கடலூர் :
நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்டு ஒரு புதிய வருவாய் குறுவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட இளைஞர் காங்., தலைவர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ் சாவடி ஆகிய குறுவட் டத்தை கொண்ட 59 கிராமங்களுடன் குறிஞ்சிப் பாடி தாலுகா உதயமாகியுள்ளது. இதற்கு அமைச்சர் பன்னீர்செல்வத் திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிஞ்சிப்பாடி தாலுகாவில 59 கிராம நிர்வாகத்துடன் 75க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இணைந்து 4 லட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 40 கி.மீட்டர் பரப்பளவும் உள்ள பகுதியாகும். தற்போது உள்ள குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி 2 வருவாய் குறுவட்டத்தை வைத்து மக்கள் பணி செய்வது சிரமம். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், சான்றிதழ்கள் அவர்களை சென்றடைய காலதாமதமாகும். எனவே, நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்ட ஒரு புதிய குறுவட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.