உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 13, 2011

வடலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்




விபத்து நடந்து 10 நாள்களுக்கு மேலாகியும் சீர் செய்யப்படாமல் உள்ள பாலத்தின் சுவர். (வலதுபடம்) சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூருக்கு 2 கி.மீ
 
நெய்வேலி:
 
            வடலூர் அருகேயுள்ள கண்ணுத்தோப்பு கிராமத்தில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறுகிய பாலத்தில் மாதத்துக்கு இரு விபத்து நடந்து வருகிறது. 
 
                 ஆனால் அப்பாலத்தை மாற்றியமைக்கவோ அல்லது சீர்செய்யவோ, குறைந்தபட்சம் பாலத்தின் தன்மையை வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை பதாகைகளோ எதையும் செய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட விக்கிரவாண்டி-தஞ்சை சாலை மார்க்கத்தில் வடலூருக்கு 2 கி.மீட்டருக்கு முன்னதாக அமைந்துள்ளது கண்ணுத்தோப்பு குறுகியபாலம். இப்பாலம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு அவசரத் தேவைக்காக கட்டப்பட்டது. 
 
              இருப்பினும் கடந்த 75 ஆண்டுகளாக இது தாற்காலிகப் பாலமாகவே இருந்துவருகிறது.இச்சாலை மார்க்கத்தில் சென்னையிலிருந்து சிதம்பரம், கும்பகோணம்,மயிலாடுதுறை, தஞ்சை,திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட அனைத்து ஊர்களுக்கு செல்லும் நெடுந்தொலைவு அதிவேக பஸ்கள் இப்பாலத்தைக் கடந்தே செல்கின்றன.இதுதவிர்த்து, நகரப் பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள், ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வேன்கள் என அனைத்தும் இப்பாலத்தின் மீதே சென்றுவருகின்றன.
 
                இது குறுகிய பாலமாக இருப்பதால், அறிமுகமில்லாத வாகன ஓட்டி இப்பாலத்தை கடக்க முற்படும் போது, விபத்துக்குள்ளாகிறது. ஆண்டுக்கு சராசரியாக 20 விபத்துக்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் சரக்கு வாகனங்களே இவ்விபத்தில் சிக்குவதால், பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து, அவை சரிசெய்யப்படாமல் மாதக்கணக்கில் அப்படியே இருக்கும். அதற்குள் அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைவது வாடிக்கையாகிவிட்டது
 
              .உதாரணத்துக்கு ஜூலை 2-ம் தேதி, ஒரு சரக்கு லாரியை ஓட்டிவந்த வாகன ஓட்டி குறுகிய பாலத்தின் தன்மை தெரியாமல் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக லாரியின் ஒரு பக்க டயர்கள் மட்டும் பாலத்தின் விளிம்பில் சிக்கிக் கொண்டதால், லாரி கவிழாமல், சேதமடைந்ததோடு நின்றுவிட்டது. இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மறு தினமே லாரி அங்கிருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து இடையூறின்றி செயல்படத் துவங்கியது. இருப்பினும் சரக்கு வாகனத்தால் சேதமடைந்த பாலத்தின் பக்கவாட்டுச்சுவர் இதுவரை சீர் செய்யப்படாமல் அப்படியே இருக்கிறது. 
 
              பகலில் வருவோர் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை இயக்கிச் சென்றாலும், இரவில் வாகனத்தை ஓட்டிவரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.விபத்து நடந்து 10 தினங்களுக்கு மேலாகியும், துவரை அவ்விடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் பார்வையிடவும் இல்லை. மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை. தற்போது அவர்கள் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை சரிசெய்ய தங்களுக்கு சாதகமான ஒரு ஒப்பந்ததாரரை தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் பேரம் பேசி முடிந்த பின்னர் தான் வேலையை துவங்குவார்கள் என பொதுமக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
 
                  பாலத்தை சீர் செய்யும் வரையாவது இடிந்த இடத்தில் எச்சரிக்கை சிவப்புச் சின்னமோ அல்லது மணல் மூட்டைகளையோ அடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்வராதது ஏன்? பெரிய விபத்தேதும் ஏற்பட்டால்தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

               திங்கள்கிழமை முதல் ஜூலை 15-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என அப்பகுதி மீனவர்கள் முடிவு செய்து புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பரங்கிப்பேட்டை அருகே வேளங்கிராயன்பேட்டை பகுதியில் ரூ. 300 கோடி செலவில் தனியார் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்க வேளங்கிராயன்பேட்டை, அண்ணன்பேட்டை, புதுக்குப்பம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் வாங்கியுள்ளனர். வருகிற ஜூலை 14-ம் தேதி கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைப்பது குறித்து மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.

              இந்நிலையில் வேளங்கிராயன்பேட்டை பகுதி மீனவர்கள் கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராமத் தலைவர் ஏழுமலை தலைமையில் திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் ஜூலை 15-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். இதனால் திங்கள்கிழமை அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாம் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.






Read more »

கடலூர் மாவட்டத்தில் சூரியசக்தி மின் திட்டங்களுக்கு கூடுதல் வங்கி கடன்

கடலூர்:

             சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு, வங்கிகள் கூடுதல் கடன் வழங்க முடிவு செய்துள்ளன. எனவே இந்த வாய்ப்பை சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கேட்டுக் கொண்டார். 

            சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி, 20 ஆண்டுகள் நிறைவு அடைவதை யொட்டி, கருத்தரங்கம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நபார்டு வங்கி இந்தக் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. 

கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:  

              அரசின் திட்டங்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் சென்றடைகின்றன. தொழில் தொடங்குவதற்கு சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை அவர்கள், தொழில் தொடங்காமலேயே தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சுயஉதவிக் குழுக்கள் வங்கிக் கடன்களைப் பெற்று, தொழில்களைத் தொடங்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுடன், வாங்கிய கடன்களை ஒழுங்காக வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தும் வகையில், சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.  இந்தியாவில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில், ஆந்திர மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. வரும் ஆண்டுகளில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் தமிழகம் முதல் இடத்துக்கு வரவேண்டும்.

             தற்போதைய சூழ்நிலையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்களுக்கு, வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க முன்வந்து உள்ளன. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான 17 தொழில்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க உள்ளன. சுயஉதவிக் குழுக்களும் இத்தகைய தொழில்களைத் தொடங்க கடன்களை பெற்று முன்னேற வேண்டும் என்றார் ஆட்சியர்.  கருத்தரங்கத்துக்கு இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் எம்.சுந்தரராஜன் தலைமை வகித்தார்.

                 கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன். மத்தியக் கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி, மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளர் மகாலிங்கம், இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளர் உத்தமர்லிங்கம் ஆகியோர் பேசினர். நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் ராஜகோபாலன் வரவேற்றார். முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் ஜே.டி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.







Read more »

குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும்: கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி

கடலூர்:

          ஆணோ பெண்ணோ குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று, குடும்பநலத் துறையினரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கேட்டுக் கொண்டார்.  

கடலூர் மாவட்டக் குடும்ப நலச் செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை நாள் விழா, கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பேசியது:  

             2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7.2 கோடி. தமிழ்நாட்டில் ஒரு நிமிடத்துக்கு 2 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன. நாம் குடும்ப நலத்தைப் பேண வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்குழந்தையோ ஒரு பெண் குழந்தையோ போதும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.  கிராமங்களில் உள்ள பெண்களுக்கு மக்கள் தொகை பற்றி கிராமச் செவிலியர்கள் எடுத்துரைத்து, குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

              இதற்காக கிராமச் செவிலியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.  குடும்ப நலச் சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. கடலூர் மாவட்டம் 6-வது இடத்தில் உள்ளது. கடலூரை முதல் இடத்துக்குக் கொண்டு வரும் வகையில், கிராமச் செவிலியர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப நலத்திட்டத்தில் கடலூர் மாவட்டம் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.  உலக மக்கள் தொகை தின விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை, மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார். 

              செவிலியர் பள்ளி மாணவிகளுக்குப் பரிசுகளையும், மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.  மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் கமலக்கண்ணன் வரவேற்றார். துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) மனோகரன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்டத் திட்ட அலுவலர் கோ.அன்பழகி, மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன் உள்ளிட்டோர் பேசினர். சதாசிவம் நன்றி கூறினார். 





Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கிள்ளை : 

           சி.முட்லூர் அரசு கல்லூரியில் வரும் 18, 19 ஆகிய தேதிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

இது குறித்து கல்லூரி முதல்வர் தங்கமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

              சி.முட்லூர் அரசு கல்லூரியில் இந்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 27ம் தேதி முதல் 4ம் தேதிவரை நடத்தப்பட்டது. எஞ்சிய காலி இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கிறது. 

              அதில், 18ம் தேதி கணினி அறிவியல், இயற்பியல், கணிதம், பொது மற்றும் தொழில் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளும், 19 ம்தேதி பி.காம், பி.பி.ஏ, பி.ஏ., பொருளியல், தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில இலக்கியப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. அழைப்பு கடிதம் பெற்றவர்கள் குறிப்பிட்ட நாளில் அனைத்து சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. 






Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் 4 தங்கம் வென்றார்

விருத்தாசலம் : 

             மாற்று திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவரை முதல்வர் பாராட்டினார். 

                விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்,19. மாற்று திறனாளியான இவர் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், கல்லூரி விளையாட்டு அரங்கில் பயிற்சியாளர் அறிவழகன் உதவியுடன் தடகள பயிற்சி பெற்று வந்தார். கடந்த வாரம் கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இரண்டாவது தேசிய தடகள போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற மாணவர் வேல்முருகன் ஈட்டி எறிதல் மற்றும் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கமும், குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும் பெற்றார்.
            தேசிய அளவிலான போட்டியில் நான்கு பதக்கங்களை வென்ற மாற்று திறனாளி மாணவன் வேல்முருகனை கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், அரங்க பயிற்சியாளர் அறிவழகன் உடனிருந்தனர். 







Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

          
            கல்வி உதவித்தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவர் மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்தும், கல்வி உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மாணவர்கள் கல்லூரியின் இந்திய மாணவர் சங்கத் தலைவர் ராஜேஷ் தலைமையில் வகுப்பை புறக்கணித்தனர். செயலாளர் கோபாலகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 




Read more »

கடலூரில்மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம்

கடலூர் : 

                கடலூரில், மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரத்திற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

               தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி ஆக., 21ம் தேதி ஈரோட்டிலும், செப்., 4ம் தேதி சென்னையிலும் நடக்கிறது. கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரத்திற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் மாற்றுத் திறனாளிகளிடம் விண்ணப்பங்களை வழங்கினார். மாவட்டத் தலைவர் சந்தோஷ், செயலர் மனோகர், செய்தி தொடர்பாளர் சண்முகம், தாமஸ், ஜெயபாலன் உடனிருந்தனர். 



Read more »

மனித சிறுநீரை வேளாண் துறைக்கு பயன்படுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு

கடலூர் : 

          வேளாண்மையில் மனித சிறுநீர் மற்றும் கழிவுகளை பயன்படுத்துவதால் உண்டாகும் சமூக பொருளாதார தாக்கம் பற்றி "வேர்எவர் நீட்' அமைப்புடன் வேளாண்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளன. பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் மனித கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது வளரும் நாடுகளில் பெரிய சவாலாக மாறி வருகிறது. பொதுவாக மனித சிறுநீர் நச்சுத்தன்மையற்றது என்றாலும் அதில் உள்ள யூரியா, குளோரைடு மற்றும் சோடியம் உப்புகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது.

               மனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பயன்கள் தமிழகத்திற்கும் கிடைக்கச் செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறையும் இங்கிலாந்தில் உள்ள தொண்டு நிறுவனமான வேர்எவர் நீட் இணைந்து வேளாண்மையில் மனித சிறுநீர் மற்றும் கழிவுகளை பயன்படுத்துவதால் உண்டாகும் சமூக பொருளாதார தாக்கத்தினை ஆய்வு செய்ய உள்ளன.

                   இத்திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது. இதில் கடலூரில் உள்ள பிளஸ் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தவுள்ளது. நெல், கத்தரி, மக்காச்சோளம் போன்ற பயிர்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டம் வாயிலாக மனிதக்கழிவுகள் மூலம் வேளாண்மைக்குத் தேவையான சத்துக்களை சுற்றுச்சூழல் மாசின்றி பெற வாய்ப்புள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராமநாதன், வேளாண்புல முதல்வர் முனைவர் வசந்தகுமார் முன்னிலையில் இத்திட்டத்திற்கான முதல் தவணையாக 2 லட்சம் ரூபாய் காசோலையாக கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேர்எவர் நீட் உலகத் தலைவர் டேவிட் கிராஸ் வெல்லர் இந்திய இயக்குனர் பரமசிவம் மற்றும் பிளஸ் தொண்டு நிறுவனம் தலைவர் அந்தோணிசாமி பங்கேற்றனர்.


 

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே தீ விபத்து: எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன் நிவாரண உதவி

  http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/a9ba3f76-4d36-4db2-8c94-af5ad01200e4_S_secvpf.gif


 
 
கடலூர்:

            குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம், சதானந்தம் ஆகியோர் வீடுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

               இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார். இவருடன் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், ஊராட்சி செயலாளர் மாயவேல், வெள்ளகரை நாகப்பன், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், கிளை கழக செயலாளர்கள் மோகன், சடகோபன், அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 
 
 
 
 

Read more »

குடும்ப கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு சிறப்பு பரிசுகள்

          திருவள்ளூர் மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில், உலக மக்கள் தொகை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

            விழாவுக்கு சுகாதார பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) உஸ்மான் அலி தலைமை வகித்தார். ஊரக நலப்பணி, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் சேகர் வரவேற்றார். விழாவில், கைத்தறித்துறை அமைச்சர் ரமணா கலந்துகொண்டார். பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பேசும்போது,   ‘

           ’மக்களை ஈர்க்கும் விளம்பரங்கள்தான் தற்போது அவர்களிடம் சென்றடைகிறது. எனவே, குடும்ப கட்டுப்பாடு குறித்து மக்களை ஈர்க்கும் விளம்பரங்களை செய்து, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை பெருகி வருவதால்தான் பொருளாதார நிலைமை பாதிக்கப்படுகிறது. எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்த கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரம் அவசியமாகிறது. ஆண்களுக்கான கருத்தடை அவசியம் குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும்.

              குடும்ப கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பரிசளிப்பு விழாக்களுக்கு அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும்’’ என்று பேசினார்.





Read more »

Metrowater starts drawing water from Veeranam tank

            The tapping of 76 cusecs of water from the Veeranam tank for Chennai began on Sunday, after a gap of four months. As the storage in the tank has reached a comfortable level of 43 ft, the water supply has been resumed to the metropolis.

           It may be noted that the water released from Mettur dam on June 9 has been directed to the Keelanai where after the water level has reached a significant height it has been taken through the Vadavar to the Veeranam tank at the rate of 1,800 cusecs. The almost dry Veeranam tank, therefore, got filled up fast. However, a section of the farmers have voiced concern over the availability of water for raising kuruvai crops.

          President of the Vettuvaikkal and Naraikkal Eri Pasana Vivasayigal Sangam K.V. Elangeeran stated that it was an unwritten rule that priority in the utilisation of the Veeranam tank water would be accorded to irrigation. But now the officials seemed to be taking a hurried measure to feed the pipeline to Chennai. For instance, the discharge through the Vadakku Rajan Vaikkal and the Therkku Rajan Vaikkal was only in the region of 100-150 cusecs. The quantum was hardly sufficient to meet the requirements of the kuruvai paddy crop. 




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior