உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 12, 2011

ஒரு வயது குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ நிதி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பண்ருட்டி:
 
            பிறந்த குழந்தை முதல் ஒரு வயது வரையில் உள்ள குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற ரூ.1 லட்சம் வரையில் நிதி உதவி பெறும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தெரிவித்தார்.
 
              பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட கடலூர் சாலை-கும்பகோணம் சாலை இணைக்கும் பிரதான சாலை திறப்பு விழா, இலவச கலர் டி.வி. வழங்கும் விழா, கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கும் விழா பண்ருட்டி நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது.
 
விழாவில் இலவச கலர் டி.வி.க்களையும், கர்ப்பிணிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது.
 
             தற்போது நகராட்சிப் பகுதியில் இலவச கலர் டி.வி.க்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் 10 லட்சம் கலர் டி.வி.க்கள் தேவைப்படுகிறது. இதை வாங்குவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு எடுத்து உள்ளது.பள்ளியில் படிக்கும் 69 லட்சம் மாணவர்களுக்கு தினந்தோறும் முட்டை வழங்கப்படுகிறது. இதுவரையில் 23 லட்சம் கர்ப்பிணிகள் நிதி உதவி பெற்றுள்ளனர். 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டு வருகிறது.இதனால் வரும் தேர்தலில் நன்றியை காட்ட வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.
 
                 விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கோட்டாட்சியர் முருகேசன், வழங்கல் அலுவலர் கல்யாணம், நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன், பொதுப்பணித் துறை பொறியாளர் மனோகரன் முன்னிலை வகித்தனர்.  பண்ருட்டி நகராட்சி ஆணையர் சு.அருணாசலம் வரவேற்றார். கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் சிலம்புசெல்வி, நகர மன்ற துணைத் தலைவர் கே.கோதண்டபாணி, வட்டாட்சியர் அ.அனந்தராமன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மங்கலம், திமுக நகரச் செயலர் கே.ராஜேந்திரன், அண்ணா கிராம ஒன்றியச் செயலர் வெங்கட்ராமன் மற்றும் பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் நடக்கிறது


மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் நடக்கிறது

 
கடலூர்:

         மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மூலமாக கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள தி சுசான்லி அக்கு பஞ்சர் ஆயுர்வேதிக் மருத்துவ மனையில் வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூலிகை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது.

               மூலிகை பயிற்சியில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சியில் மூலிகைகள் என்றால் என்ன? மூலிகை மருந்துகளை தயாரிப்பது எப்படி? என்னென்ன நோய்க்கு சரியான மூலிகை எது? கூந்தலுக்கு மூலிகை தைலம், ஹெர்பல் ஹேர்டை, வலிப்பிரச்சினைகளுக்கான பாம், லேகியங்கள், பெண் களின் பிரத்யோக பிரச்சி னைகளுக்கான மூலிகைகள் எவை? என்பன உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நோய்களுக்கான மருந்து செய்யதேவையான விஷயங் களையும், சில குறிப்பிட்ட மருந்துகளை நேரிடையாக செய்து காண்பித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

             பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகளுக்கான மூலிகை சூரணங்கள், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள் தயாரிக்க கற்றுத் தரப்படும். வங்கிகள் மூலமாக மானியத்துடன் கடன் உதவி பெற்று மூலிகை தொழில் தொடங்குவது எவ்வாறு? என்று அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள். பயிற்சியை முடித்தவர் களுக்கு மத்திய அரசின் ஹெர்பல் புராடக்ட் மேக்கிங் என்ற சான்றிதழ் வழங்கப்படும். 
 
              பயிற்சி கட்டணம் முன்பதிவு முதலியவற்றிற்கு 9750586267, 9367622255, 9367622256 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை. இந்த தகவலை தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் ஆஸ்பத்திரி டாக்டர் ரவி தெரிவித்தார்.

Read more »

Platinum jubilee celebrations of Indian Overseas Bank begin



Chief Manager of Indian Overseas Bank (Puducherry region) V. Sundaramurthy giving away a financial assistance to a Self-Help Group member at Vriddhachalam in Cuddalore district, to commemorate the platinum jubilee of the IOB on Thursday.


CUDDALORE: 

          The year-long Platinum Jubilee celebrations of Indian Overseas Bank were kick-started by IOB Chief Manager (Puducherry region) V. Sundaramurthy by giving away financial assistance to 75 Self-Help Groups to the tune of Rs 54 lakh at Vriddhachalam near here on Thursday.

          Speaking on the occasion, Mr Sundaramurthy said that on the direction of IOB Chairman-cum-Managing Director M. Narendra, the branches of the bank were commemorating the event by organising health camps, giving aid to orphanages, extending financial assistance to street hawkers and pavement vendors, and planting saplings. It was also bringing the rural populace and daily wage earners into the banking network by earnestly implementing the “social inclusion” programme, thus, taking banking services to the “unbanked” villages having a population of 2,000.

           On the occasion Mr Sundaramurthy gave away 600 smart cards to the new customers. He further said that the total business mix of the bank so far was Rs 2,25,000 crore and it would go up to Rs 2,50,000 crore by March 2011. So far, 3.88 lakh SHGs in the country had obtained assistance worth about Rs 3,285 crore, and it included 1,137 SHGs to the extent of Rs 15.80 crore in Puducherry region, comprising the three districts of Cuddalore, Villupuram, Thiruvannamalai and Union Territory of Puducherry.

          Mr Sundaramurthy observed that the bank was the first one in the region to give away a “top-up loan” of Rs 20,000 to as many as 35 beneficiaries of the Kalaignar Housing Scheme who found the government grant of Rs 75,000 inadequate for the conversion of huts into concrete houses. Assistant General Manager of National Bank for Agriculture and Research Development S.Rajagopalan called upon the SHGs to utilize the funds for productive purposes and for becoming entrepreneurs.

        Just indulging in internal lending would not be a sustainable proposition, he said. Senior Manager of Puducherry branch R.Muthumani said that the borrowers should be prompt in repayment of loans. Senior manager of Manjakuppam branch S.Kesavan called for cohesive working of the SHGs for improving the standard of life of the members. Vriddhachalam Municipal Commissioner T.Thiruvannamalai, Vriddhachalam Panchayat Union Chairperson Rajamani Ramu and Vriddchalam branch manager G.Subbarayalu were among those who spoke.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior