உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் வேட்பாளர்கள்: அதிமுக அறிவிப்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சித் துணைத் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் விவரம் வருமாறு: 

கடலூர்        :    

தலைவர் பி.மணிமேகலை,          
துணைத் தலைவர் எம்.பாலாம்பிகை.

விருத்தாசலம்    :   

 தலைவர் கி.சுந்தர்ராஜன்,           
 துணைத் தலைவர் சு.செல்வராஜ்.

குறிஞ்சிப்பாடி    :    

தலைவர் ஆர்.சண்முகசுந்தரம்,          
துணைத் தலைவர் மல்லிகா தங்கப்பன்.

பண்ருட்டி    :   

 தலைவர் க.மாலதி,           
 துணைத் தலைவர் ம.சிவசங்கரி.

அண்ணாகிராமம்    :     

தலைவர் கெளரி பாண்டியன்,           
 துணைத் தலைவர் எம்.சி.சம்மந்தம்.

ங்களூர்        :   

 தலைவர் கே.பி.கந்தசாமி,          
துணைத் தலைவர் கு.அன்னக்கிளி.

நல்லூர்        :    

 தலைவர் ஆர்.ராஜலட்சுமி,         

 துணைத் தலைவர் எம்.வேல்முருகன்.

காட்டுமன்னார்கோவில்    :     

தலைவர் எம்.கே.மணிகண்டன்.

குமராட்சி     :    

 தலைவர் கே.ஏ.பாண்டியன்,       
துணைத் தலைவர் பி.கணேசன்.

கீரப்பாளையம்    :    

 தலைவர் வி.ஆர். ஜெயபால்,          
 துணைத் தலைவர் சுதா சிற்றரசு.

கம்மாபுரம்    :  

  தலைவர் எம்.கே.செல்வராஜ்.

புவனகிரி        :    

 தலைவர் ஏ.ஜி.கீதா.

ரங்கிப்பேட்டை    :    

தலைவர் பி.அசோக்,            
 துணைத் தலைவர் எஸ்.வீரபாண்டியன்.

பேரூராட்சி துணைத் தலைவர் வேட்பாளர்கள்:

மேல்பட்டாம்பாக்கம்    :     சகராபீ அப்துல் வாகீப்.
தொரப்பாடி        :     தெ.கனகராஜ்.
குறிஞ்சிப்பாடி        :     ஆர்.ரஜினிகாந்த்.
மங்கலம்பேட்டை        :     நஜிபுண்ணிசா.
ஸ்ரீமுஷ்ணம்        :     பி.சின்னப்பன்.
காட்டுமன்னார்கோவில்    :     வி.மணிகண்டசாமிநாதன்.
திட்டக்குடி        :     ம.மணி.
பெண்ணாடம்        :     எஸ்.செல்வி.
 அண்ணாமலைநகர்    :     கே.செந்தில்குமார்.
சேத்தியாதோப்பு        :     பி.ராமலிங்கம்.
கிள்ளை            :     ஆர்.சி.காத்தவராயசாமி.
கெங்கைகொண்டான்    :     பி.ராஜ்மோகன்.
புவனகிரி            :     எஸ்.உஷாராணி.

நகர்மன்றத் துணைத் தலைவர்கள்:

கடலூர்            :     சேவல் ஜி.ஜே.குமார்.
நெல்லிக்குப்பம்        :     ஹ.அப்துல் ரசீது.
பண்ருட்டி        :     ஆர்.மல்லிகா.
விருத்தாசலம்        :     பி.ஆர்.சந்திரகுமார்.
சிதம்பரம்        :     இரா.செந்தில்குமார்.




Read more »

கடலூர் பிரதானச் சாலைகளை தற்காலிகமாகச் சீரமைக்க அமைச்சர் எம்.சி. சம்பத் உத்தரவு

கடலூர்:

            மூன்று நாள்களில் கடலூர் பிரதானச் சாலைகளை தற்காலிகமாகச் சீரமைக்க வேண்டுமென அமைச்சர் எம்.சி. சம்பத் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 

               வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால், கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளில், முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரையிலான 12 கி.மீ. சாலை, வண்டிப்பாளையம் சாலை, புதுப்பாளையம் பிதானச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை தற்காலிகமாக சீரமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மிகமோசமாக பாழடைந்துள்ள முதுநகர் மணிக்கூண்டு முதல், மஞ்சக்குப்பம்  மணிக்கூண்டு வரையிலான சாலையை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க  அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 

                 குடிநீர் வாரியம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கடலூர் நகராட்சி அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு, இச்சாலையை 3 நாளில் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், குறைந்தது 40 நாள்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி, நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஆணையர் மா.இளங்கோவன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரகுநாதன், தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் சிவசக்திவேலன், மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தாமரைச் செல்வன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.











Read more »

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவர் விளையாட்டுப் போட்டி

கடலூர்:

           கடலூர் மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

               தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த இப்போட்டியில்   மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நீச்சல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட டென்னிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர் சுந்தரேசன், செயலாளர் சேதுராமன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.











Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஹெச்.சி.எல். லேர்னிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் (இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மேனேஜ்மெண்ட் செக்யூரிட்டி) படிப்புகளை இந்த கல்வி ஆண்டு முதல் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதற்கான நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

            துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, ஹெச்.சி.எல் நிறுவன துணைத்தலைவர் ஆனந்த் ஏகாம்பரம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  தொலைதூரக்கல்வி இயக்க இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன் கூறியது: 

                எம்.பி.ஏ., ஐ.எம்.எஸ் பாடத்தினை ஹெச்.சி.எல் லேர்னிங் நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதில் பெருமைப்படுகிறோம். இந்த முயற்சியானது இரண்டு நிறுவனங்களும் பரஸ்பர முறையில் இணைந்து நல்ல கல்வியை வழங்குவதன்  மூலம் இம்முறையை மேலும் தொடருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். இப்பாடங்களை கற்பதன் மூலம் மாணவர்களும், பொதுத்துறை, தனியார்துறை, வங்கி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் தொழிலுக்கான திறனை எளிதில் பெற முடியும் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.

ஹெச்.சி.எல். நிறுவன துணைத்தலைவர் ஆனந்த்ஏகாம்பரம் கூறுகையில், 

                இந்திய தொழில் நிறுவனங்களில் ஏற்படும் போட்டிகளை எதிர்காலத்தில் உடனடியாக சமாளிக்க முக்கியமாக கருத்தப்படுவது திறமையான நிர்வாகம், விரைவான வளர்ச்சி மற்றும் பாதுகாத்து நிர்வகித்தலாகும். இதனை கருத்தில் கொண்டு நம்நாட்டின் புகழ்மிக்க கல்வி நிறுவனமான அண்ணாமலைப் பல்கலையுடன் இணைந்து இந்த மேலாண்மை பட்டப்படிப்பினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஆனந்த் ஏகாம்பரம்.











Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior