உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்களின் முகவரிகள்

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவதற்கான இணையதளங்களின் முகவரிகள்

                                          

http://www.pallikalvi.in/


http://tnresults.nic.in/

http//dge1.tn.nic.in  

http://dge2.tn.nic.in 

http://www.collegesintamilnadu.com   

http://www.dinamalar.com   

http://www.maalaimalar.com   

http://www.patashala.com  

http://www.randominfotech.com

http://www.webulagam.com 

http://www.squarebrothers.com  

http://results.sify.com  

http://results.tamilnadueducation.net/ 

http://www.madrastimes.com  

http://www.galatta.com 

http://tamil.webdunia.com/

                                     

Read more »

நான்கு ஆண்டு பி.எட். படிப்பு: அமைச்சர் க. பொன்முடி


         நான்கு ஆண்டு பி.எட். படிப்பை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து  பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ""காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் துணைக் கேள்வி எழுப்பினார். 
 
            "கல்வியைப் பெறுவது அடிப்படை உரிமை' என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் போது, 8 லட்சம் ஆசிரியர்கள் தேவை என்றும், இதனால் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு எத்தகைய முயற்சி எடுத்து வருகிறது'' என்றார்.
 
இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
 
             தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் எண்ணிக்கை 756 ஆக உள்ளது. இந்தப் பள்ளிகளில் படித்து ஆண்டுதோறும் வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரமாக உள்ளது. அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர் பட்டப் படிப்பு முடித்தவர்கள் அதிகளவு உள்ளனர். நடுநிலைப் பள்ளிகளில் கூட பி.எட். படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கல்வியைப் பெறுவதற்கான உரிமை என்ற சட்டம் அமலாகும் போது, தமிழகத்தில் தேவையான அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் இருப்பார்கள் என்றார்.அப்போது, குறுக்கிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, ""இப்போது பட்டப்படிப்பு முடித்ததும் ஓராண்டு பி.எட். படிப்பு நடைமுறையில் உள்ளது. இதனுடன், பிளஸ் டூ படிப்புக்குப் பிறகு நான்கு ஆண்டு பி.எட். படிப்பை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

Read more »

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் அட்டை பெறுவது எப்படி?


              கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் அட்டை பெறுவது எப்படி என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். 
 
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் இரா.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
 
                 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று ஒருபகுதியும், கணவனால் முறையாக விவகாரத்துச் செய்யப்பட்ட பெண்கள் என இரண்டு வகைப் பிரிவினருக்கும் ரேஷன் அட்டை வழங்க பரிசீலிக்கப்பட்டது. அதில், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் கணவர் குடும்பம் எந்த முகவரியில் வசிக்கிறார் என்ற முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும்.அந்த முகவரிக்குச் சென்று விவரங்களை அறிந்து அதன்மூலமாக நீக்கல் சான்றுகள் துறையின் சார்பாகவே பெறப்படும். அதன்பின்பு, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனியாக இருந்தால் தனி அட்டையாகவும், குடும்பத்தோடு பெற்றோர்களுடன் இருந்தால் அந்த அட்டையிலே இணைத்து ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. விவாகரத்து செய்திருக்கின்ற பெண்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாகப் பெறப்பட்ட உத்தரவு நீக்கல் சான்றாகக் கருதப்படும். அதையே வைத்து அந்தக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் இதுவரை 991 திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த 10 தினங்களில் மேலும் 16 பேருக்கு வழங்கப்பட உள்ளன. 9 பேருக்கு பரிசீலனையில் உள்ளது.காதல் திருமணம்: காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் புரிந்தோருக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்களில் இருந்து நீக்கல் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு விதிகள் தளர்த்தப்பட்டு பெற்றோர் ரேஷன் அட்டையின் நகல் அல்லது ரேஷன் அட்டை எண், அங்காடிக் குறியீட்டு எண், பெற்றோர் பெயர்,ரேஷன் அட்டையின் முகவரி, பெற்றோர்கள் குடியிருக்கின்ற முகவரி, திருமணப் பதிவுச் சான்று அளிக்க வேண்டும். இவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துத் தர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் தங்குகிற இடங்களுக்குச் சென்று விசாரணை செய்யப்பட்டு உரியவர்களுக்கு 60 நாளில் அட்டை வழங்கப்படும் என்றார் எ.வ.வேலு.

Read more »

அட்சய திரிதியை: அலட்சியம் வேண்டாம்!


கடலூர் நகைக்கடை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் தங்க நகைகள்.
கடலூர்:

            வரும் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திரிதியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் சுபதினம். அண்மைக் காலமாகத் தான் அட்சய திரிதியை அனைவராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. நகைக் கடைகள் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே நகைகளைச் சேமிக்கத் தொடங்கிவிட்டன. மக்களும் தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விட்டனர்.  நகைக் கடைகள் போட்டிபோட்டு செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும்,  செய்தித்தாள்களில் துண்டுப் பிரசுரமாக இணைத்தும், அலங்கார நகைகளை அணிந்த நடிகைகளின் புகைப்படங்களை கவர்ச்சியுடன் அச்சிட்டும், மக்களை ஈர்க்கும் விளம்பரங்களை அள்ளித் தெளித்து வருகின்றன.அட்சய திரிதியை தினத்தில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கினால், ஆண்டு முழுவதும் வளம் கொழிக்கும் என்பது நம்மில் பலரது நம்பிக்கை. நம்பிக்கை வேண்டியதுதான்; 
 
                       நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் நம்பிக்கையை பயன்படுத்தி நம்மை யாரும் ஏமாற்றவிடக் கூடாது என்பதில், நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும்?வசதி படைத்தவர்கள் அட்சய திரிதியை தினத்தில் நகைக் கடைகளுக்குச் சென்று நகை வாங்குவதில் சங்கடம் எதுவும் இருக்காது. ஆனால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நிலை... பலர் வட்டிக்குக் கடன் வாங்கியும், சேமிப்பில் இருந்து பணம் எடுத்தும், நண்பர்களிடம் கைமாற்று வாங்கியும், தண்டலுக்குப் பணம் வாங்கியும் அட்சய திரிதியையில் நகை வாங்கிட முடிவெடுக்கிறார்கள். அப்படியெனில் அவர்கள் எத்தகைய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.முறையான ரசீது செய்கூலி, சேதாரம் எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்து கொண்டு தங்கம் வாங்க வேண்டும். துண்டுச் சீட்டுகளில் எழுதிக் கொடுக்கும் எஸ்டிமேட், விலைப் பட்டியல் போன்றவை அந்தக் கடைக்காரருக்கு மட்டுமே ஏற்புடையது. ஏதேனும் பிரச்னை வந்தால் நுகர்வோர் நீதிமன்றம் செல்ல அது போதாது. முறையான ரசீது வேண்டும். அதனை நாம்தான் கேட்டு வாங்க வேண்டும். 
 
               ரசீது வழங்கினால் வரி செலுத்த வேண்டும் என்பார்கள். நகைகளுக்கு ஒரு சதம் வரி வசூலிக்கப்படுகிறது. அரசுக்கு வரி செலுத்துவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் கடமை. நாம் விற்பனை வரி செலுத்துவதன் மூலம் மாநில அரசுக்கு வருவாயும், சம்பந்தப்பட்ட கடைக்காரரை முறையான வருமான வரி செலுத்தவும் வைக்க முடியும். அட்சய திரிதியை தினத்துக்கென்றே தனிப்பட்ட தயாரிப்பு நகைகளை பல நகைக் கடைக்காரர்கள் விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். அட்சய திரிதியை தினத்தில் பெரும்பாலான நகைக் கடைகளில், எள் விழுந்தால் எண்ணை ஆகிவிடும் அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது. கால்கடுக்க நின்று வாங்கிய தங்கம், தரமற்றதாக இருந்தால் என்ன பயன் எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தரமற்ற நகைகளை விற்பனை செய்வது சட்ட விரோதம். ஹால்மார்க் முத்திரை தங்க நகைகளை வாங்கும்போது அவற்றை விற்பனை செய்யும் கடை முத்திரை, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 
 
               ஹால் மார்க் முத்திரையிலும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை, துல்லிய எண், சோதனைச் சாலை எண், நகை தயாரித்தவரது பதிவு எண், தயாரித்த ஆண்டு இவைகள் எல்லாம் இருக்க வேண்டும்.ஹால்மார்க் முத்திரையிலும் 12 கேரட் முதல் 22 கேரட் வரை உள்ளது. எத்தனை கேரட்டுக்காக வழங்கப்பட்ட ஹால்மார்க் முத்திரை என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட ஹால்மார்க் தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 70 சதம் நகைகள் தரம் குறைந்ததாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கம் வாங்குவதில் அவசரம் வேண்டாம். தரமான தங்கத்தை என்றும் வாங்கலாம் என்கிறார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன். கடைகளில் வாங்கப்பட்ட நகைகளில் தரம் குறித்த பிரச்னை எழுந்தால், ரசீது இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் பிரச்னை எழுந்தால் உதவி இயக்குநர், இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (ஆஐந) சி.ஐ.டி. காம்பஸ், 4-வது குறுக்குத் தெரு, சென்னை 113 என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்குதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு கடலூரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) விழிப்புணர்வுப் பிரசாரம் செய்கிறது.

Read more »

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு


            பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 14) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 7.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதைத்தொடர்ந்து 44 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. இப்போது மதிப்பெண் விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, சிடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும் இணையதளம், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Read more »

விளைபொருளை பாதுகாக்க எளியவழி களிமண் பத்தையம்


பயிர்களை பாதுகாக்கும் பாரம்பரியமிக்க களிமண் பத்தையம்.
சிதம்பரம்:
 
             கடந்த சில ஆண்டுகளாக வேளாண் சந்தைகளில் தொடர்ச்சியாக உள்ள விலை ஏற்றத்தின் பலன்களை விவசாயிகள் பெற முடியவில்லை. அந்தப் பலன்களை இடைத் தரகர்கள், வியாபாரிகள், கமிஷன்தாரர்கள் பெற்று வருகின்றனர். இதனைத் தவிர்த்து விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை பாதுகாத்து விற்பனை செய்து அதிக லாபம் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் விரிவாக்கப் பணியாளர்கள் அதிகளவில் விவாதித்து வருகின்றனர். 
 
                இந்நிலையில் பாரம்பரியமிக்க களிமண் பத்தையம் உள்ளிட்ட பல்வேறு எளிய தொழில்நுட்பங்கள் மூலம் நெல் மற்றும் பயறு வகை விளை பொருள்களை பாதுகாத்து வேளாண் சந்தையில் விலை உயரும் சமயத்தில் அவற்றை விற்று அதிக லாபம் பெறலாம்.களிமண் பத்தையம்: சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து தங்களது விளை பொருள்களை இயற்கை சீற்றங்கள், வன விலங்குகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவும், சாலை வசதி இல்லாத கிராமங்களில் குறைந்த அளவே போக்குவரத்து வசதிகள் உள்ள காரணத்தால் பாரம்பரிய முறையை பின்பற்றி விவசாயிகள் பெரிதும் பயன் அடையலாம். குறிப்பாக வன விலங்குகள் அதிகம் காணப்படும் கடலோரப் பகுதிகளிலும், ஆதிவாசிகள் வசிக்கும் காடுகள் அடங்கிய பகுதிகளிலும் அதிகளவில் இந்த களிமண் பத்தையங்களை பயன்படுத்தலாம்.
 
தயாரிப்பது எப்படி: 
 
               சிறு தானியங்கள், பயறு வகை தானியங்கள், தீவனப் பயிர்கள் அதிகளவில் பாதுகாக்கப் பயன்படும் பாரம்பரிய களிமண் பத்தையங்களை சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற குயவர்கள் இணைந்து செய்கின்றனர்.குயவரின் உதவி: வேளாண் சாகுபடிப் பணிகள் முடிந்த பின் வேளாண் விளைபொருள்களை எளிதான முறையில் குறைந்த செலவில் பாதுகாக்க தங்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள நல்ல வடிகால் வசதியுள்ள நிலம் தேர்வு செய்யப்படுகிறது. பின்னர் நிலம் உழவியல் மற்றும் வேளாண் பணிகள் வாயிலாக சமன் செய்யப்படுகிறது. பின்னர் கருங்கல் கொண்ட ஒரு அடித்தளம் அமைக்கப்படுகிறது. 
 
              பின்னர் நிலத்துக்கு சற்று தொலைவில் குழிகள் தோண்டி களிமண் கலவையைக் கொண்டு குயவர்கள் உதவியுடன் ஒரு பெரிய பானை வடிவில் தங்களின் விளைபொருள் அளவு, தேவையை கருத்தில் கொண்டு ஒரு பத்தையம் அமைக்கப்படுகிறது.இவ்வாறு அமைக்கப்படும் களிமண் பத்தையம் விளைபொருள்களின் தன்மைக்கேற்ப உறுதியான வடிவமைப்புடன், கனத்துடன் தேவைப்படும் காலத்திற்கேற்ப அமைக்கப்படுகிறது. பின்னர் வானிலை அல்லது வெப்பத்தின் அளவின்படி இரண்டு முதல் ஒரு வார காலம்  காயவைக்கப்படுகிறது. 
 
                  கோடை மழை அல்லது மழை பெய்யும் நிலை காணப்பட்டால் விவசாயிகள் களிமண் பத்தையத்துக்கு அருகில் புகை மூட்டம் போட்டு காய வைக்கும் பழக்கமும் உள்ளது. பின்னர் களிமண் பத்தையம் நன்றாக காய்ந்த உடன் விவசாயிகள் விளைப் பொருள்கள் பத்தையத்தின் உள்ளே வைக்கப்பட்டு வேப்ப இலைகளுடன் கலந்து பாதுகாக்கப்படுகிறது. பின்னர் களிமண் பத்தையம் முழுவதும் விவசாய பொருள்கள் கொண்டு நிரம்பிய உடன் களிமண் கலவை கொண்டே காற்றுக்கூட புகாமல் மூடப்படுகிறது. பின்னர் மழை, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க கூம்பு வடிவில் தென்னை மற்றும் பனை இலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் கொண்டு மூடப்படுகிறது. சில விவசாயிகள் தண்ணீர் வடிய பாலிதீன் அல்லது பிளாஸ்டிக் சாக்குகளை பத்தையத்தின் மேல் போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
 
பிற பயன்கள்: 
 
               குறைந்த செலவில் சிறு மற்றும் குறு விவசாயிகள் நீண்டநாள் தங்களின் விளை பொருள்களை பாதுகாத்து வேளாண் சந்தைகளில் விற்று அதிக லாபம் பெற முடியும்.  போக்குவரத்து வசதிகள் இல்லா தமிழக கிராமங்களில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் வரும் வரை விளைப் பொருள்களை பாதுகாக்க உதவுகிறது. வன விலங்குகள், இயங்கை சீற்றங்கள் போன்றவற்றிலிருந்து தங்களது விளை பொருள்களை பாதுகாக்க உதவுகிறது. பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்காமல் சேமிக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகிறது. எனவே தமிழக விவசாயிகள் அறுவடைக் காலத்தில் வேளாண் சந்தைகளில் குறைந்த விலையில் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்யாமல் குறைந்த செலவில் பாதுகாத்து வேளாண் சந்தையில் அதிகளவில் விலை ஏற்படும் போது விற்பனை செய்ய இது போன்ற பாரம்பரியமிக்க களிமண் பத்தையம் உறுதுணையாக இருக்கும் என அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறுகிரார்.

Read more »

சுட்​டெ​ரிக்​கும் வெயில்: சில்வர் பீச்சில் அதிக கூட்டம்

கட​லூர்:

                     கட​லூ​ரில் புதன்​கி​ழமை வெயில் கடு​மை​யா​கச் சுட்​டெ​ரித்​தது.​ ​கடலூரில் சுனாமி பீதி​யு​டன் கத்​திரி வெயில் தொடங்கி இருக்​கி​றது.​ ஒரு வாரத்துக்கு முன் பெய்த கோடை மழை​யால்,​​ தொடக்​கத்​தில் வெப்​பம் குறைந்து காணப்​பட்​டது.​ எனி​னும் கத்​திரி வெயில் தொடங்​கி​ய​தும் வெயில் தகிக்​கத் தொடங்​கி​விட்​டது.​

                இப்​போதே வெளி​யில் தலை​காட்ட முடி​யாத அள​வுக்கு வெயில் சுட்டெரிக்​கத் தொடங்கி இருக்​கி​றது.​ கட​லோர நக​ர​மாக இருந்​த​போ​தி​லும்,​​ கட​லூ​ரில் வெயில் கடு​மை​யா​கவே உள்​ளது.​ எத்​தனை கடற்​காற்று வீசி​னா​லும் வெப்​பக் காற்​றின் தாக்​கத்தை ஒன்​றும் செய்ய முடி​ய​வில்லை.​ ​ மின் விசி​றி​கள் எவ்​வ​ளவு வேகத்​தில் சுழன்​றா​லும் வியர்​வைக் குளிய​லில் இருந்து மீள​மு​டி​யாத வெப்ப நிலை காணப்​பட்​டது.​ ​

                 க​ட​லூ​ரில் வெயில் அளவு 98 டிகி​ரி​யாக இருந்​த​போ​தி​லும்,​​ வெயி​லின் தாக்​கம் அதி​க​மா​கவே காணப்​பட்​டது.​ வெப்​பத்​து​டன் வியர்வை அதி​க​ரிப்​பும் உடல்​ந​லத்தை பெரி​தும் பாதிக்​கும் வகை​யில் அமைந்து விடு​கி​றது.​ காலை 6-30 மணி​யில் இருந்தே வெயி​லின் தாக்​கம் தொடங்கி விடு​கி​றது.​ இத​னால் காலை நேரத்​தில் நடைப்​ப​யிற்சி செல்​வோர்​கூட மிகுந்த பாதிப்​புக்கு உள்​ளா​யி​னர்.​ ​÷அ​திக வெப்​பம் கார​ண​மாக கட​லூர் வீதி​க​ளில் பகல் நேரத்​தில் மக்​கள் கூட்​டம் குறைந்து காணப்​பட்​டது.​ இரு​சக்​கர வாக​னங்​க​ளில் செல்​வோர் பலர் தொப்பி அணி​யத் தொடங்கி விட்​ட​னர்.​ பலர் ​ முகத்​தில் கைத்​துண்​டு​க​ளைக் கட்​டிக் கொண்​டும் பய​ணிப்​ப​தைப் பார்க்க முடி​கி​றது.​ ​வெப்​பத்​தின் தாக்​கம் அதி​க​ரித்து உள்ள நிலை​யில்,​​ தொடர்ந்து அதி​க​ரித்து வரும் மின்​வெட்டு,​​ மக்​களை மேலும் வாட்டி வதைப்​ப​தாக உள்​ளது.​ ​ கட​லூர் சில்​வர்​பீச்​சில் புதன்​கி​ழமை கூட்​டம் அதி​க​மா​கக் காணப்​பட்​டது.​ கட​லில் குளிக்க வேண்​டாம் என்ற காவல் துறை​யின் எச்​ச​ரிக்​கை​யை​யும் புறம் தள்​ளி​விட்டு,​​ பெரி​ய​வர்​கள் முதல் சிறி​ய​வர்​கள் வரை ஏரா​ள​மா​னோர் கட​லில் குளித்து மகிழ்ந்​த​னர்.

Read more »

கோடை விடு​மு​றை​யி​லேயே ​பள்ளி மாண​வர்​க​ளுக்கு இல​வச பாட நூல்​கள்

சிதம்​ப​ரம்:

                   அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயி​லும் அனைத்து மாணவ,​​ மாண​வி​க​ளுக்​கும் இல​வச ​ பாட நூல்​களை தமி​ழக அரசு வழங்கி வரு​கி​றது.​ இந்த கல்வி ஆண்​டுக்​கான பாடப் புத்​த​கங்​கள் பள்​ளி​க​ளில் தேர்வு முடி​வு​கள் வெளி​யி​டப்​பட்​ட​வு​டன் ​ அனை​வ​ருக்​கும் வழங்கப்​ப​டும் என கட​லூர் மாவட்ட முதன்மை கல்வி அலு​வ​லர் அமு​த​வள்ளி அறி​வித்​தார்.​ 

                       இ​த​ன​டிப்​ப​டை​யில் பள்ளி தேர்வு முடி​வு​கள் சனிக்​கி​ழமை வெளியிடப்பட்ட நிலை​யில் ​ சிதம்​ப​ரம் அரசு மேல்​நி​லைப் பள்ளி,​​ ராம​கிருஷ்ணாவித்யா​சாலை மேல்​நி​லைப் பள்ளி,​​ ஆறு​மு​க​நா​வ​லர் மேல்​நி​லைப் பள்ளி உள்​ளிட்ட அனைத்து பள்​ளி​க​ளி​லும் பாடப் புத்​த​கங்​கள் வழங்​கும் பணி தொடங்​கப்​பட்​டது.​ 1-ம் வகுப்பு மற்​றும் 6-ம் வகுப்​பு​க​ளுக்கு சமச்​சீர்​கல்வி பாடத்​திட்​டம் என்​ப​தால் அவர்​க​ளுக்கு புத்​த​கங்​கள் இன்​னும் வழங்​கப்​ப​ட​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​ பள்​ளி​கள் திறக்​கப்​ப​டும் முன் கோடை விடு​மு​றை​யி​லேயே புத்​த​கங்​கள் வழங்​கப்​பட்​ட​தால் மாணவ,​​ மாண​வி​கள் மிகுந்த ஆர்​வத்​து​டன் அவற்றை வாங்​கிச் சென்​ற​னர்.

Read more »

மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக ​ரயில்​களை இயக்​கக் கோரிக்கை

கட​லூர்L

                         அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் பயி​லும் மாண​வர்​க​ளுக்கு வச​தி​யாக பாசஞ்​சர் ரயில்​க​ளின் நேரங்​களை மாற்றி அமைக்க வேண்​டும்,​​ கூடுதல் ரயில்​களை இயக்க வேண்​டும் என்று,​​ ரயில்வே இலா​கா​வுக்​குத் தென்​னக ரயில்வே பய​ணி​கள் ஆலோ​ச​னைக்​குழு உறுப்​பி​னர் முனை​வர் பி.சிவ​கு​மார் கோரிக்கை விடுத்​துள்​ளார்.​ ​

ரயில்வே பய​ணி​கள் ஆலோ​ச​னைக்​குழு உறுப்​பி​னர் முனை​வர் பி.சிவ​கு​மார் ரயில்வே பொது மேலா​ள​ருக்கு புதன்​கி​ழமை அனுப்​பிய கோரிக்கை மனு:​ ​ ​

                அகல ரயில்​பா​தைத் திட்​டம் நிறை​வேற்​றப்​பட்ட பின்​னர்,​​ கட​லூர் திருப்பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தில் எக்ஸ்​பி​ரஸ் ரயில்​கள் நிற்​கா​மல் செல்வது பய​ணி​களை பெரி​தும் பாதிக்​கி​றது.​ துறை​மு​கம் சந்​திப்பு ரயில் நிலையம் சென்று எக்ஸ்​பி​ரஸ் ரயில்​க​ளைப் பிடிப்​பது மக்​க​ளுக்​குச் சாத்​தி​யமாக இல்லை.​ இத​னால் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யத்​தின் வரு​வாய் வெகு​வா​கப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது.​ 50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக அனைத்து எக்ஸ்​பிஸ் ரயில்​க​ளும் நிற்​கும் ரயில் நிலை​ய​மாக இருந்து வந்​துள்​ளது திருப்பாப்பு​லி​யூர்.​ 

            திரு​வந்​தி​பு​ரம் தேவ​நா​த​சு​வாமி கோயில்,​​ திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயில் ஆகி​ய​வற்​றுக்​குச் சென்​று​வ​ரும் ஆயி​ரக்​க​ணக்​கான பக்​தர்​க​ளுக்​கும்,​​ சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்​கும்,​​ தின​மும் சென்னை செல்​லும் பய​ணி​க​ளுக்​கும்,​​ திருப்​பாப்பு​லி​யூர்,​​ பண்​ருட்டி,​​ தாம்​ப​ரம் ரயில் நிலை​யங்​க​ளில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்​கள் நிற்​கா​தது பெருத்த ஏமாற்​ற​மாக உள்​ளது.​ அண்ணாமலைப் பல்​கலைக்​க​ழக மாண​வர்​கள் மற்​றும் அலு​வ​ல​கங்​க​ளுக்​குச் செல்​வோருக்கு வச​தியாக,​​ விழுப்​பு​ரம் மயி​லா​டு​துறை இடையே முன்பு காலை​யில் 2 ரயில்​க​ளும் மாலை​யில் 2 ரயில்​க​ளும் இயக்​கப்​பட்​டன.​ தற்​போது காலை,​​ மாலை தலா ஒரு ரயில் மட்​டுமே இயக்​கப்​ப​டு​வது மாண​வர்​க​ளுக்​கும் அல​வ​லகம் செல்​வோ​ருக்​கும் போது​மா​ன​தாக இல்லை.​ ரயில்​க​ளின் இயக்க நேரங்களும் ஏற்​ற​தாக இல்லை.​ எனவே கூடு​த​லாக இரு பாசஞ்​சர் ரயில்​களை சரியான நேரத்​தில் இயக்க வேண்​டும் என்​றும் சிவ​கு​மார் மனு​வில் குறிப்​பிட்​டுள்​ளார்.

Read more »

விருத்​தா​ச​லத்​தில் காலா​வதி உண​வுப் பொருள்​கள் பறி​மு​தல்

விருத்​தா​ச​லம்:

              விருத்​தா​ச​லத்​தில் இரண்​டா​வது நாளாக காலா​வதி உண​வுப் பொருள்களை நக​ராட்சி அலு​வ​லர்​கள் பறி​மு​தல் செய்​த​னர்.​ வி​ருத்​தா​ச​லம் கடை​வீதி முல்​லாத்​தோட்​டம் பகு​தி​யில் உள்ள கடை ஒன்​றில் நக​ராட்சி துப்​பு​ரவு ஆய்வாளர் பர​ம​சி​வம் தலை​மை​யில் மேற்​கொண்ட ஆய்​வில்,​​ தகுதி நாள் முடிந்த மற்றும் தேதி,​​ முத்​தி​ரை​யி​டப்​ப​டாத 20 மூட்டை குடி​நீர் பாக்​கெட்​டு​கள் பறி​மு​தல் செய்​யப்​பட்​டன.​ மேலும் தேதி மற்​றும் முத்​தி​ரை​யில்​லாத உலர் பழங்​க​ளும் கைப்​பற்​றப்​பட்​டன.​ இனி காலா​வ​தி​யான பொருள்​களை விற்​பனை செய்​தால் கடு​மை​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என துப்​பு​ரவு அலு​வ​லர் பர​ம​சி​வம் எச்​ச​ரித்​தார்.​ ஆய்​வின்​போது துப்​பு​ரவு ஆய்​வா​ளர்​கள் சிவப்​பி​ர​கா​சம்,​​ ராஜ்​கு​மார்,​​ பால​மு​ரு​கன்,​​ துப்​பு​ரவு மேற்​பார்​வை​யா​ளர்​கள் முத்​த​மி​ழன்,​​ ஆறு​மு​கம்,​​ செல்​வம்,​​ சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

Read more »

50 சத​வீத மானி​யத்​தில் ஜிப்​சம் கிடைக்​கும்

நெய்வேலி:

                  தேசிய வேளாண் வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ் விருத்​தா​ச​லம் வேளாண்மை விரி​வாக்க மையத்​தில் தற்​போது ஜிப்​சம் மற்​றும் ஜிங்க்​சல்​பேட் இருப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.​ தேவைப்​ப​டும் விவ​சா​யி​கள் அர​சின் 50 சத​வீத மானியத்​தில் உரங்​களை பெற்று பய​ன​டை​யு​மாறு வட்​டார வேளாண்மை உதவி இயக்​கு​நர் அன்​ப​ழ​கன் கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.


Read more »

Free textbooks to be dispatched soon

CUDDALORE: 

           Free textbooks for 2010-2011 will soon be sent by post to 2,117 schools in the district, according to Collector R. Palanisamy. During a review meeting with officials of the Education Department held here, the Collector said 4.5 lakh students in primary, middle, high and higher secondary schools would benefit from the free textbook scheme.

Read more »

Two suspended

CUDDALORE:

            Vegakollai panchayat assistant R. Muthukumaran and Makkal Nala Paniyalar S. David Imanuel have been placed under suspension for malpractices in the implementation of Mahatma Gandhi Rural Employment Guarantee Programme, Collector P. Seetharaman said in a statement Criminal proceedings were initiated against the two persons and the panchayat president and the vice-president.

Read more »

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பிரசார பயணம் துவக்கம்

சிதம்பரம் : 

           சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது.

              சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் போலீஸ் நண்பர்கள் குழுவினர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பிரசார பயணத்தை நேற்று துவக்கினர். போலீஸ் நண்பர்கள் குழு கமாண்டர் மகேந்திரன் தலைமையில் செந்தில்குமார், அன்புச்செல்வன், வினோத்ராஜ், ராஜசெல்வம் ஆகியோரின் பிரசார பயண துவக்க விழா சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்தது. டி.எஸ்.பி,. மூவேந்தன் தலைமை தாங்கினார். நகர மன்றத் தலைவர் பவுஜியாபேகம் முன்னிலை வகித்தார். பிரசார குழுவினர் கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், அருணாசல பிரதேசம், நாகலாந்து மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, ஒரிசா, புதுச்சேரி வழியாக 14 ஆயிரத்து 600 கி.மீ., தூரம் 24 மாநிலங்கள், 86 மாவட்டங்கள் வழியாக 150 நாட்கள் பயணம் மேற்கொண்டு செப். 23ம் தேதி சிதம்பரம் திரும்புகின்றனர்.

பயணத்தை துவக்கி வைத்த விஜிலென்ஸ் (ஆவின்) ஐ.ஜி., பிரதீப் பிலிப் பேசுகையில், 

                 'போலீஸ் நண்பர்கள் குழுவில் ஒவ்வொரு பகுதி இளைஞர்களும் உள்ளதால் குற்றங்களும், மத மோதல்களும் குறைந்தது. ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் போலீசுக்கு உதவும் அமைப்புகள் உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் துவக்கப்பட்டது. இப்போது நம்மை பின்பற்றி அசாம், திரிபுரா, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் போலீஸ் நண்பர்கள் குழு துவக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்றார்.

Read more »

வரிசெலுத்தாத சரக்கு வாகனங்கள் பறிமுதல் : வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை

கடலூர் : 

             கடலூர் மாவட்டத்தில் ஓடிய 650 புதுச்சேரி மாநில பதிவு வாகனங்கள் பிடிக்கப்பட்டு, 19 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

             புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப் பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் சாலை வரிகட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓடுவதாக கிடைத்த தகவலின் பேரில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் நேற்று வரை 650 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 19 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் 2,400 சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலானவர்கள் வரி செலுத்தவில்லை. அடுத்த 15 நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை எனில் வாகனங்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மின்வாரியத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

கடலூர் : 

              கடலூர் மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

             கடலூர் புதுப்பாளையத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள இளமின் பொறியாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திருச்சி மின்வாரிய லஞ்ச ஒழிப்பு பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பணியில் இருந்த இளமின் பொறியாளர் திருவரசுவை டி.எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் தனி அறையில் வைத்து விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவிராம், கடலூர் புதுப்பாளையம் இளமின் பொறியாளர் திருவரசு ஆகியோர் நேற்று சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இச்சம்பவம் மின்வாரிய ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

விளை நிலங்களை மனைகளாக மாற்றுவது அதிகரிப்பு! : விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம்

சிறுபாக்கம் : 

                தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டு வருவதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

              கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் மல்லி, பருத்தி, மக்காச்சோளம், மணிலா, வரகு உள்ளிட்ட பயிர்கள் விளைவித்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவம் தவறிய மழை, பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர் செய்வதில் ஆர்வமின்றி இருந்தனர். பல தடைகளை மீறி பயிரிட்ட விவசாயிகளும் இயற்கை சீற்றம் காரணமாக போதிய விளைச்சல் இன்றி நஷ்டமடைந்தனர்.

              இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை வந்த விலைக்கு விற்று விட்டு வேறு தொழிலுக்கு மாறினர். பலர் குடும்பத்தை கிராமத்தில் விட்டுவிட்டு வேலை தேடி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வேப்பூர் வழியாக செல்லும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள வேப்பூர் பகுதியில் கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் நிலங்கள் விலை குறைவாக கிடைப்பதால் பெரும் தொழிலதிபர்கள் தங்களின் எதிர்கால தேவைக்காக விளை நிலைங்களை வாங்கினர். இதனை அறிந்த கோவை, ஈரோடு, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முதலாளிகள் இப்பகுதியில் முகாமிட்டு வேப்பூர், ஐவதுகுடி, கண்டப்பங்குறிச்சி, பெரியநெசலூர், நாரையூர், ராமநத்தம், வெங்கனூர், கழுதூர், ஆவட்டி கூட்டுரோடு, மங்களூர், விருத்தாசலம் - சேலம் நெடுஞ்சாலையில் விளம்பாவூர், அடரி, சிறுபாக்கம் பகுதிகளில் சாலையோரம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களை விலைக்கு வாங்கி மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

                  இதற்கு முன் ஒரு ஏக்கர் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நிலங்களுக்கு 3 முதல் 10 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி பிளாட் போட்டுள்ளனர். அனைத்து வசதிகளும் உள்ளதாக தெரிவித்தும், அபிரிமிதமான பரிசுகளை அறிவித்தும் வியாபாரம் செய்கின்றனர். மானாவாரி நிலங்களே கூடுதல் விலை போவதால், இப்பகுதியில் நீர் பாசனத்துடன் நன்கு விளைச்சல் உள்ள நிலங்களையும் ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் விற்க விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். இதனால் ஓரிரு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வேப்பூர், கழுதூர், ஐவதுகுடி, ராமநத்தம் பகுதிகளில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் பிரதான உப தொழிலாக விளங்கி வரும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நன்கு விளைச்சல் தரக்கூடிய நிலங்களை மனைகளாக மாற்றுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


Read more »

சிதைந்து போன சி.சாத்தமங்கலம் ஊராட்சி சாலை

சி.சாத்தமங்கலம்:

               சி.சாத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சக்திவிளாகம் கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ. சாலை கடந்த ஓராண்டு காலமாக சின்னாபின்னமாகி கிடப்பதால் சக்திவிளாகம் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சக்திவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்றால் சி.சாத் தமங்கலம் வந்து தான் பஸ் ஏற வேண்டும். இல்லையேல் வெள்ளாற்றின் சுடுமணலில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தால் சேத்தியாத்தோப்பிற்கு வரலாம்.

              கிளாங்காடு - சக்திவிளாகம் இடையே மரப்பாலம் அல்லது போக்குவரத்து பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து ஓய்ந்து போய் விட்டனர். என்றாலும் இக்கிராமத்திற்கு செல்ல இருக்கும் ஒரே போக்குவரத்து சாலை சாத்தமங்கலத்திலிருந்து தான் உள்ளது. இச்சாலை வெள்ளம் வரும் போதெல்லாம் வீணாகும். பிறகு சாலை போட திட்டம் உருவாக்கப்படும். அந்த திட்டம் நிறைவேறியதும் மீண் டும் 3 மாதத்தில் சாலை காணாமல் போகும். தற்போது சாலை முற்றிலுமாக சிதைந்து நடந்து சென்றால் கூட பாதசாரிகள் பாதங்களை பதம் பார்க்கும் கருங்கற்கள் சிதறி கிடக் கிறது.

                 ஆனால் அதிகாரிகளோ அச்சாலையை கண்டு கொள்ளவே மறுக்கின்றனர். தற்போதும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஓராண்டு முடிந்தும் சாலை போடப்படவில்லை. சாலை போட கொண்டு வந்து கொட்டப்பட்ட ஜல்லிகள் தினமும் போகும் இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஜல்லி கொட்டப்பட்டுள்ளதால் இன்று சாலை போடுவார்கள் நாளை தார் போடுவார்கள் என எதிர்பார்த்து மக்கள் ஏமாற்றத்திற்குள்ளானது தான் மிச்சம். சாலை மட்டும் போட்ட பாடில்லை. சக்திவிளாகம் கிராம மக்கள் சாலை சீர்கேட்டை கண்டித்து போராட்டம் நடத்தும் முன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


Read more »

நடுவீரப்பட்டில் இருக்கும் கட்டடங்களை விட்டு விட்டு மீண்டும் கட்ட இடம் தேர்வு

நடுவீரப்பட்டு : 

              சி.என்.பாளையம் ஊராட்சியில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நூலகம், அரசு நடுநிலைப் பள்ளி கழிவறை உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படாமல் மீண்டும் அதே கட்டடங்கள் கட்ட இடம் தேர்வு செய்து மக்கள் வரிப்பணத்தை அதிகாரிகள் பாழாக்கி வருகின்றனர்.

               பண்ருட்டி அடுத்த சி. என்.பாளையம் ஊராட்சி காலனியில் கடந்த 1996ம் ஆண்டு எம்.பி., நிதியில் நூலக கட்டடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப் பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறப்பு விழா நடத்தப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. அதேப்போன்று மழவராயநல்லூர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முழு ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டப்பட்டது. இதன் மிக அருகிலேயே ஊராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் கழிவறைக்கு தண்ணீர் இணைப்பு வழங்காததால் கழிவறையை ஆசிரிய, ஆசிரியைகள் பயன்படுத்த முடியாத நிலையில் கதவுகளையும் சமூக விரோதிகள் திருடி சென்று விட்டனர். மீண்டும் கடந்த 1999 - 2000ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் ரூபாயில் கழிவறை கட்டப்பட்டு அதுவும் பயன்படுத்த முடியாமல் பாழாகியது. இந்நிலையில் தற் போது மீண்டும் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது. கட்டடங்கள் கட்டப்பட்டு திறப்பு விழா காணப்படாமலும், முறையாக பராமரிக்காமலும் வீணாகி வருவதும் மீண்டும் அதே போன்று கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இடம் தேர்வு செய்வதும் என அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி வருகின்றனர்.

Read more »

பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு கோரிக்கை

பண்ருட்டி : 

          பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் காங்., கோரிக்கை விடுத்துள்ளது.

பண்ருட்டி தொகுதி இளைஞர் காங்., தலைவர் லிஸி ஜோஸ்பின் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

                பண்ருட்டி நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இல்லாததால் பண்ருட்டியைச் சுற்றியுள்ள அங்குசெட்டிப்பாளையம், கண்டரக்கோட்டை, பூங்குணம், திருவதிகை பள்ளி மாணவிகள் மேல் நிலை படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டம், கட்டாய கல்வி திட்டம் ஆகியவை கொண்டு வந்துள்ள நிலையில் பண்ருட்டியில் அரசு மேல்நிலைபள்ளி இல் லாதது வருந்தத்தக்கது. கடந்த 20 ஆண்டுகால கோரிக்கையை கல்வித் துறை சிறிதளவு கூட பரிசீலனை செய்து பள்ளி ஏற்படுத்த முயற்சி எடுக்கவில்லை.  இதனால் ஒவ்வொரு ஆண்டும் 1,500 மாணவிகள் பள்ளி படிப்பை தொடர இயலாமல் வணிக நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் நிலை தான் உள்ளது. அரசு பள்ளிகளில் மட்டுமே சமத்துவ கல்வி வழங்கப்படுகிறது. முதல்வர் தனிகவனம் செலுத்தி வரும் கல்வியாண்டு முதல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இளைஞர் காங்கிரஸ் சார் பில் மாபெரும் போராட் டம் நடத்தப்படும்.

Read more »

நிறைவு பெறாத திட்டப் பணிகள்: குடிநீருக்கு அல்லாடும் சிறுபாக்கம் ஊராட்சி

சிறுபாக்கம்:

                சிறுபாக்கம் ஊராட்சியில் இரண்டு ஆண்டுகளாக குடிநீர் திட்டப்பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அல்லாடி வருகின்றனர்.

                 மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் ஊராட்சியில் சிறுபாக்கம், எஸ். மேட்டூர், நத்தகாடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளன. முதல் நிலை ஊராட்சியான இங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு அரசு மேல்நிலைப் பள்ளி, இரு தொடக்க பள்ளிகள், மூன்று தனியார் நர்சரி பள்ளிகள், இரண்டு அரசு மாணவர் விடுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு வங்கி, ஸ்டேட் பாங்க், தொலைபேசி, மின்வாரியம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

                 சிறுபாக்கம் குறு வட்ட தலைமையிடமாகவும் விளங்கி வருவதால் அருகில் உள்ள சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த எஸ். புதூர், அரசங்குடி, மாங் குளம், ஒரங்கூர், வடபாதி, எஸ்.நரையூர் உள் ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட அலுவல்களுக்கு சிறுபாக் கம் வந்து செல்கின்றனர். இவ்ஊராட்சியில் நான்கு மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வந் தது. ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட குடிநீர் கைப் பம்புகளும் அமைக்கப்பட் டன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுபாக்கம் ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க மங்களூர் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரின் கிழக்கு புறம் எஸ்.மேட்டூர் அருகில் கிணறு தோண்டி பைப் லைன் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்றி குடிநீர் வழங்க முடிவு செய்யப் பட்டது.

                அதன்படி 2008ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. நீர் ஏற்றும் மின் மோட்டார் கொட்டகை பாதி அளவிலும், ஒரு மீட்டர் அளவு மட்டும் தரை கிணறு தோண்டப்பட்டும் பாதியிலேயே பணி முழுமையடையாமல் உள்ளது. கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு பதிக்கப்படவேண்டிய பி.வி.சி.,பைப்புகள் ஊராட்சி அலுவலக வளாகத்திலேயே கேட்பாரின்றி கிடக்கிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குடிநீருக்காக மக்கள் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் மெத்தன போக்கால் மக்களுக்கு பயன்படக் கூடிய பல நல்ல திட்டங்களும் பாழடைந்து வருகிறது.

Read more »

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி விவசாய பயிற்சி

நெல்லிக்குப்பம் : 

              இயற்கை வேளாண் விஞ்ஞானி சட்டையணியா சாமியப்பன் பயிற்சி அளித்தார்.

              நெல்லிக்குப்பத்தில் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சட்டையணியா சாமியப்பன் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளித்தார். 

பயிற்சியில் திருப்பூரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி சட்டையணியா  சாமியப்பன் பேசுகையில் 

                   'திருப்பூரில் ஆடம்பர ஆடை தயாரிக்க நிலத்தடி நீரை உறிஞ்சி கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலந்து நீரை பாழாக்குகின் றனர். இதை மக்களுக்கு உணர்த்தவே சட்டையணிவதை தவிர்த்தேன். வெள்ளை ஆடைகள் அணிவதால் முடிந்தவரை மண்ணை கெடுக்காமல் இருக்க முடியும். விவசாயத்துக்கு வெளியில் இருந்து இடுபொருட் கள் எடுத்துச் செல் வதை தவிர்க்க வேண்டும். நம் நிலத்தை சுற்றியுள்ள மரங் களின் இலைகளை மாட்டுச் சாணியோடு ஊறவைத்து பாசன நீரோடு அனுப்பலாம். மாட்டு சிறுநீர், சாணத்தை அதிகளவு பயன்படுத்த வேண்டும். நிலத்திலேயே அதிக மண் புழுக்களை வரவழைக்க முயற்சி செய்ய வேண்டும். மண்புழுக்களும், நுண்ணுயிர்களும் பெருகினால் நிலத்துக்கு வேறு உரங்கள் தேவையில்லை. ரசாயன உரங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. பூச்சி மருந்துகளால் மனிதனை நோய்கள் தாக்குகின்றன. மேலும், அதிக செலவால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நம் நிலத்தில் உள்ளதை பயன்படுத்தி இயற்கையாக விவசாயம் செய்தால் மண்ணையும், சுற்றுசூழலையும் பாதுகாக்க முடியும்' என கூறினார்.

Read more »

நெல்லிக்குப்பம் இ.ஐ. டி., பாரி சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் திறப்பு

நெல்லிக்குப்பம் : 

              நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.

           நெல்லிக்குப்பம் இ.ஐ. டி., பாரி சர்க்கரை ஆலையில் மண் பரிசோதனை மையம் துவக்க விழா நடந்தது. துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மையத்தை முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி நிறுவன செயற்குழு உறுப்பினர் மகத்வராஜ் திறந்து வைத்தார். பொது மேலாளர்கள் பொன்னய்யன், துரைசாமி, மண்ணியல் நிபுணர் புஷ்பவள்ளி, கோட்ட மேலாளர் திருஞானம், பயற்சி அலுவலர் குருசாமி, விவசாய சங்கத் தலைவர் அருணாச்சலம் உட்பட பலர் பங்கேற்ற னர். குரோ மோட்டா கிராம் முறையில் மண் பரிசோதனை எளிய வழியில் துல்லியமாக நடைபெறும். 48 மணி நேரத்துக் குள் முடிவை பெறலாம். மண்பரிசோதனை முடிவின்படி தேவையான உரங்கள் அளிப்பதன் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற முடியும்.

Read more »

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்

கடலூர் : 

               பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.

            தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது. தமிழகத்தில் 206 தமிழ் ஆசிரியர் கள், ஆங்கிலம் 1,625, கணிதம் 1,382, இயற்பியல் 857, வேதியியல் 856, உயிரியல் 367, விலங்கியல் 367, வரலாறு 550, புவியியல் 122 உட்பட 6,332 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று 12ம் தேதி துவங்கி, நாளை 14ம் தேதி வரை நடக்கிறது. கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நேற்று துவங் கிய சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் முதல் கட்டமாக 420 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இப்பணியை சி.இ.ஓ., அமுதவல்லி ஆய்வு செய் தார். தலைமை ஆசிரியர் தலைமையில் 5 பேர் கொண்ட 14 குழுவினர் சான்றிதழ்களை சரிபார்க் கும் பணியில் ஈடுபட்டனர்.

Read more »

மரவள்ளியில் மஞ்சள் காரை நோய்: அதிகாரிகள் ஆய்வு

சிறுபாக்கம் : 

             வேப்பூர் பகுதியில் மரவள்ளியில் மஞ்சள் காரை நோய் தாக்குதல் ஏற்பட்டதையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

              வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் குங்கும ரோஸ், பர்மா, வெள்ளை ரோஸ் ஆகிய மரவள்ளிகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பயிர்களை மஞ்சள் காரை நோய் தாக்கியதால் செடிகள் காய்ந்தது. இதனைத் தொடர்ந்து கடலூர் தோட்டகலை துணை இயக்குனர் முகமது யாகியா தலைமையில் விருத்தாசலம் அறிவியல் நிலைய தலைவர் சுப்பிரமணியன், பேராசிரியர் இந்திராகாந்தி, வீரமணி ஆகியோர் மங்களூர், நல்லூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். வேப்பூர், காட்டுமயிலூர், மாங் குளம், அடரி உள்ளிட்ட பகுதிகளில் 300 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில் மரவள்ளி பயிரிடப்பட்டிருந்த நிலங்களில் உள்ள மண்ணில் இரும்பு சல்பேட் (அன்னபேரி உப்பு) தாது சத்து குறைபாட்டினால் மஞ்சள் காரை நோய் தாக்கியுள்ளது தெரியவந்தது.

                 இதனையடுத்து விவசாயிகளிடம் 'நோய் தாக்கிய வயல்களில் ஒரு லிட்டர் தண்ணீரில் இரும்பு சல்பேட் (அன்னபேரி உப்பு) 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம் மற்றும் யூரியா 10 கிராம் என்ற விகிதத்தில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் செய்து கை தெளிப்பான் மூலம் ஒரு வார இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். அல்லது இரும்பு சல்பேட் 5 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து மரவள்ளி செடிகளுக்கு அடியில் இடைவெளி விட்டு வைத்து நீர்பாய்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தினர். ஆய்வின்போது தோட்டகலை உதவி இயக்குனர்கள் அமிர்தலிங்கம், ரமணன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

விலைவாசி உயர்வே அரசின் சாதனை : தெருமுனை கூட்டத்தில் சம்பத் பேச்சு

நெல்லிக்குப்பம் : 

              விலைவாசி உயர்வே தமிழக அரசின் சாதனை என சம்பத் கூறினார். நெல்லிக்குப்பம் நகர அ.தி.மு.க., சார்பில் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் சவுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன், மனோகர், ஜின்னா, சரவணன், ரங்கராஜன், ரவிசந்திரன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சம்பத் பேசுகையில் 

                'மின்வெட்டால் தொழில்கள் நலிவடைந்து தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வரலாறு காணாத அளவு விலை உயர்ந்துள்ளதே கருணாநிதி அரசின் சாதனை. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் தமிழக அரசுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அந்தளவுக்கு நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளது' என்றார்.

Read more »

அஞ்சலகங்களில் தங்க நாணயம் சிறப்பு விற்பனை

கடலூர் : 

           அக்ஷய திருதியை முன்னிட்டு அஞ்சலகங்களில் வரும் 16ம் தேதி முதல் சிறப்பு தள்ளுபடியில் தங்க நாணயம் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் விடுத் துள்ள செய்திக்குறிப்பு: 

                 இந்திய அஞ்சல் துறையும், ரிலையன்ஸ் மணி நிறுவனமும் இணைந்து கடலூர் கோட்டத்தில் கடலூர் மற்றும் சிதம்பரம் அஞ்சலகங்களில் கடந்த ஓராண்டாக 24 காரட் தங்க நாணயம் அரை கிராம், 1, 5 மற்றும் 8 கிராம் எடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தங்க நாணயங்களில் அஞ்சல் துறை முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். தற்போது அக்ஷய திருதியை முன்னிட்டு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை அஞ்சலகங்களில் வாங்கப்படும் தங்க நாணயங்களுக்கு 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சுகாதார சீர்கேட்டை தடுக்க கலெக்டருக்கு கோரிக்கை

சிதம்பரம் : 

              சிதம்பரம் தில்லை நடராஜா நகரில் புதை சாக்கடை இல்லாமல் கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடாக இருப்பதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் தி.மு.க.,வக்கீல் பிரிவு அமைப்பாளர் சீத்தாராமன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

               சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட் பட்ட தில்லை நடராஜா நகரில் 1,000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவு நீர் செல்ல புதை வடிகால் திட்டம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால் கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் எல்லா காலத்திலும் கொசு அதிகரித்துள்ளது. இது குறித்து நகராட்சிக்கு கோரிக்கை வைக்கும் போதெல்லாமல், புதை வடிகால் திட்டம் வருகிறது என பல ஆண்டுகளாக காரணம் காட்டி புறக்கணிக்கிறது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கும் போதே புதை வடிகால் வைப்புத் தொகையாக 5,000 ரூபாய் பெற்றுக் கொள்கிறது. இந்நிலையில் தில்லை நடராஜா நகருக்கு சிமென்ட் சாலை அமைக்கும் முயற்சி நடக்கிறது. எனவே புதை வடிகால் சாக்கடை திட்டத்தையும் சிமென்ட் சாலையுடன் சேர்த்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

'கான்கிரீட்' வீடு திட்ட கணக்கெடுப்பு விடுபட்டவர்கள் முறையீடு செய்யலாம்

விருத்தாசலம் :

            'கான்கிரீட்' வீடு திட்ட கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம்.

இதுகுறித்து விருத்தாசலம் பி.டி.ஓ.,க்கள் ஆதிலட்சுமி, கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 

                  கான்கிரீட்' வீடு திட்டத் தின் கீழ் கணக்கெடுப்பு பணி முடிவுற்ற கிராமங்களில் கூரை வீட்டில் குடியிருப்பவர்களின் வீடுகள் கணக்கெடுப்பில் விடுபட் டிருந்தால் பி.டி.ஓ., விடம் அல்லது பி.டி.ஓ., அலுவலகத்தில் முறையீடு விண்ணப்பம் அளிக்கலாம். வரும் 15 ம் தேதிக்குள் முறையீடு விண்ணப்பங்களை அளிக்கவேண் டும் என தெரிவித்துள்ளனர்.

Read more »

சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல கோரிக்கை

விருத்தாசலம் : 

            சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நிற்க வர்த்தகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: 

                திருச்சி ரயில்வே கோட்டத்தில் விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் முக்கியமானது. விருத்தாசலத்திலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். எனவே சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லவும், கடலூரில் இருந்து விருத்தாசலம், சேலம் வழியாக பெங்களூர் மற்றும் கோயமுத்தூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் தினசரி இயக்க வேண்டும். கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயில் திருச்சி சென்றவுடன் எண் மாற்றம் செய்யப்பட்டு திருச்சி - பாலக்காடு டவுன் என்று பாசஞ்சர் ரயிலாக சென்று வருகிறது. அந்த ரயிலை கடலூரில் இருந்து பாலக்காடு டவுன் வரை இரு மார்க்கத்திலும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனின் முன்புறம் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா

விருத்தாசலம் : 

             சிறுமங்கலத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங்கும் விழா நடந்தது.

                விருத்தாசலம் அடுத்த சிறுமங்கலத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு ஊக்க நிதி வழங் கும் விழா நடந்தது. திட்ட மேலாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார். அணித் தலைவர் முத்துவேல் முன்னிலை வகித் தார். ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி வரவேற் றார். சிறுமங்கலம், ஆதமங்கலம், எ.அகரம், வரம்பனூர், நரசிங்கமங்கலம், மருதத்தூர் ஊராட்சி தலைவர்கள் செல்வி, காந்தி குணசேகரன், பரமசிவம், கதிர்வேல், சாந் தாயி, சிவகாமி ஆகியோருக்கு ஊக்க நிதி வழங்கப்பட்டது. நாராயணசாமி நன்றி கூறினார்.

Read more »

நடராஜர் கோவில் உண்டியல் இன்று திறப்பு

சிதம்பரம் : 

             சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7வது முறையாக இன்று (13ம் தேதி) உண்டியல் திறக்கப் படுகிறது.

            சிதம்பரம் நடராஜர் கோவில் 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. அதனையடுத்து கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டது. ஒரு உண்டியல் வைக்கப்பட்டு படிப்படியாக ஒன்பது உண்டியல்கள் வைக்கப்பட்டது. இந்த உண் டியல்கள் கடந்த மார்ச் 9ம் தேதி ஆறாவது முறையாக திறக்கப்பட்டது. இதுவரை உண்டியல் மூலம் வெளி நாட்டு பணம் மற்றும் நகைகள் நீங்கலாக 17 லட்சத்து 2 ஆயிரத்து 734 ரூபாய் வசூலாகியுள்ளது. இந்நிலையில் 7வது முறையாக இன்று (13ம் தேதி) உண்டியல் திறக்கப் படுகிறது.

Read more »

ரயில்வே குடியிருப்பு திருமண மண்டபம் விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை

விருத்தாசலம் : 

               ரயில்வே குடியிருப்பு திருமண மண்டப பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

              விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகில் ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு விருத்தாசலம் மற் றும் சுற்றியுள்ள ரயில் நிலைய ஊழியர்கள் 500 குடும்பத்தினர் வசிக் கின்றனர். இவர்களின் வசதிக்காக குடியிருப்பு பகுதியிலேயே ரயில்வே நிர்வாகத்தால் நடத்தப்படும் மருத்துவமனை, ரேஷன் கடைகள் உள்ளன. அதேபோல் ஊழியர்களின் குடும்ப விசேஷங்களை நடத்துவதற்கு குறைந்த வாடகையில் திருமண மண்டபம் இருந்தது. அதில் போதுமான வசதிகள் இல்லாததால் அந்த மண்டபத்தை இடித்துவிட்டு வசதிகளுடன் கூடிய புதிய மண்டபம் கட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கடந்த 2007 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் விடப்பட்டது. கட் டட பணி துவங்கியதிலிருந்து ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. ரயில்வே மண்டபத்தில் குறைந்த வாடகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த ஊழியர்கள் தற்போது தனியார் மண்டபங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை செலுத்தி விசேஷம் நடத்துகின்றனர். மண்டப கட்டுமான பணியை விரைவு படுத்த ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மின்வாரியத்தை முற்றுகையிட கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு

கடலூர் : 

            தொடர் மின் வெட்டை கண்டித்து நாளை 14ம் தேதி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.

               மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர் தட்சணாமூர்த்தி, உறுப்பினர்கள் தயாளன், நீலநாராயணன், அய்யாதுரை, பஞ்சாட் சரம், ஆறுமுகம், ராமர், மச்சகாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

                விவசாயத்திற்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மின்மாற்றிகள் பழுதடைந்தால் உடனுக்குடன் மாற்றும் வகையில் போதிய அளவிற்கு மின் மாற்றிகள் தயார் நிலையில் வைத்திருக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிரிக்குப்பத்தில் மின் பழுதினை சரி செய்ய தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை வலியுறுத்தி நாளை 14ம் தேதி காலை கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Read more »

பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்கு : நகரம், தாலுகாவாக பிரிக்க நடவடிக்கை வேண்டும்

பண்ருட்டி : 

                 பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவாவதால் இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களாக பிரிக்க போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

               பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷன் கடந்த 1924ல் திருவதிகையில் துவங்கப்பட்டு பின் பண்ருட்டியில் கடந்த 1949ல் துவங்கப்பட்டது. பண்ருட்டி நகரம் மற்றும் கிராமப்புறங்கள் என இங்கு இரண்டு லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் 49 பணியிடத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 4 தேர்வு சப் இன்ஸ் பெக்டர்கள், 41 போலீசார் உள்ளனர். இதில் டி.எஸ்.பி.அலுவலகம், கடலூர் சி.ஆர்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் டிரைவர்கள், கிளார்க், மற்ற பணிகளுக்கு 20 பேர் சென்று விடுகின்றனர். மீதமுள்ள 21 போலீசாரில், 4 பேர் ஹைவே பேட் ரோல், விளையாட்டு, கோர்ட், சம்மன், மருத்துவச் சான்று பெறுவதற்கு ஒருவர், பாரா, மைக் உள்ளிட்ட பணிகளுக்கு சென்று விடுவதால் போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தினமும் 7 முதல் 12 வழக்குகள் வரை பதிவாகிறது. தொடர் வழக்கால் ஓய்வில்லாமல் பணி செய்வதாக சொற்ப அளவிலான போலீசார் புலம்புகின்றனர். இதனால் பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனை தாலுகா நகர போலீஸ் ஸ்டேஷன் என இரண்டாக பிரிக்க வேண்டும். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தம்

பண்ருட்டி : 

            பண்ருட்டி ராஜாஜி சாலையில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

              பண்ருட்டி ராஜாஜி சாலை, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தியுள்ளனர். ஆட்டோக்களை நிறுத்துவதற்கென பஸ் நிலையம், சக்தி ஐ.டி.ஐ., ராஜாஜி சாலையில் டெலிபோன் அலுவலகம் செல்லும் வழி ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் ராஜாஜி சாலை, சென்னை சாலையில் நீண்ட வரிசையில் 20 ஆட்டோக்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி கடை வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

Read more »

வாலாஜா வாய்க்காலில் சாக்கடை நீரில் கீரைகள் பார்த்தாலே 'உவ்வே...'

பண்ருட்டி : 

               திருவதிகை வாலாஜா வாய்க்காலில் சாக்கடை நீரில் கீரைகள் பயிரிட்டு வருவதால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

               கலப்படத்தில், போலியில் உண்டாகும் பாதிப்பை விட பண்ருட்டியில் கீரை வகைகள் பயிரிடும் இடத்தை பார்த்தாலே 'உவ்வே'... என சாப்பிட்டதும் வெளியே வரும் நிலை உள்ளது. பண்ருட்டி நகரத்தின் அனைத்து கழிவு நீர்களும் செல்லும் வாலாஜா வாய்க்கால் வி.ஆண்டிக் குப்பம் முதல் துவங்கி திருவதிகை கெடிலம் ஆறு வரை செல்கிறது. திருவதிகை பகுதியில் 100 மீட்டர் செல்லும் இந்த வாய்க்கால் கழிவு நீரில் 15 மீட்டர் தூரம் வரை விவசாயிகள் கீரை பயிரிட்டு வருகின்றனர்.

                 மேலும் வாய்க்காலை ஒட்டி மேல்புறத்திலும் கீர வகைகள் பயிரிடப்படுகிறது. இவற்றிற்கு கழிவுநீர் கால்நீர் கால்வாயில் ஓடும் நீரையே மோட்டார் மூலம் இரைத்து பயிரிட்டு வருகின்றனர். பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, அரைகீரை, சிறுகீரை உள்ளிட்ட கீரைகள் வகைகள் பயிரிட்டு விற்கப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் விளைவிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கார் கடத்தல் வழக்கு: மூவர் கைது

பண்ருட்டி : 

               கார் டிரைவரை தாக்கி காரை கடத்திய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

               கடலூர் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர் கார் டிரைவர் புண்ணியகோடி (38). கடந்த ஏப். 22ம் தேதி இவரது மொபைல் போனுக்கு பேசிய ஒருவர் வடலூர் செல்ல வேண்டும் என அழைத்தார். கடலூர் லாரன்ஸ் ரோட்டில் போன் செய்த நபருடன் ஆறு பேர் ஏறினர். பண்ருட்டி அடுத்த சிலம்பிநாதன்பேட்டை அருகே சென்ற போது காரில் வந்தவர்கள் மது அருந்திவிட்டு புண்ணியகோடிக்கும் கொடுத்தனர். சிறிது தூரம் சென்றதும் புண்ணியகோடியை முந் திரி காட்டில் இறக்கி விட்டு மர்ம நபர்கள் காரை கடத்திச் சென்றனர். கார் உரிமையாளர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பனிக்கன்குப் பம் ஒயின்ஷாப்பில் மது அருந்த வந்த 3 பேரை காடாம்புலியூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் சென்னை அயனாவரம் விமல்ராஜ் (24), கள்ளிக்குப்பம் குமரேசன் (27), மன்னார்குடி தினேஷ் (24) எனவும், மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கார் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Read more »

ஊராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் தலைவரின் கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

கடலூர் : 

                கவுன்சிலரை தாக்கிய ஊராட்சி தலைவரின் கணவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

              கடலூர் அடுத்த எம்.பி.அகரம் ஊராட்சி தலைவர் பிரேமா. இவரது கணவர் ஞானப்பிரகாசம். தி.மு.க., கிளை செயலாளர். இவருக்கும் அதே ஊராட்சியில் 3வது வார்டு உறுப்பினர் இளங்கோவனுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் ஊராட்சி தலைவர் பிரேமா ஊராட்சி நிதியில் ஊழல் செய்ததாக இளங்கோவன் கலெக்டரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஊராட்சி தலைவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட் டது. அதன் அடிப்படையில் விசாரணைக்காக ஊராட்சி அலுவலத்திற்கு நேற்று காலை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் அழைக்கப்பட்டனர்.

                விசாரணைக்காக இளங்கோவன் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப் போது அங்கிருந்த பிரேமாவின் கணவர் ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் அய்யனார் (தே.மு.தி.க.,) இவரது தம்பி சங்கர், மற் றும் அதே ஊரைச் சேர்ந்த வினோத், சுரேஷ், சரவணன், ஸ்ரீதர், பிரபு ஆகியோர் இளங்கோவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த இளங்கோவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் துக்கணாம்பாக்கம் போலீசார், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் அய்யனார், சங்கர், வினோத், சுரேஷ், சரவணன், ஸ்ரீதர், பிரபு ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.

Read more »

மங்கலம்பேட்டையில் பொதுமக்கள் மறியல்

விருத்தாசலம் : 

              மங்கலம்பேட்டை கோவில் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

              மங்கலம்பேட்டை ஓட்டை பிள்ளையார் கோவில் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத் தில் கடந்த 2002ம் ஆண்டு பொதுமக்களால் அய்யப்பன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில் குருசாமியாக இருந்த வெங்கடேசன் கடந்த மாதம் இறந்தார். அதனையடுத்து பொதுமக்கள் கோவிலை நிர்வகிக்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இந்நிலையில் இறந்த வெங்கடேசன் மனைவி சரோஜா நேற்று மாலை கோவில் முன் நின்று எனது கணவருக்குப் பின் எனது மகன் கோபி (21) தான் குருசாமியாக செயல்பட வேண்டும் என கூறினார். இதனால் பொதுமக்களுக்கும் சரோஜாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மாலை 5.15 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ராஜசேகரன், பேரூராட்சி தலைவர் கோபுபிள்ளை, வி.ஏ.ஓ., இளங்கோவன் முன்னிலையில், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவில் பிரச்னையை ஆர்.டி.ஓ., தலைமையில் பேசி முடிவு செய்யலாம் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Read more »

மக்கள் நல பணியாளரை தாக்கிய போலீஸ்காரர் உட்பட இரண்டு பேர் கைது

நெல்லிக்குப்பம் : 

             மக்கள் நல பணியாளரை தாக்கிய போலீஸ்காரர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

                அண்ணாகிராமம் அடுத்த எழுமேடு பகுதியில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வாய்க்கால் தூர் வாரும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் அபூர்வம் ஏகராசு மகன்கள் போலீஸ்காரர் சக்திவேல் மற்றும் புருஷோத்தமனும், மக்கள் நல பணியாளர் கடவுள் குமாரிடம் கூடுதல் ஆட்களை சேர்த்து 'தில்லு முல்லு' செய்த பணத்தை தரும்படி கேட்டனர். மறுத்ததால் அவரை தாக்கினர். இதுகுறித்து கடவுள் குமார் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து போலீஸ்காரர் சக்திவேல் மற்றும் புருஷோத்தமனை கைது செய்தனர்.

Read more »

ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஒருவர் கைது

கடலூர் : 

                இரண்டு மாதத்தில் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் என்.எல்.சி., ஊழியர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

              கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25- இன்ஜினியர் நகரைச் சேர்ந்தவர் செல்வமணி (39); என்.எல்.சி., ஊழியர். இவர் சகோதரர், கோவிந்தராஜ் (37). சென்னை கோயம்பேடு ஆற்காடு சாலையில் உள்ள லட்சுமி டவர்சில், கடந்தாண்டு, 'நியூ கோல்டன் மார்க்கெட்டிங்' என்ற பெயரில் நிறுவனம் துவங்கினர். இவர்கள், தங்களிடம் பணம் முதலீடு செய்தால், இரண்டு மாதத்தில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை துவக்கினர்.

                 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜன்டுகளை நியமித்து, தங்கள் திட்டத்தில் பலரை சேர்த்தனர். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற, செலுத்தும் தொகைக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டிக்கான காசோலையை, முன்கூட்டியே வழங்கினர். ஆரம்பத்தில் 10 ஆயிரம், 20 ஆயிரம் முதலீடு செய்தவர்களுக்கு, உரிய முதிர்வு தொகை வழங்கப்பட்டது. இதை நம்பி, பழைய வாடிக்கையாளர்களோடு புதிய வாடிக்கையாளர்கள் பலரும் முதலீடு செய்தனர். இவர்களுக்கு உரிய முதிர்வு தொகை வழங்காமல் ஏமாற்றி வந்தனர்.
இந்நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏமாற்றம் அடைந்த, சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவில் தெரு அருணாச்சலம் (37), கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் செய்தார். டி.எஸ்.பி., வசந்தா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, ராஜேந்திரன், ஏட்டு திருநாவுக்கரசு ஆகியோர், விசாரணை செய்தனர்.

                  அருணாச்சலத்தைப் போன்றே, கடலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 90க்கும் மேற்பட்டவர்களிடம், ஒரு கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிந்தது. மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்த கோவிந்தராஜை, கடந்த 9ம் தேதி சென்னையில் கைது செய்தனர். பின் அங்குள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள செல்வமணியை தேடிவருகின்றனர்.

Read more »

கடலூர் அருகே விளை நிலத்தை பிளாட் அமைக்க மரங்கள் அகற்றம்

கடலூர் : 

           கடலூர் அருகே விளை நிலத்தை பிளாட் போடுவதற்காக நெடுஞ் சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

                கடலூர் - விருத்தாசலம் சாலையில் கண்ணாரப்பேட்டை அருகே காரைக்காடு செல்லும் வழியில் உள்ள விளை நிலத்தில் 'பிளாட்' போடும் பணியில் தனியார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிளாட்டிற்கு செல்வதற்கு வழி வேண்டும் என்பதால் சாலையோரத்தில் இருந்த நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட பனை உள் ளிட்ட பல்வேறு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior