உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 15, 2010

National Highways in Tamil Nadu




S. NO. HIGHWAY NO. HIGHWAY NAME ROUTE LENGTH (Km)
1 210 Trichy-Devakottai-Ramanathapuram Trichy-Pudukkottai -Tirumayam-ICaraikkudi-Devakottai-Devipattinam-Ramanathapuram. 160
2 219 Madnapalli-Kuppam-Krishnagiri From Andhra Pradesh Border- Krishnagiri. 22
3 4 Junction with National Highways No 3 near Thane-Pune-Belgaum-Hubli-banglore-Ranipet-Chennai From Andhra Pradesh Border-Tiruvallam- Walajepet-Kancheepuram-Sriperumbdur-Poonamallee-Chennai 123
4 5 Junction with National HighWays No 6 near Baharagora -Cuttak-Bhubaneshwar-Vishakhapatnam-Vijaywada-Chennai From Andhra Pradesh Border - Gummidipundi - Kavarapettai - Chennai. 45
5 7 Varanasi-Mangwan-Rewa-Jablpur-Lakhnadon-nagpur-Hydrabad-Kurnool-Banlore-Krishnagiri-Salem-Dindigul-Madurai-Cape-Commorin(Kanyakumari) From Karnataka Border - Hosur - Krishngiri - Dharmapuri - Omalpur - Salem- Rasipuram - Namakkal - Paramati - Karur- Dindigul -Vadippatti - Madurai -Virudunagar -Sattur -Kovilpatti-Tirunelveli - Nanguneri - Vattakottai upto Kanniya Kumari. 627
6 7A Palyankottai-Tuticorin port Palayan Kottai - Vagaikulam - Tuticorin 51
7 220 Koliam (Qulion)-Teni From Kerala Border-Gudalur-Uthamapalayam-Teni 55
8 45 Chennai-Tiruchirapalli-Dindigul-Periyankulam and terminating and its junction with NH-49 near Teni Chennai-Tambaram-ChengalpaUu-Madurantakam-Tindivanam-Viluppuram" Ulundurpettai-EIuttur-Padalur-Tiruchchirappalli-Manapparai-Dindigul-Vattalagundu-Periyakulam-Teni 460
9 45A Vilupuram-Pondicherry-Chidambaram Nagapattianam Villuppuram-Pondicherry-CuddaIore-Chidambaram-Poompuhar-N agore -Nagappattinam 147
10 45B Trichy- Melur- uticorin Tiruchchirappalli-Viralimalai-Thuvarankurichchi-Melur—Madurai-Kariyapatti-Pandatgudi-Ettaiyapuram-Tuticorin. 257
11 45C Junction with NH 67 near Thanjavpur connecting Kumbakonam-Vriddhachalam and terminating at its junction with NH 45 near Ulundderpettai The highway starting from its Junction with NH 67 near Thanjavur- connecting Kumbakonam-Palavur-Andimadam-Vriddhachalam-Ulundurpettai. 159
12 46 Krishnagiri-Ranipet Krishnagiri-Vaniyambadi-Veltore-Ranipet. 132
13 47 Salem-Coimbatore-Trichur-Ernakulam-Trivadrum-Cape-Commorin(Kanyalumari) Salem-Sankagiri-Bhavani-Avanashi-Coimbatore-Walayar upto Kerala Border. 224
14 47B Junction of NH-47 near Nagercoil connecting Aralvaymozhi and terminating and its Junction with NH-7 near kavalkinaru The highway starting from the Junction of NH 47 near Nagercoil connecting Aralvaymozhi and terminating at its Junction with NH-7 near Kavalkinam 45
15 49 Coachin-Madurai-Dhanushkodi From Kerala Border- Bodinayakkanur-Teni- Usilampatti - Madurai-Tiruppachchetti-Paramakkudi -Ramanathapuram-Mandapam-Rameswaram. 290
16 66 Pondy-Tindivanam-Gingee-Thiruvanamalai-Khshinagiri Krishnagiri-Uttangarai—Chengam-Tiruvannamalai-Gmgee-Tindivanam-Pondicherry. 234
17 67 Junction of NH-47 near Coimbatore and connecting Mettupalyam- Ooty - Gudalur Nagappattinam-Thiruvarur-Thanjavur-Tiruchchirappalli-Kulittalai-Karur-Kangayam-Palladam-Coimbalore-Mettupalayam-Ooty-Gudalur-Teppakadu upto Kamataka Border 505
18 68 Ulundrupet-Salem Nagpur-Obaidullaganj Ulundurpettai-K.altakkurichchi-Attur-Valapadi-Salem. 134
19 205 AnantpLir-Renugunta-Chennai From Andhra Pradesh Border- Tiruttani-Tiruvallur-Ambathur-Chennai- 82
20 207 Hosur-Surjapur-DevanhaHi-NelamangIa Hosur upto Kamataka Border 20
21 208 Kolaam-Tenkasi-Rajapalayam -Thirumangalam(Madurai) From Kerata Border-Sengottai-Tenkasi-Sivagiri-Srivilliputtur-Kellupati-Thirumangalam. 125
22 209 Dindigul-Palni-Coimbatore-Annur-Kollegal-Bangalore Dindigul-Palani-LJdumataippettai-Pollachi-Coimbatore-Annur-Satyamangalam-Hasanur upto Kamataka 286
23 226 Thanjavur-Pudukottai-Sivaganga-Manamadurai Thanjavur-Pudukottai-Sivaganga-Manamadurai 144
24 227 Thiruchirapalli-Lalgudi-Chidambaram road Thiruchirapalli-Lalgudi-Chidambaram road 135
TOTAL HIGHWAY LENGTH (Km) OF STATE 4462


Read more »

விண்ணில் இன்று பறக்கிறது ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட்



                  
               ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நவீன அம்சங்களுடன் கூடிய ஜிசாட்}4 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 4.27 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட "கிரையோஜெனிக்' என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும். 
                     50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் மொத்தம் 416 டன் எடை  கொண்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ரூ. 420 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளோடு "கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் வைத்துள்ள 6வது நாடாக இந்தியாவும் இடம்பெறும்.தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை புவிசுற்று வட்டப்பாதையில் செலுத்துவதில் "கிரையோஜெனிக்' என்ஜின் முக்கியப் பங்கை வகிக்கிறது என்பதால், இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல் கல்லாக இது இருக்கும்.
                        ஏறத்தாழ 1,022 விநாடிகளில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில், புவி வட்ட மாற்றுப் பாதையில் ஜிசாட்}4 செயற்கைக்கோளை இந்த ராக்கெட் நிலை நிறுத்தும்.இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் புதன்கிழமை காலை 11.27 மணிக்கு தொடங்கியது.
19 ஆண்டுகள் உழைப்பு: 
                  ஏறத்தாழ 19 ஆண்டுகள் கடின உழைப்புக்குப் பிறகு  இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே "கிரையோஜனிக்' என்ஜினை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.திட, திரவ, குளிர்விக்கப்பட்ட வாயு (கிரையோஜெனிக்) என மூன்று அடுக்குகளில் எரிபொருள்களைப் பயன்படுத்தும் வகையில் ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.குளிர்விக்கப்பட்ட வாயு பயன்படுத்தப்படும் மூன்றாவது நிலையில்  "கிரையோஜெனிக்' (குளிர்விப்பு) என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் திரவ ஆக்சிஜனும், திரவ ஹைட்ரஜனும் எரிபொருள்களாகப் பயன்படுத்தப்படும்.
                        ராக்கெட்டின் மொத்த பயண நேரமான 1022 விநாடிகளில், 720 விநாடிகள் கிரையோஜெனிக் என்ஜின் மூலமே ராக்கெட் செலுத்தப்படும்.ஜிசாட்}4 செயற்கைக்கோள்: 2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்4 செயற்கைக்கோளில், "கே' பேண்ட் டிரான்ஸ்பாண்டர், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய "ககன்' பேண்ட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன."கே' பேண்ட் டிரான்ஸ்பாண்டரில் உள்ள 8 பீம்களின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்கலாம். இதன் மூலம் மேம்பட்ட டிஜிட்டல் சிக்னல்களை வழங்க முடியும்.துல்லியமான டி.டி.எச். சேவை, செல்போன் சேவை, ஆன்லைன் வர்த்தகம், அதிவேக இன்டர்நெட், கூடுதல் ஏ.டி.எம். மையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கு  கே பேண்ட் டிரான்ஸ்பான்டர் உதவும்."ககன்' பேண்ட்கள்: 
                   "ஜி.பி.எஸ்.' தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ககன் பேண்ட்கள், விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த உதவும். குறிப்பாக, விமானங்கள் துல்லியமாக தரையிறங்க இவை பயன்படும். ஜிசாட் 4 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.

Read more »

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே 17ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்


General India news in detail
                        எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, மே மாதம் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடக்கிறது.

                   தமிழகத்தில் சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், மதுரை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், தேனி, தர்மபுரி ஆகிய 15 இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,745 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படும் 262 இடங்கள் போக, மீதமுள்ள 1,483 இடங்கள் தமிழக அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. பெருந்துறை ஐ.ஆர்.டி., கோவை பி.எஸ்.ஜி., ஸ்ரீமூகாம்பிகா, ஆதிபராசக்தி, கற்பக விநாயகா ஆகிய ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 348 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 15 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,270 இடங்களில், 778 பி.டி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன.

சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று கூறியதாவது:  

               தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், 2010 - 11ம் ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் மே மாதம்17ம் தேதி முதல் 27ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 7ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்படும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 11ம் தேதி வெளியிடப்படும்.முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் ஜூன் 21ம் தேதி துவங்கி, ஜூலை 7ம் தேதி முடிவடையும். முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங்கில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் ஜூலை 21ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். திருவாரூர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எம்.சி.ஐ., ஆய்வில் சிறிய அளவிலான குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன. அவை சரிசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

                 இந்த ஆண்டு புதிதாக இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எம்.சி.ஐ., அனுமதி கிடைக்கக்கூடும் என்றும், அதன் மூலமாகவும் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.பி.டி., ஆகிய மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு, மே மாதம் 16ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இப்படிப்பிற்கான கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதி முதல் நடக்கவுள்ளது.
 
மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தேதி விவரம்:

மருத்துவம்/பல் மருத்துவம் மருத்துவம் சார்ந்த படிப்புகள்

  • மாணவர் சேர்க்கை அறிவிப்பு மே 16 மே 16
  • விண்ணப்பம் விற்பனை துவங்கும் நாள் மே 17 ஜூன் 7
  • விண்ணப்பம் விற்பனை கடைசி நாள் மே 27 ஜூன் 15
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 27 ஜூன் 15
  • ரேண்டம் எண் வழங்கப்படும் நாள் ஜூன் 7 ஜூன் 21
  • தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் நாள் ஜூன் 11 ஜூன் 25
  • முதற்கட்ட கவுன்சிலிங் துவங்கும் நாள் ஜூன் 21 ஜூலை 5
  • முதற்கட்ட கவுன்சிலிங் கடைசி நாள் ஜூலை 7
  • முதற்கட்ட கவுன்சிலிங்கில் தேர்வு செய்யப்பட்டவர்கள் கல்லூரியில் சேரும் நாள் ஜூலை 21

Read more »

Army recruitment process to be automated

 

Interaction: Brigadier Pankaj Sinha, Deputy Director-General, Recruiting (States), at the Army recruitment rally in Cuddalore on Wednesday. 
 
CUDDALORE: 

               Army recruitment process will be automated and written tests conducted online from April 2011, according to Brigadier Pankaj Sinha, Deputy Director-General, Recruiting (States). He was addressing a press conference after inspecting the on-going Army recruitment rally at the Anna Stadium here on Wednesday. Brig. Sinha said that automation would save time, effort and check for impersonation. Under automation, biometric system would be adopted and data of prospective candidates compiled.The Brigadier, who is in-charge of the zone comprising Tamil Nadu, Andhra Pradesh, Puducherry and the Andaman and Nicobar Islands, said that the recruitment rally had evoked good response from candidates from Chennai, Vellore, Tiruvallur, Kancheepuram, Tiruvannamalai, Cuddalore, Villupuram and Puducherry.

He said that the number of vacancies was not a criterion because it was flexible. Generally, vacancies were decided on the basis of Recruitable Male Population (RMP) factor derived from the Census. Accordingly, his zone would have a share of 13.7 per cent and Tamil Nadu would account for 7 per cent at the national level. The quota was not transferable between the States but could be shuffled among districts. For instance, the quota for Chennai was fixed at 20 per cent and Vellore at 15 per cent, whereas Wednesday's turnout from both the districts was 398 and 2,130 candidates respectively. Hence, care ought to be taken to render justice to both the districts.

            Brig. Sinha also said that the recruitment process would take about five months. On appointment, the candidates would get a salary ranging from Rs. 12,000 to Rs. 18,000, depending upon the cadre, besides free food, accommodation and dress, and travel allowance, with ample promotional avenues. Asked whether there was a distinction in the turnout of rural and urban candidates, the Brigadier said it was not very glaring. The response from urban areas was comparatively less because of other employment opportunities. As for recruitment of women in the armed forces, he said that they were inducted in nursing and medical posts and in the officer cadre. Society was yet to accept them in combat roles and moreover risks faced by women in adverse terrains were manifold. Brig. Sinha also cautioned prospective candidates against touts. Colonel Thushar S. Bhakay, Director, Recruiting (Headquarters), was present.

downlaod this page as pdf

Read more »

Women robbed


CUDDALORE: 

           Two women were robbed at knife point at their house by two unidentified youth at Pakkiripalayam near Panruti on Tuesday night. Police said the offenders entered the house of Abdul Kareem (60) when he was away and threatened his wife Namiza Bi and daughter-in-law Razia Begum to part with their gold jewellery. When the women refused, they pulled out a knife and snatched away 14 sovereigns of jewellery and two cell phones. The police have booked a case.

downlaod this page as pdf

Read more »

விடைத்தாள் மாயத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள்

 நெய்வேலி:

                நெய்வேலி அருகே பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமாவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  அஞ்சல் துறையில் ஏற்படும் கோளாறே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் பிளஸ் 2 தேர்வெழுதிய 262 மாணவர்களின் விடைத்தாள்கள் அஞ்சல்துறை மூலம் தேர்வுத்தாள் திருத்தம் மையத்துக்கு  அனுப்பிவைக்கப்படும் போது அவை மாயமாகியுள்ளன. விடைத்தாள் திருத்தும் மையத்திலிருந்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதுதான், இவை காணாமல்போன விவரம் தெரியவந்தது. இதுகுறித்து அஞ்சல் துறையிடம் விசாரித்தபோது, விடைத்தாள்கள் எங்கு போனது என்றே தெரியாமல் அவர்கள் விழித்துள்ளனர்.÷இதுகுறித்து சட்டப்பேரவையில், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, விடைத்தாள்கள் காணாமல் போன மாணவர்களுக்கு இம் மாதம் 22-ம் தேதி மீண்டும் தேர்வு வைக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் கூறியுள்ளார்.

                இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் 10-ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கும்போது அவை காணாமல் போயின. பின்னர் 8 நாள்களுக்குப் பிறகு ஒரு பஸ்ஸில் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் அவை உரிய தேர்வுத்தாள் திருத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் தஞ்சையில் பஸ் நிலையத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் விசாரணைக்குப் பின் உரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முசிறியைச் சேர்ந்த 262 மாணவர்களுக்கு அரசுத் தேர்வுத்துறை மறுதேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.÷பொதுத்தேர்வு முடிந்து கோடையை அனுபவிக்கலாம் என்றிருந்த மாணவர்களின் மனதில் தற்போது ஒருவித அச்சம் நிலவுகிறது. மேலும் முன்பு தேர்வெழுதிய அதே மனநிலையில் அம்  மாணவர்கள் இருப்பார்களா என்பதும் சந்தேகமே. மேலும் ஏப்ரல் 21-ம் தேதியுடன் விடைத்தாள் திருத்தும் பணி முடிகிறது. இந்நிலையில் 262 மாணவர்களின் தேர்வுத்தாளை திருத்துவதெற்கென ஆசிரியர்களை நியமித்தாக வேண்டும். மேலும் தனியே வினாத் தாள், விடைத் தாள் தயாரிப்பு என அரசுக்கு தேவையற்ற செலவுகள். தகவல் தொழில்நுட்பப் புரட்சி காரணமாக மக்களிடையே கடிதப் போக்குவரத்து வெகுவாக குறைந்துவிட்டது. மேலும் அஞ்சல்துறை, தனியார் கூரியர் நிறுவனங்களின் போட்டியை சமாளித்தாக வேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில் அஞ்சல் துறை மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்குவது அத்துறைக்கு நல்லதல்ல என்றே படுகிறது.

downlaod this page as pdf

Read more »

காவிரி டெல்டா பாசன வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் 23-ல் தொடங்கும்

 கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணிகள், 23-ம் தேதி தொடங்கும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிக்கு இந்த ஆண்டு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டத்துக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதிகள் ஆகும். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்கு கடந்த ஆண்டு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.2.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு காவிரி நீரை விநியோகிக்கும் கொள்ளிடம் கீழணை வாய்க்கால்கள், வடவாறு, வீராணம் வடக்கு ராஜன் வாய்க்கால்கள் மற்றும் அவற்றின் கிளை வாய்க்கால்கள் தூர் வாரப்படும். கடந்த ஆண்டு காவிரி டெல்டா பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாத இறுதியில்தான் முடிவுற்றது. அதற்குள் காவிரி நீர் பாசனத்துக்குத் திறக்கப்பட்டு விட்டது. இதனால் வாய்க்கால்கள் முறையாக மராமத்து செய்யப்படவில்லை என்ற விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதிகளில் பாசன வாய்க்கால்களை சீரமைக்கும் பணி முன்னரே தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. அதை ஏற்று இந்த ஆண்டு வாய்க்கால்கள் சீரமைக்கும் பணியை முன்னரே தொடங்க அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. வாய்க்கால்கள் தூர்வாரும் பணி வரும் 23-ம் தேதியே தொடங்கும் என்று கடலூர் மாவட்டப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

                   ஜூன் முதல் வாரத்தில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சில வாய்க்கால்களில் தற்போது தண்ணீர் உள்ளது. காய்ந்து கிடக்கும் வாய்க்கால்கள் முதலில் தூர்வாரும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வாய்க்கால்களில் ஈரம் காய்ந்ததும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது: 

                 கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் காவிரிப் பாசன வாய்க்கால்கள் மராமத்துப் பணிகள், காலதாமதாகத் தொடங்கியதால் முறையாக நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு முன்னரே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்றுக் கொண்டு, முன்னரே பணிகள் தொடங்க நிதிஒதுக்கி ஆணை பிறப்பித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். வருவாய்த் துறை ஆவணங்களில் உள்ளபடி வாய்க்கால்களின் முழு அகலத்துக்கும் தூர்வாரப்பட வேண்டும். வாய்க்காலின் முழு அகலமும் அளந்து கல் பதிக்க வேண்டும். வாய்க்கால்களில் தூர் வாரப்படும் மண்ணை கரையிலேயே போட்டு விடுவதால், மழை பெய்ததும் மணல் முழுவதும் சரிந்து வாய்க்காலுக்குள் விழுந்து விடும். இதைத் தவிர்க்க அப்புறப்படுத்தும் மண்ணை  வாய்க்காலின் கரைகளில் இருந்து 3 அடிக்கு அப்பால் கொட்ட வேண்டும். தூர் வாரும் பணியில் ஜே.சி.பி.  இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் இது சுலபமானது. மேலும் அகலம் அதிகம் இருக்கும் வாய்க்கால் கரைகள் அனைத்திலும், தரமான சாலைகளை அமைக்க வேண்டும். விவசாயம் இயந்திரமயமாகி விட்ட நிலையில், டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் இயந்திரங்களும் வயல்களுக்குச் சென்று வர வசதியாக, தரமான வேளாண் சாலைகள் அமைக்க வேண்டும். வாய்க்கால்களின் கரைகளில் கொட்டப்படும் மண், வேளாண் சாலைகள் அமைக்க வசதியாக இருக்கும் என்றார் ரவீந்திரன்.

downlaod this page as pdf

Read more »

நெடுஞ்சாலை கையகப்படுத்தும் கல்லறைத் தோட்டத்துக்கு மாற்று இடம் வழங்கக் கோரிக்கை

கடலூர்:

               பெண்ணாடம் அருகே நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தும் கல்லறைத் தோட்டத்துக்குப் பதில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

பெண்ணாடத்தை அடுத்த பெ.பொன்னேரி புனித தோமையார் ஆலய பங்குத் தந்தை எல்.ஜோசப்ராஜ் மற்றும் அவ்வூர் மக்கள், திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு: 

                 விருத்தாசலம் - தொழுதூர் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக பெண்ணாடம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பொன்னேரி ரயில்வே கேட் அருகில் உள்ள கல்லறைத் தோட்ட நிலம் கையகப்படுத்தப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளாக இப்பகுதி கிறிஸ்தவ மக்களால் இந்தக் கல்லறைத் தோட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முன்னோர்களுக்கு வழிபாடும் இங்கு செய்யப்படுகிறது.கல்லறைத் தோட்டம் அகற்றப்படும் நிலையில் இங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அருகில் உள்ள இடுகாட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கல்லறைத் தோட்டத்துக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்

downlaod this page as pdf

Read more »

கேட்டதும் நிதி வழங்கப்படும்: ஆட்சியர்

 கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்த உடனேயே, போதிய நிதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

                 கடலூர் மாவட்டத்தில் கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீóர் பிரச்னைகள் தவிர்க்க முடியாதது. கடலோரப் பகுதிகளில் மழைக்காலத்தில் 18 அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் கோடைக்காலம் நெருங்கி விட்டால் மேல்மட்ட நிலத்தடி நீர் வறண்டு விடுகிறது. பின்னர் 600 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்தால்தான் குடிநீர் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. ஒரு ஆழ்குழாய்க் கிணறு அமைக்க ரூ.4.5 லட்சம் வரை செலவு ஆகிறது. அடுத்து என்.எல்.சி. சுரங்கங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடுகிறது. மேலும் என்.எல்.சி. சுரங்கங்கள் தோண்ட வெடி வைக்கப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் அதிர்வுக்கு உள்ளாகி, தூர்ந்துவிடுகின்றன. நீர்மூழ்கி மோட்டார்களைக்கூட வெளியே எடுக்க முடிவதில்லை. இதனால் மோட்டார்களையாவது காப்பாற்றும் வகையில், 8 அங்குல  குழாய்களுக்குள் 6 அங்குல நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கி இருக்கிறோம். என்.எல்.சி. சுரங்கங்களால் திட்டக்குடி, மங்களூர், நல்லூர், விருத்தாசலம் வட்டாரங்களில் பெண்ணாடம் வரை நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. எனவே என்.எல்.சி மூலம் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி இருக்கிறோம். கோடைக் காலத்தில் குடிநீர் பாதிப்பு குறித்து முதல் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அண்மையில் தகவல் கோரினர். கடலூர் மாவட்டத் தேவை குறித்து திட்டம் தயாரித்து அனுப்பி இருக்கிறோம். மாவட்ட ஆட்சியரின் சுய விருப்ப நிதியில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் நிதி வழங்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. எனவே கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததும் உடனடியாகவே நிதி வழங்க பரிந்துரைக்கப்படும் என்றார் ஆட்சியர்.

downlaod this page as pdf

Read more »

தானியங்கி இயந்திரம் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: பிரிகேடியர் தகவல்

 கடலூர்:

              இந்திய ராணுவத்திற்கு அடுத்த ஆண்டு முதல், தானியங்கி இயந்திரம் மூலம் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும்' என, ராணுவ பிரிகேடியர் பங்கஜ் சின்கா கூறினார். 

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்து வரும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமை பார்வையிட்ட ராணுவ பிரிகேடியர் பங்கஜ் சின்கா நேற்று கூறியதாவது:

                  ஆள் சேர்ப்பு முகாமுக்கு ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர். நாட்டு மக்களின் ஜனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு, ராணுவத்தில் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன்படி ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் ஆகிய பகுதிகளில், 13.7 சதவீதம் காலிப் பணியிடம் உள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும் 7 சவீதம் உள்ளது. தேவை ஏற்படும் போது காலிப் பணியிடங்களை அதிகரித்துக் கொள்ளலாம்.கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் ராணுவத்தில் சேருகின்றனர். நேற்று நடந்த முகாமில் சென்னையில் இருந்து 120 பேரும், வேலூர் 2,130, புதுச்சேரி 30, திருவள்ளூரில் 298 பேரும் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, மெடிக்கல், எழுத்துத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் உடனே பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

                  எழுத்துத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே எழுத அனுமதிக்கப்படும் .இங்கு நடத்தப்படும் ஆள் சேர்ப்பு முகாம் கடைசியாக இருக்கும்.அடுத்து, ஆந்திராவில் உள்ள வாராங்கல் மாவட்டத்தில் தானியங்கி இயந்திரம் மூலம் ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படும். அதேபோல், அடுத்த ஆண்டு முதல் எழுத்துத் தேர்வும் ஆன்-லைனில் எழுதலாம். தற்போது ராணுவத்தில் பெண்கள், நர்சிங், மெடிக்கல், அதிகாரிகள் அளவில் தான் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். மற்ற பிரிவுகளில் இதுவரை சேர்க்கப்படவில்லை.ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு தொடர்பாக யாராவது பணம் கேட்டால், கொடுத்து ஏமாற வேண்டாம். அவ்வாறு யாரேனும் அணுகினால் போலீசாரிடமோ, எங்களிடமோ தெரிவிக்கலாம். இவ்வாறு பிரிகேடியர் பங்கஜ் சின்கா கூறினார். இயக்குனர் துஷார் பகாய் உடனிருந்தார்.

downlaod this page as pdf

Read more »

நெடுஞ்சாலை குறுக்கே பழமையான மரம்விபத்தினை எதிர்நோக்கும் வாகன ஓட்டிகள்


திட்டக்குடி:

                     இறையூர் ரயில்வே கேட் அருகில் நெடுஞ்சாலையின் குறுக்கே விபத்தினை எதிர்நோக்கி காத்திருக்கும் பழமையான மரத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக் கும் பணி 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், துவங்கி நடந்து வருகிறது.

               இப்பணிக்காக வாகனங்கள் கிராமங்களுக்குள் செல்லும் ஒருவழிப்பாதையும், பணி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே ஒரு வழியுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பணி நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே நெடுஞ்சாலையில் அம்பிகா சர்க்கரை ஆலை பக்கவாட்டு நுழைவாயிலின் முன் பழமையான மரம் ஒன்று கிளைகள் வெட் டப்பட்ட நிலையில் நிற்கிறது. போக்குவரத்து மாற்றம் செய்யப்படாத நிலையில் வாகன ஓட்டிகள் மரத் தினை மையமாக வைத்தே இருபுறமும் மாறி செல் கின்றனர். சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர்கள் நுழையும் போது மரத்தினை மையமாக வைத்து செல்லும் வாகனங்கள் ஒருபுறம் பழுதடைந்த தார் சாலை, மறுபுறம் குண்டும், குழியுமான மண் சாலையில் சிக்கி எதிரே நிற்கும் மரத்தில் மோதும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

                எனவே நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில், கிளைகள் வெட்டப்பட்டு எலும்பு கூடாக காட்சியளிக்கும் பழமையான மரத் தினை விபத்து ஏற்படும் முன் வருவாய்த் துறையினர் அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.

downlaod this page as pdf

Read more »

சாலையோரத்தில் கட்டில், சோபா செட் கடலூரில் விற்பனை 'படுஜோர்'

 கடலூர்: 

                     ஷோரூம்'களில் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வரும் கட்டில், சோபா செட்டுகள் கடலூரில் சாலையோரம் விற்பனை செய்யப்படுகிறது. மரத்தினால் ஆன கட்டில், பீரோ, மேஜை, நாற்காலிகள், சோபா செட்டுகள் என்றுமே மவுசு குறையாமல் இருந்து வருகிறது. மரப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இரும்பினாலான பொருட்கள் அந்த இடங்களை பிடித்து வந்தன.தற்போது மரப் பொருட்களில் அழகுமிகு வேலைபாடுகளுடன் வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளதால். மீண்டும் மரப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு ஏற்பட்டு, விலை அதிகம் என்றாலும் வாங்கி வருகின்றனர்.கட்டில்,சோபா செட், பீரோ, 'டிவி' ஸ்டாண்ட் என பளபளக்கும் கண் ணாடி '÷ஷாரூம்'களில், விளம்பரங் கள் மூலம் இது போன்று பொருட் கள் அதிகளவு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மேலும் அவர்கள் சொல்லும் விலைதான் என்ற நிலையும் உள்ளது. வியாபார யுத்தி இல்லாமல் பிழைப்பிற்காக மரக் கட்டில், சோபா செட்டுகள் என சாலையோரம் கடை விரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவர்களிடம் பேரம் பேசியும் வாங்க முடிகிறது என்பதால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடலூர் கலெக்டர் அலுவலக சாலையில் கர்நாடகா மாநிலம் சிக்மகளூரிலிருந்து கொண்டு வரப்பட்ட நாட்டு தேக்கினால் செய்யப்பட்ட கட்டில், சோபா செட் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கட்டில்கள் 13 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், சோபா செட்டுகள் 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more »

பள்ளிக்கூடம், மக்கள் வசிக்கும் பகுதியில் சுடுகாடுசேத்தியாத்தோப்பில் தான் இந்த அவலம்


சேத்தியாத்தோப்பு: 

            பள்ளிக்கூடம் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளதால் மக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

          சேத்தியாத்தோப்பு பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சென்னிநத்தம் கிராம பொதுமக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னிநத்தம் தெற்கு பகுதியில் வெள்ளாற்றை ஒட்டியுள்ள இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் ஒருசில வீடுகளே இருந்தன. ஆனால் தற்போது இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் சுடுகாட்டின் அருகில் பள்ளிக் கட்டிடம், மாணவியர் விடுதி, ஆரம்ப சுகாதார நிலையம், செயல்படாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகியவை அமைந்துள்ளன. சுடுகாட்டில் பிணம் எரிக்கும் போது பொதுமக்கள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூட மாணவ, மாணவிகளும் அச்சத்தில் உள்ளனர். மேலும், பிணவாடை வீசுவதால் நோய் ஏற்படும் நிலையும் உருவாகிறது. வடக்கு சென்னிநத்தம் பகுதி மக்களோ, தங்கள் பகுதிக்கு அரசு சுடுகாட் டிற்கான இடம் ஒதுக்கிக் தரவில்லை. அதனால் எங் கள் கிராமத்திற்கு சொந்தமான பட்டாவில் சுடுகாடு அமைத்துக் கொண்டோம். அரசு இடம் கொடுத்தால் சுடுகாட்டை மாற்ற தயாராக இருக்கின்றோம் என்கின்றனர்.சுடுகாடு இருக்கும் பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் வடக்கு சென்னிநத்தம் கிராமவாசிகளில் மத உணர்வை தூண்டி அரசியல் நடத்த முற்படுகின்றனர். இதேபோன்ற அவலநிலை வடக்கு சென்னிநத்தம் பகுதியை ஒட்டியுள்ள தங்கராசு நகர் பகுதியிலும் நிலவி வருகிறது. அப்பகுதியில் சென்னிநத்தம் ஆதிதிராவிட மக்களின் சுடுகாடு அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினரும் அவதியடைந்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த இவ்விரு இடங்களிலும் அமைந்துள்ள சுடுகாட்டை மாற்றி, பாதையுடன் கூடிய சுடுகாட்டை மாவட்ட நிர்வாகம் உருவாக்கி தரவேண்டும்.

downlaod this page as pdf

Read more »

வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டது

 சிதம்பரம்: 

                 வீராணம் ஏரியில் மீன் வளத்தை பெருக்க மீன் வளத்துறை சார்பில் கெண்டை மீன் குஞ்சுகள் விடப்பட்டுது. வீராணம் ஏரி சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவில் பகுதி விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது. சென்னைக்கும் இங் கிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு தண்ணீர் செல்வதால் ஏரி வற்றாமல் தண் ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நீர்மட்ட அளவுப்படி 43.5 அடி தண் ணீர் உள்ளது. ஏரியில் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு மே, ஜூன் மாதங்களில் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வீராணம் ஏரியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதால் மீன் வளத்தை பெருக்க தமிழக மீன் வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மீன் வளத்துறை உதவி இயக்குனர் தில்லை கோவிந்தன் தலைமையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சாதா கெண்டை மீன்கள் விடப்பட்டது. நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி இயக்குனர் கலியமூர்த்தி, மீன் ஆய்வாளர்கள் மனுநீதி சோழன் உள்ளிடோர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது : முன்னாள் அமைச்சர் சம்பத் குற்றச்சாட்டு


பண்ருட்டி: 

                 சுகாதார துறை அமைச் சராக இருந்தும் கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடிய வில்லை என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.

               தி.மு.க., அரசின் மக் கள் விரோத போக்கு மற் றும் மின்தடையை கண் டித்து அ.தி.மு.க., சார்பில் புதுப்பேட்டையில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் விபீஷணன், ஒன்றிய துணை சேர்மன் சம்மந்தம், பேரவை செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச் சாளர்கள் அன்பழகன், கங்கா, ஒன்றிய சேர்மன் கவுரிபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் முருகமணி, நகர இளைஞரணி செயலாளர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பத் பேசியதாவது:

                  தி.மு.க.அரசு காவேரி, பாலாறு பிரச்னையை தீர்க்க எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியின் போது மலட்டாறு தூர் வாருவதற்கு 96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தது. நெல்லிக்குப்பம் தொகுதியில் 7 உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றினேன். புதுப்பேட்டை பள்ளிக்கு 60 லட்ச ம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை, பெண்கள் பள்ளி துவக்கப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சுகாதார துறை அமைச்சராக இருந் தும் கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடியவில்லை. தற் போது விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. மக்கள் விரோத அரசாகவே தி.மு.க., செயல்படுகிறது. இவ்வாறு மாவட்ட செயலாளர் சம்பத் பேசினார்.

downlaod this page as pdf

Read more »

வெளியூர் தேர்வர்கள் தங்ககடலூர் டவுன்ஹால் தயார்

கடலூர்: 

                  ராணுவ தேர்வில் பங் கேற்க வந்துள்ள வெளியூர் இளைஞர்களுக்கு இரவு தங்குவதற்கு கடலூர் டவுன்ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வெளியூர்களிலிருந்து வந்துள்ள இளைஞர்கள் தங்குவதற்கு இடமின்றி இரவு நேரத்தில் மைதானத்தில் வெட்ட வெளியில் தங்கியுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு கடலூர் டவுன்ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

இது குறித்து கலெக்டர் கூறுகையில் 

                   'கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் இரவு தங்குவதற்கு கடலூர் டவுன்ஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் டிபன் மற்றும் சாப்பிட்டிற்கான கடைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

downlaod this page as pdf

Read more »

பிச்சாவரம் சாலை அபிவிருத்தி பணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

 கிள்ளை: 

                சிதம்பரம் அருகே அ. மண்டபத்தில் இருந்து கிள்ளை பிச்சாவரம் வரை சாலை அபிவிருத்தி திட் டத்தின் மூலம் நடக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அருகே அ.மண்டபத்தில் இருந்து கிள்ளை, பிச்சாவரம் வரை சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தி வடிகால் கட்ட 2 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் கடந்த 2009 மே மாதம் பணிகள் துவங்கியது. பணிகளை விரைந்து முடிக்காததால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதுடன், விபத்தும் அதிகரித்து வந்தது.அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சீனுவாசன், உதவி பொறியாளர்கள் பழனிவேல், தன்ராஜ், கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் சாலை அகலப்படுத்த தோண்டிய பள்ளத்தில் நிரப்பப்படும், ஜல்லியின் அளவு மற்றும் தரம், அகலப்படுத்தப்படும் அளவு குறித்து அளந்தும், வடிகால் குறித்தும் ஆய்வு செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

குறிஞ்சிப்பாடியில் நாளை மின் நிறுத்தம்

 கடலூர்: 

                 குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை (16ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (16ம் தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக அன்று குறிஞ்சிப்பாடி, எல்லப்பன்பேட்டை, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொட்டவெளி, ரங்கநாதபுரம், சின்னகண்ணாடி, குண்டியமல்லூர், ஆடூர் அகரம், ஆடூர்குப்பம், அயன்குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி, பெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், கல்குணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இத்தகவலை செயற்பொறியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

Read more »

'காவு' வாங்க காத்திருக்கும் ஆழ்துளை கிணறு நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே திக்... திக்


நடுவீரப்பட்டு: 

                  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத் திற்கு அருகில் உள்ள புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட ஆழ்துளை கிணறு (போர் வெல்) எந்த நேரத்திலும் சிறுவர்களை 'காவு' வாங்க காத்திருக்கும் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகில் புளியந்தோப்பில் அரசு ஆண்கள் ஆரம்ப பள்ளி உள்ளது. அதன் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓ.என்.ஜி.சி. மூலம் பெட்ரோல் கண்டு பிடிப்பதற்காக 400 அடி ஆழத் திற்கு ஒன்னரை அடி அகலத்திற்கு பெரிய அளவில் ஆழ்துளை கிணறு (போர் வெல்)போடப்பட்டது. பெட்ரோலிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பைப் கட்டி விட்டுச் சென்று விட்டனர். அந்த பைப் இரண்டு அடி உயரத்திற்கு இருந்தது. சில மாதங்களுக்கு முன் சமூக விரோதிகள் அந்த பைப்பை தரை மட்டத்திற்கு உடைத்து எடுத்துச் சென்று விட்டனர். தற்போது தரை மட்டத்தில் உள்ள ஆழ் துளை கிணறு, அவ்வழியே செல்லும் சிறுவர்களை எந்த நேரத்திலும் 'காவு' வாங்க காத்திருக்கிறது. இந்த போர்வெல் இருக்கும் வழியாகத்தான் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு பொது மக்களும், மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன் ஆழ்துளை கிணற்றை முழுமையாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

சாலை அகலப்படுத்தும் பணி நிறுத்தம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

 விருத்தாசலம்: 

                விருத்தாசலத்தில் முக்கிய சந்திப்புகளில் நடந்த சாலை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விருத்தாசலத்தில் பாலக்கரை மற்றும் கடைவீதி போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் இடப்பற்றாகுறை காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இப்பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலையை அகலப்படுத்த முடிவு செய்து கடந்த 15 தினங்களுக்கு முன் முதல் கட்ட பணியை துவங்கினர். முதல் ஐந்து நாட்கள் மட்டுமே பணி மும்முரமாக நடந்தது. பாலக்கரை மற்றும் கடைவீதியில் சாலை ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு செம்மண் கொட்டி சமப்படுத்தியதுடன் நிறுத்தி விட்டனர். தொடர்ந்து பணி நடைபெறாததால் தற்போது சாலை ஓரங்களில் ஒரு அடி அளவிற்கு பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், பொதுமக்களும் ஒதுங்கிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளதால் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் இழுபறி: மாற்றுப் பாதை தயார்படுத்தாததால் தாமதம்

 கடலூர்: 

                     கடலூர் நகரில் மாற்றுப் பாதை தயார் படுத்தாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடியாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடியில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை. தற்போது வாகனங்களின் போக்குவரத்தால் கடலூர் புழுதி நகரமாக மாறி விட்டது. கோடை காலத்தில் துரிதமாக நடக்க வேண்டிய பணிகள் யாவும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தெருக்களில் குழாய் பதிக்கும் பணி ஒரு வழியாக முடிந்துள்ளது. நெடுஞ்சாலையில் பெரிய குழாய்கள் பதிக் கும் பணி இதுவரை தொடங்கவில்லை. கடலூர் முதுநகரில் இருந்து மஞ்சக்குப்பம் வரை குழாய் பதிக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன.நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணிக் காக பள்ளம் தோண்டும் போது வாகன போக் குவரத்து முற்றிலும் பாதிக்கப் படும். இதனால் கனரக வாகனங்கள் செல்லும் அள வுக்கு உறுதி வாய்ந்த மாற்றுப் பாதை தயார் படுத்திய பிறகுதான் சாலையில் பள்ளம் தோண்ட அனுமதிக்க முடியும் என நெடுஞ்சாலைத் துறை தெரிவித் துள்ளது. ஆனால் நகராட்சி உறுதி வாய்ந்த மாற்றுப்பாதை தயார் படுத்தாமல் தாமதப்படுத்தி வருகிறது.மேலும் பீச் ரோடில் கழிவு நீர் எடுத்துச் செல் லும் குழாய்கள் 6 மீட்டர் ஆழத்தில் புதைக்கப்பட்டால்தான் கழிவுநீர் இயற் கையாக சென்று சேரும். ஆனால் கடலோரப்பகுதி என்பதால் 6 மீட்டர் ஆழம் தோண்டும் போது நீர் ஊற்று ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே தற் போது ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தை மாற்றி 3.15 மீட்டர் ஆழத்தில் குழாய் பதிக்க முடிவு செய் யப் பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மோட்டர் மூலம் பம்ப் செய்துதான் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும். குடிநீர் வடிகால் வாரியம் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப் புதல் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம் பணிகள் முடித்த சாலைகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. அவற்றிற்கு சாலை போடுவதற்காக நகராட்சி, அரசிடம் 2 கோடி ரூபாய் கேட்டுள்ளது. கோடை காலம் முடிய சில மாதங்களே இருக்கிறது. பாதாள சாக்கடைத் திட்டத்தின் முக்கிய பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளன. இந்த ஆண்டாவது பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் முடிக்கப்படுமா என்பது கேள்விக் குறிதான்.

downlaod this page as pdf

Read more »

நகராட்சியில் பணியிடங்கள் காலிவளர்ச்சிப் பணிகள் பாதிப்பு


பண்ருட்டி : 

                 பண்ருட்டி நகராட்சியில் உதவி பொறியாளர் பணியிடம் காலியாகவும், கட்டட ஆய்வாளர் 2 மாதம் விடுப்பில் சென்றதாலும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

               பண்ருட்டி நகராட்சி உதவி பொறியாளராக பணிபுரிந்த சுமதி செல்வி பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார். இதனால் உதவி பொறியாளர் பணியிடம் காலியாக உள் ளது. பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படாமல் அலைகழிக்கப்படுகின்றனர். அதேப்போன்று கட்டட ஆய்வாளராக இருந்த சேகர் கடந்த 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதனால் கட்டட அனுமதி, வரைபடம் கோருதல், அரசு இடங்கள் அளந்து சரி பார்த்தல், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதித்துள்ளது. நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி

நெல்லிக்குப்பம்: 

                நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு டாக்டர் சரியாக வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் ஒரு டாக்டர், மருந்தாளுனர், செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். ஏழை மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதி என்பதால் தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் நகராட்சி மருத்துவமனைக்கு அதிகளவு நோயாளிகள் வருகின்றனர். பின் தங்கிய நகராட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் கருதி டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் மருந்துகளுக்கு மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த மருத்துவமனை பகலில் மட்டுமே இயங்கும்.இங்கு பணிபுரியும் டாக்டர் காலையில் மட்டும் வருகிறார். பெரும்பாலும் மதிய நேரத்தில் வருவதே இல்லை. இதனால் நோயாளிகள் சிரமத்துடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. டாக்டர் சரியாக வராததால் செவிலியர்களும் அலட்சியமாக உள்ளனர். நகராட்சி மருத்துவமனையை ஏழை எளியோர்களுக்கு பயன்படும்படி 24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவமனையாக மாற்றினால் நல்லது.

downlaod this page as pdf

Read more »

செங்கல் சூளைகளில் இலவச மின்சாரம்இரவு முழுவதும் எரியும் அவலம்


நெல்லிக்குப்பம்: 

                  மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் செங்கல் சூளைகளில் தேவையில்லாமல் இரவு முழுவதும் 200க்கும் மேற்பட்ட பல்புகள் எரிகின்றன. நெல்லிக்குப்பம் மாளிகைமேடு விழுப்புரம் சாலையில் மாளிகைமேடு சாலையையொட்டி தரமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலங்களில் எந்த பயிர் செய்தாலும் நன்கு விளையும் தன்மை கொண்டவை. விவசாயிகள் அதிகப்படியான பணத் துக்கு ஆசைப்பட்டு தங்கள் நிலங்களை செங்கல் சூளைக்கு குத்தகைக்கு விடுகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு தினமும் இரண்டு, மூன்று சூளைகள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.இதில் வரும் அளவுக்கு அதிகமான புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுடன் வாகனங்களில் செல்வோர் மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு சூளையிலும் இரவு முழுவதும் தேவையில்லாமல் 200க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது. மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை தவறாக பயன்படுத்தி எரியும் விளக்குகளை அதிகாரிகள் பார்வையிட்டு முறைப்படுத்த வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

குடிநீர் குழாய் உடைப்பு கடலூருக்கு குடிநீர் தட்டுப்பாடு

கடலூர்: 

                    திருவந்திபுரம் அருகே குடிநீர் குழாய் சேதமடைந்ததால் கடலூருக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இதற்கு எட்டு போர்வெல் மூலம் தண் ணீர் ஏற்றப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், கே.கே.நகர், அண்ணா நகர் மற்றும் பத்மாவதி நகர், போலீஸ் குடியிருப்பு, தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள எட்டு மேல் நிலை நீர்தேக் கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் கடலூர் அடுத்த கே.என்.பேட்டையில் கழிவு நீர் குழாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவந்திபுரத்திலிருந்து வரும் குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் நேற்று காலை 9 மணியிலிருந்து குடிநீர் வெளியேறியது. தகவலறிந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பாளர்கள் பகல் 2 மணி முதல் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த குடிநீர் குழாய் உடைப்பால் கடலூருக்கு முழு அளவு தண்ணீர் கிடைப்பது இரண்டு நாட்களாகும் என தெரிகிறது.

downlaod this page as pdf

Read more »

நகராட்சி அலுவலகத்தில் பாம்பு?பூட்டி கிடக்கும் ஆவண காப்பக அறை

 பண்ருட்டி: 

                  பண்ருட்டி நகராட்சி அலுவலக ஆவண காப்பக அறையில் பாம்பு இருப்பதாக கிளம்பிய பீதியைத் தொடர்ந்து அந்த அறை கடந்த ஒரு மாதமாக பூட்டியே கிடக்கிறது. பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து சாரை, நல்ல பாம்புகள், கருநாக பாம்பு என வரிசையாக படையெடுப்பது சகஜமான ஒன்று. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அலுவலகம் பின்புறம் உள்ள மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி, மூலிகை தோட்டம், ஆவண காப்பக அறை பகுதிகளுக்கு ஊழியர்கள் செல்வது கிடையாது. கடந்த ஆண்டு பதிவேடுகள் உள்ள இடத்தில் பாம்புகள் இருந்தது. இதனை அப்போது ஊழியர்கள் அடித்து சாகடித்தனர். பின் நகராட்சி அலுவலகம் முன் உள்ள பூங்கா போன்ற புல் செடிகளில் உள்ள புதர்களில் கருநாகபாம்பு இருப்பதாக பீதி கிளம்பியது. இதனையடுத்து கடந்த ஆண்டு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பாம்பு கடிக்கான மருந்துகள், உடனடி சிகிச்சை அளிக்க 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தனர். இந்நிலையில் கடந்த மாதம் மாடியில் உள்ள ஆவண காப்பகத்தின் உள்ளே நல்ல பாம்புகள் இருந்ததைக் கண்ட பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம் உள்ளிட்ட ஊழியர்கள் அவைகளை அகற் றினர். இதனால் கடந்த ஒரு மாதமாக நகராட்சி ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் ஆவண காப்பக அறை பக்கமே யாரும் செல்வதில்லை.அதிகாரிகள் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் பணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

நிர்வாணமாக திரியும் மனநலம் பாதித்தவர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கடலூர்: 

                      அரை நிர்வாணமாக ரோட்டில் திரியும் மன நலம் பாதித்தவர்களை மருத்துவமனையில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் நகர பகுதிகளில் அழுக்கேறிய உடல், கிழிந்த உடை, பரட்டை தலையுடன் சாலையில் திரிந்து கொண்டிருக்கும் மனநலம் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையால் மனநிலை பாதித்து, குடும்ப உறுப்பினர்களாலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு அனாதைகளாக ரோட்டில் கிடப்பதை சாப்பிட்டு நடை பிணமாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு கடலூரில் மருத்துவமனை சாலையில் சுற்றித் திரியும் மனநிலை பாதித்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களாக அழுக்கேறிய சட்டை மட்டும் அணிந்துக் கொண்டு, இடுப்பிற்கு கீழே உடையேதுமின்றி நிர்வாணமாக தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிளாட் பாரத்தில் நின்று கொண்டிருக்கிறார். இச்சாலை வழியே செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நடந்து செல்லும் பெண்கள் முகம் சுளித்தபடி செல்வது வேதனையாக உள்ளது. அதே போன்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மற்றொரு மனநிலை பாதித்த நபர் கையில் பேண்டை பிடித்தபடி நடந்து செல்வதும், பின்னர் கழற்றிக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். பொது இடத்தில் அரை நிர்வாண கோலத்தில் சுற்றித் திரியும் மனநிலை பாதித்தவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

பொலிவிழந்த முதுநகர் காந்தி பூங்கா

 கடலூர்: 

                       கடலூர் முதுநகர் காந்திப் பூங்கா போதிய பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. கடலூர் முதுநகர் மணிகூண்டு எதிரில் பழமையான காந்திப் பூங்கா உள் ளது. இப்பூங்கா கடந்த 2005ம் ஆண்டு பொது நிதி மூலம் 11.5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. பூங்காவிற்கு மாலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் முதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழித்துச் செல்வார்கள்.
 
                   தற்போது இந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி அங்கு அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலை முற்றிலும் பொலிவிழந்துள்ளது. மின் விளக்குகள் முற்றிலும் எரியாததால் இரவு நேரங்களில் பூங்கா முழுவதும் இருளில் மூழ்கிவிடுகிறது. ஊஞ்சல், சறுக்கு மரம், ராட்டிணம் உள் ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சாதனங்களும் முற்றிலும் பழுதடைந்துள்ளன. நீரூற்றும் இயங்காததால் அழகிற்காக வைக்கப்பட்டிருந்த புல் தரைகளும் காய்ந்துள்ளது. கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பூங்காவிற்கு மாலை நேரங்களில் பெற்றோருடன் வரும் மாணவ, மாணவிகள் பொலிவிழந்து காணப்படும் காந்தி பூங்காவை கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் பூங் காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

என்.எல்.சி.,யில் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைவதில் இழுபறி


நெய்வேலி: 

                   என்.எல்.சி., தொழிலாளர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் அமைவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி., நிறுவனத்தில் பணி செய்து வரும் 18 ஆயிரத்து 303 நிரந்தர பணியாளர்களில் 4,017 இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு அதன்படி தற்போது அவர்களுக்கு மட்டும் புதிய ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மீதமுள்ள 14 ஆயிரத்து 286 தொழிலா ளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. 7 ஆயிரத்து 594 உறுப்பினர்களை கொண்ட தொ.மு.ச.,வும், 2 ஆயிரத்து 817 உறுப்பினர்களை கொண்ட பா.தொ.ச.,வும் என்.எல். சி., நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினருடன் தொடர்ந்து நடத்தி வரும் ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.இருப்பினும் என்.எல்.சி., நிர்வாகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் மத்தியில் பரவி வருகிறது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் தற்போதைய பேச்சுவார்த்தை குறித்த நிலவரங்களை உடனடியாக அறிவிக்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


download this page as pdf

Read more »

சிதம்பரம் அருகே சாலை மறியல் வி.சி.,யினர் மீது போலீஸ் தடியடி

 பரங்கிப்பேட்டை: 

                        புதுச்சத்திரம் அருகே டிஜிட்டல் பேனரை கிழித் தவர்களை கைது செய்ய கோரி கடலூர் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விருது வழங்கும் விழா மற்றும் அம்பேத்கர் பிறந்த நாள் குறித்து, சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் சிலம்பிமங்கலத்தில் அக்கட்சியினர் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரில் ஒரு பகுதி கிழிந்திருந்தது. பேனரை கிழித்தவர்களை கைது செய்யக் கோரி கடலூர் - சிதம்பரம் சாலையில் சிலம்பிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வி.சி.,யினர் மறியலில் ஈடுபட்டனர். சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு, தச்சம் பாளையம், பெரியாண்டிக் குழி, பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்த எஸ்.பி., அதிரடிப்படை போலீசாருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலை கைவிட மறுத்தனர். இந்நிலையில் அவ்வழியே சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மற்றும் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கல்வீச்சு சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணன் காயமடைந்தார்.இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மறியல் செய்தவர்கள் சிதறி ஓடினர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலால் கடலூர் - சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

downlaod this page as pdf

Read more »

டெண்டர் எடுப்பதில் தகராறு

 கடலூர்: 

                            கழிவறையை டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரகாசு, துரைரங்கம், சண்முகவேல். இவர்கள் மூவரும் கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறையை கடந்த இரண்டு ஆண்டுகளாக டெண்டர் எடுத்து நடத்தி வந்தனர். கடந்த 31ம் தேதியுடன் டெண்டர் முடிந்தது. இந்நிலையில் சந்திரகாசு, துரைரங்கம் ஆகியோர் சேர்ந்து தற்போது டெண்டர் எடுக்க முயற்சி செய்தனர். இதனை சண்முகவேல் தட்டிக்கேட்டார். இதனால் சந்திரகாசு, துரைரங்கம் இருவரும் சேர்ந்து சண்முகவேலை தாக்கினர். இருதரப்பினர் புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் சந்திரகாசு, துரைரங்கம், சண்முகவேல் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

வாகன சோதனை: 25 பேர் மீது வழக்கு


சிறுபாக்கம்: 

              வேப்பூர் போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் 25 பேர் மீது வழக்கு பதிந்தனர். வேப்பூர் சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜாராம் மற்றும் போலீசார் வேப்பூர் கூட்ரோடு, புல்லூர் சாலை ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லைசென்ஸ், ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, வாகன உரிமம் இன்றி சென்ற 25 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.

downlaod this page as pdf

Read more »

கோஷ்டி மோதல்: 5 பேர் கைது

 பண்ருட்டி: 

                   பண்ருட்டி அருகே கலப்பட பெட்ரோல் விற்றதை தட்டிக் கேட்ட தகராறில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடையில் பெட்ரோல் வாங்கினார். பெட்ரோலில் கலப்படம் இருப்பதாக புகார் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதன் காரணமாக நேற்று முன்தினம் சிவக்குமார் மற்றும் அவரது தம்பிகள் திருமலை, பழனி, தங்கை நவக்கொடி, மேனன், செல்வம் உள்ளிட்ட 11 பேர் ஆட்டோவில் சென்று ஆறுமுகம் வீட்டை தாக்கி ஆறுமுகம் அவரது மகன் சுந்தரபாண்டியன், சுதர்சன், மனைவி ரகுபதை ஆகியோரை தாக்கினர். இதில் ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து திருமலை(37), பழனி (40), நவக்கொடி (32), செல்வம் (38), பாலு (28) ஆகியோரை கைது செய்து மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர்: 

                    புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு அரசு பஸ்சில் சூட்கேஸ் மற்றும் பைகளில் 250 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், ஏட்டு அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் இரண்டு சூட்கேஸ் மற்றும் இரண்டு பைகளில் மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. உடன் சந்தேக நபர்கள் நான்கு பேரை பஸ்சிலிருந்து இறக்கி விசாரணை செய்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சிங்காரவேல் (30), ராமராஜன் மகன் பாலகுரு (30) ஆகியோர் என்பதும். இவர்கள் இருவரும் புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்காக மது பாட்டில்களை பஸ்சில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 250 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர் .இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சிங்காரவேல், பாலகுரு ஆகியோரை கைது செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior