உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை

                       கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடையை, அம்மாநில அதிகாரிகள் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்தனர். 

                   கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், தேவநாதசாமி கோவிலின் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சன்னிதி திருப்பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாயை தன் சார்பில் வழங்கப் போவதாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இத்தொகைக்கான வரைவோலையை, கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமண்ண நாயக், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் வழங்கினார். அப்போது, துறை செயலர் முத்துசாமி, கமிஷனர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

எளிமையாகிறது விவாகரத்து : இந்து திருமண சட்டத்தில் திருத்தம்

                       விவாகரத்து நடவடிக்கையை எளிமையாக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தவிர ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் சமாதியை மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பொறுப்பில் விடப்படும். விவாகரத்து கோரும் போது இழுத்தடிக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு புதிதாக சட்டம் கொண்டுவரும். நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அவற்றின் விவரம்: 

                     தற்போது நடைமுறையில் உள்ள இந்து திருமணச்சட்டம் 1955 மற்றும் திருமண சிறப்பு சட்டம் 1954 ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்து வழக்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து திருமணச்சட்டம் 13ன் கீழ், தற்போதைய சூழ்நிலையில் ஏழு காரணங்களின் அடிப்படையில் விவாகரத்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மனைவி இருக்கும்போதே மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்தல், பெண்ணை கொடுமைப்படுத்துவது, வேற்று மதத்திற்கு மாற்றம் செய்ய வற்புறுத்துவது, மனநலம் பாதிக்கப்பட்டு புத்தி சுவாதீனமாக இருத்தல், பால்வினை நோய்கள் தாக்கப்பட்டிருப்பது, தொழுநோய் பாதிப்பு, கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் காணாமல்போய் ஏழு ஆண்டுகள் ஆகியிருப்பது உள்ளிட்ட ஏழு காரணங்களுக்காக விவாகரத்து வழங்கப்பட்டு வருகின்றன.

                       இதுமட்டுமல்லாது திருமணச்சட்டம் 13 (பி) பிரிவின் கீழ் இரு தரப்புக்கும் ஒத்துப் போகாமல், பரஸ்பரம் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து அதன் அடிப்படையில் 18 மாதங்கள் வரை தம்பதிகளுக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பாக விண்ணப்பம் இருந்தால், அப்போது விவாகரத்து வழங்கப்படுகிறது. இழுத்தடிக்க முடியாது: இந்நிலையில் விவாகரத்து கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு, இருதரப்பும் இனி இணையவே முடியாது என்ற நிலை உருவாகும்பட்சத்திலும், விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தவர்களில் யாராவது கோர்ட்டுக்கு வராமலேயே இழுதடித்துக் கொண்டிருக்கும் பட்சத்திலும், சம்பந்தப்பட்ட நீதிபதியே முடிவு செய்து விவாகரத்தை வழங்கிட இந்த புதிய சட்டத்திருத்தம் வழிவகை செய்துள்ளது. இவ்வாறு சட்டத்திருத்தம் செய்வதற்கு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியது. மேலும் இந்த சட்டத்திருத்தம் விரைவில் பார்லிமென்டில் வைத்து நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                       அதேபோல, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. டில்லியில் உள்ள ராஜ்காட், சாந்திவனம், விஜய்காட், ஷக்தி காட், வீர் பூமி, எக்தாதள், கிஸான் காட், சம்தா ஸ்தல் மற்றும் சங்கார்ஷ் ஸ்தல் ஆகிய இடங்களில் சமாதிகள் உள்ளன. இவற்றோடு சேர்த்து ராஜிவ் சமாதியையும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வசம் ஒப்படைப்பது என, 2004ம் ஆண்டே மத்திய அரசு முடிவெடுத்து இருந்தது. இந்நிலையில், ராஜிவ் சமாதியை மத்திய தொழில்பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கும் முடிவுக்கும் இதற்கென ரூ.7.06 கோடி நிதியும் ஒதுக்க நேற்று அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு தங்குமிடம் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் ஆயுதங்கள் வாங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. தவிர, வீரர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு கோடியே 23 லட்ச ரூபாய் செலவிடப்படவுள்ளது.

200 கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும்

                   நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளை ஐ.ஐ.டி., கல்வித் தரத்திற்கு உயர்த்துவதற்காக இரண்டாயிரத்து 430 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கென ஆயிரத்து 395 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கிடவுள்ளது. இதற்காக ரூ.500 கோடி வரை மத்திய அரசும், ரூ.518 கோடியை மாநில அரசும் செலவுத் தொகையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் மைக்ரோ நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்றிட எட்டாயிரத்து 32 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட சில வகை சிக்கன நீர்ப்பாசன முறைகளை கையாண்டு அதன்மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமையவுள்ள இந்த திட்டத்தின் மூலம் சாதாரண விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும், சிறிய விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும். அமைச்சரவையின் முடிவுகளை நிருபர்களிடம் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

Read more »

சென்னை பல்கலை. தொலைநிலை கல்வி பட்டப் படிப்புகளோடு இலவச பட்டயப் படிப்பு

              சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச பட்டயப் படிப்புகள் வழங்கப்படவுள்ளன.  

இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது:   
                    
               பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் கல்வியை மேலும் தரப்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அதன்படி, 2010-11-ம் கல்வி ஆண்டில் இருந்து தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பட்டயப் படிப்புகளும் வழங்கப்படவுள்ளன.  இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தில் தள்ளுபடியும் அளிக்கப்படும்.   இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் பட்டயப் படிப்பும், முதுநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டயப் படிப்பும்  வழங்கப்படும்.  இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு கல்விக் கட்டண விலக்கும், மாணவிகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.   சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் பட்டப் படிப்புகள், தொலைநிலைக் கல்வியின் பட்டப் படிப்புகள் ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள், தொலைநிலைக் கல்வியின் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும்பட்சத்தில் அவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.    ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்றார்.

Read more »

செம்மொழி மாநாடு: தமிழகத்தில் அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 3 நாள்கள் விடுமுறை


         உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற உள்ளதையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஜூன் 23 முதல் 25 வரை 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் கோவை மாவட்டத்தில் மட்டும் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஜூன் 28-ம் தேதி திறக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

Read more »

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து போராடுவோம்: ராமதாஸ்




 
                  நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து, கடலூர் மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  
 
                    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2008-ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 5 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.  ஆனால் நிலக்கரி நிறுவனம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இதற்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், நிலக்கரி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  விபரீத நிகழ்வு எதுவும் நடப்பதற்கு முன்னர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இல்லையெனில், தொழிலாளர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். அப்போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more »

பாமக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்


உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது குறித்து விளக்குகிறார் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன்.
நெய்வேலி:

                  என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கடந்த 4 தினங்களாக நடந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவுக்கு வந்தது.

                   என்எல்சி நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரத்திற்கான பதவி மூப்புப் பட்டியலை வெளியிடவேண்டும். ஊதிய உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரில் 8 பேர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து புதன்கிழமை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த பண்ருட்டி எம்எல்ஏ தி,வேல்முருகன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் நிறைவேற்றும் வரை தானும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்

                        .இதையடுத்து என்எல்சி நிர்வாகம் பாமக தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு நடத்தியது. இப்பேச்சில், உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை முடிந்து மீண்டும் திறந்த பின் நீதிமன்றத்தை அணுகி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் படிப்படியாக ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோசர்வ் பிரிவில் இணைப்பது, மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைத் தொடர்பாக, நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் 15 தினங்களுக்குள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதை பாமக தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.மேலும் நிர்வாகம் உறுதியளித்தப்படி நடந்துகொள்ளவில்லை எனில் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார். 

                   இதையடுத்து 4 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரு பிரிவினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும், என்எல்சி அனல்மின் நிலையங்களில் வியாழக்கிழமை 2300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் பாமக ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:
 
                     தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்தும், நீதிபதி கோவிந்தராஜன் நிர்ணயித்த கட்டணத்தை அமல்படுத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் வி.ஜி.சிட்டிபாபு தலைமை வகித்தார். மாநில விளம்பர அணிச் செயலர் வேணு.புவனேஸ்வரன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கி.தேதாஸ் படையாண்டவர், மாவட்ட துணைத் தலைவர் பி.கே.அருள், நகரத் தலைவர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நகரச் செயலர் வி.முத்துக்குமார் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

                   விருத்தாசலத்தில் பா.ம.க. சார்பில் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையைக் கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                     வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, மாவட்டச் செயலர் செல்வராசு ஆகியோர் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணக் கொள்ளை குறித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்துக்கு, விருத்தாசலம் நகரச் செயலர் முருகன் தலைமை ஏற்றார், பா.ம.க. நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், பாபு, நகரத் தலைவர் சீனு, ஒன்றியச் செயலர்கள் வெங்கடேசன், ராஜவேல், உத்தண்டி, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணைச் செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Read more »

Samathuvapuram work inspected

CUDDALORE: 

             Director of Rural Development Department T. Udhayachandran and Collector P. Seetharaman inspected the construction of Periyar Samathuvapuram at Ramapuram near here on Thursday.

            Mr. Udhayachandran directed the officials to ensure the quality of the houses and complete the work before July 31. He supervised the enumeration works under way at K.N. Pettai and Sathankuppam in Thiruvahindrapuram panchayat for identifying beneficiaries under the Kalaignar housing scheme. Mr. Udhayachandran also inspected the works on a causeway and a flood control structure at Vazhisothanaipalayam and the construction of road at Chinnathanakuppam under the Prime Minister's Rural Roads Scheme.

Read more »

MLA, NLC contract workmen end fast

CUDDALORE:

                Pattali Makkal Katchi MLA T.Velmurugan and the members of the Pattali Oppantha Thozhilar Sangham ended their hunger strike on the premises of the Neyveli Lignite Corporation at Neyveli on Thursday. 

                They called off their agitation following the promise given by the NLC management that within 15 days of the settlement of the wage revision talks with the recognised trade unions of the regular employees, the issues relating to the contract workmen would be taken up. Heavy security was deployed at the venue of fasting. The NLC sources said that the management had honoured many provisions of the tripartite agreement reached in New Delhi on June 16, 2008. As for the absorption of the contract workers in the NLC Indcoserve was concerned a special leave petition was pending in the Supreme Court.

Read more »

Computer training for coastal residents


CUDDALORE: 

              The M.S. Swaminathan Research Foundation at Chidambaram has been imparting computer training to coastal residents through its Village Knowledge Centres.

                The objective of the programme is to help the people stay abreast of technological development, according to R. Elangovan, Project Officer of the Foundation. He told The Hindu that the Foundation had set up Village Knowledge Centres in coastal areas such as Nochikadu, Manikollai, Samiyarpettai, Parangipettai, Muzhukkuthurai, Mudasal Odai and M.G.R.Nagar.

Courses

               The courses being taught at these centres were formed in association with Intel and Microsoft. In every batch, 15 to 20 candidates were being trained for a period of six months and on successful completion of the course, they were given certificates, which would help them in pursuing higher education. These centres were also imparting need-based training to fishermen. For instance, they had realised the importance of Global Positioning System (GPS) and the centre helped them in acquiring knowledge on this subject. At a function held at the Chidambaram office recently to distribute certificates, Mr. Elangovan highlighted the benefits of raising trees. According to a research conducted by the Calcutta University, a 50-year-old tree would be worth Rs. 15.70 lakh rupees in terms of oxygen production, serving as shelter and food supplier to animals and birds, cleansing the air of carbondioxide, production of organic manure with fallen leaves and as rain-inducting agent.

                President-elect of the Rotary Club of Chidambaram S. Senthilkumar called upon students to utilise the Village Knowledge Centres. If the students worked hard, they could make the dream of former President A.P.J.Abdul Kalam - to turn India into super power by 2020 - a reality.

One lakh saplings

                 Mr .Senthilkumar said the service organisation had decided to plant one lakh saplings during this year and appealed to the social activists to get free saplings being distributed by the Club. Former president of the Rotary Club C.T. Ramasamy urged the students to imbibe ideals and set goals in their life.

Read more »

பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 29ம் தேதி மனுநீதி நாள்

கடலூர் : 

                 பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வரும் 29ம் தேதி டி.ஆர்.ஓ., தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

                     டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் வரும் 29ம் தேதி பண்ருட்டி வட்டம் முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மனுநீதி நாள் நடக்கிறது. அதையொட்டி முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முன்பாக பொதுமக்களிடமிருந்து மனுக் கள் பெறப்படும் பெட்டி வைக்கப்படும். மனு கொடுக்க விரும்பும் பொதுமக்கள் நேரில் வந்து மனுக்களை பெட்டியில் போடலாம்.

                  இன்று காலை 10 மணிக்கு வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் நேரில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் மற்றும் கோரிக்கைகளுக்கான பதிலினை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும்.

                      மனுநீதிநாளன்று கிராமத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறு சேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி மற்றும் செயல் விளக்கங்களை சம்மந்தப் பட்ட துறையினர் செய்து காண்பிக்கவுள்ளார்கள். கிராம பொது மக்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் வராது ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் பேச்சு


கடலூர் : 

                 கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற் றம் வராது என வட்டார தலைமையக உதவி பொது மேலாளர் ராமன் பேசினார்.பாரத ஸ்டேட் பாங்க் கடலூர் முதுநகர் கிளை சார்பில் விவசாய கடன் தள்ளுபடி திட்ட சிறப்பு வசூல் முகாம் மேற்கு ராமாபுரத்தில் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். முதுநகர் முதன்மை மேலாளர் செல்லதுரை வரவேற்றார்.

சென்னை வட்டார தலைமையக உதவி பொது மேலாளர் ராமன் பேசியதாவது: 

                           விவசாயம் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். வாழ்க்கையில் கடன் இல்லாமல் முன்னேற்றம் வராது. இது நிதர்சனமான உண்மை. இது விவசாயம், கல்வி, தொழில் எதுவாக இருந் தாலும் மூலதனமாக பணம் தேவை படுகிறது. பணத்தை சேர்த்து வைத்து எந்த தொழிலையும் செய்ய முடியாது.

                       புத்திசாலித்தனம் என்பது கடன் வாங்கி செய்வதில் தான் உள்ளது. அதே சமயத்தில் கடனை வாங்கி திருப்பி செலுத்தினால் மட்டுமே மற்றவர்கள் பயனடைய முடியும். வங்கிகள், விவசாயிகள் நிரந்தரம். விவசாயம் என்பது தலைமுறை, தலைமுறையாக நடந்து வருகிறது. நாடு வளர வேண்டுமென்றால் விவசாயிகளுக்கு அனைத்து சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூறியுள்ளார். வங்கிகள் இல்லாமல் விவசாயிகள் செயல்பட முடியாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாரத ஸ்டேட் வங்கி 8 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. இதற்கு காரணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கிளைகள் அதிகம். அதனால் வாடிக்கையாளர்கள், விவசாயிகள் அதிகம். இந்த 8 ஆயிரம் கோடி அடுத்த 10, 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடியாக உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.புதுச்சேரி மண்டல வாணிப அலுவலக முதன்மை மேலாளர் சுந்தரராஜன், மேலாளர் பாலசந்திரன், களப்பணியாளர் பாஸ்கர், மார்க்கெட் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Read more »

ஊரக வளர்ச்சித்துறை திட்டப் பணிகள் துறை இயக்குனர் உதயச்சந்திரன் திடீர் ஆய்வு

கடலூர் : 

                     கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீடு கணக்கெடுக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன், கலெக்டர் சீத்தாராமன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். 

                          கான்கிரீட் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் திருவந்திபுரம், கே.என்.பேட்டை, சாத்தங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ராமாபுரத்தில் நடந்து வரும் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டு, கட்டுமானப் பணிகள் ஜூலை 7ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வழிசோதனைப்பாளையத்திலிருந்து தேவர் அடியார் சத்திரம் வரை 2.46 கி.மீட்டர் தூரம் 28.71 லட்ச ரூபாய் செலவில் போடப்பட்டு வரும் சாலை பணியை ஆய்வு செய்த போது கற்கள் அளவு பெரியதாக இருந்ததால் மாற்றி போட உத்தரவிட்டார்.

                        மேலும் அந்த கிராமத்தில் 1.75 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம், 3.5 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வரும் தடுப்புச் சுவர் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து சின் னதானக்குப்பத்தில் நடந்து வரும் சாலை பணிகள், டி. என்.பாளையத்தில் நடக்கும் குளம் வெட்டும் பணி, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, காரைகாடு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, செயற்பொறியாளர் சரவணக்குமார், உள்ளிட்ட அலுவலர் சென்றனர்.

Read more »

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஆத்ம திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் : 

                            சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வேளாண் துறை மூலம் ஆத்மத் திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

                                சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஒன்றியம் வேளாண் துறை மூலம் ஆத்ம திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, கால் நடை, மீன்வளம், வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் மூலம் விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆத்ம திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சியை சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் அலுவலர்கள் ரமேஷ், குப்புசாமி, பி.டி.ஓ.,ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதியஉறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

சிதம்பரம் : 

                      பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அகில இந்திய பிற்பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா வழங்கினார். சிதம்பரம் தாலுகாவில் பிற்பட்டோர் பேரவையின் புதிய உறுப்பினர் சேர்க்கை தீரவிரமாக நடந்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட சிதம்பரம், பரங்கிப் பேட்டை, புவனகிரி ஒன்றியங்கள், சிதம்பரம் நகரம், அண்ணா மலை நகர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள புதிய உறுப்பினர்களுக்கு அகில இந்திய பிற் பட்டோர் பேரவை பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

                  நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் பாஸ்கர், தொழிற்சங்க செயலாளர் கோதண்ட பாணி, ரவி, சிவக்குமார், பாலு, ரமேஷ், சந்தோஷ்குமார், ராஜா, சரவணன், அப்துல் லத்தீப், ராமு உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். ஜூலை 31ம் தேதி உறுப்பினர்கள் சேர்க்கையை முடித்துக் கொண்டு ஆகஸ்ட்10ம் தேதி மாநில தேர்தல் நடத்துவது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Read more »

ஒன்றிய அலுவலக மரத்தூண்கள் ஏலம்பணம் செலுத்தாததால் மீண்டும் ரத்து

கடலூர் : 

                      கடலூரில் இடிந்து விழுந்த ஒன்றிய அலுவலகத்தில் பழைய மரத்தூண்கள் விடப்பட்ட ஏலம் நேற்று முன்தினம் மாலை ரத்து செய்யப்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் கனமழையில் இடிந்து விழுந்தது. 105 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் இருந்த பிரமாண்டமான பர்மா தேக்கு தூண்கள் மற்றும் இரும்புகள் கடந்த 7ம் தேதி ஏலம் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி ஏற்பட்டதால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் நடந்தது.

                        அதில் அலுவலக கட்டடத்தில் உள்ள மரங்கள் மற்றும் இரும்புகளுக்கு அரசு 14 லட்சத்து 21 ஆயிரத்து 180 ரூபாய் நிர்ணயம் செய்தது. இந்த டெண்டரை விழுப்புரத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மொய்தீன் என்பவர் 14 லட்சத்து 50 ஆயிரத்திற்கு எடுத்தார். இதற்கான தொகையை 24 மணி நேரத்தில் அலுவலகத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைப்படி நேற்று மாலை 4 மணிவரை டெண்டர் எடுத்த தொகையை செலுத்தவில்லை. இதன் காரணமாக விடப்பட்ட டெண் டர் ரத்து செய்யப்பட்டது.

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில்ஆனி திருமஞ்சன கொடியேற்றம்

 

சிதம்பரம் : 

                    சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று நடந்த கொடியேற்று விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று காலை 9:30 மணிக்கு, கடக லக்கினத்தில் சிற் சபை எதிரிலுள்ள கொடி மரத்தில் உற்சவ மூர்த்திகளான பஞ்ச மூர்த்திகள், உள், வெளி பிரகாரங்கள் வலம் வந்து கொடியேற் றும் நிகழ்ச்சி நடந்தது.

                        உத்சவ ஆச்சார்யர் நடராஜ ரத்ன தீட்சிதர் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 18ம் தேதி ரிஷப லக்கினத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் தேர் உற்சவமும், இரவு ஆயிரங்கால் மண்டபம் முன் ஏக கால லட்சார்ச்சனை நடக்கிறது. 1ம் தேதி நடராஜமூர்த்திக்கு, மகா அபிஷேகம் மற்றும் தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Read more »

விருத்தாசலம் பெண்கள் பள்ளியில் கூடுதல் வசூல்: தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

விருத்தாசலம் : 

                       விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் காந்திநகர் பகுதியில் உள்ளது அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இப்பள்ளியில் சேர்க்கை விண்ணப்பத் திற்கு ரூபாய் 35, டி.சி., பெற ரூபாய் 300, சேர்க்கைக்கு ரூபாய் 120, புத்தக கமிஷன் ரூபாய் 10ம் வசூலிப்பதாக கூறி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் பள்ளியின் முன் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை அடையாளம் தெரியாத சிலர் கிழித்து விட்டனர். இதையறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அசோகன், வட்ட குழு உறுப்பினர் சிவஞானம், வட்ட செயலாளர் கந்தசாமி, வீராசாமி, சக்திமணிகண்டன் உள்ளிட்டோர் நேற்று மதியம் பெண்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கிருந்த தலைமை ஆசிரியர் சித்தார்த்தனிடம் எதற்காக இவ்வாறு கட்டணம் வசூலிக்கிறீர்கள் என தாங்கள் அடித்த போஸ்டரை காட்டி கேட்டனர். அதை படித்து பார்த்த தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் இதுபோல் இங்கு யாரும் வசூலிப்பதில்லை என கூறினார். அதற்கு அசோகன் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தார். அப்படி வசூலித் திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

வடலூரில் நின்றிருந்த கார் தீப்பிடித்ததால் திடீர் பரபரப்பு

குறிஞ்சிப்பாடி : 

                      வடலூரில் நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று மாலை மயிலாடுதுரையில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த டாடா இன்டிகா கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் மயிலாடுதுரை செந்தில்குமார் அருகில் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது காரில் ஏ.சி., இயங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட் டது.

Read more »

சிதம்பரத்தில் இடி தாக்கி மாடு பலி

சிதம்பரம் : 

                     சிதம்பரத்தில் இடி தாக்கியதில் பசுமாடு தீயில் கருகி இறந்தது.சிதம்பரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. மாலையில் பலத்த டி இடித்தது. அப்போது சிதம்பரம் இளைமையாக்கினார்கோவில் தெரு அலமேலு என்பவருக்கு சொந்தமான மாட்டின் மீது இடி விழுந்ததில் சம்பவ இடத்தில் மாடு கருகி இறந்தது.இந்த திடீர் விபத்தில் இறந்த மாட்டின் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் சாலையில் நடந்து சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

Read more »

ஆட்டோ டிரைவர்கள், பழக்கடைக்காரர்கள் மோதல் பண்ருட்டியில் 10 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன

பண்ருட்டி : 

                    பண்ருட்டியில் ஆட்டோ டிவைர்கள், பழக்கடையினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்து பழக்கடைகள் அடித்து நெறுக்கப்பட்டன. பண்ருட்டி காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்பவர் ராமதாஸ். இவர் மகன் செல்வகணபதி(22). இவர் நேற்று மாலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு ஆட்டோ சங்க தலைவர் கந்தசாமி ஆட்டோவில் வந்த பயணி ஒருவருக்காக செல்வ கணபதியிடம் 120 ரூபாய்க்கு பழம் வாங்கிவிட்டு, 70 ரூபாய் கொடுத்தார். மீதம் 50 ரூபாயை தரவில்லை.

                        பழக்கடையில் வேலை செய்த பரணி என்பவர், கந்தசாமியிடம் மீதி பணத்தை வாங்கி கொடுத்துவிட்டு ஆட்டோவை எடுத்துச் செல்லுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வகணபதி மற்றும் அருகில் இருந்த பழக்கடை ஊழியர்கள் சேர்ந்து கந்தசாமியை தாக்கினர். அதில் காயமடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

                  இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் பழக்கடைகளை அடித்து நொறுக்கினர். டி.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் தவமணி, பச்சையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இதில் ஆறு பழக்கடைகள், இரண்டு அரிசி கடைகள் உட்பட 10 கடைகள் சேதமடைந்தன.

                     போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர்கள் திருவள்ளுவர் நகர் குமார்(35), அம்பேத்கர் நகர் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார்(32) மற்றும் பழக்கடையைச் சேர்ந்த சரவணன்(40), அப்பாதுரை(24), செல்வகணபதி(22) உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Read more »

பயணிகள் சென்ற காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவரிடம் போலீஸ் விசாரணை

பண்ருட்டி : 

                    மகாபலிபுரம் செல்ல டிராவல்ஸ் காரில் வந்த குடும்பத்தினரை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பண்ருட்டி போலீசாரிடம் சிக்கினார். கார் பறிமுதல் செய்யப்பட் டது.

                    காரைக்கால் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல்ஹாதி(50). இவர் சென்னை மண்ணடியில் உள்ள தங்கை ஜகரின்னிசா(44) வீட்டிற்கு குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க சென்றிருந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு மண்ணடியில் இருந்து மகாபலிபுரம் அருகில் உள்ள எம்.ஜி.எம். செல்வதற்காக அப்துல்ஹாதியின் மனைவி ஜீனத் துள்(45), மகள்கள் நஜீராபிரதோஷ் (12), நபிஷாபிரதோஷ்(10), மகன் நஜீம் உசேன்(8), தங்கை ஜகரின் னிசா (44), ஹனீஸ்பாத்திமா(17) ஆகிய ஆறு பேர் மண்ணடியில் உள்ள பாத்திமா டிராவல்ஸ் டாடா சுமோவை வாடகைக்கு அமர்த்தி புறப்பட்டனர்.

                  பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் முகமதுரபீக்(28) சுமோவை ஓட்டி வந்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மகாபலிபுரம் எம்.ஜி.எம்., பகுதிக்கு செல்லாமல் செங்கல்பட்டு வழியாக திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். இது குறித்து காரில் பயணம் செய்தவர்கள் டிரைவரிடம் கேட்டனர். டிராவல்ஸ் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய டிரைவர் முகமதுரபீக், காரை மோதி விபத்து ஏற்படுத்தப்போவதாக கூறி தாறுமாறாக ஓட்டினார்.

                      இதனால் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டு டிராவல்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மொபைல் போன் மூலம் தகவல் கொடுத்தனர். சினிமாவில் வருவது போல் சம்பவம் நடந்ததால் டிராவல்ஸ் உரிமையாளர் ஜாபர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சுமோ கார் விக்கிரவாண்டி டோல்கேட் ஸ்பீட் பிரேக் அருகில் வந்த போது சுமோவில் வந்த ஹனீஸ்பாத்திமா, நஜீராபிரதோஷ், நபீஷா பிரதோஷ் ஆகிய மூவரும் பின்கதவை திறந்து குதித்தனர். பண்ருட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் பண்ருட்டி ரயில்வே கேட் அருகில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து சுமோ கார் டிரைவர் முகமது ரபீக்கை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சுமோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior