செயல்பாடின்றி பூட்டிக்கிடந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம். (வலதுபடம்) இந்த அலுவலகத்தை திறந்து வைத்து தற்போது நடைபெற்று வரும் வர்ணம் பூசி சீரமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் கட்டப்பட்ட நாள் முதல் செயல்பாடின்றி பூட்டியே கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வர்ணம் பூசி சீரமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் 2001-ம் ஆண்டு சிதம்பரம் நகரின் எல்லையில் உள்ள அண்ணா கலையரங்கம் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக கே.எஸ்.அழகிரி இருந்தார். அவரது காலத்தில் அலுவலகம் கட்டி முடிக்கப்படவில்லை.
2003 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சிதம்பரம் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த துரை.கி.சரவணன் (திமுக) கீழவீதியில் உள்ள தனது வீட்டிலேயே அலுவலகத்தை வைத்திருந்தார். பின்னர் 2006-ம் ஆண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.அருண்மொழிதேவன் அண்ணா கலையரங்கத்தில் தனது அலுவலகத்தை அமைத்து தொடக்க விழாவை நடத்தினார். தொடக்க விழா நாள் மட்டும்தான் அலுவலகம் இயங்கியது.
அதன் பின்னர் அந்த அலுவலகம் செயல்பாடின்றி பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. தற்போது அவ்வலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் தமிழக அரசால் அனைத்து தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது. ஆனால் சிதம்பரத்தில் கட்டப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டு செயல்பாடின்றி இருந்தது. இ
ந்நிலையில் தற்போது புதிய சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுக்காக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் வர்ணம் பூசி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுப்பிக்கப்படும் இந்த அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் செயல்படுமா என பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளன