை நாமக்கல் மாவட்ட கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி தக்சினி பெற்றுள்ளார். அவர் பெற்ற மார்க் 200. மொத்த மதிப்பெண் 1187 ஆகும். 

தாவரவியல் 

              தாவரவியல் பாடத்தில் திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா, 200க்கு 200 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1167. 

             இரண்டாவது இடத்தை தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பான் பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க்குகள் 1150. 

              மூன்றாவது இடத்தை அருப்புக்கோட்டை எஸ்.எச்.என்., எத்தல் ஹார்வி பள்ளி மாணவி எஸ். மாலதி பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1094. தாவரவியலில் இவர் 200 மார்க்குகள் பெற்றுள்ளார்.

விலங்கியல்

            இந்த ஆண்டு விலங்கியல் பாடத்தில் ஓருவர் கூட சென்டம் ( முழு மதிப்‌பெண் ) பெறவில்லை. 

              200க்கு 199 மார்க்குகள் பெற்று சேரன்மாதேவி, வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவகாமி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 

               2வது இவத்தை சிவகங்கை மாவட்டம் எஸ்,ஏ.பட்டினம் சகாயராணி பெண்கள் பள்ளி மாணவி ஏ.சங்கீதா பிடித்துள்ளார். இவரது மொத்த மார்க் 1082. விலங்கியல் பாடத்தில் இவர் பெற்ற மதிப்பெண் 199. 

               கோவை மாவட்டம் சர்கார்சமக்குளம் அரசு பள்ளி மாணவி எல். சண்முகப்பிரியா 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1089 

பொருளாதாரம் 

                பொருளாதாரம் பாடத்தில் சென்னை மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

              இரண்டாவது இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

          மூன்றாவது  இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனி பெற்றுள்ளார்.

வணிகவியல் 

              வணிகவியல் பாடத்தில் சென்னை மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 

               சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

              இரண்டாவது இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

           மூன்றாவது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனி பெற்றுள்ளார் 

கணக்குப் பதிவியல் 

             அக்கவுன்டன்சி பாடத்தில் சென்னை மாணவர் மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார். சென்னை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவர் ஈஸ்வர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 

               இரண்டாவது இடத்தை சின்மய வித்யாலயா பள்ளி மாணவி அட்சயா பிடித்துள்ளார். இவரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

               மூன்றாவது இடத்தை ஸ்ரீ அஹோபிலா மத் பள்ளி மாணவி ஜனனியும், சென்னை அண்ணா ஆதர்ஷ் பள்ளி மாணவி நித்யா பி‌னோய் மாணவனும் பெற்றுள்ளனர்

அடிப்படை அறிவியல்

                அடிப்படை அறிவியல் பாடத்தில் திண்டுக்கல் மாணவி ஜெ. லயோலா 200க்கு 193 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1072. 

                இரண்டாவது இடத்தை 200க்கு 191 மார்க்குகள் பெற்று குளித்துறை மார்த்தாண்டம் எல்.எம்.எஸ்., பள்ளி மாணவி கே.சந்தியா பெற்றுள்ளார். 

              மூன்றாவது இடத்தை திருநெல்வேலி பாளையம்கோட்டை புனித இக்னேசியஸ் பள்ளி மாணவி ஏ.மஞ்சு பெற்றுள்ளார். இவர் 20க்கு 186 மார்க்குகள் பெற்றுள்ளார். 

புவியியல் :

             புவியியல் பாடத்தில் எந்த ஒரு மாணவ, மாணவியும் 200க்கு 200 மார்க்குகள் பெறவில்லை. 

                200க்கு 199 மார்க்குகள் பெற்று சென்னை எல்.எப்.சி., மேல்நிலைப் பள்ளி ( கண்பார்வையற்றவர்களுக்காகன சிறப்பு பள்ளி) மாணவிகள் முதல் 3 இடத்தையும் பிடித்துள்ளனர். 

             பி.ஏ., சங்கீதா முதலிடம் பெற்றுள்ளார். புவியியல் மார்க் - 199. மொத்த மார்க் 1095. 

             இரண்டாவது இடத்தை எஸ்.துர்கா தேவி. புவியியல் மார்க் - 199. மொத்த மதிப்பெண் 1077.  

                மூன்றாவது இடத்தை டி. வென்னிலா. புவியியல் பாடம் : 199. மொத்த மதிப்பெண் 1084.

Read more »

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்

 பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் விபரம் 

 பாட வாரியாக 

             ****இயற்பியல் பாடத்தில் 646 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர். 

             ****வேதியியல் பாடத்தில் 1243 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர். 

               ****தாவரவியல் பாடத்தில் 4 பேர் மட்டும் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

               ****கணித பாடத்தில் 2720 பேர் 200க்கும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதப் பாடம் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் கணித பாடத்தில் 1762 ‌பேர் மட்டுமே 200 மதிப்பெண்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                ****உயிரியல் பாடத்தில் 615 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.  

             ****கணினி அறிவியல் பாடத்தில் 223  பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.  

குறிப்பு: 

விலங்கியல் பாடத்தில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் பெறவில்லை

Read more »

கடலூரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 117வது புதிய கல்வி தகவல் மைய திறப்பு விழா

கடலூர் : 

               அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 117வது புதிய கல்வி தகவல் மைய திறப்பு விழா கடலூரில் நடந்தது.
 
                     துணை வேந்தர் ராமநாதன் தலைமை தாங்கினார். பதிவாளர் ரத்தினசபாபதி, இயக்குனர் நாகேஸ்வரராவ், பி.ஆர்.ஓ., செல்வம் முன்னிலை வகித்தனர். சிறப்பு அதிகாரி சுதா வரவேற்றார். ஆளவை மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், சண்முக சுந்தரம், கல்விக்குழு உறுப்பினர் திருமால், ராஜேந்திரன், அரிமா வெங்கடேசன், புதுச்சேரி தனி அதிகாரிகள் ஸ்ரீதர், ஜாகீர் உசேன், நெடுமாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
பின்னர் துணைவேந்தர் ராமநாதன் கூறியது: 
                  
               அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 575 பாடப்பிரிவுகள் உள்ளன. 116 தகவல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. கடலூரில் 117 மையம் திறக்கப்பட்டுள்ளது. இவற்றில் 25 வெளி மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் 80 கல்வி மையங்கள் உள்ளன. மாணவர்கள் வசதிக்காக 30 கி.மீ., ஒரு தகவல் மையம் வேண்டும் என்கிற அடிப்படையில் துவங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 15 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்விக்கு செல்கின்றனர். ஆனால் மத்திய அரசு 2015ம் ஆண்டு அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதை நிறைவேற்ற இந்த பல்கலைக்கழகம் ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.

Read more »

2010-2011 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

                2010-2011 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இயக்குநர் டி. வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டார்.

                 மொத்த மாணவர்களில் 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அவர் அறிவித்தார். மாணவர்களில் 82.3 சதவீதம் பேரும், மாணவியரில் 89 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 846.

          1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பெற்றார். கள்ளக்குறிச்சி மாணவன் வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2ஆம் இடம் பிடித்தார். பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவர் மாணவர் வேல்முருகன்.

             4 மாணவர்கள் 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்தனர். நெல்லை எஸ்ஜெஎஸ்எஸ்ஜெ பள்ளி மாணவி வித்ய சகுந்தலா.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior