உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 23, 2010

பரவனாற்று வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கக் கோரிக்கை

நெய்வேலி:

          பரவனாற்றில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணியை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கவேண்டும் என வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக வாலாஜா ஏரி பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் மற்றும் ராமானுஜம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 

                பரவனாற்றில் செங்கால் ஓடை கலக்கும் இடத்தில் தடுப்புச் சுவர் கட்டுவதுடன், பராமரிப்பு வாகனங்கள் திரும்பிச் செல்வதற்கு ஏதுவாக திடல் உருவாக்க வேண்டும். மிடில் பரவனாற்றை ஆழப்படுத்தி, 12.கி.மீ. நீள இருபக்க கரைகளை அகலப்படுத்தி, உயர்த்தி தார்சாலையாக ஆடூர் அகரம் பாலம் வரை சாலை உருவாக்கி, போக்குவரத்தும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தவேண்டும்,   மிடில் பரவனாற்றின் தலைப்பில் மருவாய் கிராமத்தின் அருகில் உள்ள 5 கண் மதகை அப்புறப்படுத்தி, மேம்பாலம் கட்டும் பட்சத்தில் மருவாய், அரங்கமங்கலம், கல்குணம், திருவெண்ணெய்நல்லூர், பூதம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்கமுடியும். 

             அருவா மூக்கு வடிகால் திட்டத்தை உருவாக்கி கடலில் வெள்ளநீர் வடிய ரெகுலேட்டர் திட்டத்தை அமைக்கவேண்டும்.உப்பனாறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றி, அவ்விடத்தில் மீண்டும் மண்மேடு உருவாகாத வகையில் திட்டமிடல் வேண்டும். வாலாஜா ஏரி தூர்ந்து போகாமல் இருக்க, ஏரியின் மேற்குப் பகுதியில் என்எல்சி நிலப்பரப்பில், சுரங்க கழிவுநீரை தேக்கி, வடிகட்டிய சுத்தமான நீரைப் பாசனத்திற்கு விடவேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 150 நிதி ஒதுக்கி மாவட்ட நிர்வாகம் மூலம் இப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Read more »

பண்ருட்டியில் குறித்த நேரத்தில் இயக்காத பஸ்மாணவ, மாணவிகள் அவதி

நடுவீரப்பட்டு:

           சாத்திப்பட்டு - கடலூர் செல்லும் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

            பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு, சி.என்.பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழ்மாம்பட்டு, நெல்லித்தோப்பு, இடையார்குப்பம், பட்டீஸ்வரம், கொஞ்சிக்குப்பம், நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் பள்ளி, கல்லூரி நேரத்திற்கு பஸ் வசதி இல்லாததால் சாத்திப்பட்டு - கடலூருக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக அரசு பஸ் தடம் எண் 27 எஸ் இயக்கப்படுகிறது.

             இந்த பஸ் கடந்த சில தினங்களாக சரியான நேரத்திற்கு வருவதில்லை. காலை நேரத்தில் சாத்திப்பட்டில் காலை 7.50க்கு கிளம்பி சி.என்.பாளையத்திற்கு 8 மணிக்கு வர வேண்டும். ஆனால் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை தாமதமாக வருகிறது.இந்த சிங்கிளில் தான் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடலூர், பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.

         சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு போய் சேர முடியாததால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். மாணவர்கள் நலனுக்காக விடப்பட்ட பஸ் காலதாமதமாக வந்தால் அவர்களுக்காக பஸ் இயக்கப்படுவதில் அர்த்தமில்லாமல் போகிறது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பஸ்சை சரியான நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6.38 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 லட்சத்து 38 ஆயிரத்து 298 குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது.

           பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு இலவச வேட்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 39 பெண்களுக்கும், 6 லட்சத்து 38 ஆயிரத்து 298 ஆண்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது.
 
               கடலூர்  தாலுகாக்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 37 பெண்களுக்கும், 

        குறிஞ்சிப்பாடி தாலுகாவில்  ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆண்களுக்கும், 

            பண்ருட்டி தாலுகாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 49 நபர்களுக்கும், 

           சிதம்பரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 435 நபர்களுக்கும், 

         காட்டுமன்னார்கோவிலில் 72 ஆயிரத்து 377 நபர்களுக்கும், 

          விருத்தாசலத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 240 நபர்களுக்கும், 

            திட்டக்குடி தாலுகாவில் 72 ஆயிரத்து 951 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.

             இதற்கான வேட்டி, சேலைகள் கடலூர் கோ-ஆப்டெக்ஸ் மண்டல குடோனில் இருந்து அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தாலுகா அலு வலகங்களில் இருந்து கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Read more »

Rs. 7 crore for temporary repair works to roads

CUDDALORE: 

          Breaches in drainage channels, tanks and lakes, and, damaged roads in the flood-hit Cuddalore district will be set right within 45 days, according to Collector P. Seetharaman.

In a statement released here on Wednesday, he said that a sum of Rs. 1.5 crore had been allocated for repairing the roads in the municipalities as follows: 

Cuddalore, Rs 70 lakh; 
Chidambaram, Rs. 40 lakh; 
Vriddhachalam, Rs. 25 lakh; 
and Panruti, Rs. 15 lakh.

              The Highways Department had earmarked a sum of Rs. 7 crore for carrying out temporary repair works to the roads. For strengthening the water sources, a sum of Rs. 4.32 crore had been sanctioned to the Water Resources Division of the Public Works Department, for securing the water sources in Chidambaram and Vriddhachalam blocks.

            The Collector also directed the officials to clear pavement vegetable vendors at the uzhavar sandhai and allot them space within the sandhai. He categorically told the fish vendors in the Old Town area that they should do their business only at the specifically allotted places and not on the roadside. These measures had been taken to clear traffic bottlenecks at these two points.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior