உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 10, 2012

கடலூரில் மக்கள் நல பணியாளர்கள் சாலை மறியல்

கடலூர்

         மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று  மாநில அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும், இது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ந் தேதி சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கடலூர் உழவர்சந்தை அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலபணியாளர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக கடலூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.

      இம்பீரியல் சாலையில் சென்றபோது ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதிக்கு திருப்பாப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 300 பேரை கைது செய்தனர்.









Read more »

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் விலையில்லா மடிகணினி

சிதம்பரம்:

   சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவருமான டாக்டர் எம்.ராமநாதன் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு மடிகணினியை வழங்கினார். கோட்டாட்சியர் எம்.இந்துமதி வாழ்த்துரையாற்றினார். கல்லூர் முதல்வர் பாலு வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




Read more »

பண்ருட்டி அருகே பஸ்-பைக் மோதல்: 2 பேர் சாவு

கடலூர்:

     மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில், அதில் பயணம் செய்த 2 இளைஞர்கள் இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

        கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்ஜித்குமார் (26) கிருஷ்ணராஜ் (25), சஞ்சய்காந்தி (34). இவர்கள் மூவரும் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு வந்து பின்னர் கடலூர் திரும்பியுள்ளனர். திருகண்டேஸ்வரம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் ரஞ்ஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிருஷ்ணராஜ் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.




Read more »

கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள்

கடலூர் : 

     கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம், தென்னை ராமசாமி பவுண்டேஷன் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கடலூரில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடந்தது.


      கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு, தேவனாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களில் சமூக காடுகளை வளர்ப்போம், வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வோம் ஆகியவற்றை வலியுறுத்தி கருத்தரங்கு, வீதி நாடகங்கள் நடத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டது. முகாமில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியாளர் ராஜாராமன், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், ஆரோவில் தாவரவியல் பூங்கா சுற்றுச்சூழல் ஆசிரியர் சத்யமூர்த்தி, சி.எஸ்.டி., இயக்குனர் ஆறுமுகம், நாணமேடு ஊராட்சித் தலைவர் லட்சுமணன், உச்சிமேடு ஊராட்சி துணைத் தலைவர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை புதுயுகம் தொண்டு நிறுவனத் தலைவர் ஜெயராமன், செயலர் செல்வநாதன், இயக்குனர் செல்வகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.









Read more »

பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

கடலூர் : 

      பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி 11 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

      கடலூர் அடுத்த குண்டியமல்லூரில் உள்ள பெருமாள் ஏரி மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள இந்த ஏரி உரிய பராமரிப்பு இல்லாததாலும், என். எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரில் அடித்து வரும் மணல் மற்றும் நிலக்கரி சகட்டினால் ஏரியின் பெருமளவு தூர்ந்ததால் தற்போது ஒரு போகம் நெல் பயிரிடவே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் ஏரியை தூர் வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

       இந்நிலையில் திருச்சோபுரத்தில் செயல்படவுள்ள நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், தங்களது தண்ணீர் தேவைக்கு பெருமாள் ஏரியிலிருந்து தினசரி 1.8 மில்லியன் காலன் (ஒன்றரை கோடி லிட்டர்) தண்ணீரை குழாய் மூலம் எடுத்துச் செல்ல பொதுப்பணித் துறையிடம் அனுமதி கோரியது. அதன்பேரில், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கடந்த நவம்பர் 24ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இருப்பினும் நாகார்ஜூனா ஆயில் நிறுவனம் தனது தேவைக்கு தண்ணீர் எடுப்பதற்காக பெருமாள் ஏரிக்கரையில் வருவாய்த் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவீடு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

        அதனைத் தொடர்ந்து பெருமாள் ஏரி மூலம் பாசன வசதி பெறும் ஆதிநாராயணபுரம், தீர்த்தனகிரி, பூவாணிக்குப்பம், வாண்டியாம்பள்ளம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், சிறுபாலையூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று மாலை கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

     அதில், 11 ஊராட்சிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் கம்பெனி தண்ணீர் எடுக்க உள்ளதாக கடந்த நவம்பர் மாதம் குறிஞ்சிப்பாடி தாசில்தார் அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதே தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். அதனை மீறி மறுபடியும் பெருமாள் ஏரி ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்தால் இப்பகுதியில் நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கும். மேலும், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கடல் நீர் உட்புகும் வாய்ப்பு உள்ளது. விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதிக்கும் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர். மனுவை பெற்ற கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior