உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 15, 2010

பாமாயில் மரம் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: நெல் உற்பத்தி கணிசமாக குறைய வாய்ப்பு

காட்டுமன்னார்கோவில்:                 நெல்பயிரை மட்டுமே நம்பியிருந்த காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் சமீப காலமாக பாமாயில் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பகுதிகள் காவிரி டெல்டா கடை மடை பகுதிகளாக கருதப்படும். இங்குள்ள விவசாயிகள் நெல் சாகுபடியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.                ...

Read more »

மனைப்பட்டா கிடைக்கும் வரை மறியல்: தமிழக விவசாய சங்க வட்டக்குழு முடிவு

திட்டக்குடி:             திட்டக்குடி வட்டக்குழு தமிழக விவசாய சங்கம் சார்பில் இறையூர் சர்க்கரை ஆலை முன்பாக கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 400 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக் கப்பட்டது.தமிழக விவசாய சங்க திட்டக்குடி வட்டக்குழு கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. வட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ராஜேந்திரன்...

Read more »

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

ராமநத்தம்:          ராமநத்தம் ஆற்காடு லூத்ரன் சபை வாலிபர் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ராபின்டிரஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார கல்வி விழிப்புணர்வு பேரவை அமைப்பாளர் வீரமணி முன்னிலை வகித்தார். செல்வராஜ் வரவேற்றார். எய்ட்ஸ் வரும் காரணம், நோயின் கொடூரம், தடுப்பு முறைகள், ஆணுறையின் அவசியம், குடும்ப உறவு குறித்து டாக்டர் கிரிஜா பேசினார்.பெரம்பலூர்...

Read more »

புதுச்சேரி பதிவெண் பஸ்கள் விதிகளை மீறுவதாக புகார்

கடலூர்:           கடலூர் மாவட்டத்திற்குள் வரும் புதுச்சேரி பதிவெண் உள்ள பஸ்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. கடலூரிலிருந்து 24 கி.மீ., தொலைவில் உள்ளது புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் தமிழகம், புதுச்சேரிக்கும் விற்பனை வரி வித்தியாசத்தால் நுகர்வோர்கள் தினமும் புதுச்சேரிக்கு சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம். கடலூர்-புதுச்சேரியில் ரயில் போக்குவரத்து...

Read more »

நாட்டு நலப்பணி திட்டம் துவக்கம்

நெய்வேலி:              நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட பிரிவின் 7 நாள் சிறப்பு முகாம் இருப்பு கிராமத்தில் நடந்தது.நெய்வேலி அருகே உள்ள இருப்பு கிராமத்தை உள்ளடக்கிய தெற்கிருப்பு மற்றும் வடக்கிருப்பு கிராமங்களில் ஜவகர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட பிரிவின் 100 மாணவ, மாணவிகளை கொண்டு 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பத்மாமணி தலைமை...

Read more »

ஆறுமுகம் கல்லூரியில்இலவச ரத்ததான முகாம்

ராமநத்தம்:           தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, திட்டக்குடி அரிமா சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் கிருஷ் ணசுவாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன் முன் னிலை வகித்தார். முதல்வர் ரெங்கநாதன் வரவேற்றார்.இதில் நிர்வாக இயக்குனர் ராஜன் ரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...

Read more »

அண்ணாமலை கத்தரி செடிகள்: வேளாண் மாணவர்கள் ஆய்வு

கிள்ளை:          சி.முட்லூர் பகுதியில் விளைந்துள்ள அண்ணாமலை கத்தரிக்காயை வேளாண் மாணவர்கள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அண்ணாமலை கத்தரி தோட்டங்களை அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் கல்லூரி நான் காம் ஆண்டு மாணவர்கள் வேளாண் விரிவுரையாளர் ராஜ்பிரவீன் தலைமையில் ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதி விவசாயிகளிடம் தோட்டப்பயிர்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து வி...

Read more »

கல்லூரி ஆசிரியர்களுக்கான போட்டி:அண்ணாமலை பல்கலை., சாம்பியன்

சிதம்பரம்:           சென்னையில் நடந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் அண்ணாமலை பல்கலை., அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக கல்லூரி ஆசிரியர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி சென்னை ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. இதில் கூடைபந்து, வாலிபால், கால் பந்து, பூப்பந்து, இறகுபந்து ஆகிய போட்டிகள் நடந்தது. 50க்கும் மேற்பட்ட அணிகள் பங் கேற்றன. அண்ணாமலை பல்கலைக்கழக...

Read more »

மருத்துவ முகாம்

விருத்தாசலம்:              மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூரில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மதியழகன், கவுன்சிலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் முரளி வரவேற்றார். தலைமை ஆசிரியர் குமாரசாமி, துணை தலைவர் அழகப்பன், டாக்டர்கள் கதிர்வேல், முத்துகுமரன், பட்டி ஊராட்சி...

Read more »

மாணவர்களுக்கு செய்முறை தேர்வு:விருத்தாசலத்தில் மின் நிறுத்தம் மாற்றம்

விருத்தாசலம்:              விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வை யொட்டி மின் நிறுத்த நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் செயற்பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு:                விருத்தாசலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தற்போது செய்...

Read more »

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

விருத்தாசலம்:             விருத்தாசலம் விருத்தகிரஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி உழவாரபணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சத்யசாயி சேவா சமிதி சார்பில் திருக்கோவில் முழுவதும் உழவாரபணி நடந்தது. இதில் கடலூர் மாவட்ட சத்யசாயி சேவா சமிதி தலைவர் பிரசாத், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், விருத் தாசலம் சாய் சமிதி கன்வீனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில்...

Read more »

அம்மேரி கொக்கன்குப்பம் பள்ளிக்கு நிலம் தானம்

நெய்வேலி:                 நெய்வேலியை அடுத்துள்ள அம்மேரி கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் மக்கள் தங்கள் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். நெய்வேலியை அடுத்துள்ள அம்மேரி கொக்கன்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு போதுமான இடம் இல்லாத நிலை இருந்து வந்தது. கடந்த 11ம் தேதி பள்ளியில் கல்விக்குழு கூட்டம் நடந்தது. ...

Read more »

உடல் உறுப்பு தானம் குறித்துவிழிப்புணர்வு பிரசாரம்

கடலூர்:               கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேசக்கரங்கள் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம், விழிப்புணர்வு பிரசாரம் நடத்தியது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் முரளி தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் திருமார்பன், மாவட்ட துணை தலைவர் தமிழ்ச் செல்வம் முன்னிலை வகித்தனர். நகர துணைத் தலைவர் வாழுமுனி வரவேற்றார். யார் யார் உறுப்புகளை தானம் செய்யலாம்...

Read more »

கடலூரில் வட்டார வள மையஆசிரியர் பயிற்றுனர் தேர்வு

கடலூர்:           கடலூரில் 10 மையங்களில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் தேர்வு நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 500 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த 5,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,766 பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், கணிதம்,...

Read more »

குறிக்கோளை அடைய அயராது உழைக்க வேண்டும்:நீதிபதிராமபத்திரன்அறிவுரை

கடலூர்:                    வள்ளலாரின் பசித்திரு, தனித்திரு, விழித்திரு தத்துவத்தை கடைபிடித்தால் "பதவி' தேடி வரும் என நீதிபதி ராமபத்திரன் கூறினார். க டலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் தின விழா நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரட்சகர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்...

Read more »

தென்னாற்காடு மாவட்டஆசிரியர் இல்ல மீட்பு கூட்டம்

கடலூர்:                ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட ஆசிரியர் இல்ல இடம் மீட்பு மற்றும் ஆசிரியர் இல்லம் அமைப்பு நடவடிக் கைக்குழு கூட்டம் கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் சஞ்சிவிராயன் தலைமை தாங்கினார். விஜயரங்கன் வரவேற்றார். குப்புசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கடலூரில் ஆசிரியர் இல்லம் கட்ட ஒருங்கிணைந்த...

Read more »

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தகுறவர் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

கடலூர்:                   பழங்குடி மக்களின் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென தமிழ்நாடு குறவர் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.                      குறவர் இனம் உட்பட தலித்-பழங்குடி மக்களின் அரசியல் விழிப்புணர்வு வாழ்வுரிமை மாவட்ட மாநாடு...

Read more »

ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள்நல சங்கம் கடலூரில் துவங்கியது

கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் கடலூர் டவுன்ஹாலில் நடந்தது. ஓய்வு பெற்ற போலீசாருக்கு மட்டுமின்றி பணியிலிருப்பவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மன்றத்தை அணுகினால் ஆதரவாக குரல் கொடுப்பதற்காக கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் நேற்று துவங்கியது. மாவட்ட தலைவர் ஓய்வு...

Read more »

சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி தலைவர்மீண்டும் செயல்பட கலெக்டர் உத்தரவு

கடலூர்:            முறைகேடு புகார் சம்பவத்தை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி தலைவர் மீண்டும் செயல்பட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி தலைவர் மாயவேல், நிதி முறைகேடு செய்த புகாரை தொடர்ந்து அவரை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். அதனை ரத்து செய்யக் கோரி மாயவேல் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த...

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம்

கடலூர்:                        கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் மேலாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் என்.எஸ்.எஸ்., துவக்க விழா தோட்டப்பட்டு கிராமத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் ரமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். முதன்மை செயல் அலுவலர் ஆனந்த் முகாமை துவக்கி வைத்தார். சுந்தரமூர்த்தி, வக்கீல்...

Read more »

சுத்துக்குளத்தில்நிகும்பலா யாகம்

கடலூர்:             சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. கடலூர் முதுநகர் சுத்துக்குளம் தில்லைவன காளியம்மன் கோவிலில் நேற்று அமாவாசையை யொட்டி "நிகும்பலா யாகம்' நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் முத்துக்குமாரசாமி செய்திருந்தா...

Read more »

சம்பா பயிர் ஈட்டுறுதி திட்ட பரிசோதனை

கிள்ளை:          சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடியில் சம்பா பருவ பயிர் ஈட்டுறுதி திட்ட பரிசோதனை நடந்தது. பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் துறை சார்பில் சம்பா பருவ பயிர் ஈட்டுறுதி திட்டத்தின் மூலம் களை பரிசோதனை முன்னோடி விவசாயி குலசேகர் வயலில் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது கதிர் முற்றிய நிலையில் நடந்த அறுவடை நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி தலைமை தாங்கினார். வேளாண்...

Read more »

திருத்தப்பட்ட பதிவு சான்று பெறதொழிலாளர் துறை அழைப்பு

கடலூர்:             திருத்தப்பட்ட போக்குவரத்து தொழிலாளர் சட்டம் பிரிவின் கீழ் பதிவுச் சான்று பெற மோட்டார் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து தொழிலாளர் துறை ஆய்வாளர் கமலக்கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 மாவட்டத்தில் இயங்கி வரும் மோட் டார் போக்குவரத்து நிறுவனங்கள்,...

Read more »

மாரியம்மன் கோவிலில்108 திருவிளக்கு பூஜை

கடலூர்:                   கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தை மாதம் கடைசி வெளிக்கிழமையையொட்டி கடலூர் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் விளக் கேற்றி பூஜை செய்து அம்மனை வணங் கினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு...

Read more »

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் தாமதம்:மாணவர்கள் கல்வித் தரம் பாதிப்பு

நடுவீரப்பட்டு:                சி.என்.பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் மாணவ,மாணவிகளின் கல்வி தரம் பாதிப்படையும் நிலை உள்ளது. பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கடைவீதி மற்றும் மழவராயநல்லூர் காலனி ஆகிய இரண்டு இடங்களில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த சில மாதங்களுக்கு முன் தான் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது....

Read more »

பாசன வாய்க்கால் ஆக்ரமிப்பு: உண்ணாவிரதம் இருக்க முடிவு

சேத்தியாத்தோப்பு:                   வட்டத்தூர் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் பகுதியில் உள்ள தனிநபர் ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி 17ம் தேதி உண்ணாவிரதம் மேற் கொள்ள கிராம பொதுமக் கள் முடிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து வட்டத்தூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:                ...

Read more »

மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை:பயனாளிகளுக்கு வழங்குவதில் சிக்கல்

பரங்கிப்பேட்டை:           பரங்கிப்பேட்டையில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பயனாளிகளுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை பகுதியில் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு வருவாய்துறை மூலம் பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பு முதல் தடவையாக சுமார் 2500 பயனாளிகளின் அடையாள அட்டை கிராம நிர்வாக அதிகாரியிடம் வந்துள்ளது. அடையாள...

Read more »

கார் மோதிபெண் பலி

கடலூர்:             புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பெண் கார் மோதி இறந்தார். கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்த காசிலிங்கம் மனைவி சரோஜா (55). சொந்த வேலை காரணமாக புதுச்சத்திரம் சென்ற இவர் மீண்டும் வீட்டிற்கு திரும்ப பஸ் ஏறுவதற்காக புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது சிதம்பரம் - கடலூர் நோக்கி வந்த இண்டிகா கார் கட்டுப் பாட்டைஇழந்து...

Read more »

லாட்ஜில் 'ரூம்' போட்டு சூதாட்டம்:வருவாய் ஆய்வாளர் உட்பட 8 பேர் கைது

கடலூர்:            விருத்தாசலம் லாட்ஜில் "ரூம்' போட்டு சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் இரவு ஓட்டல், லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு சப் இன்ஸ் பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முல்லை நகர் அன்பு லாட் ஜில் அறை எண்.17ல் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டு சுற்றி வளைத்து பிடித்தனர்.              ...

Read more »

கணவன் திட்டியதால்மனைவி தற்கொலை

கடலூர்:           புதுப்பேட்டை அருகே கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற் கொலை செய்து கொண்டார். புதுப்பேட்டை அடுத்த வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காவேரி (35). சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் முருகன் தனது மனைவியிடம் குழந்தைகளை சரியாக வளர்க்கவில்லை, கெடுத்து விட்டாய் என திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த காவேரி கடந்த 12ம் தேதி இரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீ...

Read more »

கம்பியால் தாக்கியதில்வாலிபர் படுகாயம்

ராமநத்தம்:          கட்டுமான பணியில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் தாக்கியதில் வாலிபர் படுகாயமடைந்தார். ராமநத்தம் அடுத்த எழுத்தூரை சேர்ந்தவர் கள் துரைராஜ் (32), வரதராஜ் (38). இருவரும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரது வீடு கட்டுமான பணியை பங்கிட்டு செய்து வந்தனர். இந்நிலையில் வரதராஜ் கூலிக்கு வேலை செய்வதாக துரைராஜ் கூறியுள்ளார்.அதில் ஏற்பட்ட தகராறில் துரைராஜ் இரும்பு கம்பியால் தாக்கியதில்...

Read more »

பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

கடலூர்:          கிள்ளையில் வயிற்று வலியால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து இறந்தார். கிள்ளை கள்ளிமேடு காலனியைச் சேர்ந்த சாமிதுரை மகன் செந்தில்குமார் (23). இவருக்கு பல நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி இரவு வயிற்று வலி அதிகமாகவே வாழ்க்கையை வெறுத்த இவர் பூச்சி மருந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அண்ணாமலை நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior