உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 08, 2012

விருத்தாசலம் ரயில்வே ஊழியர்களுக்கான திருமண மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்

விருத்தாசலம்:

விருத்தாசலம் ரயில்வே ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய புதிய திருமண மண்டபம் கட்டும் பணி பாதியிலேயே நின்றதால் பல லட்சம் ரூபாய் நிதி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் ரயில் நிலையம் 1929ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது சென்னை, திருச்சி, சேலம், கடலூர் பகுதிகளுக்குச் செல்லும் முக் கிய சந்திப்பாக உள்ளது. இங்கு பணிபுரியும் ரயில்வே ஊழியர்களின் வசதிக்காக விருத்தாசலம் நகராட்சி 4வது வார்டில் 400க்கும் மேற்பட்ட ரயில்வே குடியிருப்புகள் உள்ளன. இதில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்டோரின் வசதிக்காக குடியிருப்பு வளாகத்தில் மருத்துவமனை, ரேஷன் கடை, திருமண மண்டபம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.மண்டபத்திற்கு ரூ.87 லட்சம் நிதிதிருமண மண்டபத்தில் போதிய இட வசதி இல்லாததால் புதிய மண்டபம் கட்டித்தர வேண்டுமென ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து கூடுதல் வசதியுடன் புதிய திருமண மண்டபம் கட்டித்தர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக கடந்த 2006ல் 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது

.கட்டுமானப் பணி துவங்கியதுஇதற்கான டெண்டர் 2007ம் ஆண்டு விடப்பட்டது. இதில், மணமகன், மணமகள் அறை, முகூர்த்த மேடை, சமையலறை, உணவு அருந்தும் கூடம், பால் கனி, கழிவறை, குளியலறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, மின் மோட்டார் அறை என பல்வேறு கூடுதல் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மண்டபம் கட்டும் பணி, 2008 செப்டம்பர் மாதம் துவங்கியது.பாதியில் பணி நிறுத்தம்போதிய நிதி இல்லாததால் மண்டபம் கட்டும் பணி துவங்கிய சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு ரயில்வே நிர்வாகம் எவ்வித முயற்சியும் எடுக்காததால் மண்டபம் கட்டும் பணி பாதியளவு கூட முடியாமல் நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.தளவாட பொருட்கள் பாழ்அப்போது கட்டுமானப் பணிக்காக கொண்டுவரப்பட்டு இருப்பில் வைக்கப்பட்ட 50 மூட்டை சிமென்ட் மூட்டைகள் மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் வீணாகி பயன்படுத்த முடியாத நிலையில் கட்டிகளாக மாறியுள்ளது.

  மேலும், கதவுகள், ஜன்னல்கள் அமைக்க கொண்டு வரப்பட்ட மரச் சட்டங்களும் பயன்படுத்தப்படாமல் பாழாகி வருகிறது.சமூக விரோதிகள் கூடாரமானதுகட்டுமான பணி நின்று ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதால் ரயில்வே பாதியளவு கட்டப்பட்ட திருமண மண்டபம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. குடிமகன்கள் அதனை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவதால் மண்டபம் முழுவதும் மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள் குவிந்து கிடக்கின்றன.வருவாய் இழப்புபுதிய திருமண மண்டப கட்டுமான  பணி பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதால், ரயில்வே நிர்வாகத்தின் பல லட்சம் நிதி வீணாகி வருகிறது.இதனால் ரயில்வே ஊழியர்கள் விசேஷங்கள் நடத்த தனியார் மண்டபங்களைத் தேடி அலைவதுடன், கூடுதல் வாடகை செலுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத்திற்கு கிடைக்கக் வேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்கிறது. எனவே, ரயில்வே ஊழியர்கள் நலன் கருதி, ரயில்வே நிர்வாகம் பாதியில் நின்று போன திருமண மண்டபம் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
























Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior