உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 30, 2011

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் சிதம்பரம் வருகை


சிதம்பரம்:

         சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்க பவள விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (31-ம் தேதி) நடைபெறுகிறது. கீழரத வீதியில் நடைபெறும் இவ் விழாவில் அன்று மாலை 4.30 மணிக்கு திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் (படம்) பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் .திரிபுரா முதல்வரின் வருகையை முன்னிட்டு சிதம்பரம் டி.எஸ்.பி. டி.கே.நடராஜன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

            டிஎஸ்பி டி.கே.நடராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கீழரதவீதியில் மாநாட்டு மேடை அருகே ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திரிபுரா முதல்வர் தங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி, மாநாட்டு மேடைக்கு முதல்வர் வரும் சாலைகள் குறித்தும் போலீசார்   ஆய்வு மேற்கொண்டனர்.



Read more »

மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி மாணவி ஜி.பிரியங்கா தங்கம் வென்றார்

நெய்வேலி:

            சிவகாசியில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி ஜி.பிரியங்கா, டிரையத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

               மாநில தடகள சங்கமும், விருதுநகர் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து கடந்த 22 முதல் 24-ம் தேதிவரை மாநில அளவிலான தடகளப் போட்டியை சிவகாசியில் நடத்தியது. இதில் 14-வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நெய்வேலி ஜவகர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஜி.பிரியங்கா டிரையத்லான் பிரிவில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளியும் வென்றார். இதேபள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி எம்.தேவி நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 16-வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சி.டீனா 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

            மற்றொரு மாணவி எம்.கீதா நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.  இப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற மாணவிகளான ஜி.பிரியங்கா, எம்.தேவி மற்றும் சி.டீனா ஆகியோர் அடுத்தமாதம் 18-ம் தேதி முதல் 20ம் தேதிவரை  ஹைதராபாத்தில் நடக்கவுள்ள தென்னிந்திய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக அணியின் மேலாளர் கிளையோபாஸ் தெரிவித்தார். 






Read more »

கடலூர் நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள்

கடலூர்:

           கடலூரில் உருவாகி வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். 


 நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், சிப்காட் சமூகச் சுற்றுச் சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம், நிர்வாகிகள் ராமநாதன், புகழேந்தி, சிவசங்கர், அமிர்தலிங்கம் ஆகியோர் வியாழக்கிழமை  கூறியது:

             கடலூர் அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சுமார் ரூ. 10 ஆயிரம் கோடியில் இந்த தனியார் ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது. 1999 முதல் இந்த ஆலை தொடர்ந்து விதிமீறல்களைச் செய்து வருகிறது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் அனுமதியின்றி பல கட்டுமானங்களைச் செய்து வருகிறது. கடலில் சிறிய துறைமுகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.  இவ்வாறு செயற்கைத் துறைமுகங்கள் அமைக்கப்படுவதால் பல கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு, மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விதி மீறல்கள் குறித்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் பல முறை மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கும் புகார்கள் அனுப்பி உள்ளன.  ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. 

                 1999-ம் ஆண்டு அளித்த புகார்களின் பேரில், மாசு கட்டுப்பாடு வாரியம் விதி மீறல்கள் குறித்து, அறிக்கை மட்டும் அனுப்பியது. நடவடிக்கை இல்லை. சமீபத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த நிறுவனம் கடலுக்குள் 450 மீட்டர் நீளம், 6 மீட்டர் ஆகலம் கொண்ட பாலம், கடலில் 261 மீட்டர் நீளம் கொண்ட மற்றொரு கட்டுமானம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் 4 ஷெட்டுகள் அனுமதியின்றிக் கட்டடப்பட்டு இருப்பதாக, 6-7-2011 தேதியிட்ட அறிக்கை, இந்த ஆலைக்கு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அளிக்கப்பட்டு இருக்கிறது.  கடந்த பல ஆண்டுகளாக, விதிகளை மீறியும், அனுமதியின்றியும் கட்டுமானங்களை மேற்கொண்ட போதிலும், தற்போதுதான்  விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. 

               எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.  தொழிற்சாலைகள் வேண்டாம் என்பது எங்களது கோரிக்கை அல்ல, கொள்கையும் அல்ல. ஆனால் அனைத்தும் விதிகளுக்கு உள்பட்டு நடக்கவேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியமும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும் விதிமுறைகளை வகுத்து விட்டு, அவற்றைப் பின்பற்றாத ஆலைகள் மீது, நடவடிக்கை எடுக்கத் தவறுவதையுமே கண்டிக்கிறோம்.   விதிகள் மீறப்படுவதாலேயே சுற்றுச்சூழல் மாசுபடுவதும்,  கடலோர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. எனவே தவறு செய்து வரும் இந்நிறுவனத்தின் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

               அனுமதியின்றி மேற்கொண்டு எந்தக் கட்டுமானும் நடக்காதவாறு, சீல் வைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறிய மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மீதும் அரசு  வழக்குத் தொடர வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டு உள்ளோம் என்றும் தெரிவித்தனர்.




Read more »

தமிழக காவல் துறை இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யும் திட்டம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib1gDAbJJh4EDO3neuIlkNDvMRoDa02skVKD80x7QHbXrYcQThZJxPRvjdLMMQ8xHfJeu0ng0W9mTs4RutxTg5fPBKaKFMfFCVU1_2nO7go6DOocF5lMavBewzjgohoM1BR4dGfyudjx8x/s400/tamilnadu+police+result+2009.JPG


தமிழக காவல் துறை தலைமையகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: 

          

தமிழ்நாடு காவல் துறை அதிகாரப்பூர்வ இணையதளம்

www.tnpolice.gov.in   ஆகும்.

                இதில் தமிழ்நாடு காவல் துறை விவரங்கள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில், காணாமல் போனவர்களின் பட்டியலும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த இணையதளம் மூலமாகவும், பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யலாம். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.






Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

          சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 

           சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதி வசதி இல்லை. ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும் அபதாரம் விதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்லூரி கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி இந்திய மாணவர் சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட் டனர். இந்திய மாணவர் சங்க நகர தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசினர்.




Read more »

TNPCB Show-cause notice issued to Cuddalore Nagarjuna Oil Corporation

            The Tamil Nadu Pollution Control Board has issued a show-cause notice to the Nagarjuna Oil Corporation Ltd, located at Kayalpattu in Thiruchopuram near here, asking the company why penal action should not be taken against it for violating the Water (Prevention and Control of Pollution) Act and raising a structure without obtaining the Coastal Regulation Zone (CRZ) clearance.

            In the notice the TNPCB has stated that the unit has started establishment of the marine terminal facility by providing a temporary bridge measuring 450-metre long, 6-metre wide and 6-metre above mean sea level, starting from the shoreline into the sea. It has also noted that the unit has started providing pilings to a length of 261 metre in the sea for construction of an approach trestle. The unit has constructed four sheds in the CRZ area to carry out the construction activity and has also revived the jetty, without getting CRZ clearance, to facilitate the barge services to bring heavy equipment for the refinery.

            When contacted, District Environmental Engineer (TNPCB-Cuddalore) A.Raja said that following the show-cause notice, the company had stopped the works on the construction of the temporary bridge. It could revive the works only after getting due clearance. Meanwhile, executive secretary of the Consumer Federation Tamil Nadu M.Nizamudeen told presspersons that the construction of the temporary bridge by the company had caused sea erosion in the nearby coastal villages and affected the fishing community.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior