உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

Now, get passports at a place near you

             Getting a passport will soon be easy with the government opening 'Passport Seva Kendras' (PSK) in 77 centres across the country in a year. The first such PSK will be inaugurated in Bangalore on Friday followed by six others by June. One will be a pilot project for three months after which such kiosks will be opened all over the country.

               Seven PSKs will run for next three months and the government plans to open all the 77 proposed PSKs by March 2011, A Manickam, Joint Secretary (Counsellor Passports and Visas of MEA), told reporters here. Out of the 77 centres, three each will be in Delhi, Chennai and Mumbai while two will be in Kolkata. The new system will ensure that an applicant gets the passport three days after his or her police verification is completed. This will ensure that long queues for filing applications for passports become a thing of past.

              "After you enter a PSK for submitting your application, you will be out of it within 45 minutes," Manickam said. "Once you are inside the PSK, a data operator will file your details and you are photographed. Your documents are checked in the second stage and forwarded to Granting Officer who will decide on whether your application can be accepted or not. This will not take more than 45 minutes," he said. After the application is accepted, it will be forwarded to concerned district police headquarters for verification. "The current police verification process is undergoing change. Now police cannot just say the applicant is not there. They have to say where he is," Manickam said. He said such kiosks will be of great help to applicants. "The number of passports issued went up by 2.2 times from 1997 to 2007. This rapid growth is expected to accelerate further with India's fast growing global engagement," he said. The future expected growth is around 18 per cent per annum with passport demand reaching over one crore by 2011.

Read more »

ஒரே மையத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு: மாணவ, மாணவியர்கள் அவதி

சிதம்பரம்:

                   பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரே மையத்தில் பதிவுசெய்ய மாணவ, மாணவியர்கள் குவிந்தனர். சில மாணவிகள் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே முகாமில் பதிவு செய்ய தேதி நீட்டிப்பு செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

                          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மே 26-ம் தேதிதான் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து தலைமை ஆசிரியர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னர் பள்ளிகளில் மே 27-ம் தேதி பிற்பகலில்தான் மாணவ, மாணவியர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மே 28-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இரு வட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே மையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என அறிவித்ததால் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திரளான மாணவ, மாணவியர்கள் குவிந்தனர். 

                 அதிகப்படியான மாணவர்கள் குவிந்ததால் விரைவாக பதிவு செய்யமுடியாமல் அலுவலர்கள் திணறினர். வெயில் அதிகமாக இருந்ததால் பதிவுசெய்ய வந்த மாணவியர்களில் சிலர் மயக்கம் போட்டு விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  கடந்த ஆண்டு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களிடம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றபின் பள்ளி மூலமாகவே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சிதம்பரம் நகரில் ஒரே மையத்தில் இரு வட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்ததால் மாணவ, மாணவியர்கள் பதிவு செய்ய நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் நின்று கடும் அவதியுற்றனர். மேலும் பல மாணவ, மாணவியர்கள் பதிவு செய்ய முடியாமல் திரும்பினர். எனவே வேலைவாய்ப்பு பதிவு முகாம் தேதியை மேலும் நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

கடலூரில் இன்று சமையல் எரிவாயு குறைகேட்பு கூட்டம்

கடலூர்:

              கடலூர் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம்  சனிக்கிழமை கடலூரில் நடைபெறும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும். சமையல் எரிவாயு நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவது தொடர்பாக தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்கிறார்கள்

கடலூர்:

                45 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 29) காலை முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள். மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஏப்ரல் 15-ம் தேதி முதல் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்து இருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தும் பெரிய படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வில்லை. பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்வரத்து குறைந்து, விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் மீன்களை வாங்க முடியாத அளவுக்குத் தாறுமாறாக உயர்ந்து விட்டன. மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், கடலூர் மாவட்ட மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு சில படகுகளில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். காலை 6 மணிக்குப் பல படகுகள் கடலுக்குள் செல்லும். மீன்பிடித் தடைக் காலத்தில் சுமார் 700 பெரிய படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. 25 முதல் 50 தொழிலாளர்கள் வரை செல்லும் 100 படகுகளும், 8 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 100-ம், 6 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 400-ம், 4 தொழிலாளர்கள் செல்லும் படகுகள் 100-ம், கடலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாள்களாக மீன் பிடிக்க முடியவில்லை.  பெரிய படகுகள் மீன் பிடிக்கச் செல்வதால் வஞ்சரம், கொடுவா, மத்தி, சங்கரா உள்ளிட்ட மீன்கள் அதிகம் பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீன்வரத்து அதிகமானால், மீன் விலைகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.  மீன்பிடித் தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.800 வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் மீன்பிடித் தடைக் காலம் முடிவடையும் நாள் வரை நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றார்.

Read more »

அக்னி நட்சத்திரம் நிறைவு: பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரை குளிர்விக்க சிறப்பு பூஜை


கடலூர்:
 
             அக்னி நட்சத்திரம் (கத்திரிவெயில்) வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றதை முன்னிட்டு, கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் மூலவரைக் குளிர்விக்க சிறப்பு பூஜைகள் நடந்தன.கடந்த 14 நாள்களாக வாட்டி வதைத்த, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில், வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. கத்திரிவெயில் காரணமாக கடலூரில் வெப்பம் 106 டிகிரி வரை வெயில் உயர்ந்துள்ளது. கத்திரிவெயிலின் தாக்கத்தை மனிதர்கள் அனுபவிப்பதுபோல், கடவுள்களும் மனமுவந்து ஏற்றுக் கொள்வதாக புராணங்கள் கூறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கோடைக் காலத்தில் குறிப்பாகக் கத்திரிவெயில் தாக்கும் காலத்தில் சிவன் கோயில்களில், மூலவர் விக்கிரகங்களுக்கு மேலே, குளிர்ந்த நீர் இறைவனின் மேல் தாராபாத்திரத்தில் இருந்து தண்ணீர் சொட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். 
 
                   கடலூர் பாடலீஸ்வரர் கோயிலிலும் இதேபோல கடந்த 14 நாள்களாக தாராபாத்திரத்தில் இருந்து குளிர்ந்த நீர் மூலவர் தலையில் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெள்ளிக்கிழமை தாராபாத்திரத்தை அகற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூமி குளிரவும், பருவமழை உரிய காலத்தில் பெய்யவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி, ஆகம விதிகளின்படி பாடலீஸ்வரர் கோயிலில் 108 வெள்ளிக் கலச பூஜைகள் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றன. கங்கை, காவிரி, யமுனை, கோதாவரி, சிந்து, சரஸ்வதி, நர்மதை ஆறுகளில் இருந்து தருவிக்கப்பட்ட புனித நீர், 108 வெள்ளிக் கலசங்களில் நிரப்பப்பட்டு இருந்தன. தாமரை வாகனத்தில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் அமர்ந்து இருக்க, எதிரில் புனித நீர் வெள்ளிக் கலசங்கள் வைக்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன.வெள்ளிக்கிழமை புனித நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கருவறையில் கட்டப்பட்டு இருந்த தாராபாத்திரம் அகற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளை மகாதேவ குருக்கள் தலைமையில், நாகராஜ குருக்கள், ராஜேஷ் குருக்கள் ஆகியோர் நடத்தினர். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் நிர்வாக அலுவலர் மேனகா, அலுவலக மேலாளர் பாண்டுரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more »

நடப்பு ஆண்டில் ரூ.3,000 கோடி கல்விக்கடன்: இந்தியன் வங்கி இயக்குநர் தகவல்

                 இந்தியன் வங்கிக் கிளைகளில் நடப்பு ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்த வங்கியின் முதன்மை நிர்வாக இயக்குநர் டி.எம்.பாசின் கூறினார். இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் 1,759 கிளைகள் உள்ளன. தென்மாநிலங்களில் மட்டும் 1,186 கிளைகள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை 2 ஆயிரமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது 757 கிளைகள் உள்ளன. நடப்பு ஆண்டில் மேலும் 28 கிளைகள் திறக்கப்படும்.  தமிழகத்தில் கடந்த நிதி ஆண்டில் ரூ.58 ஆயிரத்து 669 கோடிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.78 ஆயிரத்து 834 கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    கடந்த நிதி ஆண்டில் நாடு முழுவதும் ரூ.2 ஆயிரத்து 300 கோடிக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க தனியாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அதில் புகார் செய்தால் வாடிக்கையாளர்களின் குறைகள் உடனடியாகக் களையப்படும் என்றார்.

Read more »

அண்ணா பல்கலைக்கழக பி.இ. இறுதி ஆண்டு தேர்வு முடிவு வெளியீடு


               பி.இ., பி.டெக்., படிப்புகளின் 8-ம் பருவ (ஏப்ரல், மே) தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் 4-ம் ஆண்டு படித்த பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கு கடந்த ஏப்ரலில் பல்கலைக்கழகத் தேர்வு நடைபெற்றது.  இந்தத் தேர்வின் முடிவுகள்   www.ann​auniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வு முடிவு விவரம் சம்பந்தப்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  இத்தகவலை சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Read more »

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு: தமிழகம் 98.98 சதவீத தேர்ச்சி


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வெள்ளிக்கிழமை, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவை ஆவலுடன் பார்க்கும் மா
சென்னை:

              சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தேர்வு எழுதிய 17,423 மாணவ, மாணவியரில் 17,245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.98 சதவீத தேர்ச்சியாகும். சென்னை மண்டலத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 சதவீதம்.நாடு முழுவதும் உள்ள 8 மண்டலங்களுக்கான முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு புதியதாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகள், ஆந்திரம், டையு மற்றும் டாமன், கோவா, கர்நாடகம், கேரளம், லட்சத்தீவுகள், மகாராஷ்டிரம், புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகியவை சென்னை மண்டலத்தில் உள்ளன. 

சென்னை மண்டலம்: 

               சென்னை மண்டலத்தில் மொத்தம் 1,16,927 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,12,465 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 96.18 சதவீதம்.  

தமிழகம்: 

                  தமிழகத்தில் உள்ள 193 பள்ளிகளைச் சேர்ந்த 17,452 பேர் பதிவு செய்திருந்தனர். தேர்வு எழுதிய 17,423 பேரில், 17,245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 178 பேர் தகுதி பெறவில்லை. இது 98.98 சதவீத தேர்ச்சி.ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 17,320 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 17,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.55 சதவீத தேர்ச்சி.கர்நாடகத்தைச் சேர்ந்த 14,288 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 14,166 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.15 தேர்ச்சி சதவீதம்.கேரளத்த்தில் 41,594 பேர் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 41,253 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.18.மகராஷ்டிரத்த்தில் 18,523 பேர் தேர்வு எழுதினர். இதில் 18,135 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.91.புதுச்சேரியில் இருந்து 402 பேர் தேர்வு எழுதினர். இதில் 400 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.50.உடனடித் தேர்வு: தேர்வில் தகுதியடையாதவர்களுக்கு ஜூலை 16-ம் தேதி சிறப்பு உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு 5 வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 2 அல்லது 3-வது வாரத்தில் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து அவர்கள் பிளஸ் 1 படிக்கத் தகுதி பெறுவர் என்றார் சென்னை மண்டல இணை செயலாளர் நாகராஜு.இதில் டி முதல் ஏ1 வரை கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், பிளஸ் 1 படிக்கத் தகுதியுடையவர்கள். மேலும் இ1, இ2 கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், பிளஸ் 1 படிக்கத் தகுதி பெறாதவர்கள். இவர்களுக்கு 5 வாய்ப்பு தரப்பட்டு, உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது.இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், நடப்புக் கல்வியாண்டில் பிளஸ் 1 சேர முடியாது என்று தெரிகிறது. மாணவரை பிளஸ் 1 சேர்க்கும் விவகாரத்தில் பள்ளி தான் இறுதி முடிவெடுக்கும் என சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 சேர விதிமுறைகள் வெளியீடு:

                 சிபிஎஸ்இ-யில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர், பிளஸ் 1-ல் தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்க விரும்பும், மாணவர் சேர்க்கை தொடர்பான விதிமுறைகளை தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ளார்.அதன்படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் டி முதல் ஏ1 வரை கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் சேர்க்கப்படலாம்.மேலும் இ1, இ2 கிரேடு பெற்றுள்ள மாணவர்கள், மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெறாதவர்கள் என்று தெரிவித்துள்ளது.

மதிப்பெண் கிரேடு கிரேடு பாயின்ட்

91-100             ஏ1               10
81-90              ஏ2                9
71-80              பி1                8
61-70              பி2               7
51-60              சி1               64
1-50               சி2               5
33-40              டி                4
21-32             இ1                 ---
20-க்கும்     குறைவு   இ2     ---

Read more »

கடலூரில் தொடரும் கடல் அரிப்பு: மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வருவதில் சிக்கல்


கடலூர் தேவனாம்பட்டினத்தில் படகுகளை நிறுத்த முடியாத அளவுக்கு, தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு.
 
கடலூர்:

                கடலூரில் தொடர்ந்து கடல் அரிப்பு நீடிப்பதால், கடலுக்குள் செல்லும் படகுகளை மீனவர்கள் மீண்டும் கரைக்குக் கொண்டு வருதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது. லைலா புயல் வீசியதைத் தொடர்ந்து கடலூரில் கடல் அரிப்பு அதிகரித்து உள்ளது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட சில பகுதிகளில் 50 முதல் 100 மீட்டர் தூரத்துக்கு மேல், கடல் வெளிவந்து உள்ளது. தேவனாம்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க கருங்கல் கரை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் கடல் நீர் வருவது தடுக்கப்பட்டு உள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் படகுகளைக் கரைக்குக் கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

                  கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. இவை மீனவர்களின் குடியிருப்புப் பகுதிகளில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். கடல் அரிப்பு நீடித்து வருவதால், கடற்கரை ஓரங்கள் 10 அடி ஆழம் வரை பள்ளமாக உள்ளன. படகுகள் நிறுத்தும் மணல் பரப்பு முழுவதும் அரித்துச் செல்லப்பட்டு இருக்கிறது.  இதனால் படகுகளை கரையில் கொண்டு வந்து நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவிக்கிறார்கள். இதன் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், தங்கள் படகுகளை கடலூர் துறைமுகம் வரை 8 கி.மீ. தூரம் ஓட்டிச் சென்று உப்பனாற்றின் வழியாக உப்பங்கழிகளில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். துறைமுகத்தின் நோஸ் பாயின்ட் வழியாக சிறிய படகுகள், உப்பனாற்றுக்குள் நுழைந்து வருவதில் சிரமங்கள் இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள். 

இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் வெள்ளிக்கிழமை கூறுகையில், 

                   தற்போது ஏற்பட்டு இருக்கும் கடல் அரிப்பால் கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களை கரைக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. படகுகளைப் பாதுகாப்புடன் நிறுத்த, தேவனாம்பட்டினம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஒவ்வொரு நாளும் 8 கி.மீ. தூரத்துக்கு மேல் பயணித்து, உப்பனாற்றுக்குள் வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றார்.

Read more »

சிதம்பரம் தனலட்சுமி வங்கி ஏடிஎம் திறப்பு

சிதம்பரம்:

                 சிதம்பரம் தனலட்சுமி வங்கி கிளையில் நகைக்கடன் சேவை மற்றும் ஏடிஎம் மையம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.கிளை மேலாளர் மகேஷ் பத்மநாபன் வரவேற்றார். வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் எஸ்.குமார் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்து நகைக்கடன் சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் வர்த்தக சங்க பொருளாளர் மூசா, எம்.எஸ்.வைத்தியலிங்கம், யு.வெங்கடேச தீட்சிதர், அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.சிங்காரவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

Rush at employment office

CUDDALORE:

             Thousands of students who successfully completed Plus-Two examinations are flocking the employment office here every day for enrollment. The rush is expected to continue through June and July.

             The enrollment session begins at 8 a.m. goes beyond the closing time, till the last candidate is cleared, according to G. Kannan, District Employment Officer. He told The Hindu that awareness of the need to register was growing every year. Two reasons could be attributed to the trend - the Union government organisations insist on registration numbers given by the employment office; and the State government's financial assistance to candidates who remain unemployed for five years. Mr. Kannan said that as many as 2,636 candidates, a majority of them girls, turned up for registration on Thursday. On Friday, the total was 2,000. To avoid overcrowding, registration was being done in three more centres - Government Girls' Higher Secondary School at Chidambaram, Government boys' HSS at Vriddhachalam and NLC Boys' HSS at Neyveli.

               A database on the candidates was created and each one was given a registration number. The unemployment dole happened to be a major attraction to the candidates as the government provided for disbursement of aid as follows: for SSLC candidates – Rs. 450, Plus-Two – Rs 600, undergraduates – Rs. 900 on a quarterly basis. The process was further streamlined this year in the case of SSLC students. In other words, the schools concerned ought to send details of the candidates to the employment office through the respective Chief Educational Officers. The employment office, in turn, would create a database and allot registration numbers and send the registration cards through the “responsible persons” appointed by the schools.

Read more »

New school buildings inaugurated

CUDDALORE: 

               Collector P. Seetharaman inaugurated new buildings of Dhaya, a special school, built at a cost of Rs.10 lakh here on Thursday. The State government had provided Rs.5 lakh for the construction, and the remaining mobilised through public contributions. Mr. Seetharaman said that of 28,097 differently abled persons identified in Cuddalore district, 4,408 were mentally challenged. It was a matter of concern that the number of mentally challenged happened to be the highest in the blocks of Vriddhachalam, Nallur, Mangalore and Khammapuram. A monthly maintenance allowance of Rs. 500 was being given to 2,030 mentally challenged persons.

Read more »

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் அண்ணா பல்கலை. காலக் கெடு நீட்டிக்குமா?

கடலூர் : 

                     தமிழக அரசு அறிவித்துள்ள முதல் பட்டதாரிக்கான சான்று பெற கால அவகாசம் வேண்டியுள்ளதால், பொறியியல் கல் லூரி சேர்க்கைக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நுட்பக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக் கீட்டில் சேர்வதற்கான விண்ணப்பம் அண்ணா பல்லைக் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக் கழகத்தில் வரும் 31ம் தேதி மாலை 5.30 மணிக் குள் சேர்க்க வேண்டும். இந்நிலையில் பட்டதாரிகள் எவரும் இல்லாத குடும்பத்திலிருந்து தொழில் நுட்பக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை தமிழக அரசே செலுத்தும் என அறிவித்துள்ளது. இதற்கு குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றை தாசில்தாரிடம் பெற்று விண்ணப்பத் துடன் இணைக்க வேண் டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

                    இந்த சான்று பெற மாணவரின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் கல்விச் சான்றுகள், விண்ணப்பதாரரின் கல்விச் சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் நகலை இணைத்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரிடம் சான்று பெற்று விண்ணப் பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கடந்த 26ம் தேதி அன்றுதான் வழங்கப் பட்டது.

                 அதன் பிறகே மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான சான்று பெற விண் ணப்பித்து வருகின்றனர். தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் வருவாய் தீர்வாய கணக்கு (ஜமாபந்தி) நடைபெற்று வருவதால் வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர்களை தேடி அலைய வேண்டியுள்ளது. இவை அல்லாமல் மாநிலம் முழுவதும் வி.ஏ.ஓ.., பணியிடங்கள் பல காலியாக உள்ளதால் ஒவ்வொரு வி.ஏ.ஒ.,க்களும் கூடுதல் கிராமங்களை சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளதாலும் மாணவர்கள், முதல் பட்டதாரி சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

                    அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் இன்றும், நாளையும் (29 மற்றும் 30ம் தேதிகள்) அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதாலும் முதல் பட்டதாரிக்கான சான்று பெறாமல் விண்ணப்பித்து வருகின்றனர். அரசின் புதிய உத்தரவு ஏழைக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சென்றடைய அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 28,097 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். கடலூர் வன்னியர்பாளையம் தனபாக்கியம் நகரில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான "தயா' பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. கடலூர் கல்வி கழக தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்திரா சீனிவாசன் குத்துவிளக்கேற்றி வைத்தார். உதவி தலைவர் அருணாசலம் வரவேற்றார்.


 பள்ளி மாணவர்களின் வகுப்பறையை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது:

                     இறைவன் அனைவரையும் ஏதோ ஒரு குறையுடன் தான் படைத்திருக்கிறான். இது இறைவன் நமக்கு வைத்த பரிசோதனை. நாம் பலவீனத்தை ஒதுக்கி பலத்தை கூட்டிக்கொள்ள வேண்டும். இது போன்ற மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளிகள் இனி வராமல் இருக்க வேண்டும். இப்பள்ளிக்கு வரும் சாலையை சீரமைக்க கலெக்டர் நிதி மூலம் 3 லட்ச ரூபாய் வழங்கப்படும். மேலும் காட்டுமன் னார்கோவிலில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் கடலூர் மாவட்டமும் ஒன்று. மாவட்டத்தில் 28 ஆயிரத்து 97 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. ஆயிரத்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

                   மாவட்டத்தில் 4 ஆயிரத்து 408 மனவளர்ச்சி குன்றியவர்கள் உள்ளனர். 2009-10ம் ஆண்டு 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 671 ரூபாயில் 3 ஆயிரத்து 558 பேருக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு புதிய வாகனத்திற்கான சாவியை வள்ளி விலாஸ் பாலு வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் மாவட்ட அலுவலர் சீனுவாசன், ஆடிட்டர் அனந்தராமன், வெங்கடேசன், செயலாளர் கணபதி, வள்ளிவிலாஸ் பாலு, மஹாவீர் மல்மேத்தா, அரிமா திருமலை, கொண்டல்வாணன் உட் பட பலர் பங்கேற்றனர். சீனுவாசன் நன்றி கூறினார்.

Read more »

அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான தேர்வு


கடலூர் : 

                    அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறை தேர்வு கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் துவங்கியது. அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக தேர்வு எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கான துறை தேர்வு கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடக்கிறது. நேற்று வருவாய், கல்வி, நீதி, தீயணைப்பு, ஊரக வளர்ச்சித் துறை உட்பட 14 பிரிவுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆகியோர் பதவி உயர்வுக்கான தேர்வு எழுதினர். மாஜிஸ் திரேட், தாசில்தார் உள் ளிட்ட பலர் தேர்வு எழுதினர். கடலூரில் நேற்று 286 பேர் தேர்வு எழுதினர். வரும் 31ம் தேதி வரை துறைத் தேர்வுகள் நடக்கிறது.

Read more »

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப தலைமை தபால் நிலையத்தில் குவிந்தனர்

கடலூர் : 

              கடலூர் தலைமை தபால் அலுவலத்தில் மாணவர்கள் விண்ணப் பங்கள் அனுப்ப குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிளஸ் 2 முடித்தவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள், மேலும் வேலூர் இன்ஸ்ட் டியூட் ஆப் டெக்னாலஜிக்கு விண்ணப்பிக்க நேற்று 28ம் தேதி கடைசி நாள் என்பதாலும் ஏராளமான மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகம் விடுமுறை என்பதால் நேற்று கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க குவிந்தனர்.

                   அதுமட்டுமின்றி தேர்வில் தோல்வியடைந்தவர்கள்சிறப்பு தேர்வு எழுதவும், போலீஸ் துறைக்கு விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து அனுப்பவும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் குவிந்தனர். இதனையடுத்து அஞ்சலகத்தில் கூடுதலாக மூன்று கவுன்டர்களுடன் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இரவு 8 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரவு வரை ஆயிரம் விரைவு தபால்களும், 600 பதிவு தபால்களும் பெறப்பட்டன.

Read more »

திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு தங்கம் பரிசு

கடலூர் : 

                       திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் ஸ்ரீ வள்ளியம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர் மகாதேவன் 461 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். மாணவி வைஷ்ணவி தமிழில் 90 மதிப்பெண்ணும், சரண்ராஜ் புவியியல் பாடத்தில் முதலிடத்தையும் பெற்றார். மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் வைரம் துரைசாமி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா அர்ஜூன் ஆகியோர் பாராட்டி தங்க நாணய மற்றும் பரிசு கோப்பை வழங்கினர்.

Read more »

சிதம்பரத்தில் தரைமட்டமாக்கப்பட்ட சுப்ரமணியர் சன்னதி கருவறை பூட்டியே கிடப்பது மக்களுக்கு ஆகாது: கடலூர் கலெக்டரிடம் புகார்

சிதம்பரம் : 

                சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல நூற்றாண் டுகளை கடந்த பழமையான சுப்ரமணியர் சன்னதி கும்பாபிஷேகம் செய்யப் போவதாக கூறி தரைமட்டமாக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் கட்டப்படவில்லை. பூஜைகூட நடத்தாமல் கருவறை பூட்டியே கிடப்பதால் நாட்டிற்கும், மக்களுக்கும் ஆகாது என தீட்சிதர் கடலூர் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளதால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

                 சிதம்பரம் நடராஜர் கோவில் வடக்கு ராஜகோபுரம் அருகே சிவகங்கை குளக்கரையில் பாண்டியநாயகம் என்றழைக்கப்படும் சுப்ரமணியர் கோவில் உள்ளது. கி.பி. 1216-1251 ஆண்டுகளில் மாறவர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. அழகான தேர் போன்று அமைந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து சுப்ரமணியர் மூலவராக காட்சியளிப்பார்.இக்கோவிலின் முகப்பில் தேர் உருளைகள், யானைகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மண்டப உட்புற மேல் விமானத்தில் கந்தபுராண சித்திரங்கள், திருமுறை ஆசிரியரின் உருவங்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூண்கள், ஓவியங்கள் பழங்கால கட்டட திறமைகளை வெளிப் படுத்தும் விதமாக அமைக் கப்பட்டிருக்கும்.

                       இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வந்தது. அத்துடன் சிதம்பரம் நகரை சுற்றியுள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இங்கு தான் திருமணம் நடக்கும். இத் தனை சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் சிதலமைந்து விட்டதாகவும், புதியதாக கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என காரணம் கூறி மூன்று ஆண்டுகளுக்கு முன் தீட்சிதர்கள் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். கோவில் கருவறை மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் திறந்து பூஜை செய்யாமல் அந்த இடம் முட்புதர்களாக மாறிவிட்டது.இடிக்கப்பட்ட கோவிலை தீட்சிதர்கள் தரப்பில் கட்ட முயற்சி மேற்கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு நடராஜர் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட் டிற்கு கொண்டுவரப்பட்ட பிறகு கோவில் இடிக்கப் பட்டது குறித்து முழு தகவலையும் அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்தினர்.

                        இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவில் அறநிலையத்துறை ஏற்றது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. வழக்கு முடியும் வரை கோவிலில் எந்தவித கட்டமைப்பு பணியோ, பழமை கட்டடங்கள் இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப்படி அவசியம் ஏற்பட்டால் கோர்ட் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                   கோவில் கட்டப்படாததற்கு பல காரணங்களை கூறி வந்த தீட்சிதர்கள் தரப்பு தற்போது, சுப்ரீம் கோர்ட் உத்தரவை காரணமாக கூறி வருகிறது. பழமையான கோவிலை காலம் கடத்தாது கோர்ட் அனுமதி பெற்றாவது கட்டி முடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர் பார்ப்பு. கோவில் கட்டப்படாதது குறித்து கலெக்டர் வரை கைலாச சங்கர தீட்சிதர் என்பவர் புகார் செய்திருப்பதால் வெளியில் தெரியாமல் இருந்து வந்த இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

கலெக்டரிடம் கைலாச சங்கர தீட்சிதர் கொடுத்துள்ள புகாரில், 

                     மூன்றாண்டுகள் கோவில் இடிக்கப் பட்டு பூஜை ஏதும் செய்யாமல் இருப்பது நாட்டிற்கும், மக்களுக்கும் ஆபத்து. கோவில் இடிக்கப்பட்ட பிறகு தான் நடராஜர் கோவிலிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Read more »

தமிழகத்தில் வெயிலுடன் அனல் காற்று பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்படுமா?

கடலூர் : 

                    கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜூன் 1ம் தேதியில் பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரிக்கு மேல் வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருகிறது. கடற்கரையோர மாவட்டமான கடலூரில் வெயில் அளவு 105 டிகிரியைத் தாண்டியுள்ளது. வறட்சி மாவட்டமான வேலூரில் 110 டிகிரியையும் தாண்டிவிட்டது.

                    மாநிலம் முழுவதும் வெயில் தாக் கம் 100 டிகிரியைத் தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. கத்திரி முடிந்தும், வெயிலின் தாக்கம் அதிகம் இருக்குமென வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. வெயிலின் தாக்கம் காரணமாக, அண்டை மாநில மான புதுச்சேரியில் பள்ளிகள் திறப் பது வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக் கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை ஒத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக, எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது ஜூன் 15ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டுமென பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 

இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமியிடம் கேட்ட போது, 

                            "வெயில் காரணமாக, பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை. எனவே, குறிப்பிட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படும்' என்றார்.

Read more »

முறையான சிகிச்சை இல்லாததால் மாடு இறந்தது கடலூர் மருத்துவமனையில் விவசாயிகள் ஆவேசம்

கடலூர் : 

                  கடலூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்த மாடு இறந்ததால் ஊழியர்களிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த விவசாயி பாஸ்கரன். இவர் நடக்க முடியாத தனது கறவை மாட்டை கடந்த 26ம் தேதி புதுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். நேற்று மாலை மாடு திடீரென இறந்தது. அதே போன்று தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த சந்திரன், கன்று போட முடியாமல் அவதியடைந்த மாட்டை மருத்துவமனைக்கு ஓட்டி வந்தார்.

                  முறையான சிகிச்சையில்லாததால் கன்றுகுட்டி வயிற்றிலேயே இறந்தது. மாட்டின் வயிற்றில் கம்பியை போட்டு இழுத்ததால் மாடும் உயிருக்கு போராடும் நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் சென்று விட்டனர். மாடு இறந்த தகவல் அறிந்த பாஸ்கரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி விவசாயி பாஸ்கரன் கூறுகையில் "எனது மாட்டை சிகிச்சைக்காக சேர்த்த போது எந்தவித சோடையின்றி 2 பக்கெட் தண்ணீர் குடித்தது.

                     நான் சாப்பிட சென்ற ஒரு மணி நேரத்தில் மாடு இறந்துவிட்டது என தகவல் கிடைத்தது. மாடு இறப்பதற்கு முன் மருத்துவமனையில் இறைச்சி கடைக் காரர்கள் காத்திருக்கின்றனர். எங்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன் இறைச்சி கடைக் காரர்களுக்கு மருத்துமனையிலிருந்து தகவல் செல்கின்றது. அறுப்பவர்களுக்கு மாட்டை கொடுப்பதற்காக ஆபத்தான நிலையில் இருக்கும் மாடுகளுக்கும் சிகிச்சை அளிப்பதில்லை. இந்த மருத்துமனையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது' என புகார் தெரிவித்தார்.

Read more »

திறக்காத ரேஷன் கடை 3 பேர் "சஸ்பெண்ட்'

கடலூர் : 

                 ரேஷன் கடைகளில் கண்காணிப்பு சிறப்பு குழு ஆய்வின் போது வேலை நேரத்தில் முடியிருந்த கடை விற்பனையாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது குறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                        கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் ரேஷன் கடைகள் அலுவலக நேரத்தில் செயல்படுகின்றதா என கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. அப்போது திருமானிக்குழி, பெரியகுப்பம் மற்றும் கொளப்பாக்கம் ரேஷன் கடைகள் வேலை நேரத்தில் மூடியிருந்ததால் கடை விற்பனையாளர்கள் மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

போலீசை தாக்கிய வழக்கு: ஒருவர் கைது

விருத்தாசலம் : 

                     இன்ஸ்பெக்டரை கல்வீசி தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப் பட்டார். விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி காலனி பொதுமக்கள் நேற்று முன்தினம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சாலை மறியல் செய்தனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் திருமால் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சிலர் போலீசார் மீது கல் வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் திருமால் காயமடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த மங்கலம்பேட்டை போலீசார் பெரியவடவாடியைச் சேர்ந்த தங்கராசுவை (45) கைது செய்தனர். மேலும் சிவசங்கரன், வடிவேல், ரவி, மணிகண்டன் உள்ளிட்ட பலரை தேடி வருகின்றனர்.

Read more »

மீன் பிடி தடை காலம் முடிந்தது மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்

கடலூர் : 

                  மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடை காலம் முடிவடைந்ததால், நேற்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். மீன் உற்பத்தியைப் பெருக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை 45 நாட்களுக்கு, கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்தது. ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. சிறு படகுகள் மற்றும் கட்டு மரம் வைத்திருப்பவர்கள் மட்டும் கரையோரப் பகுதிகளில் மீன் பிடித்து வந்து விற்பனை செய்தனர்.

                       இந்நிலையில், கடலில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதற்காக நேற்று காலையிலிருந்தே மீனவர்கள், மீன் பிடிக்கத் தேவையான வலை, ஐஸ், உணவுப் பொருட்கள் போன்றவற்றை படகில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலில் நீரோட்டத்தைப் பார்த்து நேற்று நள்ளிரவு முதலே விசைப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லத் துவங்கினர். சில மீனவர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் கடலுக்குச் சென்றனர். இதனால், வெறிச்சோடி காணப்பட்ட கடலூர் மீன்பிடி துறைமுகம் மீண்டும் களை கட்டத் துவங்கியுள்ளது.

Read more »

கோவில் உண்டியல் வைப்பதில் மோதல் விருத்தாசலம் அருகே 30 பேர் படுகாயம்

விருத்தாசலம் :

                    கோவில் உண்டியல் வைப்பதில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பயர் காலனியைச் சேர்ந்தவர்கள் சேவியப்பர் என்ற இந்து கடவுள் கோவிலை கட்டி கடந்த சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தினர். கோவில் ரோட்டிற்கு உள்ளே தள்ளி அமைந்திருந்ததால் அந்த கோவிலுக்கு அருகே ஒரு உண்டியலும், சாலை ஓரத்தில் ஒரு உண்டியலும் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று சாலை ஓரத்தில் உண்டியல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதனையறிந்த ஊர் தரப்பினர் சாலை ஓரத்தில் துஷ்ட தேவதை சிலை இருப்பதால் அதன் அருகே உண்டியல் வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காலனி மற்றும் ஊர்பகுதி மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

                         தகவல் அறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., ராஜசேகரன் மற்றும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இச்சம் வத்தில் போலீஸ்காரர் விக்னேஷ்வரன் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் இரு தரப்பையும் சேர்ந்த 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த செல்வராசு (60), சேகர் (40), பாலமுருகன், செல்லப் பாங்கி (30), அலமேலு (17) உட்பட 30 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாசில்தார் ஜெயராமன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி உண்டியல் வைப்பது குறித்து முடிவு செய்யலாம் என அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து இப்பிரச்னைக்கு தற்காலிக முடிவு ஏற்பட்டது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read more »

வேலை வாய்ப்பு பதிவு சிறப்பு முகாமில் நெரிசலில் சிக்கி மாணவியர் மயக்கம்


சிதம்பரம் : 

                     சிதம்பரம் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் பிளஸ் 2 முடிந்த மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவ, மாணவியர் கூடுவதை தவிர்க்க சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

                        சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலை வாய்ப்பு பதிவு முகாமில் பதிவு செய்தனர். இரண்டாம் நாளான நேற்று அதிகாலை முதல் அதிக அளவில் கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், போலீசார் வரவழைக்கப்பட்டனர். குறுகிய இடத்தில் முகாம் நடத்தப்பட்டதாலும், பதிவு செய்யும் அதிகாரிகள் நான்கு பேர் மட்டுமே இருந்ததாலும் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் அவதியடைந்தனர். மேலும் மாணவ, மாணவியர் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததாலும் வெயில் கொடுமையாலும் ஒரு சில மாணவியர் மயங்கி விழுந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்யாததால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior