உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 24, 2010

கடலூர் டெல்டா பகுதியில் சம்பா நடவுக்கு தண்ணீர் போதவில்லை


ஜனவரி முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை, தமிழகத்துக்கு கர்நாடகம் 169 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால் 70.44 டி.எம்.சி. தண்ணீர்தான்
   
கடலூர்:
 
            கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், சம்பா நடவுப் பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.கர்நாடகத்தில் இருந்து, நமக்கு வழங்க வேண்டிய நீரை, கேட்டுப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன. 
 
                       இவற்றில் வடவாறு நேரடிப் பாசனப் பகுதிகள் 11 ஆயிரம் ஏக்கரில் 10 ஆயிரம் ஏக்கரிலும், வடக்கு ராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகள் 27 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன.வீராணம் ஏரி பாசனப் பகுதிகள் 50 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன.கடைமடைப் பகுதிகளான சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகள் உள்ளிட்ட 1 லட்சம் ஏக்கரில் நாற்றங்கால்கள் தயாராகி வருகின்றன. 
 
                       இந்தப் பகுதிகளில் அக்டோபர் இறுதியில் நடவுப் பணிகள் தொடங்கி, நவம்பர் 20-ம் தேதி வாக்கில் முடிவடையும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள் .நடவுப் பணிகள் வேகமாக நடந்து வருவதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். விவசாயிகளின் தண்ணீர் தேவைக் கோரிக்கைகளை ஏற்று கடந்த 5-ம் தேதி கடலூர் மாவட்டக் காவிரி பாசனப் பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து 3,528 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது
 
            இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சம்பா நடவுப் பணிகளில் விவசாயிகளின் உத்வேகம் அதிகரித்தது.ஆனால் தண்ணீர் வரத்து படிப்படியாகக் குறைந்து, வெள்ளிக்கிழமை கல்லணையில் இருந்து கடலூர் மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு 1,207 கன அடியும், சென்னைக் குடிநீருக்காக கூடுதலாக 100 கன அடியும் திறக்கப்பட்டு, கீழணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடலூர் மாவட்ட சம்பா பாசனத்துக்கு கீழணையில் இருந்து, வடக்குராஜன் வாய்க்காலில் 148 கனஅடி, குமிக்கி மண்ணியாறில் 88 கனஅடி, வீராணம் ஏரிக்கு 900 கனஅடி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதிகளுக்கு 268 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.நடவுப் பணிகள் வேகமாக நடந்து வருவதால் தற்போது வந்துகொண்டு இருக்கும் தண்ணீர் போதாது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
  
இது குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
                 "கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவான பகுதிகளில் மட்டுமே நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன. மற்றப் பகுதிகளுக்கு நாற்றங்கால் தயாராகிக் கொண்டு இருக்கிறது.படிப்படியாக நடவு நடந்து வருகிறது. ஆயினும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.இந்த நேரத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட்டால்தான் நடவுப் பணிகள் விரைவாக முடிவடையும். ஆனால் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் குறைவாக உள்ளது. 
 
                 ஜனவரி முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை, தமிழகத்துக்கு கர்நாடகம் 169 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டு இருக்க வேண்டும்.ஆனால் 70.44 டி.எம்.சி. தண்ணீர்தான் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே கூடுதல் நீரை, கர்நாடகத்திடம் இருந்து, தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.வருகிற நீரையும் முறையாக விநியோகிக்க, பொதுப் பணித்துறையில் போதுமான அதிகாரிகள் இல்லை. பல பணியிடங்கள் காலியாக உள்ளன. 40 லஸ்கர் பணியிடங்களில் 15 பேர் மட்டுமே உள்ளனர்' என்றார்.
 
இது குறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ் கூறியது
 
                          "நீர் மேலாண்மை குறித்து கடந்த 18-ம் தேதி விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்தோம். நீர் வீணாகாமல் இருக்க விவசாயிகளின் ஆலோசனைப்படிதான் நீர் விநியோகம் 25 சதவீதம் குறைக்கப்பட்டது.மேட்டூர் அணையிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நமது டிவிஷனில் லஸ்கர் பிரச்னை இல்லை. ஆனால் 5 ஓவர்சீயர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என்றார்.

Read more »

நடுரோட்டில் மீனவர் வெட்டிக்கொலை : கடலூரில் பட்டப்பகலில் பயங்கரம்




கடலூர் : 

                     கடலூரில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனவரை நடுரோட்டில் ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

               கடலூர், தேவனாம்பட்டினம் மீனவர் பிச்சைவரதன் மகன் மாரியப்பன் (40). மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலரான இவர், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று மதியம் தேவனாம்பட்டினம் அமுது என்கிற ஆராவமுதன், நாகராஜன், புதுச்சேரி தேவா ஆகியோருடன், புதுச்சேரிக்குச் சென்று தீபாவளி பண்டிகைக்கு துணி எடுத்துக் கொண்டு, இரண்டு மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தனர். மாலை 3 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே வந்தபோது, பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மாரியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

                         தற்செயலாக நடந்ததாக கருதிய மாரியப்பன் அதை பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த தேவனாம்பட்டினம் ஞானசேகரன், முன்னால் சென்ற மாரியப்பன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வந்த அமுது என்கிற ஆராவமுதனை பிடித்து இழுத்தார். அதில் நிலை தடுமாறி, மாரியப்பனும், அமுதுவும் கீழே விழுந்தனர். 

                    உடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஞானசேகரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல், கீழே விழுந்த மாரியப்பனை சுற்றி வளைத்து, தலை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதைக் கண்டு திடுக்கிட்ட அமுது, அங்கிருந்து தப்பியோடி கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். மோட்டார் சைக்கிள்களில் வந்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

                      கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏழுமலை, ஏட்டு சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாரியப்பனை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக மாலை 3.35 மணிக்கு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். மாரியப்பன் படுகொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தேவனாம்பட்டினம் பகுதியில் பதட்டம் நிலவி வருவதைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

                         இந்த கொலை சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, தேவனாம்பட்டினம் ஞானசேகரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர். அவர்களை பிடித்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும். கொலை செய்யப்பட்ட மாரியப்பனுக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும் உள்ளனர்.

Read more »

சிதம்பரம் நகரில் குப்பைத் தொட்டி வைப்பதிலும் அரசியல்!


சிதம்பரம் மேலவீதியில் கடைமுன்பு குப்பை தொட்டி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆதரவு தெரிவித்து கூடிய திமுகவ
 
சிதம்பரம்:
 
            சிதம்பரம் நகரில் மேலரதவீதியில் கடை ஒன்றின் முன்பு நகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பைத் தொட்டியை அங்குதான் வைக்க வேண்டும் என திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில் வெள்ளிக்கிழமை புதிய குப்பைத்தொட்டி ஒன்று மேலரதவீதியில் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கடை ஒன்றின் முன்பு வைப்பதற்கு வந்தனர். குப்பைத் தொட்டியை அங்கு வைக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூசா, நகரச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
                        தகவல் அறிந்த அந்த வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகன் மற்றும் திமுக நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், வெங்கடேசன், வி.என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ராஜராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று குப்பைத்தொட்டி சாலையோரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் தொட்டியை வைக்க வேண்டும் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான் மற்றும் போலீஸôர் அங்கு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குப்பைத் தொட்டியை அதே இடத்தில் வைத்துவிட்டு வந்தனர்.
 
                   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவராக உள்ள சிதம்பரம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பைத்தொட்டிக்கு அந்த கட்சியே எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையளிக்கிறது என திமுக நகரமன்ற உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன் தெரிவித்தார்.

Read more »

கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதையொட்டி கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டு உள்ள 2-வது புயல் எச்சரிக்கைக் கூண்டு.
 
கடலூர்:
 
              கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் இரு நாள்களாக அவ்வப்போது குறிப்பாக இரவில் மழை பெய்து வருகிறது பகல் நேரத்தில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பெய்த மழையில், கம்மியம்பேட்டையில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் 5 தென்னை மரங்கள் இடி தாக்கி கருகின. 
 
                   நகரில் சில வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் சேதம் அடைந்தன. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் 90 சதவீத மீனவர்கள் கடந்த 2 நாள்களாக மீன் பிடிக்கச் செல்லவில்லை என்று, மீனவர் பேரவை மாவட்டச் செயலர் சுப்புராயன் தெரிவித்தார். கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மீன் வரத்து குறைந்ததால் அங்காடிகளில் மீன்கள் விலை அபரிமிதமாக உயர்ந்தது.

Read more »

கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் பிரச்னை: போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பு


கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.
 
கடலூர்:
 
               கடலூர் நகரில் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் பிரச்னையால், போக்குவரத்தில் மேலும் சிக்கல் அதிகரித்து வருகிறது.விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது, கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் ஒரு நாளுக்கு 40 முறை மூடித் திறக்கப்பட்டது. 
 
                    அகலப் பாதைத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, திருப்பாப்புலியூர் ரயில்வேகேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பொது நல அமைப்புகளின் போராட்டம் மற்றும் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரியின் முயற்சியால் ரயில்வே சுரங்கப் பாதைக்கு டெண்டர் விடப்பட்டு 2 மாதங்கள் ஆகின்றன. ஆனால் தமிழக நெடுஞ்சாலைத் துறை தனது பங்கைச் செய்வதில் இன்னமும் ஆர்வம் காட்ட வில்லை என்று பொது நல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.பொது நல அமைப்புகள் ஏராளமான போராட்டங்களை நடத்தியும், வர்த்தகர்களின் ஒரு பிரிவினரின் சுயநலம் அடிப்படையிலான எதிர்ப்பு காரணமாக, தமிழக நெடுஞ்சாலைத் துறை, சுரங்கப்பாதைப் பணிக்கு டெண்டர் விடாமல் இழுத்தடித்து வருவதாக, கடலூர் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் குற்றம் சாட்டி வருகிறார்.
 
              உள்ளாட்சி மற்றும் அரசுப் பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சிப் பிரதிநிதிகளும் இப்பிரச்னையில் முனைப்புக் காட்டாததே, சுரங்கப்பாதை பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதற்கு, முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூர் சிதம்பரம் மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாள்களாக இந்த வழியாகச் செல்லும் சரக்கு ரயில்களின் எணணிக்கையும் அதிகரித்து உள்ளது.
 
                   இதன் விளைவாக ஏற்கெனவே ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன லாரன்ஸ் சாலையில், தற்போது ரயில்வே கேட் அடிக்கடி மூடித் திறப்பதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.புதிதாகக் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக பெரும்பாலான வாகனங்களை திருப்பி விடும் முயற்சியிலும் போலீஸôர் கவனம் செலுத்தாததும் ரயில்வேகேட் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி வருகிறது.
 
                     லாரன்ஸ் சாலையிலும், நகரின் மையப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசலைப் போக்க,  வண்டிப்பாளையம் சாலை- சரவண நகர் இணைப்புச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு பணம் ஒதுக்கியும், நகராட்சி தொடர்ந்து கிடப்பில் போட்டு வருவதற்கும், சில தனி நபர்களின் சுயநலத்துக்கு, நகராட்சி அடங்கிப் போய்விட்டதே காரணம் என்று, கடலூர் நகர குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் குற்றம் சாட்டி உள்ளார்.இதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Read more »

ஊதியம் குறையலாம் அச்சத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்

சிதம்பரம்:

              தனியார் பள்ளிகளில் நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தங்களது சம்பளம் குறைந்து விடுமோ என்கிற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கட்டணம் குறைவாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் கூறிவரும் நிலையில் செலவைக் கட்டுப்படுத்த அவர்கள் தங்கள் சம்பளத்தில் கைவைத்து விடுவார்களோ என்று ஆசிரியர்கள் அஞ்சுகின்றனர்.

                தமிழகத்தில் 1800 மெட்ரிக் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 2 ஆயிரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆண்டுதோறும் மெட்ரிக் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வில் சராசரியாக 95 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைகிறார்கள்.தேர்ச்சி விகிதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகம் உள்ளது. தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் விரும்பிச் சேர்க்கின்றனர். இதனால் மெட்ரிக் பள்ளிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் பெருகிவருகிறது. கிராமப்புறங்களிலும் தற்போது மெட்ரிக் பள்ளிகள் புற்றீசல்போல் பெருகிவிட்டன.மெட்ரிக் பள்ளிகள் சிறந்து விளங்குவதற்கு முக்கியக் காரணம் ஆசிரியர்களின் கடினமான உழைப்புதான். 

                இவ்வாறு மாணவர்களின் மேம்பாட்டுக்காக கடினமாக உழைக்கும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம், பணிநிலை மற்றும் ஓய்வூதியப் பலன்கள் பெரும்பாலான பள்ளிகளில் திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.ஊதியம் பள்ளிக்கு பள்ளி மாறுபடுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் ஊதியத்திற்கும், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.2002-ல் தமிழக அரசு சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை பரிந்துரை செய்தது. மெட்ரிக் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்தில் 70 சதவீத தொகையை ஆசிரியர்கள் ஊதியத்துக்கு செலவிட வேண்டும் என அறிவுரை கூறியது. இருப்பினும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. 

               இதற்கு முக்கியக் காரணம் மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்திலிருந்துதான் ஆசிரியர்களுக்கு ஊதியம் தரவேண்டியுள்ளது .உத்தேசமாக, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாதச் சம்பளம்  31,950, அதே தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு  5 ஆயிரம் முதல்  10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி  முதுகலை ஆசிரியருக்கு  21,135-ம், தனியார் பள்ளி முதுகலை ஆசிரியருக்கு   4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையும், அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு  20,725-ம், தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு  3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையும், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு  12,060-ம், தனியார் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு  2 ஆயிரம் முதல்  4 ஆயிரம் வரையும் வழங்கப்படுகிறது. 

              இதில் கிராமப்புற மெட்ரிக் பள்ளிகளில் இதைவிட மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. இவ்வளவு கடுமையாக உழைத்தாலும் தங்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவில்லையே என்ற மனக்குமுறல் தனியார் பள்ளி ஆசிரியர்களிடையே அதிகம் மேலோங்கியுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகி சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தது: 

                 உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவதைப் போலவே மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக அரசே ஊதியம் மற்றும் இதர பணிச் சலுகையை வழங்க வேண்டும். பள்ளியின் நிர்வாகம், பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் இதர செலவுகளை ஈடுசெய்யும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு உரிய கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். 

                     இத்தகைய கட்டணத்தை மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், பெற்றோர்-ஆசிரியர் கழகப் பிரதிநிதிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட மாவட்டக்குழு நிர்ணயிக்க வேண்டும். மாநில அளவில் 5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு குழு ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்வது எந்த வகையிலும் சாத்தியமில்லை என்றார் சி.ஆர்.லட்சுமிகாந்தன்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை (திங்கள்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் தெரிவித்தார்.  

ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

                        கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 1-1-2011 ஐ தகுதி நாளாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் 25-10-2010 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து வேலை நாள்களிலும் 9-11-2010 வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். குடியிருப்போர் நலச் சங்கங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல் வைக்கப்படும்.  

                 மேலும் 1-1-2011 அன்று 18 வயது பூர்த்தி ஆகும் அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள மனு அளிக்கலாம். மேற்கண்ட தினங்களில் பொதுமக்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுமாறும், பெயர்கள் விடுபட்டு இருந்தால் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  மேலும் 30-10-2010 மற்றும் 7-11-2010 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி, மனுக்களைப்பெற தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கி உள்ளது.  

                      வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல்: 25-10-2010. சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய படிவங்கள் பெறுதல்: 25-10-2010 முதல் 9-11-2010 வரை. கிராம சபைகளில் வாக்காளர் பட்டியலை வாசித்தல் மற்றும் பார்வைக்கு வைத்தல் 30-10-2010 (சனிக்கிழமை) மற்றும் 2-11-2010 (செவ்வாய்க்கிழமை). நியமன அமைவிடங்களில் படிவங்கள் பெற சிறப்பு முகாம் நாள்கள் 30-10-2010 மற்றும் 7-11-2010 காலை 9 முதல் மாலை 5 மணி வரை.  சிறப்பு முகாம் தினங்களில் விண்ணப்பங்கள் பெற அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

புத்தகக் கல்வியைவிட வாழ்க்கைக் கல்வியே அவசியம்: கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி

கடலூர்:

               மாணவர்களுக்கு புத்தகக் கல்வியைவிட வாழ்க்கைக் கல்வியே அவசியம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.ஆர். வீரமணி தெரிவித்தார்.  

                கடலூர் குமாரப்பேட்டை நியூ மில்லேனியம் கல்வியியல் கல்லூரி 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை நடந்தது. 

பி.எட். பட்டம் படித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வீரமணி பேசியது:  

                  இந்தியா விடுதலையடைந்த 1947-ல் 500 கல்லுரிகள் மட்டுமே இருந்தன. இப்போது 20,667 கல்லூரிகள் உள்ளன. 1947-ல் 25 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது 5.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.  தமிழ்நாட்டில் 688 பி.எட் கல்லூரிகளில் 75 ஆயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள். 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு, கட்டாயக் கல்வி சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கும். எனவே பி.எட். பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. இத்தனை கல்லூரிகள் இந்தியாவில் இருந்தும், மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்ததாகச் சொல்ல முடியாது.

                மேலை நாடுகளில் 75 சதவீத மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 10 முதல் 15 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. 2 முதல் 3 சதவீத மாணவர்களே ஆராய்ச்சிக் கல்வியில் சேர்கிறார்கள். மாணவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர் கையில்தான் உள்ளது. ஒழுக்கம் இல்லாதவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவர்கள். கலாசாரம், ஒழுக்கம் சீர்கெடாத கல்வி வேண்டும். வாழ்க்கைக் கல்வி மேம்பட தன்னம்பிக்கை அவசியம் தேவை. 

                      அத்தகைய கல்வியை அளிக்கும் பொறுப்பு, ஆசிரியர்களுக்கு உள்ளது என்றார் வீரமணி.  விழாவுக்கு கல்லூரித் தலைவர் ஆர். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் டாக்டர் ராஜ்குமார் செல்வநாதன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிறிஸ்டியன் ஜெயசீலி அறிக்கை வாசித்தார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ஆய்வு: விற்பனையாளர் சஸ்பெண்ட்

சிதம்பரம்:
            :கடலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முறைகேட்டில் ஈடுபட்டதாக விற்பனையாளர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.  
             கடலூர் மாவட்டத்தில் தமிழக உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் க. பாலசந்திரன் அதிகாரிகளுடன் சென்று ரேஷன் கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது சிதம்பரத்தை அடுத்த ஆடூர் அகரம் கடையில் ஆய்வு செய்த போது எடை குறைவு, இருப்பு குறைவு போன்ற முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. இதனால் அக்கடை விற்பனையாளர் அர்ச்சுனனை தற்காலிகப் பணிநீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.  அதனை தொடர்ந்து வடக்குத்து பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கினை கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமனுடன் சென்று தணிக்கை மேற்கொண்டார். அங்கு அத்தியாவசியப் பொருள்கள் சரியான வழித்தடங்களில் செல்கிறதா என ஆய்வு செய்தார். 
                   பின்னர் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுவிநோயக திட்டத்தின் கீழ் பொருள்களை சிறந்த முறையில் செயல்படுத்த அதிகாரிகளுக்கு பாலச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ். நடராஜன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு) வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன், துணைப்பதிவாளர் (பொதுவிநியோகம்) மகபூப், மண்டல மேலாளர் சேகர் மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் : மத்திய அமைச்சக செயலர் ஆய்வு

சிதம்பரம் : 

                 தமிழகத்தில் ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் கடலூர், திருவாரூர் மாவட்ட கிராமங்களில் ராஜிவ் காந்தி ஆதர்ஸ் கிராம யோஜனா திட்டத்தில் பல் வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பரவலாக்கத்துறை அமைச்சக செயலர் ஆச்சாரியா தெரிவித்தார். 

                ஆதிதிராவிட மக்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலாக வசிக்கும் கிராமங்களில் கல்வி, குடிநீர், சுகாதாரம், சாலை உள்ளிட்ட பல் வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக, பாரத பிரதமரின் ஒருங்கிணைந்த முன்னேற்றத் திட்டம் (ராஜிவ்காந்தி ஆதர்ஸ் கிராம யோஜனா) செயல்படுத்தப்படுகிறது.

                                மத்திய அரசின் 12வது நிதிக்குழு திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் 10 லட்சம் ரூபாய் மத்திய அரசின் நிதி மற்றும் மாநில அரசு நிதியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் குமராட்சி, காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள 68 கிராமங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார பரவலாக்கத்துறை அமைச்சக செயலர் ஆச்சாரியா, மத்திய அரசின் இணை செயலர் சஞ்சீவ் குமார், தமிழக அரசின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத் துறை முதன்மை செயலர் விஸ்வநாத் சகாங்கர், ஆணையர் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். கீரப்பாளையம் ஒன்றியம் பரதூர் கிராமத்திற்கு சென்ற குழுவினர் பொதுமக்களின் வாழ்க்கை நிலை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந் தைகளுடன் உரையாடிவிட்டு, சத்துணவை ஆய்வு செய்தனர்.

                   பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். கூட்டத்தில் கலெக் டர்கள் சீத்தாராமன், சந்திரசேகரன், எம்.எல்.ஏ., ரவிக் குமார், ஒன்றிய சேர்மன் கள் செந்தில்குமார், மாமல் லன், ஜெயச்சந்திரன் மற் றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் ஆச்சாரியா கூறுகையில், 

                     இந்த திட்டம் செயல்படுத்த இந்தியாவில் 44,000 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள் ளது. முதற்கட்டமாக தமிழ் நாடு, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் 1,000 கிராமங்களில் செயல் படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் 63ம், திருவாரூர் மாவட்டத்தில் 225 கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப் படும்.மத்திய அரசு நிதி 10 லட்சம், மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மூலமும் ஒரு கிராமத்திற்கு ஒரு கோடி வரையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.



Read more »

Interest subsidy available for this academic year too: Chidambaram

Helping hand:Home Minister P. Chidambaram giving away education loan at Vriddhachalam on Saturday. 
 
CUDDALORE:

           Union Home Minister P. Chidambaram has said that interest subsidy for educational loans will be available to the eligible candidates for the current academic year 2010—2011 also.

            Speaking at a function organised at Vriddhachalam near here to give away educational loan on Saturday, Mr. Chidambaram said that the Centre had launched the interest subsidy scheme in 2009-2010 to help the candidates belonging to the economically weaker sections to take up higher education.

            However, a debate was going on about the period of subsidy because it took time for the message to reach over one lakh bank branches across the country. Hence, he made it clear that the interest subsidy would be available for the academic year 2010—2011 too, based on the eligibility criteria.

           The aggrieved candidates, if any, could approach the Canara Bank for redress. Guaranteeing educational loan to all the eligible candidates Mr. Chidambaram called upon them to approach the banks with confidence. He observed that he was not the Union Finance Minister now but being a Union Home Minister he was providing the youths with a weapon, the weapon of education, with which they could face future with courage and bring about bloodless revolution.

             Mr. Chidambaram noted that when the former Prime Minister Indira Gandhi nationalised the banks there was a furore and questions were raised about their efficient functioning. Had she not done so, certain sections could not have derived monetary benefits such as waiver of farm loans to the tune of Rs.70,000 crore, educational loan of Rs.34,000 crore, and financial assistance of Rs.20,000 crore to 30 lakh Self-Help Groups.

            Hence, the beneficiaries should certainly be thankful to Indira Gandhi for her foresight. He was proud of the fact that the U.S. president Barack Obama had expressed the view that his country should not lag behind India and China in terms of higher education. Thanks to the education policy of the United Progressive Alliance government, framed in 2004, higher education that used to be the preserve of the affluent sections had now become accessible to the economically weaker sections. In the last six years till March 31, 2010 educational loan to the tune of Rs.34,000 crore was disbursed to 18.50 lakh candidates.

            Both boys and girls could seize the opportunity to pursue higher education, Mr. Chidambaram added. District Collector P. Seetharaman said that today educational loan amounting to Rs.21.17 lakh was given away. He voiced concern over the fact that 4,199 students had defaulted loan repayment to the extent of Rs.14.78 crore and called upon the banks to devise the suitable strategy to recover the money. K.S. Alagiri, M.P., Selvaperundagai (Mangalore constituency) and N. Sundaram (Karaikudi constituency) MLAs, and others were present.

Read more »

Gang murders fisherman

CUDDALORE:

             P. Mariappan (40), a fisherman from Thevanampattinam, was murdered in broad daylight by a six-member gang near the Manjakuppam clock tower, a busy commercial area located on Cuddalore-Puducherry road, on Saturday.

            According to sources, Mariappan was going from Puducherry to Cuddalore on a motorcycle. The gang which followed him on three two-wheelers, waylaid him near the clock tower, attacked him with sharp weapons and fled the scene. Mariappan, who was battling for life, was taken to the Government Headquarters Hospital and after first aid, referred to a Puducherry hospital. However, he died on the way to the hospital.

              Police sources said that Mariappan was involved in several crimes. The attack could have been an attempt to settle scores between two rival groups. A search was on to trace the culprits, police said.

Read more »

Panel to monitor water supply

CUDDALORE:

              In a statement released here on Saturday, Collector P. Seetharaman said that a committee consisting of officials from the Public Works and Agriculture Departments and farmers' representatives had been constituted to monitor and regulate water supply for irrigation.

              Mr. Seetharaman said that as on Saturday, the outflow in the Vadavar was 1,172 cusecs, the Kollidam North Rajan Canal – 173 cusecs and the Vellar Rajan Canal – 270 cusecs. On Mondays the officials would review the supply position with the farmers, he added.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior