உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 17, 2011

இணையத்தில் பாஸ்போர்ட் (கடவு சீட்டு) சரிபார்த்தல்

அறிவியல் வளர்ச்சி மற்றும் இணையத்தின் வளர்ச்சி இன்று எல்லையை கடந்து விட்டது. அதில்  உச்சகட்டம் இணையத்தில் பாஸ்போர்ட் (கடவு சீட்டு) சரிபார்த்தல், கீழே இருக்கும் இணையதளத்தில் தங்களது பெயர் மற்றும்   நாட்டின் முகவரியை சரியாக கொடுத்தால் தங்களது பாஸ்போர்ட் நகலை பெறலாம், நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும.

http://diplomes.free...fr/index.php?lang=en

Read more »

கடலூர் மணிலா ஊடுபயிராக கல் மூங்கில்


கடலூர் அருகே தியாகவல்லி கிராமத்தில், மணிலா ஊடுபயிராகப் பயிரிடப்பட்டு உள்ள, கல் மூங்கில்.
 
கடலூர்: 

         மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே என்ற சங்க காலப் பாடல் வரிகளை பலரும் அறிந்து இருப்பார்கள்.  

         கவிஞர்களின் கற்பனைக்கு வளம் சேர்க்கும் மூங்கில், இன்று விவசாயிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பயிராக மாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது.

           இந்தியக் காடுகளின் பரப்பளவில் மூங்கில் 12.8 சதவீதம் காகித ஆலைகள், ரேயான் தொழிற்சாலைகளிலும் மூலப்பொருளாக, பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.  வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. 

             உலகச் சந்தையில் மூங்கில் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலராக உள்ளது. 2015-ம் ஆண்டில் 20 மில்லியன் டாலராக உயரும் என்கிறார்கள். இந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது.  ÷எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. 

               மூங்கில் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.  விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரத்தில் நிலையற்ற தன்மை காரணமாக விவசாயம் உபதொழிலாக மாற்றப்படுவதால், பலர் தங்கள் நிலங்களில் சவுக்கு மற்றும் தைல மரங்களை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. சவுக்கு, தைல மரங்களைவிட மூங்கில் அதிக வருவாய் தரக்கூடிய பயிராகவும், 3 மடங்கு வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் உள்ளது. 

           வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட முள் இல்லாத மூங்கில் வகைகளை, பல்வேறு தட்பவெப்ப நிலங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, 4 ரகங்களை தமிழ்நாட்டில் பயிரிட ஏற்ற மூங்கில்களாக அறிவித்துள்ளனர். அவை பேம்பூஸô நியூட்டன்ஸ், பேம்பூஸô பலகுவா, வேம்பூஸô வல்காரிஸ், பேம்பூஸô டுல்டா ரகங்கள். தமிழ்நாட்டில் வறண்ட பகுதிகளில் கல் மூங்கில், ஈரச் செழிப்பான பகுதிகளில் பொந்து மூங்கில் அதிகம் பயிரிடப்படுகிறது.  

            மூங்கிலை நடவு செய்ய, நாற்றுவிட்டு நடுவது, மூங்கில் கிழங்கை வெட்டி எடுத்து நடவு செய்தல், மூங்கில் கழிகளை கிழங்குடன் வெட்டி எடுத்து நடுதல், திசு வளர்ப்பு முறை, மூங்கில் கழிகள் மற்றும் பக்கக் கிளைகளை முளைக்க வைத்து நடுதல் எனப் பல வழிமுறைகள் உள்ளன. நாற்றுவிட்டு நடவு செய்தல் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது. கோடைகாலங்களில் 10 நாள்களுக்கு ஒருமுறை பாத்திக்கு 25 முதல் 50 லிட்டர் வரை நீர ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும். மூங்கிலை 200 வகையான பூச்சிகள் சேதப்படுத்தும். என்றாலும் 10-க்கும் குறைவானவைகளே முக்கியமானவை. எனவே ஒருங்கிணைந்த பூச்சி, நோய்க் கட்டுப்பாடு முறைகள் தேவை.  

            பராமரிப்புக்கு ஏற்ப நட்ட 4-ம் ஆண்டு முதல் மூங்கில் கழிகளை வெட்டி அறுவடை செய்யலாம். கல் மூங்கில் ஹெக்டேருக்கு 2,400 கழிகளும், பொந்து மூங்கில் ஹெக்டேருக்கு 1,662 கழிகளும் கிடைக்கும். மூங்கில் சாகுபடி மூலம் ஏக்கருக்கு 6-ம் ஆண்டு ரூ. 25,500 ம், 7-ம் ஆண்டு ரூ. 30,800ம், 8-ம் ஆண்டு ரூ. 36,200ம், 9 முதல் 15-ம் ஆண்டு வரை ரூ. 39,600 வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மொத்தச் செலவு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம்.  

இதுகுறித்து கடலூரை அடுத்த தியாகவல்லி விவசாயி சாமி கச்சிராயர் கூறுகையில், 

               மூங்கில் விவசாயத்துக்கு ஹெக்டேருக்கு 2 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 8 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. தியாகவல்லி, திருச்சோபுரம் பகுதிகளில் 5 ஏக்கரில் கல் மூங்கில் பயிரிட்டுள்ளேன். சவுக்கு மற்றும் தைல மரச் சாகுபடியைவிட மூங்கில் லாபகரமானது. விரைவில் வளரும். 4 ஆண்டுகள் வரை மணிலா, அவரை, முள்ளங்கி, தர்ப்பூசனி போன்றவற்றை ஊடு பயிராகச் சாகுபடி செய்யலாம். 5 ஆண்டுகளுக்குப் பின் ஏக்கருக்கு ரூ. 60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார். 

Read more »

தோட்டக்கலை துறையின் வளர்ச்சித் திட்டங்கள்

         தோட்டக்கலைத் துறை மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
           ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் துல்லிய பண்ணைத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய மூங்கில் இயக்கம், தேசிய மூலிகை பயிர்கள் இயக்கம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்: 

           இத் திட்டத்தின்கீழ் காய்கறி விதைகளில் கத்திரி, வெண்டை, செடிமுருங்கை, மிளகாய் விதைகளும், பழமரக் கன்றுகளான மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, பெருநெல்லி, புளியன் கன்றுகளும் 50 சதவீத மானிய விலையில் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 

நுண்ணீர் பாசன திட்டம்: 

          இத் திட்டத்தின்கீழ் பழமரங்கள், காய்கறி பயிர்களுக்கு 65 சதவீத மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் தேவைப்படும் விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்பாசனம் செய்வதால் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் தண்ணீரை கொண்டு 2.50 ஏக்கர் வரை நீர்பாசனம் சிக்கனமாக செய்ய முடியும். 

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், துல்லிய பண்ணை திட்டம்: 

           துல்லிய பண்ணை திட்டத்தின்கீழ் விவசாயிகள் ஒரு வருவாய் கிராமத்திலோ அல்லது அருகாமையில் உள்ள ஒன்று முதல் மூன்று வரையிலான வருவாய் கிராமங்களிலிருந்தோ 20 ஹெக்டேர் பரப்பளவுக்கு விவசாயிகளை ஒன்று சேர்த்து அதை கூட்டுறவு சங்க விதிகளின்படி பதிவு செய்து இத் திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். 

            மேலும் இந்த திட்டத்தின்கீழ் ஓராண்டு வரை வயதுள்ள தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 65 சதவீத மானிய விலையில் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் வழங்கி, வயல்களில் பொருத்தும் பணியும் செய்து தரப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான உரங்களும் சங்கம் மூலம் தெரிவு செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

             தேசிய தோட்டக்கலை இயக்கம்: இந்த திட்டத்தின்கீழ் தோட்டக்கலை பயிர்களான மா, வாழை, திசுவாழை, கொய்யா, சம்பங்கி, கனகாம்பரம், மல்லி, முந்திரி, கோகோ, மிளகாய் போன்ற பயிர்களுக்கான விதையின் இடுபொருள்கள் பெரிய விவசாயிக்கு 33 சதவீத மானியத்திலும், சிறு, குறு விவசாயிக்கு 50 சதவீத மானியத்திலும் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 4 ஹெக்டேர் வரையிலும் மானியமாக அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. 

               மேலும் மா, முந்திரி பயிர்களை அடர்நடவு முறையில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தரமான வீரிய ஒட்டுரக மா, முந்திரி கன்றுகள் பெரிய விவசாயிக்கு 33 சதவீத மானியத்திலும், சிறிய விவசாயிக்கு 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரப்பளவில் அரசு விதிமுறைகளின்படி சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திடவும் விவசாயிகளுக்கு கடன் உதவிகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. 

             எனவே தோட்டக்கலைப் பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

Read more »

மக்காச்சோளம் "தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்'


             மக்காச்சோளத்தை பூச்சித் தாக்குதலில் இருந்து காப்பாற்றிவிட்டால் குறைந்த முதலீட்டில், குறைந்த நாளில் அதிக லாபம் பார்க்க முடியும்.  
 
                    தற்போது தமிழ்நாட்டில் உணவு மற்றும் தீவனத் தேவைக்காக பற்றாக்குறை உள்ளது. விவசாயிகள் இந் நேரத்தில் மக்காச்சோளம் பயிரிடுவதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். நல்ல மகசூல் கிடைக்க உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் பயிர் செய்ய வேண்டும்.  மக்காச்சோளம் 90 முதல் 110 நாள்களிலேயே விளைந்து பலன் கொடுக்கும். மக்காச்சோளத்தை பூச்சித் தாக்குதலில் இருந்து காத்துக் கொண்டால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும்.  
 
குருத்து காயும் நோய் வகை: 
 
            மக்காச்சோளத்தை தாக்கும் பூச்சிகளை பொறுத்தவரை ஒரு வகையான ஈ இலைகளில் முட்டையிடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் தண்டைக் குடைந்து செல்லும். இதனால் நடுக்குருத்தின் அடிப்பாகம் பாதிக்கப்படும். முழுச் செடியும் காய்ந்து போவதற்கான வாய்ப்பும் உண்டு. இப்பூச்சி பெரும்பாலும் ஒரு மாத பயிரைத் தாக்கும். மீன், கருவாட்டு பொறியை வைத்து இப் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டேருக்கு 12 அல்லது 13 என்ற அளவில் அமைக்க வேண்டும்.  
 
இலைகாயும் நோய் வகை: 
 
            இந்த நோய் மக்காச்சோளத்தை அதிகம் தாக்கும் நோய் ஆகும். இதை அடிச்சாம்பல் நோய் என்று விவசாயத் துறையினர் கூறுகின்றனர்.  இந்நோய் தாக்கினால் இலைகளின் அடிப்பாகம் வெண்மையாக மாறும். இலைகள் காய்ந்துவிடும். இலைகளின் நரம்புகள் கிழிந்து விடும். இலை நார் போலக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த இந்நோய் தாக்கிய செடிகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 0.2 சதவீத மெட்டலாக்சில் மருந்தைத் தெளிக்க வேண்டும்.  
 
பூச்சித் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள்  கூறியது:  
 
             பூச்சிகளைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி குறித்த அப்பகுதி விவசாயத் துறை வல்லுநர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். முன் பருவத்திலேயே விதைக்க வேண்டும்.  பூச்சியால் தாக்கப்பட்டு குருத்து காய்ந்த செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். மக்காச்சோளத்தைத் தாக்கும் பூச்சிகளுக்கான எதிர்பூச்சிகளான ஊக்குவிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றனர்.  
 

Read more »

106 தமிழக மீனவர்கள் கைது: கடலூரில் மறியல் நடத்திய எம்.எல்.ஏ. உள்ளிட்ட 500 பேர் கைது

கடலூர்:

          கடலூர் துறைமுக அலுவலகம் முன் புதன்கிழமை மறியல் போராட்டம் நடத்திய, கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் உள்ளிட்ட 500 பேரைப் போலீஸôர் கைது செய்தனர்.  

          இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த, நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 106 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து, தி.மு.க.வினர் தமிழக துறைமுக அலுவலகங்கள் முன் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

              கடலூர் துறைமுகம் முன் மறியல் போராட்டம் நடத்துவதற்காக, ஏராளமான தி.மு.க.வினர் குவிந்தனர். அவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வாழ்த்தி வழியனுப்பினார்.  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன், கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஜி.ராஜேந்திரன், நகர அவைத் தலைவர் நாராயணன், இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற அதிருத்ர மகாயாகத்தில் பங்கேற்ற பொது தீட்சிதர்கள்.
சிதம்பரம்:

         சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதன்கிழமை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், அதிருத்ர மகாயாகமும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.  

              நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். ஆனி திருமஞ்சன தரிசனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இருமுறை ஆயிரங்கால் மண்டபத்திலும் மகாபிஷேகம் நடைபெறும். சித்திரை, புரட்டாசி, மாசி, ஆவணி மாதங்களில் நடைபெறும் மகாபிஷேகம் சித்சபையின் முன்பு உள்ள கனகசபையில் நடைபெறும்.  மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு உலக அமைதி வேண்டி 121 பொது தீட்சிதர்கள் பங்கேற்ற ருத்ரஜப பாராயணம் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை முடிவுற்றது. அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனப் பந்தலில் அதிருத்ர மகாயாகம் நடைபெற்றது.  

           பின்னர் மகாயாகத்திலிருந்து கலச நீர் கொண்டு வரப்பட்டு கனகசபையில் வீற்றிருந்த ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் மாலை 6 மணிக்கு தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், புஷ்பம் உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜா என கோஷமிட்டு தரிசித்தனர்.  

கருத்து வேறுபாடு நீங்கியது: 

            மகாபிஷேகத்தை பஞ்சாங்கப்படி பிப்ரவரி 17-ம் தேதிதான் நடத்த வேண்டும் என ஒரு தரப்பு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்டுக்கு ஆறுமுறை நடத்தப்படும் மகாபிஷேகத்தில் நட்சத்திரத்தை கணக்கிட்டும், 3 வளர்பிறை சதுர்தசியினை கணக்கிட்டும் மகாபிஷேகம் நடத்தப்படும். பிப்ரவரி 16-ம் தேதி மாலையில் சதுர்தசி பிறந்து விடுவதால் 16-ம் தேதி மாலை மகாபிஷேகம் நடத்துவதுதான் சரியானது என செயலர் ரா.சி.வைத்தியலிங்க தீட்சிதர் தெரிவித்தார்.  இந்நிலையில் தீட்சிதர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அறிவித்தபடி பிப்ரவரி 16-ம் தேதி புதன்கிழமை தீட்சிதர்கள் ஒருங்கிணைந்து மகாபிஷேகத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு 19-ந் தேதி விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

               வாக்காளர் அடையாள அட்டைகளைத் தொலைத்திருந்தாலோ, சேதம் அடைந்து இருந்தாலோ, புதிய வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

              தொலைந்துபோன மற்றும் சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டைகளுக்குப் பதில், புதிய வாக்காளர் அட்டைகளை பெறுவதற்கு, 19, 20-ம்  தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 001.சி படிவம் மற்றும் உறுதிமொழிப் படிவங்களுடன், வீட்டு முகவரிக்கான சான்று, புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி, அஞ்சலக கணக்கு பாஸ் புத்தகம், பேன் கார்டு, அரசு அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன், சம்மந்தப்பட்ட குறு வட்டங்களில் உள்ள வருவாய் ஆய்வாளரிடம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

               நகல் அட்டை மார்ச் 5, 6 தேதிகளில் அதே வருவாய் ஆய்வாளரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

குப்பை மேடாகிய கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம்

கடலூர்:

             கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் தற்போது குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது.

             மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரந்து விரிந்து கிடக்கும் மஞ்சக்குப்பம் மைதானம் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், பொருள்காட்சிகள், கண்காட்சிகள், மாநாடுகள் நடத்தவும் கடலூர் நகராட்சி அனுமதி அளிக்கிறது. இதற்காக நகராட்சி கட்டணமும் வசூலிக்கிறது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நகராட்சி அனுமதி வழங்கும்போது, எந்த நிலையில் மைதானம் இருந்ததோ அதே நிலையில் சரி செய்து மீண்டும் வழங்க வேண்டும் என்று, நகராட்சி விதிமுறைகளில் உள்ளது.

            அண்மையில் மஞ்சக்குப்பம் மைதானத்தின் பெரும்பகுதி தனியார் நிறுவனப் பொருள்காட்சி நடத்த நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த பொருள்காட்சி, இரு தினங்களுக்கு முன் முடிவுற்றது. அதன் பிறகு மைதானத்தைப் பார்த்தால் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவது, மிகுந்த அருவெறுப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பொருள்காட்சி பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள், உருவாக்கப்பட்ட மேடுகள் அப்படியே விடப்பட்டதால், மைதானம் பார்ப்பதற்கு வாழை அறுவடை செய்யப்பட்ட தோட்டம் போல் காட்சி அளிக்கிறது.

             இந்த மைதானத்தின் மையப் பகுதியில் நகாரட்சி சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. காரணம் மைதானத்தில் மாலை நேரங்களில் பொதுமக்கள் பலர் காற்றுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் குடும்பத்துடன் வந்து அமர்வது வழக்கம். மேலும் நகரின் மையப் பகுதியில் இந்த மைதானம் அமைந்து இருப்பதால், நகருக்குள் கடல் காற்று எளிதாகப் பரவி, கோடைக் காலங்களில் வெயிலைத் தணிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

           இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட மஞ்சக்குப்பம் மைதானம், தற்போது குப்பை மேடாக மாற்றப்பட்டு இருப்பது நகர மக்களின் மனங்களைக் காயப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. மைதானம் குப்பை மேடாகக் காட்சி அளிப்பதற்குக் காரணமான பொருள்காட்சி நிறுவனம் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கருத்து தெரிவித்து உள்ளார்.

                  மஞ்சக்குப்பம் மைதானத்தில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும்போது, வைப்புத் தொகையாக ரூ.400 மட்டும் நகராட்சி வசூலிக்கிறது. இந்தத் தொகை போனால் போகட்டும் என்று நிகழ்ச்சிகளை நடத்துவோர், தாங்கள் ஏற்படுத்திய சுகாதாரக் கேடுகளை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள். பின்னர் நகராட்சி நிர்வாகம் பல ஆயிரம் செலவிட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த வைப்புத் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more »

சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலின் கடலூரில் போட்டியிட வேண்டும்: தி.மு.க. மாணவரணி தீர்மானம்

கடலூர்:
 
             துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று, கடலூர் தி.மு.க. மாணவரணி வேண்டுகோள் விடுத்துள்ளது. கடலூர் பெரியார் கலைக் கல்லூரி தி.மு.க. மாணவரணி ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
               ராணி மேரி கல்லூரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின் கடலூர் மத்திய சிறையில் 13 நாள்கள் அடைக்கப்பட்டு இருந்தார். இதேபோல் மு.க. ஸ்டாலின் தொடர்பான வரலாற்று நிகழ்வுகளுக்கும் கடலூருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும். 
 
 மாவட்டம் முழுவதும் கிராமங்கள்தோறும் மாணவரணியினர் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது. 
 
மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், 
 
ஏழைகளுக்கு இலவச உணவு வழங்குதல், 
 
அரசு மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்தல், 
 
மருத்துவ முகாம்கள் நடத்துதல், 
 
மரங்கள் நடுதல், 
 
மாணர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல், 
 
விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் 
 
உள்ளிட்ட பணிகளைச் செய்வது, 
 
மாவட்டம் முழுவதும் சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை பிரசாரம் செய்வது, 
 
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், முதல்வர் கருணாநிதிக்கு எதிராவும் குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
                 கூட்டத்துக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைபபாளர் கு,வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வேல்முருகன், குபேந்திரன், விஜயகுமார், சிவா, கிருஷ்ணமூர்த்தி, ஆனந்த் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பண்ருட்டி அருகே மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்


பண்ருட்டி அருகே

 

 மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

 
கடலூர்:
 
             பண்ருட்டியை அடுத்த சேர்ந்தநாடு கிராமத்தின் அருகே கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. 
 
             கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கனிம வள உதவி இயக்குனர் முருகானந்தம் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்தனர்.   பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே அவர்கள் “திடீர்” வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், சேர்ந்தநாடு கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதி யின்றி மணல் அள்ளி கடத்தி வந்த 3 லாரிகள் சிக்கின. அந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

               கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

Over 200 fishermen taken into custody



MLA G. Aiyappan and municipal chairman T. Thangarasu along with partymen during a protest in Cuddalore on Wednesday.


CUDDALORE: 

        MLA G.Aiyappan, municipal chairman T. Thangarasu and over 200 fishermen owing allegiance to the ruling Dravida Munnetra Kazhagam were taken into custody when they tried to besiege the Cuddalore Port office here on Wednesday.

         They were protesting the arrest of 106 fishermen from Akkarapettai in Nagapattinam district by the Sri Lankan Navy. They raised slogans decrying the action of the Sri Lankan Navy. It was reported that 106 fishermen had set sail from Akkarapettai on February 12 in 18 boats. They were surrounded by Sri Lankan fishermen and handed over to the Sri Lankan Navy. Health Minister M.R.K. Panneerselvam, who addressed the gathering in front of the Port office, said that though the agitation was organised at short notice, there was huge gathering of fishermen and it indicated the seriousness of the problem.

           The State government had been expressing displeasure over the ill-treatment meted out to Tamil Nadu fishermen by the Sri Lankan Navy on the high seas and, therefore, it had taken up the fishermen's cause with the authorities concerned. If justice is not rendered to the Tamil Nadu fishermen, the agitation would continue, Mr. Panneerselvam said. After the Minister left, the police personnel rounded up the protestors. Before boarding the police van, Mr. Aiyappan said that the Sri Lankan Navy should free the Tamil Nadu fishermen unconditionally and immediately.

Read more »

India has vital role to play in global rice agenda: IRRI chief

CUDDALORE:

         In the global rice agenda, India has a vital role to play because of its rich rice ecologies and vast pool of scientific manpower, according to Robert S.Zeigler, Director General of International Rice Research Institute (IRRI), the Philippines.

       He was delivering a special lecture organised under the aegis of the agronomy department of Annamalai University at Chidambaram near here on Wednesday. Mr. Zeigler said that India's food security had a bearing on the international food security because it happened to be a major rice producer in Asia. However, the country was facing many challenges to retain the rice production at the present level. The primary problems were that land, labour and water were moving away from rice, that is, these three aspects were becoming scarce. Most of the rice-growing areas were located in the delta region and therefore were at sea level. Any rise in sea level would drastically affect the rice-growing areas. Flood was another factor that gravely cut into production and according to statistics 10 million hectares of rice lands in Asia were lost every year to the floods.

        The climate change too had its negative impact on rice yield and it was estimated that every one degree Celsius rise in temperature would reduces 10 per cent of yield. Mr. Zeigler said that the IRRI was developing submergence-resistant rice varieties that could survive even 17 days of flooding. For instance, the Swarna (Sub 1) tried in Uttar Pradesh had started yielding good results and the seeds would be distributed to about one million farmers over a period. The rice production in 1991 was put at 350 million tonnes and considering the requirements for 2035 it must go up to 550 million tonnes. The supply-demand gap could be bridged only through judicious planning, involving the policy makers and all the stakeholders such as the farmers, farm scientists and the public and private sectors, he said.

        Mr. Zeigler opined that the farm policy should be based on ground reality and should not be driven by commercial interests and not be at the behest of the pesticide and fertilizer manufacturers.

‘Golden rice'

            The Director General revealed that the IRRI was evolving the ‘Golden rice' — GR1 and GR2 varieties that would have carotenoid level of 8 ug/g and 20 ug/g respectively — rich in Vitamin A. It was expected to be released in two-three years time, he said. The IRRI was also working on rice varieties that would address the diabetics' problem but categorically said that it was not into production of Bt rice. He called for redoubling the efforts to create more number of rice scientists to overcome the challenges.

       He hinted that the IRRI and Annamalai University could have joint Ph.D and post-doctoral programmes in the next five to six years. On the occasion, Mr. Zeigler released a compact disc, a brief documentary on “farming livelihoods,” promoting the integrated farming system. Vice-Chancellor of Annamalai University M.Ramanathan said that the visit of Mr. Zeigler would inspire and motivate the students and scholars and raise the glory of the university to a new level. U.S.Singh, IRRI, New Delhi, Rm.Kathiresan, Head of Department of Agronomy, and Crissan Zeigler participated.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior