உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

பொதிகை டிவி'யில் சிதம்பரம் நடராஜர் கோவில்

General India news in detail
                       பொதிகை, 'டிவி'யில் தினமலர் வழங்கும், 'எப்படிப் பாடினரோ' நிகழ்ச்சியில், இன்று, ஆடல் வல்லானின் அருமைகளை பறைசாற்றும் சிதம்பரம் கோவில் பற்றிய தகவல்கள் முதல் பகுதி இடம் பெறுகின்றன. வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில், காலை 11.30 முதல் 11.55 மணி வரை, தினமலர் வழங்கும், 'எப்படிப் பாடினரோ' நிகழ்ச்சி பொதிகை 'டிவி'யில் ஒளிபரப்பாகி வருகிறது.

               அதில், இன்று, சொல்லில் அடங்கா பெருமைகள் அடங்கிய சிதம்பரம் கோவில் உள்ள இடம், ஈசனுக்குப் பூசை செய்ய பூப்பறிக்க வசதியாக, புலியின் கால்களையும் கண்களையும் வேண்டிப் பெற்று ,'வியாக்ரபாதர்' என்ற முனிவர் இறைவனின் ஆனந்தக் கூத்தை காண வேண்டி தவம் செய்யும் வரலாறு, அனைத்து சிவாலய மூர்த்தங்களின் சக்தியும், இரவில் அர்த்த காமபூஜைக்கு முன் வந்தடங்கும் திருமூலட்டான மூர்த்தியின் பெருமை, பஞ்சபூத மற்றும் இறைவன் ஆடிய பஞ்ச சபைகளுள் ஒன்றாக சிதம்பரம் திகழ்வது, சைவ சமயக் குரவர்களில் மூவரால் பாடப்பெற்றது.

               திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு, தல விருட்சம் மற்றும் தீர்த்தங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகின்றன. ஆடியோ வேர்ல்ட் சுக்ராவிஷன் தயாரிப்பான இந்நிகழ்ச்சி, டாக்டர் கணேஷ் இசையில், நீலகண்டன் ஒருங்கிணைப்பில், அரிமளம் ரவிச்சந்திரன் எழுத்தாக்கத்தை ஜெயம் கொண்டான் தொகுத்து வழங்கி இயக்கியுள்ளார்.

Read more »

டி20: இங்​கி​லாந்​துக்கு கோப்பை


                         "டுவென்டி-20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி ஜோராக கைப்பற்றியது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது. கீஸ்வெட்டரின் அதிரடி அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. இதன் மூலம் ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை தொடர்களில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை "டுவென்டி-20 உலக கோப்பை துரதிருஷ்டம் தொடர்ந்தது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால், வாய்ப்பை பரிதாபமாக இழந்தது.
 
               வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடர் நடந்தது. நேற்று பார்படாசில் நடந்த பைனலில் "ஆஷஸ் எதிரிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கோலிங்வுட் துணிச்சலாக பீல்டிங் தேர்வு செய்தார்.  
 
சைடுபாட்டம் மிரட்டல்:
 
               ஆஸ்திரேலிய அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. சைடுபாட்டம் வீசிய முதல் ஓவரில் வாட்சன் அடித்த பந்து, "கீப்பர் கீஸ்வெட்டர் "கிளவுசில் பட்டு நழுவியது. அதனை சுவான் சாமர்த்தியமாக பிடிக்க, 2 ரன்களுக்கு வெளியேறினார். மைக்கேல் லம்ப்பின் நேரடி "த்ரோவில் வார்னர்(2) நடையை கட்டினார். பின் சைடுபாட்டம் வேகத்தில் பிராட் ஹாடின் (1), கீஸ்வெட்டரின் சர்ச்சைக்குரிய "கேட்ச்சில் அவுட்டானார். பந்து, ஹாடின் தொடையில் பட்டு வந்தது "ரீப்ளேவில் தெளிவாக தெரிந்தது. இப்படி "டாப்-ஆர்டர் விரைவில் சரிய, 2.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 8 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
 
கிளார்க் ஏமாற்றம்:
 
               பிரஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட இங்கிலாந்து வேகங்கள் மிக துல்லியமாக பந்துவீச, "பவர் பிளே ஓவரில் ரன் வறட்சி ஏற்பட்டது. சுவான் சுழலில் கோலிங்வுட்டின் சூப்பர் "கேட்ச்சில் கேப்டன் மைக்கேல் கிளார்க்(27) வெளியேற, ஆஸ்திரேலிய அணி 9.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து திணறியது.
 
டேவிட் ஹசி ஆறுதல்:
 
                இதற்கு பின் கேமரான் ஒயிட், டேவிட் ஹசி இணைந்து போராடினர். யார்டி வீசிய 13வது ஓவரில் டேவிட் ஹசி, ஒரு சிக்சர் அடித்தார். பின் ஒயிட் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன்கள் கிடைத்தது. ஒயிட் 30 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சகோதரர் மைக்கேல் ஹசி "கம்பெனி கொடுக்க, டேவிட் ஹசி அரைசதம் எட்டினார். இது சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் இவரது 3வது அரைசதம். இவர் 59 ரன்களுக்கு(2 சிக்சர், 2 பவுண்டரி) ரன் அவுட்டானார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் வாணவேடிக்கை காட்டிய மைக்கேல் ஹசி(17*), இம்முறை அதிரடியாக ரன் சேர்க்க இயலவில்லை. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் மட்டும் எடுத்தது.
 
கீஸ்வெட்டர் கலக்கல்:
 
                எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு லம்ப்(2) ஏமாற்றம் அளித்தார். இதற்கு பின் கீஸ்வெட்டர், பீட்டர்சன் இணைந்து கலக்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த இவர்கள், மிக எளிதாக ரன் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கீஸ்வெட்டர், வாட்சன், நானஸ் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். இவர் சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் தனது முதல் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபக்கம் நானஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பீட்டர்சன்(47) அரைசதத்தை நழுவ விட்டார். சிறிது நேரத்தில் ஜான்சன் வேகத்தில் கீஸ்வெட்டர் 63 ரன்களுக்கு(7 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டாக, லேசாக பதட்டம் ஏற்பட்டது.
 
               பின் மார்கன், கேப்டன் கோலிங்வுட் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். வாட்சன் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த கோலிங்வுட், அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் "டுவென்டி-20 உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. ஆஸ்திரேலியா மீண்டும் ஏமாற்றம் அளித்தது. ஆட்ட நாயகனாக கீஸ்வெட்டர் மற்றும் தொடர் நாயகனாக பீட்டர்சன் தேர்வு செய்யப்பட்டனர்.
 
ஸ்கோர் போர்டு
ஆஸ்திரேலியா

வாட்சன்(கே)சுவான்(ப)சைடுபாட்டம்    2(3)
வார்னர்-ரன் அவுட்(லம்ப்)    2(11)
கிளார்க்(கே)கோலிங்வுட்(ப)சுவான்    27(35)
ஹாடின்(கே)கீஸ்வெட்டர்(ப)சைடுபாட்டம்    1(2)
டேவிட் ஹசி-ரன் அவுட்(ரைட்/கீஸ்வெட்டர்)    59(73)
ஒயிட்(கே)பிராட்(ப)ரைட்    30(21)
மைக்கேல் ஹசி-அவுட் இல்லை-    17(26)
ஸ்மித்-அவுட் இல்லை-    1(3)
உதிரிகள்    8
மொத்தம்(20 ஓவரில் 6 விக்.,)    147
விக்கெட் வீழ்ச்சி: 1-2(வாட்சன்), 2-7(வார்னர்), 3-8(ஹாடின்), 4-45(கிளார்க்), 5-95(ஒயிட்), 6-142(டேவிட் ஹசி).
பந்துவீச்சு: சைடுபாட்டம் 4-0-26-2, பிரஸ்னன் 4-0-35-0, பிராட் 4-0-27-0, சுவான் 4-0-17-1, யார்டி 3-0-34-0, ரைட் 1-0-5-1.
 
இங்கிலாந்து

லம்ப்(கே)டேவிட் ஹசி(ப)டெய்ட்    2(4)
கீஸ்வெட்டர்(ப)ஜான்சன்    63(49)
பீட்டர்சன்(கே)வார்னர்(ப)ஸ்மித்    47(31)
கோலிங்வுட்-அவுட் இல்லை-    12(5)   
மார்கன்-அவுட் இல்லை-    15(13)   
உதிரிகள்    9
மொத்தம்(17 ஓவரில் 3 விக்.,)    148
விக்கெட் வீழ்ச்சி: 1-7(லம்ப்), 2-118(பீட்டர்சன்), 3-121(கீஸ்வெட்டர்).
பந்துவீச்சு: நானஸ் 4-0-29-0, டெய்ட் 3-0-28-1, ஜான்சன் 4-0-27-1, ஸ்மித் 3-0-21-1, வாட்சன் 3-0-42

 புதிய வரலாறு

                      நேற்று சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் தொடர்களில், முதன்முறையாக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. முன்னதாக ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடரில் மூன்று முறை (1979, 87, 92), சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில் ஒரு முறை (2004) பைனல் வரை சென்று, கோப்பை வெல்ல தவறியது. தவிர இது, "டுவென்டி-20 உலக கோப்பை அரங்கில், இங்கிலாந்து அணியின் முதல் சாம்பியன் பட்டம்.
 
 ஆஸி.,க்கு இல்லை ராசி

                  ஒரு நாள் போட்டியில் நான்கு முறை(1987, 99, 2003, 07) உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு "டுவென்டி-20 தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் ராசி இல்லை. மிக முக்கியமான நேற்றைய பைனலில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பி, கோப்பை வாய்ப்பை இழந்தது.

ஜெயவர்தனா அபாரம்
 
                   மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில், இலங்கையின் மகிலா ஜெயவர்தனா முதலிடம் பிடித்தார். ஆறு போட்டியில் விளையாடிய ஜெயவர்தனா ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 302 ரன்கள் குவித்தார்.
 
இத்தொடரில் 200 ரன்களுக்குமேல் குவித்த வீரர்கள்:

வீரர்    போட்டி    ரன்    சதம்/அரைசதம்

ஜெயவர்தனா (இலங்கை)    6    302    1/2
பீட்டர்சன் (இங்கிலாந்து)    6    6    248    0/2
சல்மான் பட் (பாக்.,)    6    6    223    0/2
கீஸ்வெட்டர் (இங்கிலாந்து)    7    7    222    0/1
ரெய்னா (இந்தியா)    5    5    219    1/1

நானஸ் துல்லியம்
 
                மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில், ஆஸ்திரேலியாவின் நானஸ் முதலிடம் பிடித்தார். ஏழு போட்டியின் விளையாடிய நானஸ் 14 விக்கெட் வீழ்த்தினார்.
இத்தொடரில் 10 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர்கள்:
வீரர்    போட்டி    விக்கெட்
நானஸ் (ஆஸி.,)    7    14
லாங்கிவெல்ட் (தெ.ஆ.,)    4    11
ஸ்மித் (ஆஸி.,)    7    11
அஜ்மல் (பாக்.,)    6    11
சுவான் (இங்கிலாந்து)    7    10
ஜான்சன் (ஆஸி.,)
நெஹ்ரா (இந்தியா)    5    10
சைடுபாட்டம் (இங்கிலாந்து)    7    10

ரெய்னா அதிரடி
 
                  மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சுரேஷ் ரெய்னா முதலிடம் பிடித்தார். இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 60 பந்தில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். இவரை தொடர்ந்து இலங்கையின் மகிலா ஜெயவர்தனா (64 பந்து, 100 ரன்கள்) உள்ளார். தவிர, இத்தொடரில் சதம் கடந்த வீரர்கள் என்ற பெருமையை ரெய்னா, ஜெயவர்தனா பெற்றனர்.
 
சிக்சர் மன்னன் ஒயிட்

                  மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில், அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் காமிரான் ஒயிட் முதலிடம் பிடித்தார். இவர் 7 போட்டியில் விளையாடி, 12 சிக்சர் விளாசினார். இவரை தொடர்ந்து ஜெயவர்தனா (இலங்கை), கீஸ்வெட்டர் (இங்கிலாந்து), வாட்சன் (ஆஸி.,) ஆகியோர் தலா 11 சிக்சர் விளாசினர். உமர் அக்மல் (பாக்.,), டேவிட் ஹசி (ஆஸி.,), டேவிட் வார்னர் (ஆஸி.,) ஆகியோர் தலா 10 சிக்சர் விளாசினர்.

அதிர்ச்சியான துவக்கம், சந்தோஷமான முடிவு


                    மூன்றாவது "டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு, ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்து. ஏனெனில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் போட்டியில், "டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி தோல்வியை சந்தித்தது. இதனால் 2வது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட, "ரன்-ரேட் அடிப்படையில் "சூப்பர்-8 வாய்ப்பை பெற்றது. இதில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து, பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்கிரீன் பிரச்னை
           
                 இங்கிலாந்து பேட் செய்த போது, 3வது ஓவரில் மைதானத்தில் இருந்த "ஸ்கிரீனில் பிரச்னை ஏற்பட்டது. "ஸ்கிரீன் முழுவதும் கருப்பு நிறமாக மாறாததால் சுமார் 5 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. ஒருவழியாக சரி செய்யப்பட, போட்டி தொடர்ந்து நடந்தது.

Read more »

கால​மா​னார் எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன்


          பிர​பல எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் ​(62) சென்​னை​யில் ஞாயிற்றுக்கிழமை கால​மா​னார்.​உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக அவர் மருத்துவ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.​சென்னை திரு​வான்​மி​யூ​ரில் வசித்து வந்த அனு​ராதா ரம​ணன்,​​ ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட சிறு​க​தை​க​ளை​யும்,​​ 850 நாவல்​க​ளை​யும் எழு​தி​யுள்​ளார்.​ 
 
                சிறை,​​ ஒரு வீடு இரு வாசல்,​​ கூட்​டுப் புழுக்​கள் ஆகிய இவ​ரு​டைய நாவல்​கள் திரைப்​ப​டங்​க​ளாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​எழுத் ​துத் துறை​யில் சிறந்து விளங்​கி​ய​தற்​காக முன்​னாள் முதல்​வர் எம்.ஜி.ஆரி​ட​மி​ருந்து தங்​கப் பதக்​கம் மற்​றும் சிறந்த எழுத்​தா​ள​ருக்​கான ராஜீவ் காந்தி விருது என பல்​வேறு விரு​து​களை இவர் பெற்​றுள்​ளார்.​கடந்த சில நாள்​க​ளாக உடல் நிலை சரி​யில்​லா​மல் இருந்த இவர்,​​ அடை​யா​றில் உள்ள தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்கப்பட்டிருந்​தார் .​ஞாயிற்​றுக்​கி​ழமை மாலை மார​டைப்பு ஏற்​பட்டு அவர் உயி​ரி​ழந்​தார்.​ அவ​ரு​டைய உடல் திரு​வான்​மி​யூர் வால்​மீகி நக​ரில் அவ​ரது இல்லத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது.​ திங்​கள்​கி​ழமை மாலை 4 மணிக்கு பெசன்ட் நக​ரில் உள்ள எரி​வாயு தகன மயா​னத்​தில்,​​ அவ​ரு​டைய உடல் தன​கம் செய்​யப்​பட உள்​ளது.​ மறைந்த அனு​ராதா ரம​ண​னுக்கு இரண்டு மகள்​கள் உள்​ள​னர்.

Read more »

இன்று முதல் எம்.பி.பி.எஸ் விண்​ணப்​பம்:​ 17 அரசு ​கல்​லூ​ரி​க​ளில் விநி​யோ​கம்

              எம்.பி.பி.எஸ்.,​​ பி.டி.எஸ்.​ ​(பல் மருத்​து​வம்)​ படிப்​பு​க​ளில் ​மாண​வர்​க​ளைச் சேர்க்க திங்​கள்​கி​ழமை ​(மே 16) முதல் விண்​ணப்​பம் வழங்​கப்​ப​டு​கி​றது.​அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் உள்ள 1,483 எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் மற்​றும் சென்னை பாரி​முனை அரசு பல் மருத்​து​வக் கல்​லூ​ரி​யில் உள்ள 85 பி.டி.எஸ்.​ இடங்​க​ளில் மாண​வர்​கள் சேர்க்​கப்​ப​டு​வார்​கள்.​​

            ​ சென்னை மருத்​து​வக் கல்​லூரி,​​ அரசு ஸ்டான்லி மருத்​து​வக் கல்​லூரி,​​ கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ வேலூர் அரசு மருத்து​வக் கல்​லூரி,​​ தரு​ம​புரி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ திருச்சி அரசு மருத்​து​வக் கல்லூரி,​​ தஞ்​சா​வூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ கோவை அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ மதுரை அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ தேனி அரசு மருத்​து​வக் கல்லூரி,​​ நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ தூத்​துக்​குடி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ கன்​னி​யா​கு​மரி அரசு மருத்​து​வக் கல்​லூரி,​​ புதி​தா​கத் திறக்​கப்​பட உள்ள விழுப்​பு​ரம்,​​ திரு​வா​ரூர் அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் விண்​ணப்​பம் விநி​யோ​கிக்​கப்​ப​டும்.​மொத்​தம் 20,000 விண்​ணப்​பங்​கள் அச்​சி​டப்​பட்​டுள்​ளன.​ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்​ணப்​பம் வழங்​கப்​ப​டும்.​ஒரே விண்​ணப்​பம்:​ எம்.பி.பி.எஸ்.-​பி.டி.எஸ்.​ ​(பல் மருத்​து​வம்)​ படிப்​பில் சேர வழக்​கம் போல ஒரே விண்​ணப்​பம் வழங்​கப்​ப​டும்.​ சென்னை பாரி​மு​னை​யில் உள்ள அரசு பல் மருத்​து​வக் கல்​லூ​ரி​யி​லும் விண்​ணப்​பம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ​ விநி​யோ​கிக்​கப்​ப​டும்.​ கட்​ட​ணம் ரூ.500-க்கு டி.டி.​ அளித்து விண்​ணப்​பத்தை பெற்​றுக் கொள்​ள​லாம்.​ ஆதி​தி​ரா​விட,​​ பழங்​குடி வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கு விண்​ணப்ப கட்​ட​ணம் கிடை​யாது.​மே 31 கடைசி:​ விண்​ணப்ப விநியோகம் மே 31-ம் தேதி பிற்​ப​கல் 3 மணி வரை நடை​பெ​றும்.​ பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பம்,​​ சென்னை கீழ்ப்​பாக்​கம் மருத்​து​வக் கல்வி தேர்​வுக் குழு​வுக்கு வந்து சேர கடைசி நாள் மே 31-ம் தேதி என ​நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​ஜூன் 11-ல் ரேங்க் பட்​டி​யல்:​​ எம்.பி.பி.பி.எஸ்.​ முத​லாம் ஆண்டு படிப்​பில் சேர விண்​ணப்​பிக்​கும் மாண​வர்​க​ளுக்கு வரும் ஜூன் 11-ம் தேதி ரேங்க் பட்​டி​யல் ​வெளி​யி​டப்​ப​டும்.​ சென்னை கீழ்ப்​பாக்​கத்​தில் முதல் கட்ட கவுன்ச​லிங் ஜூன் 21-ம் தேதி தொடங்​கும்.

எம்.பி.பி.எஸ்.​ பொதுப் பிரிவு ​கட்-​ஆஃப் 197.5

                 இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் பொதுப் பிரிவு மாண​வர்​கள் சேரு​வ​தற்​கான கட்-​ஆஃப் மதிப்​பெண் 197.5-ஆக இருக்​கும் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​விழுப் ​பு​ரம்-​திரு​வா​ரூர் அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் இந்த ஆண்டே மாண​வர்​க​ளைச் சேர்க்க இந்​திய மருத்​து​வக் கவுன்​சில் அனு​மதி வழங்​கி​யுள்​ள​தால்,​​ கட்-​ஆஃப் ​197.75-லிருந்து 197.50-ஆகக் குறைந்​துள்​ளது.​​ சென்​னை​யில் 3 அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​கள்,​​ செங்​கல்​பட்டு,​​ வேலூர்,​​ திருச்சி,​​ மதுரை,​​ கோவை,​​ சேலம்,​​ நெல்லை மற்​றும் புதி​தாக மாண​வர் சேர்க்கை அனு​ம​திக்​கப்​பட்​டுள்ள விழுப்​பு​ரம்-​திரு​வா​ரூர் அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளை​யும் சேர்த்து 17 அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் மொத்​தம் 1,653 எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் உள்​ளன.​​ ​ விழுப்​பு​ரம்,​​ திரு​வா​ரூர் அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் இந்​திய மருத்​து​வக் கவுன்​சில் அனு​மதி அளித்​துள்​ள​தால்,​​ பொதுப் பிரி​வி​ன​ருக்கு உரிய 31 சத​வீத இடங்​கள் 460-லிருந்து 512-ஆக அதி​க​ரித்​துள்​ளது.​ 

                   பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கு உரிய 26.5 சத​வீத இடங்​கள் 393-லிருந்து 439-ஆக அதி​க​ரித்​துள்​ளது.​​ ​ எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் சேரு​வ​தற்கு உரிய உயி​ரி​யல்,​​ இயற்​பி​யல்,​​ வேதி​யி​யல் ஆகிய முக்​கிய பாடங்​க​ளில் கடந்த ஆண்​டைப் போலவே இந்த ஆண்​டும் பல மாண​வர்​கள் அதிக கட்-​ஆஃப் மதிப்​பெண் பெற்​றுள்​ள​னர்.​​ ​ அதா​வது,​​ கட்-​ஆஃப் மதிப்​பெண் 200-க்கு 200-ல் தொடங்கி,​​ கட்-​ஆஃப் மதிப்​பெண் 197.5 வரை 576 மாணவ-​மாண​வி​யர் இடம்​பெற்றுள்​ள​னர்.​ மொத்​தம் உள்ள 17 அரசு மருத்​து​வக் கல்​லூ​ரி​க​ளில் பொதுப் பிரி​வி​ன​ருக்கு உரிய மொத்த இடங்​கள் 512 ​(31 சத​வீ​தம்)​ என்​ப​தால்,​​ பொதுப் பிரிவு மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் மதிப்​பெண் இந்த ஆண்டு 200-க்கு 197.5-ஆக இருக்​கும் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​​ ​ கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் சேர பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 200-க்கு 195.75-ஆக​வும் பிற்​ப​டுத்​தப்​பட்ட ​(முஸ்​லிம்)​ வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 194.75-ஆக​வும்,​​ மிக​வும் பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 193.5-ஆக​வும் தாழ்த்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்​கான கட்-​ஆஃப் 189.25-ஆக​வும் தாழ்த்​தப்​பட்ட ​(அருந்​த​தி​யர்)​ வகுப்​பைச் சேர்ந்​தோ​ருக்கு கட்-​ஆஃப் 181.5-ஆக​வும் ​பழங்​குடி வகுப்​பைச் சேர்ந்​த​வர்​க​ளுக்கு கட்-​ஆஃப் 178.75-ஆக​வும் இருந்​தது.​​ ​ பொதுப் பிரி​வி​ன​ருக்கு உரிய இடங்​க​ளில் அதிக கட்-​ஆஃப் மதிப்​பெண் எடுத்த பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த பெரும்​பா​லான மாண​வர்​கள் இடம்​பெ​று​வது வழக்​க​மாக உள்​ளது.​ மேலும் பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பி​ன​ருக்கு என தனி​யாக 26.5 சத​வீத இடங்​கள்,​​ அதா​வது மொத்​தம் 439 எம்.பி.பி.எஸ்.​ இடங்​கள் உள்​ளன.​ இந்த ஆண்டு பிற்​ப​டுத்​தப்​பட்ட மாண​வர்​க​ளுக்கு உரிய கட்-​ஆஃப் மதிப்​பெண் 195.75 முதல் 194.75 வரை இருக்​கும் என மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.​ ரேங்க் பட்​டி​யல் வெளி​யா​கும்​போது பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கு உரிய கட்-​ஆஃப் மதிப்​பெண் துல்​லி​ய​மாக நிர்​ண​யிக்​கப்​பட்டு விடும்.​பழைய மாண​வர்​கள் விண்​ணப்​பிக்​க​லாமா?​ எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் சேர பழைய பிளஸ் 2 மாண​வர்​க​ளும் விண்​ணப்​பிக்​க​லாம்.​ கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.​ படிப்​பில் சேர விண்​ணப்​பித்த 14,321 மாண​வர்​க​ளில்,​​ 533 பேர் பழைய மாண​வர்​கள் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​ இந்த ஆண்​டும் பழைய மாண​வர்​கள் விண்​ணப்​பிக்​க​லாம் என்று மருத்​து​வக் கல்வி தேர்​வுக் குழு அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.
 

Read more »

சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மேலாண்​மைத்​துறை சார்​பில் கோடைக் ​கால எம்.ஃபில்.​ படிப்பு தொடக்க விழா

சிதம்ப​ரம்:
 
        சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மேலாண்​மைத்​துறை சார்​பில் கோடைக்​கால எம்.ஃபில்.​ பட்​டப்​ப​டிப்பு தொடக்​க​விழா அண்​மை​யில் நடை​பெற்றது.​ து​ணை​வேந்​தர் டாக்​டர் எம்.ராம​நா​தன் குத்​து​வி​ளக்​கேற்றி தொடங்கி வைத்​தார்.​ வேளாண்​புல முதல்​வர் பி.நாரா​ய​ண​சாமி வாழ்த்தி பேசினார்.​ மேலாண்​மைத்​துறை தலை​வர் ந.பஞ்​ந​தம் தலைமை வகித்​தார்.​ முனை​வர் ராஜா​மோ​கன் தொடக்​க​வு​ரை​யாற்​றி​னார்.​ பேரா​சி​ரி​யர் ஆனந்த் நன்றி கூறி​னார்.

Read more »

சிதம்​ப​ரம் அரசு மருத்​து​வ​மனை நோயா​ளி​கள் தண்​ணீ​ரின்றி அவ​தி

சிதம்​ப​ரம்:

                சிதம்​ப​ரம் காம​ராஜ் அரசு மருத்​து​வ​ம​னை​யில் கடந்த 3 தினங்​க​ளாக மோட்​டார் பழு​தால் தண்​ணீன்றி நோயா​ளி​க​ளும்,​​ மருத்​து​வர்​க​ளும் பெரும் அவ​தி​யுற்​றுள்​ள​னர்.​
சி​தம்​ப​ரம் காம​ராஜ் அரசு மருத்​து​வ​ம​னை​யில் தண்​ணீர் பற்​றாக்​கு​றையை போர்​வெல் அமைக்​கப்​பட்டு போக்கு சிறிய மேல்​நிலை குடி​நீர்த் தேக்​கத் தொட்டி மூலம் நீரேற்றி குடி​நீர் வழங்​கப்​பட்டு வந்​தது.​    இந்​நி​லை​யில் நீரேற்​றும் மோட்​டா​ரில் காயில் பழு​த​டைந்​த​தால் கடந்த 3 தினங்​க​ளாக தண்​ணீ​ரின்றி உள்​நோ​யா​ளி​க​ளும்,​​ மருத்​து​வர்​க​ளும் பெரும் அவ​திக்​குள்​ளா​கி​யுள்​ள​னர்.​ ம​கப்​பேறு பிரி​வில் பிர​ச​வத்​துக்கு வரும் பெண்​க​ளுக்கு இனிமா கொடுக்க அரு​கில் உள்ள டீக்​க​டை​யில் தண்​ணீர் பெறும் நிலை உள்​ளது.​  கழிபபறை​கள் உப​யோ​கப்​ப​டுத்​தப்​பட முடி​யா​மல் நோயா​ளி​கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.​   அ​ரசு மருத்​து​வ​ம​னை​யில் தினந்​தோ​றும் குடி​நீர்த் தொட்டி வழிந்து அரு​கில் உள்ள சாலை​யில் ஓடி​வந்​தது.​ குறிப்​பிட்ட நேரத்​தில் மோட்​டாரை இயக்கி நீரை சேமிக்​கா​மல் ​ மோட்​டாரை நீண்ட நேரம் இயங்​கி​ய​தால் மின்​மோட்​டார் பழு​த​டைந்​த​தாக அங்​குள்ள உள்​நோ​யா​ளி​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​    எ​னவே நோயா​ளி​கள் நலன் கருதி உட​ன​டி​யாக நீரேற்​றும் மோட்​டாரை போர்க்​கால அடிப்​ப​டை​யில் பழுது நீக்க மாவட்ட சுகா​தா​ரத்​துறை நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என தமிழ்​நாடு நுகர்​வோர் குழு​மச் செய​லா​ளர் சி.டி.அப்​பாவு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

 

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் ​ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்​புப் பணி​கள்​: மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் ஆய்வு

சிதம்​ப​ரம்:

                கட​லூர் மாவட்​டத்​தில் ரூ.420 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்பு பணி​கள் மேற்​கொள்ள மத்​திய அரசு ஒப்​பு​தல் வழங்​கு​வ​தற்​காக மத்​திய நீர்​வள ஆணைய குழு​வி​னர் மே15,16 தேதி​க​ளில் ஆய்வு மேற்​கொண்​ட​னர்.​ த​மிழ​கத்​தில் திருச்சி,​​ நாகப்​பட்​டி​னம்,​​ கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ அரி​ய​லூர்,​​ பெரம்​ப​லூர்,​​ திருச்சி,​​ புதுக்​கோட்டை ஆகிய 8 மாவட்​டங்​க​ளில் ரூ.620 கோடி​யில் வெள்​ளத்​த​டுப்பு பணி​கள் மேற்​கொள்ள தமி​ழ​க​அ​ரசு அறி​வித்​துள்​ளது.​ இதில் 75 சத​வீத தொகை மத்​திய அர​சும்,​​ 25 சத​வீத தொகை மாநில அர​சும் வழங்​கு​கி​றது.​

               இத்​திட் ​டங்​க​ளுக்கு மத்​திய அரசு நிர்​வாக அனு​மதி மற்​றும் ஒப்​பு​தல் வழங்க தமி​ழ​கத்​தில் மேற்​கண்ட மாவட்​டங்​க​ளில் மத்​திய அரசு நீர்​வள ஆணைய இயக்​கு​நர் எஸ்.​லால்,​​ தலை​மைப் பொறி​யா​ளர் சௌத்​திரி ஆகி​யோர் மேற்​கொண்​டுள்​ள​னர்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் வெள்​ளாற்று கரையை பலப்​படுத்​து​வது,​​ கொள்​ளி​டம் வடக்கு கரையை பலப்​ப​டுத்​து​தல்,​​ கான்​சா​கிப் வாய்க்கால் இரு​க​ரையை உயர்த்​து​வது உள்​ளிட்ட பணி​கள் மேற்​கொள்​ளப்​படவுள்​ளன.​ மத்​திய அரசு நீர்​வள ஆணை​யக் குழு​வி​னர் அணைக்​கரை,​​ வல்​லம்​ப​டுகை ​(கொள்​ளி​டம் ஆற்​றங்​கரை)​,​​ அம்​மாப்​பேட்டை ​(கான்​சா​கிப் வாய்க்​கால்)​,​​ பாசி​முத்​தான்​ஓடை உள்​ளிட்ட பகு​தி​களை பார்​வை​யிட்​ட​னர்.​ அ​வர்​க​ளு​டன் கட​லூர் மாவட்ட பொதுப்​ப​ணித் துறை கண்​கா​ணிப்பு பொறி​யா​ளர் நஞ்​சன்,​​ செயற்​பொ​றி​யா​ளர் செல்​வ​ராஜ் மற்​றும் அதி​கா​ரி​கள் உடன் சென்​ற​னர்.​ அப்போது அக் குழு​வி​ன​ரி​டம் விவ​சா​யி​கள் சார்​பில் உழ​வர் கூட்​ட​மைப்​புத் தலை​வர் பி.ரவீந்​தி​ரன் பல்​வேறு கோரிக்​கை​கள் அடங்​கிய மனு ஒன்றை அளித்​தார்.​ அம்​ம​னு​வில் சிதம்​ப​ரம் அருகே உள்ள அம்​மா​பேட்டை பாலம் குறு​கி​ய​தாக உள்​ள​தால் வெள்​ள​நீர் வடியை வழி செல்​லா​மல் ஆண்​டு​தோ​றும் சேதத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது.​ எ​னவே அங்கு அக​ல​மாக புதிய பாலம் அமைக்க வேண்​டும்.​ நீர்​நிலை நிறைந்த வாய்க்​கால்​கள் குறுக்கே எதிர்​கா​லத்​தில் பாலம் அமைக்​கும் முன் நெடுஞ்​சா​லைத்​துறை,​​ ரயில்வே துறை அனு​மதி பெற்று அவர்​க​ளு​டன் இணைந்து பொதுப்​ப​ணித்​துறை பாலத்தை அமைக்க வேண்​டும்.​

              சி​தம்​ப​ ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் ஆண்​டு​தோ​றும் ஏற்​ப​டும் வெள்​ளச்​சே​தத்தை தவிர்க்​க​வும்,​​ விவ​சா​யத்தை காப்​பாற்ற நிரந்​தர நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.​ மேற்​கொண்ட வெள்​ளத்​த​டுப்​புப் பணி​கள் தொடங்கு முன்பு அப்​ப​ணி​கள் சரி​யாக நடை​பெ​று​கி​றதா என கண்​கா​ணிக்க கண்​கா​ணிப்​புக் குழு அமைக்க வேண்​டும் என பி.ரவீந்​தி​ரன் தெரி​வித்​துள்​ளார்.

Read more »

சாதிக் கல​வ​ரத்தால் பாதிக்கப்பட்ட ​தாழ்த்​தப்​பட்ட மக்களுக்கு நிவா​ர​ணம்​: ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை

கட​லூர்:

               கட​லூர் அருகே சாதிக் கல​வ​ரத்​தில் பாதிக்​கப்​பட்ட தாழ்த்​தப்​பட்ட மக்​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்க வேண்​டும் என்று,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில்,​​ அண்​மை​யில் மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் மனு அளிக்​கப்​பட்​டது.​

விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சியின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன் உள்​ளிட்ட நிர்​வா​கி​கள் பாதிக்​கப்​பட்ட மக்​க​ளு​டன் வந்து,​​ ஆட்​சி​ய​ரி​டம் அளித்த மனு:​ 

                   ​க​ட​லூர் அருகே நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த செஞ்​சி​வேல்,​​ சாதிக் கல​வ​ரத்​தால் பாதிக்​கப்​பட்​டார்.​ சுமார் ரூ.2.5 லட்​சம் மதிப்​புள்ள பொருள்​களை அவர் இழந்​துள்​ளார்.​ ஆனால் அவ​ருக்கு இது​வரை எந்த நிவா​ர​ண​மும் கிடைக்​க​வில்லை.​மே​லும் இந்​தக் கால​னி​யில் சாதிக் கல​வ​ரத்​தில் பாதிக்​கப்பட்ட இதர 8 குடும்​பத்​தி​ன​ருக்​கும் நிவா​ர​ணம் வழங்​கப்​ப​ட​வில்லை.​ பாதிக்​கப்பட்ட மக்​க​ளுக்கு விரை​வில் நிவா​ர​ணம் வழங்க வேண்​டும்.​கு​றிஞ்​சிப்​பாடி வட்​டம் கண்​ணாடி ஊராட்​சிக்கு உள்​பட்ட அண்ணா நக​ரில் 12 குடும்​பங்​க​ளுக்கு வீட்​டு​ம​னைப் பட்டா 1985-ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது.​ ஆனால் இது​வரை அவர்​க​ளுக்கு நிலம் ஒப்​ப​டைக்​கப்​ப​ட​வில்லை.​ அவர்​க​ளுக்கு வீட்​டு​மனை வழங்க வேண்​டும்.​ ​சிப்​காட் பகு​தி​யில் இயங்கி வரும் டாஸ்​மாக் கிடங்​கில் அப்​ப​கு​தி​யைச் சேர்ந்த தாழ்த்​தப்​பட்ட உள்​ளூர் மக்​க​ளுக்கு,​​ சுமை​தூக்​கும் வேலை வழங்க வேண்​டும்.​ சாதிய அடிப்​ப​டை​யில் அங்கு பணி மறுக்​கப்​ப​டு​கி​றது.​ தாழ்த்​தப்​பட்ட மக்​க​ளுக்கு அங்கு முன்​னு​ரிமை அளிக்க வேண்​டும்.​க​ட​லூர் அருகே எம்.பி.​ அக​ரம் ஊராட்சி மேல்​நிலை நீர்த் தேக்​கத் தொட்டி இயக்​கு​ந​ருக்கு 2007 முதல் ஊதி​யம் வழங்​கப்​ப​ட​வில்லை.​ அர​சி​யல் உள்​நோக்​கு​டன் பழி​வாங்​கும் நட​வ​டிக்​கை​யில் அவர் பாதிக்​கப்​பட்டு உள்​ளார்.​ முறைப்​படி பணி நிய​ம​னம் செய்​யப்​பட்ட அவ​ருக்கு ஊதி​யம் வழங்க வேண்​டும் என்​றும் மனு​வில் கோரப்​பட்டு உள்​ளது.

Read more »

விருத்​தா​ச​லம் நக​ராட்சி சார்​பில் துப்​பு​ரவு ஆய்​வா​ளர் அலு​வ​ல​கம் திறப்பு

விருத் ​தா​ச​லம்:

                 விருத்​தா​ச​லம் நக​ராட்சி சார்​பில்,​​ சாத்​துக்​கூ​டல் சாலை​யில் துப்​பு​ரவு ஆய்​வா​ளர் அலு​வ​ல​கக் கட்​ட​டத் திறப்பு விழா அண்​மை​யில் நடை​பெற்​றது.​ ந​க​ர​மன்ற தலை​வர் வ.க.முரு​கன் கட்​ட​டத்தை திறந்து வைத்​துப் பேசி​னார்.​ நகர்​மன்ற உறுப்​பி​னர் ராமு வர​வேற்​றார்.   நக​ராட்சி ஆணை​யர் திரு​வண்​ணா​மலை தலைமை தாங்​கி​னார்.​ நகர்​மன்ற துணைத் தலை​வர் தட்​சி​ணா​மூர்த்தி,​​ துப்​பு​ரவு அலு​வ​லர் பர​ம​சி​வம்,​​ நகர்​மன்ற உறுப்​பி​னர் சாவித்ரி ஆகி​யோர் முன்னிலை வகித்​த​னர்.​ ந​கர்​மன்ற உறுப்​பி​னர்​கள் கர்​ணன்,​​ பாபு,​​ அன்​ப​ழ​கன்,​​ துப்புரவு ஆய்​வா​ளர்​கள் பால​மு​ரு​கன்,​​ ராஜ்​கு​மார்,​​ சிவப்​பி​ர​கா​சம்,​​ துப்​பு​ரவு மேற்​பார்​வை​யா​ளர்​கள் முத்​த​மி​ழன்,​​ ஆறு​மு​கம்,​​ சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ செல்​வம் உள்​பட பலர் கலந்​து​ கொண்​ட​னர்.​

Read more »

கீரப்​பா​ளை​யத்​தில் திறன் உயர்த்​திய புதிய மின்​மாற்றி

சிதம்​ப​ரம்:

                 சிதம்​ப​ரத்தை அடுத்த கீரப்​பா​ளை​யம் ஊராட்​சி​யில் அமைந்​துள்ள 3311 கே.வி.​ துணை மின் நிலை​யத்​தில் உள்ள ஒரு மின் மாற்​றி​யின் திறனை 3 எம்.வி.ஏ.வி.லிருந்து 5 எம்.வி.ஏ.வாக உயர்த்தி அமைக்​கப்​பட்​டுள்​ளது.​ ரூ.2 லட்சம் மதிப்​பீட்​டில் அமைந்​துள்ள புதிய மின்​மாற்​றி​யால்,​​ கீரப்​பா​ளை​யம் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள சுமார் 20-க்கும் மேற்​பட்ட கிரா​மங்​க​ளுக்கு சீரான மின்சாரம் விநி​யோ​கிக்​கப்​ப​டும்.​ மின் ​மாற்​றி​யில் தொடக்​க​விழா வியாழக்கிழமை நடை​பெற்​றது.​ செயற்​பொ​றி​யா​ளர் ஆர்.செல்​வ​சே​கர் தலைமை தாங்​கி​னார்.​ கட​லூர் செயற் பொறி​யா​ளர் கே.சம்​பத்​ம​கா​ஜன் முன்​னிலை வகித்​தார்.​ க​ட​லூர் மின் பகிர்​மான வட்​டம் மேற்​பார்வை பொறி​யா​ளர் எம்.ரவி​ராம் புதிய மின்​மாற்​றியை இயக்கி வைத்​தார்.​ இதில் உதவி செயற்​பொ​றி​யா​ளர்​கள் என்.குமார்,​​ கே.வாசு​தே​வன்,​எஸ்.பாலாஜி,​​ மகேந்​தி​ரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

Read more »

வட​லூ​ரில் மாநில அள​வி​லான தக​வல் தொழில்​நுட்ப கருத்​த​ரங்கு

நெய்வேலி:

                 வட​லூர் ஓ.பி.ஆர்.​ கல்​வி​யி​யல் கல்​லூ​ரி​யில் "கல்​வி​யி​யல் தக​வல் தொடர்பு மற்​றும் தொழில்​நுட்​பம்' என்ற தலைப்​பில் மாநில அள​வி​லான ஒரு​நாள் கருத்​த​ரங்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​ க​ருத்​த​ரங்​கில் 300-க்கும் மேற்​பட்ட மாண​வி​கள் பங்​கேற்​ற​னர்.​ கருத்​த​ரங்​குக்கு கல்​லூ​ரி​யின் செய​லர் ஆர்.செல்​வ​ராஜ் தலைமை வகித்​தார்.​ சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழக மூத்​தோர் கல்​வித் துறை​யின் பேரா​சி​ரி​யர் டாக்​டர் என்.ஓ.நெல்லையப்பன் கருத்​த​ரங்கை தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​ பாரதியார் பல்​க​லைக் கழ​கத்​தின் கல்​வித் தொழில் நுட்​பத்​துறை பேரா​சி​ய​ரி​யர் சிங்​கா​ர​வேலு,​தக​வல் தொடர்பு மற்​றும் தொழில்​நுட்​பத்​திற்கு ஆங்​கில அவசியத்தை எடுத்​து​ரைத்​தார்.​இன்​டெல் நிறு​வ​னத்​தின் துணை மேலா​ளர் பி.ஆர்.சங்​கரி வகுப்​பறை மேலாண்மைக் குறித்து விளக்​கி​னார்.​ ஓ.பி.ஆர். ​ கல்வி நிறு​வ​னத்​தின் நிர்​வாக அலு​வ​ல​ரும்,​கருத்​த​ரங்க ஆலோ​ச​க​ரு​மான லதா ராஜ வெங்​க​டே​சன் வர​வேற்​றார்.​ கல்​லூ​ரி​யின் முதல்​வர் பொன்​மொ​ழி​சு​ரேஷ் நன்றி கூறி​னார்.

Read more »

தனி​யார் கட்​ட​டத்​தில் தள்​ளா​டும் விருத்​தா​ச​லம் கிளை நூல​கம்

விருத்​தா​ச​லம்:

                 விருத்​தா​ச​லத்​தில் உள்ள அரசு கிளை நூல​கம் கடந்த 55 ஆண்​டு​க​ளாக தனி​யார் கட்​ட​டத்​தி​லேயே இயங்கி வரு​கி​றது.​ ​வி​ ருத்​தா​ச​லத்​தில் அரசு கிளை நூல​கம் 1955-ம் ஆண்டு அமைக்​கப்​பட்​டது.​ 55 ஆண்​டு​கள் கடந்த நிலை​யி​லும் கிளை நூல​கம் இன்​றும் தனி​யார் கட்​ட​டத்​தி​லேயே இயங்கி வரு​கி​றது.​ தற்​போது விருத்​தா​ச​லம் ஜங்​ஷன் சாலை​யில் ஒரு சிறிய கட்​ட​டத்​தின் மேல் தளத்​தில்,​​ போது​மான இட​வ​சதி இன்றி நூல​கம் உள்​ளது.​ இந்​நூ​ல​கத்​தில் நிரந்த உறுப்​பி​னர்​க​ளாக 5500 பேர் உள்​ள​னர்.​ மேலும் நாளொன்​றுக்கு 200-க்கும் மேற்​பட்ட வாச​கர்​கள் நூல​கத்தை பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.​ ​இந்​நூ​ல​ கக் கட்​ட​டத்​தில் போது​மான வசதி இல்​லா​த​தால் வாச​கர்​கள் அமர்ந்து படிப்​ப​தற்​கும் குறிப்பு எடுத்​துச் செல்​ல​வும் முடி​யாத நிலை உள்​ளது.​ 

                  இதே​போன்று கணினி வைப்​ப​தற்கு தனி அறை​யில்​லா​த​தால் கணினி பயன்​பா​டும் குறை​வா​கவே உள்​ளது.​ குறிப்​பு​தவி,​​ சிறு​வர் பிரிவு மற்​றும் குடி​மைப்​பணி நூல்​களை வைப்​ப​தற்​கும் தனி இடம் இல்லை.​ இத​னால் அனைத்து நூல்​க​ளை​யும் ஒரே இடத்​தில் வைக்​க​வேண்​டிய சூழல் ஏற்​ப​டு​கி​றது.​ இத​னால் குறிப்​பு​தவி நூல்​களை எடுக்க வாச​கர்​கள் வரும்​போது புத்​த​கம் எங்கு இருக்கிறது எனத் தெரி​யா​மல் சிர​மத்​துக்கு உள்​ளா​கின்​ற​னர்.​ மேலும் நூல​கத்​துக்கு வரும் புது புத்​த​கங்​களை வைப்​ப​தற்கு இடம் இல்​லா​த​தால் பல புத்​த​கங்​கள் மூட்​டை​யி​லேயே கட்​டப்​பட்​டும்,​​ திரும்ப அனுப்​பும் நிலை​யும் ஏற்​ப​டு​கி​றது.​இ​து​கு​றித்து விருத்​தா​ச​லத்​தைச் சேர்ந்த திரு​மு​து​குன்​றம் எழுத்​தா​ளர்​கள் கூட்​ட​மைப்​பின் ஒருங்​கி​ணைப்​பா​ளர் கவி​ஞர் ரத்​தின.புக​ழேந்தி கூறி​யது:​வி​ருத் ​தா​ச​லத்​தில் கடந்த 55 ஆண்​டு​க​ளுக்கு மேலா​கவே அரசு கிளை நூல​கம் தனி​யார் கட்​ட​டத்​தில் இயங்கி வரு​கி​றது.​ இது​கு​றித்து பல்​வேறு கோரிக்​கை​களை தொடர்​பு​டைய அதி​கா​ரி​க​ளி​டம் முறை​யிட்​டோம்.​ இறு​தி​யாக விருத்​தா​ச​லம் அரசு ஆண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் நூல​கம் கட்​டு​வ​தற்கு இடம் ஒதுக்​கப்​பட்​டது.​ இதற்கு நக​ராட்சி மற்​றும் கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் சார்​பில் அனு​மதி வழங்​கப்​பட்​டது.​ ஆனால் பள்​ளி​யில் நூல​கக் கட்​ட​டம் அமைப்​ப​தற்கு மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அனு​மதி தர​வில்லை என கூறப்​ப​டு​கி​றது.​

இது குறித்து மாவட்ட முதன்​மைக்​கல்வி அலு​வ​ல​ரி​டம் கேட்​ட​தற்கு,​​ 

                        பள்ளி இடங்​களை பொது பயன்​பாட்​டுக்கு வழங்​கக்​கூ​டாது என கல்வி இயக்​கு​நர் சுற்​றிக்கை விடுத்​துள்​ளார்.​ எனவே இறுதி முடி​வெ​டுக்​கும் அதி​கா​ரம் இயக்​கு​ந​ருக்கு மட்​டுமே உண்டு என மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் கூறி​ய​தா​கத் தெரி​வித்​தார்.​நூ​ல​கத் ​துக்கு தொடர்​பு​டைய அர​சுத்​துறை அதி​கா​ரி​கள் உட​ன​டி​யா​கத் தலை​யிட்டு விருத்​தா​ச​லம் அரசு கிளை நூல​கத்தை சொந்த கட்​ட​டத்​தில் அமைத்​துத்​தர வேண்​டும் என்​பதே விருத்​தா​ச​லம் பகுதி மக்​க​ளின் எதிர்​பார்ப்​பா​கும்.

Read more »

Jewellery marts do brisk business

CUDDALORE: 

            Jewellery marts here did brisk business on the occasion of Akshaya Tritiya on Sunday.

          According to a jewellery shop owner, the bullish trend in the bullion market had not dampened buyers' spirit, thanks to the marriage season. However, post offices and nationalised banks that were also marketing gold coins of higher purity than those sold in the open market, remained closed on Sunday. Meanwhile, consumer activists launched a campaign to create awareness of gold purchase. Members of the Consumer Confederation of India and the Consumer Federation Tamil Nadu distributed handbills to passers-by on Lawrence Road insisting that buyers get proper receipts for every purchase. The receipts alone would help them in case of dispute over quality and also fetch revenue to the exchequer, according to M. Nizamudeen, executive general secretary of the federation. Consumers should also check for Bureau of Indian Standards marking for ensuring the quality of jewellery.

In case of complaints regarding hallmark jewellery, the consumers could contact 

The Deputy Director of BIS, 
CIT Campus, IV Cross Road, 
Chennai-600013, 
Ph: 044-22541442. 

For any misleading advertisements regarding jewellery, they could contact 

The Advertising Standards Council of India, 
205, Bombay Market, 
Post Box No.7939, 
Tardeo Road, 
Mumbai-400 034.

Read more »

Local body blamed for subway project delay

CUDDALORE: 

            The Joint Action Council of Welfare Organisations of Cuddalore has blamed the municipality for the delay in commencing the work on the subway at Lawrence Road level crossing here.

             In a recent meeting held under the aegis of the Consumer Federation of Tamil Nadu, the JAC adopted a resolution urging the civic body to immediately obtain the Council's approval for the construction of the subway and a service road. Coordinator of the JAC M. Nizamudeen said that the Southern Railway had approved the blueprint for the project and the State government expressed its readiness to allot funds. However, the municipality “was sitting on the proposal” even after Collector P. Seetharaman had requested it to pass a resolution, clearing the project without delay.

               Mr. Nizamudeen alleged that the municipality had delayed the project by proposing to the Collector to convene a meeting of leaders of all political parties and representatives of welfare organisations to discuss the issue. He said that if the municipality did not act immediately, the welfare organisations would stage a demonstration. Representation District Chairman of Lions Clubs International K. Thirumalai, in a representation to the Divisional Railway Manager, Southern Railway, said that as per the latest schedule, the railway crossing would have to be closed 20 times a day, each closure extending to 10 minutes. This meant that vehicular movement would be disrupted on this section for over three hours a day.

             As the railway track is running across the heart of the town, which has temples and commercial established on the one side of the track and the Collectorate and educational institutions and hospitals on the other, the closure of gates for a long duration would cause great inconvenience to the people. Mr. Thirumalai urged the Southern Railway to expedite the work on the proposed subway. He also wanted the Southern Railway to extend the Tambaram-Villupuram passenger train service to the Cuddalore Port junction, and, the Tirunelveli-Mayiladuthurai passenger train service to Villupuram.

Read more »

புதுச்சேரி கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம்! : தாமாக முன்வந்து வரி செலுத்துவது அதிகரிப்பு

கடலூர் : 

                  தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத புதுச்சேரி பதிவெண் கொண்ட கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

                    தமிழகத்தை விட புதுச்சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராமமக்கள் இதை பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பதாயிரம்ரூபாய் மதிப் புள்ள டூ விலர் வாங்குவோருக்கு 4000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. புதுச்சேரியின் எல்லையோரத்தில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்ட சில கிராம மக்கள் புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல், பெண் எடுப்பது போன்ற வற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அங்குள்ள வாகனங்களை தமிழக பகுதிகளில் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

                 மேலும் புதுச்சேரி எல்லையோர கிராம மக்கள் போலியான முகவரி கொடுத்து வாகனங் களை வாங்கி அதை தமிழக பகுதிகளில் ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் சாலை வரி செலுத்திவிட்டு தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓட்டி சாலையை தேய்ப்பது சரியானதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழக பகுதியில் ஓட்ட தனியாக சாலை வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டது.

            உண்மையான முகவரியில் வாங்கப்பட்ட வாகனங்களாக இருந்தால் ஆர்.சி.புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை புதுச்சேரியில் வாங்கி இருக்க வேண்டும். கடலூரில் ஓட்டுனர் உரிமம் பெற்று புதுச்சேரி வாகன பதிவெண் கொண்ட டூ வீலர்களை ஓட்டினால் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அவ்வாறு விதிமுறை மீறி தமிழகத்தில் ஓட்டும் வாகனங் கள் சோதனை செய்யப் பட்டு உடனுக்குடன் சாலை வரி செலுத்துமாறு பணிக்கப்படுகின்றனர்.

               அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் தினம் தினம் கடலூர்-புதுச்சேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை செய்து வருகின்றனர். கடலூரில் மட்டும் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சோதனை செய்து பிடித்துள்ளனர். சோதனை செய்யும் சில போலீசார் வழக்குபோடமல் இருக்க சாலைவரி கட்டணத்தில் பாதித்தொகையை கேட்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்தி வருகின்றனர். வாகனம் வாங்கும் தொகையில் 8 சதவீதம் சாலைவரியாக செலுத்த வேண்டும். இவையெல்லாம் டூ வீலர் கள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.

                  ஆனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் அதிகாரிகள் கார்களை சோதனை செய்து பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதை விட அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க கார்களை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 4 பழைய வாகனங்களை மட்டுமே பிடித்துள்ளனர். அரசுக்கு கார்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருந்தும் அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என புரியாத புதிராக உள்ளது.

Read more »

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் : 

          வானமாதேவி பிரிவு அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

             தமிழ்நாடு மின்சார வாரியம் வானமாதேவி பிரிவு அலுவலகத்தில் நாளை (18ம் தேதி) காலை 11 மணிக்கு பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடக்க இருந்தது. தவிர்க்க முடியா த காரணத்தால் இக்கூட்டம் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை சிதம்பரம் மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

Read more »

அரசு பணியாளர் பேரியக்க மே தின கருத்தரங்கம்

கடலூர் : 

              தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கம் சார்பில் கடலூர் டவுன்ஹாலில் மேதின விழா கருத்தரங்கம் நடந்தது.

           கரத்தரங்கில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக அறவாழி, துணைத் தலைவர்களாக சங்கீதா, சுப்ரமணியன், செயலாளராக தென்னரசு, பிரசார செயலாளராக மாயக்கண்ணன், தலைமை நிலைய செயலாளராக ராஜன், பொருளாளராக செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாவட்டத் தலைவராக ராஜமச்சேந்திரசோழன், துணைத் தலைவராக சரவணன், செயலாளராக சரவணபெருமாள், பிரசார செயலாளராக வீரக்குமார், பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

                  கூட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். சதவீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 10 ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மேதின விழா கருத்தரங்கம் நடந்தது.

Read more »

திறந்த வெளியில் கிடந்து பாழாகும் தொகுப்பு வீடு கதவு, ஜன்னல்கள்

ராமநத்தம் : 

             மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்படும் கதவு, ஜன்னல்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

               மங்களூர் ஒன்றியத்தின் கீழ் உள்ள ஊராட்சிகளுக்கு பல்வேறு திட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை ஆண்டு தோறும் தேர்வு செய்து தொகுப்பு வீடுகள், அரசு திட்டங்களின் கீழ் ஊராட்சிக்கு கட்டடங்கள் வழங்கப்படுகிறது. தொகுப்பு வீடுகள், ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஜன்னல் கள் மற்றும் கதவுகள் ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழையில் நனைந்து துருப் பிடித்தும், ஓட்டை விழுந்தும் காணப்படுகிறது. மேலும் கதவு, ஜன்னல் கள் திருடு போயுள்ளன. ஊராட்சி நிர்வாக கட்டடங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகுப்பு வீடுகளுக்கு தரமான, பாதுகாப்பான கதவு, ஜன்னல்களை வழங்க வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் கதவு, ஜன்னல்களை பாதுகாப் பாக அறையில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கடலூர் : 

             முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் கடலூரில் நடந்தது. குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியின் 1999-2000ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் கடலூரில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ராஜரத்தினம், சத்தியா, ராஜிவ்காந்தி, பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஆதிமூர்த்தி வரவேற்றார். பெரியார் கல்லூரி பேராசிரியர் அர்த்தநாரி, ஆசிரியர்கள் குப்புசாமி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பேசினர். கலைவாணி நன்றி கூறினார்.

Read more »

சேத்தியாத்தோப்பு தனி தாலுகா பா.ம.க., கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : 

          சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க அரசுக்கு பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் சிட் டிபாபு அரசுக்கு அனுப்பியுள்ள மனு: 

                  சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள புவனகிரி, கம்மாபுரம், கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாலுகா அலுவலக பணிகளுக்காக விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. பெரும் பாலான கிராம மக்கள் மூன்று பஸ் மாறி தான் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பண விரயம் மன உளைச்சல் காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைந்த சேத்தியாத்தோப்பை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மானிய விலையில் ஜிப்சம் உதவி இயக்குனர் தகவல்


விருத்தாசலம் : 

        தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஜிப்சம் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விருத்தாசலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது ஜிப்சம் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் 50 கிலோ மூட்டை ரூபாய் 58.85க்கு பெற்று பயனடையலாம். அதுபோல் சிங்சல் பேட் 50 கிலோ மூட்டை ரூபாய் 864க்கு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்..

Read more »

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஓ.எஸ்., பழுது: வாகன ஓட்டிகள் அவதி

ராமநத்தம் : 

               சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஓ.எஸ்., எனப்படும் 'சேவ் அவர் சோல்' அவசர அழைப்பு தொலைபேசி செயலிழந்து காட்சிப் பொருளாக உள்ளது.

              சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்ட பின் ஆங்காங்கே 'டோல்வே' அமைத்து வாகன ஓட்டிகளிடம் வரி வசூல் செய் கின்றனர். விபத்து ஏற்படுமாயின் வாகன ஓட்டிகள், பயணிகளின் நலன் காக்க 'டோல்வே' கட்டுப்பாட்டில் 2 கி.மீ., தூரத்திற்கு ஒரு 'சேவ் அவர் சோல்' எனும் டெலிபோன் பூத் அமைத்து இலவச சேவை செய்து வருகின்றனர்.

              திடீர் விபத்து ஏற்பட்டால் போனில் இருக்கும் சிவப்பு பட்டனை அழுத்தினால் திருச்சி 'டோல்வே' கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் போகும். அவர்கள் எந்த பூத்திலிருந்து தகவல் வருகிறது என தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல் வது முதல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருப்பது வரை தகுந்த நடவடிக்கை எடுப்பர். தற்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் - எழுத்தூர் இடையே உள்ள வளைவில் அமைக்கப் பட்டுள்ள டெலிபோன் பூத் கடந்த சில மாதங் களாக செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதேபோல் உளுந்தூர்பேட்டை - எழுத்தூர், எழுத்தூர் - பாடாலூர் வரை திருச்சி டோல்வே கட்டுப்பாட்டில் உள்ள எஸ்.ஓ.எஸ்.,களை பரிசோதித்து செயலிழந்த பூத்களை சீரமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் தொலைதூர பயணிகளின் நலன் காக்க வேண்டும்.

Read more »

சிதம்பரம் அருகே பின்னத்தூரில் காட்சி பொருளாக நிற்கும் 'ஹைமாஸ்'

கிள்ளை : 

               சிதம்பரம் அருகே பின்னத்தூரில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு காட்சிப் பொருளாக உள்ளது.

               பரங்கிப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஜமாத் நிர்வாகத்தினரின் கோரிக்கையை ஏற்று பின்னத்தூர் கிழக்கு பகுதிக்கு செல்லும் சாலையில் பள்ளிவாசல், அரசு உயர் நிலைப்பள்ளி என நான்கு முனை சந்திப்பில் ஒருலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் ஹைமாஸ் விளக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஹைமாஸ் விளக்கு அமைத்த சில தினங்கள் மட்டும் அப்பகுதி பிரகாசமாக இருந்தது.

                    இதனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்கை மாற்றி வேறு இடத்தில் அமைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருளாக உள் ளதால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தற்போது ஹைமாஸ் விளக்கு அமைக்கப் பட்டுள்ள நான்குமுனை வீதி அருகில் இந்தியன் வங்கி, டி.என். சி.எஸ்.சி. நெல்கொள்முதல் நிலையம், தொலைபேசி கிளை அலுவலகம், ஜமாத் பள்ளிவாசல், அரபிக்கல்லூரி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இரு தனியார் பள்ளிகள் இருப்பதால் இரவில் யார் வருகின்றனர் எனத் தெரியாமல் அப்பகுதியினர் விரக்தியில் உள்ளனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள விளக்கை பொது மக்கள் நலன் கருதி சரி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் இருளில் மூழ்கும் சின்னாத்துக்குறிச்சி

ஸ்ரீமுஷ்ணம் : 

               ஸ்ரீமுஷ்ணம் அருகே டிரான்ஸ் பார்மர் பழுதானதால் கிராமமே இருளில் முழ்கியுள்ளது.

                 ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள சின்னாத்துக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழுதான இந்த டிரான்ஸ் பார்மரை உடனடியாக மாற்றாத காரணத்தால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாய மோட்டார் பம்ப் செட்டுகள் இயங்காததால் 50 ஏக்கர் விவசாய பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் முற்றிலுமாக இல்லாமல் கிராமமே இருளில் முழ்கியுள்ளது. விவசாய பம்ப் செட்டுகள் இயங்காததால் நடவு பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது.

                     மேலும் 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் நடவு நடுவதற்கு முன்பு ஏர் உழுத கையோடு காய்ந்த நிலையிலும், நாற்று விட்ட வயல்கள் தண் ணீர் இன்றியும் காய்ந்தும் வருகின்றன. பழுதான டிரான்ஸ் பார்மரை மின் வாரியம் கழட்டி எடுத்து சென்று இரண்டு நாட்களாகியும் உடனடியாக அமைக்காத காரணத்தால் பயிர்கள் காய்ந்து விடும் நிலையில் உள்ளது. தற்போது தற்காலிகமாக டிரான்ஸ்பார்மர் இல்லாமல் நேரடியாக வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. குறைந்த வோல்டேஜ் காரணமாக பல்புகள் விளக்கை விட குறைந்த வெளிச்சம் தருகிறது. மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில் புதிய டிரான்ஸ் பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

சிறுபாக்கம் : 

                சிறுபாக்கத்தில் தாழ்வாக பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறுபாக்கம், மங்களூர், வேப்பூர் பகுதிகளில் நேற்று காலை 7.10 மணியளவில் பலத்த சத்தத்துடன் விமானம் ஒன்று சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக மிகவும் தாழ்வாக பறந்து சென்றது. வழக்கத்திற்கு மாறாக திடீரென விமானம் தாழ்வாக பறந்து சென்றதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிசயத்துடன் விமானத்தை ஆர்வமாக பார்த்து ரசித்தனர். இதனால் கிராம மக்களிடையே நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior