உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

A Cool Harbinger Of Summer


 
IDEAL drink: Palm neera is manufactured in Cuddalore.

CUDDALORE: 

            Of the umpteen ways of beating the heat, consumption of palm neera, a wholesome and nutritious drink, is a good one. And inexpensive too.

         A 200-ml sachet of neera can be bought just for Rs 4, much cheaper than a tender coconut. However, from a health perspective, neera is an ideal drink, because it contains sucrose, minerals, salts and high level of protein. Known as sweet toddy or palm nectar, neera is a coolant that provides for the livelihood of tappers and their families. The Regional Palm Products Training Centre in Cuddalore, a wing of the Tamil Nadu State Palmgur and Fibre Marketing Cooperative Federation, is manufacturing and marketing neera in sachets.

           A. Dhayanidhi of the centre told The Hindu that the centre was equipped with a freezer, strainer and packing machinery. On its campus it had grown 500 palm trees which served as the source for tapping neera. However, Mr Dhayanidhi said that the centre was utilising its production capacity pragmatically, that is, it was turning out the product in keeping with the market demand. At present, the centre was packing 500 sachets of neera a day and during peak summer the output would go up considerably.

              Therefore, only a limited quantity of neera is being tapped daily. He said that till two years ago, a 200-ml sachet was sold for Rs 3 but owing to a rise in wages of tappers, the sale price had been risen to Rs 4 a sachet. Soon after collecting neera in a pot coated with a thin film of calcium, it was filtered thrice and stored in the freezer before being pumped into the packing machine that turns out 40 filled sachets a minute. Calcium was added to avert fermentation of neera. The vendors selling the products from tricycles at commercial places were serving as a barometer of the demand and based on their daily feedback production was either curtailed or enhanced.

            The brief shelf life of neera called for careful handling and swift marketing. If the lot of tappers, vendors and employees was to be improved, the government should infuse more working capital to increase the production capacity, open more number of outlets for marketing the product and embark upon promotional exercise. To boost the sale of neera, the vendors suggested that it be served during get-togethers, birthday parties and on important official functions such as the World Classical Tamil Conference.

Read more »

பண்ருட்டியில் ஏப்ரல் மாதம் மக்கள் குறைகேட்பு கூட்டம்: ஆட்சியர்

பண்ருட்டி:
 
                    ஏப்ரல் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து பண்ருட்டியில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் வியாழக்கிழமை  தெரிவித்தார். 
 
                பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம், உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை பார்வையிட்டார். 
 
பின்னர் மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் கூறியது:
 
               நீண்ட நாள்களாக செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை இயக்குவது தொடர்பாக, கோட்டாட்சியர், காவல்துறை, போக்குவரத்து துறை, வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் கொண்ட கூட்டத்தை கூட்டி ஆலோசித்து பார்ப்போம். இதில் தீர்வு ஏற்படாவிட்டால் மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து முயற்சிக்கலாம். பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர்கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளதை வரும் வழியில் பார்த்தேன். பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைப்பது குறித்து சில நாள்களுக்கு முன் முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.÷தொடர்ந்து நகர நிர்வாகம் கெடிலம் நதியில் குப்பைகளை கொட்டி வருவது, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளாக எலும்பு முறிவு மருத்துவர் இல்லாமலிருப்பது உள்பட பல குறைபாடுகளை நிருபர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு ஆட்சியர், ஏப்ரல் மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பண்ருட்டியில் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படும் என கூறினார். பண்ருட்டி வட்டாட்சியர் ஆர்.பாபு, தோட்டக்கலை  உதவி இயக்குநர் வி.ராமலிங்கம், வேளாண் உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ், துணை வேளாண் அலுவலர் என்.டி.ரவிசேகர், உதவி வேளாண் அலுவலர்கள் சரவணன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

சிதம்பரம் நகரில் குளங்களை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சிதம்பரம்:
 
                   கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நிவாரணமாக பட்ஜெட்டில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியிலிருந்து சிதம்பரம் நகரின்  மையப்பகுதியில் உள்ள இளமையாக்கினார் குளம், ஞானப்பிரகாசர் குளம் ஆகியவற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.சந்திரசேகரன் கேட்டுக்கொண்டார்.
 
                 சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர் ராஜாமான்சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
பின்னர் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசியது வருமாறு:
 
அப்புசந்திரசேகரன்(திமுக): 
 
         பொறியியல் பிரிவில் போதிய ஆள்கள் நியமிக்க கோரி கடந்த கூட்டத்தில் டேபிள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுகுறித்து விளக்கம் தேவை.
 
 ஆணையாளர் மு.ஜான்சன்: 
 
            ஒரு வாரத்திற்குள் பட்டியல் பெறப்பட்டு போதிய ஆள்கள் நியமிக்கப்படுவார்கள்.
 
எல்.சீனுவாசன் (மதிமுக): 
 
            சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறை போதிய உயரத்தில் தடுப்புசுவர் இல்லாததால் அருகில் ஆண்கள் கழிவறையிலிருந்து பார்த்தால் தெரிகிறது. இதனால் பெண்கள் கழிவறையை பயன்படுத்த தயங்குகின்றனர்.
 
தலைவர்: 
                ஒரு வாரத்துக்குள் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
ச.அமிர்தலிங்கம் (இ.காங்): 
 
             மாலைக்கட்டித்தெரு-சபாநாயகர்தெரு சந்திப்பில் உள்ள இலவச கழிவறை துர்நாற்றம் வீசுகிறது. அதனை சீரமைத்து அருகில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். போல்நாராயணன்தெரு சாலை போடப்படாததால் செம்மண் பறந்து அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் விவசாயிகள் பெரும் அவதியுறுகின்றனர்.
 
மு.ராஜலட்சுமி (விடுதலைச்சிறுத்தைகள்): 
 
               எனது வார்டில் அனைத்து பகுதிகளுக்கும் சாலைவசதி, வடிகால் வசதி செய்து தர வேண்டும். காலியாக உளள துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்களில் வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். உழவர் சந்தை பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது கட்டப்படும்?
 
தலைவர்: 
 
         மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும். 
 
முகமதுஜியாவுதீன் (இ.காங்): 
 
              கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் நகரில் உள்ள அடிபம்புகளை சீரமைக்க வேண்டும்.

Read more »

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் மரணம்

சிதம்பரம்:
 
               சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மற்றொரு விபத்தில்  கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற காட்டுமன்னார்கோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி (58) படுகாயம் அடைந்தார். அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த விநாயகமூர்த்தி சிதம்பரத்தை பரங்கிப்பேட்டை பூ.மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

Read more »

புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

விருத்தாசலம்:
 
                விருத்தாசலம் புதிய கோட்டாட்சியராக முருகேசன்  வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலராக இருந்த முருகேசன், வியாழக்கிழமை விருத்தாசலம் கோட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Read more »

ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி தொடக்கவிழா


சிதம்பரம்:
 
            சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தாட்கோ நிறுவனம் மூலம் 250 மாணவ. மாணவிகளுக்கு சிதம்பரம் ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷ் இன்ஸ்டியூட் நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது. சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர்  100 பேருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சியை தாட்கோ மாவட்ட மேலாளர் இல.துளசிதரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை ஆட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) ஜா.து.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் எம்.ராமசாமி, ஆங்கிலப் பயிற்சி நிறுவனத் தலைவர் சோ.ஆறுமுகம்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

வேளாண் தகவல்களை தெரிந்து கொள்ள இணையதளம்


சிதம்பரம்:
 
              வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் வேளாண் இணையதளம் ஒன்றை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் சந்தை நிலவரம் பற்றிய தகவல்களையும் அவ்வப்போது  தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.முருகேசபூபதி தெரிவித்தார்.
 
                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் உழவர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்புரையாற்றிய முருகேசபூபதி இதைத் தெரிவித்தார். விழாவில் வேளாண்புல முதல்வர் பூ.நாராயணசாமி தலைமை வகித்துப் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலம் கண்டுபிடித்த ஏயூ1 நெல், ஏயூ1 கத்திரி ரகங்கள் குறித்தும், உயிர் உரங்களில் பூச்சிக்கொல்லி மருந்தாக உள்ள பழுப்பு நிலக்கரி சாம்பலின் பயன்பாடு குறித்தும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு வேளாண் வேளாண் பல்கலையுடன் இணைந்து செயலாற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சிகள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வேளாண் விரிவாக்கத்துறை தலைவர் பேராசிரியர் ஜெ.வசந்தகுமார் வரவேற்றார். கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வாழ்த்துரையாற்றினார். விரிவுரையாளர் பி.சண்முகராஜா நன்றி கூறினார். விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வேளாண்புல வளாகத்தில் உழவர்கள் பயன்பெறும் வகையில் வேளாண் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

Read more »

ஆக்ஸிஸ் வங்கி கிளை திறப்பு

சிதம்பரம்: 
 
                       சிதம்பரம் கீழவீதி தன்வந்திரி வணிக வளாகத்தில் ஆக்ஸிஸ் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் டி.எஸ்.பி. மா.மூவேந்தன் குத்துவிளக்கேற்றி புதிய கிளையை திறந்து வைத்தார். வங்கி முதுநிலை துணைத் தலைவர் வி.ரங்கராஜன் தலைமை வகித்தார்.  மூத்த வழக்கறிஞர் ஏ.கே.நடராஜன், கிளை மேலாளர் கே.வி.சத்தியநாராயணன், துணை மேலாளர் பாலாஜி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Read more »

டாக்டரிடம் காண்பித்த பிறகே மருந்தை உட்கொள்ள வேண்டும்: சீத்தாராமன்


கடலூர்:  

                   மருந்து வாங்குபவர்கள் டாக்டரிடம் காண்பித்த பிறகே உட்கொள்ள வேண் டும் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து மருந்து ஆய்வாளர் குருபாரதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 

                       கடலூரில் போலி இருமல் மருந்து தயார் செய்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்ததை அண்மையில் மருத்துவத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மருந்துகளை கைப்பற்றினர். இந்த போலி மருந்து சென்னையில் உள்ள மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கடைகளில் வாங்கி சென்றவர்கள் மருந்தை உபயோகித்து பார்த்துவிட்டு திருப்பி கடைக்காரர்களிடம் கொடுத்துள்ளனர். அப்போது தான் சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரியான ஓவியம் எண்டர் பிரைசஸ்க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர்.

                     அப்போது சந்தேகம் அடைந்த மொத்த வியாபாரி மருத்துவத்துறை இயக்குனருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அந்த மருந்து ஆராயப் பட்டு விசாரணைக்கு பின் கடலூரில் உள்ள செல்வவினாயகர் ஏஜன்சியின் உரிமையாளர் வள்ளியப்பனை கைது செய்துள்ளனர். 

                    கடலூர் ஏஜன்சியில் 40 ஆயிரம் பாட்டில்கள் இருந் திருக்க கூடும் என நம்பப்படுகிறது. அவற்றில் 2,700  பாட்டில்கள் கைப்பற்றியது போக மீதியை நகராட்சி சுடுகாடுகளில் பிரேதத்துடன் சேர்த்து எரித்துள் ளது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.  இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில், 

                          'இந்த போலி பாட்டிலுக்கும், ஒரிஜினல் பாட்டிலுக்கும் நல்ல வித்தியாசம் உள்ளது. பாட்டிலின் கலர், லேபிள், சீல் ஆகியவை பார்த்தாலே தெரிந்துகொள்ளும் அளவில் உள்ளது.  எனவே பொது மக்கள் கடைகளில் வாங்கும் மருந்துகளுக்கு கண்டிப்பாக பில் வாங்க வேண்டும். கடைக்காரர்கள் பார்மசிஸ்ட் இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது. மருந்து வாங்கிய பின்னர் டாக்டரிடம் காண்பித்து உட்கொள் ளுதல் வேண்டும். மருந்து சாப்பிட்ட உடன் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். போலி மருந்து சம்மந்தமாக புகார் தெரிவிக்க வேண்டி இருந்தால் கடலூர் மருந்து ஆய்வாளர் குருபாரதி மொபைல்  9444954807 என்ற  எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார். டி.ஆர்.ஓ., நடராஜன் உடனிருந்தார்.

Read more »

யோகா போட்டி: ஜவகர் பள்ளி மாணவர் சாதனை

நெய்வேலி: 

                      மாநில அளவிலான யோகாசன போட்டியில் நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்கள் தங்க பதக் கம் வென்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கடந்த 9ம்   தேதி மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடந்தது. அதில் நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ., பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ராஜேஷ் நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். விருத்தாசலத்தில் நடந்த மாவட்ட அள விலான கோ-கோ போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தை பிடித்தனர்.  மாநில மற்றும் மாவட்ட  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

துவக்க விழா


கடலூர்: 

                     கன்னிக்கோவில் டாக்டர்  கலைக்கண்ணன் மகளிர் கல்லூரி மற்றும் புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம் சார்பில்  செஞ்சுருள்  சங்க துவக்க விழா கல்லூரி  வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்வி அறக்கட்டளை  தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் அய்யப்பன் முன்னிலை  வகித்தார். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் சுந்தர வள்ளி பங்கேற்று சிறப் புரையாற்றினார். கல்லூரியில் நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Read more »

தீயணைப்பு வீரர்களுக்கு பணியிடை பயிற்சி துவக்கம்

கடலூர்:

                          தீயணைப்பு வீரர்களுக்கு இரண்டு நாள் பணியிடை பயிற்சி கடலூரில் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களில் 270 தீயணைப்பு வீரர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு இரண்டு நாள் பணியிடை பயிற்சி கடலூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. அதில் உடல் திறன், மூச்சுக்கருவி பயிற்சி, தீயணைப்பு கருவிகள் கையாளுதல், முடிச்சு அவிழ்த்தல், தீயில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தல் மற்றும் மன வளக்கலை யோகா உள் ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

                             கடலூர் கோட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் உதவிக் கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன், நிலைய அலுவலர்கள் துரை, குமார், கிருஷ்ணமூர்த்தி, ஜாகீர்முகமது, பழனிவேல், சீனிவாசன், பயிற்சியாளர் வீரபாகு ஆகியோர் பயிற்சி அளித்தனர். நேற்று 135 வீரர்கள் பயிற்சி பெற்றனர்.  இன்று (26ம் தேதி) 135 வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

Read more »

தமிழை பிழையின்றி எழுத வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

கடலூர்: 

                     தமிழை பிழையின்றி எழுத வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான இரண்டு நாள் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம் கடலூர் ஊரக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. 

கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி, பயிற்சி பெற்ற அரசுத்துறை  அலுவலர்கள் 100 பேருக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:  

                         மனிதனின் எண்ணங் களை சுமந்து செல்லும் வாகனம் மொழி. பெரும் பாலான அலுவலகங்களில் ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழ் குறைவாகவே உள்ளது. தமிழில் கூர்மைத் தன்மை இல்லாததால் அதிலிருந்து தப்பிப்பதற்கே ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர்.

                         தமிழில் சுத்தமாக எழுத வேண்டுமெனில் கோப்புகளில் உள்ள பொருள்கள் ஆழமாக மனதில் பதிந்திருக்க வேண்டும். ஒரு விஷயத்தைச் சொல்ல விரிவாக எழுதாமல் சுருக்கமாக எழுத வேண்டும். பிழை இன்றி தமிழை எழுதுங்கள். சரியாக சிந்தித்தால் குறையற்றவர்களாக இருப்பீர்கள். இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர்கள் தஞ்சாவூர் கபிலர், பெரம்பலூர் தம்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அருண்ரசீத் நன்றி கூறினார்.

Read more »

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: கடலூரில் 10ம் தேதி துவங்குகிறது


கடலூர்: 

                      ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 10ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

                      வேலூர், காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிப்பாய் (பொது, வர்த்தகம், டெக்னிக்கல், கிளார்க் கீப்பர் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். சிப்பாய் டெக்னிக்கல் பிரிவிற்கு பிளஸ்2வில் ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். நர்சிங் உதவியா ளர் பிரிவிற்கு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற் றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

                             சிப்பாய் பொதுப் பிரிவிற்கு 10ம் வகுப்பு தேர்வில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தகப் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கு பிளஸ் 2 வில் 50 சதவீத மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் உதவியாளர் பணிகளுக்கு வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் நேர்முக தேர்வு நடக்கிறது. சிப்பாய் பொது பணிக்கான தேர்வு வரும் 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது. அதில் வேலூர், கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 14 மற்றும் 15ம் தேதிகளிலும், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது.

                            சிப்பாய் வர்த்தக பணிக்கு 16 மற்றும் 17ம் தேதிகளிலும், சிப்பாய் கிளார்க் ஸ்டோர்கீப்பர்  பணிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கிறது. ராணுவ பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் அவரவர்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் காலை 5.30 மணிக்கு விளையாட்டரங்கிற்கு வர வேண்டும். இத்தகவலை கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

Read more »

திட்டக்குடியில் லட்சுமி விலாஸ் வங்கி ஏ.டி.எம்., திறப்பு விழா

திட்டக்குடி: 

                   திட்டக்குடியில் ஏ.டி.எம்., வசதியுடன் புதிய இடத்தில் லட்சுமி விலாஸ் வங்கி திறப்பு விழா நடந்தது.  திட்டக்குடியில் லட்சுமி விலாஸ் வங்கி முதன் முறையாக துவங்கி, 41 ஆண்டுகள் சேவை புரிந்து வருகிறது. ஏ.டி.எம்., வசதி உட்பட அனைத்து நவீன வசதிகளுடன் புதிய கட்டடத்தில் திறப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. தொழிலதிபர் ராஜன், பேரூராட்சி தலைவர் மன்னன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் ஸ்ரீராம் வரவேற்றார்.

                  தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கி, புதிய வங்கியினை திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் நிர்வாக இயக்குனர் பூங்கொடி ராஜபிரதாபன் குத்துவிளக்கேற்றினார். பாதுகாப்பு பெட்டக வசதியினை டி.எஸ்.பி., இளங்கோ, லாக்கர் வசதியினை தாசில்தார் கண்ணன் திறந்து வைத்தனர். ஏ.டி.எம்., வசதியினை ஆறுமுகம்- சொர்ணம் அறக்கட்டளை அறங்காவலர் ராஜபிரதாபன், ராம்கோ ஏஜென்ட் பாலகிருஷ்ணனும் துவக்கி வைத்தனர். விழாவில் தொழிலதிபர் தங்கராசு ஒரு லட்சம் டிபாசிட் செய்து, சேவையை துவக்கி வைத்தார். சென்னை துணை பொது மேலாளர் சேகர், வங்கியின் சேவை குறித்து பேசினார். இதில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு, சப்- இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், அரிமா சண்முகம், அய்யப்பன், பாபு, விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

இலவச கண் மருத்துவ முகாம்

சிதம்பரம்: 

                   சிதம்பரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. நெய்வேலி ரெஸ்ட், நீட் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிம்ஸ் மருத்து வமனையும் இணைந்து நடத்திய இலவச கண்மருத்துவ முகாம் சிதம்பரத்தில் நடந்தது.  நகர் மன்ற உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை கலைவாணி வரவேற்றார். நகராட்சி ஆணையர் ஜான்சன் முன் னிலை வகித்தார். நகர் மன்றத் தலைவி பவுஜியாபேகம்  முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்றவர்களுக்கு புதுச்சேரி  பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சுதந்திரா, உமாமகேஸ்வரி உள்ளிட்ட குழுவினர்கள் சிகிச்சையளித்தனர்.

Read more »

கனரா வங்கி ஊழியர் சங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்


நெய்வேலி: 

                        நெய்வேலியில் கனரா வங்கி ஊழியர் சங்க மாநில குழு சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கனரா வங்கி ஊழியர் சங்க தமிழ் மாநிலக் குழுவின் வெள்ளி விழா ஆண்டையொட்டி நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தாய் தொண்டு மைய குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பல் வேறு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேர்பெரியான் குப்பத்தில் ஊராட்சி தலைவர் முன்னிலையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் மாநிலக்குழு உதவித் லைவர் ஜோசப் இளங்கோவன், கனரா வங்கி அதிகாரிகள் சங்க திருச்சி வட்ட தலைவர் மதுரகவி, மாநில குழு உறுப்பினர் கன்யூட், வேணுகோபால், சுப்ரமணியன் செய்திருந்தனர்.

Read more »

சாலையோர வியாபாரிகள் பண்ருட்டியில் உண்ணாவிரதம்

பண்ருட்டி: 

                    சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் பண் ருட்டி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. ஆக்கிரமிப்பு அகற்றத் தில் பாதித்துள்ள சாலையோர சிறு வியாபாரிகள் பிரச்னையில் தமிழக அரசு தலையிட வலியுறுத்தி பண்ருட்டி ஜீவா சாலையோர சிறுவியாபாரிகள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில்  நேற்று பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

                    சங்க பொருளாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ரகுபதி, மணி, ராமானுஜம் முன்னிலை வகித் தனர்.  மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ் ணன், மாவட்ட குழு பாஸ்கர், முத்துகுமார், கவுரவ தலைவர் சக்திவேல், ஏஜடியுசி மாவட்ட துணை செயலாளர் துரை உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாலை உண்ணாவிரதத்தை இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் மணிவாசகம் முடித்து வைத்து பேசினார்.

Read more »

விவசாய தொழிலாளர் சங்கம் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்


சிதம்பரம்: 

                சிதம்பரம் அருகே  பட்டா வழங்காததைக் கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  சிதம்பரம் அருகே கீழ்நத்தத்தில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், இலவச மனை பட்டா கேட்டு  அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இலவச மனை பட்டா வழங்க  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நில ஆர்ஜிதம் செய்து, இது நாள் வரை பட்டா வழங்கவில்லை என கோரி   விவசாய தொழிலாளர்கள்  விரைவில் மனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

                            வட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம், சபாநாயகம் முன்னிலை வகித்தனர்.  (சி.பி. ஐ.,) மாவட்ட செயலாளர் மணிவாசகம் பட்டா வழங்க மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில்  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், காசிலிங்கம், பூபாலன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர்.

Read more »

மேலச்சாவடியில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

கிள்ளை: 
 
                          சிதம்பரம் அருகே மேலச்சாவடியில் நடந்த திடீர் சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி நடந்து வருகிறது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று வேலைக்கு சென்றனர். ஊராட்சி உதவியாளர் வேறு இடத்தில் நடைபெறும் வேலைக்கு மாற்றி விட்டார். சிலர் தாமதமாக வேலைக்கு சென்றனர். இதனை ஊராட்சி எழுத்தர் தட்டிக் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சிதம்பரம்-கிள்ளை சாலை மேலச்சாவடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி சம்ப இடத்திற்கு சென்று பேச்சுவர்த்தை நடத்தினர். பின்னர் வேலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Read more »

இருதரப்பினரிடையே மோதல் சம்பவம்: கடலூரில் அமைதிக் கூட்டம்

கடலூர்: 

                    கடலூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்  தொடர்பாக நேற்று சமாதானக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                 கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையம் மற்றும் நாயக்கநத்தம் கிராமத்தில் கடந்த 21ம் தேதி இருதப்பினரிடையே  கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 7 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 8 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க நேற்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அமைதிக் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார்.  டி.ஆர்.ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், டி.எஸ்.பி., ஸ்டாலின் தாசில்தார் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

                     பாதிக்கப்பட்ட இருதரபினர் தரப்பில் முக்கிய பிரமுகர்கள் அமைதிக் கூட்டத்தில்  பங்கேற்றனர். கூட்டத்தில் இருதரப்பை சேர்ந்தவர்கள், வருவாய்த்துறை, போலீசார் கொண்ட முத்தரப்பு அமைதிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இதில் இருதரப்பில் தலா ஐந்து பேர் கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் வருவாய்த்துறை, போலீஸ்  உள்ளிட்ட 16 பேர் கொண்ட சமாதான குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூன்று வாரத்தில் திங்கள் கிழமைகளின் கூடி அப்போதைய பிரச்னைகள் குறித்து பேசி சுமூக முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.

Read more »

பண்ருட்டி அருகே பீரோவை உடைத்து 9 சவரன் நகை திருட்டு


பண்ருட்டி: 

                      பண்ருட்டி அருகே வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 9 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டி அடுத்த மேல்காவனூரை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(30). இவரது தம்பி சிவகுரு(27). நேற்று முன்தினம் காலை சிவகுருவும், குடும்பத்தினர்களும் நிலத்திற்கு களையெடுக்க சென்றிருந்தனர். வீட்டில் ஜெய்சங்கரை பாதுகாப்புக்கு விட்டு சென்றனர்.

                      ஜெய்சங்கர் கரும்பு தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து  பீரோவை உடைத்து  அதிலிருந்த தாலி சரடு,  நெக்ல்ஸ், டாலர் ஜெயின் உள்ளிட்ட 9 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். இது குறித்து சிவகுரு புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.  தடய அறிவியல் நிபுணர்கள்  தடயங்களை சேகரித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior