ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தமிழகத்திலிருந்து 230 பேர் தேர்வு பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய பணியாளர் தேர்வாணயம் (யுபிஎஸ்சி) சார்பில் 965 இந்திய குடிமைப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வில் 3.48 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் 12 ஆயிரத்து 545 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 844 பேரும் அடங்குவர். முதன்மை தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, இந்தியா முழுவதும் 1,930 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து 230 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயின்ற 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயின்ற 72 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதன் இயக்குநர் சத்யா கூறினார்.
நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்:
மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகம் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இதில் ஐ.ஏ.எஸ். மாதிரி நேர்முகத் தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், தில்லிக்கு அழைத்துச் சென்று ஒரு மாத காலம் தங்குவதற்கும், உணவு மற்றும் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என கல்வியகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்களுக்கு
044 - 24358373 என்ற தொலைபேசி எண்ணையும், 9840106162 கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு மார்ச்சில் ஆரம்பம்:
நேர்முகத் தேர்வுகள் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ளன. நேர்முகத் தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளை
பார்க்கலாம்.