உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 30, 2011

புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் நெய்வேலியில் யோகா பயிற்சி முகாம்

புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும்  புதிய  தலைமுறை  மாத  இதழ் சார்பில் நெய்வேலியில் 5 நாள்  யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

 பயற்சி  நடைபெறும்  நாள் :

மே 6, 2011 முதல் மே 10, 2011வரை 

இடம் : 

Seventh Day Matriculation School, 
A .K .S Nagar,
Kangaikondan, 
Neyveli - 2

நேரம் :

  காலை நேர பயிற்சி  - 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை 
  மாலை நேர பயிற்சி - 5.00 மணியில் இருந்து 6.30 மணிவரை

பயிற்சி கட்டணம் :

ரூபாய் 200 /- மட்டும் ( ஒரு நபருக்கு )

முன்பதிவு செய்ய கடைசி நாள் :

மே 4, 2011

விதிமுறைகள் :

சரியான நேரத்திற்கு பயிற்சிக்கு வரவேண்டும் 
தொடர்ச்சியாக பயிற்சிக்கு வரவேண்டும் 
முறையான உடை அணிந்து வரவேண்டும் 

யோகா பயிற்சியின் பலன்கள்

ஞாபக சக்தி அதிகரிக்கும்
கற்றல் திறன் அதிகரிக்கும்
மனதை ஒருமுகப்படுத்தும் 
கவலை மற்றும் மன அழுத்தம் குறையும் 
கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் 
உடல் மற்றும் மனம் பலம் பெரும்

முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள 


இரா. பாரதிதாசன் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 
கடலூர் மாவட்டம் 
புதிய தலைமுறை அறக்கட்டளை
கைபேசி எண்: 8754417304

கவனிக்க :


****முதலில் முன்பதிவு செய்யும் 120 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், அவற்றில் காலை வகுப்பில் 60 நபருக்கும் மாலை வகுப்பில் 60 நபருக்கும் அனுமதி அளிக்கப்படும். 











Read more »

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


                           உலக மக்கள் அனைவருக்கும் மே தின  வாழ்த்துக்கள்.


Read more »

பி.எட்.எம்.எட்.மாணவர்களுக்கு மே 27ல் தேர்வுகள் தொடக்கம்

           பி.எட்., எம்.எட்., பயிலும் மாணவர்களுக்கு மே 27 தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.ஆர்.வீரமணி தெரிவித்தார்.

பண்ருட்டி வட்டம் கீழக்கொல்லையில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்ற மிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.ஆர்.வீரமணி  பேசுகையில்,

            பி.எட்., எம்.எட். பாடத் தேர்வுகளுக்கு பிறகு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். முதல்முறையாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க உள்ளோம்.இப்பயிற்சி சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 5 மையத்தில் நடக்கவுள்ளது. இதில் கருத்தியல், செய்முறை விடைத்தாள்களை எப்படி திருத்துவது, மதிப்பெண் அளிப்பது குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாகவும், குறைபாடு இல்லாமல் இருக்கவே இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Read more »

கடலூர் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-


              சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் விதி மீறல்களை கண்காணிப்பதற்காக தேர்தல் நடத்தை விதி கண்காணிப்பு குழு, வீடியோ நிலைக் குழு, பறக்கும்படை என 3 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த 3 குழுக்களும் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் விதி மீறல்களை வீடியோவில் பதிவு செய்துள்ளன.

              அந்த வீடியோ பதிவுகளை தொகுதி வாரியாக பிரித்து வீடியோ பதிவை பார்வையிடும் குழுவிடம் ஒப்படைத்துள்ளன. அந்த குழு ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் எவ்வளவு தேர்தல் செலவு ஏற்பட்டுள்ளது என்பதை நிழற்பதிவேட்டில் பதிவு செய்கின்ற பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதில் 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

             இந்த பணிகள் முடிந்த பின்னர் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யக் கோரி மே முதல் வாரத்தில் நோட்டீசு அனுப்பப்படும். அதன் பின்னர் அவர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த தேர்தல்களை போல அல்லாமல் இந்த தேர்தலின்போது வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை பராமரிக்க தனியாக ஏஜெண்ட் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

            மேலும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்வதற்காக அவர்களுக்கு 3 வகையான பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி வெள்ளை நிற பதிவேட்டில் அன்றாட கணக்குகளை எழுத வேண்டும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள பதிவேட்டில் ரொக்கம் குறித்தும், மஞ்சள் நிற பதிவேட்டில் வங்கி கணக்கு குறித்த விவரங்களையும் எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
வேறுபாடுகள் இருந்தால்.. 
 
             அதன்படி செலவு கணக்கை தாக்கல் செய்ய வருகின்ற வேட்பாளர்கள் இந்த 3 பதிவேடுகளையும் கொண்டு வரவேண்டும். வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கை எங்களிடம் உள்ள நிழற்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள செலவு கணக்கோடு ஒப்பிட்டு பார்ப்போம். அதில் ஏதாவது வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான ஆவணங்களை வேட்பாளர்களிடம் ஒப்படைப்போம்.

                 பின்னர் அவற்றை திருத்தி செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.   எனவே வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்போது உண்மை யான செலவின கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்த பின்னர் அவற்றை தேர்தல் செலவின பார்வையாளர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்கள் கணக்குகளை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள். பொதுப் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

                மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பும் ஒரு கேமரா பொருத்தப்பட்டு லேப்டாப் மூலம் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுப் பார்வையாளர்களும் வருகிற 11-ந் தேதி கடலூர் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

Commuters hopes dashed post-gauge conversion


The railway station at Cuddalore lacks basic amenities.


CUDDALORE: 

           Commuters in Cuddalore and Chidambaram were hoping that after the gauge conversion, new train services would be introduced, besides restoring the original services, but in vain.

           However, many of the train services now being operated on this new track are missing these stations, even though Cuddalore happens to be the district headquarters and Chidambaram, a religious and tourist town. A few trains that halt at these stations are overcrowded and the stations lack basic amenities. Though adequate funds have been earmarked in the Railway Budget for giving a facelift to these stations, the works are progressing, if at all, sluggishly.

           The Federation of All Resident Welfare Associations-Cuddalore and the Consumer Guild of Tamil Nadu have voiced displeasure over the state of affairs at the Cuddalore and Chidambaram stations. In a representation addressed to the General Manager of the Southern Railway, Federation general secretary M. Maruthavanan said that the Thirupadiripuliyur and the Old Town railway stations in Cuddalore lacked basic amenities. The very entrance to the Thirupadiripuliyur station presented an unseemly sight with garbage dump on one side, puddles of water all over and approach roads full of potholes. The booking counter needed a redo and platforms had become a dumping yard. The solitary water tap on the platform provided muddied water.

            The toilets were not opened to public use and works going on at the foot overbridge rendered it unfit for use. Guild secretary C.D. Appavau in his representation urged the General Manager to restore services such as the Tirupati Express, Sengottah Express and 110 Fast Passenger, besides increasing the frequency of the Villupuram-Mayiladuthirai services from twice a day to six times a day, and running the Sendur Express daily instead of once a week. The Pune Express should have a halt at Chidambaram, and, the Mysore Express and the Tirunelveli Fast Passenger should commence their journey from Chidambaram.

Read more »

T-shirts given away by the Tanfac Industries Ltd

CUDDALORE: 

          The management of the Tanfac Industries Ltd., here gave away T-shirts to 40 residents of the Seva Illam here on Thursday. The girls are undergoing football training in the 25-day summer camp organised under the aegis of the Indira Gandhi Academy of Sports and Education (IGAS) at the Anna Stadium here.On the occasion, J. Sampath Kumar, Senior Officer (Administration), Tanfact Industries Ltd, said that the girls had won many laurels in the national and international football events and, hence, definitely they deserved all kinds of support.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior