உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 06, 2010

பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

             பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 

                     பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 3ஜி சேவை தொடர்பான  டெண்டரை இறுதி செய்வதில், காலதாமதம் செய்வதன் மூலம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.  பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.  ஆர்ப்பாட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் இளங்கோவன், ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தென்மண்டல பொதுச் செயலாளர் சுவாமிநாதன் சிறப்புரை நிகழ்த்தினார். பி.எஸ்.என்.எல். அலுவலர் சங்க மாநில துணைச் செயலாளர் செந்தில்குமார், ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்லப்பா, அலுவலர்கள் சங்க உதவிச் செயலாளர் பி.கே.பெரியசாமி உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

வன்னியர்களுக்கு கேட்காமலேயே இடஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி

சிதம்பரம்: 

                 வன்னியர்களுக்கு கேட்காமலேயே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர் முதல்வர் கருணாநிதி என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                   காட்டுமன்னார்கோவில் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.கணேசமூர்த்தி வரவேற்றார். விழாவில்  துரை.ரவிக்குமார் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.


                         விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 489 பேருக்கு இலவச கேஸ் அடுப்பை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது:÷கடலூர் மாவட்டத்தில் இதுவரை 66,700 பேருக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 35 ஆயிரம் 486 பேருக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் மட்டும் இன்னும் 1 மாதத்தில் 7,137 பேருக்கு இலவச கலர் டிவி வழங்கப்படவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.635 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சாலை மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

                              விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு திருமண உதவித் தொகை, இறுதிச்சடங்கு நிதிஉதவி, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு முதல்வர் கருணாநிதி செய்துள்ளார். இதனால் தமிழக கிராமங்கள் செழிப்பாக உள்ளது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.51 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் வரை நலத்திட்டங்களை இம்மாவட்டத்தில் வழங்கியுள்ளோம். திமுக ஆட்சியில் நெல் மூட்டை ரூ.800-க்கு விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படாத கரும்பு மற்றும் நெல் கொள்முதல் விலை திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                               பின்னர் கீழக்கடம்பூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 6401 பேருக்கு இலவச கலர் டிவியை வழங்கிப் பேசினார். முன்னதாக ஆச்சாள்புரம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் நளினி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கொலை, கொள்ளை வழக்கில் சிக்கியவரிடம் 20 சவரன் நகை மீட்பு: மேலும் ஒருவர் கைது

குறிஞ்சிப்பாடி :

                 மூன்று மாவட்டங்களில் கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தில்லைநாதனிடம் இருந்து 20 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டம், குறிஞ்சிப் பாடி அடுத்த வேலவிநாயகர்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவரது வீட்டில் கடந்த 31ம் தேதி இரவு கையில் கம்பியுடன் நுழைந்த மர்ம நபரை அப்பகுதி மக்கள் பிடித்து குறிஞ்சிப்பாடி போலீசில் ஒப்படைத் தனர்.போலீஸ் விசாரணையில், அவர் மேல்புவனகிரி கள்ளிக்காட்டுத் தெருவை சேர்ந்த தில்லைநாதன் (28) என்பதும், இவர் சிதம் பரம், மீன்சுருட்டி, சீர்காழி பகுதிகளில் 10க்கும் மேற் பட்ட இடங்களில் இரவு நேரத்தில் ஆண்கள் இல்லாத வீட்டில் புகுந்து பெண்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.

                         புவனகிரியில் இரண்டு ஆண்டிற்கு முன் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி, சிறை தண்டனைக்கு பின் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்தார். பின்னர் நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த தென் பாதி கிரா மத்தில் பாண்டியன் வீட்டில் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி தவமணி, மகன் கள் சீயேன்ராஜ், சாலமன் ராஜ், தாய் மல்லிகா ஆகியோரை இரும்பு பைப்பால் தாக்கி விட்டு நான்கு சவரன் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள் ளார்.தில்லைநாதன் தாக்கியதில் தவமணி, அவரது மகன் சீயோன்ராஜ் (4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தனர்.அதன்பிறகு அரியலூர் மாவட்டம் வடவாறு தலைப்பு கிராமத்தில் புகழேந்தி, தென்னவநல் லூரில் பொய் யாமொழி, புத்தூரில் டேனியல்ரால் ஆகியோரின் வீடுகளில் அடுத்தடுத்து புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்களை தாக்கி நகைகளை கொள்ளை அடித் துள்ளார்.

                       இந்த நகைகளை அணைக்கரையை சேர்ந்த நடராஜனுடன் சேர்ந்து விற்று செலவு செய்து வந்த தில் லைநாதன், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் புவனகிரிக்கு வந்துள்ளார். அங்கு இரவு நேரத்தில் சினிமா பார்த்துவிட்டு வந்த பெண்ணை கற்பழித் ததும், இதேபோன்று பல பகுதிகளில் இரவில் தனியாக வந்த பெண்களை கற்பழித்துள்ளது தெரிய வந்துள்ளது.அதன்பேரில் குறிஞ்சிப் பாடி போலீசார் வழக்கு பதிந்து தில்லைநாதனை நேற்று கைது செய்தனர்.அவர் கொள்ளை அடித்து விற்ற 20சவரன் நகைகளை பறிமுதல் செய் தனர். மேலும், இவ ருக்கு உடந்தையாக இருந்த நடராஜனை கைது செய்தனர்.இவர்களிடம் சீர்காழியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து நாகை மாவட்ட போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

வெள்ளாற்றில் மணல் எடுக்க கள்ளிப்பாடி மக்கள் எதிர்ப்பு



Top world news stories and headlines detail
ஸ்ரீமுஷ்ணம் :

                       ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற் றில் அரசு மணல் குவாரி இயங்கியது. கடந்த மாதம் பெய்த கனமழையில் ஆற் றில் தண்ணீர் வரத்து துவங் கியதால் குவாரி மூடப் பட் டது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந் துள்ள நிலையில் அனுமதியின்றி பலர் மணல் எடுத்து செல்கின்றனர்.

                  அதனையொட்டி மணல் குவாரியை மீண் டும் திறப்பதற்காக பொதுப்பணி துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை கள்ளிப்பாடி கிராமத்திற்கு சென்று மணல் அள்ள அனுமதி வழங்குவதற்காக அறிவிப்பு பலகை வைத்தனர்.இதனை அறிந்த கள் ளிப்பாடி மற்றும் காவானூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு, கள்ளிப்பாடி ஆற் றில் காவனூருக்கு செல் லும் வழியில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

          அவர்களிடம் அதிகாரிகள் பேச்சவார்த்தை தடத்தினர். அப்போது கிராம மக்கள் கள்ளிப்பாடியிலிருந்து காவானூர் கிராமத்திற்கு செல்லும் வழியை தவிர வேறு பகுதியில் மணல் எடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றனர். இதன்பின்னர் கள்ளிப்பாடி கிராமத்தில் மணல் அள்ளுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து குவாரியை துவக்குவது குறித்து முடிவு செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Read more »

சமூக பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை குளறுபடியால் விவசாயிகள் ஏமாற்றம்

Top world news stories and headlines detail
கடலூர் :

                      தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள்-விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட உறுப் பினர் அடையாள அட்டையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

                       விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு நலத்திட் டத்தை அறிவித்தது.இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு திருமணம், விபத்து மரணம், விபத்தில் உடல் உறுப்புகள் இழப்பு, இயற்கை மரணம், ஈமச்சடங்கு மற்றும் உறுப்பினரின் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் விண் ணப்பித்தனர்.

                        அந்த மனுக்கள் மீது வருவாய் துறையினர் விசாரணை நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு விவசாய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.இந்த அடையாள அட்டையில் குடும்ப தலைவரின் பெயர், வயது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரம், அவர்கள் குடும்ப தலைவருக்கான உறவு முறையை குறிப்பிட்டு தாசில்தார் கையெழுத்துடன் கூடிய முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும்.கடலூர் அடுத்த ஆலப் பாக்கத்தில் வழங்கியுள்ள பல அடையாள அட்டைகளில் தாசில்தார் கையெழுத்து இல்லை. மேலும் சில அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் உறவு முறைகள் குறிப்பிடாமல் காலியாக விடப்பட் டுள்ளது.இதனை அறியாத உறுப் பினர்கள், அரசின் நலத் திட்ட உதவிகளை பெற் றிட தங்களது அடையாள அட்டையை எடுத்து சென்றால் அதில் தாசில்தார் "சீல்' இல்லை, குடும்ப உறுப்பினர்களின் உறவு முறை இல்லை, இது போலி கார்டு என கூறி திருப்பி அனுப்புகின்றனர். இதனால் விவசாய நலத் திட்ட அட்டை வைத்துள்ளவர்கள் அதற்கான பலனை அடைய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Read more »

சைக்கிள் 'ஷெட்' இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி



Top world news stories and headlines detail
நடுவீரப்பட்டு :

                    நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் "சைக்கிள் ஷெட்' இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங் களை சேர்ந்த 1,360 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களின் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் அதிக தூரம் இருப்பதால் மாணவ, மாணவிகள் அதிகளவில் சைக்கிளில் வந்து செல் கின்றனர். இவர்களில் பலருக்கு அரசு சார்பில் இலவச சைக்கிளும் வழங்கப் பட்டுள்ளது.மாணவ, மாணவிகள் ஓட்டி வரும் சைக்கிள் களை நிறுத்த பள்ளியில் போதிய ஷெட் இல்லாததால் வெயில் மற்றும் மழைகளில் நிறுத்தப்பட்டு சைக்கிள்கள் வீணாகி வருகிறது. வெயிலில் சைக்கிள் நிற்பதால் மாலையில் காற்று இறங்கி விடுகிறது.

                இதனால் மாணவ, மாணவிகள் மாலை பள்ளி விட்டதும் சைக்கிளை தள்ளிக் கொண்டு காற்று அடிக்க சைக்கிள் கடைகளை தேடி அலைவது வாடிக்கையாக உள்ளது. இதனை தவிர்த் திட பள்ளியில் மாணவர்களின் சைக் கிள்களை நிறுத்த ஷெட் அமைத்து தர கல் வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

லட்சுமணபுரம் சாலை சீரமைக்கப்படுமா?

ராமநத்தம் :

                   ராமநத்தம்- லட்சுமணபுரம் இடையே குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.ராமநத்தம்-லட்சுமணபுரம் சாலையை தொழுதூர், ஆலத்தூர், கீழக்கல்பூண்டி, வடகராம்பூண்டி, கொரக்கவாடி, கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, ஒரங்கூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந் துறை, காரியானூர், வெள்ளுவாடி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இப்பகுதியினர் போக்குவரத்து வசதி பெறும் வகையில் திட்டக்குடி- ஆத்தூர், சின்னசேலம், நயினார்பாளையம், விருத்தாசலம்-லட்சுமணபுரம், திட்டக்குடி-லட்சுமணபுரம், ராமநத்தம்-கொரக்கவாடி, ஒரங்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு, தனியார் மற்றும் மினி பஸ்கள் இயக் கப்பட்டு வருகிறது.போக்குவரத்துக்காக பயன்படுத் தும் சாலையில் ஆலத்தூர், மேலக் கல்பூண்டி, வடகராம்பூண்டி, கொரக் கவாடி ஏரிகளின் கரைகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.

                  இந்த ஏரிக்கரைகளில் எதிரெதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்கிட போதிய இடம் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் செல்ல வேண்டி உள்ளது.ராமநத்தம்-மேலக்கல்பூண்டி ஏரிக்கரை வரையில் கடந்த ஓராண் டுக்கு முன் பல லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற இந்த சாலை சில மாதங்களிலேயே குண்டும் குழியுமாக மாறியது. தற்போது ஒரு சில இடங்களில் மண் சாலை போன்று தோற்றம் அளிக்கிறது.இந்நிலையில், வடகராம்பூண்டி- கொரக்கவாடி வரை உள்ள 3 கி.மீ., சாலையை சீரமைக்க நான்கு மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட் டப்பட்டது. ஆனால் இன்னும் பணி துவங்கவில்லை.

                   சாலையோரத்தில் ஜல்லி கொட்டியுள்ளதால், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் தடுமாறி விழுந்து செல்லும் நிலை உள்ளது.பொதுமக்கள், பயணிகளின் நலன் காக்க ராமநத்தம்- லட்சுமணபுரம் இடையேயான சாலையை விரைவில் சீரமைக்கவும், ஏரிக்கரைகளில் உள்ள சாலையை அகலப்படுத்தி வாகன விபத்து ஏற்படாமல் தடுத் திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பச்சையாங்குப்பம் - துறைமுகம் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்

கடலூர் :

                கடலூர் துறைமுகத் திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது.கடலூர் துறைமுகம் பல ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு முதல் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதனால் துறைமுகத்தில் 14 கோடி ரூபாய் செலவில் சிமென்ட் சாலை, சுற்று சுவர் மற்றும் ஹைமாஸ் விளக்கு அமைத்து மேம்படுத்தப் பட்டது. ஆனால் துறைமுகச்சாலை என அழைக் கப்படும் பச்சையாங் குப்பம்-துறைமுகம் சாலை பல ஆண்டாக பராமரிப்பின்றி உள்ளதால் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது. இரவில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சற்றுகவனக்குறைவு ஏற்பட்டாலும் பள்ளத்தில் விழ வேண்டியுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் சாலை மிகவும் மோசமானது.

                இதனால் சாலையின் பல இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. தற்போது மீன் பிடி துறைமுகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் இருப்பதால் இந்த சாலையை துறைமுக பொறுப்பில் இருந்து தற்போது நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நகராட்சியாவது இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

'டீச்சிங்' பயிற்சி மாணவர்களிடம் நன்கொடை நடவடிக்கை கோரி கலெக்டருக்கு கடிதம்

விருத்தாசலம் :

            "டீச்சிங்' பயிற்சி பெரும் மாணவர்களிடம் நன்கொடை கேட்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது தூண் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

             இதுகுறித்து ஐந்தாவது தூண் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி கலெக்டர் மற்றும் சி.இ.ஓ., க்கு அனுப்பியுள்ள கடிதம்:

                 கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிகளில் பணி தொடர்பான "டீச்சிங்' பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெரும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்க வேண்டும்.அவ்வாறு சான்றிதழ் வழங்க ரூபாய் 500 முதல் 1000 வரையும், மேலும் பெஞ்ச், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை நன் கொடையாக வாங்கி தருமாறு கட்டாயப்படுத்துவதாக எங்கள் அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது.

                  எனவே கலெக்டர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து எந்த ஒரு நன்கொடையும் இல்லாமல் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் பயிற்சி பெரும் பள்ளிகளில் விசாரணை செய்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சந்தையாக மாறிப்போன பண்ருட்டி பஸ் நிலையம்



Top world news stories and headlines detail
பண்ருட்டி :

               பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் உட்கார இடமில்லாமல் தரைக் கடை ஆக்கிரமிப்பாளர்கள் சந்தைபோல் வியாபாரம் செய்து வருகின்றனர்.பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் காத் திருக்கும் நிழற்குடை பகுதியை ஆக்கிரமித்து தரைக் கடை வைத்துள்ளனர்.இதனால் பயணிகள் உட்காருவதற்கும், நிற்பதற்கும் இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். கோடை காலங்களில் பயணிகள் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.ஆக்கிரமிப்பாளர்கள் பலா, வாழை, கொய்யாப் பழம் மற்றும் மணிலா பயிர்,வெள்ளரிபிஞ்சு ஆகியவற்றை விற்பனை செய் கின்றனர். இந்த கடைகளில் இருந்து கொட்டப்படும் பழ கழிவுகளை சாப்பிடுவதற்கே 35க்கும் மேற் பட்ட மாடுகள் பஸ் நிலையத்தில் சுற்றி வருகின்றன.

                பஸ்நிலையத்திற்குள் சைக்கிள், மோட்டார் சைக்கிள், சரக்குலாரிகள், வேன்கள், கார்கள், டூரிஸ்ட் வேன்கள் உள் ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.வெயிலுக்காக நிழற் குடையில் ஒதுங்கி நிற்கும் பயணிகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் திட்டுகின்றனர். பஸ்நிலையத்தில் தரைக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. கடந்த ஆண்டு சென்னை நகராட்சி நிர் வாக கூடுதல் ஆணையர் பஸ்நிலையத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டார். அந்த உத்தரவை சில நாட் கள் மட்டுமே நகராட்சியினர் செயல்படுத்தினர். பின் வழக்கம் போல் மீண் டும் ஆக்கிரமிப்பு துவங்கியது. பஸ்நிலையத்தின் அவலம் குறித்து உள் ளாட்சி பிரதிநிதிகள் முறையிட்டும், நகராட்சி நிர்வாகம் கண்டும், காணாமல் உள்ளது.

Read more »

தொழிலாளர் நலனுக்கு எதிராக அரசு செயல்படுகிறது : சி.ஐ.டி.யூ., பொதுச்செயலர் குற்றச்சாட்டு

கடலூர் :

              தொழிலாளர் நலனுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று சி.ஐ.டி.யூ., மாநில பொதுச்செயலர் சவுந்தர ராசன் கூறினார்.

கடலூர் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

               தமிழக அரசின் ஆதர வோடு முதலாளிகள், தொழிற்சங்க உரிமைகளை மறுத்து வருகின்றனர். தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டால் அதை அங்கீகரிப்பதற்கான சட் டத்திருத்தம் 1990ல் கொண்டு வரப்பட்டது. அதை இன்று வரை அமல்படுத் தவில்லை.தமிழகத்தில் ஒரு கோடி தொழிலாளர்கள் உள் ளனர். பெரிய ஜவுளி கடை கள், நகைக்கடைகள், "ஐடி' போன்ற நிறுவனங் களில் எட்டு மணி நேரம் அமல்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர் கள் ஒரு கோடிக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கு அமைக் கப்படுகின்ற நலவாரியத் தில் சேர வருவாய் ஆய் வாளரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவித்துள்ளதை கைவிட வேண்டும்.அத்தியாவசிய பொருட் களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. மத்திய அரசு தன் வசம் வைத் துள்ள பெட்ரோல், டீசல் விலையை கூட உயர்த்திவிட்டது. எரிபொருளில் 35 சதவீதம் வரி உள்ளது.

                           இதையாவது அரசு கட்டுப்படுத்தலாம். ஆன்லைனில் அத்தியாவசிய பொருட்கள் வணிகம் செய்வதை தடை செய்ய வேண்டும். பருப்பு, எண் ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டும்.மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் வரும் தொகையை அரசு வருவாயாக கணக்கு காட்டுகிறது. தனியார் கம்பெனிக்கு தடையில்லா மின்சாரம், தண்ணீர் என வழங்கும் அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த அறிவுறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு சாதகமாக வரும் தீர்ப்பை எதிர்த்து இந்த அரசு அர்ப்பத்தனமாக அப்பீல் செய்யாது என சட்டசபையில் அறிவித்த முதல்வர் கருணாநிதி, இன்று தொழிலாளர்களுக்கு எதிராக அப்பீல் போயிருக் கிறார். தொழிலாளர் நலனுக்கு விரோதமாக இந்த அரசு போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

Read more »

கடலூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

கடலூர் :

             சி.ஐ.டி.யூ., தொழிலாளர்கள் பேரணியையொட்டி கடலூரில் இன்று மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யூ) 11வது தமிழ் மாநில மூன்று நாள் மாநாடு கடலூரில் நேற்று முன்தினம் துவங்கியது. மாநாட் டின் இறுதிநாளான இன்று மாலை 4 மணிக்கு கடலூர் பாதிரிக்குப்பத் தில் துவங்கும் சி.ஐ. டி.யூ., தொழிலாளர்களின் பேரணி திருப்பாதிரிபுலியூர் லாரன்ஸ் ரோடு, பாரதி ரோடு வழியாக மஞ்சக்குப்பம் மைதானத்தை அடைகிறது.இதற்காக இன்று மாலை 3 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் பஸ் நிலையத்திலிருந்து புதுச்சேரி மற்றும் நெல்லிக்குப்பம் செல் லும் பஸ்கள் ஜவான்பவன் வழியாக திருப்பிவிடப்படுகிறது.பேரணி துவங்கும் வரை திருவந்திபுரம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்தகவலை டி.எஸ்.பி., ஸ்டாலின் கூறினார்.

Read more »

குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி :

             குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறிஞ்சிப்பாடியில் உள்ள வட்டம் சாரா அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதிதாக கட்டப்படும் மருத்துவமனை கட்டட பணிகள், சித்தா மருத்துவ பகுதி, பிரசவ வார்டுகளை பார் வையிட்டார். பின்னர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Read more »

தி.மு.க.,விற்கு உறுதுணையாக இருங்கள் அரசு விழாவில் அமைச்சர் வேண்டுகோள்

காட்டுமன்னார்கோவில் :

             மாவட்டத்தில் 3 லட் சத்து 35,486 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி', வழங்கியுள்ளதாக அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆச்சாள்புரத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பு, கீழகடம்பூர், ஆயங்குடி, கஞ்சன் கொள்ளை, கண்டமங்கலம், நாட்டார்மங்கலம், பழைஞ்சநல்லூர், வடக் குப்பாளையம் கிராமங்களில் 6401 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' மற்றும் காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி பகுதியில் 489 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.

            ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு காஸ் இணைப்பு மற்றும் கலர் "டிவி'க் களை வழங்கி அமைச்சர் பன்னீர்செல் வம் பேசுகையில், மாவட்டத்தில் 66,700 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பும், மூன்று லட்சத்து 35 ஆயிரத்து 486 குடும்பங்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட் டுள்ளது. முஸ்லிம் சமூக மக்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் முஸ்லிம் மாணவர் கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். உங்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்தும் தி.மு.க., அரசுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண் டும் என பேசினார்.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், ஒன்றிய சேர்மன்கள் மாமல்லன், முத்துபெருமாள், ஜெயச் சந்திரன் பங்கேற்றனர். தாசில்தார் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

Read more »

மஞ்சளுக்கு கூடுதல் விலை விவசாயிகள் மகிழ்ச்சி



Top world news stories and headlines detail
சிறுபாக்கம் :

                சிறுபாக்கம், வேப்பூர் பகுதி மஞ்சள் பயிர் விவசாயிகள் விலை உயர்வினால் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன நிலங்களில் கோ- 1, நாட்டு ரகம், எறுமதளி, ஈரோடு- 5 உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக குவிண்டாலுக்கு 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை விலைபோனது. நல்ல விலை கிடைத்த போதிலும், மஞ்சள் பயிரில் போதிய மகசூல் கிடைக்கவில்லையே என விவசாயிகள் ஆதங்கப்பட்டு வந்தனர். இருப்பினும் இந் தாண்டு இப்பகுதி விவசாயிகள் பலர் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது மஞ்சள் குவிண்டால் 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் வேப்பூர் மற்றும் சிறுபாக்கம் பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more »

சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக தனி தாலுகா : வியாபாரிகள் சங்க செயலாளர் முதல்வருக்கு மனு

சேத்தியத்தோப்பு :

               சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு வியாபாரிகள் சங்க செயலாளர் மகாராஜன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

                  மாவட்டத்தில் சமீபத்தில் குறிஞ்சிப்பாடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப் பட் டுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோன்று சேத்தியாத்தோப்பிற்கு அருகே உள்ள சிதம்பரம் தாலுக்காவின் 20 கிராமங்கள், காட்டுமன்னார்கோவில் தாலுகாவின் 30 கிராமங்கள், ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி, விருத்தாசலம் தாலுகாவில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்த மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

            பல கிராம மக்கள் மூன்று பஸ் மாறி சென்றால் தான் தாலுகா அலுவலகத்தையே அடைய முடியும் என்கிற நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் பண விரயம் அதிகரித்து நேரம் வீணாகி வருகிறது. எனவே சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்



Top world news stories and headlines detail
கடலூர் :

              சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கடலூரில் நேற்று என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.போக்குவரத்து காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று கடலூரில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையிலிருந்து டவுன் ஹால் வரை நடந்த ஊர்வலத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதுகைகளை ஏந்தி வந்தனர்.ஊர்வலத்தை டி.எஸ். பி.,ஸ்டாலின் துவக்கி வைத்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப் இன்ஸ் பெக்டர்கள் அன்பழகன், பிரகாஷ், என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், மரியசேவியர், ரவி, சசிகலா, தேவி, லில்லி கிறிஸ்டினாள், பரந்தாமன், ஆரோக்கியசாமி, பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா



Top world news stories and headlines detail
விருத்தாசலம் :

          விருத்தாசலத்தில் பதவி உயர்வு பெற்ற வருவாய் துறை அதிகாரிகளுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ., களாக பணியாற்றிய நடராஜன், முரளி பதவி உயர்வு பெற்று கடலூருக்கு மாறுதலாகி உள்ளனர். அவர்களுக்கு வி.ஏ.ஓ., க்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது.துணை தாசில்தார் சுதாதேவி தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., சங்க மாவட்ட பிரசார செயலாளர் மணிவண் ணன், வட்டார செயலாளர் ராஜேஸ்வரன் முன் னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் சுப்ரமணியன் வரவேற்றார். விழாவில் பதவி உயர்வு பெற்ற நடராஜன், முரளி ஏற்புரையாற்றினர்.

Read more »

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா



Top world news stories and headlines detail
சேத்தியாத்தோப்பு :

             கொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பொருளாளர் அசோக் முன்னிலை வகித்தனர். செயலாளர் பொற் செல்வி வரவேற்றார். மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை சுப்ரீம் அரிமா சங்கத் தலைவர் முடிகொண்டான் வழங்கினார். விழாவில் ரவி, வடிவேல், அரங்கப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் வசந்தி நன்றி கூறினார்.

Read more »

மண்டபத்தில் புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கிள்ளை :

             சிதம்பரம் அருகே மண்டபத்தில் மூடப்பட்ட புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர். சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை கட்டுபடுத்த கிள்ளை போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் அவசரத்திற்கு வர முடியாத நிலை இருந் தது. அதனையொட்டி அப் போதைய எம்.எல்.ஏ., அருள் முயற்சியினால் கடந்த 2006ம் ஆண்டு மண்டபத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டாரத் தில் சிறு பிரச்னை என்றாலும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டதால் மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

           இந்நிலையில் புறக்காவல் நிலையம் மூடப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் மீண்டும் பிரச்னைகளோடு, திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறையால் சி.முட்லூர் பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாமல் உள்ளது. இதனைத் தவிர்த்திட மண்டபத்தில் மீண்டும் புறக்காவல் நிலையம் திறக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

திட்டக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழா வாகனங்களுக்கு ஒளி பிரதிபலிப்பான்

Top world news stories and headlines detail
திட்டக்குடி :

         திட்டக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களுககு முகப்பு ஸ்டிக்கரும், ஒளி பிரதிபலிப்பான்களும் ஒட்டப்பட்டது.திட்டக்குடி போலீசார் மற்றும் ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு வார விழாவிற்கு டி.எஸ்.பி., இளங்கோ தலைமை தாங் கினார். இன்ஸ் பெக் டர் ராமதாஸ், தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தனர்.

                     சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி வாகனங்கள், பஸ் மற்றும் லாரிகள், டூ- வீலர்கள், மாட்டு வண்டிகள், கரும்பு லோடு டிராக்டர்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் பின்புறத்தில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்பட்டன.வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு, விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட் டது. விழாவில் சப்- இன்ஸ்பெக்டர் ஜோதி, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு, ஏட்டுகள் ராஜவேல், ராஜேந்திரன், சேகர், தனிப் பிரிவு ராதா உள்ளிட்டடோர் பங்கேற்றனர். ஏட்டு விஜயசங்கர் நன்றி கூறினார். 

Read more »

நெல் பயிரில் புகையான் தாக்குதல் இழப்பீடு வழங்க கோரிக்கை

கடலூர் :

            புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் விளை நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

             கடலூர் மாவட்டத்தில் 2.60 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை நெல்லில் கலப்படம் காரணமாக உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலையும், அறுவடை செய்த நெல் தரம் குறைந்துள்ளதால் அதிக விலைக்கு விற்க முடியாமால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இந்நிலையில் நெற்பயிரில் குருத்துப்புழு மற்றும் புகையான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை வாங்கிய பயன்படுத்தியதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

                  இருப்பினும் சாகுபடியில் 50 சதவீதம் மகசூல் குறையும் நிலை உள்ளதால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் 10 முதல் 15 நாட்களில் அறுவடை துவங்க உள்ளது.இதனைக் கருத்தில் கொண்டு பயிர் காப்பீட்டு நிறுவனத்தின் சார்பில் நடப்பாண்டு அறுவடை மகசூல் பரிசோதனையின் போது புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வேட்டி, சேலை வழங்கும் விழா

திட்டக்குடி :

        திட்டக்குடி பேரூராட்சியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கவுன்சிலர்கள் முத்துவேல், செல் வம், ராஜேந்திரன் முன் னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., பிச்சைப்பிள்ளை வரவேற்றார். பேரூராட்சி தலைவர் மன்னன் பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். அதில் தி.மு.க., சுந்தரம், அ.தி. மு.க., துரைராஜ், குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டி பயிற்சி முகாம்

சேத்தியாத்தோப்பு : 

               சேத்தியாத்தோப்பில் சேவை சங்கங்கள் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்குக்கான தேர்வு வழிகாட்டி பயிற்சி முகாம் நடந்தது.சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், ஜூனியர் சேம்பர் மற்றும் சுப்ரீம் அரிமா சங்கங்கள் இணைந்து நடத்திய முகாமிற்கு அரிமா மாவட்ட தலைவர் அகர்சந்த் தலைமை தாங்கினார். தேவசேனாதிபதி, ஜே.சி. தலைவர் டாக்டர் மகாலிங்கம், சுப்ரீம் அரிமா செயலாளர் பொற்செல்வி முன்னிலை வகித்தனர். ஜே.சி. மண்டல ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். ஜே.சி. அமைப்பின் தேசிய பயிற் சியாளர் அன்புமணி முகாமை துவக்கி வைத்தார். மண்டல பயிற்சியாளர் அம்துஸ்சலிமா விளக்கவுரையாற்றினார். சேவை சங்கங்களின் நிர்வாகிகள், கொளஞ்சிநாதன், உத்திராபதி, அசோக், மணிமாறன் வாழ்த்துரை வழங்கினர்.

Read more »

ராமநத்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க மேம்பாட்டிற்கு நிதி வழங்கும் விழா

ராமநத்தம் :

                      வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மங்களூர் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படுவதாக உலக வங்கி குழுவினர் பாராட்டியுள்ளதாக மாவட்ட திட்ட அலுவலர் பேசினார். ராமநத்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க மேம்பாட்டிற்கு நிதி வழங் கும் விழா நடந்தது. ராமநத்தம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் அரங்கூர் அமுதா, எழுத் தூர் ராமலிங்கம், இடைச் செருவாய் ஜெயமணி, தச்சூர் சந்திரா, ஆக்கனூர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தனர். தொழுதூர் பிரிவு அணி தலைவர் ராஜா வரவேற்றார்.

                     தொழுதூர் பிரிவைச் சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கு வறுமை ஒழிப்பு நிதியை வழங்கிய வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட அலுவலர் நித்தியானந்தம் பேசியதாவது: வட்டத்தில் இந்த ஆண்டிற்கு வாழ்ந்து காட் டுவோம் திட்டத்திற்கு கீரப்பாளையம் ஒன்றியத்தை தேர்வு செய்ய இருந்தது. அப்போதை கலெக்டர் ராஜேந்திர ரத்னு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகை, எஸ்.சி., எஸ்.டி., மக்கள் தொகையை கணக்கெடுத்து திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினார். அதன்படி இத்திட்டம் மங் களூர் ஒன்றியத்தில் செயல் படுத்தப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த ஒன்றியத்தில் இத்திட்டம் சிறப்பாகவும், விவேகமாகவும் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

                      மேலும், தமிழகத்திலேயே மங்களூர் ஒன்றியத்தில் வறுமை கோட் டிற்கு கீழ் உள்ள மக்களை தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி மாநிலத்திலேயே முதன்மை ஒன்றியமாக மாற்றிடும் வகையில் இங் குள்ளவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.சில தினங்களுக்கு முன் உலக வங்கியில் இருந்து 8 குழுக்கள் தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அதில் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் கறவை மாடு உள்ளிட்டவைகளுக்காக கடன் பெறுவதை விட, காளான் வளர்ப்பு, இயற்கை எரு தயாரிப்பு, கவரிங் நகை, களிமண் பொம்மைகள் தயாரிப்பு உள்ளிட்ட புதிய தொழில் துவங்க முன்வர வேண்டும் என்றார். விழாவில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணபவன், ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் வள்ளி நன்றி கூறினார்.

Read more »

புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்க விழா

Top world news stories and headlines detail
கடலூர் :

               கடலூர் நகர புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்க முப்பெரும் விழா எஸ்.ஆர். காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது.கடலூர் நகர தலைவர் உமாபதி தலைமை தாங்கினார். நகர செயலாளர் வைத்தியநாதன் நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார். மாநில தலைவர் சங்கர், செயலாளர் கபாலீஸ்வரன், பொருளாளர் கோவை ரமேஷ், பொருளாளர் நாகராஜன், துணைச் செயலாளர் கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

Read more »

யானைக்கால் நோய் ரத்த சேகரிப்பு முகாம்

கடலூர் :

               கொசுக்களை ஒழிக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் யானைக்கால் நோய் ஒழிப்பிற்காக மாவட்ட துணை இயக்குனர் மீரா உத்தரவின்பேரில் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ் கர் தலைமையில் சிவக்கம் மருத்துவ அலுவலர் லலிதா, சுகாதார மேற்பார்வையாளர் ராஜகோபால், உணவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிவேல், கருணாநிதி, கைலாஷ் இரவு நேர ரத்த சேகரிப்பு நடத்தினர்.முகாமை அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் கீதா துவக்கி வைத்தார். முகாமில் சேகரித்த 500 ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப் பப்பட்டுள்ளது. இதில் யானைக்கால் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.மேலும், பொது மக்கள் தங்கள் வீட்டை சுற்றி தண் ணீர் தேங்காமலும், கழிவறை காற்று போக்கியின் மீது வலை கட்டுவதன் மூலம் கொசு உற்பத்தியை குறைத்திட முடியும்.

Read more »

மாணவர்களுக்கு தங்ககாசு பரிசு

சேத்தியாத்தோப்பு :

             ஒரத்தூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் நினைவு நாளையொட்டி முதல் மதிப் பெண் பெற்றவர்களுக்கு தங்ககாசு பரிசளிக்கப்பட்டது. ள்ளியில் நிறுவனர் காசிநாதனின் 20வது நினைவு நாளையொட்டி, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ராஜதுரை, அபூர்வபிரியா ஆகியோருக்கு பள்ளியின் நிர்வாகி பொன்முடி தங்ககாசுகளை பரிசாக வழங்கினார்.முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனர் காசிநாதன் சிலைக்கு கல்விக்குழு தலைவர் காசிநாதன், தலைமையாசிரியர் பாலசுப்ரமணியன் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Read more »

விருத்தாசலத்தில் சாலை பாதுகாப்பு வார விழா



Top world news stories and headlines detail
விருத்தாசலம் :

                 விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.போக்குவரத்து கழக துணை மேலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர்கள் ராஜேந்திரன், சிவக் குமார் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்தார்.இன்ஸ்பெக்டர் பசுபதி பஸ் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார். பின்னர் பொதுமக்கள் உட்பட அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ஓட்டுனர் ஆசிரியர் ஜான் போஸ்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிறப்பு பஸ்சை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Read more »

என்.எல்.சி.,க்கு எதிராக செயல்படுபவர்களை அனுமதிக்க முடியாது: சேர்மன் அன்சாரி

நெய்வேலி :

           என்.எல்.சி., நிறுவனத் தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுபவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என சேர்மன் அன்சாரி பேசினார்.

             என்.எல்.சி., எஸ்.எம்., ஆபரேட்டர் சங்கத்தின் 40ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. நெய்வேலி டவுன்ஷிப் 16ம் வட்டத்தில் உள்ள அமராவதி அரங்கில் நடந்தது. சங்க தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். என்.எல்.சி., சுரங்க இயக்குனர் சுரேந்தர் மோகன், திட்ட இயக்குனர் கந்தசாமி, முதன்மை பொது மேலாளர்கள் குமாரசாமி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் சிவசண்முகநாதன் வரவேற் றார்.

விழாவில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பேசியதாவது:

                 கடும் சரிவிலிருந்து மீண்டு வந்துள்ள என்.எல்.சி., நிறுவனம் நல்ல மாற்றங்களை சந் திக்காவிட்டால் நமது நிறுவனத்தின் எதிர்காலமே இருண்டு போய்விடும். நாம் நமது உழைப்பை அதிகப்படுத்தினால் மட் டுமே என்.எல்.சி., பல தலைமுறைகளுக்கு பிரகாசிக்க முடியும். இதுவரை பிற நிறுவனங் களை ஒப்பிட்டு நமது நிறுவனத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். இனி என்.எல்.சி.,யை ஒப்பிட்டு பிற நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் செல்ல முயல வேண்டும்.சர்வதேச அளவில் சாதனை புரிய தயாராகிவிட்ட என்.எல்.சி., நிறுவனத்தை அசைத்து பார்க்க சில தீய சக்திகள் முயலுகின்றன. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுபவர் களை நாம் அனைவரும் இணைந்து விரட்டியடிக்க வேண்டும்.இவ்வாறு சேர்மன் பேசினார். சங்க பொரு ளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.விழாவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more »

விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு 'சீல்' : திருவள்ளுவர் பல்கலை., பதிவாளர் அதிரடி

கடலூர் :

                  கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளர் நேற்று நேரில் விசாரணை நடத்தி மையத்திற்கு "சீல்' வைத்தார்.

                  திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 22ம் தேதி முதல் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது. இப்பணியில் 162 ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் காலை அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆசிரி யர்கள் ஏற்கனவே நடந்த பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் தேர்தலில் தங்களுக்கு எதிராக ஓட்டு சேகரித்த கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.இதனால் கல்லூரி முதல்வருக்கும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்றும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்த ஆசிரியர்கள், தேவனாம்பட்டி னம் அரசு கலைக் கல்லூரிக்கு சென்றனர்.

                              இதற்கிடையே திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் அமல்தாஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற் றும் விடைத்தாள் திருத்தும் மையமான செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களில் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழு இன்று வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணைவேந் தரை சந்திப்பது எனவும், அதன் பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. பின் பதிவாளர் அமல்தாஸ் முன்னிலையில் விடைத்தாள் திருத்தும் மையம் சீல் வைக்கப்பட்டது. விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டனர்.

                       கல்லூரி சார்பில் மனு: செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியர்கள் ரோசாரியோ, சின்னப்பன், ஜெயந்திரவிச்சந்திரன் ஆகியோர், பல்கலைக்கழக பதிவாளரிடம் அளித்துள்ள மனுவில் "பேராசிரியை உஷா ரகோத்தம் தூண்டுதலின் பேரில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு ஆர்ப்பாட் டமும் நடந்தது. எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண் டும் என்ற ஒரே நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று விடைத்தாள் திருத்தும் மையத்தை எக்காரணம் கொண்டு மாற்றக்கூடாது' என கூறப்பட்டுள்ளது.

                  இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சுயநிதிக் கல்லூரிகளை சேர்ந்த 180 பேராசிரியர்கள் நேற்று மாலை துணைவேந்தர் ஜோதிமுருகனை சந்தித்து, விடைத்தாள் திருத்தும் பணியில் பிரச்னை ஏற்படுத்திய பேராசிரியர் உஷாரகோத்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத் தாள் திருத்தும் பணியை மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக துணைவேந்தர் உறுதியளித்தார்.

Read more »

அடிப்படை வசதிகள் இல்லாததால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு

கடலூர் :

          அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றால் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

                  இதுகுறித்து மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கெங்கை கொண்டான் பேரூரட்சி தலைவர் சக்திவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

                     மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள ஓம்சக்தி நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீர், வடிகால் அமைப்பு உள்ளிட்ட வசதிகள் இதுவரை செய்யப்படாமல் உள்ளது.இதுகுறித்து பல போராட் டங்கள் நடத்தியும் பலன் இல்லை. இதே நிலை நீடித்தால் வாழ்வதற்கு வழியில்லாதவர்கள் என்ற நிலையில் எங்களின் ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகளை தங்களிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

விருத்தாசலம் ரயில்வே மேம்பால பணி மந்தம் : உலர் களமாக மாறி வரும் புறவழிச்சாலை

விருத்தாசலம் :

                     விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி மந்த கதியில் நடந்து வருவதால், பணி முடிந்த சாலை பகுதிகள் தற்போது விவசாயிகளின் நெற்களமாக மாறிவருகிறது.

                  விருத்தாசலம் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க "தமிழ்நாடு ரோடு செக் டார் ப்ராஜெக்ட்' மூலம் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. கடலூர் ரோட்டில் உள்ள பொன்னேரியில் இருந்து வேப்பூர் ரோட்டில் உள்ள மணலூர் வரை 9.1 கி.மீ., தூரத்திற்கு புறவழிசாலை 2010 ஜனவரிக்குள் அமைக்க முடிவு செய்யப் பட்டு அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது.பொன்னேரியில் இருந்து மணலூர் வரை அமைய உள்ள புறவழி சாலையில் மணிமுத்தாறும், ரயில் பாதையும் அமைந்துள்ளதால் அவற் றிற்கு மேலே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதுபோல் சாலை அமைக்கும் இடங் களில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் துவங்கியது.

                 தற்போது பொன்னேரியில் இருந்து மணலூர் இடைப்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்து விட்டது. அதுபோல் மணிமுக்தா ஆற்று மேம்பால பணியும் முடிவடைந்து போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. ரயில்வே மேம்பாலம் அமைக்க 2.5 கோடி மதிப் பீட்டில் "இர்கான்' எனப்படும் "இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷனிடம்' ஒப்படைத்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி முடியாமல் மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று வரை பாதி அளவு பணிகள் மட்டுமே நடந் துள்ளதால் புறவழி சாலை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட் டுள்ளது.இதனால் வேப்பூர், திட் டக்குடி, பெண்ணாடம் பகுதிகளில் இருந்து கடலூர் நோக்கி செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் வந்து செல்லும் நிலையே உள்ளது.

                    குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியான கடைவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கடைவீதி வழியாக சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவி ஒருவர் போக்குவரத்து நெரிசலால் கனரக வாகனத்தில் சிக்கி இறந்தார். இவைத்தவிர தினசரி சிறு, சிறு விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.புறவழிசாலை பயன் பாட்டிற்கு வராததால் பணி நிறைவு பெற்ற சாலைகளை விவசாயிகள் தானியங்கள் உலர வைப்பதற்கும், நெல் அடிக்கும் களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

                     இதனால் சாலையில் சிறு சிறு குழிகள் ஏற்பட்டு சாலை பழுதாகும் நிலை உள்ளது. அதுபோல் நகர பகுதியை ஒட்டிய சில இடங்களில் பொதுமக்கள் சாலையில் மாடுகளை கட்டிவைத் தும், தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாலும் சாலை பழுதாகும் நிலை உள்ளது. வாகன போக்குவரத்து இல்லாததால் குடி பிரியர்களும் தங்கள் பங்கிற்கு இரவு நேரங்களில் புறவழிசாலையை பாராக மாற்றி வருகின்றனர்.தற்போது விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விருத்தாசலம் - வேப்பூர் செல்லும் வாகனங்களும், வரும் வாகனங் களும் நகரத்திற்குள்ளே செல்லும் வகையில் மாற்று வழியில் விடப்பட் டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் புறவழிசாலை பணி முடிந்திருந் தால் வேப்பூரில் இருந்து கடலூர் நோக்கி வரும் வாகனங்கள் புறவழிசாலை வழியாக சென்றிருக்கும்.

                தற்போது அதிக போக்குவரத்து நெரிசலுடன் நகரத்திற்குள் வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதியும், நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப் பதோடு விபத்து மற்றும் உயிர் இழப்புகளை தடுத் திட ரயில்வே மேம்பால பணியினை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல பாதையில் மூன்றாண்டுக்கு பின் சரக்கு ரயில் வெள்ளோட்டம்

கடலூர் :

                விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், சரக்கு ரயில் போக்குவரத்து நேற்று வெள்ளோட் டம் விடப்பட்டது.

                  விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும் பணி, கடந்த 2006ம் ஆண்டு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கியது. முதல் கட்டமாக சீர் காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ., தூரம் பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஜன., 28ம் தேதி முதல், சரக்கு ரயில்கள் இயங்கி வருகிறது. ரண்டாம் கட்டமாக 48 கி.மீ., கடலூர் - விழுப்புரம் பாதை பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி, கடலூர் - விழுப்புரம் ரயில்வே பாதையில், இலகு ரக இன் ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.மூன்றாம் கட்டமாக கடலூர் - சிதம்பரம் வரையிலான பாதை, பணிகள் முடிக்கப்பட்டது.இதையடுத்து, விழுப்புரத்திலிருந்து - மயிலாடுதுறைக்கு நேற்று காலை 7.40 மணிக்கு 3,632 டன் அரிசி ஏற்றிய, 41 பெட்டிகள் கொண்ட ரயில் ஒன்றும், அதே போல் காலை 7.35 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு 3,630 டன் சர்க்கரை ஏற்றிய 40 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலும் வெள்ளோட்டமாகப் புறப்பட்டன.

                          இரண்டு ரயில்களும் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் செல்லவும், குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் 20 முதல் 30 கி.மீ., வேகத்திலும், செல்ல டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ழுப்புரத்திலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மதியம் 2 மணிக்கு மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட ரயில் 1.45 மணிக்கும் விழுப்புரத்தையும் சென்றடைந்தன.ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ்.நாயுடு சோதனை செய்து, "பயணிகள் ரயில்கள் இயக்கப்படலாம்' என தரச் சான்று அளித்தவுடன், ரயில்கள் இயங்கும். இன்னும் முழுமை பெறாமல் உள்ள பணிகள் முடிவடைந்து, சோதனை செய்து தரச்சான்று வழங்க மூன்று முதல் ஐந்து மாதங்கள் ஆகும் என தெரிகிறது.

தாமதத்தை மறைக்க வெள்ளோட்டம் :

             சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டாலும், பணிகள் முழுமையாக முடித்து ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதனால் அனைத்து இடங்களிலும் "பாயின்ட்'களை, ஊழியர்களே இயக்கினர். "கேட்'கள் முழுமையாக மூட முடியாமல், ஸ்டேஷனில் பணிபுரிபவர்கள் கேட் அருகே வந்து, சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, ரயிலை அனுப்பி வைத்தனர். பணி துவங்கி மூன்றாண்டுகளுக்கு மேல் ஆவதால், காலதாமதத்தை மறைக்க, அவசர அவசரமாக சரக்கு ரயில் இயக்கப்பட்டுள்ளது.சிக்னல்கள் வேலை செய்யாத பட்சத்திலும், எந்த நேரத்தில் ரயில் வரும் என தெரியாத நிலையில், ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கும் போதிலும் விபத்துகள் நேர வாய்ப்புகள் உள்ளது.

              பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷன்களில், "லூப் லைன்' பணிகளே நிறைவடையாத நிலையில் உள்ளது.ஆர்.வி.என்.எல்., நிறுவனம் பணிகளை முழுமையாக முடித்து, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைத்த பிறகே, பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior