உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 17, 2009

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்; கடலூர் கலெக்டர் அறிவிப்பு

கடலூர், நவ.17-

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதி திராவிடர், கிறிஸ்துவர் ஆகியோர் தொழில் தொடங்கி பிழைக்கும் வகையில் இலவச தையல் எந்திரம் வேண்டுவோர் உடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கடலூர் என்ற முகவரிக்கு வருமானச்சான்று (ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமல்) சாதிச்சான்று மற்றும் தையல் பயிற்சி பெற்ற நிறுவனத்தின் சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்டவாறு 150 இலவச தையல் எந்திரங்கள் வாங்கி வழங்கிட உரிய ஒப்பந்த புள்ளி கோரப்படுகிறது. மேற்படி தொழில் கருவிகளுக்கான விலை பட்டியல் தையல் எந்திரம் ஒன்றுக்கு ரூ.2,500-க் குள்ளும், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடைய தரமான கம்பெனி தயாரிப்பாகவும் இருத்தல் வேண்டும். ஒப்பந்த புள்ளியை உறையிட்டு சீலிடப்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கடலூர்-1 என்ற முகவரிக்கு வருகிற 25-ந் தேதிக்குள் அனுப்பவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more »

அண்ணன் மகன் இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

விருத்தாசலம், நவ.16-

விருத்தாசலம் அருகே கீழ் கோட்டாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). விவசாயி. இவரது மனைவி சாந்தா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தக்கு முன் சாந்தாவின் அண்ணன் மகன் வெங்கடேசன் என்பவர் திடீரென இறந்து விட்டார். வெங்கடேசன் மீது மிகவும் பாசம் கொண்ட சாந்தாவால் அவரது இறப்பை தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் மனவருத்தத்துடன் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாந்தா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் சாந்தா இல்லை.

இதற்கிடையே கீழ்கொட்டாரக்குப்பத்தில் திடீரென சம்பந்தம் என்பவரின் விவசாய கிணற்றில் ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. இதைத் தொடர்ந்து சண்முகம் அங்கு சென்று பார்த்த போது பிணமாக கிடந்தது சாந்தா என்பதை உறுதி செய்தார். தனது அண்ணன் மகன் இறந்த சோகத்தில் சாந்தா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more »

தேசிய நூலக வார விழா

நெய்வேலி, நவ. 16:

கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகத்தில் 42-வது தேசிய நூலக வாரவிழாவை நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கத் தலைவர் எம்.சிவசுப்ரமணியன் சனிக்கிழமை துவக்கிவைத்தார்.
42-வது தேசிய நூலக வாரவிழா நவம்பர் 14 முதல் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது.
இதையொட்டி நூலகம் சார்பில் குழந்தைகள் தினம், மகளிர் தினம், படைப்பாளிகள் தினம்,பள்ளி மாணவர்கள் தினம்,சிந்தனையாளகள் தினம், குடும்ப தினம்,தேசிய ஒருமைப்பாட்டு தினம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.
கிளை நூலகர் ஆர்.வேல்முருகன், மனித நேய மேம்பாட்டு மைய நிறுவனர் கே.சி.தம்பி, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அலமேலு, வனிதாமணி உள்ளிட்டோர் நூலக வார விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.

Read more »

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொலைநோக்கி


சிதம்பரம்,நவ.16:


பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள பார்வையாளர்கள் டவரில் ரூ.4.10 லட்சம் மதிப்புள்ள தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் ஹரிஹரன், கவுன்சிலர்கள் சங்கர், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும். இத் தொலைநோக்கி மூலம் சுமார் 8 கி.மீ. தூரம் வரை உள்ள இயற்கை எழில் சூழ்ந்துள்ள பிச்சாவரம் வனக்காடுகளை பார்க்கலாம் என எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Read more »

சென்னைகாசநோய் வில்லைகள்: ஆட்சியர் வெளியிட்டார்

கடலூர்,நவ.16:

கடலூர் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் சார்பில் காசநோய் வில்லைகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காசநோய் வில்லைகளை, மாவட்ட ஆட்சியர் வெளியிட, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட காசநோய் அலுவலர் எம்.மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் எஸ்.மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றக் கோரிக்கை

கடலூர்,நவ.16:

கடலூர் நகரில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனிப் பகுதிகளில் வீடுகளைச் சுற்றி தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன் மற்றும் கடலூர் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
தற்போது பெய்துவரும் கனமழையால் கடலூர் நகராட்சி 32-வது வார்டுக்கு உள்பட்ட குழந்தைக் காலனியில் 40 வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது மிகவும் சிரமராக இருக்கிறது. வில்வராயநத்தம், கொடிக்கால் குப்பம், மணவெளி, ஆலைக்காலனி, புருகீஸ்பேட்டை, கோண்டூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைச் சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.
தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior