உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

Lurking danger at Thirupadiripuliyur station


 
Students doing a balancing act on an iron girder to cross the railway track at Thirupadiripuliyur railway station in Cuddalore.

CUDDALORE: 

           The Thirupadiripuliyur railway station, situated in the heart of Cuddalore town, is an apology for a station, lacking even the most basic amenities. Even after the restoration of the train services in the newly converted gauge section after three-and-a-half years, the station has no passenger amenities such as rest rooms, drinking water, toilets, etc.

          In the absence of any back-up mechanism, the control room goes pitch dark during power cuts. The incomplete foot overbridge with barren iron girders stand testimony to the lethargic way in which the works are being executed in the station. With no means to cross the tracks between the three platforms, passengers, students and the general public are put to great hardship. They risk their life crossing the tracks as express trains cruise through the station at top speed without any halt.

           Moreover, the steep curve at the Kuppankulam side leaves the people living near the tracks in jitters because of poor visibility of speeding trains. Panchayat president V. Govindan (67) told The Hindu that after the gauge conversion the platform was extended further, thus obstructing the common pathway between Kuppankulam and Thirupadiripuliyur (right across the tracks). The students, elderly and sick persons and patients cannot climb on to the platforms, particularly when the trains are running. Mr. Govindan said that the residents staged many demonstrations in vain, seeking another foot overbridge at this point because the one under construction within the railway property would be inaccessible to the general public and any violators would be prosecuted for trespass.

           Several representations made to the district administration, the local MLA, and M.P. have not helped. At present, a pair of iron girders placed across the track linking platforms 1 and 2 comes handy for the students and others to cross over. But they would have to necessarily traverse through the “live track” on the other end, thus exposing them to danger, Mr. Govindan added. S.Ilango (45), another resident, opined that the authorities should provide risk-free passage to the local people before the station becomes fully operational.

            At present, only the Villupuram-Mayiladurai passenger train and Kamban and Cholan Expresses have scheduled halts at the station. Railway sources said that as of now the station was ill-equipped to handle the trains. The services were terminated in November 2006 for gauge conversion that should have been completed within 18 months. Besides, the inordinate delay meant the works are still incomplete. But for the court direction, the services would not have been resumed soon. Moreover, construction of a subway at the crucial Lawrence Road railway cross, located immediately after the station, is also yet to take off.

Read more »

என்.எல்.சி.​ ​ ஸ்டி​ரைக் துவங்​கி​யது


நெய்வேலி :
 
              என்​எல்​சி​யில் கால​வ​ரை​யற்ற வேலை​நி​றுத்​தம் புதன்​கி​ழமை ​(ஜூன் 30) இர​வுப் பணி முதல் துவங்​கி​யது.​ ​  
 
              என்​எல்சி தொழி​லா​ளர்​க​ளுக்​கான ஊதி​ய​மாற்று ஒப்​பந்​தத்தை ஏற்​ப​டுத்த வலி​யு​றுத்தி ​ என்​எல்சி தொழி​லா​ளர்​கள் கால​வ​ரை​யற்ற ஸ்டி​ரைக்​கில் ஈடுபடுவார்​கள் என தொமுச செய​லர் ஆர்.கோபா​லன் அறி​வித்​தார்.​ அலவன்ஸ் மற்றும் இன்​கி​ரி​மென்ட் ஆகி​யன முன்​தே​தி​யிட்டு பெறு​வ​தில் தொழிற்​சங்​கத்​திற்​கும்,​​ நிர்​வா​கத்​திற்​கும் இடையே முரண்​பாடு நிலவி வரு​கி​றது.​ ​ ​
 
              இந்​நி​லை​யில் நிறு​வ​னத்​தின் அங்​கீ​க​ரிக்​கப்​பட்ட தொழிற்​சங்​கங்​கள் ஒப்பந்​தத்தை விரைந்து முடித்​திட வலி​யு​றுத்தி மே 30-ல் நிர்​வா​கத்​தி​டம் ஸ்டிரைக் நோட்​டீஸ் வழங்​கி​ன.​​ ​ இதை​ய​டுத்து நிர்​வா​கத்​திற்​கும்,​​ தொழிற்​சங்கங்​க​ளுக்​கும் இடையே சம​ரச முயற்சி ஏற்​ப​டுத்​தும் வித​மாக மத்​திய தொழிலா​ளர் நல ஆணை​யர் முன்​னி​லை​யில் சென்​னை​யில் ஜூன் 11 மற்​றும் 15-ல் நடந்த பேச்​சில் எவ்​வித முன்​னேற்​ற​மும் ஏற்​ப​ட​வில்லை.​​ இத​னி​டையே ஜூன் 29-ல் நிர்​வா​கத்​திற்​கும்,​​ தொழிற்​சங்​கத்​திற்​கும் 
 
               இறு​திக்​கட்​டப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.​ இதில் இன்​கி​ரிமென்ட்டுக்​கான நிலு​வைத் தொகையை 01-06-2009 முதல் வழங்க நிர்​வா​கம்  முன்​வந்தது.​ இதை தொழிற்​சங்க நிர்​வா​கி​கள் ஏற்க மறுத்​து​விட்​ட​னர்.​ ​ இதையடுத்து மத்திய தொழி​லா​ளர் நல ஆணை​யர் முன்​னி​லை​யில் சென்​னை​யில் புதன்​கி​ழமை பேச்சு நடத்த தொழிற்​சங்க நிர்​வா​கி​க​ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.​ ஆனால் தொழிற்​சங்​கத்​தி​னர் பேச்​சு​வார்த்​தையை புறக்கணித்து​விட்டு,​​ வேலை​நி​றுத்த அறி​விப்​புக் கூட்​டத்தை புதன்​கி​ழமை நடத்தி​னர்.​​ இக்​கூட்​டத்​திற்கு தொமுச தலை​வர் ராமச்​சந்​தி​ரன் தலை​மை​ வகித்தார்.​ தொமுச அலு​வ​ல​கச் செய​லர் காத்​த​வ​ரா​யன்,​​ பாமக தொழிற்​சங்கத் தலை​வர் பெரு​மாள்,​​ செய​லர் தில​கர்,​​ பொரு​ளா​ளர் ஏஞ்ச​லின் மோனிகா,​​ அலு​வ​ல​கச் செய​லர் சுப்​ர​ம​ணி​யன் உள்​ளிட்​டோர் வேலை​நி​றுத்​தம் குறித்து விளக்​கிப் பேசி​னர்.​​ இறு​தி​யாக தொமுச செய​லர் ஆர்.கோபா​லன் கால​வ​ரை​யற்ற வேலை​நி​றுத்​தம் குறித்து அறி​விப்​புச் செய்​தார்.​ ​
 
                  இ ​தில் மருத்​து​வ​மனை,​​ குடி​நீர் மற்​றும் மின்​சா​ரப் பிரி​வில் பணி​பு​ரி​யும் தொழி​லா​ளர்​க​ளுக்கு விலக்கு அளிக்​கப்​பட்​டி​ருப்​ப​தா​க​வும்,​​ ஏனைய தொழில் மற்​றும் அலு​வ​ல​கப் பிரி​வு​க​ளில் பணி​யாற்​றும் தொழி​லா​ளர்​கள் மற்​றும் அலுவ​ல​கப் பணி​யா​ளர்​கள் வேலை​நி​றுத்​தத்​தில் பங்​கேற்​பர் என​வும் அறிவித்தார்.​   இதை​ய​டுத்து புதன்​கி​ழமை இர​வுப் பணி​மு​தல் தொழி​லா​ளர்​கள் ஸ்டிரைக்​கில் ஈடு​பட்​டுள்​ள​னர்.

Read more »

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு



                  சென்னைப் பல்கலையின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 

சென்னைப் பல்கலை தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

                சென்னைப் பல்கலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த, பி.எஸ்சி., - பி.ஏ., உள்ளிட்ட, இளநிலை மூன்றாமாண்டு பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.


          முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும். இத்தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in, www.kalvimalar.com/results.asp ஆகிய இணையதளங்களில் அறியலாம். தங்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர், "THE REGISTRAR, UNIVERSITY OF MADRAS, CHENNAI', என்ற பெயருக்கு, 750 ரூபாய் கேட்பு காசோலை எடுத்து, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை, www.ideunom.ac.in என்ற இணைதளத்தில், "டவுண்லோட்' செய்துக் கொள்ளலாம்.


                 கடைசி பருவத்தில், (semester) ஒரு தியரி பாடத்தில் மட்டும் தோல்வியுற்ற மாணவர்கள், உடனடி தேர்வு எழுத, வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பல்கலை விசாரணை, "கவுன்டரில்' பெறலாம். தேர்வு கட்டணம் 300 ரூபாய். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் சூரியமூர்த்தி ஓய்வு பெற்​றார்

கட ​லூர்:

            அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் சூரி​ய​மூர்த்தி அந்​தப் பத​வி​யில் இருந்து புதன்​கி​ழமை ஓய்வு பெற்​றார்.​ 14 ஆண்​டு​கள் அந்​தப் பத​வி​யில் இருந்த அவர்,​​ கூட்​டு​றவு தணிக்​கைத்​துறை ஆய்​வா​ள​ராக அர​சுப் பணி​யில் சேர்ந்து,​​ கூட்​டு​றவு தணிக்கை அலு​வ​ல​ராக ஓய்வு பெற்​றார்.​ ​

ஓய்வு பெறு​வ​தை​யொட்டி   அரசு அலு​வ​லர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் சூரி​ய​மூர்த்தி  செவ்​வாய்க்​கி​ழமை கூறு​கை​யில் 

                   "எதிர்​கா​லத்​தில் அரசு ஊழி​யர்​கள் பெரும் சவால்​க​ளைச் சந்​திக்க வேண்​டி​யது இருக்​கும்.​   அவற்​றைச் சமா​ளிக்க உழைக்​கும் வர்க்​கம் ஒன்​று​பட வேண்​டும்' என்​றார்.​ முன்​ன​தாக கட​லூ​ரில் நடந்த அரசு அலு​வ​லர் ஒன்​றிய மாநில பொதுக்​கு​ழுக் கூட்​டத்​தில் சூரி​ய​மூர்த்தி கலந்து கொண்டு பேசி​னார்.

Read more »

சிதம்​ப​ரம்-​ அண்​ணா​மலை நகர் இடையே இருண்டு கிடக்​கும் சிதம்​ப​ரம் ரயில்வே மேம்​பா​லம்


மின்​வி​ளக்கு வசதி இல்​லாத சிதம்​ப​ரம்-​ அண்​ணா​மலை நகர் ரயில்வே மேம்​பா​லம்.
சிதம்ப​ரம்:

            சிதம்​ப​ரம்-​ அண்​ணா​மலை நகர் இடையே ரயில்வே மேம்​பா​லம் திறக்கப்பட்டு ஓராண்​டா​கி​யும் மின்​வி​ளக்​கு​கள் அமைக்​கப்​ப​ட​வில்லை.​ சிதம்பரம்-​அண்ணா​ம​லை​ந​கர் இடையே ரூ.13.31 கோடி செல​வில் ரயில்வே மேம்​பா​லம் அமைக்​கப்​பட்​டது.​ இதன் திறப்பு விழா​வின் போது விரை​வில் பாலத்​தில் மின்​வி​ளக்கு வசதி செய்​யப்​ப​டும் என மாநில அமைச்​சர் வெள்​ளக்​கோ​வில் சுவா​மி​நா​தன் உறு​தி​ய​ளித்​தார்.​ ஆனால் ஓராண்​டா​கி​யும் பாலம் இருண்​டு​தான் கிடக்​கி​றது.​ ​ ​

             இ​து​பற்றி நெடுஞ்​சா​லைத்​துறை,​​ பொதுப்​ப​ணித்​துறை,​​ வரு​வாய்த்​துறை மற்​றும் நக​ராட்சி நிர்​வா​கம்,​​ பேரூ​ராட்சி நிர்​வா​கம் யாரும் கண்டு கொள்ளவில்லை.​ பாலத்​தில் மின்​வி​ளக்கு இல்​லா​த​தால் மாண​வர்​கள் விபத்தில் சிக்கு​வது தொடர்​கி​றது.​   சமீ​பத்​தில் தென்​ஆப்​பி​ரி​காவை சேர்ந்த அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மாண​வர்​கள் இவ்​வி​பத்​தில் சிக்கி கவலைக்கிட​மான நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​ ​வி​பத்​துக்​களை தடுக்க இரு​பு​ற​மும் ரவுண்டானா அமைக்​க​வும்,​​ மின்​வி​ளக்கு வசதி செய்​யக்​கோ​ரி​யும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி அண்​மை​யில் மெழு​கு​வர்த்தி ஏந்தி ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​யது.​ அனைத்து அர​சி​யல் கட்​சி​க​ளும் தீர்​மா​னம் போட்டு மாவட்ட ஆட்​சி​யர் முதல் அமைச்​சர்​கள் வரை மனு அனுப்​பி​யுள்​ள​னர்.​ ஆனாலும் அதி​கா​ரி​கள் கண்​டு​கொள்​வ​தா​கத் தெரி​ய​வில்லை.​ ​அதி​முக வெற்றி பெற்ற சிதம்​ப​ரம் தொகுதி என்​ப​தால் வளர்ச்​சிப் பணி​கள் தொடர்ந்து புறக்கணிக்கப்​ப​டு​வ​தாக எம்.எல்.ஏ.​ அருண்​மொ​ழி​தே​வன் குற்​றம் சாட்​டி​னார்.​ ​ எ​னவே கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் மனி​த​நேய அடிப்​ப​டை​யில் நேர​டி​யாக தலை​யிட்டு மின்​வி​ளக்கு வச​தி​யும் இரு​பு​ற​மும் ரவுண்​டா​னா​வும் அமைக்க வேண்​டும் என்​பதே இப்​ப​குதி மக்​க​ளின் கோரிக்​கை​யா​கும்.​

Read more »

சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் ரகளை: நாற்காலிகள் வீச்சு; டியூப் லைட் உடைப்பு



சிதம்பரம்: 

               சிதம்பரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிதி பெற்றுத் தந்தது யார் என்பது குறித்த பிரச்னை தொடர்பாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள், நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கூட்டம், தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நேற்று காலை துவங்கியது. நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

தலைவர்: 

               கடந்த 10 தினங்களுக்கு முன், குடிநீர் வசதி கோரி கலெக்டரைச் சந்தித்தேன். அதைத் தொடர்ந்து 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். அதற்கு நகராட்சி சார்பில் கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க.,): 

               இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை குறித்து செய்தித்தாளில் படித்த அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டரிடம் பேசி நிதி பெற்றுத் தந்தார். நீங்கள் பெற்றுத் தந்ததாகக் கூறுவது தவறான செய்தி. கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுதி வைத்த, "மினிட்' புத்தகத்தை காட்ட வேண்டும். அதில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரிய வேண்டும்.

தலைவர்: 

            கூட்டம் முடிந்ததும், "மினிட்' புத்தகத்தைக் காட்டுகிறேன்.

ஜேம்ஸ் விஜயராகவன்: 

              இப்போதே அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் காட்ட வேண்டும்.

தலைவர்: 

            புத்தகம் எனது அறையில் உள்ளது.

ஜேம்ஸ் விஜயராகவன்: 

              கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு எடுத்து வாருங்கள். (இதைத் தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது) கூட்டத்தை ஐந்து நிமிடம் ஒத்தி வைப்பதாகக் கூறிவிட்டு, தலைவர் பவுஜியா பேகம் "மினிட்' புத்தகத்தை எடுத்து வந்தார். மீண்டும் 10  நிமிடத்திற்கு பிறகு கூட்டம் துவங்கியது.

ஜேம்ஸ் விஜயராகவன்: 

               கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எத்தனை பணிகள் நடந்தன? கட்டட ஆய்வாளர் கூட்டத்திற்கு ஏன் வரவில்லை? எந்த கேள்விக்கும் முறையாக பதிலளிப்பதில்லை. சிதம்பரம் பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என கூறி, ஆத்திரத்துடன் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டில் மற்றும் நாற்காலியை தூக்கி வீசினார்.

                இதையடுத்து,  கவுன்சிலர்கள் அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,), முகம்மது ஜியாவுதீன் (காங்.,), வி.சி., மற்றும் சுயேச்சை உறுப்பினர்களும் தி.மு.க.,விற்கு ஆதரவாக நாற்காலி, மைக்கை தூக்கி வீசி, கூட்ட அரங்கில் இருந்த டியூப் லைட்டை உடைத்தனர். மேலும், துடைப்பத்தால் தன்னைத் தானே அடித்துக் கொண்டனர். இதனால், பதட்டம் நிலவியது. இதைத் தொடர்ந்து, மறு தேதி அறிவிக்காமல் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு, தலைவர் தனது அறைக்குச் சென்றார். அங்கு, நான்காவது வார்டைச் சேர்ந்த பெண்கள் காலி குடத்துடன் தலைவரை முற்றுகையிட்டனர். பின், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், கூட்ட அறையை விட்டு வெளியில் சென்று கோஷம் எழுப்பினர்.

Read more »

இன்று உலக டாக்டர்கள் தினம்

              இன்று உலக டாக்டர்கள் தினம். சுயநலம் கருதாமல் மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்த, டாக்டர் பி.சி.ராய் பிறந்த நாளில்(ஜூலை 1ல்) டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.  மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை உடலுக்கு சிறிய பிரச்னை என்றாலும் நாம் தேடிப்போவது டாக்டர்களை தான். "இனி பிழைப்பது சிரமம்' என்று கைவிடப்பட்ட நோயாளிகளை, மதிநுட்பத்தால் உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றும் டாக்டர்கள் கடவுள்களுக்கு நிகரானவர்கள்.  சிலர் மருத்துவத்தை தொழிலாக செய்து கொண்டிருந்தாலும், பெரும்பாலனோர் சேவையாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

Read more »

என்எல்சி பங்குகள் விற்பனை தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

நெய்வேலி :
             என்எல்சி நிறுவனத்தின் 10 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைக் கண்டித்து கடலூர் மாவட்ட திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.  இதற்கு பொதுச்செயலர் சு.அறிவுக்கரசு தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலர்கள் ஆர்.பன்னீர்செல்வம், சொ.தண்டபாணி, அரியலூர் மாவட்டச் செயலர்கள் சி.காமராஜ், க.சிந்தனைச்செல்வன்  உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, என்எல்சி நிறுவனப் பங்குகள் விற்பனை உடனடியாக கைவிடவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் முழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திகவைச் சேர்ந்த சுமார் 100 பேர் பங்கேற்றனர்.

Read more »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை: என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குனர் எச்சரிக்கை

குறிஞ்சிப்பாடி: 

             "நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை விட என்.எல்.சி., அதிகமாக வழங்க முன்வந்துள்ளது. வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்    நடவடிக்கை எடுக்கப்படும்' என, என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குனர் பாபுராவ் தெரிவித்தார்.

என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குனர் பாபுராவ் நேற்று கூறியதாவது: 

                 என்.எல்.சி.,யில் புதிய ஊதிய உயர்வு குறித்த அங்கீரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.ச., - பா.தொ.ச., ஆகியவை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தை 65 அமர்வு மூலம் நடந்ததில் நிர்வாகம் சார்பில் அதிக கோரிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. என்.எல்.சி., நிறுவனம் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் பிட்மென்ட் பெனிபிட், 3 சதவீதம் கூடுதல் இன்கிரிமென்ட் வழங்க முன்வந்துள்ளது. இதைத் தவிர 3 சதவீதம் சர்வீஸ் வெயிட்டேஜ்  வழங்குகிறது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களான சால் 21 சதவீதம் பிட்மென்ட் பெனிபிட் 1.5 சதவீதம் இன்கிரிமென்ட் மட்டுமே வழங்குகிறது.

                  தற்போது ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் கூடுதல் இன்கிரிமென்ட், சர்வீஸ் வெயிட்டேஜ் போன்றவை 2009 செப்., 1லிருந்தும், அலவன்ஸ்கள் 2010 ஜனவரி 1 முதலும் வழங்க நிர்வாகம் முன்வந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் முறையே ஒன்பது மற்றும் ஐந்து மாத நிலுவைத் தொகை பெற முடியும். இதுபோன்று எந்த பொதுத்துறை நிறுவனமும் வழங்கவில்லை. இதனால் ஆண்டுக்கு என்.எல்.சி.,க்கு 271 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். என்.எல்.சி., உற்பத்தித்திறன் மிகவும் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. புதிய திட்டங்கள் சமீப காலத்தில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, என்.எல்.சி.,க்கு வருமானம் போதுமான அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்க இயலாது.

                 இருப்பினும் உற்பத்தியை பாதிக்கும்படியான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில், நிர்வாகம் அளிக்க முன்வந்த ஒப்பந்த சலுகைகளை மறுபரிசீலனை செய்யும். வேலை நிறுத்தம் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விவசாயம், மாணவர்களின் படிப்பு, தொழில் துறையில் வளர்ச்சி குறையும். இவ்வாறு நிர்வாகத்துறை இயக்குனர் பாபுராவ் கூறினார். பேட்டியின் போது நிதித்துறை இயக்குனர் சேகர், செயல் இயக்குனர் சந்திரமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read more »

தமிழீழத்திற்கு ஆதரவான போஸ்டர்: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூர்: 

             கடலூரில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பெயரில் ஒட்டிய போஸ்டரை, போலீசார் அதிரடியாக அகற்றினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                 கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மதியம், "தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற பெயரில், தமிழீழமே! எங்ளை மன்னிக்காதே! என்ற தலைப்பில் துண்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், "உரிமை கேட்டாய்! அடிமை ஆக்கினோம்! கொலை செய்தாரை அரியணை ஏற்றினோம்! பழம்பெருமை பேசி, மண், மொழி இழந்தோம்!  திராவிட மாயையால் திக்கற்றுப் போனோம்! வந்தேறிகள் வாழ வழியும் வகுத்தோம்! இந்திய மாயையில் இனி... மண்ணும் இழப்போம்! மானமும் இழப்போம்!' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. போஸ்டரில், 11 ஜாதி சங்கங்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, அனைத்து போஸ்டர்களையும் கிழித்து அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து, போஸ்டர் ஒட்டிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

Read more »

அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நிலை பரிதாபம்! படிக்கும் நேரத்தில் மாடுகள் விரட்டும் அவலம்

புவனகிரி : 

                 கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் அடிப்படை வசதியில்லை, பாதுகாப்பின்றி திறந்த வெளி மைதானமாக இருப்பதால் கால்நடைகள் உள்ளே வந்து மாணவர்களை மிரட்டுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறி விடுகிறது.

                 சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளியில் கீரப்பாளையம், வயலூர், சிலுவைபுரம், எண்ணாநகரம், செட்டிக்குளம், கண்ணங்குடி, வடஹரிராஜபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட கிராமங்களிலிருந்து விவசாய குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப் பள்ளியில் கடந்த எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர் வில் 75 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். கல்வித்தரம் உயர்ந்துவரும் நிலையில் பாதுகாப் பாற்ற நிலையில் பள்ளி வளாகம் உள்ளது. பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் எந்த நேரத்திலும் மாடுகள் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு கூட்டம், கூட் டமாக வருவதால் மாணவர்கள் புத்தக பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடிப்பதே வேலையாக உள்ளது. மாடுகள் மட்டுமின்றி நாய்கள் கூட்டம் கூட்டாக பள்ளிகளில் புகுந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வருகின்றன. தினமும் காலையில் மரத்தடியில் சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். மாடுகள் வருவதால், அந்த மாணவர்கள் எந்த நேரத்திலும் ஓட்டம் பிடிக்கும் நிலையில் உஷாராக உட்கார்ந்து படிக்கின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட பலான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

                     காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களும், ஆசிரியர்களும் பிராந்தி பாட்டில்களை பார்த்து முகம் சுளித்து அவற்றை அவர்களே அப்புறப்படுத்துவதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். மாணவர்கள் சிறுநீர் கழிக்கவும், இயற்கை உபாதைக்காகவும் ஊராட்சி நிர்வாகம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது. காலப் போக்கில் தண்ணீர் பிரச்னை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பள்ளிக்குள் குடித்து விட்டு கும்மாளமிடும் சமூக விரோதிகள் கழிவறையை நாசம் செய்ததோடு சேதப்படுத்தியுள்ளனர். இதனால் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைக்காக முட்புதர்கள் போன்ற மறைவிடங்களை தேடிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதில் மாணவிகள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. 2007-08ம் ஆண்டு அரசு மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளியில் பல லட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.

                  கூடைப்பந்து, கைப்பந்து, கால் பந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாட தனித்தனியாக இடம் தேர்வு செய்யப்பட்டு தளங்கள் அமைக்கப்பட்டன. அவைகளை பராமரிப்பதற்கு ஆண்டு தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் தற்போது விளையாட்டு மைதானத்தை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூடைப்பந்து மைதானம் காட்டாமணக்கு செடிகள் வளர்ந்த காட்டிற்கு நடுவே வெறும் கம்பி மட்டுமே தெரியும் நிலையில் உள்ளது. மற்ற விளையாட்டு இடங்கள் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. சுடுகாட்டிற்கு பாதுகாப்பான சுற்றுச் சுவர், தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசு மாணவர்களின் நலன் கருதி கீரப்பாளையம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் தான் பதில் சொல்ல வேண்டும்.


Read more »

போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் சிறுமுளை - கோடங் குடி சாலை

மங்களூர்:

               சிறுமுளை - கோடங்குடி சாலைட்டக்குடி அடுத்த சிறுமுளை - கோடங்குடிக்கு செல்லும் மெட்டல் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது.

                மங்களூர் ஒன்றியம் திட்டக்குடி அடுத்த சிறுமுளை பெரிய ஏரி வழியாக கோடங்குடி கிராமம் வரையிலான 2.5 கி.மீ., தூரத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் மெட்டல் சாலை போடப்பட்டது. இவ்வழியாக சுமார் 300 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் விளைவிக்கும் நெல், மணிலா பயிர்கள் சிறுமுளை, பெருமுளை வழியாக திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கரும்பு பயிர் கோடங்குடி, போத்திரமங்கலம், ஆவினங்குடி வழியாக இறையூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் திட்டக்குடி வழியாக இறையூர் சர்க்கரை ஆலைக்குச் செல்லும் சுமார் 6 கி.மீ., தூரம் நேர விரயம் தவிர்க்கப்பட்டு வந்தது. தற்போது மெட்டல் சாலை பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளது. 

                  இருபுறமும் ஏரியின் களிமண் கரை மட்டுமே தெரிகிறது. முன்னதாக அமைக்கப் பட்ட மெட்டல் சாலை மழை காலங்களில் நீரின் அரிப்பினால் முற்றிலுமாக பெயர்ந்து காணாமல் போனது. மழைக் காலங்களில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விளை பொருட்களை நிலங்களிலிருந்து வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நெல், கரும்பு போன்ற பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகுவதுடன் விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராவல் அடித்து பேட்ஜ் - ஒர்க் செய்து அவ்வப்போது சீரமைக்கப்படும். இருப்பினும் முறையாக அரசின் நிதி பெற்று சிறுமுளை - கோடங்குடி வரையிலான 2.5 கி.மீ., வரை பாரத் நிர்மாண் திட்டம் அல்லது கரும்பு அபிவிருத்தி திட்டம் ஆகிய திட்டத்தின் மூலமாகவோ தரமான சாலை அமைத்தால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்ல ஏற்றதாக அமையும்.

Read more »

செயல்வழிக் கற்றல் மாநில ஒருங்கிணைப்பாளர் குமராட்சி ஒன்றிய பள்ளிகளில் திடீர் ஆய்வு

கடலூர் : 

                 செயல்வழிக் கற்றல் மாநில ஒருங்கிணைப் பாளர் கடலூர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்ட செயல்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பிச்சையா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் குமராட்சி ஒன்றியத்தில் நான்கு பள்ளிகளிலும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் ஒரு பள்ளியையும் ஆய்வு செய்தார். பின்னர் மாலை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த ஆரம்ப, நடுநிலை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாணவர் கள் எளிதில் புரிந்து கொள் ளும் வகையில் செயல் வழிக் கற்றல் முறையை செயல்படுத்துவது குறித்து மாநில ஒருங்கிணைப் பாளர் பிச்சையா ஆலோசனை வழங்கினார். கூட் டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலர் மணவாள ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read more »

நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா காண்பது எப்போது?

நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் நிலையம் திறக்கப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான ஓட்டு கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வந்தது. மழைக் காலங்களில் உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும். வழக்கு கோப்புகள் பாழாகும் நிலை இருந்தது. தமிழக அரசு புதிய கட்டடம் கட்ட 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஒரு வருடத்துக்கு முன் பணி துவங்கியது.

                        இன்ஸ்பெக்டர் அலுவலகம் மட்டும் பழைய இடத்தில் பின்புறமுள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது. போலீஸ் நிலையம் தற்காலிகமாக காவலர் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டருக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான இடவசதி இல்லாததால் போலீசார் மிகவும் சிரமப் படுகின்றனர். புகார் கொடுக்க வரும் பொது மக்களும் இன்ஸ்பெக்டர் அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன் என இரண்டு இடத்துக்கும் அலைகின்றனர். புதிய கட்டட பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. கட்டடத்தை திறக்க எந்த அமைச்சரின் வருகைக்காக காத்திருக்கின்றனர் என தெரியவில்லை. பொதுமக்கள் மற்றும் போலீசார் நலன் கருதி பணிகள் முடிந்த புதிய போலீசில் ஸ்டேஷன் கட்டடத்தை திறக்க வேண்டும்.

Read more »

பரங்கிப்பேட்டை அருகே மயான பாதைக்கு தார் சாலை கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை : 

             பரங்கிப்பேட்டை அருகே மயான சாலையை தார் சாலையாக மாற்றித் தர கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பரங்கிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பூவாலை மேற்கு பகுதி மக்களுக்கு தனியாக மயானம் உள்ளது. மயானத்திற்குச் செல்லும் சாலையை நான்கு ஆண்டுகளுக்கு முன் மெட்டல் சாலையாக போடப்பட்டது. தற்போது சாலையில் கற்கள் பெயர்ந்து மக்கள் நடக்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. மேலும் விவசாயிகள் இந்த சாலை வழியே டிராக்டர் மூலம் உழவு ஓட்டுவதற்கும், உரம் போன்ற பொருள்களை எடுத்து செல்லவும் பயன்படுத்துகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கருதி தார்சாலை அமைக்க வேண்டும்.

Read more »

விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூரில் ஆற்றைக் கடக்க மேம்பாலம் கட்டப்படுமா?

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேமாத்தூர் ஊராட்சியில் ரயில்வே காலனி, தரிசு, புதிய காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் மேமாத்தூர், ரயில்வே காலனி, தரிசு ஆகிய கிராமங்கள் மணிமுக்தாற்றுக்கு வடக்கு பகுதியிலும், தெற்கு பகுதியில் புதிய காலனியும் உள்ளது. மேமாத்தூரையும், புதிய காலனியையும் இணைக்க ஆற்றில் மேம்பாலமோ, தரைபாலமோ இல்லை. விருத்தாசலத்தில் இருந்து மேமாத்தூர் கிராமத்திற்கு அரசு பஸ் செல்கிறது. ஆனால் அந்த பஸ் ஆற்றின் தெற்கு பகுதியில் உள்ள புதிய காலனி அணைக்கட்டு வரைதான் செல்லும். அங்கிருந்து இறங்கி ஆற்றை கடந்துதான் மேமாத்தூர், தரிசு, ரயில்வே காலனி மக்கள் செல்ல வேண்டும். அதுபோல் அந்த கிராமத்தினர் ஆற்றைக் கடந்து புதிய காலனிக்கு வந்துதான் பஸ் பிடித்துச் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஓடினால் ஆற் றின் வடக்கு பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் இவர்கள் எந்த வெளியூர்களுக்கும் செல்ல முடியாது. அப்படி தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் மேமாத்தூரில் இருந்து புதூர் வரை நடந்து சென்று அங்கிருந்து பட்டி, எறுமனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பல கி.மீ., தூரம் சுற்றிக் கொண்டு விருத்தாசலம் வர வேண்டும். மேமாத்தூர் கிராமத்திற்கு அருகில் உள்ள நல்லூருக்கு மழைக்காலங்களில் விருத்தாசலம் வழியாக சுற்றுப் பாதையில் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.


இதுகுறித்து மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி கூறுகையில்: 

                எங்கள் ஊருக்கென வரும் பஸ் ஆற்றுக்கு தென்புறம் உள்ள புதிய காலனியிலேயே நின்று விடும். நாங்கள் அனை வரும் ஆற்றைக் கடந்து புதிய காலனிக்குச் சென்று அங்கிருந்து தான் பஸ் பிடித்துச் செல்லவேண்டும். மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஓடினால் எங்கள் பாடு திண்டாட்டம்தான். அப்போது நாங்கள் புதூர் கிராமம் வரை நடந்தே சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக ஐந்தாம் வகுப்பிற்கு மேல் மாணவர்கள் நல்லூரில் தான் படிக்கிறார்கள். ஆற்றில் தண்ணீர் ஓடும் காலங்களில் அவர்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாததால் அவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. புதூர் வரை வரும் பஸ்சை எங்கள் ஊர் வரை வந்து செல்ல அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. அவசர சிகிச்சைக்கு கூட உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாது. அரசு எங்களின் நிலையை உணர்ந்து ஆற்றில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Read more »

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தலைமை கணக்கு அலுவலர் தீனதயாளன் அலுவலக மேலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.

                  கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இலவசமாக விதை கரணை வழங்க வேண்டும். கரும்பு உதவியாளர்கள் பணி முறைகளை செம்மைப்படுத்த வேண்டும். தலைமை கரும்பு அலுவலர் பாரபட்சமில்லாமல் விவசாயிகள் மற்றும் கரும்பு துறை ஊழியர்களை அணுகி கரும்பு உற்பத்தியை பெருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டு நீர்பாசனத்திற்காக ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி பேசினர்.

Read more »

ராமநத்தம் பகுதியில் பழக்கடைகளில் திடீர் ஆய்வு : செயற்கை முறை பழங்கள் அழிப்பு

ராமநத்தம் : 

                 ராமநத்தம் பகுதியில் பழக்கடைகள், குடோன்களில் ரசாயன கற்கள் வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். ராமநத்தம் பகுதிகளில் பழக்கடைகளில் ரசாயன கற்கள் வைத்து பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மங்களூர் வட்டார உணவு ஆய்வாளர் பழனிவேல் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சிவலிங்கம், ஆய்வாளர்கள் பூவராகவன், துரைராஜ், சக்திவேல், சுப்ரமணியன், ஷேக் முக்தார் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 பழக்கடைகள் மற்றும் குடோன்களில் ரசாயன கற்கள் வைத்து செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 20 பெட்டிகளில் இருந்த 4,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள், வாழைப்பழங்களை கைப்பற்றி அணைக்கட்டு பகுதியில் கொட்டி அழித்தனர். 

சேத்தியாத்தோப்பு: 

                  கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் முன்னிலையில் சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன் தலைமையிலான சுகாதார குழுவினர் சேத்தியாத்தோப்பில் உள்ள பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 250 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழித்தனர்.

Read more »

கடலூர் முதுநகரில் பாதாள சாக்கடை பள்ளம்: விபத்தில் சிக்கும் பொதுமக்கள்

கடலூர் : 

               கடலூர் முதுநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் முதுநகர் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக முதலில் "மேன்ஹோல்' ஆள் நுழைவு குழிகள் கட்டப்பட்டது. பின்னர் பைப்புகள் புதைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடாமல் உள்ளதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிகளவில் விபத்து உண்டாகிறது. மேலும் துறைமுகம் பகுதிக்கு பஸ் செல்லும் முக்கிய சாலை என்பதால் கடந்த ஒரு மாதமாக பஸ்கள் செல்லமுடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read more »

கடலூர், சிதம்பரம் பணிமனை முன் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணிக் கொடை, ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்காததை கண்டித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடலூர், சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

                  அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில், விழுப்பரம், கடலூர், திருண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மண்டலங்களில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட தொழில் நுட்ப பணியாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் கடலூரில் 9 பேரும், சிதம்பரத் தில் 5 பேர் உட்பட விழுப் புரம் மண்டலத்தில் 30 பேர் சென்ற மாதம் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக் கொடை மற்றும் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற் சங்கத்தினர் உட்பட அனைத்து தொழிற் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம்: 

               இதேப் போல் சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் தங்களது எதிர்பை பணிமனையை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. 

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 

                     "நிர்வாகத்திறன் இல்லாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த மாதம் வழங்கிய தொகை கூட இந்த மாதம் வழங்கப்படவில்லை. தற்போது பழுதடைந்த பஸ்சை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. விதி முறைப்படி வழங்கப்பட்ட ஓய்வூதியப் பலன் களை முறைப்படி வழங்கா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்தனர்.

Read more »

கடலூர் கோர்ட்டில் 6 பேருக்கு 6 மாதம் சிறை

கடலூர் :

                   ஈமச்சடங்கில் பங்கேற்றவரை தாக்கிய 6 பேருக்கு கடலூர் கோர்ட்டில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் அடுத்த குண்டு உப்பலவாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர் கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அதே ஊரில் ஈமச் சடங்கு ஒன்றிற்கு சென்றார். அன்று மாலை 7 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த ஊர் தலைவர் சதாசிவம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜானகிராமன், ரவிச்சந்திரன், பாக்கியராஜ், வெங்கடேசன், சரவணன் ஆகியோர் சுந்தர்ராஜன் வீட்டிற்குச் சென்று எப்படி ஈமச்சடங்கிற்கு செல்லலாம் என கேட்டு தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து சதாசிவம் உள்ளிட்ட 6 பேர் மீது கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (2)ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுகந்தி, ஊர் தலைவர் சதாசிவம், ஜானகிராமன், ரவிச்சந்திரன், பாக்கியராஜ், வெங்கடேசன், சரவணன் ஆகியோருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Read more »

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு: ஊழியர்கள் அச்சம்

கடலூர் : 

                   கடலூர் கலெக்டர் அலுவலக ஆவண காப் க அறையில் நல்ல பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காலை 7.30 மணிக்கு ஆறு அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட காவலர் காத்தவராயன் அதனை விரட்டினார். வராண்டாவில் புகுந்த அந்த பாம்பு ஆவண காப்பக அறைக் குள் சென்றது. உடன் கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அறை பூட்டப் பட்டிருந்ததால், வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர். பணிக்கு வந்த அலுவலக ஊழியர்கள் ஆவண காப்பகத்தில் நல்ல பாம்பு இருப்பதை அறிந்ததும் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.

Read more »

கோவில் திருவிழாவில் தகராறு ஒருவர் கைது: மூவருக்கு வலை

கடலூர் : 

                 கோவில் திருவிழாவின் போது நடந்த பாட்டுக் கச்சேரியில் நடனம் ஆடியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த குடிகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 25ம் தேதி இரவு பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உறவினர் ஒருவர் எழுந்து நடனம் ஆடினார். அதனை அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் ஊர் மக்கள் தட்டிக்கேட்டனர்.

                       இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் நின்றிருந்தபோது அவ்வழியாக வந்த பிரதீப்பிடம் உன்னால் தான் திருவிழா சரியாக நடக்கவில்லை என கூறி அவரை திட்டினர். அதனை தட்டிக் கேட்ட பிரதீப்பின் சகோதரி புனிதாவை பாலகிருஷ்ணன் தரப்பினர் கல்லால் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து தெய்வசிகாமணி (38)யை கைது செய்தனர். மேலும் பாலகிருஷ்ணன், தெய்வசிகாமணி, மகாலிங்கம், பிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Read more »

பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பண்ருட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் செம்மொழி மாநாடு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர் மாதாந்திர இயல்புக் கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் கோதண்டபாணி முன்னிலை வகித்தார். கமிஷனர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

முருகன் (அ.தி.மு.க., ): 

                    விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு முகாமில் உள்ள தமிழர்கள் தண்ணீர் கிடைக்காமல் பாதித்துள்ள நிலையில் செம்மொழி மாநாட்டிற்கு பாராட்டு தெரிவித்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளியே சென்ற நிலையில் தி.மு.க., கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி அனைத்து தீர்மானங்கள் நிறைவேறியதாக கூறி தேசியகீதம் ஒலிக்க கூறினார். இதனையடுத்து ஊழியர்கள் தேசிய கீதம் பாடியதும் சேர்மன் உள்ளிட்ட அனைத்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறினர்.

ஒரு நிமிட கூட்டம்

                   பண்ருட்டி நகரமன்ற கூட்டம் காலை 11.30க்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 11.45க்கு சேர்மன் பச்சையப்பன், கவுன்சிலர்கள் நகர்மன்ற கூடத்திற்கு வந்தனர். ஆனால் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் கூட்ட அரங்கிற்கு வரவில்லை. பின் 11.55க்கு சேர்மன் உதவியாளர் ஜார்ஜ் வந்தார். 12 மணிக்கு கமிஷனர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன் வந்தனர். கூட்டம் 12.10க்கு தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி 12.13க்கு முடிந்தது. 12.14க்கு தீர்மானம் படிக்கத் துவங்கியதும் அ.தி.மு.க., வினர் வெளிநடப்பு செய்ததும் 12.15க்கு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு கூட்டம் முடிக்கப் பட்டது.

Read more »

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

திட்டக்குடி : 

               திட்டக்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல்கள், நீதிபதியை கண்டித்து காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட் வக்கீல் கள் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தங்ககொளஞ்சிநாதன், செயலாளர் முத்தழகன், பொருளாளர் கென்னடி உட்பட மூத்த வக்கீல்கள், வக்கீல்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் திட்டக்குடி கோர்ட்டில் ஜாமீன் மனு, பிறப்பு சான்றிதழ் மனு, அவசர மனு ஆகியவற்றில் நீதிபதி கடும் நிபந்தனைகளை கடைபிடிப்பதால் பொதுமக்களும், வக்கீல்களும் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட தலைமை நீதிபதி தலையிட்டு உரிய தீர்வு காணும் வரை காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior