உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

விதிகளை மீறும் சினிமா பேனர்கள்


விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நீண்டதூரம் வைக்கப்பட்டுள்ள சினிமா விளம்பர டிஜிட்டல் பேனர்கள்.
விருத்தாசலம்:
 
            விருத்தாசலத்தில் முக்கிய சாலையில் வைக்கப்பட்டுள்ள சினிமா பேனர்களால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.அரசியல் நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகள், புதிய திரைப்படங்கள் வெளியீடு என அனைத்துக்கும் டிஜிட்டல் பேனர் வைப்பது  தற்போது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படம் அண்மையில் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. விருத்தாசலத்தில் அப்படம் வெளியான திரையரங்கத்துக்கு முன் சாலையின் இரண்டு புறங்களிலும் சுமார் 200 அடி நீளத்துக்கு டிஜிட்டல் பேனர்கள் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது.பஸ் நிலையத்தின் அருகில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது. மேலும் அது நகரத்தின் முக்கிய சாலை ஆகும். இச் சாலையின் ஓரத்தில் இரண்டு பக்கங்களிலும் பேனர்களை கட்டுவதற்கு கழிகளால் சாரம் போன்று அமைத்துள்ளனர். 
 
              இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோர்,  கழிகள் வரிசையாக நடப்பட்டுள்ளதால் தங்கள் வாகனங்களை கடையின் அருகில் நிறுத்த முடியாமல் சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர். இதனால் அப் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதியில் கடை வைத்துள்ள ஒருவர்  கூறியது :
 
          கடையை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனர்களால் கடந்த ஐந்து நாள்களாக வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடையை அடையாளங் காண முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.படம் வெளியிடப்பட்டு 5 நாள்களுக்கு மேலாகியும் பேனர்கள் அகற்றப்படவில்லை. இவர்கள் முறையாக அனுமதிபெற்று பேனர் வைத்துள்ளார்களா என்றும் தெரியவில்லை. ஒவ்வொரு ரசிகர் மன்றத்தினரும் இவ்வாறு பேனர்கள் வைக்கத் தொடங்கினால் இச் சாலையில் எப்போதும் பேனர்கள் இருந்துகொண்டே இருக்கும். இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, நிரந்தரப் போக்குவரத்து பிரச்னையும் ஏற்படும் என்றார்.தமிழகத்தில் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைக்க விதிமுறைகள் உள்ளன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடாது, காவல்துறையினரிடம் முன்அனுமதி பெறு வேண்டும், நிகழ்ச்சி முடிந்த ஓரிரு நாள்களில் அவற்றை அகற்ற வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன. ஆனால் இந்த விதிகளை அமல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகமோ, காவல் துறையோ அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை.
 
 

Read more »

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி


            மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்காணல் தேர்வில் அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 
           இதில் தமிழகத்தைச் சேர்ந்த 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னையைச் சேர்ந்த லலிதா (12-வது ரேங்க்), கனகவல்லி (15-வது ரேங்க்) ஆகிய 2 பேர் முதல் 25 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய அளவில் டாக்டர் ஷாபேசல் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள இவர், ஸ்ரீநகரில் மருத்துவப் பட்டம் பெற்றவர்.தில்லியைச் சேர்ந்த பொறியாளர் பிரகாஷ்ராஜ் புரோஹித் 2-ம் இடம் பிடித்துள்ளார். 
 
இது குறித்த விவரம்: 
 
              யு.பி.எஸ்.சி. நடத்திய ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கான நேர்காணல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அகில இந்திய அளவில் 875 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 195 பேர் பெண்கள். மேலும், இதில் 30 பேர் மாற்றுத் திறன் படைத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 5 பேர் பார்வையற்றவர்களாவர்.சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 127 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2 பெண்கள் முதல் 25 இடங்களில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில், 15-வது ரேங்க் பெற்ற கனகவல்லி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக மேம்பாட்டுத் துறையில் பயிற்சி உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த இவர், 3 முறை சிவில் சர்வீஸ்  தேர்வு நேர்காணல் வரைச் சென்றுள்ளார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கடைசி முயற்சியாக வீட்டில் இருந்தபடியே படித்த கனகவல்லி, நாட்டிலேயே 15-வது ரேங்க் பெற்றுள்ளார்.சென்னையில் உள்ள அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் மாதிரி நேர்காணல் பயிற்சி பெற்றேன். டேவிதார், உதயசந்திரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆலோசனைகள், நேர்காணலின்போது உதவியாக இருந்தது என்றார் கனகவல்லி. 
 
மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., மையம்: 
 
            சென்னையில் உள்ள சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் மூலம் 83 மாணவர்கள் நேர்காணலுக்குச் சென்றனர். இதில் 43 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் 12-வது ரேங்க் பெற்று சிறப்பிடம் பிடித்த லலிதா, இம்மையத்தில் பயிற்சி பெற்றவர். முதன்முறையாக தேர்வெழுதிய சண்முகப்ரியா (36-வது ரேங்க்), சிவகுமார் (38-வது ரேங்க்), நிவாஸ் (45-வது ரேங்க்), வினோத்ப்ரியா (62-வது ரேங்க்) ஆகியோர் வெற்றிபெற்றதன் மூலம் சிறப்பு சேர்த்துள்ளனர் என்று மையத்தின் தலைவர் சைதை துரைசாமி, பயிற்சி இயக்குநர் வாவூசி தெரிவித்துள்ளனர்.மேலும், சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாதெமியில் படித்த சுமார் 50 பேரும்,  பி.எல்.ராஜ் மெம்மோரியலில் படித்த 22 பேரும், ஃபோகஸ் அகாதெமியில் படித்த செந்தில், சங்கர் கணேஷ் உள்ளிட்ட 15 பேரும், ஸ்டேடஜி அகாதெமியில் படித்த 41 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களில் வெவ்வேறு பாடங்களுக்கு பதிவு செய்து படித்திருப்பதால், எண்ணிக்கை மாறுபடும்.

Read more »

சென்னையில் உள்ள கல்லூரிகள் பட்டியல்




பொறியியல்: 

1. மியாசி அகாதெமி ஆப் ஆர்க்கிடெக்சர், சென்னை (1999). பி.ஆர்க்.
2. மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி,
கோடம்பாக்கம் (2001). 
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்.
கலை மற்றும் அறிவியல்:

1. ஆசான் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளச்சேரி}தாம்பரம் சாலை, ஜாடம்பேட், சென்னை - 02 
2. பக்தவச்சலம் மெமேரியல் மகளிர் கல்லூரி, பெரியார் நரக், கொரட்டூர், சென்னை - 80
3. மீனாட்சி மகளிர் கல்லூரி, ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24 
4. ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. பெருமாள்பட்டு, சென்னை 
5. தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. குரோம்பேட்டை, சென்னை - 44 
6. வெல்ஸ் அறிவியல் கல்லூரி, பல்லாவரம், சென்னை - 17 
7. எ.எம்.ஜெயின் ஆண்கள் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை - 14 
8. பாரதி மகளிர் கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை - 08 (தன்னாட்சி)
9. சி கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, அண்ணா நகர், சென்னை 
9. செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை. 
10. தன்ராஜ் பெயிட் ஜெயின் கல்லூரி, சென்னை.(தன்னாட்சி) 
11. தர்மதுரை ராவ் பகதூர் கலவால கலவால குன்னன் செட்டி இந்து கல்லூரி, சென்னை 
12. டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, சென்னை 
13. துவாரகா தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவா கல்லூரி, சென்னை 
14. எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 
15. அரசு ஆண்கள் கலைக் கல்லூரி, சென்னை (தன்னாட்சி) 
16. குருநானக் கல்லூரி, சென்னை
17. ஜஸ்டிஸ் பசீர் அகமது சயத் மகளிர் கல்லூரி, சென்னை 
15. லயோலா கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 
16. சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, சென்னை (தன்னாட்சி) 
17. புதுக்கல்லூரி, ராயப்பேட்டை, சென்னை. (தன்னாட்சி) 
18. பச்சையப்பபன் கல்லூரி, சென்னை. 
19. மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், சென்னை. (தன்னாட்சி) 
20. காயிதே மில்லத் கல்லூரி, சென்னை. 
21 காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 
22. ராணிமேரி கல்லூரி, சேப்பாக்கம், சென்னை. (தன்னாட்சி) 
23. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா ஆண்கள் கல்லூரி, சென்னை. 
24. எஸ்.டி.என். பட் வைஷ்ணவா மகளிர் கல்லூரி, சென்னை
25. எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி, சென்னை. 
26. செயிண்ட் லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி, சென்னை. 
27. ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 
28. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி)
29. ஏ.ஏ. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
30. ஆல்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
31. அண்ணா ஆதர்ஷ் மகளில் கல்லூரி, சென்னை. 
32. அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
33. அன்னை வைலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 34. சி.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
35. சென்னை நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
36. செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, சென்னை. 
37. டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
38. குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை. 
39. ஹந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கேளம்பாக்கம். 
40. இந்தியன் ஹார்டுவேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை 
41. ஜெ.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
42. ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால் அகர்ஸன் கல்லூரி, சென்னை. 
43. கே.சி.எஸ். காசி நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
44. குமார ராணி மீனா முத்தையா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சென்னை. 
45. எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி, சென்னை. (தன்னாட்சி) 
46. மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
47. மஹாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
48. மார் கிரிஹோரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
49. முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
50. நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
51. நியூ பிரின்சி ஸ்ரீ பவானி மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
52. பத்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
53. பூங்கா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
54. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
55. பேராசிரியர் தனபாலன் மகளிர் கல்லூரி, சென்னை. 
56. எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல்பட்டு தாலுக்கா. 57. ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் சாசூன் ஜெயின் மகளிர் கல்லூரி, சென்னை. 
58. சிந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
59. சர் தியாகராயா கல்லூரி, சென்னை. 
60. சோகா இக்கிதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
61. ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
62. ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூரி, சென்னை. 63. செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
64. செயின்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
65. டி.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
66. டி.எஸ். நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
67. தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
68. திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர். 
69. திருத்தங்கள் நாடார் கல்லூரி, சென்னை.
70. வி.எம். பனிக்கரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை. 
71. வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை. 
72. வேல் ஸ்ரீ ரங்கா சாங்கு கல்லூரி, சென்னை.  
 
மருத்துவம்:
  1. ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேதா மருத்தும் மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை.
2. ஸ்ரீ வெங்கட்ரமணா ஆயுர்வேதா கல்லூரி, சென்னை.
3. டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் (தாய் மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை), சென்னை. 4. எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.
5. சவீதா பல்கலைக்கழகம் (சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.
6. ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.
7. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.
8. மாதா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை.
9. மீனாட்சி பல்கலைக்கழகம் (மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனை, சென்னை.
10. ராகாஷ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
11. ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ( ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக்கல்லூரி, சென்னை
12. தாகூர் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை.
13. ஸ்ரீ சாய்ராம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, சென்னை
14. வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சென்னை.
15. ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
16. ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை
17. எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.
18. புற்றுநோய் மருத்துவமனை, சென்னை.
19. டாக்டர் ஏ.எல்.எம். பி.ஜி. இன்ஸ்டியூட் ஆப் பேசிக் அறிவியல் மருத்துவம், சென்னை.
20. கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை.
21. சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டியூட்

Read more »

காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளுக்கு தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு: எடியூரப்பா


கடலூர்:
 
             ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறப்பதற்கு வசதியாக காவிரியில் தண்ணீர் விடுவது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்னை ஆகியவற்றுக்கு தமிழக, கர்நாடக அரசுத் தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக எடியூரப்பா வியாழக்கிழமை திருவந்திபுரம் வந்தார். 
 
கோயிலுக்குள் அவர்  கூறியது: 
 
             கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்து, மே இறுதியில் இரண்டாண்டு நிறைவு பெறுகிறது. மக்களுக்குப் பணிபுரிய மேலும் வலிமை வேண்டும். அதற்காக சாமி கும்பிட இங்கு வந்து இருக்கிறேன். இக்கோயில் மிகவும் பழைமையும் பெருமையும் வாய்ந்தது. ஜூன் 3, 4 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. தகவல் தொழில் நுட்பம், உயிரியல் தொழில் நுட்பம், மின்சாரம், சுற்றுலா போன்ற துறைகளில் 4 லட்சம் கோடிக்கு அந்நிய முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் முதல் மாநாடு. இதற்காகவும் கோயிலில் பிரார்த்தனை செய்தேன். கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையையும் திறந்து வைத்தபிறகு, தமிழகம், கர்நாடகம் இடையே உறவு மேம்பட்டுள்ளது. கர்நாட மாநிலத்தின் மீது முதல்வர் கருணாநிதி மிகுந்த நட்பும், பாசமும் கொண்டுள்ளார். அவரது நட்புறவை நான் விரும்புகிறேன் ஜூன் 12-ம்  தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறப்பதற்கு ஏதுவாகக் காவிரியில் தண்ணீர் விடுவது குறித்தும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்தும், ஜூன் மாதம் நடைபெற இருக்கும் இரு மாநில தலைமைச் செயலர்கள் கூட்டத்தில் பேசித் தீர்வு காணப்படும். கர்நாடக அமைச்சர் ஹாலப்பா பிரச்னை சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது என்றார் எடியூரப்பா.
 
பொது அறிவிற்கு:

சிவாலிக் தொடரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா நகர் - டேராடூன்

Read more »

முதுகலை மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடக்க விழா

சிதம்பரம்:

       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 2010-11 கல்வி ஆண்டுக்கான முதுகலை பட்டப்படிப்புக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்து மருத்துவ உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், மருத்துவக் கல்லூரி ஆலோசகர் டாக்டர் எஸ்.வேம்பார் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்விக் குழு ஒருங்கிணைப்பாளர் பி.விஸ்வநாதன் நன்றி கூறினார்.

பொது அறிவிற்கு:
வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி - டூரான்டோ கப் போட்டி

Read more »

மக்கள் குறைகேட்பு தேதி மாற்றம்

சிதம்பரம்:

          சிதம்பரத்தை அடுத்த வானமாதேவி மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் மே 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் வரும் மே 18-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். சிதம்பரம் கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும்  இரண்டாவது செவ்வாய்க்கிழமையில்  செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இம்மாதம் வழக்கம் போல் 11.5.2010 அன்று நடைபெறும் என சிதம்பரம் மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் ரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

பொது அறிவிற்கு
டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் - மன்சூர் அலிகான் பட்டோடி

Read more »

கோயில் விழாவில் மாடு முட்டி 15 பேர் காயம்

நெய்வேலி :

           நெய்வேலியை அடுத்த இருப்பு கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மாடு மிரண்டு முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு கிராமத்தில் புகழ்பெற்ற அரசியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் செடல் திருவிழா நடைபெறும். இதையொட்டி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டி மூலம் இக் கோயிலுக்கு வருவது வழக்கம்.அதுபோன்று இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 28-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்ற பின் மாட்டுவண்டி மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு மிகுந்த சத்தத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் மிரண்ட வண்டி மாடு, மக்கள் கூட்டத்தில் புகுந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் மாடு முட்டியும், கூட்டத்தில் மிதிபட்டும் 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனே விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைகாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்நிலையில் வியாழக்கிழமை இக் கோயிலில் தேர்த்  திருவிழா நடைபெற்றது.

பொது அறிவிற்கு:
வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர் - கெரல் வினெயெஸ்

Read more »

சென்னை பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கக் கோரிக்கை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் எம்.நிஜாமுதீன் கோரிக்கை விடுத்து உள்ளார்.  

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலாளர் எம்.நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:  

              நீராதாரங்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பாலித்தீன் பைகளுக்கு, உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில், பல நகரங்களில் தடை உள்ளது. சுற்றுலாத்தலங்கள், மலைப் பிரதேசங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஆர்வம் உள்ள அலுவலர்கள் உள்ள பகுதிகளில், பாலித்தீன் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நெய்வேலி நகரியத்தில் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

                 கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர்கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில், கொளஞ்சியப்பர் கோயில், திருமுட்டம் பூவராகசாமி கோயில், உலகப் புகழ்பெற்ற பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் மற்றும் வீராணம் ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.  ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கோயில்களுக்கும் பிற சுற்றுலாத் தலங்களுக்கும் வருகிறார்கள். இவர்கள் ஏராளமான பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். கடலூர் மாவட்ட ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் பாலித்தீன் பைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பாலித்தீன் குப்பைகளை அகற்ற வழியின்றி, நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் நாள்தோறும் அவற்றை எரிக்கிறார்கள். இதனால் காற்றில் நச்சு வேதியல் பொருள்கள் கலப்பதோடு, மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.  எனவே மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கடலூர் மாவட்டம் முழுவதும் பாலித்தீன் பைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொது அறிவிற்கு:


உடல் உஷ்ண நிலையை சீராக்குவது - தோல் 

Read more »

Official-level talks soon with Tamil Nadu: Yeddyurappa

CUDDALORE:

            Karnataka Chief Minister B.S.Yeddyurappa on Thursday said that Chief Secretary-level talks would be held soon to find amicable solutions to outstanding issues between Karnataka and Tamil Nadu.

            Mr. Yeddyurappa visited the Lakshmi Hayagreevar temple and the Sri Devanatha Swamy temple at Thiruvahindrapuram near here. Asked about the resolution of the Cauvery dispute and the proposed hydro-electric project (on the Karnataka side) as well as the comprehensive water supply project (on the Tamil Nadu side) at Hogenakkal, Mr. Yeddyurappa said the official-level talks would address these issues too. Asked about the relationship with Tamil Nadu, he said that ever since the installation of the statues of saint poets Tiruvalluvar and Sarvajna in Karnataka and Tamil Nadu, cordial relationship prevailed between the States.

பொது அறிவிற்கு
ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வி

Read more »

Slum Clearance Board Houses Inaugurated


New shelters: Minister for Slum Clearance Board and Accommodation Control Suba.Thangavelan and Health Minister M.R.K. Panneerselvam at a function in Parangipettai on Wednesday.


CUDDALORE: 

         Minister for Slum Clearance Board and Accommodation Control Suba.Thangavelan inaugurated 168 houses built at a cost of Rs. 6.25 crore by his department for the people living in vulnerable coastal areas at Parangipettai near here on Wednesday.

            Health Minister M.R.K. Panneerselvam, Collector P. Seetharaman and District Revenue Officer S. Natarajan participated in the function organised. Mr. Thangavelan said that each of these houses was built on 325 sq.ft. at a cost of Rs. 3.71 lakh. Under the Rajiv Gandhi Rehabilitation Pacakage II, vulnerable coastal areas (prone to natural disasters such as cyclone and tsunami) had been identified in eight districts. Those residing in tenements put up within 200 metres of the coastline were eligible to get the houses.

            Mr. Thangavelan said that he had received a proposal from Mr. Seetharaman for the construction of 1,583 houses in the vulnerable areas, estimated to cost Rs. 58.73 crore. So far, land had been acquired for the construction of 1,017 houses and of which 367 had been completed. Construction works were under way in coastal areas such as Sellankuppam, Lanjadi, Singarathoppu, Sonankuppam, Suthukulam, Panankattu Colony, Killai and Mudasal Odai. Responding to the plea for more houses, Mr. Thangavelan said that those who were not covered under the scheme could seek shelters under various other projects such as the Kalaignar Housing Scheme and the District Rural Development Agency schemes.
Mr. Panneerselvam disbursed a financial assistance of Rs. 3.8 lakh to the Muslim Women Welfare Association. He said that under various welfare schemes launched by the State government, each family benefited to the extent of Rs. 50,000 to Rs. 75,000. Under the maternity assistance scheme, a total amount of Rs. 1,000 crore was so far disbursed to 20 lakh pregnant women. As many as 1.46 crore identity cards had been given under the Kalaignar Health Scheme which enabled beneficiaries to get treatment in hundreds of designated hospitals.

பொது அறிவிற்கு:

ஆயுர்வேதம் என்பது - வாழ்வு பற்றிய அறிவியல்

Read more »

பண்ருட்டி நகராட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை யாரும் நம்ப வேண்டாம்: பண்ருட்டி சேர்மன்

பண்ருட்டி : 


            பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை யாரும் நம்ப வேண்டாம் என சேர்மன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பண்ருட்டி சேர்மன் பச்சையப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

            பண்ருட்டி நகராட்சி எனது நிர்வாகத்தின் கீழ் துவங்கியது முதல் சுகாதாரம், மின்வசதி, குடிநீர் விநியோகம், சாலை வசதிகள், இணைப்பு சாலைகள், மழைநீர் வடி சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் நிதிமூலம் மண் சாலைகள் தார்சாலை, சிமென்ட் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது. ராஜாஜி சாலையில் சிறு மழையின் போது கூட வெள்ளம் போன்று மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. வாலாஜா வாய்க்கால் சீரமைக்கும் பணி பொதுப் பணித்துறையின் ஒத்துழைப்புடன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய இணைப்பு சாலையான லிங்க் ரோடு துணை முதல்வர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவுரையின்படி 3 கோடி ரூபாய் மதிப்பில் இருபுறமும் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்க பணிகள் நடக்கிறது. நகரில் 12 குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி மற்றும் 27 நேரடி இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. நகரின் 33 வார்டுகளிலும் 6 கோடி ரூபாய் அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க தி.மு.க., அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அ.தி.மு.க., வின் தவறான குற்றசாட்டால் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது அறிவிற்கு:
மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து - புரதம்

Read more »

இடம் வாங்கித் தருவதாக ரூ.53 லட்சம் மோசடி : புதுச்சேரியில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

கடலூர் : 

            விசைப் படகு கட்டும் தொழிலுக்கு இடம் வாங்கித் தருவதாக 53 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்ட வாலிபர் புதுச்சேரியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

            கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் இன்ஜினியர் கார்த்திக். இவர் சென்னையில் பணிபுரிந்த போது முதுநகர் அடுத்த சிவானந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவருடன் தங்கியிருந்தார். அப்போது லட்சுநாராயணனின் மைத்துனர் ராஜசேகர் (33) அறிமுகமானார். அப்போது கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களிடம் கடலூரில் விசை படகு கட்டும் தொழில் செய்வதற்கு இடம் வாங்கி தருவதாக கூறி ராஜசேகர் மற் றும் அவரது தந்தை சக்கரபாணி, ஆகியோர் 2007ம் ஆண்டு முன் பணமாக 53 லட்சம் ரூபாய் வாங்கினர்

               வெகு நாட்களாகியும் இடம் வாங்கித் தராததால் சந்தேகமடைந்து விசாரித் ததில், அந்த நிலத்தை ராஜசேகர் தனது பெயருக்கு வாங்கியது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். பணத்தை திரும்ப கேட்டபோது ராஜசேகர், லட்சுமிநாராயணன், சக்கரபாணி ஆகியோர் கார்த்திக் வீட்டிற்கு சென்று துப் பாக்கியை காட்டி மிரட்டினர். இது குறித்து எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் ரத்தினவேல், குணசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜசேகர், சக்கரபாணி உள்ளிட்டவர் களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று புதுச்சேரி இளங்கோ நகரில் தங்கியிருந்த ராஜசேகரை மடக்கி பிடித்தனர். அப்போது வீட்டை சோதனை செய்தததில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.


பொது அறிவிற்கு:
இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம் - பைலோரஸ்

Read more »

பண்ருட்டி அருகே மதமாற்ற முயற்சி கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு

பண்ருட்டி : 

             பண்ருட்டி அடுத்த பூங்குணம் பிள்ளையார் கோவில் தெருவில் கிறஸ்தவ மத மாற்றம் செய்ய முயற்சி செய்த குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

              பண்ருட்டி அடுத்த பூங்குணம் பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று காலை 8 மணிக்கு கிறிஸ் தவ மதத்திற்கு மாற வலியுறுத்தி 2 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டனர். அவர்கள் நோய் நொடி இருந்தால் ஜபம் செய்து சரிசெய்கிறோம். உங்கள் செல்போன் நம்பர் கொடுங்கள் என மதம்மாற வலியுறுத்தி பேசினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் முத்துலட்சுமி, கண்ணம்மா உள்ளிட்ட 30 பேர் திரண்டு கிறிஸ்துவ மதம் மாற கொடுத்த புத்தகம், நோட்டீஸ் ஆகியவற்றை வீசி எரிந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் அக்குழுவினர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்தனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


பொது அறிவிற்கு:
       மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள் - 206

Read more »

பள்ளத்தில் கிடப்பவர்களை தூக்கி விடுபவர்தான் கருணாநிதி : பரங்கிப்பேட்டையில் அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

பரங்கிப்பேட்டை : 

             பள்ளத்தில் கிடப்பவர்களை தூக்கி விடுபவர்தான் முதல்வர் கருணாநிதி என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

 பரங்கிப்பேட்டையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட 168 வீடுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கி பேசியதாவது: 

                இயற்கை சூழலோடு இங்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 168 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலில் இருந்து 200 மீட்டரில் உள்ளவர்களுக்குதான் அரசு மூலம் வீடு கட்டித்தரமுடியும் என்கிற விதிமுறை இருந்தது. அந்த சட்டத்தை மத்திய அரசிடம் முதல்வர் பேசி 1000 மீட்டர் வரை உள்ளவர்களுக்கு வீடு கட்டிதர ஏற்பாடு செய்தார். அதனால்தான் இந்த பகுதியில் குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடுகள் கட்டிதர முடிந்தது.

               ஜெ., ஆட்சியில் இருந்தப்போது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என சட்டசபையில் பேசினால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கி கொடுத்ததாக பெருமையாக பேசுகிறார். நோட்டு, புத்தகம் ஒரு ஆண்டோடு வீணாகிவிடும். பள்ளத்தில் கிடப் பவர்களை தூக்கி விடுபவர்தான் முதல்வர் கருணாநிதி. கருணாநிதி ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார்.

               புதியதாக கட்டப்பட்ட வீடுகளை குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப்பாட்டுதுறை அமைச்சர் தங்கவேலன் பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கி பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிதரப்படும். குடிசை மாற்று வாரியம் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 46 ஆயிரம் கட்டி தரப்பட்டுள்ளது. இந்த பகுதியில்6 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் 168 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பொது அறிவிற்கு:
     யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு - கசையிழை

Read more »

தண்ணீர் பிரச்னை குறித்து தலைமை செயலர்கள் பேச்சு: எடியூரப்பா புது விளக்கம்

கடலூர் : 

             'தமிழகத்தினுடனான தண்ணீர் பிரச்னை குறித்து, தலைமைச் செயலர்கள் அளவிலான பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு தீர்வு காணப்படும்' என, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.

            'ஆந்திரா, தமிழகம் மாநிலங்களுடனான நீர் பங்கீட்டுப் பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும்' என, சில தினங்களுக்கு முன் கூறியவர், இப்போது தனது முடிவில், 'அந்தர்பல்டி' அடித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மற்றும் ஹயக்ரீவர் கோவில்களில், முதல்வர் எடியூரப்பா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில்  தரிசனம் முடிந்து கர்நாடகமுதல்வர் எடியூரப்பா கூறியதாவது: 

              கர்நாடகத்தில் பா.ஜ., அரசு 2ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான சேவை செய்வதற்காக சாமி தரிசனம் செய்ய வந்தேன். வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், கர்நாடகாவில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. ஐ.டி., பி.டி., எலக்ட்ரிசிட்டி, சுற்றுலா துறைகளில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சார்பில், 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை எதிர்பார்க்கிறோம். இந்த நோக்கமும் சிறப் பாக அமைய வேண்டும் என் பதே பயணத் தின் நோக்கம்.

            திருவள்ளுவர் மற்றும் சர்வக்ஞர் சிலைகள் திறப்பு விழாவிற்கு பின், தமிழகத்தினுடனான உறவு சுமுகமாக உள்ளது. தமிழகத்துடனான தண்ணீர் பிரச்னை குறித்து, தலைமைச் செயலர்கள் அளவிலான பேச்சு வார்த்தை நடத் தப்பட்டு தீர்வு காணப்படும். ஹாலப்பா மீதான பிரச்னை குறித்து சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.

                கடந்த சில தினங்களுக்கு முன், 'கர்நாடகத்திற்கும், தமிழகம், ஆந்திரா மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு பிரச்னையில், மத்திய அரசு தலையிட வேண்டும்' என்று கூறியவர், இப்போது, 'அந்தர்பல்டி' அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவந்திபுரம் கோவிலில் தரிசனம் : 

                 கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். ஹெலிகாப்டர் மூலம் நேற்று காலை புதுச்சேரி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவிலுக்கு காலை 9.02 மணிக்கு வந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர். ஹவுசதகிரியில் உள்ள லட்சுமி ஹயக்ரீவ பெருமாள் கோவிலுக்குச் சென்றார்.

               முதல்வர் எடியூரப்பா வருவதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவே, திருவந்திபுரம் பஸ் நிறுத்தத்திலிருந்து வெளியாட்கள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு நடவடிக்கையாக திருவந்திபுரத்தில் உள்ள கடைகள், எடியூரப்பா அங்கிருந்து கிளம்பும் வரை திறக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் சென்ற பின், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பொது அறிவிற்கு:
    ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள் - குளோரோ புளூரோ கார்பன்

Read more »

குற்ற வழக்குகளில் பாதித்தவர்களுக்கு எஸ்.பி., நிவாரண நிதி வழங்கினார்

கடலூர் : 

             மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 22 பேரின் குடும்பத்திற்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நிவாரண நிதி வழங்கினார்.

              கொலை, கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை, தகராறில் காயம் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு அரசு பாதிக்கப்பட்டவர் நிவாரண நிதி வழங்கி வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 22 பேரின் குடும்பத்திற்கு எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

பொது அறிவிற்கு:

   பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய் - பெப்ரைன்

Read more »

ஊரக மேம்பாட்டு இணைய கல்விக்கழக கூட்டம்

கடலூர் : 

              ஊரக மேம்பாட்டு இணைய கல்விக் கழக கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது.

              சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஊரக மேம்பாட்டுக்கென இணைய கல்விக்கழகம் என்ற திட்டத்தினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 7 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகளின் முழுபங்கேற்போடு அறிவு மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்குத் தேவையான உள்ளூர் தகவல்கள் மற்றும் பயிற்சிகள் அளித்து வருகிறது.

                 குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் தாலுகாவில் நொச்சிக்காடு, மணிக்கொல்லை, சாமியார் பேட்டை, பரங்கிப்பேட்டை, முடசல் ஓடை, முழுக்குத்துறை மற்றும் எம். ஜி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில் கிராம அறிவு மையங்கள் மூலம் மக்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, மண் பரிசோதனை முகாம், முதியோர் கல்வி, மீனவ நண்பன், செல்போன் வசதி, சுனாமி எச்சரிக்கை மின்னனு இயந்திரம், கண் பரிசோதனை முகாம் போன்ற பயிற்சிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் பரங்கிப்பேட்டை சமுதாயக் கூடத்தில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வேல்விழி திட்ட விளக்கம் மற்றும் கிராம அறிவு மைய பகுதி பங்காளர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார். திட்ட அலுவலர் இளங்கோவன் கிராம அறிவு மையங்களின் செயல்பாடுகள் குறித்து பகுதி பங்காளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

பொது அறிவிற்கு:
           கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை - 7

Read more »

புவனகிரியில் கண் சிகிச்சை முகாம் 74 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு

புவனகிரி :

               புவனகிரியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் 74 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய் யப்பட்டனர்.

               மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தேவாங்கர் சமுதாய டிரஸ்ட் அமைப்பு, புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஓ.என்.ஜி.சி., இணைந்து புவனகிரியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. புவனகிரி, தம்பிக்கு நல்லாண் பட்டினம், கீழமணக்குடி, பெருமாத்தூர், கீரப்பாளையம், சாத்தப்பாடி, வடக்கு திட்டை, பூதவராயன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 700 பேர் சிகிச்சை பெற்றனர். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ள் குழு சிகிச்சை அளித்தது. 100 பேருக்கு இலவச கண் கண்ணாடியும், 74 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கும் தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புவனகிரி தேவாங்கர் சமுதாய டிரஸ்டு நிர்வாகிகள் மற்றும் சிவக்குமார் பங்கேற்றனர்.

பொது அறிவிற்கு:
      உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்

Read more »

சென்னையில் விளையாட்டு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

              தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அளிக்கப்பட உள்ள 6 வார கால பயிற்சி வகுப்பிற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 17ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 6 வாரங்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, பென்சிங், ஹாக்கி, டென்னிஸ், கையுந்து பந்து விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, தேசிய போட்டியில் பங்கேற்றிருக்க வேண் டும். அல்லது பட்டம் பெற்றவர்கள், விளையாட்டில் ஆர்வமுள்ளவர் களாகவும், 25 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

                பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களுக்கும், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விண்ணப் பத்தை சென்னையில் பெரியார் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலோ அல்லது www.sportsinfotn.com என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் 10ம் தேதிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்றடைய வேண்டும். இவ் வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது அறிவிற்கு:
சிறுகுடலின் நடுப்பகுதி - ஜெஜீனம்


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பல்கலை., மாணவர்களுக்கு வசதியாக மாலையில் ரயில் இயக்க வலியுறுத்தல்


கடலூர் : 

             பல்கலை., மாணவர்களுக்கு வசதியாக மாலையில் ஒரு ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

              அகலப்பாதை அமைப்பதற்கு முன்பு அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று சென்று கொண்டிருந்தது. அகலப்பாதை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு விரைவு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நிற்பதில்லை. பயணிகள் குறைவால் ரயில்வேயிக்கும் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. திருப்பாதிரிப்புலியூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற 2 திருக்கோவில்கள் பாடலீஸ்வரர், தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களுக்கு மிக தொலைவில் இருந்து பக்தர்கள் அதிகஅளவில் வருவதால் விரைவு வண்டிகள் நிறுத்துவது அவசியம் ஆகிறது. சோழன் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம், நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வசதியாக காலை, மாலை வேளைகளில் தலா 2 ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே சிதம்பரத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து புறப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொது அறிவிற்கு:
தாவரத்தின் ஆண்பாகம் என்பது - மகரந்த தாள் வட்டம்

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஊராட்சியில் திட்ட பணி கலெக்டர் ஆய்வு


பரங்கிப்பேட்டை : 

           பரங்கிப்பேட்டை அருகே 100 நாள் வேலை திட்டப் பணியை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

               பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 100 நாள் திட்டத்தில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி, ஏரி, குளம் தூர்வாருதல், புதிய சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு, மணிக் கொல்லையில் 'கான்கிரீட்' வீடுகள் கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார். அவருடன் ஆணையர்கள் சந்திரகாசன், சந்தர், மாவட்ட ஊராட்சி முகாமை 100 நாள் திட்ட ஆணையர் நடராஜன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

பொது அறிவிற்கு:

 பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு - மைக்காலஜி


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பல்பொருள் அங்காடியில் சோதனை


கடலூர் : 

              கடலூரில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் காலாவதி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

              கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகம் செய்வதாகவும், காலாவதியான பிறகும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது. அதனையொட்டி மளிகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று மாலை மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ், பறக்கும் படை தாசில்தார் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடைகளில் சோதனை நடத்தச் சென்றனர். ஆனால் நேற்று வணிகர் தினம் என்பதால் பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன.



பொது அறிவிற்கு:

பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு - தாலஸ்

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கலப்பட டீத்தூள் விற்பனை சுகாதாரத்துறையினர் பறிமுதல்


குறிஞ்சிப்பாடி : 

               வடலூரில் டீத்தூளில், முந்திரி கொட்டைத் தோலை கலப்படம் செய்து விற்று வந்ததை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

           வடலூர் கோட்டைக்கரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் கலியபெருமாள். இவர் டீத்தூளில் முந்திரி கொட்டைத் தூள் கலந்து விற்பனை செய்வதாக சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து துணை இயக்குனர் மீரா உத்தரவின் பேரில், வடலூர் வட்டார மருத்துவர் லட்சுமி சீனுவாசன், துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ஜானகிராமன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

                 ஆய்வில் முந்திரிகொட்டைத் தூளை டீத்தூளில் கலப்படம் செய்து பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் 400 கிலோ கலப்பட டீத்தூள், பேக்கேஜ் மிஷின், எடை இயந்திரம், போலி டீத்தூள் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த டீத்தூள்களின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் இருக்கும். இதுபோன்ற டீத்தூள்கள் சாப்பிட்டால் தலைவலி மற்றும் புற்றுநோய் வரும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

பொது அறிவிற்கு:

தாவர வைரஸ்களில் காணப்படுவது - ஆர்.என்.ஏ.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அனாதையாக கிடந்த பெண் குழந்தை : தீயணைப்பு படையினர் மீட்பு


நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பம் முட்புதரில் அனாதையாக கிடந்த பெண்குழந்தையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

            நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு முனியன் ஓடை வழியே அண்ணா நகரை சேர்ந்த பிரேமானந்தா, தமிழ்வாணன் நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது 15 நாள் வயதுடைய பெண் குழந்தை அனாதையாக அழுது கொண்டிருந்தது.

               அக்கம்பக்கம் குழந்தையின் பெற்றோர் இருக்கிறார்களா என தேடிபார்த்தும் யாரும் இல்லாததால் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்டனர். நெல்லிக்குப்பம் போலீசார் குழந்தையை பெற்று அவசர ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை போட்டுவிட்டு சென்றனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பொது அறிவிற்கு:

மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

குறிஞ்சிப்பாடியில் முற்றுகை போராட்டம்


குறிஞ்சிப்பாடி : 

              குறிஞ்சிப்பாடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

               தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின் வெட்டைக் கண்டித்து விவசாய சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன் நடந்த முற்றுகை போராட்டத்துக்கு வட்ட பொரு ளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துரைராஜ், மணிகண்டன் உரையாற்றினர். முற்றுகை போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடி மின் வாரிய வாயிலை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த 20 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.


பொது அறிவிற்கு:

   பூக்கும் தாவரத்தின் பெயர் - பெனரோ கேம்கள்

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior