உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

2,600 வி.ஏ.ஓ., பதவிக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் 6 லட்சம் பேர்!



             தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடைசி தேதியான வரும் 20ம் தேதிக்குள் மேலும் ஏழு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

                 கடந்த மாதம் 21ம் தேதி, 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வது குறித்து டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான நாள் முதல், மாநிலம் முழுவதும் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பதால், ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு தினமும் விண்ணப்பிக்கின்றனர். இதுவரை ஆறு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகிள்ளன. அதில், பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து விட்டனர். மீதமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்க உள்ளனர்.

                 மொத்தம் 13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்யப்படுவதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  அலுவலகத்திலும் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்று வருகிறது. பல தபால் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் விரைவாக தீர்ந்து விடுகின்றன. இரண்டு நாள், மூன்று நாள் கழித்து விண்ணப்பங்கள் வருகின்றன. எனவே, வரும் 20ம் தேதிக்குள் மேலும் ஏழு லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகும், விண்ணப்பங்களுக்கு தேவை இருந்தால், கூடுதலாக விண்ணப்பங்களை அச்சிட்டு வழங்கவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தயாராக உள்ளது. வி.ஏ.ஓ., பணிக்கான போட்டித் தேர்வு தேதி விவரங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், .வெளியிடவில்லை. இந்த ஆண்டு இறுதியில் தேர்வு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறும் போது, 

                  "கடைசி தேதி வரை எவ்வளவு விண்ணப்பங்கள் வருகின்றன என்பதை பார்க்க வேண்டும். அதன் பின், விண்ணப்பங்களை பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பணிகள் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான், தேர்வு தேதியை நிர்ணயிக்க முடியும். தேர்வு நடைபெறும் தேதி குறித்து, இம்மாத இறுதியில் முடிவு செய்யப்படும்' என்றனர்.

Read more »

பண்ருட்டி அருகே பாட்டை ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள்


நொச்சிப்பாட்டையில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு.
பண்ருட்டி:

           பண்ருட்டி அருகே பாட்டை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் விளைபொருள்களை கொண்டு செல்வதற்கு பல கி.மீ. தூராம் சுற்றி செல்ல வேண்டியது.

            பண்ருட்டி வட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம மக்கள் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலையே நம்பியுள்ளனர். சமீப காலமாக ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய், மந்தை வெளி முதலியவற்றை அந்தந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆக்கிரமித்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பண்ருட்டி வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் இருந்து பண்ருட்டி நகராட்சி 1-வது வார்டு வி.ஆண்டிக்குப்பம் வரை 30 அடி அகலமுள்ள நொச்சிப்பாட்டை உள்ளது. இந்தப் பாதையால், பனப்பாக்கம், கணிசப்பாக்கம், தொரப்பாடி, வி.ஆண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும், 150-ம் மேற்பட்ட விவசாயிகளும் பயனடைந்து வந்தனர்.

           வாகனங்கள், விவசாய இயந்திரக் கருவிகள் சென்று வரவும். விளை பொருள்களை வீடு மற்றும் சந்தைக்கு கொண்டு செல்லவும் வசதியாக இருந்த இந்த நொச்சிப்பாதை, கடந்த பல ஆண்டுகளாக பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதில் கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.÷இதனால் அருகில் உள்ள மற்ற விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு விவசாய இயந்திரங்களை கொண்டு சென்று பயன்படுத்த முடியாத நிலையும், மாட்டு வண்டி மற்றும் மோட்டார் வாகனங்கள் செல்ல முடியாததால் விதை, உரம் கொண்டு செல்வதிலும், விளை பொருள்களை வீடு மற்றும் சந்தைக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

          இதன் காரணமாக நிலத்தில் இருந்து விளை பொருள்களை கூலி ஆட்கள் மூலம் நீண்ட தூரம் தலைச் சுமையாக கொண்டு வருவதால் கால விரையமும், அதிக செலவும் ஏற்படுகிறது. மேலும் விளை பொருள்களை சந்தைக்கோ, விற்பனை கூடத்துக்கோ கொண்டு செல்வதென்றால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மேற்கண்ட நொச்சிப்பாட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரும்படி மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பண்ருட்டி வட்டாட்சியர், ஜமாபந்தி அலுவலர், ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மனு அளித்த உடன் அதிகாரிகள் வந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசுவதும், கால அவகாசம் அளிப்பதுடன் சரி அதன் பின்னர் கிடப்பில் போட்டுவிடுவதாகவும், இது போல் ஓரிருமுறை நடந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியரோ, வட்டாட்சியரோ நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

இது குறித்து பண்ருட்டி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம் கூறியது: 

                  இப்பிரச்னை தொடர்பாக சனிக்கிழமை மண்டல துணை வட்டாட்சியர் நாசிக்இக்பால், வருவாய் ஆய்வாளர் பூபாலசந்திரன், நிலஅளவர் முத்துசாமி ஆகியோரை அனுப்பி ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசியதாகவும். ஆக்கிரமிப்பாளர்கள் பயிர்களை அறுவடை செய்துகொண்டு நொச்சிப்பாட்டையை ஓப்படைத்து விடுவதாக கூறியுள்ளனர் எனவும் கூறினார்.

Read more »

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் திருவிழா: 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர்


சிதம்பரம்:
 
             சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
 
            இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து காணிக்கை செலுத்தினர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் ஆடிமாத உற்சவம் ஜூலை 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 31-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், பஸ் நிலையத்தில் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் உற்சவமும் நடைபெற்றது. ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெற்றது. 
 
            2-ம் தேதி திங்கள்கிழமை காலை 5 மணி முதல் அங்கபிரதட்சிணம், அலகுபோடுதல், பால்காவடி, பாடை பிராத்தனைகள் நடைபெற்றது.பின்னர் 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதலும், அதன் பின்னர் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சோதனைக்கரகம், அலகுதரிசனம் எடுத்து பிராத்தனைகளை நிறைவேற்றினர். மாலை 6 மணிக்கு கரகம் தீக்குழிக்குள் இறங்கியது. அதன்பின்னர் தீமிதி உற்சவம் தொடங்கியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து வேண்டுதலை செலுத்தினர்.
 
                   தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் என்.வீராசாமி, என்.கலியமூர்த்தி, என்.செல்லதுரை ஆகியோர் செய்திருந்தனர்.தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கீழரதவீதியில் தாற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோவில் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் தலைமையில் ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
 
அன்னதானம் மற்றும் நீர்மோர்:  
 
              தீமிதி திருவிழாவில் கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சாத்தப்பாடித் தெரு, வேணுகோபால்பிள்ளை தெரு ஆகிய இரு இடங்களில் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஆடிட்டர் கே.நடராஜபிரபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சிவராமன், துணைத் தலைவர் வாசுதேவன், கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போல்நாராயணன் தெருவில் புகைப்படை கலைஞர்கள் சங்கம் சார்பில் நீர் மோரும், டி.கோவிந்தராஜன்பிள்ளை நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Read more »

கிராமங்களை முன்னேற்றும் பணியில் தென் கொரிய இளைஞர்கள்


                 தென் கொரியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், டாக்டர்கள்  உள்பட 125 பேர் கொண்ட குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சமூக சேவைகளை செய்து வருகிறது.  ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தின் உதவியால் இந்த சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
 
தேர்வு...  
 
             தென் கொரியாவில் உள்ள தலைமை ஹூண்டாய் அலுவலகத்தின் மூலம் இந்தியா, சீனா, பிரேசில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் சமூக சேவைகளில் ஈடுபட ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 250 மாணவர்கள் தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள். 250 பேரும் 2 குழுக்களாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.
 
2-வது குழு... 
 
           இப்போது தமிழகத்துக்கு வந்துள்ள 2-வது குழுவில் 125 பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்குள் ஐந்து ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சேவையில் ஈடுபடுகின்றனர். இரண்டு வாரங்கள் இங்கு தங்கியிருந்து அவர்கள் தங்கள் பணிகளில் ஈடுபடுவர். 
 
              கல்வி மற்றும் சுகாதாரம்: முதல் மூன்று குழுக்கள் ஹூண்டாய் நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு தேவையான கழிப்பிடங்கள், குப்பைத் தொட்டிகள், மாணவர்கள் விளையாடும் இடங்களை மேம்படுத்துதல், கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடித்தல், அங்குள்ள குப்பைகள், புற்களை அகற்றுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுகின்றனர். கிராமங்களிலும் வீடுகளுக்குத் தேவையான கழிப்பிடங்களைக் கட்டிக் கொடுக்கின்றனர்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை பழக்கவழக்கங்கள், சுகாதாரம் பேணுதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல் ஆகியவைப் பற்றி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் பாடல், செய்முறை விளக்கம் மூலம் விளக்குகின்றனர்.
 
மருத்துவம்: 
 
            மீதம் உள்ள 2 குழுக்கள் மருத்துவ முகாமில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 5 டாக்டர்கள் உள்ளனர். பொது மருத்துவம், குழந்தைகள் நலம், பல் மருத்துவ நிபுணர்களும் இதில் அடங்குவர். அப்பகுதியில் உள்ள தனியார் செவிலியர் பள்ளி மாணவிகளின் உதவியுடன் கிராம மக்களுக்கு மருத்துவம் செய்கின்றனர்.  
 
இது குறித்து டாக்டர்கள் குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.எச்.சோ கூறுகையில்,"
 
          இங்குள்ள மக்களின் ஆடை, அவர்களின் செயல்பாடுகளை வைத்தே அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டுபிடித்து விடுவோம். தமிழில் சில வார்த்தைகளைப் படித்து வைத்திருப்பது மேலும் எங்களுக்கு உதவியாக இருக்கிறது. இவர்களுக்குத் தேவையான மருந்துகளை தென் கொரியாவில் இருந்தே கொண்டு வந்துள்ளோம். அவற்றை இலவசமாக விநியோகிக்கிறோம்'' என்றார். 
  
மருந்துகளுக்கு அனுமதி: 
 
                இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் மருந்துகளுக்கு, தென் கொரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர், இந்திய மருத்துவச் சங்கம் உள்ளிட்டவற்றின் அனுமதி பெற்ற பின்பே மருந்துகள் விநியோகிக்கப்படுகிறது. மருந்துகள் முறையாக "சீல்' செய்யப்பட்டே விநியோகிக்கப்படுகிறது.

Read more »

தீபாவளி: ரயில் டிக்கெட் முன்பதிவு தீவிரம்

              தீபாவளி பண்டிகைக்கு (நவம்பர் 5) செல்ல, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

           ரயில்களில் பயணம் செய்ய பொதுவாக 90 நாள்களுக்கு முன்பே  டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இப்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னமும் 94 நாள்கள் உள்ளன. இந்நிலையில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, பொதிகை, நெல்லை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், கோவை, இன்டர்சிட்டி, நீலகிரி உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களிலும் தீபாவளிக்கு 5 நாள்கள் முன்பிருந்தே பயணம் செய்யும் வகையில் இரு மார்க்கங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.  

                 இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கடற்கரை,  உள்ளிட்ட பல்வேறு முன்பதிவு மையங்களில் நெரிசல் அதிகரித்துள்ளது. இணையதளம் மூலம் இ-டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் பயணிகள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால், சனி, ஞாயிறு என விடுமுறை நாள்கள் 3 நாள்களை எட்டும் என்பதால் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பயணிகள் அதற்கேற்ப தங்களது தீபாவளி பயணத்தை திட்டமிட்டுள்ளனர்.

பறக்கும் படை கண்காணிப்பு:

               ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடு செய்யும் போலி முகவர்களை தடுக்க ரயில்வே கண்காணிப்புத் துறை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸôர் இணைந்த பறக்கும் படைகளை அமைத்து கண்காணிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.தீபாவளி சிறப்பு ரயில்கள்: இதே போல ஒட்டுமொத்தமாக தீபாவளி சிறப்பு ரயில்களை அறிவிக்காமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவிப்பதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகளைத் தடுக்கவும், அனுமதி பெற்ற முகவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்யும் புதிய முறையையும் தெற்கு ரயில்வே நடைமுறைப்படுத்தியுள்ளது.

Read more »

தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள்: கோ.சி. மணி


       தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவு மருந்துக் கடைகள் சென்னையில் ஆறு இடங்களில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 

சென்னை பெசன்ட் நகரில் ஒரு கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்து கோ.சி. மணி கூறியதாவது: 

             கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்து கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னையில் 6 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. சென்னை ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், ராயப்பேட்டை, அசோக்நகர், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்த மருந்தகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்குகின்றன. இதே போல் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் சார்பில் தாம்பரம், பம்மல், போரூர், செம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களிலும், பூங்காநகர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் அண்ணா நகர், திருமங்கலம், பாடி ஆகிய இடங்களிலும் இந்த கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

               இந்த கூட்டுறவு மருந்தகங்களில் சித்தா, யுனானி, ஆங்கில மருந்துகள் உள்பட அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கும். இந்த மருந்துக் கடைகளில் அனைத்து விதமான மருந்துகளும் தரமாகவும், ஏழை மக்களின் வசதிக்காக குறைவான விலையிலும் கிடைக்கும். மேலும் இதில், தேனாம்பேட்டை மருந்துக் கடை 24 மணி நேரமும் செயல்பட இருக்கிறது. மற்ற கடைகள் காலை 9  மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

           இந்த மருந்துக் கடைகளுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, கூட்டுறவு மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்றார் அவர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஸ்வரன் சிங், இந்திய முறை மருத்துவர்களின் கூட்டுறவு மருந்தக (இம்ப்காப்ஸ்) தலைவர் டாக்டர் ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.   

Read more »

கடலூர் மாவட்டத்தில் முழுமையாகத் தூர் வாராததால் 20 கிராமங்கள் பாதிப்பு

கடலூர்:

            மூன்று கி.மீ. தூரம் உள்ள முரட்டு வாய்க்காலை, முழுமையாகத் தூர் வாராததால் 20 கிராமங்களில் மழைக் காலங்களில் வெள்ளம் வடியாமல், பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருப்பதாக, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் இரா.தமிழ்வளவன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:  

              வயலாமூர் முரட்டு வாய்க்கால் எனும் பாசன, வடிகால் வாய்க்கால் 2004-ம் ஆண்டு வேலைக்கு உணவுத் திட்டத்தில் தூர்வாரப்பட்டது. அதனால் வாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதால், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயில் என்ஜின் வைத்து வாய்க்காலில் இருந்து நீரை இறைத்துப் பாசனம் செய்து வந்தனர். 7 ஆண்டுகளுக்குப் பின், தற்போது 10 நாள்களுக்கு முன், வயலாமூர் முரட்டு வாய்க்கால் தூர்வாரப்பட்டது. ஆனால் வடிகால் முழுவதும் தூர்வாரப்படவில்லை. 3 கி.மீ. தூரத்தில் ஒரு கி.மீ. தூரம் மட்டுமே தூர்வாரப்பட்டு உள்ளது. 

              இதனால் மழைக் காலத்தில் வெள்ளம் வடியாமல், வயலாமூர், பூவாலை, சித்தேரி, தெற்குத்திட்டை, வடக்குத் திட்டை, கீழமணக்குடி, சாத்திப்பட்டு, குரியாமங்கலம் உள்ளிட்ட 20 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது. அரசு நிதி ஒதுக்கியும், விவசாயிகளைக் கலந்து ஆலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இப்பணியால், முரட்டு வாய்க்கால் பாசனத்துக்கும் வடிகாலாகவும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இவ்வாய்க்காலை முழுமையாகத் தூர்வாரி இருந்தால், விவசாயிகள் பரவனாற்று நீரைப் பயன்படுத்தி, ஆயில் என்ஜின் மூலம் நீர் இறைத்து நெல் விதைவிட்டு இருப்பார்கள். வடிகால் முழுமையாகத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Read more »

11-ம் தேதி கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கலாம்

சிதம்பரம்:

        சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடித்த பின்னர் ஆகஸ்ட் 11-ம் தேதி கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்கலாம் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

           கீழணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கருத்து கேட்புக்கூட்டம் சிதம்பரம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். 

               கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, உதவி செயற்பொறியாளர்கள் (கீழணை) பி.பெரியசாமி, எஸ்.கலியமூர்த்தி (சிதம்பரம்), கீழணை பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.கண்ணன்பிள்ளை, நாரைக்கால் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், பாசிமுத்தான்ஓடை பாசன விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாய சங்கத் தலைவர் கே.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அதன் விவரம்:

            சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி முடிந்த பின்னர்தான் தண்ணீர் திறக்க முடியும். பணி எப்போது முடிவுறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர்தான் தண்ணீர் திறக்கும் தேதியை முடிவு செய்ய வேண்டும் என நாரைக்கால் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த கோட்ட செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் தூர்வாரும் பணி முடிக்கப்படும் என தெரிவித்தார். தூர்வாரும் பணிகள் முடிவுற்றால் ஆகஸ்ட் 11-ம் தேதி கீழணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடலாம் என அனைத்து விவசாய பிரதிநிதிகளும் கருத்து தெரிவித்தனர். 

வீராணத்தில் முழுக் கொள்ளளவு நீர்: 

              வீராணம் ஏரியில் முழுக் கொள்ளளவு நீர் தேக்கினால்தான் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் வெள்ளாறு மூலம் நீரை தொடர்ந்து பெற்று சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள முடியும். எனவே வீராணத்தில் முழுக்கொள்ளளவு நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.விஜயகுமார் தெரிவித்தார்.

Read more »

ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க வாக்கெடுப்பு வேலைநிறுத்தத்துக்கு 5570 பேர் ஆதரவு

நெய்வேலி:

          என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து தொழிலாளர்களிடம் ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் வாக்கெடுப்பு நடத்தியது ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம்.

             இந்த வாக்கெடுப்பில் 5570 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் 5741 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக கடந்த 2008-ம் ஆண்டு புதுதில்லியில் மத்திய அமைச்சர் முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.÷அதன் தொடர்ச்சியாக நிர்வாகம் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் மருத்துவப் புத்தகம், போனஸ், தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது.

            இந்நிலையில் அவர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து பகுதிவாரியாக ஜூலை 30 மற்றும் 31-ம் தேதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவின்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து சங்கத்தின் உயர்மட்டக்குழுக் கூடி முடிவெடுக்கும் என்றார் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன்.

Read more »

நெய்வேலியில் உலக தாய்ப்பால் வார விழா தொடக்கம்

நெய்வேலி:
 
          நெய்வேலியில் உள்ள இந்திய மருத்துவக் குழுமம் சார்பில் உலகத் தாய்ப்பால் வாரவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 
           உலகத் தாய்ப்பால் வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ஒருவார காலம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் நோக்கம் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது எனவும் தாய்மார்கள் பிறந்த குழந்தைகளுக்கு புட்டிப்பால் கொடுப்பதை தவிர்த்து, தாய்ப்பாலையே முழுமையாக கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது. நெய்வேலியில் இந்திய குழந்தை மருத்துவக் குழுமம் சார்பில் வட்டம் 26-ல் உள்ள என்எல்சி உயர்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
 
                இவ்விழாவை ஒட்டி பொதுமக்களிடையே தாய்ப்பாலை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவ,மாணவியர் பேரணியை என்எல்சி கல்வித்துறை மேலாளர் ஜோதிக்குமார் தொடங்கி வைத்தார். என்எல்சி மருத்துவனையின் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மருத்துவர் செந்தில், தாய்ப்பாலை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். விழாவில் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், விப்ஸ் அமைப்பினர், ஜேசீஸ் மகளிர் பிரிவு உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more »

நாளை தி.மு.க. ஆர்ப்பாட்டம் இளைஞர்கள் திரண்டு வர அமைச்சர் வேண்டுகோள்

கடலூர்:

          தி.மு.க. புதன்கிழமை நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு, இளைஞர் அணியினர் திரளாக வர வேண்டும் என்று மாவட்ட தி.மு.க. செயலரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.

           முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கை விரைவுப்படுத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் புதன்கிழமை, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக, தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூட்டத்தில், அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 

            "4-ம் தேதி கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற இருக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து, இளைஞர் அணியினர் உள்ளிட்ட தி.மு.க. துணை அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும், திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்திய முதல்வர் கருணாநிதிக்கு  நன்றி தெரிவித்தும் மற்றும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

              கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தணிகைச்செல்வம் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் கணேசன், ஒன்றியச் செயலர் சிவகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ்விஜயராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.÷குறிஞ்சிப்பாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் வேலை வாய்ப்பு பதிவு அட்டை வழங்கும் விழா

விருத்தாசலம்:

             விருத்தாசலம் டேனிஷ் மிஷன் பள்ளியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

            மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு முகாம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தங்கள் தேர்ச்சி சான்றிதழை பதிவு செய்தனர். இவ்வாறு பள்ளியில் பதிவு செய்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி விருத்தாசலத்தில் உள்ள டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அதிசயராஜன், உதவித் தலைமை ஆசிரியர் ரவீந்திரநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு வித்யா சேவாரத்தினம் விருது

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியருக்கு காஞ்சி காமக்கோடி பீடம் அறக்கட்டளை, வித்யா சேவாரத்தினம் விருது வழங்கி  கௌரவித்துள்ளது.

             மேலாண்மை துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு சமுதாய நல்லிணக்கம் மற்றும் கற்றல் ஆராய்ச்சி மூலம் மாணவர் சமுதாயத்துக்கு பெரும்பணி ஆற்றி வருவதை பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் ந.பஞ்சநதத்துக்கு ஸ்ரீ சங்கர கலை அறிவியல் கல்லூரி மற்றும் காஞ்சி காமக்கோடி பீடம் அறக்கட்டளை சார்பில் அண்மையில் நடைபெற்ற விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வித்யா சேவாரத்தினம் விருதை வழங்கி கெüரவித்துள்ளார்.

Read more »

Residents besiege Highways Department office

— Photo: C. Venkatachalapathy

Protest:Representatives of social welfare organisations who besieged the Highways Department on Beach Road in Cuddalore were arrested on Monday.

CUDDALORE:

           The police arrested members of the Federation of All Social Welfare Organisations, led by its coordinator M.Nizamudeen, who besieged the office of the Divisional Engineer of Highways located on the Beach Road here on Monday.

          They stated that the Tamil Nadu government had already sanctioned a sum of Rs 7.6 crore for the construction of a subway at the Lawrence Road level-crossing in the heart of the town. But there was unusual delay on the part of the Highways Department and the Railways in calling for tender for the works. Considering the urgency of taking up the project many agitations were held to draw the attention of the authorities but the latter seemed to be taking their own time.

              Even the formation of a coordination committee by Collector P. Seetharaman and passing of a resolution in the Cuddalore Municipality for the subway construction did not stir the authorities concerned to act in right earnest, he added. All of those arrested were released in the evening.

Read more »

Fire service personnel get new equipment

CUDDALORE: 

           As part of the modernisation programme, the Fire Service and Rescue Department here has been provided with at least half a dozen new equipment to improve the efficiency-level of the personnel and to handle the victims in a much safer manner, according to Station Officer S.Kumar.

           Mr Kumar told The Hindu that earlier for want of right kind to tools the personnel faced difficulties in the rescue operations. Notable among the new acquisitions was the “Inflatable tower” which could be blown up with the help of an air compressor to a height of 15 ft. At the top of it would be perched a 500-volts halogen lamp powered either by petrol or diesel which would light up an area of 30-ft diameter. Electric shock-proof shoes were another new acquisition which would protect the personnel even if they step on live wire, of both low tension and high tension types, with an energy output of up to 10,000 volts.

           Another important gadget was the “collapsible stretcher” that would facilitate careful handling of the victims who suffered fractures in the spinal cord or the neck. Mr. Kumar further said that in a fire accident the common problem faced was fumes and the resultant suffocation. Therefore, to help those who were caught in a building on fire the department had now acquired the “personal oxygen system” that contained three small cylinders, each filled with 70 litres of compressed oxygen.

            The system would enable victims to breathe easy and to increase the survival rate. Mr Kumar noted that since the personnel wearing regular khaki suit could not be easily located in a place engulfed with smoke, now, a new suit with reflector was being provided. Another simple mechanism was the “rescue pulley machine” that could segregate the badly damaged vehicles without much effort. All these would be fitted in an “emergency rescue tender,” a new vehicle that would soon reach Cuddalore.

Read more »

கடலூர் மாவட்டத்திற்கு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.221 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:

           நமக்கு நாமே திட்டத்தில் கடலூர் மாவட்டத்திற்கு 221 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடலூர் மாவட் டத்திற்கு 2010-11ம் ஆண்டிற்கு தமிழக அரசால் 221.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களின் பள்ளிகளுக்கான கட்டடங்கள் சுற்றுச்சுவர் உட்பட ஆய்வகங்கள், பள்ளிகளுக்கான கழிவறைகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங் கள், கால்நடை மருந்தகங்கள், நூலகங்கள், மதிய சத்துணவு கூடங்கள், அரசு நியாய விலைக் கடைகள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் குடிநீர் ஆதாரங் கள் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பாலங்கள், சிறுபாலங்கள், சாலைகள், தரம் உயர்த்துதல், தெருக்கள் மற்றும் சிறிய சந்துக்கள் சிமென்ட் சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகள் எடுத்து செய்யலாம்.

               இத்திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய தனிநபர், குழு, நிறுவனங்கள், கம்பெனிகள், தொண்டுள்ளம் கொண்ட யார் வேண்டுமானாலும் பணியின் மதிப்பீட்டு தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு தொகையை கேட்பு காசோலையாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். 50 சதவீதத்திற்கு மேல் பங்களிப்புத் தொகை செலுத்துவோர் டெண்டர் இல்லாமல் அப்பணியை அவரே எடுத்து செய்யலாம். இத்திட்டம் கிராமம், நகரம், பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலரையோ, நகராட்சி ஆணையரையோ அல்லது பேரூராட்சி அதிகாரியையோ அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரத்தில் நோய் குணமாகியதால் "பாடை பிரார்த்தனை': வினோத வழிபாடு

சிதம்பரம்:

           சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் பாடை கட்டி இழுத்தும், வயிற்றில் மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

           கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே கீழத் தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீ மிதி விழாவில், மத பாகுபாடின்றி முஸ்லிம்கள் முதல் தீட்சிதர்கள் வரை தீ மிதித்து வருகின்றனர். இக்கோவிலில் ஆடித் திருவிழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முக்கிய விழாவான நேற்று தீ மிதி உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது வயிற்றுக் கோளாறு சம்பந்தமாக வேண்டிக் கொண்டவர் கள், தங்களின் வயிற்றின் மீது மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

             உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுதலின் பேரில், குணமடைந்தவர்களை நான்கு சக்கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு வண்டியில் படுக்க வைத்து, கோவிலைச் சுற்றி இழுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த பாடை பிரார்த் தனையில் சுவாமிக்கு வேண்டிக்கொண்ட குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை படுக்க வைத்து இழுத்துச் சென்றனர். நூற்றுக்கணக்கானோர் வேண்டுதலின் பேரில், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டது.டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Read more »

கடலூரில் கடலோர கிராமங்களில் மீனவர்களுடன் போலீசார் கலந்தாய்வு

கடலூர்:

            கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து மீனவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

            கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதி மீனவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கடலில் அன்னிய நாட்டு படகுகள் மற்றும் அன்னிய நபர்களை கண்டாலோ, மீனவ கிராமங்களில் புதிய நபர்களை கண்டாலோ போலீஸ் மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

                 அதன் ஒரு பகுதியாக நேற்று கடலூர் உட் கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட கடலோர கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீனவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கடலூர் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேவனாம்பட் டினம், சோனங்குப்பம், அக்கரைக்கோரி, நாயக்கன் பேட்டை, தம்மனாம் பேட்டை, சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை மற் றும் சித்திரைப் பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடல் வழியே அன்னிய நபர்கள் ஊடுருவலை தடுக்க மீனவர்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், எவ்வாறு தகவல் தெரிவிப்பது என்பது குறித்து போலீசார் விளக்கம் அளித்தனர்.


Read more »

கடலூரில் வாய்சுத்த தினம்

கடலூர்:

            வாய் சுத்த தினத்தை முன்னிட்டு கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பேஸ்ட், பிரஷ் வழங்கப்பட்டது. 

             வாய் சுத்த தினத்தை முன்னிட்டு கடலூர் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பிரஷ் மற்றும் பேஸ்ட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டாக்டர் பாபு தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பிரஷ் மற்றும் பேஸ்ட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் உமாசந்திரன், டாக்டர் கள் பிரேமலதா, திவ்யா, பேராசிரியர் குருபரன், யூகோ வங்கியின் முன்னாள் மேலாளர் நடராஜன் தி.மு.க., கிளைக் கழக செயலாளர் ராமு, பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணியிடை பயிற்சி

கடலூர்:

           தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நவீன கருவிகள் கையாள்வது மற்றும் பராமரித்தல் குறித்த இரண்டு நாள் பணியிடைப் பயிற்சி நேற்று துவங்கியது.

            கடலூர் மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களில் 246 பேர் பணியாற்றி வருகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு காலத்திற்கேற்ப தீயணைப்பு மற்றும் மீட்புக் கருவிகள் வழங்கி அவற்றை கையாள்வது, பராமரிப்பு குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 
                கடலூர் தீயணைப்பு நிலையத்தில் இரண்டு நாள் பணியிட பயிற்சி நேற்று துவங்கியது. கடலூர் உதவிக் கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நிலைய அலுவலர்கள் குமார், வெங்கடேசன், சீனுவாசன், ஆறுமுகம், செந்தில் ஆகியோர் யோகா, மனவளக்கலை மற்றும் நவீன கருவிகளை கையாள்வது குறித்த பயிற்சியும் அளித்தனர். மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலிருந்து 94 வீரர்கள் பங்கேற்றனர். மற்றவர்கள் இன்று பங்கேற்கின்றனர். 

             மேலும் அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் வெள்ள காலங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் மரங்கள் விழுந் தால் கிளைகளை அறுத்து அப்புறப்படுத்த மோட்டார் பொருத்தப்பட்ட வாள், வெள்ள காலங்களில் மீட்பு பணிக்கு பயன்படுத்த ரப்பர் படகு, இரவு நேரங்களில் பயன்படுத்த ஒளி உமிழும் கோபுர விளக்கு, உடை, சாலை விபத்துகளில் மீட்பு பணிக்காக ரோப் பிளாக், ஆக்சிஜன் கிட், 10 ஆயிரம் "ஓல்ட்டேஜ்' மின்சாரத்தை தாங்கக் கூடிய நவீன ரக "ஷூ' உள்ளிட்ட பல்வேறு கருவிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளது.

                 கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 100 தீயணைப்பு அழைப்புகளுக்கு மேல் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு கூடுதலாக வாகனங்களும் கடலூருக்கு 20 லட்சம் மதிப்புள்ள அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அவசர கால மீட்பு ஊர்தி வழங்கப்படவுள்ளது.

Read more »

நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோ அனுமதிக்க கோரிக்கை

நெல்லிக்குப்பம்:

         நெல்லிக்குப்பம் நகருக்குள் ஷேர் ஆட்டோக் களை அனுமதிக்க வேண்டுமென அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை:

            நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தில் 15 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்டோவை இயக்கி வந்தனர். கடலூரில் இருந்து 30 கி.மீ., வரை சென்றுவர பர்மிட் வழங்கியுள்ளனர். நெல்லிக்குப்பம் நகருக்குள் வரக்கூடாது என திடீரென போலீசார் மிரட்டுகின்றனர். ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை வரை ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சிறுபாக்கம் ஏரியில் காட்டாமணக்கு செடி:நீர்ப்பிடிப்பு குறைந்து தூர்ந்தது

சிறுபாக்கம்:

             சிறுபாக்கம் ஏரியில் காட்டாமணக்கு செடி மற்றும் ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்து குறைந்துள்ளது.

            சிறுபாக்கம் மேற்கு புறம் ஆண்டவர் கோவில் அருகில் அமைந்துள்ள ஏரியில் நான்கு மதகுகள் அமைந்துள்ளது. இதன் நீர்ப்பிடிப்பின் மூலம் சிறுபாக்கம், அரசங்குடி, எஸ்.புதூர், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் காட்டாமணக்கு செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. கரையில் அமைந்துள்ள நான்கு மதகுகளும் சிதைந்து பாழடைந்து காணப்படுகின்றன. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இந்த ஏரி, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. 

               இதனால் 4 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களின் விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.ஏரிக்கு நீர் வரவேண்டிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஏரிக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது.இந்த ஏரியில் முழு கொள்ளளவு நீர் நிரம்பி 10 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், நீர்ப்பிடிப்பு முழுமையாக செய்யப்பட்டு விவசாயத்திற்கு நீர் கிடைக்குமா என்பது விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து ஏரியினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கடலூரில் சுரங்கப்பாதை அமைப்பதில் இழுபறி

கடலூர்:

               கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. 

               நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதால் பாலம் கட்டுமானப் பணி துவங்கப்படாமல் ஜவ்வாக இழுத்து வருகிறது. கடலூர் நகரில் தலையாய பிரச்னையாக இருப்பது ரயில்வே சுரங்கப் பாதைப் பணி. நகரின் முக் கிய சாலையாக இருப்பது லாரன்ஸ் ரோடு மட்டும் தான். இந்தச் சாலையில் தான் பஸ் நிலையமும், ரயில்வே நிலையமும் அருகருகே உள்ளன. இதனால் மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். தற்போது மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதைப் பணி முடிவடைந்த பின்னர் 9 பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் இந்தப் பாதை வழியாக சென்று கொண்டிருக்கின்றன. வரும் காலங்களில் இன்னும் பல ரயில்கள் விடப்படவுள்ளது.
 
             ரயில்கள் வரும் நேரத்தில் கேட் மூடப்படும் போது லாரன்ஸ் ரோடில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியின் போதே சுரங்கப் பாதைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மேம்பாலத்திற்கு நிதி பற்றாக் குறை ஏற்பட்டபோது இந்தத் தொகையை அதற்காக செலவிடப்பட்டதால் இப்பணி தாமதமாகியது. இருப்பினும் சுரங்கப்பாதைக்கென தற்போது 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட் டது. ஆனால் பணிகள் துவங்கியபாடில்லை. இதற்கு பொது மக்கள் தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சுரங்கப் பாதை அமைத்து விட்டால் வியாபாரம் பாதிக்கும் என சில வியாபாரிகள் முட்டுக் கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இனி வருவது மழைக் காலம், சுரங்கப்பாதைக்காக தோண்டும் போது கடலோரப் பகுதியாக இருப்பதால் தண்ணீர் ஊறும், பொதுத்தேர்தல் என காரணம் காட்டி பாலம் கட்டுமானப் பணியை தள்ளிப் போடுவர்கள் என கருதி நகரின் மீது அக்கறை கொண்ட பல்வேறு நலச் சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

             ரயில்வே நிர்வாகம் ரயில் பாதைக்கு கீழே சுரங்கம் தோண்டி அதில் சிமென்ட்டாலான பெட்டி வடிவ கான்கிரீட் சிலாப்பை செருகி சுரங்கப்பாதை பணியை ஏற்படுத்திக் கொடுத்த பின்புதான் பணியை தொடங்க முடியும் என்கின்றனர் நெடுஞ்சாலைத் துறையினர். இதற்கிடையே நகருக்கு வரும் பிரதான குடிநீர் குழாய், மின் கம்பங்கள், தொலைபேசி கேபிள்கள், ஏ.டி.எம்., மைய கேபிள்கள் என அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். இதை அகற்றுவதற்கான தொகையை நெடுஞ்சாலைத் துறை சம்மந்தப்பட்ட துறைக்கு செலுத்தி விட்டது. இருப்பினும் அதிகாரிகள் ஒருங்கிணைத்து கூட்டு முயற்சியால் தான் இந்தப் பணியை விரைவாக செய்ய முடியும். இதற்கிடையே திருத்தப்பட்ட வரைபட ஒப்புலுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் காத்திருக்கின்றனர். எப்படி இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள் செவி சாய்த்தால்தான் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது தான் நிதர்சனம்.
 
புதிய சர்வீஸ் பாலம்:

             பான்பரி மார்க்கெட்டிற்கு சரக்கு லாரிகள் இடையூறின்றி செல்ல புதிய சர்வீஸ் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.லாரன்ஸ் ரோடிலிருந்து ரயில் பாதை வரை சுரங்கப்பாதை அமைக்கும் போது இரு பக்கங்களிலும் 5.5 மீட்டர் அகலத்திற்கு சர்வீஸ் ரோடு போடப்படும். ஆனால் ரயில் பாதையில் இருந்து பிள்ளையார் கோவில் வரை சாலையின் அகலம் குறைவாக உள்ளதால் இரு புறமும் 1.5 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளன. இந்த இடைவெளியில் நடைபாதை அமைக்க முடியுமே தவிர சர்வீஸ் ரோடு அமைக்க முடியாது. 

                  அப்படியானால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் பான்பரி மார்க்கெட்டிற்கு சரக்கு லாரி எவ்வாறு செல்வது என்கிற குழப்பம் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணியில் திருத்தம் செய்யப்பட்டது. பாடலி தியேட்டருக்கும், ரயில்வே நிலைய சாலைக்கும் சர்வீஸ் பாலம் அமைப்பதென திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் பிரச்னையில்லாமல் சுரங்கப்பாதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more »

சிதம்பரத்தில் சுவர்கள் அசுத்தமாவதை தடுக்கநெடுஞ்சாலைத் துறை "டெக்னிக்'

சிதம்பரம்:

             சிதம்பரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சுவர்கள், பாலங்களில் விளம்பரம் எழுதியும் போஸ்டர் ஒட்டியும் அசுத்தம் செய்வதை தடுக்க ஓவியங்களை வரைந்து அசத்தி வருகின்றனர்.

            பாலங்கள், சுவர்களைப் பார்த்து விட்டால் நம்ம ஊர் அரசியல் கட்சியினர் முதல் பல்வேறு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் வரை அனைவரும் போஸ்டர் ஒட்டியும், விளம்பரம் எழுதியும் அசுத்தம் செய்து விடுவர். இதனைத் தடுக்க, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான காம்பவுண்டு சுவர்கள், பாலங்களின் தடுப்பு சுவர்களில் வண்ண ஓவியங்களை வரைந்து "புது டெக்னிக்'கை கையாண்டு வருகின்றனர். சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் பழங்கால வரலாற்றுக் கதைகளை நினைவு கூறும் வகையில் ஓவியங்களை நேர்த்தியாக வரைந்து வருகின்றனர். அதேப்போன்று சிதம்பரநாதன்பேட்டை பாலத்திலும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அலுவலக சுவர்களில் திருக்குறள் எழுதி வைக்கப் பட் டுள்ளது.

விருத்தாசலம்: 

             விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை அலுவலக காம்பவுண்டு சுவரில் ஒட்டப்பட் டிருந்த போஸ்டர்கள் அதிகாரிகள் முன்னிலையில் கிழித்தெறியப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டது. பின்னர் சுவர் முழுவதும் விளம்பரங்கள் செய்ய முடியாத வகையில் திருக்குறள் எழுதி வைத்துள்ளனர். இதனால் தற்போது அந்த சுவர்கள் பார்ப்பதற்கு "பளீச்'சென காணப்படுகிறது.

Read more »

பரங்கிப்பேட்டையில் அரசு பெண்கள் பள்ளிக் கட்டடம்: பாழாகி வரும் அவலம்


பரங்கிப்பேட்டை:

            பரங்கிப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் பாழாகி வருகிறது.

              பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு பெண்கள் பள்ளி இயங்கி வந்தது. மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்நிலையில் சுனாமிக குப் பின் ராஜஸ்தான் மாநில அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 6 ஏக்கரில் நிலம் வாங்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. இதனையடுத்து புதிய பள்ளிக் கட்டடத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. அதனால் வண் டிக்காரத் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டது. 

            அந்த பள்ளிக் கட்டடத்தில் வருவாய் அலுவலகம், பரங்கிப்பேட்டை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், கச்சேரி தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளி ஆகியவைகள் கொண்டுவர பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் முந்தைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவிடம் கோரிக்கை வைத்தார். அதையடுத்து கலெக் டர் ராஜேந்திர ரத்னு, கட் டடத்தை பார்வையிட்டு அரசு அலுவலங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஐந்து ஆண்டுகளாக பெண்கள் பள்ளிக் கட்டடங்கள் பாழாகி வருகிறது. பரங்கிப்பேட்டையில் உள்ள வருவாய் அலுவலகம் சேதமடைந்துள்ளாதால் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வருவாய் அலுவலகம் உள்ளது. மேலும் நூலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. இப்படி பல அலுவலங் கள் இடமின்றி வாடகை கட்டத்திலும், பழமையான கட்டடங்களிலும் செயல்பட்டு வரும் நிலையில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பள்ளிக் கட்டடங்களை புதுப் பித்து வருவாய் அலுவலகம், நூலகம் மற்றும் தொடக் கப் பள்ளி கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றிதாசில்தார் பேச்சுவார்த்தை

ஸ்ரீமுஷ்ணம்:

         ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளிக்கூடம் கட்ட ஒதுக் கப்பட்ட இடத்தில் ஆக் கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தாசில்தார் பேச்சு வார்த்தை நடத்தினார்.

              ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த சாத்தா வட்டம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட இட நெருக்கடியால் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் தனசிங்கு, ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சொந்த இடம் ஏதும் இல்லாத ஒரு நபருக்கு மட்டும் மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

Read more »

கடலூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது

கடலூர்:

             கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க அரசு பணம் ஒதுக்கீடு செய்தும் பணியை துவங்காத நெடுஞ்சாலைத்துறையினரைக் கண்டித்து அலுவலகத்தை முற்றுயிட்ட அனைத்து பொது நல இயக்கங்களைச் சேர்ந்த 22 பேரை போலீசார் கைது செய்தனர். 

              கடலூர் லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க தமிழக அரசு 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மெத்தனமாக இருந்து வருகிறது. உடனடியாக டெண்டர் விட்டு பணிகளை துவக்க வேண்டும். இணைப்பு சாலை அமைக்கவும் வலியுறுத்தி கடலூர் அனைத்து பொது நல இயங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான போலீசார் பொதுநல இயங்களைச் சேர்ந்த வக்கீல் திருமார்பன் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read more »

திட்டக்குடியில் பஸ் வர தாமதம் சாலை மறியல்

திட்டக்குடி:

         திட்டக்குடியில் பஸ் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
               திட்டக்குடியில் இருந்து இரவு 8.10 மணிக்கு நாவலூருக்குச் செல்ல வேண்டிய அரசு பஸ் 9.40 மணி வரை பஸ் நிலையத்திற்கு வரவில்லை. நாவலூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் கேட்டனர். மாற்று பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். ஆனால் பஸ் வராததால் ஆத்திரமடைந்த நாவலூர் செல்லும் கூலித்தொழிலாளர்கள், பொது மக்கள் திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பஸ் விட ஏற்பாடு செய்தார். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior