உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 25, 2010

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ஜனவரி 10-க்குள் கிடைக்க ஏற்பாடு: தலைமைத் தேர்தல் அதிகாரி

             ஜனவரி 10-ம் தேதிக்குள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            2011 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு (அதாவது இந்த காலகட்டத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு இருந்தன.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் நபர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

            மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தனித்தனியே நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த ஜூலையிலும் நடைபெற்றன. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், இடம்பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  பொது மக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு அறியலாம்.  

             தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும்  www.elections.tn.gov.in​ தகவலை அறிந்து கொள்ளலாம். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையை அளித்து ஒப்புதலைப் பெறுவர்.  ஜனவரி 10-ம் தேதிக்குள் யாருக்கேனும் வாக்காளர் புகைப்பட அடையாள கிடைக்காவிட்டால் வாக்குச் சாவடி நிலை அலுவலரையோ, அந்தப் பகுதியின் வட்டாட்சியரையோ அல்லது மண்டல அலுவலரையோ தொடர்பு கொண்டு அவரது அடையாள அட்டையின் நிலைமையை அறிந்து கொள்ளலாம் என்று பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 350 பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியர் தகவல்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் 350 வாகனங்கள் வியாழக்கிழமை ஒரே நாளில், ஆய்வு செய்யப் பட்டதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

              கடலூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளானது தொடர்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுமாறு, காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.   வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை கடலூர்- சிதம்பரம் சாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனர். 190 ஆட்டோக்கள், 160 கார்கள், வேன்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட 350 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  

             வாகனங்களில் அனுமதி சீட்டுக்குப் புறம்பாக, அதிக மாணவர்களை ஏற்றி வந்தது. காப்புச் சான்றிதழ் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, 28 ஆட்டோக்கள், 12 இதர வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக உரிய ஆவணங்கள் இல்லாமல், மாணவர்களை ஏற்றி வந்த ஒரு வாகனத்துக்கு அனுமதி ரத்து செய்து கைப்பற்றப்பட்டது என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

Read more »

கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 20 இடங்களில் ரூ.22-க்கு வெங்காய விற்பனை

கடலூர்:
 
            கூட்டுறவுத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் 20 இடங்களில்  பெல்லாரி வெங்காய விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டதாக, கூட்டுறவு இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் தெரிவித்தார். 

              கிலோ ரூ.22-க்கு விற்கப்பட்டது.  பெல்லாரி வெங்காய விலை ஏற்றத்தைத் தடுக்க தமிழக அரசின் அறிவிப்புக்கு இணங்க கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் 20 இடங்களில் வியாழக்கிழமை வெங்காய விற்பனை தொடங்கப்பட்டது. கூட்டுறவு பண்டகசாலை (கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்) மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.  பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Read more »

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் கரும்பு டன்னுக்கு ரூ.1900: பொது மேலாளர் துரைசாமி

திட்டக்குடி:

           அம்பிகா சர்க்கரைஆலையில் கரும்பு டன்னுக்கு ரூ.1900 வழங்கப்படும் என்று பொது மேலாளர் துரைசாமி கூறியுள்ளார்.  

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலைன் முதுநிலை பொது மேலாளர் துரைசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பது:-
 

               இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. நடப்பு 2010-2011 அரவை பருவத்தில் கரும்பிற்கு டன் 1-க்கு ஆயிரத்து 900 ரூபாய் வழங்கப்படும்.  இது சென்ற ஆண்டை விட டன்னுக்கு 199 ரூபாய் கூடுதலாகும். கரும்பு போக்குவரத்து வாடகை முழுவதையும் ஆலை நிர்வாகம் ஏற்கும். இந்த அரவை பருவத்தில் 4 அடி மற்றும் 5 அடிக்குமேல் பயிரிடப்பட்டுள்ள கரும்பை அறுவடை செய்ய கரும்பு வெட்டும் எந்திரங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

               ஆலை பகுதியில் தற்போது 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு கூடுதல் மகசூல் கொடுக்கும் நிலையில் உள்ளது. நிலத்தடி சொட்டு நீர்பாசனம் அமைப்பதற்கு முதலாண்டு 4000 ரூபாய் எனவும், அடுத்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2250 ரூபாய் எனவும் மகசூல் அடிப்படையில் ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல் நிலத்துக்கு மேல் சொட்டு நீர் பாசனம் அமைப்பவர்களுக்கு முதலாண்டு 2500 ரூபாய் எனவும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 1500 ரூபாய் எனவும் மகசூல் அடிப்படையில் ஆலை நிர்வாகம் சார்பில் மானியம் வழங்கப்படும்.

               இத்துடன் அரசு அறிவித்துள்ள மானியமும் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். இன்றைய சூழ்நிலையில் கரும்பு சாகுபடியில் மிக அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்தும். கட்டை விட்டும் பயன் பெற கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Read more »

கடலூரில் பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்ற கோரி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மனிதசங்கிலி போராட்டம்

கடலூர்:

               கடலூரில் பாதாள சாக்கடை திட்டத்தினை நிறைவேற்றக்கோரி அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் மனிதசங்கிலி போராட்டம் நடக்கிறது. கடலூர் நகரத்தில் பாதாளச் சாக்கடை திட்டம் குண்டும், குழியுமான அனைத்து சாலைகள், சுரங்கப்பாதை திட்டம் விரைவாக தொடங்கிட அனைத்து அரசியல் கட்சிகள் பொது நல அமைப்புகள் குடியிருப்பு சங்கம், அனைத்து தொழிற் சங்கங்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது.

             அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சி. சம்பத் தலைமை தாங்கி னார். அ.தி.மு.க. சார்பில் முருகமணி, மாவட்ட துணை செயலாளர் குமார், நகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயாளர் பழனிசாமி, ஒன்றிய செய லாளர் முத்துக்குமார சாமி. தே.மு.தி.க. சண்முகம், மாநில விவசாய தொழிலாளர் பிரிவு செயலாளர் கணேசன், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், செல்வம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தனசேகரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சேகர், சம்பந்தம், வட்ட செயலாளர் ஜெகரட்சகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

              ஜனவரி 2, 3-ந் தேதிகளில் கடலூர் நகர் முழுவதும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்வது, ஜனவரி 5-ந் தேதி மாலை 4 மணியளவில் அனைத்து பொது மக்களும் கலந்து கொள்ளும் மனித சங்கிலி போராட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது.
 

Read more »

Employment opportunity camp on December 28

CUDDALORE:

        An “Employment opportunity camp” will be organised under the ‘Mahalir Thittam' at Elumalai Polytechnic College in Villupuram on December 28, according to Collector P. Seetharaman.

           In a statement here, he said that men and women who had undergone vocational training imparted under the Mahlair Thittam from 2006-2007 could participate in the regional-level camp.

           Candidates from the districts of Cuddalore, Villupuram, Tiruvannamalai, Krishnagiri and Dharmapuri, who had completed training in various vocational programmes such as office automation, customer care and hospitality, lab technician, welder, electrician, steel fitter, nursing assistant, etc., could also attend the camp.

           They should bring along certificates issued by the Mahalir Thittam Officer, two passport size photographs and a self-addressed envelope. Mr. Seetharaman appealed to prospective employers to give the details of the number of candidates they require and the nature of jobs to the Mahalir Thittam Officer.

Further details could be obtained from the 

Mahalir Thittam Office, 
No.71, Seetharam Nagar, 
Cuddalore 607 001 

or over cellphone 94450 34113, 94450 34114, 94450 34115 and 94450 34251.

Read more »

Consumer courts urged to conduct proceedings in Tamil

CUDDALORE:

           Consumer organisations here have made a plea to conduct proceedings of all District Consumer Courts in Tamil. When attempts are being made to make Tamil a court language in the State, the consumer courts could not continue to follow the British legacy.

            A resolution was adopted at a meeting of consumer organisations and social activists held at the Town Hall here to mark National Consumer Day on Friday. Though consumers used to file cases in Tamil, the proceedings were invariably conducted in English. Judges were accustomed to making comments in English. This rendered the provision enabling aggrieved consumers to argue their own cases in their mother tongue superfluous and hampered fair representation.

         In another resolution, the meeting urged the consumer courts to dispose of cases within 90 days of listing, as stipulated under the Consumer Protection Act. For want of judges, cases in the consumer courts in Villupuram, Tiruvallur, Perambalur and Sivagangai were pending for years.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior